(BURNING BRIGHT-2009) உங்கள் வீட்டுக்கு எலி வரலாம் ஆனால் புலி வந்தால்???



 உங்கள் வீட்டில் நீங்கள் பயப்படும் பூச்சி  எது??? பல்லி , கரப்பான் பூச்சி, சித்தெறும்பு, சரி.... இத எல்லாம் அப்பார்ட்மென்ட் வாசிகளுக்கு.... குடிசைவாசிகளுக்கு மேலுள்ள பூச்சிகள் அல்லாமல் எலி,பூனை, நாய், பாம்பு,கீரி,உடும்பு போன்றவைகளை பார்த்து  பயப்படலாம்... மேலுள்ளவைகளை பார்த்து சிலர்மட்டும் பயம் கொள்ளலாம்..



ஒரு சின்ன கற்பனைக்கு  ஒரு விஷயத்தை நினைத்து பார்ப்போம்... நீங்கள் தாம்பரத்துக்கு பக்கத்தில் உள்ள பெருங்களத்தூரில் தனி பங்களாவில் இருக்கின்றீர்கள்.. உங்கள் வீட்டுக்கு பக்கத்தில்தான் வன்டலூர் மிருககாட்சி சாலை இருக்கின்றது. அதில் ஒரு புலி எப்படியோ தப்பித்து.... நிறுத்துங்க.... அது எப்படி தப்பிக்கும்??? அதான் சொல்லிட்டேனே எப்படியோ தப்பித்து உங்க வீட்டுக்கு உள்ள வந்துடுச்சி.. உங்க வீடு டூபளே ஹவுஸ்... அப்டின்னா???  உள்ளயே மாடிக்கு போகும் படி இருக்கும் வீடு....

சரி நிங்க உங்க வீட்ல நல்ல தூக்கம் தூங்கிட்டு  சட்டுன்னு கனவுவந்து, கனவு கலைஞ்சு எழுந்து உட்கார்ந்தா? தூக்கம் வரலை சரி ஒரு தம்மு பத்தவைக்க பால்கனிக்கு வந்தா கீழே ஒரு புலி நடந்து போனா?? தருக்கு தருக்கு அப்படியே கழிஞ்சிக்க மாட்டிங்க???

அப்படி புலிகிட்ட மாட்டிகிட்ட  ஒரு பொண்ணையும் சின்ன பைனையும் பத்திய கதைதான் இது..

சரி சின்ன ஜோக்... இப்படி நிஜமாலுமே ஒரு தமிழ்நாட்டில்  புலி தப்பிச்சி  ஒரு வீட்டுக்கு போய் இருந்தா எப்படி இருக்கும்???

கலைஞர் டிவி செய்திகள்..
முறத்தால் புலியை விரட்டிய மறத்தமிழச்சிக்கு இன்னும் இரண்டு வாரங்களில் பாராட்டு விழா எடுக்கபடும் என்று கலைஞர் அறிவித்தார்.
====================
ஜெயா டிவி...

நேற்று மதுரை பொதுகூட்டத்தில் பேசிய அதிமுக பொதுசெயலாள்ர் செல்வி ஜெயலலிதா ஒரு புலி தப்பிக்கின்றது என்றால் அது மைனாரிட்டி திமுக அரசின் லட்சனத்தையே இது காட்டுகின்றது..மிருகத்தையே கட்டுபடுத்த தவறிய மைனாரிட்டி அரசு விடுதலைபுலிகள் விஷயத்தில் எப்படி இருந்து இருக்கும் என்று சற்றே சிந்தித்து பாருங்கள்..??

BURNING BRIGHT-2009 படத்தின் கதை என்ன??



கெல்லி அவன்தம்பி டாம் இரண்டு பேரையும் ஸ்டெப்பாதர் ஜான்தான் வளர்க்கின்றான். ஜான் ஒரு சின்ன சாபாரி ரெய்டு காட்டுல  வச்சி இருப்பது போல ஒரு சின்ன தனிமையான பிலேசை செட் பண்ணி அதில் பார்வையாளர்களை அதிகரிக்க திட்டம் தீட்ட அதுக்கு மெயின் அட்டாராக்ஷனுக்கு ஒரு புலியை வாங்க.... அந்த புலி வந்த நேரம் அந்த இடத்தை இரண்டு மடங்கு புயல் தாக்க போவதாதகவல் அதனால் வீட்டு உள்ள சின்ன காத்து கூட புக முடியாத அளவுக்கு எந்த சந்தையும் விட்டு வைக்கவில்லை எல்லா இடத்திலயும் காட் போட்டு வச்சி ஆணி வச்சி அடிச்சி சேபா மாத்திய வீட்டுக்கு, புலி உள்ளே கொண்டு போய்வைக்கலாம்னு  எடுத்துக்கொண்டு போகும் போது புலி தப்பித்து உள்ளே  போய் விடுகின்றது..



வீட்டில் கெல்லி அவளின் தம்பி டாம் இரண்ட பேர் மட்டுமே... டாம் ஒரு மனநிலை சரியில்லாத சின்ன பையன். இவங்க மட்டும் இருக்கும் வீடு.. வெளியே போக முடியாது புயல் வேறு..புலி வேறு பசியில் இருக்கின்றது.. அது நன்றாக சாப்பிட்டு 14 நாளுக்கு மேல் ஆகின்றது.. அந்த வீட்டிவ் இருக்கும் கெல்லியும் டாமும் என்னவனார்கள் என்பதை விருப்பம் இருந்தால் இந்த படத்தை பார்க்கவும்.

படத்தின் சுவாரஸ்யங்களில் சில..

மொத்தம் ஆறு கேரக்டரை வைத்துகொண்டு இவ்வளவு சுவாரஸ்யமாக படம் பண்ணிய இயக்குனர் Carlos Brooks பாராடுக்குறியவர்...

ஒரு வீடு இரண்டு பேர் அவுங்களுடைய தவிப்பு அந்த பயம் இதுதான் படத்துக்கு அடிநாதம்..

சின்ன பட்ஜெட்ல எப்படி படம் எடுப்பது என்று சொல்லிதருகின்றது இந்த படம்.

புலிக்கு பயந்து கொண்டு  இருக்கும் போது அந்த சின்ன பையன் மனநிலை சரியயில்லாதவன் எதை பற்றியும் கவலைபடாமல் டிவி பார்ப்பது என்று நிறைய டென்ஷன் ஏற்றும் சுவாரஸ்யங்கள்..

புகை  போக்கியில் மாட்டிங்ககொண்டு இருக்கும் கெல்லியை புடிக போக்கி வழியாக  சின்ன ஓட்டையில் புலியை காட்டும போது நன்றாக கேமராமேன் யோசித்து இருக்கின்றார்...

ஒரு புலி இரண்டு பேர்.. சவுண்டை போட்டு மெரட்டி படம் எடுத்து இருக்கின்றார்கள் என்று எளனமாக சொல்லாத அளவுக்கு இந்த படத்தை எடுத்து இருக்கின்றார்கள்.

வழக்கம் போல் இந்த படத்து  பெண்ணுக்கும் வெள்ளை டிரஸ் போட்டு மழையில் நனைய விட்டு இருக்கின்றார்கள். ஆனால்........

இந்த படத்தின் கிளைமாக்ஸ்சும் மிக அழகாக நல்ல டுவிஸ்ட்டோடு அமைந்து இருப்பது சிறப்பு...

இந்த படம் டைடம்பாஸ்படமாகதான் இருந்து இருக்கும் ஆனால் இந்த படத்தின் விறுவிறுப்பு பார்க்கவேண்டியபடமாக மாற்ற வைத்து விட்டது...

பைசா செலவில்லாமல் பயமுறுத்தும் ஒருபடம்.. ஏற்கனவே பிரே என்று ஒரு ஆங்கில படம் எழுதி இருக்கின்றேன்.. அந்த படத்தின்களம் ஒரு காடு... ஆனால் இந்த படம் ஒரு வீடு..


படத்தின் டிரைலர்



படக்குழுவினர் விபரம்...


Directed by     Carlos Brooks
Produced by     Wayne Morris
Cami Winikoff
Written by     David Higgins
Christine Coyle Johnson
Julie Prendiville Roux
Starring     Briana Evigan
Garret Dillahunt
Meat Loaf
Charlie Tahan
Music by     Zack Ryan


Cinematography     Michael McDonough
Editing by     Miklos Wright
Studio     Lionsgate
Running time     86 min.
Country     United States
Language     English


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....

குறிப்பு.. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்.

13 comments:

  1. அண்ணே தகவல்கள் வியப்பளிகிறது..இது போன்ற வித்தியாசமான ஆங்கில படங்களை அறிமுகபடுத்தி வைப்பதர்க்கு நன்றி

    ReplyDelete
  2. நல்லா இருக்கே!
    ஜோக் சூப்பர் தல!:))

    ReplyDelete
  3. விமர்சனம் நல்லாயிருக்கு...

    ReplyDelete
  4. Jacky anna good comments , i like u r blog very much , keep it up all the best

    ReplyDelete
  5. தல இந்த டைட்டில பதிவு பண்ணிடுங்க, இல்ல என்றல் KTV சுட்டுவிடுவார்கள், சூப்பர் பெயர்

    ReplyDelete
  6. எந்த புலியா இருந்தாலும், நேருக்கு நேர நின்னு என்னோட கண்ண பார்க்க சொல்லு... அப்புறம் அந்த புலி உயிரோட இருந்தா பார்க்கலாம்...

    (கேப்டன் விஜயகாந்த்.........)

    தலைவா.... விருத்தகிரி, மன்மதன் அம்பு ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி, ஆடியோ விமர்சனம் வருமா?

    ReplyDelete
  7. இந்த படத்தை பார்த்தது இல்லை, PREY பார்த்திருக்கிறேன்,
    அங்கு சிங்கம் இங்கு புலியா!

    ReplyDelete
  8. படிக்கவே நல்லா இருக்கு! பாக்கணும்.

    ReplyDelete
  9. இந்த பதிவுக்கு மைனஸ் ஓட்டு குத்திய புண்ணியவான் யாரோ ?

    ReplyDelete
  10. Dear Mr. Jackie,

    Risk edukarathu ellam engaluku rusk sapidura mathri.... Antha puliya huffffffff nu oothi viratiduvom la.....

    Eppudi!!!!

    Rgrds,
    Vijay
    Muscat

    ReplyDelete
  11. ச்சே... இந்தப்படம் 18+ இல்லையா...?

    // இந்த பதிவுக்கு மைனஸ் ஓட்டு குத்திய புண்ணியவான் யாரோ ?//
    Same Feeling...

    ReplyDelete
  12. அண்ணே... நேத்து பாத்த படத்துக்கு விமர்சனம் போட்டாச்சு... மறக்காம வந்து படிச்சிடுங்க... ப்ளீஸ்...

    ReplyDelete
  13. thanks for review,anybody can see this movie and any english movie,go to this link

    www.letmewatchthis.com

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner