வேண்டாம் அந்த ஈசிஆர் சாலை....
முதன் முதலாக சென்னையில் இருந்து புதுவைக்கு ஈசிஆரில் சாலை அமைத்து அதனை விரிவாக்கிய போது... சென்னையில் மட்டும் அல்ல தமிழகத்தில் பலர் பார்த்து வியந்தனர்.. அந்த சாலை உலகதரமான சாலை....ஒரு சாலை எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு உதாரணமானசாலை அந்த சாலை...
அந்தசாலை தூத்துக்குடி வரை நீட்டிக்க பேச்சு நடந்தது... தற்போது கடலூர் வரை மட்டுமே நீட்டிக்க பட்டது... ஆனால் இது சென்னைக்கும் தூத்துக்குடிக்கும் இடையேஆன 680 கிலோமீட்டருக்கு நீட்டிக்க இருக்கின்றார்கள்......அதற்கான பணிகள் நட்ந்து கொண்டு இருக்கின்றன.
ஈசிஆர் ரோட்ல போய் ஒரு அழுத்து அழுத்தின இரண்டு மணிநேரத்தில பாண்டிச்சேரி என்பது பேச்சாகவே இருந்தது...
ஆனால் சமீபகாலமாக அதிகபடியானவிபத்துகள் நடக்கும் தமிழகசாலை என்ற பெயரை தட்டி சென்றது...
நான் அந்த பக்கம் போகும் போது ஏதாவது ஒரு புதுகார் அந்த பக்கம் உருண்டு கெடக்கும்.... அதை பார்க்கும் போதே அது வளைவுவில் வேகமாக வந்து வளைந்ததே முக்கியகாரணமாக இருக்கும்.
ஈசிஆர் ரோடு போட்டதில் இருந்தே அதில் பல விபத்துக்கள் நடந்து இருக்கின்றன... இருப்பினும் கடந்த 4 வருடத்தில் ஐடி துறையினால் சென்னையில் பெருகிய வாகன போக்குவரத்துக்கு பிறகு, இந்த சாலையில் நடக்கும் விபத்துகள் கணக்கிலடங்கா....
இத்தனைக்கும் இந்த சாலையில் அதிகமான லாரிகள் பயணிக்காது...
இந்த சாலை போட்ட போதே இரட்டை வழியாக போட்டு இருக்கலாம்.. நாம் என்ன ?? ஆஸ்திரேலியா, அயர்லாந்து போல குறைவான மக்கள் தொகையையா வைத்து கொண்டு இருக்கின்றோம்..... சின்ன ரோடாக போட.....
நன்றாக யோசித்து பாருங்கள் பழைய சென்னை பாரிஸ்கார்னர் புகைபடத்தை உற்று நோக்குங்கள்.. எல்லா சாலைகளையும் மிக மிக அகலமாக ஆங்கிலேயர்கள் போட்டு இருப்பார்கள்... இன்றைய சென்னை மவுன்ட் ரோடு பாருங்கள்... அவர்கள் ஆட்சிகாலத்தில் எல்லா சாலைகளும் பெரியதாகத்தான் இருக்கும்.....ஆனால் இப்போது... மக்கள்தொகை அதிகமான பிறகும் இன்னும் சாலை வளர்ச்சியல் மேம்படவில்லை...
பாஜக கவர்மென்ட் மட்டும தங்கநாற்கரசாலை திட்டத்தை மட்டும் கொண்டு வரவில்லை என்றால் நாம் இன்னும் அழகான சாலைகளை ஹாலிவுட் படத்தில் மட்டுமே பார்த்து ரசித்து இருக்க முடியும்.
ஈசிஆர் பக்கம் காரோட்டும் அனைத்து டிரைவர்களுக்கும் மரக்காணம்,புதுவைக்கு இடையில் இருக்கும் அந்த மூன்று அபாயகரமான வளைவை பற்றி சிலாகித்து பேசுவார்கள்... அந்த மூன்று பெண்டுகளில் காரோடு டைவ் அடித்த குடும்பங்கள் ஏராளம்... விழித்துக்கொண்ட நெடுஞ்சாலை துறை... அந்த பெண்டுகளை ஓரளவுக்கு நேர்படுத்தியது எனலாம்... அதன் பிறகு அந்த இடத்தில் விபத்துகள் அவ்வளவாக நேரவில்லை....
நானும் என் மனைவியும் பைக்கில் எனது ஊர் கடலூர் போக தேர்ந்து எடுப்பது முன்பு எல்லாம் இந்த ஈசிஆர் வழியைதான்... வழி எங்கும் கடலின் நில நிறமும், பச்சைபசேல் வயல்களும், இரண்டு பக்கமும் வளர்ந்து சாலையில் போவோருக்கு குடைபிடிக்கும் மரங்களும்,பயணத்துக்கு தாகம் போக்க வழி எங்கும் கிடைக்கும் சகாயவிலை இளநி, நுங்கு சமாச்சாரங்களும், வழி எங்கும் செம்மண் செழுப்பில் வளர்ந்து தரையில் முத்தமிட்டு இருக்கும் முந்திரி,மாமரம் போன்ற மரங்களும் அந்த பக்கம் போவதை உற்சாகபடுத்தும்....
கடந்த நான்கு வருடங்களில் கார்கள் அதிக அளவு பெருகிவிட்டன... அதனால் அந்த பக்கம் விபத்து அதிகம் நடக்க ஆரம்பித்து விட்டன.... எல்லா பெட்ரோல்கார்களும் செம வேகத்தில் வருகின்றன... வளைவுகளில் வேகம் குறைப்பதே இல்லை...
இன்னும் முக்கியமாக சனி ஞாயிற்று கிழமைகளில் அந்த பக்கம் கடக்கும் சென்னைகார்கள் மிக அதிகம்.... புதுவையில் இரண்டு நாட்களுக்கு ரூம் கிடைப்பதில்லை... குட்டி போதை , புட்டி போதை இரண்டும் பாண்டியில் ரொம்ப சீப் அதனால் அந்த பக்கம் நம்ம வசதி அதிகம் உள்ள இளைஞர் பட்டாளம் அதிகம் படை எடுக்கின்றார்கள்...
புட்டி போட்டு சுருதி ஏற்றிக்கொண்டு பேய் வேகத்தில் வண்டி ஒட்டுகின்றார்கள்.... அதிலும் நடு வழியில் பாழாய் போன ஈகோ காரணமாக ரேஸ்இல் கலந்து கொள்வது போல விரட்டி விரட்டி கார் ஓட்டுகின்றார்கள்...
இந்த ரோட்டில் பாண்டி வரை பைக்கில் போக முடியவில்லை.. பெட்ரோலில் ஓடும் கார்கள் எந்த சத்தமும் இல்லாமல், ஒருமுறை என் மணிக்கட்டை உரசி போன போது இனி இந்த ரோடு வேலைக்காவாது என்று முடிவெடுத்தேன்... பயத்தில் எனக்கு வியர்த்து விட்டது...சர் சர் என்று பயணிக்கின்றது.....நிறைய வளைவுகள் பல கார்கள் டுவீலர் என்றால் மரியாதையே இருக்காது... நன்றாக ஏறி வருவார்கள்.. உங்களால் ஒன்னும் சொல்லவும் முடியாது. நாம் தப்பித்து திரும்பி பார்த்து பொறம் போக்கு பு.................... என்று சொல்வதற்குள் அந்த கார் 200அடியை கடந்து விட்டு இருக்கும்.
வண்டி பஞ்சர் ஆகிவிட்டால்... பக்கத்தில் எந்த கடையும் இருக்காது. வியர்க்க வியர்க்க டூவீலரை நாக்கில் நுரை தள்ள தள்ளிக்கொண்டுதான் போகவேண்டும்.
எப்போது வேண்டுமானாலும் கால்நடைகள் கிராஸ் செய்யும்.... அது கூட 5 அறிவு அதை வையக்கூடாது... நம்ம 100கீலோமீட்டர் வேகத்துல ரோட்டுல யாரும் இல்லைன்னு போவிங்க... ஆனா கேஷுவல எந்த பயமும் இல்லாம கடக்கும் மனிதர்கள் நிறைய பேரை இந்த ரோட்டில் பார்க்கலாம்... மிக முக்கியமாக வலைவுகளில் திரும்பும் போது அப்படி யாராவது ஒரு மனிதர் கிராஸ் செய்தால் உங்கள் கார் 10 முறைக்கு மேல் பல்டி அடிக்கும்...... என்பது கன்பார்ம்.
அதே போல் இந்த சாலையில் குறிப்பிட்ட பெண்டு ஒன்று மரக்காணத்துக்கு முன்னே இருக்கின்றது... காவல் துறை எச்சரிக்கை போர்டும் வைத்து இருக்கின்றது...சாலையில் வேகம் குறைக்க பேரிகார்டுகளும் அமைத்து இருக்கின்றது... இருப்பினும் வாரத்துக்கு இரண்டு கார் அந்த பெண்டில் இப்போதும் டைவ் அடிக்கின்றது என அங்கு இளநி வெட்டும் நண்பர் சொன்னார்... பகலில் வண்டிகவிழ்ந்தால் உடனே உதவிக்கு வருகின்றார்கள்.. அதே நேரம் இரவு என்றால் முதலில் உங்கள் கை ,கழுத்தில் இருக்கும் விலைஉயர்ந்த பொருட்கள் லவட்டிக்கொண்ட பிறகே உங்களுக்கு உதவி கிடைக்குமாம்... இதற்கு ஒரு குழுவே அந்த பக்கம் சுற்றிக்கொண்டு இருப்பதாக ஒரு தகவல்...
ஆனால் பயணிக்க ரம்யமான இயற்கை காட்சிகள் கொண்ட ரோடு, ஈசிஆர் ரோடு என்பதை எவராலும் மறுக்கமுடியாத உண்மை...
இப்போது கூட மதிமுக பொது செயலாளர் வைகோ அந்த சாலையில் நடக்கும் விபத்துக்கு முற்றுபுள்ளி வைக்க போராட்டம் நடத்தினார்...அரசிடம் எந்த ரியாக்ஷனும் இல்லை.
நேற்று கூட மகன் பர்த்டேவுக்கு பாண்டியுல் செலிபிரேட் செய்ய இரண்டு காரில் போன போது ஒரு கார் கவிழ்ந்து விபத்தில் சிக்க .....பார்த்டேபாய் இறந்துவிட்டான்...இன்னும் பலர் இறந்து போய் இருக்கின்றார்கள்...
நேருக்கு நேர் மோதும் விபத்துகள் .. இந்த சாலையில் மிக மிக அதிகம்...ஒரு சிலமாதங்களுக்கு முன்பு கூட ஒரு குவாலிஸ் டிப்பர் லாரி மீது மோதி... பத்துபேருக்கு மேல் பலியானார்கள்....
பாண்டி போக தாம்பரம்,செங்கல்பட்டு.திண்டிவனம் வழியாக பாண்டி செல்லவும்... தவிர்க்க முடியாத காரணம் என எதாவது இருந்தால் மட்டுமே அந்த பக்கம் பயணிக்கவும்.
மிக முக்கிய வெள்ளி சனி ஞாயிறு நாட்களில் விக் என்ட் பார்டியை அட்டேன்ட் செய்யவும்,அட்டேன்ட் செய்த பார்ட்டியில் இருந்து ஊர் திரும்பவும் உற்சாகத்தோடு பேய் வேகத்தில் போய் வரும் கார்களில் இருந்து தப்பிப்பது இறைவன் செயல்....
ஓரளவுக்கு சாலைவிதிகள் கடைபிடிக்கபட்டால் விபத்து குறையும் எந்த ஊர்ல வந்து என்ன பேச்சு பேசறிங்க????
முன்பு எல்லாம் சென்னை திணடிவனத்துக்கு இடையே நிறைய விபத்துகள் ஏற்படும் இப்போது மிகவும்குறைந்து இருக்க இரட்டை வழிபாதைதான் காரணம் என்பதை யாரலும் மறுக்கமுடியாது..
மாநில அரசு செலவோடு செலவாக இந்த சாலை இரட்டை வழிப்பாதையாக மாற்றவேண்டும்....அதுமட்டுமே இந்த சாலையில் விபத்து குறைய ஒரே தீர்வு.
பூனைக்கு யார் மணிகட்டுவார்கள்???
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....
குறிப்பு.. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்.
Labels:
அனுபவம்,
செய்தி விமர்சனம்
Subscribe to:
Post Comments (Atom)
ம்ம்ம் சொன்னா யார் கேட்குரானுங்க
ReplyDeleteஅருமையான அலசல்
ReplyDeleteசிறந்த வழித்தடம் , திண்டிவனம், புதுச்சேரி, அத்தனையும் நான்கு வழிச்சாலைதான்.
ReplyDelete-
அன்பு
NALLA SONNIGO PONGA
ReplyDeleteஅலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு 8 கி.மீட்டர் தான்..நம் சாலையை பார்க்கும் போது கோபம் பொத்துக்கொண்டு வருகிறது.இங்கு சைக்கிள் ஓட்டுபவர் போல் டூ வீலர்,டூ விலர் ஓட்டுவது போல் கார்,கார் ஓட்டுவது போல் லாரி ஓட்டுகிறார்கள் இதில் நடப்பவர்கள் தான் பாவமாக இருக்கு.
ReplyDeleteநம் சாலைகள் எப்போதோ பெரிதுபடுத்தியிருக்கனும் அதோடு உரிமம் வழங்குவதை கடுமை படுத்த வேண்டும்.
இந்த ஷேர் ஆட்டோ/ஆட்டோ - சென்னை சாலையின் மிகப்பெரிய தலைவலி.
//மாநில அரசு செலவோடு செலவாக இந்த சாலை இரட்டை வழிப்பாதையாக மாற்றவேண்டும்....அதுமட்டுமே இந்த சாலையில் விபத்து குறைய ஒரே தீர்வு.
ReplyDelete//
அக்கறையான இடுகை.
//
பூனைக்கு யார் மணிகட்டுவார்கள்???
//
ஒரு மந்திரியின் மகனோ, மகளோ விபத்தில் இறக்கும்வரை அக்கறை இருக்காது. முன்னாள் அதிமுக அமைச்சர் வேலுச்சாமியின் மகன் சாலை விபத்தில் மரணமடையும் வரை கோவை அவினாசி சாலையில் பூ.சா.கோ. தொழில் நுட்பக் கல்லூரியின் முன் மாணவர்கள் கடக்க உயர நடைபாதை அமைக்கப்படவில்லை.
நானும் ECR வழியாகத்தான் அடிக்கடி மோட்டார் சைக்கிளில் பயணம் செய்வேன்.. மிக கவனமாக ஓட்டவேண்டும்.. கொஞ்சம் அசந்தாலும் மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் நம்மை முந்திச்செல்லும் ஸ்கார்பியோ அல்லது இன்னோவா நம்மை தட்டிவிடும் அபாயம் இருக்கிறது ...
ReplyDeleteஇப்போதெலாம் டிசல் கார்களும் சத்தமில்லாமலே வருகின்றன மேலும் டிசல் கார்கள் பெட்ரோல் கார்களை விட அதிக பிக் அப் மற்றும் வேகம் கொண்டவையாக உள்ளன.
ReplyDeleteகார்களை மட்டுமே கூறுகிறீர்களே இந்த சாலையில் பேய் வேகத்தில் எதிரே கார் மற்றும் பைக் வந்தாலும் வலதுபுறம் ஏறி ஓவர்டேக் செய்யும் பேருந்துகளை பற்றி ஏதும் சொல்லலியே.
நீங்க சொன்னது எல்லாம் சரி அனா எல்லாத்தையும் சொல்லிருக்கணும். அதிக கார்கள் வேகத்தில் செல்கின்றன ஆனாலும் மிதமான வேகத்தில் செல்லும் கார்களையும் கீழே தள்ளி விட்டு செல்லும் பேருந்துகளை என்ன சொல்ல.
நீங்க சொன்ன பர்த்டே பாய் கார் விபத்துகூட எதிரே வந்த வாகனம் ஒதுக்கியதால் மட்டுமே விபத்துக்குள்ளானது, கண்டிப்பா அது எதுவோ ஒரு அரசு அல்லது தனியார் பேருந்தாகவே இருக்கும்.
நல்ல பதிவு அப்படியே இந்த ராஜீவ் காந்தி சாலைய பத்தி எழுதுங்க, சுங்க வரி மட்டும் வசூல் செய்யறாங்க அநியாயம் பண்றாங்க.
நல்ல பதிவு ஜாக்கி... ரெண்டு மாசத்துக்கு முன்ன பாண்டிச்சேரி போனப்ப இந்த ரோட்ல போயிட்டு கடுப்பாகிட்டேன். இதுதான் முதல் தடவை கார்ல இந்த ரோட்ல போனது. ரொம்ப ரொம்ப ரொம்ப டேஞ்சரான ரோடு. ரெண்டே லேன் அதுதான் பெரிய பிரச்சினை.
ReplyDeleteநீங்க சொல்ற மாதிரி நான்கு வழிப்பாதை பண்ணுறது எல்லாம் இன்றைய நிலைமையில பாஸிபிளிட்டி இல்லை ஜாக்கி. இது போடுறப்பவே பண்ணியிருக்கணும். இப்ப இந்த ரோட்டுக்கு ரெண்டு பக்கமும் மாமல்லபுரம் வரைக்கும் வீடு கட்டிட்டாங்க. எங்க போயி ரோட்டை எக்ஸ்பேன்ட் பண்ணுறது? :(
அட்லீஸ்ட் மாமல்லபுரத்துக்கு அப்புறமாவது நான்கு வழிப்பாதை பண்ணலாம். சொல்லப்போனா இந்த ரோட்டை ஒரு "சீனிக் பீச்வே"வா மட்டும் யூஸ் பண்ணினா பரவாயில்ல, பாண்டிச்சேரி போக ரெகுலர் ரோடா யூஸ் பண்ணுறதுதான் பிரச்சினையே.
தேவையான விரிவான அலசல் ஜாக்கி.
ReplyDeleteமாமல்லபுரம் வரை ஒருமுறை காரில் போனபோது ஒரே ரெய்டு. ஊது ஊது என்று ஒரே அனத்தல். காரணம் கேட்டபோது முந்தின நாள் நடந்த விபத்தை சொன்னார்கள். எதாவது மேட்டர் நடந்தாதான் அங்க அதிரடியா ரெய்டு நடக்கும். காரில் பாண்டி பயணம் செய்ய இசிஆர் உகந்த சாலை அல்ல என்பதை வழிமொழிகிறேன்.
அன்பு நித்யன்.
நல்ல பதிவு.. உடனடியாக செய்ய வேண்டிய விஷயம்
ReplyDelete`ஹ்ம்... அண்மையில் (செப்டம்பர் மாதம்) தமிழ்நாடு வந்திருந்தபோது, திருச்சியிலிருந்து, சிதம்பரம் சென்று அங்கிருந்து சென்னை திரும்பிக்கொண்டிருந்த போது ஒரு இடத்தில் சென்னை என்று வழி போட்டு ஈ.சீ.ஆர் ரோட் என்று போட்டிருந்தார்கள் ஆனால் எங்களது வாடகை வாகன ஓட்டுனரோ வேறு பாதையூடாக (தேசிய நெடுஞ்சாலை என்று நினைக்கிறேன்) செலுத்தினார். அடடா, மிகப்பிரபலமான வீதியூடாக போக முடியவில்லையே என அவரிடம் விசாரித்தேன், அவரோ “எவ்வளவுக்கெவ்வளவு பிரபலமோ, அவ்வளவுக்கவ்வளவு பிரச்சினையும் இருக்கு - அது ரிஸ்கான வீதி, இரவுல விபத்தெல்லாம் நடக்கும்” என்று கூறிவிட்டு கூலாக மற்றப்பாதையில் செலுத்தினார். ஹ்ம் - உண்மைதான் போல....
ReplyDeleteஇது ரொம்ப நாளா நான் எழுத நினைச்ச விஷயம். நினைச்சுக்கிட்டேஏஏஏஏ இருந்துட்டேன்.சமூக அக்கறை என்னைய மாதிரி ஆளுங்களுக்கு மனசுலதான் இருக்கு.உங்களை மாதிரி இருக்கவங்களுக்குதான் செயலில் இருக்கு.
ReplyDeleteonnu intha road'a one way aakanum. ilangaati, neenga sonnathu pola irattai vali aakanum!!!
ReplyDeleteThala,
ReplyDeleteAnga double road podara alavukku space illa....
Incase there is an oppurtunity if they start the work now it will take atleast 10 years or more to complete the work....
Better we can make alternate on the bend(Curves) alone.
Enne sir neenga ... eppa contact pannuvom appadinu solla mataengureenga...
ஆரம்பத்திலேயே ஒழுங்கா 4 லேன் கேரேஜ்வே போட்டா 90 % விபத்துக்களை தடுக்கலாம். சென்னையில் இன்னர் ரிங் ரோடு, பைபாஸ், சமீபத்தில் ஆரம்பித்திருக்கும் அவுட்டர் ரிங் ரோடு (ORR) எல்லாமே இந்த வகையை சேர்ந்தது. அதில் குறிப்பிடத்தக்கது என்னன்னா ORR-இன் மொத்த அகலம் 400 அடி. ரோட்டின் நடுவே 20 மீட்டர் அகலத்துக்கு இடைவெளியும் உண்டு. எதிர்காலத்துல மெட்ரோ அல்லது பஸ் இயக்குவதற்கு. இந்த ரோடு தமிழக சாலைகளின் Benchmark ஆக விழைகிறேன்.
ReplyDeletehttp://en.wikipedia.org/wiki/Outer_Ring_Road,_Chennai
I always admire you writing behind from screen. Ya, jacki, exactly two way road is best way to avoid most of the accident. I use to feel always our plan in transportation is planned with only short term vision and they don’t oversee with future development. Not only two way road, they should introduce lane system for vehicles. Cameras should be fixed at regular distance to watch speed of the vehicles. Drunken and drive should be punished heavily. Why innocent lose their life for drunken and drive? Good writing….have a great day jacki……
ReplyDeleteசமூக அக்கறை கட்டுரை,, வாழ்த்துக்கள் ஜாக்கி..
ReplyDeleteE.C.R ரோட்டில் புல்லட்டில் ஊருக்கு (மாயவரம்) செல்லும்போது சீறிப்பாயும் கார்களை பார்த்து பதருவதுண்டு....
ReplyDeleteசுமார் 8 வருடங்களக்கு முன்னால் நடந்த சம்பவம், இரவு நேரத்தில் ஒரு டாக்டர் தன் குடும்பத்தாருடன் காரில் செல்லும்போது மற்றொரு கார் பின்தொடுருந்து இருக்கிறது. யாரும் இல்லாத இடத்தில காரை முன்பக்கம் வழி மறித்து, முதலில் headlight உடைத்து இருகிறார்கள் பின்பு எல்லாவற்றையும் பிடுங்கி கொண்டு மறைந்து விட்டார்கள். ECR ரோட்டில் Headlight இல்லாமல் வண்டி ஓட்டுவது சிரமம் என்பது கூடுதல் தகவல்.
ReplyDeleteநீங்க சொல்லற மாதிரி இந்த ECR ரோட்ல எல்லோரும் போகாம இருக்கறது தான் நல்லது. மீறி போனால் சொந்த காசில் சுனியேம் வைத்து கொள்வதற்கு சமம்.
ஜாக்கி சார் தமிழ்ல type அடிச்சு தாவு தீர்து. வாரத்துக்கு 4 , 5 பதிவு போடறது உண்மையலே பெரிய விஷயம் தான்.
Helmet உடன் படத்தில் இறப்பது நீங்கள? ரொம்ப அழக இருக்கீங்க. யாரோடையது இந்த KA registration வண்டி?
ReplyDeletewell said
ReplyDeleteமுதல் மணி கட்டி இருக்கீங்க.. பார்ப்போம்.. எதாவது நடக்குதான்னு...
ReplyDeleteஎங்கு சென்றாலும் பதிவு போடுவதை பற்றிதான் யோசிப்பிங்களோ?
ReplyDeleteஉங்கள் பதிவுகள் உங்கள் டைரி போல் உள்ளது சில வார்த்தைகளை எடிட் செய்தால் உங்கள் பேர புள்ளைங்களும் பெருமைகொள்ளும் எங்க தாத்த ப்ளாக் என்று
அக்கறையான இடுகை.
ReplyDelete"குட்டி போதை , புட்டி போதை இரண்டும் பாண்டியில் ரொம்ப சீப் அதனால் அந்த பக்கம் நம்ம வசதி அதிகம் உள்ள இளைஞர் பட்டாளம் அதிகம் படை எடுக்கின்றார்கள்"
ReplyDeleteஜாக்கி நீங்க சொன்ன "புட்டிபோதை" இங்க தாளரம் அனைவருக்கும் தெரிந்து ஆனா "குட்டி போதை" பெரும்பாலும் வரும்போதே கூடவே தள்ளிகினு வருவதுதான் அதிகம்.
இந்த ஆண்டு புதியதாக 150 பார் நடத்துவதற்கு புதுவை அரசு தனியாருக்கு லைசன்ஸ் கொடுத்துள்ளது.
nice post.
ReplyDeleteமழை பெய்தால் இன்னும் வழுக்கும் என்று கேள்விபட்டு இருக்கிறேன் ! ! வேகம் கூடக் கூட ஆபத்துதான்..... நாம் சாலை விதிகளை பின்பற்றினாலும் அடுத்தவர்கள் பின்பற்றாமல் இருக்கும் போது நமக்கும் பாதிப்புதான்
ReplyDeleteoh my god.... @dear balaji, helmettudan yarum irakkala... :) irukkiraanga
ReplyDeleteசூப்பர் பதிவு தல! வாழ்த்துக்கள்!! :)
ReplyDeleteஉண்மைதான் ஜாக்கி 1996 இல் நானும்தான் அந்த ரோடு அமைக்கும் பணியில் இருந்தேன் திருவான்மியூர் லிருந்து கூவத்தூர் வரை பினிஷிங் இல் இருந்தேன்.வேலை செய்யும்போதே நடந்த விபத்துக்கள் கண்ணெதிரே எத்தனை எத்தனை,நீங்கள் குறிப்பிடுவது 100 சதம் உண்மை.
ReplyDeleteஎன்னுடன் பணியிலிருந்த என் கூடப்படித்த நண்பனையே விபத்தில் இழந்ததுதான் சோகம்.நானும் முடிந்தவரை யாருக்கும் இந்த சாலையை சிபாரிசு செய்வதே இல்லை.நல்ல ஒரு தேவையான இடுகை மிக்க நன்றி ஜாக்கி.
அக்கறையுடன் எழுதப்பட்டது. படிப்போர் மனதில் நிறுத்தி வேகக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பதும்; அரசும் இதை இருவழிப் பாதை ஆக்க முயற்சி செய்யவேண்டும்.
ReplyDeleteநீங்கள் எழுதும் பல விஷயங்கள் அன்றாட வாழ்க்கையில் தினசரி நடக்கும் துன்பங்களாகவும் அதை சரி செய்ய யாரும் எதுவுமே செய்யவில்லை அல்லது செய்யமுடியவில்லை என்பது உண்மை. பல வருடங்கள் இங்கிலாந்தில் குடியிருந்து பின் சென்னை வந்தவுடன் நானும் மூன்று வருடங்கள் வாழ முயற்சி செய்து பின் திரும்பி போனது இது போன்ற பல விஷயங்களால் தான் (பிறப்பால் இளவரசர் ஆட்சி புரியும் ஊரில் பிறந்து வளர்ந்தவன்.). ECR கிட்டத்தட்ட எங்களூரில் உள்ள 'A ' ரோடு வகையறா. 'A' ரோடை விட motorway இன்னும் வேகமானது அல்லது மிக சிறந்தது. இது போன்ற ரோடுகளில் ஆபத்து விளைவிக்க கூடிய இடங்களுக்கு முன்னும் பின்னும் ஒரு சில மைல்கள் (ஒரு சில மைல்கள்...ஒரு சில மீட்டர்கள் அல்ல) சாலையில் ஒரு விதமான அதிர்வு ஏற்படுத்த கூடிய designs (அ) அமைப்புகள் உண்டு. இது வாகன ஓட்டிகளுக்கு ஒரு விதமான விழிப்பை தர கூடிய வகையில் அமைந்து இருக்கும். ஒரு விதமான jerk இவை ஏற்படுத்தும் மற்றும் இயற்கையாகவே இத்தகைய அதிர்வுகளால் வாகன ஓட்டிகள் வேகத்தை குறைப்பார்கள். ஒருவேளை இது போன்ற விஷயங்களை செய்தால் விபத்து குறைய வாய்ப்பு உண்டு.
ReplyDeleteuseful news thanks
ReplyDeleteகுட்டி போதை , புட்டி போதை இரண்டும் ."குட்டி போதை" பெரும்பாலும் வரும்போதே கூடவே தள்ளிகினு வருவதுதான் அதிகம்.
ReplyDeleteஜாக்கி சார் இப்பொவும் நான் வரும்போது எந்த வழியில் போவது என்பது எனக்கு பயம்.
ReplyDeleteபின்னுட்டம் இட்ட அனைவருக்கு என் நன்றிகள்.. தனி தனியாக நன்றி தெரிவிக்க முடியாது அதனால் எல்லோருக்கு என் நன்றிகள்...
ReplyDeleteஇந்தபின்னுடம் மூலம் இன்னும் பல பேருக்கு பல தகவல்கள் சென்று அடையும்...
மிக்க நன்றி நண்பர்களே..
கண்ணன் நீங்கள் சொல்வது உண்மை... பாரின் போனவர்கள் திரும்ப இகே வந்து குப்பை கொட்டுவது ரொம்ப கஷ்டம்.. அதில் மிக முக்கியம் சாலைகள்.. போக்குவரத்து
ReplyDeleteஅன்புள்ள ஜாக்கி, உண்மையான சமூக அக்கறையுடன் எழுதியுள்ளீர்கள். கடந்த இருபது ஆண்டுகளில் சீனாவின் அசுர வளர்ச்சிக்கு அவர்கள் அடிப்படைக் கட்டமைப்புக்கு கொடுத்த முக்கியத்துவமே காரணமாகும். அதுபோல இங்கும் நடக்க வேண்டும். ஈ.சி.ஆர். நான்கு வழி சாலையாக மாற்றுவது சாலச் சிறந்தது. நிற்க! பல நாட்களாக உங்கள் பதிவுகளை படித்து, முக்கியமாக உங்கள் திரை விமர்சனங்களை ரசித்து வந்தாலும் இன்றுதான் தமிழில் பதிலளிப்பது மற்றும் இன்ட்லி மூலம் வோட்டிடுவது எப்படியென்று எனது மகள் மூலம் அறிந்து பதியும் என் முதல் பதிவு!
ReplyDeleteஅன்புடன், கொடுமுடி சண்முகம்
அக்கறையான பதிவு. இப்போது கும்பகோணத்திலிருந்து வரும் அரசு/தனியார் பேருந்துகள் அனக்கரை பாலம் பழுதாகி இருப்பதால் சிதம்பரம் சுற்றி திண்டிவணத்தை அடைந்து நெடுஞ்சாலையில் சென்னையை வந்தடைய வேண்டும். ஆனால் இதனால் திண்டிவனம் வரும் வரை சாலை குண்டும், குழியுமாக் இருப்பதால் தனியார் பேருந்துகள் (ஆம்னி பேருந்துகள்) ECR சாலையை தேர்ந்தெடுத்து கும்பகோணம்-மயிலாடுதுறை-சிதம்பரம்-பாண்டி-சென்னை வருகிறார்கள், இதனால் கூடுதலாக இரவு நேரங்களில் ECR சாலையில் அதிகளவில் பேருந்துகள் செல்கின்றனர். கும்பகோணம், தஞ்சை, மன்னார்குடி, திருவாரூர் போன்ற ஊர்களில் இருந்து புறப்படும் தனியார் பேருந்துகள் (பெரும்பாலும் இரவுகளில்) ECR சாலையையே தேர்ந்தெடுக்கிறார்கள் இரவு நேரங்களில் இதனால் சாலை போக்குவரத்து அதிகமாவதால் ECR சாலையை விடுத்து வேறு சாலையில் செல்வது சாலச் சிறந்தது.
ReplyDeleteசமூக அக்கறையான கட்டுரை.
நீங்கள் குறிப்பிட்ட இ சி ஆர் சாலை விபத்துகள் மிகவும் உண்மை, ஆனால் மாநகர போக்குவரத்து என்று சென்னைக்குள் இயங்கி வருகின்ற போக்குவரத்து நெரிசலையும் அதன் சங்கடங்களையும் எழுத்துக்களில் அடக்க இயலாது, பல சாலைகளை ஒருவழி சாலையாக மாற்றியும் நெரிசல் குறைந்தபாடில்லை, ஒருவழி சாலையாக மாற்றியதனால் பலரால் அந்த சாலைகளுக்கு இரண்டு மூன்று கிலோ மீட்டர் சுற்றிக்கொண்டு போக வேண்டிய நிர்பந்தகள், அரசு பேருந்து ஓட்டுனர்களின் அடாவடித்தனமான மற்றும் ஒழுக்கமற்ற ஓட்டமும் பல சமயங்களில் உயிரை கையில் பிடித்துக்கொண்டு 'கரணம் தப்பினால் மரணம்' என்று பயணிக்கச் செய்கிறது. சிறிய இடைவெளியினுள் நுழைந்து வேகமாக பயணிக்கும் இரண்டு சக்கர வாகன வித்தகர்களை பார்க்கும்போது 'பாவம் இவர்களை நம்பி இருக்கும் இவரின் குடும்பத்தார்' என்று பரிதாபப்பட வைக்கின்ற மயிர் கூச்செறிய வைக்கும் சாகசங்களும் அன்றாடம் சென்னை மாநகர போக்குவரத்தின் காட்ச்சிகள்.
ReplyDelete