மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/14•11•2010)

ஆல்பம்.
ராசா ராஜினாமா குறித்து இந்தியாவே எதிர்பார்த்து காத்து இருக்கின்றது..மத்திய அரசில் அங்கம் வகித்த முக்கிய அமைச்சர் தப்பு செய்து இருக்கின்றார்... இது பிரதமருக்கு தெரியாமல் நடந்து இருக்க வாய்பே இல்லை...ஜெ சொல்வது என்னவென்றால் ராசா ராஜினாமா செய்யவைத்தால் தான் மத்திய அரசுக்கு ஆதரவு தருவதாக சொல்லி இருக்கின்றார்..அப்போது ஜெ சொல்ல வரும் சேதி என்ன தெரியுமா? தப்பு செய்தாலும் உங்களோடு நான் குப்பை கொட்டதயார் என்பதே....வௌங்கிடும்....


 =================
மிக்சர்
இன்று குழந்தைகள்தினம்... பள்ளி தினத்தில் விடுமுறைநாளில் குழந்தைகள் தினம் வந்தால் சபிப்பேன்...  ஆனால் இன்று இதுவும் மற்றோறு நாளே...
=============
பாண்டியில் அன்னை ஆசிரமம் போனேன்...  உள்ளே போகும் போதே அமைதி காக்கவும் என்று சொல்லியும் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யவும் என்று சொல்லியே அனுப்புகின்றார்கள்..... ஆனால் உள்ளே போய் உட்கார்ந்ததும் ஒரு சனியனின்  செல்போன் அடித்தது... எனக்கு கோபம் சட்டென அதை ஆப் செய்ய நினைக்காமல் பொறுமையாக நம்பர் பார்த்து அதன் பின் ஆப் செய்ததுதான்... தேவுடா???
============
என் ஊர் கடலூரில் இரண்டு வருடத்துக்கு முன் ரோடுகளை தோண்டி  போட்ட பாதாள சாக்கடை திட்டம் இன்னும் முடியாமல் பல பெரிய மேடுபள்ளங்களை ரோட்டில் இந்த மழை உருவாக்கி வைத்து இருக்கின்றது...இரண்டரை வருடம்... சே.. நிங்கள் எல்லாம் நல்லகதிக்கு போவிங்களா?? இதுல வேற கடலூர் ஒரு டிஸ்டிக் தலைநகர் மயிறு வேற...இதுவே  போயஸ்தோட்டத்துகிட்டயும், கோபலாலபுரத்துகிட்டயும் இரண்டரை வருஷமா தோண்டி போட்டு வைத்து இருப்பிங்களா?? அங்கு வாழ்பவர்கள்தான் மனிதர்களா??  எங்கள் ஊரில் வாழ்பவர்கள் எல்லாம் மிருகங்களா?? எப்படிதான் எலெக்ஷன் முன்னாடி வேலையை முடிச்சிட்டு வெக்கம் இல்லாம எப்படிதான் ஓட்டு கேட்டு வருவிங்களோ??? மக்களிடம் பேசிய போது ஒன்று மட்டும் தெரிந்தது...இந்த முறை கடலூரில் திமுக அவுட் அது மட்டும் நிச்சயம்....
========================
நன்றிகள்...
தமிழ்மணத்தில்  டாப் இருபது வலைபதிவுகளில்  எனது வலைபதிவு முன்றாம் இடத்தை பெற்றது குறித்து மிக்க மகிழ்ச்சி.. இது எல்லாம் உங்களால் சாத்தியம் ஆனாது.. மிக்க நன்றி..  உங்களுக்கும், தமிழ்மணத்து நிர்வாகிகளுக்கும் எனது நன்றியும் அன்பும்...
==========
சிறுவிளக்கம்..
ஏதோ ஜெயமோகன் செய்த பகடி எனக்கு தெரியாமல் பதிவு போட்டு விட்டதாக பலர் நினைக்கின்றார்கள்....முகம் தெரியாம கண்டவன்  என்னை திட்டறான்... அதுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல போறதில்லை.. காரணம் அவனுங்க எல்லாம் என் பாஷையில ...............ஸ்ஸஸஸஸஸஸஸஸ ஆனா ஜெயமொகனுக்கு பதில் சொல்ல காரணம் என் பேரை பயண்படுத்தி இருப்பதுதான்.. அலெக்சா  ரேங்குக்கு உதாரணம் சொல்லி இருக்கலாம்... ஆனா சினிமா ஊர்வம்புக்கு மவுசுன்னு சொன்னதால.... அதுக்குதான்.. அந்த பதிவு....
 =================
நம்ம பக்கம்...
கூகுள் பஸ்சில் கூட  எனது புகழை பக்கம் பக்கமாக பரப்பும் எனது அடிமைக்கு எனது நன்றிகள்..இன்னும் நிறைய எதிர்பார்க்கின்றேன்...நல்ல விளம்பரம்...
=============
பிலாசபிபாண்டி
அமெரிக்காவுல மழை பெஞ்சு முடிச்ச 5நிமிஷத்துல ரோடில் இருக்கும் தண்ணி எல்லாம் மறைஞ்சிடும்.ஆனா அதே இந்தியாவுல  மழை பெஞ்சு முடிச்ச 5நிமிஷத்துல ரோடே மறைஞ்சிடும் இந்தியா ராக்ஸ்..

நான்வெஜ்+18
 ஜோக்..1
பொண்டாட்டி என்பது செஸ்போர்ட்மாதிரி  எவ்வளவு நேரம் வேனா பொறுமையா  யோசிச்சு விளையாடலாம்.. ஆனா காதலி என்பது புட்பால் மாதிரி  எப்ப கேப் கிடைச்சாலும் கோல் போட முயற்சி செய்யனும்.... என்ன புரிஞ்சிதா???

18 comments:

 1. லேட் ஆனாலும் லேட்டஸ்டா வந்துருச்சு...உங்களின் நேரமின்மை தெரியுது நண்பரே....

  ReplyDelete
 2. நான்வெஜ்+18 நச்சுனு இருக்கு.வழமைக்கு மாறா லேன்த்து கம்மியா இருக்கே?

  ReplyDelete
 3. Me the first ;)
  I was waiting for your sunday post from evening.

  ReplyDelete
 4. Coming soon !d.m.k. washout in tamilnadu! if A.Raja dismissed

  ReplyDelete
 5. //அமெரிக்காவுல மழை பெஞ்சு முடிச்ச 5நிமிஷத்துல ரோடில் இருக்கும் தண்ணி எல்லாம் மறைஞ்சிடும்.ஆனா அதே இந்தியாவுல மழை பெஞ்சு முடிச்ச 5நிமிஷத்துல ரோடே மறைஞ்சிடும் இந்தியா ராக்ஸ்..//


  அனைத்தும் ராக்ஸ் தான் ... வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. என்ன ஜாக்கி, இன்னிக்கி சாண்ட்வெஜ் ரொம்ப கம்மியா இருக்கே..

  ReplyDelete
 7. சொந்த பந்தத்த பாக்க போயும் பதிவா? எல்லாம் முடிச்சிட்டு வந்து பதிவ போடுங்க.......

  ReplyDelete
 8. yen brother?
  yealutharathai surukkiettenga?

  ReplyDelete
 9. நச்ன்னு இருக்கு தல! ஆனா கம்மியா இருக்கு! :))

  ReplyDelete
 10. பின்னுட்டம் இட்ட அனைவருக்கும் எனது நன்றிகள்... நேற்று இரகூ எட்டு மணிக்கு வீடு வந்தேன்.. அப்புறம் எழுதிய பதிவு இது.மினி என்பதே சின்னதுதான்... ஆனால் நான் பிரியாக இருக்கும் போது நிறைய மினியிலும் எழுதி வைப்பேன்.. நேரம் இருந்தால் நிறையவும் நேரமின்மை என்றால் குறைவாகவும் என புரிந்து கொள்ளவேண்டும்..

  உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் என் நன்றிகள்

  ReplyDelete
 11. //தமிழ்மணத்தில் டாப் இருபது வலைபதிவுகளில் எனது வலைபதிவு முன்றாம் இடத்தை பெற்றது குறித்து மிக்க மகிழ்ச்சி.. இது எல்லாம் உங்களால் சாத்தியம் ஆனாது.. மிக்க நன்றி.. உங்களுக்கும், தமிழ்மணத்து நிர்வாகிகளுக்கும் எனது நன்றியும் அன்பும்...//////

  வாழ்த்துக்கள்

  முதல் இடத்தில் யார்?

  ReplyDelete
 12. தமிழ்மணம் முதல் இடத்தில் நான் உங்களைதான் எதிர்ப்பார்த்தேன் உங்களுக்கு மூன்றாம் இடம் என்றால் முதல் இரண்டு இடங்கள் யார்?

  ReplyDelete
 13. sumar 30 varudankalukkum melaka District headquartera irukkara uroda kevalatha yezhuthanathukku Thanks jacki.next time neenga varumpothu cuddalore la oru pathivar santhippu nadathalam thala

  ReplyDelete
 14. //மத்திய அரசில் அங்கம் வகித்த முக்கிய அமைச்சர் தப்பு செய்து இருக்கின்றார்... இது பிரதமருக்கு தெரியாமல் நடந்து இருக்க வாய்பே இல்லை//
  திருடுறதுக்கு கூட இவனுங்களுக்கு அறிவு இருக்காதுன்னு அவருக்கு தெரியாம போயிடுச்சி. சென ஆட்டு ம**ர புடுங்க கூட இவனுங்களுக்கு திறமை இருக்காது.

  ReplyDelete
 15. விருதுநகரில் பாதாள சாக்கடைத் திட்டம் 2006ல் ஆரம்பிக்கப்பட்டது. 2008ல் முடிவடைவதாக திட்டம். ஆனால் 2010 முடியும் தருவாயிலும் இன்னும் 70% பணிகள் மட்டுமே நிறைவடைந்திருக்கின்றன!! 15 கோடி என மதிப்பிட்டு ஆரம்பிக்கப் பட்ட திட்டம் இன்று 28 கோடி செலவில் வந்து நிற்கிறது!! இன்னும் திட்டம் வெற்றிகரமாக முடிக்கப்பட்ட பாடில்லை. விருதுநகரும் ஒரு மாவட்டத் தலைநகர் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு நகராட்சியின் தலைவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். தலைவரும் கவுன்சிலர்களும் திட்டத்தில் பெரும்பகுதியை கொள்ளையடித்து விட்டதாக மக்களிடையே பேச்சு! யார் என்ன செய்ய முடியும்????

  ReplyDelete
 16. ///

  ராசா ராஜினாமா குறித்து இந்தியாவே எதிர்பார்த்து காத்து இருக்கின்றது..மத்திய அரசில் அங்கம் வகித்த முக்கிய அமைச்சர் தப்பு செய்து இருக்கின்றார்... இது பிரதமருக்கு தெரியாமல் நடந்து இருக்க வாய்பே இல்லை...ஜெ சொல்வது என்னவென்றால் ராசா ராஜினாமா செய்யவைத்தால் தான் மத்திய அரசுக்கு ஆதரவு தருவதாக சொல்லி இருக்கின்றார்..அப்போது ஜெ சொல்ல வரும் சேதி என்ன தெரியுமா? தப்பு செய்தாலும் உங்களோடு நான் குப்பை கொட்டதயார் என்பதே....வௌங்கிடும்....

  ///

  ஒன்னேமுக்கால் லட்சம் கோடி பத்தி உங்களுக்குப் பெரிதாக கவலையில்லை. ஜெயலலிதாவை கார்னர் பண்ணுவதே உங்களுக்குப் பிரதானம்.

  திமுக தவிர வேறு கட்சிகள் இந்த குற்றத்தில் ஈடுபட்டிருந்தால் உங்களின் நிலைப்பாடு இந்த இரண்டு வரிகளோடு நின்றிருக்குமா? நெஞ்சுக்கு நீதியாக பதில் சொல்லுங்கள்...

  அன்பு நித்யன்

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner