என் கால்கள்.
மதியம் இரண்டு மணிக்கு இரக்கமற்று காயும் வெயிலில் சாலிகிராமம் பிரசாத் லேபிள் இருந்து மயிலைக்கு டூவிலரில் செல்வது பெரும் கொடுமை.
வேறு வழியில்லை கிளம்பியே ஆக வேண்டும்.
ஏவிஎம் சிக்னல் வடபழனி பஸ் டிப்போ சிக்னல் இரண்டையும் தாண்டுவதற்குள்ளே டரியல் ஆகி விட்டேன்..
போட்டோகிராபியில் பவுன்ஸ் லைட் என்று ஒன்று உண்டு.. அதாவது வெள்ளை தெர்மோக்கோள் அல்லது வெள்ளை சாட்டின் கிளாத்தின் மேல் ஒளியை பாச்சினால்… அது சப்ட்டாக ரிப்லைக்ட் செய்யும்… குளோசப் காட்சிகள் எடுக்க இந்த புவுன்ஸ் லைட் அதிகம் உதவும்…
பிரேக் அப்
=============
அது என்ன? அப்படின்னு ஒரு ஆர்வம் பரபரக்கின்றது.. இது இயல்பானதான் என்றாலும் என் கண்ணில் மட்டும்தான் இப்படியான விஷயங்கள் மாட்டித்தொலைக்கின்றன...
ரொம்ப நாள் கழிச்சி யாழினியோடு நாகேஷ்வரராவ் பார்க் போய் இருந்தேன். என்னை பொருத்தவரை மயிலையின் பொட்டானிக்கல் கார்டன் அதுதான்.
யாழினி விளையாடிக்கொண்டு இருந்தாள்...
Theri movie review | தெறி திரைப்பட விமர்சனம்.
தெறி திரைப்பட விமர்சனம்.
ராஜாராணி கொடுத்த அட்லியின் இரண்டாவது திரைப்படம். தாணு தயாரிப்பு….விஜய்
போலிஸ் கேரக்டர்… இரண்டு ஹீரோயின்களாக சமந்தா,
எமி என்றதும் எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறியது
நிஜம். என்னதான் ராஜாராணி நன்றாக இருந்தாலும், மவுனராகத்தில் நாகசு செய்து ஓப்பேற்றப்பட்ட
திரைக்கதை என்று விமர்சகர்ளால் விமர்சனம் செய்யப்பட்ட திரைப்படம் அது. சரி
தெறி திரைப்படம் எப்படி?
நன்றி தமிழ் இந்து.
2012 ஆம் ஆண்டில் ஆரம்பிக்க வேண்டியது… ஆனால் அது தள்ளி தள்ளி போய் கடந்த வருடம்தான் யூடியூப் வலைதளம் ஆரம்பித்தேன்.
முதன் முதலில் நான் யூடியூப் சேனல் ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்த போது… எல்லோரையும் போல காம்பயரிங் செய்ய ஒரு அழகான ஒரு ஆண் அல்லது பெண் காம்பயரர் சினிமாவை பற்றி பேச தேவை என்றுதான் யோசித்தேன்..
Labels:
அனுபவம்,
நன்றிகள்,
யாழினிவிமர்சனம்,
யூடியூப்,
ஜாக்கிசினிமாஸ்
ஒரு வாய்ப்பு...
சரிங்கடா கலைஞர் பாலம் கட்டுனாலும் ஊழல் செய்வார்ன்னு சொல்லுவிங்க......
அட அம்மா ஊழல் செஞ்சாலும் பரவாயில்லை சென்னை போரூர் பாலத்தை கட்டி இருக்கலாம்ன்னு சொன்னா காடாறு மாதம் நாடாறு மாதம் சென்னையிலயும் கோடா நாட்டுலயும் ஆட்சி நடத்துனதுல அவுங்க மறந்து போய் இருக்கலாம்ன்னு அதுக்கும் சப்பை கட்டு கட்டுவிங்க.... அவுங்க ரொம்ப பிசின்னு...
சரி வாட் ஈஸ் த கன்குலுஷன்..
=========
ரெண்டு திராவிட கட்சியும்தான் சார் தமிழகம் கெட்டு போவ காரணம்...
சரி...
இப்ப என்ன செய்யலாம்-?
அதனால மாற்றத்துக்கு மக்கள் நல கூட்டனியை ஆதரிக்க வேண்டும்ன்னு சொல்றோம்.. சார்..
யார் தலைமையில..?
விஜயகாந்த தலைமையில சார்....
சரி.. அதுக்கு காரணம்..?
சார் அவருக்கிட்ட ஒரு வாய்ப்பு கொடுக்கலாமே சார்..
ஆஹான் கரெக்ட்தான்... ஆனா நான் ஒரே ஒரு கேள்வியை பத்திரிக்கையாளர் மற்றும் பொது மக்கள்கிட்ட கேட்கறேன்..
திமுக எதிர்ப்பு காரணமாக எதிர்கட்சி அந்தஸ்த்து கூட இல்லாம போச்சி திமுக...யாருக்கிட்ட எதிர்கட்சி தலைவர் பதவிவை கொடுத்தோம்..
விஜயகாந்கிட்ட..
இந்த ஐந்து வருடத்தில் அவர் எதிர்கட்சி தலைவராக சட்டசபையில் பேசிய சாதனைகள் என்ன? என்ன?
ஆறு மாதத்தில் கரெண்டு கொடுக்கறோம்ன்னு சொன்னவாங்க இன்னைக்கு வரைக்கும் தடையில்லா மின்சாரத்தை வழங்க முடியலை.. அதுக்கு எதிர்கட்சி தலைவரா அவர் எடுத்த போராட்டங்கள் என்ன?
அதற்கு ஆளும் கட்சியை தீர்வை நோக்கி செல்ல வைத்தாரா..?
பாகிஸ்தான் பார்டரில் வாசிம்கானிடம் ரைமிங்காக பேசும் அவர்.. சட்டசபையில் எத்தனை புள்ளி விவரத்தை அடுக்கி ஈழத்தாயை நிலை குலைய வச்சி இருக்கார்ன்னு சொல்ல முடியுமா-?
மநகூ கட்சி தலைவர் மேடையில் இருக்கின்றார்கள்.. நாலே நாலு பேர்தான்.. அவர்களை பெயரையே நினைவு படுத்தி சொல்ல முடியாதவர்..ஏற்கனவே எதிர்கட்சி தலைவர் பதவியை கொடுத்தும் எதையும் கிழிக்காதவர் முதல்வராகி என்ன செய்ய போகின்றார்.???
ஒரு வாய்ப்பு கொடுக்க இது என்ன மெரினா பீச்சுல பலூன் சுடற போட்டியா..?
இதுக்கு திராவிட கட்சிகளே வந்து தொலையாளாம்..
தம்பி தமிழ் நாட்டை திராவிட கட்சிகள்தான் அழிச்சிதுன்னு சொல்ற இல்லை..
ஆமாம்....
வட நாட்டு பக்கம் எல்லாம் போய் பார்த்து இருக்கிறியாப்பா..?
இல்லை?
பார்த்துட்டு வா.. நம்ம ஊரை சொர்கம்ன்னு சொல்லுவே...
அங்க எங்க போவனும்ன்னாலும் ரயிலுதான் அதிலும் டிக்கெட் எடுக்காம போவனுங்க...
நாம ரயிலை விட பேருந்து அதிகம் யூஸ் பண்ணறோம்...குக்கிராமத்தை போக்குவரத்து உள்கட்டமைப்பால் இணைத்து இருக்கோம்...கிராமம் தோறும் ஆரம்பசுகாரதார நிலையம் அமைத்து கர்பினிகள் மற்றும் தொற்று நோய் தடுப்பை மேற்க்கொண்டு நிறைய உயிர் இழப்பை குறைத்து இருக்கோம்... இது எல்லாம் திராவிட கட்சிகளின் சாதனை...
இதை விட நாங்க தமிழ்நாட்டை சிங்கப்பூரா மாத்துவோம்ன்னு யாராவது சொன்னா திட்ட வரைவ வெளியிட சொல்லி எத்தனை வருஷத்துலஅப்படி முடிப்பாங்கன்னு கேள்வி கேட்டு ஓட்டு போடுங்க.. அது சாத்தியம்னா.. இன்பேக்ட் நானே ஓட்டு போடறேன்..
அதனால யாருக்கு உங்க ஓட்டுன்னு முடிவு பண்ணிக்கோங்க.
இதுபுரிஞ்சா இந்த பதிவை ஷேர் பண்ணிங்க இல்லாட்டி அப்படியே போய் நீங்க சொல்றது போல ஒரு வாய்ப்பை கொடுங்க... சட்டசபையில காமெடி பார்க்க காத்துக்கிட்டு இருக்கேன்.
நன்றி.
ஜாக்கிசேகர்
07/04/2016
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ....
.EVER YOURS...

Subscribe to:
Posts (Atom)