பதிவுலகில் கற்றதும் பெற்றதும்...(பாகம்/2)

பதிவுலகில் கற்றது....பாகம்/2

முக்கியகுறிப்பு...

இந்த பதிவு முழுக்க முழுக்க சுயசொறிதல்...இந்த பதிவில் பெரிய சுவாரஸ்யம் எல்லாம் இல்லை... முக்கிய வேலை இருப்பின் அதை பார்க்கவும்...ஒரு சில புதிய பதிவு எழுதும் நண்பர்களுக்கு வேண்டுமானால் இது உதவியாய் இருக்கலாம்....மற்றபடி எந்த சுவாரஸ்யமும் இதில் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை...


நான் ஒரு பக்கா லோக்கலான ஆள்...ஊரில் கைலியை மடித்து கட்டி எட்டி நடுமாரில் உதைத்து போட்ட சண்டைகள் ஏராளம்....

எழுத்தாளர் பாலகுமாரன்கதைகள் படிக்க ஆரம்பித்த உடன் ஒரு நிதானம் வந்தது... மனதோடு பேச ஆரம்பித்தேன்.... இந்த கோபம் இப்போது தேவையா? என்று எனக்கு நானே கேட்டு விட்டு அந்த கோபத்தை புறம் தள்ள ஆரம்பித்தேன்......நான் ஒரளவுக்கு கோபம் இல்லாமல் இருக்க...பாலகுமாரன் என்ற எழுத்தாளர்தான் காரணம்... அதே போல் அவரின் எல்லா கருத்துக்களும் எனக்கு ஏற்புடையது அல்ல....அவருக்கு நன்றிகள்...அவரைபற்றி நான் எழுதிய பதிவுக்கு இங்கு கிளிக்கவும்...

காலேஜில் வேலைக்கு போனதுக்கு பிறகுதான் என் கோபங்கள் மிகவும் மட்டுபடுத்தபட்டன...மனைவியோடு பைக்கில்போகும் போது ஏற்பட்ட சின்ன இடிப்பு தகராறில் ஓட ஓட விரட்டி உதைத்தது....
மியட் மருத்துவமனை எதிரில் மனைவியோடு பைக்கில் போக ஒரு கார்காரன் இடிப்பது போல் வந்து கட் அடித்த விட்டு போக நான் விழுந்து விடுவது போல் இருக்க... அதன்பின் விரட்டி ரோட்டில் பைக் நிறுத்தி காரை விட்டு டிரைவரை இறங்க வைத்து இழுத்து போட்டு உதைத்து இரண்டு பேரின் சட்டையெல்லாம் கிழிந்து, ரோட்டில் அடித்துக்கொண்டு நந்தம்பாக்கம் போலிஸ் நிலையம் சென்றது எல்லாம் தனிகதை...அந்த டிரைவரிடம் லைசென்ஸ் இல்லாமல் அவன் மாட்டி.. அதி வேகமாக கார் ஓட்டியது என அவன் மீது காவல் துறை வழக்கு பதிந்தது எல்லாம் தனிக்கதை...

நிறைய முன் கோபம் வரும்..... என் மனைவி வந்த பிறகு..... கோபத்தில் மலையேறிய சாமி எல்லாம் மலை இறங்கி கொண்டு இருக்கின்றது...ஒரு நிதானத்தை கொடுத்து இருக்கின்றது...இன்னும் பதிவுலகில் வந்த பிறகு இன்னும் றிறைய நிதானத்தை கொடுத்து இருக்கின்றது.....


என்னதான் நேரில் பேசுவது போல் எப்போதும் இருக்காது நாம் எழுதுகின்ற எழுத்து.. நாம் ஒன்றை சொல்லி இருப்போம்... அது வேறு ஒன்றாக புரிந்து கொள்ளபடும்...ஹவுஸ்கீப்பிங் கிரிஜா என்று ஒரு கதை எழுதி இருந்தேன்... அதில் கிரிஜா கருப்பாக இருந்தாலும் பார்பதற்கு பாந்தமாக இருப்பாள் என்று எழுதி இருந்தேன்...

ஒரு பின்னுட்டத்தில் ஒரு நண்பர்... கருப்புன்னா உங்களுக்கு கேவலமா? என்று எழுதி இருந்தார்... நிறைய மூளை சுடு உள்ளவர்கள் நிறைய பேர் இருக்கின்றார்கள்....அவர்களை புறக்கனிப்பதே நல்லது...பதில் சொல்லி பெரியாளக ஆக்க வேண்டாம்...

நிறைய கடிதங்கள் பாராட்டி வருகின்றன... சில கடிதங்கள் திட்டி வருகின்றன... மென்மையாய் புன்னகையை உதட்டில் வைத்து அதை படித்து விட்டு கடந்து போக முடிகின்றது...ஆனால் நிறைய பேர் என்னோடு வாழ்கின்றார்கள்...என்பது தெரிந்து நான் சந்தோஷத்தில் இருக்கின்றேன்...நம் ரசனையோடு பலர் பொருந்தி போகின்றார்கள் என்பதே சந்தோஷம்தானே...எப்போதுமே என்னை ஒரு யோக்கிய சிகாமணியாக என்னை நிலைநிறுத்திக்கொண்டதே இல்லை...

எல்லா இடத்தலும் நான் கடந்த வந்த பாதையை அவ்வப்போது சொல்லிவவருவத்ற்கு மிக முக்கியகாரணம்.. எந்த இடத்திலும் எனக்கு கொம்பு முளைக்ககூடாது என்பதே...அப்படி எனக்கு முளைத்தாலும் அதை வெட்டி விடுவதில் தீவிரமாக இருக்கின்றேன்


பொதுமக்கள் மற்றும் அரசுக்கு எதிரான கோபத்தை முன்னிறுத்தி எனது பதிவுகள் கோபமாக பதிய பட்டு இருக்கும்... ஆனால் எந்த தனிநபரையும் கூடுமானவரை திட்டியதில்லை... எந்த பதிவரையும் நீ அப்படி எழுதவில்லை இப்படி எழுதவில்லை என்று சொன்னதில்லை...


அதிகமான மொக்கையில் கலந்து கொண்டதில்லை... ஒரு சில விளக்கபதிவுகளை தவிர்த்து பெரிசாய் எதிர்வினை செய்தது இல்லை...அந்த நேரத்துக்கு ஒரு படத்தை பற்றி எழுதி விட்டு போகலாம்...நன்றாக எழுதி இருந்தால் படித்து பார்த்து ஒரு பின்னுட்டம் ஓட்டு அவ்வளவுதான்...

அதே போல் ஒருவரை பிடிக்கவில்லை.. அவரோடு எனக்கு உடன்பாடு இல்லை என்றால் அந்த பக்கமே திரும்பவே மாட்டேன்...புறக்கனிப்பு மட்டுமே அதற்கு சரியான தீர்வு....கம்யூட்டர் திறந்தால் ஒரு உலகம்... திறக்கவில்லை என்றால் வேறு ஒரு உலகம்... பிளாக் எழுதினாலும் எழுதாவிட்டாலும் என் வீட்டில் உலை கொதிக்கும்... இது ஒரு பகுதி நேர பகிர்தல்...


ஒரு ஆங்கில படத்தை பற்றி எழுதும் போது அதில் அந்த நடிகையின் நனைந்த உடையில் அரைநிர்வானம் அப்பட்டமாக தெரிய... அந்த படத்தை போட்டு விட்டேன்...ஒரு பெண்மணியிடம் இருந்து ஒரு போன்...தயவு செய்து அது போலான படத்தை ஹைடு பண்ணி போடுங்க.. ஆபிஸ்ல நாலு அம்பளைங்க இருக்கும் போது கொஞ்சம் சங்கடமாக இருப்பதாக சொல்ல.. அப்போதுதான் அதன் நியாயம் உணர்ந்து அது போலான படங்கள் ஹைடில் போடுகின்றேன்...
அப்போது எல்லாம் பிளாக் என்பது சேவல்பண்ணைதான் என்று தப்பாக நினைத்தகாலம் அது....

அப்புறம் ஏஜேரஜினி என்ற கணனி துறை நண்பரும் அதே கருத்தை சொன்ன போது...அவர் சொன்னார் உங்கள் தளத்தை அறிமுகபடுத்தியதே எங்கள் அலுவலக பெண்மணி ஒருவர் என்றும் உங்கள் சாண்ட்விச் ஜோக்ழுகளின் விசிறி அவர் என்றும் சொன்னார்...அப்போதுதான் நிறைய பெண்கள் என் வலையை படிக்கின்றார்கள் என்பது அப்போதுதான் தெரிந்தது....


பதிவுலகம்இது ஒரு நேரவிழுங்கி... உங்கள் நேரத்தை நைசாக பிடிங்கி கொள்ளும்...இந்த உலகத்தின் மிகப்பெரிய போதை என்னவென்றால்... என்ன எழுதி இருந்தாலும்.. போஸ்ட் போட்ட அடுத்த நொடியே உலகத்தின் ஏதாவது ஒரு இடத்தில் இருந்து பின்னுட்டம் வந்து விடும்....

முதலில் அப்படி வருவதை எதிர்பார்த்து ரசித்தவன்நான்... அதனால் பெரும்பாண்மையான நேரத்தை வலையுலகத்தில் கழித்து இருக்கின்றேன்.... காலையில் ஆன் செய்த கம்ப்யூட்டரை மதியம் 3 மணிக்கு அனைத்து விட்டு 3 மணிக்கு மேல்தான் சாப்பிட்டு இருக்கின்றேன்....

இப்போதெல்லாம் பதிவு போட்டு விட்டு சிஸ்டத்தை அப் செய்து விட்டு அடுத்த வேலைக்கு சென்று விடுகின்றேன்... கல்லூரியில் வேலை செய்த போது கிடைத்த நேரங்கள் போல் இப்போது சினிமாவுக்கு போன பிறகு நேரம் கிடைப்பதில்லை...இருந்தும் தொடர்ந்து இந்த உலகில் பயணிக்கின்றேன்...அதனால்தான் பின்னுட்டத்துக்கு உடனுக்கு உடன் பதில் போடுவதில்லை....நேரம் கிடைக்கும் போது எழுதுகின்றேன்....

புதிய பதிவர்களுக்கு நான் ஒன்றை சொல்லிக்கொள்வேன்....நீங்கள் உங்களுக்கு தோனியதை உண்மையாய் எழுதுங்கள்...இலக்கியதரம் என்பது முக்கியம் அல்ல...ஓட்டு வரவில்லை பின்னுட்டம் வரவில்லை என்று வருத்தம் கொள்ள வேண்டாம்... நீங்கள் உண்மையாக எழுதினால் அதுதானாகவே வரும்....உலகில் நிறைய விஷயம் நடக்கும் எல்லாவற்றையும் எழுத வேண்டும் என்று அவசியம் இல்லை.. உங்களுக்கு எது பாதித்ததோ அதை எழுதுங்கள்....

ஓட்டு போடுங்கள் என்று கடைசியில் சொல்ல ஒரு காரணம் இருக்கின்றது ஏதோ ஒரு ஞாபகத்தில் அந்த இடத்தை கடக்கலாம்..பிடித்து இருந்தால் போடுங்கள் என்று சொல்ல உரிமை இருக்கின்றது....எல்லாருமே ஒரு சின்ன அங்கீகாரத்துக்காகதான் ஏங்கி கிடக்காங்க இல்லையா?... ஓட்டு என்பது அங்கீகாரம்.... அவ்வளவுதான்...

சிலர் என்னிடம் சிலவிஷயங்களில் கோபபட்டு இனி உங்கள் தளம்பக்கமே வரமாட்டேன் என்று சொன்னார்கள்.. மிக்க மகிழ்ச்சி... எல்லோரையும் எப்போதும் யாராலும் திருப்திபடுத்த முடியாது...நீ அதை எழுத வில்லை.. இதை எழுதவில்லை... அப்படியா? நீங்கள் எழுதுங்கள்...

ஒரு சில விஷயத்துக்கு உங்கள் பார்வை என்ன என்பது போன்றும்... உங்கள் கருத்து என்ன என்பது போன்ற மெயில்கள் தினசரி வருகின்றன... நண்பர்களே அப்படி எல்லாத்துலயும் கருத்து சொல்லும் கந்தசாமி இல்லை நான்...

நீங்கள் ஒரு பதிவுக்கு நிறைய நேரம் செலவிட்டு பதிவு எழுதி இருப்பிங்க.. ஆனா அதற்கு எந்த ரெஸ்பான்சும் இருக்காது...ஆனாகொஞ்சம் அலட்சியமா எழுதி இருப்பிங்க.. ஆனா அதை தூக்கி வச்சி கொண்டாடிடுவாங்க... உங்களுக்கே ரொம்ப ஆச்சர்யமா இருக்கும்....

நேற்று தண்டோரா அலுவலகத்தில் ஸ்ரீதர் என்ற மதுரைகார நண்பரை சந்தித்தேன்.. அப்போது அவர் உங்கள் எழுத்துக்கள் உலக படங்கள் பிடிக்கும் என்றும் உங்கள் தளத்தை பதிவர் கார்த்திகை பாண்டியன்... ஜாக்கி நன்றாக எழுதுவார் வாசித்து பாருங்கள் என்று அறிமுகபடுத்தியதாக சொல்ல...எனக்கு ஆச்சர்யம் யார் யாரோ இந்த வலையை யாரிடமோ பகிர்ந்து கொண்டு இருக்கின்றார்கள்...

முகம் தெரியாதவர்கள் பின்னுட்டம் போடுவார்கள்..அனானியாய் வந்து கமென்ட் போடுவார்கள்... அனுமதிக்காதீர்கள்...விலாசத்தோடு வரட்டும் கருத்தை சொல்லட்டும்... சிலர் திட்டுவதற்கு என்றே பிளாக் அல்லது மெயில் ஆரம்பித்து திட்டுவார்கள்...இரண்டு பதிவு போட்டு விட்டு வந்து நியாயம் சொல்லுவார்கள்...

இந்த சென்னைக்கு நடந்து வந்தேன்.. அப்புறம் சைக்கிள் வாங்கினேன் அப்புறம் பைக்... அதனால் நான் இழப்பதற்கு ஒன்றும் இல்லை...


நான் இப்போதெல்லாம் வலையுலகில் அதிக நேரம் எடுத்துக்கொள்வது இல்லை... வந்து படிக்கும் போது பார்க்கும் போது பின்னுட்டம்இட்டு ஓட்டு இடுவதோடு சரி...

ஒரு நல்ல படம் எழுத நிறைய குப்பைபடம் பார்க்கின்றேன்...நிறைய படம் பார்க்கின்றேன்.. அதனை உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன்... எந்த படத்தையும் ரொம்ப மொசம் என்று சொன்னது இல்லை... (நன்றி முரளி... என் மீதான உங்கள் நேசத்துக்கும்.. பாசத்துக்கும்...பின்னுட்டம் இப்படிகூட போடமுடியயுமா? கிளிக்கி பார்க்கவும்...)

அதை பற்றி எழுதுவதும் இல்லை..பிட்டு படத்தை தவிர எந்த படத்தையும் டவுன் லேர்ட் செய்து பார்த்தது இல்லை...எல்லாம் டிவிடியில்தான்...உலகபடவிழாக்களில் பல படங்கள் பார்க்கின்றேன்...

ஒரு விமர்சனம் படத்தை பார்க்கவேண்டும் என்ற உணர்வை தூண்ட வேண்டும்....முடிவுகளை சொல்வது படத்தினை பார்க்கும் போது அந்த படம் மனதில் ஒட்டாமல் போய்விடும்.....

குறிப்பு...

மேலுள்ள முதல்படம் காலை தூக்கி பைட் பண்ணுவது போலான புகைபடம்.. வடபழனியில் உள்ள ஸ்டுடியோவில் ஒரு பிறந்தநாளின் போது நண்பர் ஒருவர் எடுத்தார்... எதாவது போஸ் கொடு என்று சொன்ன போது காட்டுபயலுக்கு இப்படித்தான் போஸ் கொடுக்க தெரிந்தது... அவர் தலையில் அடித்துக்கொண்டு எடுத்தார்.. அதே படத்தை நண்பர் போட்டோ ஷாப் செய்து கொடுத்தார்...



அடுத்தபதிவு பதிவுலகில் பெற்றவை......

அன்புடன்
ஜாக்கிசேகர்

பிடித்து இருந்தால்ஓட்டுபோடுவது உங்கள் இஷ்டம்

பதிவர் மணிஜீ விளம்பரபடமும் டிவிஆர் மற்றும் நானும்...

நிறைய விளம்பர படங்களில் முன்பு அதிகம் ஒர்க் செய்து இருந்தாலும்... இப்போது எல்லலாம் அப்படி இல்லை....எப்போதாவதுதான் அந்த பாக்கியம் நடக்கின்றது....

எனக்கு சினிமாவை விட விளம்பர படங்கள் மீதான காதல் அதிகம்... காரணம் ஒரு நாள் பரபரப்பான வேலை அது...ஒரே ஒரு ஷாட்டுக்கு கொடுக்கும் முக்கியத்துவம்...
(விளம்பரத்தின் முதல் ஷாட்)

மொத்தம்10ஷாட்டுகளில் இருந்து 100ஷாட்டுகள் வரை வரும்... விளம்பரங்க்ளில பல வகை இருக்கின்றன...ஒரு விளம்பரத்தை பத்து செகன்ட் 30 செகன்ட்45 செகன்ட் 60 செகன்ட் என பிரித்து தொரைலகாட்சிக்கு பிரைம் டைம் ரேட்டுக்கு ஏற்றது போல் ஒளிபரப்புவார்கள்...
(பாவாடை தாவாணியில் மாடல் வாணி)

10 செகன்ட் அந்த விளம்பரத்தை கட் பண்ணினாலும் அல்லது 60 செகன்டுக்கு எடிட் பண்ணினாலும் அது அந்த கதையை சொல்ல வேண்டும்.. அதுதான் அந்த விளம்பரத்தின் தலை எழுத்து....

(விளம்பரத்தை இயக்கும் மணி...)

இரண்டு நாட்களுக்கு முன் பதிவர் மணிஜீயோடு பேசிக்கொண்டு இருக்கும் போது... நாளைக்க ஆட் ஷுட்டிங் இருக்கு வரியா? என்றார்.. (ஷாட் பற்றி தனது நண்பருடன் விளக்கி சொல்கின்றார்...)

சரி வருகின்றேன் என்று சொல்லிவிட்டு நைட்டு போன் செய்து எனது கேமராவை எடுத்து வரலாமா? என்று கேட்பதற்குள்... ஜாக்கி நாளைக்கு மற்க்காம உனது கேமராவை எடுத்து வா என்று சொன்னார்...
(ஒரு லாங்ஷாட்)

மொழி படம் எடுத்த மாசிலமணி ஹவுஸ்....சோழிங்கநல்லூர் ஈசிஆர் அருகில் இருக்கின்றது...அங்குதான் விளம்பர ஷுட்டிங்...

விளம்பரம் காஞ்சிபுரம் பச்யைப்பாஸ் சில்க் சாரிஸ் விளம்பரம்...


கேமராமேன் ஒளிப்பதிவாளர்.. ராம்ஜி அசிஸ்டென்ட பிரமோத்...
(கேமராமேன் பிரமோத்)

பஞ்சாமிர்தம் என்ற படம் பண்ணியவர்... பசங்க படத்து வாய்ப்பை மயிர் இழையில் தவற விட்டவர்..இயக்கம் மணிஜீ....



பைனான்ஸ்களை எனது மாணவியும் மணிஜீ மகளுமான மூன் கவனித்துக்கொண்டார்..
(மணிரத்னம் போல் மணிஜீ)

பொதுவாக விளம்பரபடங்கள் ரொம்பவும் சைலன்டாக நடக்கும்.. சில கேமராமேன்கள்தான்... தன் காட்சி சரியாக வர வேண்டும் என்று வேலை பார்க்கும் போது....அதில் சில லைட் மேன்கள் வேலை கொஞ்சம் அலட்சிய படும் போது கத்துவார்கள்....இங்கு அப்படி இல்லை ரொம்ப இயல்பாகவே படபிடிப்பு போனது...


(ஒரு டச்ஆங்கிள் ஷாட்)

சட்டென பாவேந்தர் பாரதிதாசன் போல் அப்பா வேடம் போட்டு அருகில் வந்தவரை பார்த்து ஆடி போனேன்... (காலங்கடந்து கிடைத்த சில மணிநேர புது துணையுடன் நம்ம டிவிஆர்)

அவர் தமிழா தமிழா பதிவும் எழுதும் நம்ம டிவிஆர்...தாத்தா வேடத்தில் தன் திறமைகாட்ட வந்து இருப்பது அப்போதுதான் எனக்கு தெரிந்தது...சரி நம்மளுக்கு ஏதாவது வேஷம் இருக்கான்னு கேட்கலாம்னு பார்த்தா.... நம்ம லுக்குக்குஅடியாள் வேஷம்தான் கிடைக்கும் என்பதால் அமைதியாகிவிட்டேன்...

(போட்டோ ஷுட்டின் போது கிளைன்டுடன்... )

ஷாட்டு இடைவெளிகளில் நானும் டிவி ஆரும் நிறைய பேசிக்கொண்டு இருந்தோம்...மனைவியோடு பெசன்ட்நகர் பீச்சுக்கு வரும் போது அவசியம் விட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.. அந்த அன்பு அழைப்பை ஏற்றுக்கொண்டேன்...

(சபிதா ஆனந்... மற்றும் மாடலுடன் ஆண்ணி கேரக்டர் பண்ணியவர்... அவரின் சிரிப்புக்கு நான் ரசிகன்..)

பிரதான மாடல் நடுவில் நிற்பவர் பேர் வாணியாம்... கிங்பிஷர் ஏர்லைன்சில் ஏர் ஹோஸ்டஸ் ஆக இருக்கின்றாராம்.... முக்கியமாக கவனித்து சொல்ல வேண்டிய விஷயம்... சுத்தமாக தமிழில் பேசினார்...தமிழ் மாடல்கள் மறந்தும் கூட தமிழில் பேச மாட்டார்கள்...
(ஷாட் ஓக்கே சொல்ல மானிட்டருடன் மணி... இது வேற மானிட்டர்)

அங்கேயே போட்டோ ஷுட் நடத்தினார்கள்... ஒரு 600 கல்யாணத்துக்கு மேல் போட்டோ எடுத்து இருப்பேன்... ஒரு சிரிப்பு... ஒரு நாணம் இதை எல்லாம் புதுப்பெண்ணுக்கு வர வைத்து போட்டோ எடுப்பதற்குள் தாவு தீர்ந்து விடும்...காரணம் அவர்கள் ஒன்றும் புரபஷனல் அல்ல....

(நளினமாய் வில்லாய்....வாணி)


ஆனால் மாடலுக்கு புடவை கட்டி விட்டதும் ஒரு தூணை பிடித்துகொண்டு வில்லாய் நானி, கோனி, வளைந்து, நெளிந்து.... அந்த பெண் கொடுத்த போஸ்கள் இருக்கின்றதே...சான்சே இல்லை...நல்ல டேடிகேஷன் அந்த பெண்...

ஒரு குண்டு பையன்... கேமரா வலம் இருந்து இடமாக கேமரா நகரும் போது, ஓடிவந்து ஒரு பெண்ணின் கையை தட்டிவிட்டு ஓட வேண்டும் ஆனால் அந்த பையன் பயங்கரமாக சொதப்ப... ஒரு நாலுமணிநேரம் வேஸ்ட் ஆனது....அவர்கள் குழந்தைகள் அவர்களை ஒன்றும் செய்யமுடியாது....


(குண்டு பையனுக்கும், சின்ன பெண்ணுக்கும் காட்சி விளக்கி நிறைய ஒன்மோர் எடுத்த டாவு கிழிந்த ஷாட்க்கு போராடும் இயக்குனர்மணிஜீ)

காலை ஒன்பதில் இருந்து இரவு ஒன்பது வரை கால்ஷீட் ஆனால் விளம்பரம் நள்ளிரவை தாண்டியது... சரி மறுநாள் எடுத்துக்கொள்ளலாம் என்றால் மணிஜீ தலையில் துண்டைதான் போட்டுகொள்ளவேண்டும்...

(ஒரு குடும்பசீன்...)


இந்த விளம்பரத்தை நான் என் கேமராவில் முதல் முறையாக படம் எடுத்தேன்...இந்த புகைபடங்கள் எல்லாம் வித் அவுட் பிளாஷ் இல்லாமல் ஸ்டேன்ட் இல்லாமல் எடுக்கபட்டவை....
(நான் எடுத்ததில் பிடித்த படம்)

இந்த புகைபடங்க்ளை இன்னும் அழகு படுத்தலாம் ... எனக்கு போட்டோ சாப் இன்னும் நான் கற்றுக்கொள்ளவில்லை... இது அசிங்கம்தான் என்ன செய்வது? யாராவது குழந்தைக்கு சொல்லி தருவது போல் சொல்லிதர ரெடியானால் நான் ரெடி...(புடவை கட்டி சரி செய்யும் கலைஞர்கள்)

மொத்தம் பதினாறே ஷாட் ஆனால் அது எடுத்து முடிக்கும் முன் வாயில் நுரைதள்ளி விட்டது... சினிமாவோ விளம்பரபடமோ தனி நபர் திறமை அல்ல...அது ஒரு கூட்டு முயற்சி... ஆனால் ஒரு திரைப்படம் படம் சரியில்லை என்று எழுதுவது உங்கள் எண்ணம்... ஆனால் ஒரு கலைஞனை விமர்சனம் செய்கின்றேன் என்று சொல்லி குத்தி கிழிப்பது எந்தவகை நியாயம் என்று தெரியவில்லை.....

இரவு வந்து வீட்டில் படுத்தேன் ஏதோ ஒரு வெளிநாட்டு படப்பிடிப்பு பாஸ்போர்ட் மற்றும் ஜெர்கின் பொட்டியெல்லாம் எடுத்துக்கொண்டு ஓடிபிளைட் பிடிக்கின்றேன்....
(டச்சப் செய்யும் போதுஒரு குளோசப்)


பிளைட்டில் உட்கார்ந்ததும்தான் எனக்கு தெரிகின்றது அது கிங்பிஷர் ஏர்லைன்ஸ் என்று... உள்ளே போய் உட்கார்ந்தால் காலில் கருப்பு காலுரை போட்டுக்கொண்டு சின்ன சிவப்பு ஸ்கர்ட் மற்றும் வெள்ளை சட்டை அதில் சிவப்பு கலர் டை கட்டியபடி.... சார் உங்களுக்கு என்ன வேனும்? என்று ஆங்கிலத்தில் கேட்டது மணிஜீ விளம்பரபடத்தின் மாடல் வாணி...

கிங்பிஷர் ஏர்ஹோஸ்டல் உடையில்.....சிவா மனசுல சக்தி ஜீவா போல் மச்சி ஒரு குவாட்டர் சொல்லேன் என்று சொன்னேன் அந்த பெண் வெளிறினாள்.. (போட்டோ ஷுட் எடுக்கும் போது நான் இந்த பக்கம் போகஸ் செய்ய சட்டென என் கேமராவுக்கு கொடுத்த போஸ்.. நல்லா இருக்கா?)



எனக்கு தூக்கம் கலைந்தது... கழுவி கழுவி ஊத்தினாலும் கவுச்ச நாத்தம் போகாதுன்னு சொல்லுவாங்கேளே அது இதுதானா? என்று நினைத்துகொண்டேன்...

வழக்கம் போல் படங்களை கிளிக்கி பார்க்கவும்....

அன்புடன்
ஜாக்கிசேகர்

பிடித்து இருந்தால்ஓட்டுபோடுவது உங்கள் இஷ்டம்

(Driving Miss Daisy ) நாற்பது வயதுக்கு பிறகு நாய் குணமா???

சமீபத்தில் விஜய்டிவி மற்றும் இன்ன பிற விருதுகளை நீங்கள் பார்த்தீர்களானால் ஒன்று மட்டும் உரைக்கும்...விருதுகளை பெறுபவர்கள் எல்லோரும் ரத்த ஓட்டம் நன்றாக இருக்கும் நடிக நடிகைகள்...


அப்ப அறுபது வயசுல இங்க யாரும் வாழவே யில்லையா? நடிக்கவேயில்லையா? ஏன் நடிக்காம?? இப்பகூட சரோஜதேவி ஆதவன் படத்துல நடிச்சாங்களே....ஆமாம் நடிச்சாங்க 30 பேர்ல ஒரு ஆளா நடிச்சாங்க....

பொதுவாக நம்மில் ஒரு பழமொழி இருக்கும் 40 வயதில் நாய் குணம் என்று.. அதில் உண்மை இல்லாமல் இல்லை.. ஆனால் அதற்கு காரணம் ஒன்றே ஒன்றுதான்...

தன் இயலாமையின் மீதான கோபம்...எல்லாவற்றிலும் தன்னை கொண்டாடியவர்கள்.. தன்னை இப்போது கிள்ளுக்கீரையாய நினைக்கின்றார்களே என்று ஒரு வருத்தமே அந்த நாய் குணத்துக்கு காரணம்...

ஆனால் தமிழில் நாற்பது வயசுக்கு மேல் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை அல்லது அவர்களது ஆசா பாசங்களை தமிழ்சினிமா பதிய பட்டதேயில்லை... அதுவும் 60 வயதுக்கு மேல் அவர்கள் படத்தில் இருந்தாலும் தின்னையில் உட்கார்ந்து வெற்றிலை பாக்கு இடிப்பதாக காட்டுவதோடு சரி.....

சரி அப்படியே படம் எடுததாலும் தமிழ் ரசிகர்கள் ரசிப்பார்களா? திரையை பார்த்து டேய் கோத்தா 120 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கி வந்தா.. இந்த கிழவன் கிழவி நடக்ககிறதைதான் காட்டுவியா என்று கோபபடுகின்றார்கள்...

பாலுமகேந்திரா 1989ல் சந்தியாராகம் என்று வயதான சொக்கலிங்கபாகவதர் வார்க்கை பிரச்சனையை மையபடுத்தி ஒரு படம் எடுத்தார்... அது தமிழின் மாற்று சினிமா...

அந்த படம் தேசிய விருது வாங்கியதோடு சரி... அப்படி ஒரு படம் இருக்கின்றது என்பது கூட பலருக்கு தெரியாது... அதுதான் தமிழ் சினிமா...
ஒரு பேட்டியில் இயக்குனர் பாலா... சந்தியாராகம் சென்னை கலைவாணர் அரங்கில் விருது வழங்கும் விழா நடந்து கொண்டு இருந்தது....அப்போது விழாமுடிந்து வெளியே வந்த சொக்கலிங்க பாகவதர் செல்ல ஆட்டோவுக்கு பைசா கூட இல்லாமல் அவர் ரோட்டில் நடந்து போனதாக ஒருபேட்டியில் பாலா சொல்லி படித்ததாக எனக்கு ஞாபகம்....

விருது வாங்கிய கிழக்கலைஞன் தெருவில் நடந்து போனான்.... சொக்கலிங்க பாகவதர் நடித்த வீடு ,சதிலீலாவதி போன்ற படங்களில் அவருடைய கேரக்டர்கள் சிலாகிக்கபட்டன... அனாலும் அதற்க்கான அங்கீகாரம் சரியாக இல்லை என்பதுதான் வருத்தம்
நான் கடலூரில் பேங்க் ஆப் பரோடாவில் வேலைசெய்த 55 வயது மதிக்கதக்க ஐயங்கார் பெரியவர் பேங்கில் கணக்காராக வேலை செய்தார்... அவரிடம் நான் தினக்கூலியாக நான் வேலை செய்தேன்... என்னவேலை தெரியுமா? லுனாவுக்கு டிரைவர் வேலை...

லுனா என்றால் என்ன? அது ஒரு இரு சக்கர வாகனம்...அந்த வண்டி இப்போது எங்கு தேடினாலும் என் கண்ணில் படுவதில்லை... வேலை இதுதான் காலையில் 9மணிக்கு அவர் வீட்டுக்கு போய் அவர் லுனா வண்டியை ஸ்டார்ட் செய்து அவரை உட்கார வைத்துகொண்டு நேராக3 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் அவர் பேங்கில் விட்டு விட்டு வண்டிய அங்கேயே விட்டு விட்டு நான் வேறு வேலை பார்க்க போய் விடுவேன்...மாலை 4,30க்கு திரும்ப பேங்க் போய் அவரை அதே போல் அவர் வீட்டில் அழைத்து போய் விட்டு விட வேண்டும்...

பேருந்து கட்டணத்தையும் 15 ரூபாயும் அப்போதே கையில் கொடுத்து விடுவார்கள்...மாசம் 450 கொடுக்கலாம்.. ஆனால் வாரத்தில்4 ஞாயிற்றுகிழமை வருகின்றதே... அந்த 4 நாளைக்கு 60 ரூபாய் வேஸ்ட்தானே...

1991ல் நான் பத்தாம் வகுப்பு முடித்த போது இந்த சம்பளம் அப்போது நல்ல சைடு இன்கம்... இது பார்ட் டைம்....மெயின் ஒர்க் திருமணத்துக்கு வீடியோ எடுப்பது....

என்ன பிரச்சனைன்னா அவருக்கு காதில் ஆப்பரேஷன் செய்து விட்டார்கள்...அவர் அதிர்ந்து எந்த வாகனத்திலலும் செல்லகூடாது என்பது மருத்துவ உத்தரவு... ஆட்டோவில் போனால் இரண்டு நாளில் அவர் பரலோகம் போய்விடும் சாத்தியம் இருப்பதால் அவர் ஆபிசுக்கு போக நான் அவரை வாகனத்தில் அழைத்து போகும் வேலை....

என்ன கொடுமைன்னா 30 கிலோமீட்டர் ஸ்பீடுக்கு மேல போக கூடாது... எவனாவது எதிரில் வந்தால் இவர் பின் பக்கம் பதற ஆரம்பித்து விடுவார்.. ரோட்டில் வாகனம் ஓட்டும் போது எந்த வண்டியையும் ஓவர் டேக் செய்ய அனுமதிக்கமாட்டார்...எல்லாம் தனக்கு தெரியும் என்பதான பேச்சு...ரொம்ப கஷ்டம் ஆனால் என்ன செய்வது...இளம்ரத்தம் வேகமாக செல்ல மனது பதைத்தாலும் அவர் அனுமதிக்கமாட்டர்...

சரி நமக்கு ஓக்கே....ஆனால் 72 வயது பெண்மணிக்கு கார் ஓட்டியாக ஒருவன் இருப்பது எவ்வளவு கஷ்ட்டம்.. அப்படி கஷ்டபடும் ஒரு 59வயது ஆன டிரைவரை பற்றியபடம்தான்Driving Miss Daisy
Driving Miss Daisy படத்தின் கதை இதுதான்.........

நம் நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்த 1947க்கு பிறகு அடுத்த வருடத்தில் கதை நடக்கின்றது... டெய்சி(Jessica Tandy) 72வயதான கணவனை இழந்த யூத பெண்மணி...வீட்டில் ஐடெல்லா என்ற ஆப்பிரிக்க அமெரிக்க வேலைகார பெண்மணியுடன் தனி வீட்டில் வாழ்ந்து வருகின்றார்... டெய்சிமகன் போளி... அவன் மனைவியுடன் தனி வீட்டில் வாசம்....


டெய்சி... தனி வீட்டில் வாழ்ந்தாலும்... தன் வேலையை தானே செய்து கொள்ளும் மிடுக்கும்... தான் என்ற அகங்காரம் கொஞ்சமாக வைத்துகொண்டு வாழும் பெண்மணி.. எல்லாம் தனக்கு தெரியும் என்று வெளிபடுத்தும் குணம்...தான் பணக்கார பெண்மணியாக இருந்தாலும் நண்பர்கள் தன்னை ரொம்ப சிம்பிளான பெண்மணியாக சொல்ல வேண்டும் என்று நினைக்கும் ரகம்...

டேய்சியிடம் ஹட்சன் என்ற கார் இருக்கின்றது... அதை எப்போதும் ஓட்ட தெரியாமல் ஓட்டி விபத்து ஏற்படுத்துவது வாடிக்கை எந்த இன்சூர்காரனும் இன்சூர் செய்ய பயப்பட..தான் எந்த தவறும் செய்யவில்லை என்று எப்போதும் சாதிக்கும் ரகம்... இதற்கு முடிவு கட்ட காருக்கு ஒரு டிரைவர் வைக்க டெய்சி மகன் போளி விரும்புகின்றான்...

ஹுக் (Morgan Freeman) என்ற வயதானவரை தன் அம்மாவுக்கு கார் ஓட்டியாக நியமிக்கின்றான்... முதலில் இது டெய்சிக்கு பிடிக்கவில்லை....வேலையை விட்டு ஹுக்கை விரட்டுவதில் குறியாக இருக்கின்றார்....30கிலோமீட்டர் வேகத்துக்கு மேல் கார் ஓட்டவே கூடாது....

ஆனால் ஹுக் மிக நிதானமாக அந்த வயதான பெண்மணியை அனுகுகின்றார்..முதலில் முரண்டு பிடிக்கும் அந்த பெண்மணி எப்படி ஹுக்கை கார் டிரைவராக ஏற்றுக்கொண்டார் என்பதையும் அவர்களுக்குள் எப்படி நட்பு வளர்கின்றது என்பதையும் நெகிழ்ச்சியோடு கண்களில் நீர்வர பாருங்கள்....

படத்தின் சுவாரஸ்யங்களில் சில.........

முதலில் இது போலான வித்யாசமான கதை அமைப்பை கையில் எடுத்தக்கொண்டBruce Beresford என் நெஞ்சார்ந்த நன்றிகள்...

எவ்வளவு அழகான நெஞ்சை நெகிழவைக்கும் காட்சிகள்...

டெய்சியாக நடித்த Jessica Tandy வாழ்ந்து இருக்கின்றார்....

அளவாய் பேசும் பெண்மணி.... அதிகம் பேசும் கார் டிரைவர்... இதுதான் கான்செப்ட்....அதில் உணர்பூர்வமாய் பூந்து விளையாடி இருக்கின்றார்கள்....

ஒரு கருப்பின வயதான ஆணுக்கும் அவரை விட வயதில் 13வயது வித்தியசமான யூத பெண்மணிக்கு இடையில் ஏற்படும் நட்பு கவிதைதான் இந்த படம்....

இந்த படத்தின் ஒளிப்பதிவை குறிப்பிட்டு சொல்ல வேண்டும்... பனிகாலம் கோடைகாலம் இரண்டிலும் மிக நுட்பமாக பதியபட்டு இருக்கின்றது...

ஹுக்கும், டெய்சியும் போகும் அந்த அலபமா பயணத்தின் போது பிரேமில் லெப்ட் சைடில் கார் பயணிப்பது போலான அந்த காட்சி ரொம்பவும் கஷ்டமான விஷயம்தான்....

பதியபட சின்ன சின்ன விஷயங்கள் எவ்வளவோ இருக்கு என்பதை நமக்கு உணர்த்தும் படம்....

கருப்பின யூத இன என்ற பாகுபாடு எல்லாம் மனித உணர்வுகளுக்கு மத்தியில் அதுவும் ரத்தம் சுண்டி இருக்கும் நேரத்தில் எதுவும் பெரிதில்லை என்பதை இந்த படம் உணர்த்துகின்றது...

படத்தில் ஒரு டயலாக் வரும்
ஐடிலா என்ற வேலைக்கார பெண்மணி இறந்த போது டெய்சி சொல்லுவாள்...ஐடில்லா ரொம்ப அதிஷ்டம் செயதவள் என்று ஹுக்கிடம் சொல்லுவாள்.. அதற்கு காரணம் படத்தின் மைய இஐழயின் டயலாக்... அது... ஏன் என்று இருவரும் வியக்கி கொள்ளமாட்டார்கள்... காரணம் அது இருவரும் உணரும் விஷயம் அது.....

நெஞ்சை நெகிழ வைத்த காட்சிகள்....

ஞாபகமறதி வியாதி வந்தாலும் நீ என் நண்பன் என்று ஹுக்கின் கையை பிடிக்கும் டெய்சி...

வாழ்ந்த வீட்டில் யாரும் இல்லை என்று காண்பிக்க... பல கோணங்களில் காட்டபடும் டெய்சி வீடு ஒளிப்பதிவாளர்... Peter James பாராட்டுக்கும் ரசனைக்கும் உரியவர்...

டெய்சிக்கு இரண்டு வாய் ஹுக் உணவு ஊட்டும் காட்சியும்... அப்போது வரும் பின்னனி இசையும்.....

படம் பெற்ற விருதுகள் பட்டியல்...

At the 62nd Academy Awards for 1989, Driving Miss Daisy received a total of four awards from nine nominations. The four awards included: Best Picture, Best Actress (Jessica Tandy), Best Makeup, and Best Adapted Screenplay. The remaining five nominations included: Best Actor (Morgan Freeman), Best Supporting Actor (Dan Aykroyd), Best Art Direction, Best Costume Design, and Best Film Editing.

Driving Miss Daisy also achieved the following distinctions at the 62nd Academy Awards ceremony:

* it is the only film based on an off Broadway production ever to win an Academy Award for Best Picture
* it is the last Best Picture winner to date to receive a PG rating;
* it is the last film to date (and one of only three films ever) to win Best Picture without having received a Best Director nomination;[3]and
* Jessica Tandy, at age 80, became both the oldest winner and the oldest nominee ever in the history of the Best Actress category.

Other awards

Driving Miss Daisy also won three Golden Globe Awards (Best Picture, Best Actor Morgan Freeman, and Best Actress Jessica Tandy) in the Comedy/Musical genre. At the 1989 Writers Guild of America Awards, the film won in the Best Adapted Screenplay category. Rounding out its United States awards, the film won both Best Picture and Best Actor from the National Board of Review of Motion Pictures. In the United Kingdom, Driving Miss Daisy was nominated for four British Academy Film Awards, with Jessica Tandy winning in the Best Actress categor

படத்தின் காட்சி முன்ணோட்டம்...



படக்குழுவினர் விபரம்...

Directed by Bruce Beresford
Produced by Lili Fini Zanuck
Richard D. Zanuck
Written by Alfred Uhry
Starring Morgan Freeman
Jessica Tandy
Dan Aykroyd
Esther Rolle
Patti LuPone
Music by Hans Zimmer
Cinematography Peter James
Editing by Mark Warner
Distributed by Warner Brothers
Release date(s) December 15, 1989 (1989-12-15)[1]
Running time 99 minutes
Country United States
Language English
Budget $7.5 million
Gross revenue $145.8 million

அன்புடன்
ஜாக்கிசேகர்

பிடித்து இருந்தால்ஓட்டுபோடுவது உங்கள் இஷ்டம்

(REINDEER GAMES) சாண்டா கிளாசுகளின் காசினோ கொள்ளை....


இந்த உலகில் எல்லோரும் நல்லவர்கள் இல்லை.... நம்மோடு பழகியவ்ர்களே ஆப்படிக்கும் காலம் இது...பணம் என்ற ஒரு விஷயம் பிரதானமாக இருக்கும் போது எல்லாம் சாத்தியமாகும்....

சரி உங்களோடு ஒருவன் வலிய வந்து பழகுகின்றான் என்றால் என்ன அர்த்தம்... ஏதோ ஒரு விஷயத்துக்கு அவன் உங்களிடம் ஆட்டையை போட போகின்றான் என்று அர்த்தம்...

அதே போல் நம்ம ஊர்ல தடுக்கி விழுந்தா திருவிழாதான்... ஆனா வெள்ளைகாரனுக்கு ஒரே திருவிழா கிருஸ்மஸ்தான்... அதுக்காக ஒரு மாசத்துக்கு முன்ன இருந்தே அந்த விழாவுக்காக ஆயுத்தம் ஆயிடுவாங்க...அந்த கிருஸ்மஸ்க்கு முன்ன சாண்டா கிளாஸ் வேஷம் போட்டுகிட்டு மனிதர்கள் மக்களை மகிழ்விப்பாங்க...ஆனா அதை வேஷத்தை போட்டுகிட்டு யாருக்கும் சந்தேகம் வராத வகையில் கொள்ளை அடிக்க போறாங்க... அது என்னன்னு இப்ப பார்ப்போமா?

REINDEER GAMES படத்தின் கதை என்ன??



ருடி(Ben Affleck)நிக்கி (James Frain ) இரண்டு பேரும் வேவ்வேறு குற்ற பின்னனியோட ஜெயிலுக்கு வந்தவங்க... இரண்டு பேரும் ஜெயிலில் ஒரே ரூம்.. அதனால் இரண்டு பேருடைய பர்சனலும் அத்துபடி நிக்கிக்கு ஒரு லவ்வர் இருக்கா....

ஆஷ்லி(Charlize Theron) அவ வாரத்துக்கு ஒரு லட்டர் போடுவா... தன் காதலியோட லட்டரை அப்படியே ருடிக்கிட்ட நிக்கி படிச்சி காமிப்பான்... இதுவரை ரெண்டு பேரும் பார்த்துகிட்டது இல்லை....

இரண்டு நாளில் இரண்டு பேருமே விடுதலையாக வேண்டிய தருணத்தில் சிறையில் நடக்கும் ஒரு திடிர் மோதலில்...ரூடியை கொலை செய்ய ஒரு ரவுடி வர அவனை காப்பாத்த நிக்கி தன் நண்பன் ரூடிக்காக உயிரை கொடுக்கின்றான்....

இரண்டு நாளில் ரூடி சிறையில் இருந்து வெளியே வர நிக்கியோட் காதலி அவன் இறந்து போனது தெரியாம.. அவனுக்கா சிறைக்கு வெளியே காத்து இருக்கா... அதை ரூடி பார்த்துட்டு மனசு கேட்காம.. நான்தான் நிக்கி என்று பொய் சொல்ல ... இருவரும் சந்தோஷமாக இருக்கின்றனர்....

சரி கதையில ஒரு டுவிஸ்ட் வேண்டாமா???

ஆஷ்லி யோட அண்ணன்... கேப்ரியல்(Gary Sinise ) தனது அடியாட்களுடன்.....இரண்டு நாளுக்கு அப்புறம் இரண்டு பேரையும் கத்தி முனையில மிரட்டி...நிக்கி ஏற்கனவே வேலை செய்த காசினோவை கொள்ளை அடிக்கும் வழியை சொல்ல சொல்ல...

அப்போதுதான் தான் நிக்கி இல்லை ரூடி என்று உண்மையை சொல்ல.... காதலியும் அவள் அண்ணனும் நம்ப மறுக்க.... அப்பதான் ரூடிக்கு ஆப்பை நாமலே தேடிபோய் உட்கார்ந்து கிட்டது தெரிய வருது...

ரூடிக்கு காசினோ பத்தி ஏதுவும் தெரியாது... இருந்தாலும் மிரட்டலில் உயிர் பயத்தில் எல்லாம் தெரிந்தது போல் காட்டிக்கொள்ள... உயிர் பிழைக்கின்றான்...

தான் நிக்கி இல்லை என்று நிருபித்தானா? அல்லது காசினோ பற்றி ஏதும் தெரியாமல் காசினோ கொள்ளைக்கு உதவி செய்தானா?... ஆஷ்லி உண்மையாலும் ரூடியை லவ் செய்தாளா? போன்றவற்றை திரையில் பார்த்து மகிழுங்கள்...


படத்தின் சுவாரஸ்யங்கள்....

படம் ஆரம்பிக்கும் முதல் காட்சியிலேயே... சாண்டா கிளாஸ்கள் இரத்த வெள்ளத்தில் பினியில் இறந்து போய் இருப்பது போல் காட்டும் போதே படத்தின் மீது ஒரு ஈர்ப்பு வந்து விடுவது உண்மை.,.

ஆனால் இந்த படத்தை விமர்சகர்கள் குத்தி கிழித்தார்கள்...இந்த படம் சரியில்லை என்று.... இருப்பினும்.. இந்த படத்தை பார்க்கலாம்..

இயக்குனர் John Frankenheimer இயக்கியஇந்த படம் பல டுவிஸ்ட்டுகள் உள்ளடக்கிய படம்....

நல்ல திரில்லர்..இப்படித்தான் கதை பயணிக்க போகின்றது என்று நினைத்தால்... தம்பி அது அப்படி கிடையாது என்பதாய் இந்த கதை பயணகிக்கும்...

நல்ல பனி காலத்தில் முழு படபிடிப்பையும் நடத்தி இருக்கின்றார்கள்....

என்னவோ தெரியவில்லை தொடர்ந்து நான் பாக்கும் நான்கு படங்களில் Charlize Theron சர்வ நிச்சயமாய் தன் மேலழகை காட்டி விடுகின்றார்... இந்த படத்திலும் அப்படியே....

ஜெயிலில் இருந்து வீட்டுக்கு போனதும் ஆஷ்லியும் ரூடியும் இடையே நடக்கும் வெறித்தனமான காமத்தை மிக அழகாக படம் பிடித்து இருப்பார்கள்...

இரண்டு பேரும் பனி எரியில் தண்ணீரில் சிக்கி கொள்ளும் அந்த காட்சி.. அதில் இருந்து தப்பிப்பதும் ரொம்ப அற்புதம்....

நான் நிக்கி இல்லை ரூடி என்றும் எனக்கு எதுவும் தெரியாது என்று சொல்லும் போதே பொளுக் என்று மூகத்தில் குத்தி முகத்தில்ரத்தம் வர வைக்கும் அந்த காட்சி அற்புதம்.....

படத்தின் காட்சி முன்னோட்டம்...



படக்குழுவினர்விபரம்....

Directed by John Frankenheimer
Produced by Marty Katz
Chris Moore
Bob Weinstein
Written by Ehren Kruger
Starring Ben Affleck
Gary Sinise
Charlize Theron
Music by Alan Silvestri
Cinematography Alan Caso
Editing by Antony Gibbs
Michael Kahn
Distributed by Dimension Films
Release date(s) February 25, 2000
Running time 104 minutes
Language English
Budget $36 million USD

அன்புடன்
ஜாக்கிசேகர்

பிடித்து இருந்தால்ஓட்டுபோடுவது உங்கள் இஷ்டம்

பதிவுலகில் கற்றதும் பெற்றதும்(508வது பதிவு..பாகம்/1)


பதிவுலகில் கற்றது....

பதிவுலகம் வந்து இன்றோடு இரண்டு வருடங்களும் 2மாதங்களும் ஆகிகின்றன...500க்கு மேற்பட்ட பதிவுகள்... தமிழ் டைப்பிங் தெரியாமல், கம்ப்யூட்டர் பற்றிய அடிப்படை அறிவு இல்லமால் இந்த பதிவுலகத்துக்கு வந்தேன்...இப்போதும் அப்படியே....

ஒரு சின்ன பிளாஷ் பேக்கில் கொஞ்சம் பார்க்கலாம்... தொடரவேண்டும் என்ற கட்டாயம் இல்லை... தொடரவிருப்பம் உள்ளவர் மேலே தொடரவும்....

தமிழகத்தின் நடுநாடு என்று சொல்லபடுகின்ற கடலூர்காரன்... கடலூர் நகராட்சி எல்லையில் இருக்கும் கூத்தப்பாக்கம்தான் என் சொந்த ஊர்...கோபம்தான் எங்கள் ஊரின் குல சொத்து... முதலில் அடி அப்புறம்தான் பேச்சு இப்படித்தான் என் சிறுவயதில் நான் பார்த்து வளர்ந்த வாழ்க்கை...என் அடுத்த ஊரான பேட்டையில் எங்கள் ஊர் ஆளை அடித்து விட்டு ஒருவன் ஸ்கூட்டரில் வருவதாக தகவல் கிடைக்க....

என் ஊரில் சீத்தாபதி என்பர்
வேகமாக ஸ்கூட்டரில் வருபவன் மேல் ஒரு ஆளில்லாத சைக்கிளை மோதி அவனை கீழே விழவைத்து அப்புறம் அவனுக்கு ராஜமரியதை நடந்தது... நான் விபரம் தெரிந்து பார்த்த முதல் வன்முறை....என் அம்மாவுக்கு அந்த ஊர் பிடிக்கவில்லை..ஒரேபிள்ளை கெட்டுவிடும் என்று பயம்....

அதே போல் என் அப்பா எப்போதும் ஒரு வார்த்தை சொல்லுவார்... அப்பனை கைத்தடியாக உபயோகிக்க கூடாது என்று...அதாவது வடமலை பையன் நான் என்று எந்த இடத்திலும் சொல்லி நான் முன்னேறகூடாது...சுயமாக சொந்தகாலில் முன்னேற வேண்டும் என்பது என் அப்பாவின் ஆசை... அதனால் என் அப்பாவின் பேரை உபயோகிக்காமல் நான் முன்னேற வேண்டும் என்றால், என் சொந்த ஊரில் நான் யார் மகன் என்று தெரிந்து விடும் என்பதால் சென்னைக்குகிளம்பினேன் சென்னையில் முதன் முதலில் செக்யூரிட்டி வேலைக்கு வந்து பிளாட்பாரத்தில் படுத்து, ஹோட்டலில் வேலை செய்து என பல இடங்கள் தாவி இப்போது இந்த நிலை... என் அப்பா ஆசை பட்டது போல் அவரின் பெயரை நான் எந்த இடத்திலும் உபயோகபடுத்தவில்லை.....அப்பன் பெயர் தெரியாதவன் என்று யாரும் சொல்லிவிடக்கூடாது என்பதற்க்காக அப்ளிகேஷனில் அவர் பெயர் நிரப்புகின்றேன்....


5 வருடங்களுக்கு முன் கல்லூரியில் வேலை பார்க்கும் போதுதான் எனக்கு முதன் முதலில் கம்ப்யூட்டர் அறிமுகம்... அதற்கு முன் நான் ஹாலிவுட் படத்தில் மட்டும் பார்த்து இருக்கின்ற வஸ்த்து அது....அங்குதான் முதல் பரிச்சயம்...



நான் ஒரு போட்டோகிராபர் என்பதால் பிலிம்மில் இருந்து டிஜிட்டலாக போட்டோகிராபி துறை மாறியதால்... கேமராவில் எடுத்த போட்டோக்களை ஒவ்வொரு முறையும் லேபில் இருக்கும் கம்யூட்டரில் காபி செய்து அதனை சீடியாக மாற்றி அதிலும் காசு பார்த்த போது என் நம் வீட்டில் ஒரு கம்ப்யூட்டர் வாங்க கூடாது என்று எண்ணி வாங்கியதுதான்.. இப்போது வீட்டில் இருக்கும் கம்ப்யூட்டர்...


அதன் பிறகு... மனைவியுடன் மெயில் மற்றும் சாட்டுக்கும்...குகூளில் பலவிஷயங்களை படிக்கவும் இணைய வசதி வாங்கினேன்... என் மனைவியின் நண்பர் பதிவர் நித்யகுமாரன் வலையுலகில் எழுதுவதையும் அதை படித்து பார்க்கவும் லிக் கொடுக்க...

ஒரு தனிநபர் இப்படி கூட லேஅவுட் செய்து மிக அழகாக தமிழில் எழுதவும், படிக்கவும் முடியுமா, என்ற ஆச்சர்யம்தான் எனக்கு அப்போது எற்பட்டது....

சரி இதனை எப்படி டைப் அடித்து டீடிபி எடுத்து பெரிய விஷயம் இல்லையா ? என்று கேட்ட போது... ரோம்ப சிம்பிள் என்று என் எச்எம் சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்து நோட் பேடில் தமிழில் என் கம்ப்யூட்டரில் அடித்த போது... ங்கோத்தா செமை சூப்பரா இருக்கு என்று ஆச்சர்யம் கொண்டேன்....

எனக்கு தமிழ் டைப்பிங் தெரியாது....நண்பர் நித்யாவுக்கு தெரிந்தது ஓல்டு டைப் ரைட்டர்... அதனை அடிக்க கற்று கொடுத்தார்.... அந்த தமிழ் எழுத்துக்களை ஒரு நோட்டில் எழுதி வைத்துக்கொண்டேன்... எனக்கு ஒரு வலைப்பூ ஆரம்பிக்க வேண்டும் என்று அவரிடம் கோரிக்கை வைத்த போது...அவர் நிச்சயம் நினைத்து இருப்பார்....

இந்த லூசுகிட்ட நாம் எழுதியதை படிக்க சொன்ன இது தனக்கு ஒரு வலைப்பூ ஆரம்பிக்க சொல்லுதே என்று நினைத்து இருக்கலாம்...ஆனாலும் பொறுமையாக ஆரம்பித்து கொடுத்தார்... வலைப்பூவுக்கு என்ன தலைப்பு? என்று கேட்ட போது... எழுத்தாளர் பட்டுக்கோட்டைபிரபாகர் எழுதிய ஏநாவல் டைம்மில் வந்த பிருந்தாவனமும் நொந்தகுமாரனும் என்ற தலைப்பை வைக்க சொன்னேன்... ஏனோ அந்த தலைப்பு ரொம்பவும் பிடித்து போனது....

பத்தாம் வகுப்பு படிக்கும் போது யாருக்காவது கடிதம் எழுதி கையெழுத்து போடும் போது எனது இயற்பெயரை விட்டு விட்டு ஜாக்கிசேகர் என்று கையெழுத்து போட்டு பார்பேன்...ஜாக்கியின் ஒரு படத்தை30 பேப்பரில் ஜெராக்ஸ் எடுத்து அதை லட்டர் பேட் போல் உபயோகபடுத்தி அதில் கடிதம் எழுதி தனசேகரன் அலைஸ் ஜாக்கிசேகர் என்று கையெழுத்து இடுவேன்.. அந்த அளவுக்கு நடிகர் ஜாக்கியின் பரம விசிறி....


சரி வலைப்பூவுக்கு ஒரு பெயர் வேண்டும் என்று சொன்ன போது ஜாக்கிசான் நடித்த ஆர்மர் ஆப் காட் படத்தை பார்த்து விட்டு நடுநிசியில் எனக்கு நானே ஜாக்கிசேகர் என்று வைத்துகொண்டு பைத்தியம் போல் எனக்கு நானே கூப்பிட்டடுக்கொண்ட... அந்த பெயரை டைப் அடிக்க சொன்னேன்.... நண்பர் நித்யாவும் அடித்தார்....

வலைப்பூ தொடங்கியாகி விட்டது.... மூன்று போஸ்ட்டுக்கு பிறகு தமிழ்மணத்தில் இணைக்க சொல்லிவிட்டு அவர் வீட்டுக்கு போய் விட்டார்...அதன் பிறகு கண்ட்ரோல் திரி கொடுத்து மெல்ல தமிழ் டைப் செய்து ஒரு படத்தை டவுன்லோட் செய்து அந்த படத்தை போட்டேன்... அந்த 5 வரி பதிவை தப்பும் தவறுமாக அடித்து (இப்போதும் அப்படித்தான்) வியற்வையும் டென்சனுமாக அந்த பதிவை போட்டு முடித்த போது 3 மணி நேரம் ஸ்வாக ஆகியிருந்தது... 14/04/2008ல் நான் ஆர்வகோளாரில் எழுதிய
அந்த முதல்பதிவை பார்க்கவிருப்பம் இருப்பவர்கள் இங்கே கிளிக்கவும்




அப்போது எல்லாம் என்ன எழுதுவது என்று தெரியவில்லை... எதாவது எழுதவேண்டும்.. நான் இந்த உலகத்தில் சுயம்பு இல்லை... நான் எல்லோரிடத்தில் இருந்தும் ஏதாவது ஒன்று கற்றுக்கொண்டு இருக்கின்றேன்... கற்றுக்கொண்டேன் என்பதை விட காப்பியடித்தேன் என்று சொல்வதைற்க்கு எனக்கு எந்த வெட்கமும் இல்லை... காப்பியடிப்பதைதான் கற்றுக்கொண்டேன் என்று எல்லோரும் டிசன்டாக சொல்லி வருகின்றார்கள்....

இப்போது நான் எழுதும் எழுத்தும்... ஏதோ ஒரு விஷயமும் இதுவரை புத்தகங்களில் படித்தவைகளை வைத்தே எழுதுகின்கறேன்.. என் அம்மா எனக்கு கடல்கிழவன் என்று ஒரு புத்தகத்தை கடலுர் மாவட்ட மொபைல் லைப்ரரியில் இருந்து எடுத்து வாசிக்க கற்றுக்கொடுத்தாள்.... எனது பள்ளிக்கு அருகில் இருக்கும் நூலகத்தில் அதிகமான புத்தகங்கள் கொட்டிக்கிடந்தன... அங்கு தினத்தந்தியில் வரும் கன்னித்தீவில் இருந்து முத்தாரம், கல்கண்டு, குமுதம் ஆனந்தவிகடன் போன்ற வாராபத்திரிக்கைகளும்... வாசிக்க ஆரம்பித்தேன்...

என் அப்பா வீட்டுக்கு வாங்கி வரும் ஒரே புத்தகம் குமுதம் மட்டுமே...அதன் பிறகு அதிகமான காமீக்ஸ் புத்தகங்கள்... அதிகம் படித்தேன் என் அளவுக்கு அதன்மேல் வெறி உள்ளவர்கள் இருந்து இருக்க முடியாது....

அப்போதுதான் இப்போது எண்ணத்து பூச்சி என்று வலையுலகில் எழுதும் எனது குடும்ப நண்பர் அப்போது முத்தமிழ் வாடகை நூல்நிலையம் என்ற வாடகை நூலகத்தை நான் வசித்த கூத்தபாக்கத்தில் திறந்தார்கள்...ஏற்கனவே இருந்த வாசிப்பு அனுபவத்தோடு வாடகைக்கு புத்தகம் எடுத்து படிக்க ஆரம்பித்தேன்...அப்போதுதான் துப்பறியும் கதைகளில் சக்கர்லால், தமிழ்வாணன் கதைகள் அதிகம் விரும்பி படித்தேன்...அப்போது பாகெட் நாவல், கிரைம்நாவல் ஆரம்பித்த அசோகன் என் நன்றிக்கு உரியவர்..

தினத்தந்தி எப்படி தமிழகத்தில் வாசிக்கும் பழக்கத்தை ஆரம்பித்து வைத்ததோ... அது போல நாவல் வாசிக்கும் பழக்கத்தை எழுத்து கூட்டி வாசிக்கும் யாவரும் குறைந்த விலையில் கிரைம்நாவல் கொடுத்து வாசிக்கும் பழக்கத்தை அதிகரித்தவர் பாக்கெட் நாவல் அசோகன் என்றால் அது மிகையாகாது...

தமிழ்வாணன்,சுஜாதா,ராஜேஷ்குமார்,பட்டுக்கோட்டைபிரபாகர்,சுபா, ராஜேந்திரகுமார்,பாலகுமாரன் இவர்களை மட்டும் வாசித்து இருக்கின்றேன்...இப்போது நான் எழுதும் எழுத்தின் சாயல் இவர்களிடத்தில் இருந்து கற்றுக்கொள்ளபட்டது...அதனால் எனது எழுத்தில் யாருடைய சாயாலாவது நிச்சயம் இருந்தே தீரும்......

வலைப்பூ ஆரம்பித்தாகிவிட்டது.. நமக்கு என்ன நன்றாக தெரியும்... சினிமா... அதில் பாத்த பாடங்களை பகிர்ந்து கொண்டால் என்ன? என்று தோன்ற... சினிமாவை எழுத ஆரம்பித்தேன்... இப்போது எல்லாரும் என் உலக சினிமா அறிமுகத்துக்கு சிலாகித்தாலும்..... என் முதல் சினிமா பதிவு இப்படித்தான் இருந்தது... பார்க்க ஆசை இருப்பின் கிளிக்கவும்...



முதலில் நான் எழுதிய ஒரு பத்து பதிவுகள் சீண்ட ஆட்களே இல்லை...நானும் அதை பற்றி கவலை கொண்டதில்லை...நான் எனக்கு தெரிந்தவற்றை தடவி தடவி டைப் அடித்து எனது பக்கத்தில் பதிந்தேன்... ஒரு பத்து வரி அடிக்க கடுப்பாக இருக்கும்... சேவ் செய்ய தெரியாமல் அடித்தது எல்லாம் காணாமல் போன பாராக்கள் ஏராளம்... ஆனாலும் விடாமல் மனம் சளிக்காமல் தடவி தடவி டைப் அடிக்கின்றேன்.... இப்போது சொல்கின்றார்கள்... எங்க சங்க தலைவர் உண்மைதமிழனுக்கு போட்டியாக நான் பெரிதாக அடிக்கின்றேன் என்று.....


இப்போது கூட சாமி என்ற மதுரை நண்பர்... செல்களில் ஆராய்ச்சி செய்பவர்... மெத்த படித்த ஆராய்ச்சியாளர்... சில தினங்களுக்கு முன் ஜெர்மன் சென்றார்...அதற்கு முன் சென்னையில் என்னையும் வானம்பாடி அவர்களையும் சந்தித்து விட்டு செல்ல மதுரையில் இருந்து சென்னை வந்ததுமே போன் செய்துவிட்டார்...

எனது சமுக பதிவுகளுக்கு அவரும் அவர்கள் நண்பரும் ரசிகர்களாம்... வெந்த புண்ணில் பிரபாகனை பாய்ச்சவேண்டாம் என்ற கட்டுரையை பிரிண்ட் எடுத்து பாரில் தன் நண்பர்களோடு வரிக்கு வரி அண்டர் லைன் செய்து விவாதம் நடத்தியதை சொன்னார்.... மதியம் அவரோடு மதிய உணவை சாப்பிட்டுகொண்டே நிறைய பேசினோம்... போகும் முன் எனக்கு மூன்று புத்தகங்களை பரிசளித்தார்....ஆனால் நான் முதன் முதலில் எழுதிய சமுகத்தை பற்றிய பதிவு இப்படித்தான் இருந்தது....எந்த பின்னுட்டமும் வராது...கிணத்தில் போட்ட கல் போல் இருக்கும்...ஓட்டும் இல்லை ஆனால் வாசிக்க ஆரம்பித்தார்கள்...அந்த முதல் சமுகபதிவு இதுதான் வாசிக்க கிளிக்கவும்....

அதன்பின் மெல்ல மெல்ல படித்தார்கள்... கொஞ்சம் கொஞ்சமாக தெரிந்தேன்...பதிவுலகில் நண்பர் அதிஷாதான் என் திருமணத்தின் பத்திரிக்கையை அவர் வலையில் போட்டு பதிவுலகம் சார்பில் என் திருமணத்துக்கு நிறைய வாழ்த்துக்கள் வந்தன.. நிறைய பதிவர் சந்திப்பு நடந்தது.. நான் போனதேயில்லை... அதிஷா ஒவ்வோரு முறையும் போனில் அழைப்பார்.....

நான் சென்றது இல்லை... எனக்கு அவ்வைசண்முகி மணிவண்ணன் போல் கூச்சசுபாவம்.... ஆனால் முத்துக்குமரன் இறப்புக்கு பதிவர்களின் கண்ணீர் அஞ்சலியின் போது நான் நேரில் போனேன்... அப்போதுதான் அதிஷா, லக்கி, பஸ்டன் ஸ்ரீராம், கேபிள்,பெங்களுர் அரவிந்தன் என்று பலரையும் நேரில் சந்தித்தேன்...


சிறு குறிப்பு....


ஏன் 500வது பதிவுக்கு எழுதவில்லை.... ஏன் இதற்க்கு இவ்வளவு விளக்கம் தேவையா? இரண்டு வரியில் சொல்லாமே? என்று யாராவது மனதில் நினைத்தால் தாராளமாக... குகூளில் ஒரு பிளாக் பக்கம் ஆரம்பித்து தாராளமாக உங்கள் கருத்தை சொல்லவும்... இங்கு இப்படித்தான்... இது மெத்த படித்தவர்களின் தளம் அல்ல...

இது பதிவு ஆரம்பித்து முதல் முறையாக எழுத ஆரம்பிப்பவர்களுக்கு இந்த பதிவு உத்வேகமாக இருக்கும்....படித்து பிடித்து இருந்தால் ஓட்டுபோடவும் என்று மட்டும் சொல்லி இருக்கின்றேன்...... அப்போது எல்லாம் எனக்கு பெரிய நண்பர்கள் வட்டமோ அல்லது நேசிப்பவர்களின் வட்டமோ அப்போது இல்லை.. நான் சாட்டில் போய் ஓட்டுபோட சொல்லியோ அல்லது எனக்கு நீ போடு நான் உனக்கு போடறேன் என்ற கமிட்மேன்ட் எதும் நான் வைத்துக்கொண்டது இல்லை....

என்னை பொறுத்தவரை 500 என் எண்ணிக்கை பெரிய விஷயம்...எனக்கு பிளாக் எழுதுவது என் முழுநேர தொழில் இல்லை... என்னை நானே திரும்பி பார்க்கவும்... என்னை தட்டிக்கொடுத்த புதிய நண்பர்களுக்கு என்னை பற்றி சொல்லவும்...என்னை இத்தனை நாளாய் வாசிப்பவர்களுக்கு என் நன்றியை சொல்லவும் இந்த பதிவுகள்...

இந்த பதிவு...சிங்கபூரில் பெயர் மறந்து விட்டது...மாதம் 15000 சம்பள்ம் வாங்கி.. வீட்டுக்கும் உறவுகளிடமும் பேசாமல் என்னிடம் செல் போனில்... உங்கள் பதிவு எனக்கு நிரம்ப தன்னம்பிக்கையை கொடுக்கின்றது என்று சொன்ன முகம் தெரியாத நண்பனுக்காகவும்...

மாலத்தீவில் பார் அட்டேன்டராக வெலை செய்து கொண்டு இருக்கும் தருமன்... அண்ணே உங்கள் பதிவுகள் மற்றும் தமிழ்மணம்,தமிளிஷ்தான் இந்த தீவில் என் வெறுமையை போக்கும் சாதனங்கள் என்று சொல்லி போனில் அரைமணிநேரம் பேசியவனுக்காவும்...

கேரளாவில் இருந்து முரளி என்பவர் தன் நேரத்தை ஒதுக்கி கடிதத்துக்கு பதில் டிசைன் செய்து அனுப்பிய அந்த நேசத்துக்காக நான் எழுதுகின்றேன்......

படங்களை கிளிக்கி பார்க்கவும்

தொடரும்....

அன்புடன்
ஜாக்கிசேகர்

பிடித்து இருந்தால்ஓட்டுபோடுவது உங்கள் இஷ்டம்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner