Showing posts with label அறிவிப்புகள். Show all posts
Showing posts with label அறிவிப்புகள். Show all posts

எனது சொந்த வீட்டை விற்க போகின்றேன்…




எனது சொந்த வீட்டை விற்க போகின்றேன்…
ஆம் நிறைய கனவுகளுடன் ஆசையாக வாங்கிய வீட்டை விற்க போகின்றேன்….
கனத்த மனதுடன்
கனத்த இதயத்துடன்
வலி நிரம்பிய வார்த்தைகளை தேடி தேடி எழுதுகிறேன்.


Request Road Travelers | வாகன ஓட்டிகள் அனைவருக்கும் ஒரு அன்பான வேண்டுகோள்.







நான் உத்தமனில்லை.. அப்படியான பிம்பம் என் மீது விழுவதை நான் ஒரு போதும் விரும்பியதில்லை..காரணம் குறை நிறைகளோடு மட்டுமே ஒரு மனிதன் வாழ முடியும்..
100 சதவிகித நேர்மையும் ஒழுக்கமும் வாய்ப்பே இல்லாத விஷயம். அனால் குறைந்த பட்ச நேர்மை என்னிடத்தில் உண்டு …


சினிமாவுக்கென புதிய தளம்.... ஜாக்கி சினிமாஸ்...



அன்பின் நண்பர்களே...

சினிமாவுக்கென புதிய தளம் ஆரம்பித்துள்ளேன்..முழுக்க முழுக்க சினிமா சார்ந்த செய்திகளை  கட்டுரைகளை  விமர்சனங்களை ஜாக்கி சினிமாஸ் என்ற பிரத்யோக வலைதளத்தில் எழுத இருக்கின்றேன்....


எனது புதிய ஆங்கில வலைப்பூ..


ரொம்ப நாளா ஒரு பிளாக் ஆரம்பிக்கனும்னு இருந்தேன்..இருக்கற பிளாக்குல டெய்லி ஒரு மேட்டரை எழுதறதே பெரிய விஷயமா இருக்கு..

அனானிகளுக்கு இறுதி எச்சரிக்கை...




இரண்டு நாட்களாக  பதிவு எழுதவில்லை...வக்கில் ஆலோசனை, சைபர்கிரைம், போன்ற இடங்களுக்கு அலைந்த காரணத்தால் பதிவுகள் எழுத நேரம் கிடைக்கவில்லை...



எங்கள் தேவதைக்கு பெயர் சூட்டல்…


பெயர்கள் சாதாரணமானவை அல்ல.. வாழ்வின் ஏதோ ஒரு சந்தர்பத்தில் அந்த பெயரை கேள்விபடும் போதோ அல்லது அந்த பெயரை எவராவது உச்சரிக்கும் போதோ பழைய ஞாபகங்கள்  நம்மை வட்டமிடும்.. அதுவும் மிக  நெருக்கமான காதலியின் பெயர் என்றால், உயிர் நண்பன் என்றால், நம்பிக்கை துரோகி என்றால்,உதவிக்கு தவிக்கும் போது உதவியவள் அவ்லது உதவியவர் பெயர் என்றால், அவர்களை பற்றிய ஏதாவது ஒரு விஷயம் நினைவூகூறப்படும்...


ஒரு லட்சம் கையெழுத்து தேவை..தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலுக்கான கவன ஈர்ப்புக்கு..

 கார்கில் போர் நடக்கின்றதா? வடக்கு தெற்கு என்று பேதம் பார்க்காமல் உணர்ச்சிவசப்பட்டு பணத்தை கலக்ஷன் செய்து கொடுப்பது நம் தமிழ் இனம்தான்..

வழிப்பறி சென்னை சாலை...

ஏற்கனவே  இந்த பக்கத்தில் சில ஆபத்தான சென்னை  சாலைகள் பற்றி எழுதி இருக்கின்றேன்.  மதுரவயல் பெருங்களத்துதூர்  பைபாஸ் ரோடு பற்றியும் சென்னை ஈசிஆர் சாலை பற்றயும் தொடர்ந்து இந்த தளத்தை வாசித்து வருபவர்களுக்கு நிச்சயம் தெரியும்.


நான் வந்துட்டேன்....



15 நாள் வெளி்ப்புறபடப்பிடிப்பு என்றுதான் சொல்லினார்கள்... ஆனால்மிக சீக்கரமாக முடிந்து விட்டது.நேற்றுதான் இரவு வந்தேன்... வந்தால் நெட் கனெக்ஷன் இல்லை... .. டாட்டா இண்டிக்காம் கனெக்ஷன் திரும்ப உயிர்பிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.... அடுத்த நெட்வொர்க் என்ன வாங்கலாம் என்பது பற்றிய ஆராய்ச்சியில் இருக்கின்றேன்... தொடர்ந்து ஷுட்டிங் இருந்து கொண்டு இருக்க போகின்றது... அதனால் நெட் இழுப்பதா வேண்டாமா? என்று யோசனையில் இருக்கின்றேன்...

மாதம் 800 என்பது மிக குறைவாக சம்பாதிக்கும் எனக்குஇப்போது அவசியமா? என்ற கேள்வி எனது மனசாட்சி என்னை கேட்கின்றது...ஆனால் முகமே தெரியாமல் வாஷிங்டன் டிசியில் வாழ்க்கை நடத்தும் ஆர் ஆர் என்ற நண்பர், எனது எழுத்தை தொடர்ந்து வாசித்து வருபவர்... அலப்புழாவில் இருக்கும் போதே தொடப்பு கொண்டு தான் தமிழகம் வந்து இருப்பதாகவும் என்னை அவசியம் சந்திக்க வேண்டும் என்று சொன்னார்... அவர் எனக்கு என்ன உறவு? இது போன்ற முகம் தெரியாத நண்பர்கள் கொடுத்தது இந்த பிளாக்தான் அதனால் நெட் இல்லாத காலங்களில் உங்களை அதிகம் மிஸ் செய்தேன் என்பதே உண்மை...அதனால இது போன்ற முகம் தெரியாத நட்புகளை இழக்கமால் இருக்க நெட் அவசியம் ஆகின்றது...

ஒருமாதம் ஊருக்கு போகின்றேன் என்று சொல்லி போஸ்ட் போட்டால் அதற்க்கு40 பேருக்கு மேல் வாழ்த்து சொல்லி என்னை கண் கலங்க வைத்துவி்ட்டீர்கள்... ஒருகாலும் உங்கள் பாசத்தை இழக்க நான் விரும்பவில்லை...பார்ப்போம் எந்த கனைக்ஷன் இழுப்பது என்று???

அதே போல் என் மனைவியோடு தொடர்பு கொள்ள ரொம்ப சீப் இண்டர்நெட்தான்.... அதனால் நெட் அத்தியாவசியமாகின்றது.அதனால் வெகு சீக்கரத்தில் நெட் கனெக்ஷன் இழுத்துவிடுவேன்..
எனக்கு ஒல்டு தமிழ் டைப்ரேட்டர் மட்டும்தான் தெரியும் அதுவும் மனப்பாடமாக எனக்கு தெரியாது...கீ போர்ஙட்டில் தமிழ் எழுத்ததுக்கள் ஒட்டி வைத்து அடித்து தப்பும் தவறுமாக பழகி வைத்து இருக்கின்றேன்... என் ஹெச்எம் சாபட்வேர் டவுன்லோட் செய்து அடித்துவருகின்றேன்...

வெளியூர் சென்றால் வேலை இல்லாத நாட்களில் பதிவு எழுத எதாவது வழி இருக்கின்றதா?அதற்க்கு வழி இருந்தால் நண்பர்கள் சொல்லலாம்.... மிக விரிவாய் ஏனென்றால் எனக்கு கம்யூட்டர் அறிவு கம்மி....இப்போது கூட இதனை நோட் பேடில் அடித்து பெண் டிரைவில் காப்பி செய்து, பிரவுஸ் சென்டர் வந்து போஸ்ட் செய்ய போகின்றேன்... நெட் கிடைத்ததும் தொடர்ந்து எழுதுகின்றேன் நேரம் கிடைக்கும் போது நோட்பேடில் எழுதி காப்பி செய்து போஸ்ட் செய்கின்றேன்....


அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

(அறிவிப்பு)பதிவுலகிற்க்கு ஒரு மாதம் விடுப்பு விடுகின்றேன்...


அன்பின் என் இனிய பதிவுலக நண்பர்களுக்கு ,
ஜாக்கியின் முதல் வணக்கம்...

எனது பாடாவதி டாடா இன்டிகாம் இண்டெர்நெட் கனெக்ஷனுக்கு இன்றோடு கடைசிநாள்....

இன்று மாலை சென்ட்ரலில் இருந்தது (ஆலப்புழா) கேரளா செல்கின்றேன்...வெளிப்புற படப்பிடிப்பு கேரளாவில் நடப்பதால் நான் ஒருமாதம் கோட்டயம், ஆலப்புழா, எர்ணாகுளம் போன்ற ஊர்களுக்கு செல்ல வேண்டி இருப்பதால் இந்த ஒருமாதம் பதிவுலகிற்க்கு நான் விடுப்பு விட உத்தேசித்து உள்ளேன்... அதே போல் ஷுட்டிங் கொஞ்சம் சீக்கரம் பேக்கப் ஆனால் எதாவது நெட் சென்டரில் வந்து உங்கள் பின்னுட்டங்களை பார்க்கின்றேன்... ஆனால் பதில் எழுத முடியாது....

ஒரு மாதம் அவுட்டோர் முடிந்து வந்து உங்களை வெகுவிரைவில் சந்திக்கின்றேன்...அப்புறம் ஊருக்கு போய் வந்த பிறகுதான்... எர்டெல் கனெக்ஷன் எடுப்பது பற்றி யோசிக்க வேண்டும்... எனெனில் கொஞ்சம் கஷ்ட் ஜீவனம்தான் நடத்துகின்றேன்... கல்லூரியில் வேலை செய்த போது பத்து நாளுக்கு ரூ5000சம்பளம் வந்தது இப்போது அதே பத்துநாள் பணிக்கு ரூ1500 பேட்டா பெறுகின்றேன்.... வேறு என்ன பொருளாதார நிலை பொறுத்து விரைவில் நான் உங்களை வந்து சந்திக்கின்றேன்...

இந்த வலையுலகை பொறுத்தவரை நான் முதலில் எனது எழுத்து எல்லோரிடமும் போக வேண்டு்ம் என்று அசைப்பட்டேன்.. அது கடவுள் புண்ணியத்தில் சிறப்பாய் நடந்தேறியது...எனக்கு பெரிய நண்பர் வட்டம் சென்னையில் இல்லை ஆனால் இப்போது நல்ல நண்பர் வட்டத்தை எனக்கு இந்த பதிவுலகம் உருவாக்கி தந்து இருக்கின்றது... மிக்க நன்றி...

அண்ணன் தண்டோரா, பதிவர் நித்யா போன்ற நண்பர்கள்.. நான் தினம் ஒரு பதிவிடுவதை பார்த்து எனக்கு பெண்டு கிழியும் வேலை எனக்கு விரைவில் வரவேண்டும் என்று வேண்டி கொண்டனர்... அண்ணன் தண்டோரா பதிவர் நித்யாவிடம்.. சும்மா ஜாலிக்காக , ஜாக்கியை , உட்டா லேஸ் பாக்கெட் ,மெடி்மிக்ஸ் சோப் போன்றவற்றிர்க்கு விமர்சனம் எழுதுவார் போல என்று வேறு சொல்லி இருக்கின்றார்...தண்டோரா சார் இப்ப சந்தோஷமா????...

இதுவரை தினமும் எனது பதிவுகளை சலிக்காமல் படித்து அலுக்காமல் பின்னுட்டம் போடும் எனது பதிவுலக நண்பர்களுக்கு எனது நன்றிகள்...இந்த ஆளு ஊருக்கு போயிட்டான் ... நாம சும்மா இருக்கலாம்னு நினைக்காதிங்க....
எதாவது ஒரு நல விசாரிப்பை நாட்டு நடப்பை எனக்கு தெரிய படுத்துங்கள்... நேரம் கிடைத்தால் பதில் போடுகின்றேன்....

தொடர்ந்து திங்கள் கிழமை ஆனால் சாண்ட்விச் அண்டு நாண்விச் எழுதினேன்... அது எழுதுவதை விடுத்து பல வாராங்கள் ஆகின்றன...ஆனால் ஒரு பயபுள்ள கூட ஏன் எழுதலை அப்படின்னு கேட்கலை...சஜான என்ற பாலோயர் மட்டும்தான்... ஏன் இப்பவெல்லாம் சாண்ட்வெஜ் கானோம் என்று??? கேட்டு இருக்கின்றார்...

முதலில் வேளைபளு.. கடனுக்கு என்று எழுதுவதுஎனக்கு பிடிக்காது...அதே போல் ரேங் போஸ்ட்டில் எனது சமுக மற்றும் பட பதிவுகளை விட சாண்ட்விச் பதிவுகள் அதிகம் இடம் பிடித்து இருக்கின்றது.... அது எனக்கு சந்தோஷமே... நேரம் கிடைக்கு்ம் போது நிச்சயம் எழுதுகின்றேன்...

விரைவில் வந்து சந்திக்கின்றேன்..

ப்ரியங்களுடன்
ஜாக்கிசேகர்

என்னை பற்றி ஒரு சிறு அறிமுகமும், நன்றிகளும்....

தமிழ்மணம் நட்சத்திர பதிவராக என்னை தேர்ந்து எடுத்து இருக்கின்றது,என்னை பற்றி தெரியாதவர்களுக்கு ,
என்னை பற்றிய ஒரு சிறிய அறிமுகம்....

பெயர்... ஜாக்கிசேகர்.... இயற்பெயர்/வ. தனசேகரன் ...வயது 34
தொழில்..கேமராமேன்,போட்டோகிராபர்...
கடந்த 4 வருடங்களாக சென்னை இந்துஸ்தான் கல்லூரியில் எலக்ட்ரானிக் மீடியா, விஷுவல் கம்யூனிகேஷன் மாணவர்களுக்கு “வீடியோகிராபி டெக்னிக்ல் இன்ஸ்டெக்டராக” பணி புரிந்தேன்... தற்போது பெரிய திரையில் கேமராமேன் ஆக முயற்ச்சி செய்து கொண்டு இருக்கின்றேன். எனக்கு சினிமா மீதான காதல் சிறு வயது முதலே. அதில் மிகப்பெரிய கேமராமேனாக , சாதிக்க வேண்டும் என்பதே எனது லட்சியம். பெரிய அளவிலான இலக்கிய வாசிப்புகள் கிடையாது.... சமுககோபங்களை எனக்கு என் அம்மா ஊட்டி வளர்த்தால்...சில மாதங்களுக்கு முன்தான் எனக்கு திருமணம் நடந்தது.. வசிப்பிடம் சென்னை. எனக்கு சொந்த ஊர் கடலூர்...இப்போது மதுரை காமராஜர் தொலைதூரக்கல்வி அஞ்சல் வழி மூலம் எம் ஏ மாஸ் கம்யூனிக்கேஷன் ஜெர்னலிசம் கடைசி வருடம் படித்து வருகின்றேன்....

நன்றிகள்....

கம்யூட்டரில் தமிழ் எழுத்துக்கள் எழுதி அதனை படிக்க முடியும் என்பதே எனக்கு சில வருடங்களுக்கு முன்புதான் தெரியும்... எனக்கு பதிவுலகை அறிமுகப்படுத்திய நண்பர் நித்யகுமாரனுக்கு என் நன்றிகள், அவர்தான் எனக்கு பிளாக்கரில் கணக்கு தொடங்கி கொடுத்தவர்...
பெரிய அளவிலான வசிகரிப்பான எழுத்து என்னுடையதில்லை என்பது எனக்கே நன்றாக தெரியும்... என்னை விட இலக்கிய வாசனையோடு எழுதுபவர்கள் பார்த்து பொறாமை கொண்டுள்ளேன் . இருப்பினும் என் எழுத்து மேல் நம்பி்கை வைத்து என்னை நட்சத்திர பதிவராக தேர்ந்து எடுத்த தேர்வு குழு உறுப்பினர்களுக்கும், தமிழ்மண நிர்வாகத்துக்கும் மீண்டும் என் இதயம் கனிந்த நன்றிகள்....

என் முதல் பதிவை இப்போது நினைத்து பார்க்கின்றேன் அதனை உங்களுக்காக கீழே கொடுக்கின்றேன்...

சமர்பணம்

கிராமத்தில் பிறந்த எனக்கு கனிப்பொறியும் ,வானவியலும் கற்றூ கொடுத்த ஏகலைவன், கற்றதும் பெற்றதுமில் நான் பெற்றதே அதிகம், ஏன் எதற்க்கு எப்படி படிக்கவில்லை எனில் இன்னும் நான் கோவில் கோவிலாக அலைந்து கொண்டுஇருப்பேன் ,ப்த்தாம் வகுப்பு படித்த நான் blog எழுத இவரே காரணம் என் எழுத்தையும் ஆசிர்வதிப்பார் என்ற நம்பிக்கையுடன் , அன்புடன் / ஜாக்கி சேகர்

மேலுள்ளதுதான் என் முதல் பதிவு அந்த பதிவை அடித்து முடிப்பதற்க்குள் மேல் மூச்சு கீழ் மூச்சி வாங்கிவிட்டது.... எப்படி தமிழில் அடித்து எழுத போகின்றோம் என்ற மலைப்பு என்னுள் எழுந்தது... கடவுள் கிருபையால் இப்போது தேவலாம்.... ஆனாலும் எழுத்து பிழைகள் இருக்கின்றன....பதிவை அலசி ஆராய்ந்து போடும் அளவுக்கு நேரமின்மையும் ஒரு காரணம்... எல்லாம் பொறுத்து என்னை ஆதரிக்கும் உங்களுக்கு என் நன்றிகள்

277 பதிவு இதுவரை எழுதி விட்டேன், தொடர்ந்து என் எழுத்துக்களை வாசித்து பி்ன்னுட்டம் இட்டு என்னை தொடர்ந்து என்னை உற்சாகபடுத்தும் முகம் தெரியாத அனைவருக்கும் என் நன்றிகள் பல...

பொதுவாய் பல விஷயங்களை பற்றி எழுதுவதுதான் எனக்கு பிடிக்கும், அப்படிம்தான் எனது தளம் இயங்கி வந்தது... ஆனால் உலக படங்கள் எழுத எழுத நிறைய பேர் என்னை உற்சாக படுத்துவதால் சினிமா பற்றிய விஷயங்கள் கொஞ்சம் தூக்கலாய் இருக்கும்...

எனக்கு தொடர்ந்து என் எழுத்துக்களை வாசித்து வரும் 146 பாலோயர்களுக்கும், உடனுக்கு உடன் பின்னுட்டம் இட்டு உற்சாகபடுத்தும், நையாண்டிநைனா,ஜமால்,கலையரசன்,சூரியன்,ஸ்டார்ஜன்,ஸ்ரீ,தன்டோரா,கேபிள் ,நித்யகுமாரன்,மங்களுர் சிவா,ஜெட்லி புதுவை சிவா, வால்பையன், விக்னேஷ்வரன்,கிரி,வந்தியதேவன், வழிப்போக்கன், ராஜா கேவிஆர்,கார்த்திகை பாண்டியன்,பிரிதீப் பாண்டியன்,ராஜராஜன், சரவணகுமரன், வண்ணத்து பூச்சி,பிஸ்கோத்து பயல், இந்த பதிவால் ,என் எழுத்தால் ஈர்க்கப்பட்டு எனக்கு நல்ல நட்பான பெண்மணி(பெயர் வேண்டாமே) போன்றவர்களை இந்த நேரத்தில் நினைவு கூறுகின்றேன்... சில பிரச்சனைகளின் போது ஒரு மூத்த பதிவராய் எனக்கு அட்வைஸ் செய்த லக்கி லுக்குக்கும் இந்த நேரத்தில் நான் நன்றி சொல்கின்றேன்...இதில் பலர் தளங்களுக்கு நான் சென்று வாசித்தது கூட இல்லை....இவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல... இது போன்ற நண்பர்களால்தான்,அவர்கள் கொடுக்கும் உற்சாகத்தால்தான், நான் தூங்கும் நேரத்தை குறைத்து கண்களில் தூக்கத்தை மிச்சம் வைத்து எழுதி கொண்டு இருக்கின்றேன்....

மீண்டும் உங்கள் எல்லோருக்கும் என் இதயங்கனிந்த நன்றிகள் வரும் பத்தாம் தேதி வரை தமிழ்மண முகப்பில் சந்திக்கின்றேன்....

அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....


அனைத்து பதிவர்களும் என் திருமணத்திற்க்கு் வந்து ஆசிர்வதிக்க வேண்டுகிறேன்....


அன்பார்ந்த பதிவர்களே வணக்கம் .


வரும் ஞாயிறு(19/10/08)அன்று கடலுரில் கூத்தப்பபாக்கத்தில் முருகாலயா திருமண மண்டபத்தில் எனது திருமணம் நடக்க இருக்கிறது . அனைத்து வலைபதிவர்களும் இதையே அழைப்பாக ஏற்று நேரில் வந்து வாழ்துத்த வேண்டுகிறேன் .

சென்னையில் ஏதாவது வரவேற்ப்பு வைக்கலாம் என்றால் சென்னையில் விலைகள் கேட்ட போது எனக்கு மயக்கமே வந்து விட்டது போங்கள். அதனால் (18/10/08) சனிக்கிழமைகடலூரில் அதே முருகாலயா மண்டபத்தில் வரவேற்ப்பும் வைத்து இருக்கி்றேன்.


இவ்வளவு லேட்டாக சொல்வதால் என்னை தவறாக என்ன வேண்டாம். வீடு இப்போதுதான் மாற்றினேன். அதனால் வலை இயக்கம் இல்லாமல் போய்விட்டது.

உங்கள் ஆசிர்வாதங்களை எதிர்பார்த்து காத்து இருக்கும்



ஜாக்கிசேகர்

எனது கைபேசி 9840229629

கற்றது தமிழ் ராமின் அடுத்த பதிவு


கடந்து போனவைகள் தொடரும

என்ற தலைப்பில் தான் பால்யகால நினைவுகளை நம் பதிவர்களுடன் பகிர்ந்து கொண்டு இருக்கிறார்.. பதிவை படித்து விட்டு அவருக்கு பின்னுட்டம் இடுங்கள் . அவர் நிறைய எழுத வேண்டும் என்று அன்பு கட்டளையிடுங்கள்


அன்புடன்/ ஜாக்கிசேகர்

கற்றது தமி்ழ் ராமின் புதிய வலைப்பதிவு


நேற்று தான் ஒரு சுபயோக சுப நேரத்தில் திரு ராம் அவர்கள் புதிய வலைபதிவை துவக்கினார் . நான் நம் சக வலைபதிவர் வாயிலாக அவரை வரவேற்க்கிறேன் அவரது எழுத்தை சுவைக்க விரும்புவோர் கீழுள்ள வலை தளத்தை தொடர்பு கொள்ளவும்

http://directorram.blogspot.com/



அன்புடன் / ஜாக்கிசேகர்

ஏப்ரல் மாத தமிழ் புத்தாண்டிற்க்கு வாழ்த்தி விடை கொடுப்போம்


தமிழர்கள் இனி புத்தாண்டினை தை மாதம் கொண்டாட வேண்டியதுதான் அப்படி பார்த்தால் இதுதான் நமது ஏப்ரல் மாத கடைசி தமிழ் புத்தாண்டு , எனவே சந்தோஷமாக விடை கொடுப்போம்




_______________________________________________________________________________________
அன்புடன்- நிழற்படம் ,கருத்து . ஜாக்கி சேகர்
_________
______________________________________________________________________________

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner