மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/31•10•2010)

ஆல்பம்..
காங்கிரஸ், பாஜக  இரண்டுமே திருடர்கள்தான் என்பது மீண்டும் நிரூபனம் ஆகிவிட்டது. பாஜக ஆட்சியில் கார்கில் சவபெட்டி ஊழல் பெரிதாக அடிபட்டது, நம் எல்லோருக்கும் நினைவு இருக்கலாம்.. இப்போது காங்கிரசின் டேர்ன்... எஸ், கார்கில் போர் தியாகிகளுக்கு  வீடுவழங்கும் திட்டத்தின் கீழ் கட்டபட்ட வீடுகளில் கார்கில் போரில் உயிர் நீத்த மற்றும் அதனால் விதவை ஆனாவர்களுக்கு இந்த வீடுகள் வழங்க கட்டபட்டது.. ஆனால் மாராட்டிய முதல்  மந்திரி அசோக் தவான் மாமியார், மைத்துனி என சொந்தங்களுக்கு வீடு வழங்கி அசத்தி இருக்கின்றார்.. பிரச்சனை பெரிதாக இப்போது சோனியாவிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்து இருக்கின்றார்.....அடுத்த அமைச்சர் ராசாகூட ராஜினாமா செய்யலாம் என்று டெல்லி பட்சிகள் சொல்லிக்கொண்டு இருக்கின்றன.


சரி நம்மூர்லதான் இந்த கொடுமைன்னு ரஷ்யா பக்கம் போய் பார்த்தா,ஆண்டுக்கு ஒரு லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய், ரஷ்ய அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதால் அரசுக்கு எற்படுகின்றது. எல்லா நாட்டுலயும் லஞ்சகொடுமை தலைவிரித்து ஆடுகின்றது.... நாராயணா....
==============
மீண்டும்  பணத்துக்காக கடத்தி இரண்டு பிஞ்சுகளை ஒரு டிரைவர் கொலை செய்து இருப்பதும் மிகவும் வேதனையான செய்தி... கொலை செய்யும் முன் தனக்கு அந்த குழந்தைகள் சாப்பிட சப்பாத்தி கொடுத்தன என்று வேறு சொல்லி இருக்கின்றான்... இந்த கொலை எந்த திட்டமிடலும் இல்லாமல் கடத்தி நடத்தபட்ட கொலை இது... பணத்துக்காக கடத்திய குழந்தைகளின் பெற்றோரிடம் பணம் வேண்டும் என்று கேட்காமலேயே குழந்தைகள் கொலை செய்யபட்டு இருக்கின்றார்கள்...  ஏன் பணம் கேட்கவில்லை?? என்று டிரைவரிடம் கேட்டாள். சுற்றிலும் பார்த்தேன் எந்த ஒரு ரூபாய் காயின் போனும் அருகில் இல்லை என்று கடத்திய டிரைவர் சொல்லி இருக்கின்றான்...கொடுமையாக இல்லை. அந்த குழந்தைகளின் நச்சரிப்பு தாங்காமல் பயத்திலேயே கொலை செய்து இருக்கின்றான்....என்ன குருட்டு தைரியமோ???
=========
மிக்சர்..

நண்பர் ராஜன் திருமணத்துக்கு போய் இருந்தேன்...எல்லோரும் நன்றாக சிரித்து பேசிக்கொண்டு இருந்தோம்... இப்போது பார்த்தால் அந்த நிகழ்வு குறித்து பற்றி எறிந்துகொண்டு இருக்கின்றது. சத்தியமா இப்படி நடக்கும் என்று நான் அங்கு இருந்த வரையில் எனக்கு நிச்சயம் தெரியாது... என் திருமணத்திலும்  இது போல ஒரு சம்பவம் நடந்தது. எனக்கு தமிழர் முறைபடி திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று ஆசை.. ஆனால்  என் மனைவி.. புரோகிதர் வைத்து திருமணம் செய்யவேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தாள்... நான் அதனை எதிர்த்து இருந்தால்  நான் ஆணாதிக்கவாதியாக இருந்து இருப்பேன். என் கருத்துக்களை வலுகட்டாயமாக தினித்த இருந்தாலும் அது தவறாக  போய் இருக்கும்... எவ்வளவு முரண்பட்ட கருத்துக்கள் இருந்தாலும் திருமணம் என்றால் நிறைய விட்டுகொடுக்கவேண்டி இருக்கும்...அம்புட்டுதேன்.
============
சேம்பரில் நடந்த ஐரோப்பிய உலகபடவிழாவுக்கு போய் இருந்தேன்... துவக்க விழாவின் போது மிஷ்கின் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது ஒருவர் சத்தமாக மச்சி சும்மாதான் படங்காட்றாங்க??? நான் அங்கதான் இருக்கேன் என்று செல்போனில் சத்தமாக பேச,மிஷ்கின் டென்ஷனாகி வெளியே போய் பேசுங்கள் என்று கருப்பு கண்ணாடி அவிழ்க்மல் சத்தம் போட்டார்....
=====================
படம் ஆரம்பிக்கும் போதே செல்போன் சுவிட்ச் ஆப் செய்யுங்கள் என்று சொல்லிவிட்டுதான் படமே போடுகின்றார்கள்.
நானும் நண்பர் நித்யாவும் படம் பார்த்துக்கொண்டு இருந்தோம்.. ஒரு கல்லூரி மாணவன் தனது காதலியோட செல்போனில் கடலை போட்டுக்கொண்டு இருக்க.. நான் அவனை திரும்பி பார்த்தேன்..  அப்போதும் பேச்சு நிறுத்தவில்லை... தியேட்டருக்கு வெளிய நிறைய இடம் இருக்கு... போய் எவ்வளவு வேண்டுமானாலும் சத்தமாக பேசி தொலை... இங்க உட்கார்ந்து படம் பார்ப்பவங்க எல்லாரும் பைத்தியாகலி பு.......................... என்றதும். சவுண்ட்  இல்லை....
============

உலகபடவிழாவில் பன்மொழி திரைபடத்தை காண பல கல்லூரி விஷுவல் கம்யூனிகேஷன் மாணவ மாணவிகள் வந்தார்கள்... அவர்கள் கால் வாசி படம் ஓடி  அதன் பிறகு வந்தார்கள்...  ஒரு 30 பேருக்கு மேல் இருக்கும்...அவர்கள் உள்ளே வந்ததும்  ஒரு உடலுறவு காட்சி ஓட  தியேட்டர் கொல் என்று கோரசாக சவுண்ட் விட்டது...வந்த பெண்கள் கதையுன் ஊடே வரும் இயல்பான உடலுறவு காட்சிகளை பார்த்து ரசித்தார்கள்... யாரும் சீன் போடவில்லை... நானும் என் மனைவியை உலக படவிழாக்களுக்கு அழைத்து போய் இருக்கின்றேன். எனது மாணவ மாணவிகளோடு நாங்கள் தம்பதியாய் படம் பார்த்து இருக்கின்றோம். நானும் எனது மாணவிகளை இது போல மூன்று பட விழாக்களுக்கு அழைத்து போய் இருக்கின்றேன்... நான் ஒரு மாணவியிடம் கேட்டேன்...உனக்கு கூச்சமாக இல்லையா? அதற்கு அவள் சொன்னாள்... என் வயசு என் கிளாஸ் பாய்ஸ்கிட்ட ஏன்சார் இந்த கேள்வியை நீங்க கேட்கவில்லை? என்றாள்?? ரெண்டு பேருமே?? 18க்கு மேலதானே என்றாள்....  நான் சொன்னேன் இந்த சமுகம்  ரொம்ப பாசங்கான சமுகம் என்றேன்... எனக்கு கவலை இல்லை எல்லோரையும் விட பெண்களுக்கு செக்ஸ்  பற்றி  நன்றாகவே தெரியும் என்றாள்..
==================
இந்தவார நிழற்படம்..தீபாவளி ஸ்பெஷல்...

=============
இந்தவார சலனபடம்...
விளம்பரம் ஓகே.. ஆனா எனக்கு ஒரு சந்தேகம் எப்படி அந்த நாயிக்கு டிரெய்னிங் கொடுத்தாங்க...
எத்தனை டேக் எடுத்து இருப்பாங்க??


=========================

ஒரு சிறுவிளக்கம்....
சில ஆபாச மெயில்கள் எனக்கு தொடர்ந்து வந்து கொண்டு இருக்கின்றது... அதை அனுப்புகின்றவர்கள் நாலு பேருக்கு மேல் இல்லை என்று எனக்கு தெரியும்....சில நெகிழ்வான கடிதங்களும் வந்து கொண்டு இருக்கின்றது...

மெயிலில் என்னை திட்டினால் நான் டெம்ட் ஆகிவிடுவேன் என்று நினைக்கின்றார்கள்... அது ஒரு போதும் நடக்காது...நான் எப்போது டெம்ட் ஆவேன் என்பதை நான்தான் முடிவு செய்யவேண்டும்... என்னோடு பழகும் பலருக்கு தெரியும் நான் எப்படிபட்டவன் என்று.....எதற்கு?எப்போது? எப்படி? ரியாக்ஷன் கொடுப்பேன் என்பது பலருக்கு தெரியாது.....பதிவுலகில் நெடுநாட்களுக்கு பிறகு என் புகழ் பட்டொளிவீசி  பறந்தது... . என் புகழை பரப்பும் நாலே நாலு பக்தகோடிகளுக்கு  நன்றிகள்....


என் மீது நம்பிக்கை இல்லாத என் அம்மா என்னை பார்த்து அடிக்கடி சொல்லுவாள்... நல்லது செய்.... அல்லது கெட்டது செய்... எதையாவது செய்.... ஆனால் எதுவும் செய்யாமல் இருக்காதே என்று...

என்னை கோபபடுத்தி, என் வீட்டு பெண்களை வம்புக்கு இழுத்தால் நான் டெம்ட் ஆகி  வார்த்தைகளைவிடுவேன் என்று  எனது நலம்விரும்பிகள் நினைத்துக்கொள்கின்றார்கள்... ஒரு போதும் நடக்காது... இலங்கையில்  மிக பெரிய போரும், அதன் மூலம் நம் தொப்புள்கொடி உறவுகள் வதைக்கபட்டு, மூன்று லட்ச்சத்துக்கு மேற்பட்டவர்கள் கொல்லபட்ட போது,எந்த ரியக்க்ஷனும் இல்லாமல்  தமிழகத்தில் இருந்தோமே? அது போல என்னை எப்படிவசைபாடினாலும் அப்படித்தான்  இருக்கபோகின்றேன்....இப்போது எதையாவது எழுதி என்னை வம்புக்கு இழுத்து நான் விடும் வார்த்தைகளை வைத்து குளிர்காய நினைப்பவர்களுக்கு,ஒன்றை சொல்லிக்கொள்கின்றேன். உங்கள் எண்ணம் ஒரு போதும் ஈடேறபோவதில்லை.......இலங்கையில் அத்தனை உயிர் போன போதே எந்த ரியாக்ஷன் நம்மவர்கள் கொடுக்கவில்லை ....கேவலம் எழுத்துக்கா நான் ரியாக்ஷன் காட்டிவிட போகின்றேன்.... ஏன்னா??

நான் தமிழேன்டா....


சட்டியில் இருப்பது தானே அகப்பையில் வரும்
சிலரது அடி மன வக்கிரங்கள் இப்பொழுது வெளிவந்து கொண்டிருக்கிறது

இந்த விவகாரத்தில் ஒரு நன்மை
ஒரு சிலர் வளர்க்கப்பட்ட விதமும், அவர்களின் மனமும் இப்பொழுது வெளிவந்துள்ளது

இது போன்ற மனபிறழ் நபர்கள் வெளிப்படுவது எனக்கு மட்டுமல்ல, பிற பதிவர்களுக்கு கூட பயன்படும் என்றே நினைக்கிறேன்”.

நான்கு பேர் ரவுண்டு கட்டினார்கள்.. அது நாற்பதாக மாறும்,இன்னும் நிறையபேர் வருவார்கள் என்று எதிர்பார்த்தார்கள்... எல்லோரும் அவர்களை புறக்கணித்து அமைதி காத்தார்கள்...அத்தனை பேருக்கும் என் நன்றிகள்....

நான் உருவாக காரணமாக இருந்த எனது தந்தை சொல்லியே கேட்காதவன்நான்... எனக்கு தோன்றியதை நான்  செய்வேன்....இப்போதும் எப்போதும்.

எனது தளம் இதன் வாசகர்கள்... என் பொருட்டு மிக வேதனையான வசவுகள் உங்கள் நோக்கியும் வீசபட்டது... அமைதியும் கண்ணியமும் காத்தீர்கள்.... மிக்க நன்றி...
=====================

இந்தவார பதிவர்...

ஒரு வலையை சிலாகித்து இதில் லிங்கொடுத்தேன்... அந்த நண்பருக்கு அதில் வருத்தம் என்பதை அவரோடு பேசும் போதுதான் எனக்கு தெரிந்தது...சரி இனி ரொம்பவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்...ஒவ்வோருத்தருக்கும் ஒவ்வோரு பீலிங் மச்சி....
===================
இந்தவார கடிதம்..
ஹலோ வணக்கம்.

உங்களை பற்றி பதிவில் பார்தேன்.உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துவது சிற்ப்பாக இருக்கிறது.நான் கொற்ரவை.இலங்கையில் பத்திரிகையாளரா இருகிற்ன்.

நன்றி...
================

Dear Sekar
i am one of the followers of you blog, after i know ur from cuddalore, realy proud of you,
ur writing Style and subject you write all are fine, every time i surf in net , ieagrly waiting for ur new post, PKP , suba, Rk all are our teenage hero's , ur right
i wait always ur post
K.singaravelu
Thirupapuliyur
Cuddalore
===========
பிலாசபி பாண்டி
பாண்டிகிட்ட ஒருத்தன் வந்து ஐடியா கேட்டான்...  மச்சி நான் எது செஞ்சாலும் என் பொண்டாட்டி குறுக்கே நிக்கறா??? அதுக்கு நம்ம பாண்டி சொன்னான்.. தைரியமா கார் ஓட்டு என்ன நடக்குதுன்னு பார்க்கலாம் என்றான்..
==============
பிலாசபி பாண்டி பீர் குடிக்கமாட்டேன்னு  பொண்டாட்டிகிட்ட சத்தியம் பண்ணான்... ஆனா பீர் குடிச்சிட்டு வந்தான்.. அதுக்கு பொண்டாட்டி கேட்டா??... காரணம் இல்லாமல் குடிக்கமாட்டேன்னு சொல்லிட்டு இப்படி குடிச்சிட்டு வரிங்களே? என்று கோபமா கேட்டதுக்கு  நம்ம பாண்டி சொன்னான்...தீபாவளிக்கு ராக்கெட் விட  பாட்டில் தேவை அதுக்குதான்...
============
நான்வெஜ் 18+
ஜோக்..1
Boy: Excuse me sister, that's my seat..
Girl: Ok! But i'm not your sister because my dad never fucked your mom..
Boy: True, but my father did!..
Moral: Don't be over Smart.


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....

குறிப்பு.. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள். 

26 comments:

 1. Thala Naan than first:P

  Please ignore the mails from the 4 (Guys)gays....:P

  Please mark them as spam and delete.......

  Enna sir,

  Last week bloggers meeting pogalam appadinu vanthen gandhi silaiku(Near DGP office)....by 18:45hrs...
  But could not able to see you....
  Eppa enga poreenga.. thalaiva......
  Sollunga oru nal meet pannuvom....

  ReplyDelete
 2. //அப்போது ஒருவர் சத்தமாக மச்சி சும்மாதான் படங்காட்றாங்க??? நான் அங்கதான் இருக்கேன்//

  //ஒரு கல்லூரி மாணவன் தனது காதலியோட செல்போனில் கடலை போட்டுக்கொண்டு இருக்க..//

  எமது தமிழர்களின் கலையார்வம், சுரணை உலகறிந்ததுதானே! எல்லா இடத்திலேயும் இப்படியானவர்களைக் காண முடிகிறது...என்ன செய்வது..

  ReplyDelete
 3. எப்போதும்போல் இருங்கள்.. நீங்கள் எழுதவதை படிக்க தினசரி வரும் வாசகர்கள்தான் முக்கியம் ... நீங்கள் எப்படி எழுதவேண்டும் என்று சொல்கிற உரிமை யாருக்கும் இல்லை ..

  அந்த இரண்டு குழந்தைகளை கொன்றது கொடுமை ...

  ReplyDelete
 4. sandwich arumai...

  antha pinsugalin pakirvu manathai kanakkach seithathu... enana manithai evan... ivanai ekllam appavey suttuth thallanum. RASKAL.

  ReplyDelete
 5. காங்கிரஸ் பாஜக இரண்டும் திருடர்கள் என்று இப்போது தான் புரிந்ததா அண்ணே?

  ReplyDelete
 6. தேசியத் திருடர்களான காங்கிரஸ் பாஜக பற்றி எழுதியதுபோல் உள்ளூர் திருடர்களான திமுக, அதிமுக பற்றியும் எழுதுங்கள். ராசா பதவி விலகினால் காங்கிரஸ் திமுக கூட்டணி கவிழுமா?

  நீங்கள் நீங்களாகவே இருங்கள் எவருக்காகவும் மாறவேண்டாம்,

  ReplyDelete
 7. அந்த இரண்டு குழந்தைகளை கொன்றது கொடுமை.

  ReplyDelete
 8. இலங்கையில் அத்தனை உயிர் போன போதே எந்த ரியாக்ஷன் நம்மவர்கள் கொடுக்கவில்லை ....கேவலம் எழுத்துக்கா நான் ரியாக்ஷன் காட்டிவிட போகின்றேன்.... ஏன்னா??

  நான் தமிழேன்டா....
  good one

  ReplyDelete
 9. நான் தமிழேண்டா

  ReplyDelete
 10. நான் தமிழேன்டா

  ReplyDelete
 11. என் மீது நம்பிக்கை இல்லாத என் அம்மா என்னை பார்த்து அடிக்கடி சொல்லுவாள்... நல்லது செய்.... அல்லது கெட்டது செய்... எதையாவது செய்.... ஆனால் எதுவும் செய்யாமல் இருக்காதே என்று...
  சார்,

  நான் ஒன்னும் உங்களுக்கு அட்வைஸ் பன்னுராலாகு பெரிய ஆளு இல்ல , நம்ல விட பெரியவைங்க ல எப்படி சொல்ல கூடாது , சொல்லுவாங்க நு போட்டு இருந்திங்கான நல்லா இருந்து இருக்கும்.
  தப்பா சொல்லிருந்தா சாரி

  ReplyDelete
 12. அந்த குழந்தைகள் என்ன பாவம் பண்ணி நாங்க , அவன் ந லம் சும்மா வீடகூடாது. உண்டனே துக்குள போடணும். எல்லா மீடியா உம இத செயல் படுத்தனும்

  ReplyDelete
 13. இலங்கையில் அத்தனை உயிர் போன போதே எந்த ரியாக்ஷன் நம்மவர்கள் கொடுக்கவில்லை ....கேவலம் எழுத்துக்கா நான் ரியாக்ஷன் காட்டிவிட போகின்றேன்.... ஏன்னா??

  நான் தமிழேன்டா....உங்களின் வளர்ச்சிக்கு உதாரணம்.

  ReplyDelete
 14. வலைத்தளத்தின் வலது பக்கம் இருக்கும் இலங்கை செய்திக்கு நன்றி ஜாக்கி......அப்புறம் ...டாட்.காமுக்கு மாறி அசத்துவதற்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 15. \\\\இலங்கையில் அத்தனை உயிர் போன போதே எந்த ரியாக்ஷன் நம்மவர்கள் கொடுக்கவில்லை ....கேவலம் எழுத்துக்கா நான் ரியாக்ஷன் காட்டிவிட போகின்றேன்.... ஏன்னா??////

  நானும் தமிழேன்டா!!!!

  Maharaaja

  ReplyDelete
 16. நானும் தமிழனுங்கோ...

  அன்பு நித்யன்

  ReplyDelete
 17. குழந்தைகள் விஷயம் :(((

  ReplyDelete
 18. அண்ணே,
  இப்போ தான் லேட்டா படிச்சேன்,நல்லா சொல்லிருக்கீங்கண்ணே.தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 19. வழக்கம்போலவே அசத்தல் அண்ணே,

  நான் தமிழேன்டா....
  சரியான சாட்டையடி

  அந்த குழந்தைகளின் கொலை மனது வலிக்கிறது
  இப்படிப்பட்ட கொடூர மனித ஜென்மங்கள் இருப்பது ரொம்பவும் வேதனையாக உள்ளது

  அட்வான்ஸ் தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  நன்றி
  நட்புடன்
  மாணவன்
  http://urssimbu.blogspot.com/

  ReplyDelete
 20. ஒரு குறிப்பிட்ட வயது வரை நம் பிள்ளைகளை நம் கண்ணெதிரே வளர்த்தால் இதற்கு வாய்ப்பு குறைவு. இந்த சம்பவத்திற்கு பிறகு எல்லோரும் முழிதுகொண்டால் நல்லது. பிள்ளைகளை இழந்த அந்த பெற்றோர்களின் மனம் எந்த அளவு பாடுபடும் ! இது போன்ற செயில்களில் இடுபடுவோற்கு சட்டத்தை கடுமையாக்க வேண்டும். வேர என்னத்த சொல்ல.

  ReplyDelete
 21. வழக்கம் போல் அலுவலகம் வந்ததும் பிருந்தாவனத்தை பார்த்தேன்..நொந்தகுமாரன் வழக்கம்போல் அழகாக ப்ளாக்கியுள்ளார்......

  ஒன்றுமறியாத அப்பாவி குழந்தைகளை கொன்றது மிகக் கொடுமையான செயல்.....

  ReplyDelete
 22. குழந்தைகள், ஈடு கட்ட முடியாத இழப்பு.

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner