அயோத்தி நில வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் வழக்கிய தீர்ப்பு என்ன ?சூடான ரிப்போர்ட்

எல்லா சாலைகளும் ரோமை  நோக்கி என்பது போல், இன்று இந்தியாவே லக்னோ பக்கம் பார்வையை திருப்பி வைத்துக்கொண்டு இருக்கின்றன. இந்தியா மட்டும் அல்ல நமது எதிரிநாடுகள் மற்றும் உலக நாடுகள் அனைத்தும் லக்னோ பக்கம் பார்வையை திருப்பி இருக்கின்றன.



இந்தியாவே எதிர்பார்த்துக்கொண்டு இருக்கும் தீர்ப்பு.

500ஆண்டு கால பிரச்சனை.

வெள்ளைகாரர்கள் ஆட்சியின் போது நிலத்தை இருபிரிவுக்கும்  சரிபாதியாய் பிரித்து சமரசம் ஏற்படுத்தினர்.
1992ல் பெரிய பிரச்சனையாக வெடித்தது.
60 ஆண்டுகால  நில வழக்கு பிரச்சனைக்கு,கடந்த 24ம் தேதி சொல்லி இருக்க வேண்டும்.
பொதுநலவழக்கு தொடர்ந்த காரணத்தால் தீர்ப்பு தள்ளி போனது.

இந்த தீர்ப்பை எதிர்பார்த்து சூழ்நிலை எப்படி வேண்டுமானலும் இருக்கலாம் என்பதால் ஒன்றரை லட்சம்  லாரிகள் இன்று மதியம் 12லிருந்து நாளை காலை 6 மணி வரை ஓடவில்லை. சென்னையில் லோக்கல் மணல், செங்கல் லாரிகள் மட்டுமே அயராது பாடு பட்டுக்கொண்டு இருக்கின்றன.

 சென்னை நகரின் முக்கிய இடங்களில் போலிஸ்தலைகள்  தென்படுகின்றன.
கர்நாடாகவில் பள்ளி கல்லூரி விடுமுறை.
உத்திரபிரதேசத்தில்  பள்ளி கல்லூரி விடுமுறை இல்லை.
மும்பை எது பற்றியும் கவலைடாமல் இயல்பு வாழ்க்கையோடு இயங்குகின்றது.
நாடு முழுவதும் தீர்ப்பு எப்படி வந்தாலும் இந்தியனாக தீர்ப்பை ஏதிர்கொள்வோம் என்று அரசு அறிவித்து இருக்கின்றது.
ஒரு சிறிய இடத்துக்கு இரு தரப்பும் உணர்ச்சி வசப்படாமல் அமைதிகாக்க வேண்டும் என்று சோனியா, மன்மோகன் சொல்லி இருக்கின்றார்கள்.

இந்தியாவில் இயங்கும் ஆங்கில சேனல்கள் காலையில் இருந்தே அதிக கவனம் எடுத்துக்கொண்டு போட்டி போட்டு இந்தியாவின் மாநிலங்களின் பாதுகாப்பு ஏற்பாட்டினை கதறி கதறி சொல்லிக்கொண்டு இருக்கின்றன.

தமிழ்நாட்டின் கோவையில் மூன்றடுக்கு பாதுகாப்பு போட்டு இருக்கின்றன.

சென்னையில் கண்ணாடிகள் அதிகம் வைத்து இருக்கும் டைட்டன் மற்றும் பண்ணாட்டு நிறுவனங்கள் சற்றுமுன் தனது   பெரியஷட்டர்களை மூடி வயதுக்கு வந்த பெண் போல சிறிய வழியாக சாலை நடைமாட்டத்தை பார்த்துக்கொண்டு இருக்கின்றன.

 வெளியூர் செல்லும் பல நண்பர்கள் இன்றும் நாளையும் லீவ் போட்டு விட்டு சொந்த ஊர்   சென்றுவிட்டார்கள்.
தாஜ்மகால் சுற்றிலும்  மத்திய அதிரபடையினர் நின்று கொண்டு துப்பாக்கியோடு காவல் காத்துக்கொண்டு இருக்கின்றார்கள்.


பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் சோதனை செய்யபட்டே பயணிகள் அனுமதிக்கபடுகின்றா பேர்கள்.

1568ல் ஆரம்பித்த பிரச்சனைக்கு 3 நீதிபதிகள் தீர்ப்பு சொல்ல போகின்றார்கள்.

எல்லா அரசியல் கட்சி தலைவர்களும் இந்தியனாக தீர்ப்பை எதிர்கொள்ளவேண்டும் என்று சூளுரைத்து வருகின்றார்கள்.

கோர்ட்டில் மொபைல் போன் எடுத்து செல்ல தடை விதிக்கபட்டுள்ளது...

 கோர்டுக்கு போகும் எல்லா சாலைகளும் சில் செய்யபட்டு விட்டன.

தீர்ப்பை  தெரிவிக்கும் நீதிபதிகள் இல்லங்கள் முழு பாதுகாப்பில் இருக்கின்றன.

இந்தியாவின் முதல் சென்சிட்டிவ் தீர்ப்பு இது. அதனால் நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்போடு இருக்கின்றன.

3,30க்கு சொல்ல வேண்டிய தீர்ப்பு. தீர்ப்பு இந்தியா முழுமைக்கு தெரிய எப்படியும் இன்று மாலை 4 மணிக்குமேல் தெரியும்.
அரைமணி நேரத்துக்கு எல்லா செய்தி சேனல்களும் விளம்பரம் போட்டு ஒப்பேற்றிக்கொண்டு இருக்கின்றன.

இந்த பதிவை டிவி பார்த்துக்கொண்டு உங்களுக்காக நான் டைப் அடித்துக்கொண்டு இருக்கின்றேன். டிவி ரேடியோ கேட்க முடியாத, அலுவலகத்தில் வேலைசெய்து கொண்டு ஆர்வத்தோடு  தீர்ப்புக்கு காத்து இருக்கும் நண்பர்களுக்கும், உலகலாவிய இந்திய மக்களுக்கும்  இந்த சூட சூட பதிவு.

3.54இன்னும் என்.டி.டிவிதின் பார்த்துக்கொண்டு இருக்கின்றேன்.

வெட்டிக்கதைதான் இன்னமும் பேசிக்கொண்டு இருக்கின்றார்கள்.

2,7 ஏக்கர்  நிலத்துக்குதான் இவ்வளவு அக்கபோர் எல்லாம்.

தீர்ப்பு வாசிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

தேசம் முழுவதும் பல்க் எஸ்எம்எஸ் அனுப்புவது தடை செய்யபட்டு உள்ளது.

 செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க பெரிய பந்த்ல் போட்டு செய்தியாளர்கள் அமர வைக்கபட்டு இருக்கின்றார்கள்.

கோர்டுக்குள்ள எந்த காரணம் சொல்லிட்டு ஒரு பய  உள்ளே போனாலும் தீர்ப்பு சொன்னதும்தான் வெளியே போக வேண்டும் என்று கண்டிப்பான உத்தரவை கோர்ட் அமல் படுத்தி இருக்கின்றது.

தீர்ப்பு எப்படி இருந்தாலும்  பிரதமர் தலைமையில் கூட்டம் இன்று கூடுகின்றது.. மாலை 6மணிக்கு மேல் பிஜேபி தனது கூட்டத்தை கூட்டி விவாதிக்க இருக்கின்றது.

இன்டியா ஸ்டேன்ட்ஸ் டுகெதர்.
இன்டியா யூனைட்டேட் பார்  பீஸ் போன்ற வாசகத்தை செய்திசேனல்கள் போட்டுக்கொண்டு இருக்கின்றன.

குறிபிட்ட இடங்களில் வாகனத்தை பார்க் செய்ய தடை செய்யபட்டு இருக்கின்றது.
இந்தியாவில் 21 இடங்கள் சென்சிட்டிவ் பிளேஸ் என்று அறிவித்து இருக்கின்றது.

ஏர்போர்ஸ் தயார் நிலையில் இருக்கின்து.
செய்தி கொடுக்கும் அவசரத்தில் தவறாக செய்தியாளர்கள் செய்தி கொடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளபடுகின்றார்கள்.
கருப்பு உடை அணிந்து வக்கிலா ஜட்ஜா என்று தெரியவில்லை தீர்ப்பை வாசிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

ஒரு  வக்கிலம்மா நமக்கு அந்நிய பாஷையான இந்தியில் வாசித்துக்கொண்டு இருந்தார்.

தமிழக செய்தி சேனல்களில் கலைஞர் செய்திகள் மட்டும் லக்னோ நேரலை ஒளிபரப்பியது.
சன் எந்திரன் ரிலிஸ் வேலைகளில் பிசியாக இருப்பதால் அதன் நியூஸ் சேனலில் கீழே சின்னதாக செய்தி வெளியிட்டு கொண்டு இருந்தது.

ம் இப்போதுதான் சன்னும் களத்தில் இறங்கிவிட்டது.

இன்னும் 3 மாதங்களுக்கு இதே நிலை நீடிக்குமாம்.


3நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கி இருக்கின்றார்கள்.

அயோத்தி நிலம் 3 தரப்பினுருக்கும் சொந்தம். 3தரப்புக்கும் பகிர்ந்து அளிக்பபடும்.

சர்ச்சைக்குஉரிய நிலத்துக்கு உரிமை கோரிய சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகோரா மனுக்கள் நிராகரிக்கபட்டது.

நான்  அந்த 2,50 ஏக்கர் நிலம் தடை செய்யபட்ட நிலமாக அறிவிக்கும் என்று நினைத்தேன். வெள்ளைகாரர்கள் செய்தது போல்  பிரித்து கொடுத்து இருக்கின்றார்கள்.

ஒரு பங்கை இந்து மகா சபைக்கு கொடுக்க வேண்டும்.
ஒரு பங்கை பாபர் மசூதி கமிட்டிக்கு கொடுக்க வேண்டும்.
ஒரு பங்கு நிர்மோகி அகாராவுக்கு கொடுக்க வேண்டும்.

சர்ச்சைக்கு உரிய இடத்தில் ராமர் பிறந்தது  இருக்கலாம்  என்று இரண்டு நீதிபதிகள்  கருத்து தெரிவித்து இருக்கின்றனர்.

மேல் முறையிடு செய்ய  3 மாத கால அவகாசம்.
=========================
நியூஸ்  அப்டேட்.
================

தீர்ப்பு திருப்தி அளிக்கவில்லை அதனால் உச்சநீதிமன்றத்தில்  மேல் முறையிட செய்ய வக்பு வாரியம் முடிவு.

பாபர் மசூதி கட்ட எந்த கோவிலையும் இடிக்கவில்லை நீதிபதி கான்கருத்து.
==============
இந்த தீர்ப்பு பற்றிய எனது கருத்து இதுவல்ல... இது ஒரு ரிப்போர்ட் செய்தி சேனலில் வந்ததை உங்களோடு  பகிர்ந்து கொண்டேன்.
==========
என்னை பொறுத்தவரை  அந்த சர்ச்சைக்கு உரிய நில 2.5 ஏக்கர் நிலத்தை எதுவும்  செய்யாமல். மத்திய அரசின் தடை செய்யபட்ட இடமாக அறிவிக்க வேண்டும். ராணுவம் அறிவித்த தடை செய்யபட்டபகுதிக்கு யாரும் செல்ல முடியாது அல்லவா? இதுதான் எனது கருத்து.
===========
பிறரை காயபடுத்தி வரும்பின்னுட்டங்கள் அனுமதிக்கபடமாட்டது.
=======


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....

குறிப்பு.. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய்  சொல்லி இருக்கின்றார்கள்..

38 comments:

  1. உடன் தகவலுக்கு நன்றி ஜாக்கி!

    ReplyDelete
  2. தீர்ப்பு நல்லாத்தானே இருக்குது!இனி என்ன மேல்முறையீடு?பார்க்கலாம் யார் குட்டையை கிளப்புறாங்கன்னு.

    ReplyDelete
  3. //தமிழ்நாட்டின் கோவையில் மூன்றடுக்கு பாதுகாப்பு போட்டு இருக்கின்றன.//
    ENNA APPARTMENT PAATHU-K-AAPPAA ?

    ReplyDelete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  5. ஜாக்கி சார்... நீங்க உங்கள் பாணியில் உங்களோட வார்த்தை ஜாலத்தில் சொல்லி அனைவரையும் உங்கள் பக்கம் திரும்ப வைத்து விட்டீர்கள்... நீங்கள் சொல்லுவது தமிழ் வலை உலகதிருக்கு முதன்மையாக உள்ளது... நன்றி.... என்னோடது தான் 5 வது ஒட்டு . நன்றி... மிண்டும் உங்களுடைய எழுத்துக்களை நான் எதிர்பார்கிறேன்..... நன்றி.......

    ReplyDelete
  6. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  7. SUPER JAKI FIRST UNGA MOOLAMA NALA VISHAYATHA KELVI PADUREN. BCOZ MUKIAMANA 2 PERUKUM(INCLUDE3)SHARE PANI KUDUTHU IRUKURATHU NALA MUDIVU. LOT OF THANK U & JUDGEMENT JUDGES

    ReplyDelete
  8. i dont think this judgment is going to stand for long.anyhow either of the party is going to appeal in the supreme court, this case is going to start a second innings. and we dont know how long it is going to run, may be another 50 years. but i am sure that those who appeal in supreme court wont be alive to know the judgment foe which they have appealed.

    ReplyDelete
  9. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  10. மிகவும் சூடான ரிப்போர்ட் ஜாக்கி.

    இதேமாதிரி எந்திரன் விமர்சனமும் போடுங்க பாஸ்.

    அன்பு நித்யன்

    ReplyDelete
  11. பின்னுட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி..அந்த இடம் இந்த பிரிவுக்கு சொந்தம் அந்த பிரிவுக்கு சொந்தம் போன்ற பின்னுட்டங்கள் மட்டுறுததபடும். ராமர் பிறந்து இருப்பார் என கருத்து தெரிவித்தை அப்படி எழுதிவிட்டேன்.

    ReplyDelete
  12. ராமர் பிறந்து இருக்கலாம் என்பதை ராமர் பிறந்து இருந்தார் என்று தவறாக அடித்து விட்டேன்.அதை திருத்தி விட்டேன். நன்றி.

    ReplyDelete
  13. பகிர்விற்கு நன்றி அண்ணா...
    எனது கருத்து அவ்விடத்தில் ஓர் பல்கலைகழகத்தினை நிர்மாணிக்கலாம்.

    ReplyDelete
  14. ஜீவன் அந்த இடத்துல எது கட்டினாலும் இனி சர்ச்சைதான்... அந்த பிரிவு பசங்கள் அதிகமாக சேர்த்து விட்டார்கள். இந்த பிரிவு பசங்கள் அதிகமாக சேர்த்துவிட்டார்கள் என்று பிரச்சனை திரும்பவும் வரும். திரும்ப கோர்ட் படி 60 காலம் வெயிட்டிங். தேவையா???

    ReplyDelete
  15. //அந்த இடம் இந்த பிரிவுக்கு சொந்தம் அந்த பிரிவுக்கு சொந்தம் போன்ற பின்னுட்டங்கள் மட்டுறுததபடும்//
    உங்கள் வாசகர் கருத்தை அவமதிப்பதாக உள்ளது.


    வக்பு வாரியம் தீர்ப்பை எதிர்த்து மனுத்தாக்கல் செய்கிறது.

    ReplyDelete
  16. ithe pola enthiran paarththuttu suda suda ezhuthunka.

    ReplyDelete
  17. இது தீர்ப்பின் ரிப்போர்ட்டிங் மட்டுமே.. இதில் அமையும் விவாதங்கள் இருதரப்பையும் காயபடுத்தும்.இந்த கட்டுரை யாருக்கும் அந்த இடம் சொந்தம் என்பதல்ல. அந்த இடத்தின் தீர்ப்பு என்ன என்பதை ரிப்போர்ட்டாக எழுதி இருக்கின்றேன்.

    ReplyDelete
  18. உண்மையில் உங்கள் பதிவைப் பார்த்து தான் தீர்ப்பை தெரிந்துக் கொண்டேன், என்னை போன்று ஆபிஸில் வெளிநாட்டில் இருப்பவர்களுக் உங்கள் பதிவு ரன்னிங் கமென்ட்ரியாய் இருந்தது நன்றி ஜாக்கி, தீர்ப்பு எனக்கும் திருப்தியில்லை நீங்கள் சொல்வது போல் அதை அரசாங்க இடமாக அறிவித்திருந்தால் நல்லதாக இருக்கும். - your comment box not accepting my comment so i mailing to you. thank you very much.

    regards
    rajakamal

    ReplyDelete
  19. ஒரு பொது பயன்பாட்டுக்கு அரசாங்கம் எடுத்துக்கொள்ளக் சொல்லி உத்தரவாகும் என்றுதான் நானும் எதிர்பார்த்தேன்

    ReplyDelete
  20. நண்பர் ராஜ்கமல் போன்று வெளிநாட்டில் இருப்பவருக்கும், அலுவலகத்தில் இருப்பவருக்கும் தீர்ப்பின் செய்தி தெரிய ஆவலாய் உள்ளவர்களுக்கு இந்த பதிவு.

    ReplyDelete
  21. Hi Jackie Sir,

    It is not Supreme court verdict !It is High court verdict . Please change the title. :-)

    ReplyDelete
  22. அயோத்தி தீர்ப்பில் சர்ச்சைக்குரிய இடம் "இராமர் பிறந்த இடம்" என்று நீதிமன்றம் கூறிவிட்டதாக பரப்புரை செய்யப்படுகிறது. ஆனால் அவ்வாறு தீர்ப்பில் கூறப்படவில்லை.

    இராமர் பிறந்த இடம் என்று இந்துக்கள் நம்புவதாக மட்டுமே கூறப்பட்டிருக்கிறது. நம்புவது வேறு, உண்மை வேறு. இரண்டும் ஒன்றல்ல.

    ReplyDelete
  23. "அயோத்தி நில வழக்கில் உச்ச நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பு என்ன?" தலைப்பே பிழை தான். தீர்ப்பு வந்திருப்பது அலகாபத் உயர் நீதி மன்றத்திலிருந்து. மேலும் தீர்ப்பை அலகாபாத் உயர் நீதி மன்றத்தின் வலைதளத்திலும் காணலாம்.

    ReplyDelete
  24. பிழை திருத்தபட்டது. நன்றி.

    ReplyDelete
  25. "என்னை பொறுத்தவரை அந்த சர்ச்சைக்கு உரிய நில 2.5 ஏக்கர் நிலத்தை எதுவும் செய்யாமல். மத்திய அரசின் தடை செய்யபட்ட இடமாக அறிவிக்க வேண்டும். ராணுவம் அறிவித்த தடை செய்யபட்டபகுதிக்கு யாரும் செல்ல முடியாது அல்லவா? இதுதான் எனது கருத்து"
    -"இதுதாண்டா தீர்ப்பு".
    Dear Jakky. Really wonderful. I hope it only would be a perfect judgment. I agree with you. Otherwise, the problem would never come to the end. It will be go on and on... Your angle is 'நச்'
    Jegan.

    ReplyDelete
  26. //பாபர் மசூதி கட்ட எந்த கோவிலையும் இடிக்கவில்லை நீதிபதி கான்கருத்து.//

    இன்னும் கிளியரா சொன்னால், "பாபர் மசூதி கட்ட எந்த கோவிலையும் இடிக்கவில்லை. ஆனால் கோவில் இருந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டது".

    மற்ற 2 நீதிபதிகளும் "கோவில் 'இருந்த' இடத்தில் தான் மசூதி கட்டப்பட்டது" என்கிறார்கள்.

    ReplyDelete
  27. ஜாக்கி... பேசாம செய்தி வாசிப்பாளராய் (Live News) போய்டலாம்... என்ன மேக்-அப்க்குதான் அதிகம் செலவழிக்க வேண்டி வரும்...

    ReplyDelete
  28. ..//தமிழ்நாட்டின் கோவையில் மூன்றடுக்கு பாதுகாப்பு போட்டு இருக்கின்றன//..

    மூன்றடுக்கு பாதுகாப்பெல்லாம் அவ்வளவா இல்லீங்கண்ணா...
    3 நாள் கடைக்கு லீவு உட்டுட்டாங்க...
    இதுவே 6 அடுக்கு பாதுகாப்புதான்.

    (சொந்தக் கஷ்டம்தான் - இருந்தாலும்.
    :-) - :-(

    ReplyDelete
  29. கடவுளும் வழிபாடும் அரசியலும்

    http://ilakindriorpayanam.blogspot.com/2010/10/blog-post.html

    ஆற அமர ஒரு பதிவு, படிச்சு பாருங்க

    ReplyDelete
  30. This is winwin verdict. The thing which made me angry is our news channels was keep interviewing celebrites asking are they happy with the verdict . As you said this is very very sensitive verdict . Most of them answered diplomatically . But few were unhappy . This kind of interviews can create some chaos . The anchors were speaking furiously interviewing whether they are happy . As it is very sensitive issue ,news channels should realise their social responsibility .Although democratic country with all kinds of freedom ,it would be grateful if they avoid chaos creating interviews at tough times .

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner