இரவு உணவுக்கு மயிலையில் உள்ள ஒட்டலுக்கு சென்றோம்... யாழினி வழக்கம் போல கண்ணில்பட்டதை எல்லாம் வாங்கி கொடுக்க வேண்டும் என்று கேட்டு நச்சரித்தாள்...
எதிர் மேசையில் மொத்தம் 12 பேர் சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்கள்.. அதில் இரண்டு பேர் பெண்கள்...
வாட்ஸ் அப்,ஹேப்பி நியூயர் ஷாருக்கின் சிக்ஸ் பேக்,அஜித்தின் லுக், பேஸ்புக்,எதிர்பார்த்த பேங்க் பேங்க் மொக்கையான கதை என்று இன்றைய இளைஞர்களின் வாழ்வை பேச்சில் பிரதிபலித்துக்கொண்டு இருந்தார்கள்...
பெண் நண்பர்களோடு கெட்டு கெதர் வந்து இருந்தாலும்.. அதே நட்பு கூட்டத்தில் யாரோ ஒருவனை இரண்டு பேரில் ஒருத்திக்கு பிடித்து இருக்க வேண்டும். கண்களில் மகிழ்ச்சி, அதை விட காதலில் சிக்கியவள் கண்களில் வெளிப்படும் போதையான அலட்டல்.... ஹீ இஸ் மை மேன் அப்படின்ற ஒரு அலட்டல் அவளின் கண்கள்,உடல்மொழி போன்றவற்றில் வெளிப்பட்டுக்கொண்டு இருந்ததது...
எங்கேயாவது என்னை போன்ற ஒரு ஆள் அவள் நண்பர்கள் கூட்டத்தில் அவள் வெளிப்படுத்தலை கண்டுபிடித்து தொலைய போகின்றான் என்ற கவலை அவ்வப்போது அவள் அலட்டலை குறைத்ததோடு அவள் இயல்புக்கு திரும்ப ரொம்பவே பிரயத்தனப்பட்டுக்கொண்டு இருந்தாள்.
மற்றொரு பெண் எல்லா பசங்களோடும் நின்றுக்கொண்டு செல்பி எடுத்துக்கொண்டு இருந்தது...
பில் செட்டிலிங் டைம்...
இரண்டு பேர் ஓஎம்ஆர் அருகில் இருக்கும் பிரமாண்ட வளாகத்தில் இன்ட்ர்வியூவிக்கு செல்ல போவதாக சொல்ல...
என் மனைவி அவர்கள் பேச்சில் ஆர்வமானாள்...
என் மனைவி மேனேஜராக இருக்கும் வளாகத்தில் உள்ள ஒரு கம்பெனியில் ஒப்பனிங் இருப்பதாக அவர்கள் பேசிக்கொள்ள.....
ஏங்க.. அந்த பசங்க ரெஸ்யூமை எனக்கு அனுப்ப சொல்லுங்க.. எங்க கம்பெனியில் ஓப்பனிங்க இருந்தா சொல்லலாம் இல்லை என்றாள்..
நான் அவர்களில் ஒருவனை அழைத்தேன்.... அவன் முதலில் ஏன் இந்த ஆள் அழைக்கின்றான்...? என்று கேள்விகுறி முகத்தில் அப்பிக்கொண்டு தயங்கி தயங்கி என் முன்னே வந்தான்....
நீ இன்டர்வியூக்கு போற இல்லை.. அதே வளாகத்தில் இருக்கும் பிரபல கம்பெனியில் அங்க இவுங்கதான் மேனேஜர்...நீ இன்ர்வியூவுக்கு போறபடி போ... உன் ரெசியூமை இவங்களுக்கு அனுப்பு... இவுங்க கம்பெனியில் ஓப்பனிங் இருந்தா கண்டிப்பா சொல்லுவாங்க.. என்றேன்..
தேங்யூ சார்...
ஆண்ட்டி ரொம்ப தேங்க்ஸ் ஆண்ட்டி..
ஆண்ட்டியா...? அப்ப உனக்கு வேலைக்கு ஹெல்ப் பண்ணமாட்டாயா? என்று கலாய்த்தேன்..
சாரிக்கா.... என்று சொல்லி விட்டு மெயில் ஐடி வாங்கி கொண்டு வேலை தேடும் பையன் சென்று விட்டான்..
பில் செட்டில் செய்து பேரர் வரும் வரை வெளியே அரட்டை அடித்துக்கொண்டு இருந்தார்கள்...
அதில் இரண்டு பேர் உள்ளே வந்தார்கள்...
மேம்...எங்க செட்டுல எல்லோருக்கும் வேலை கிடைச்சிடுச்சி... அவனக்குமட்டும்தான் இன்னும் வேலைகெடைக்கலை.. அவனும் டிரைப்பண்ணிக்கிட்டுதான் இருக்கான்...எங்க எல்லாருக்கும் ரொம்ப கஷ்டமா இருக்கு... பிளிஸ்மேம் அவனுக்கு எங்கயாவது ஓப்பனிங் இருந்தா சொல்லுங்க மேம் என்று கெஞ்சினார்கள்...
என் வாழ்வில், என் முன்னேற்றத்தில் நண்பர்களின் பங்கு இன்றியமையாதது... அவர்களின் தூண்டுதலாலே வளர்ச்சியடைந்தேன்....
பாருங்கள்... தன் நண்பனு வேலைவேண்டி கெஞ்சிக்கொண்டு இருக்கும் இரண்டு இளைஞர்களை பார்க்கையில் எனக்கு பெருமையாக இருந்தது..
நல்ல நண்பர்கள் அமைந்தவர்கள் பாக்கியசாலிகள்...
அவர்கள் சென்றஉடன் தளபதி படத்தில் வரும்... கீழுள்ள வரிகளும் என் நண்பர்களும் நினைவில் வந்தார்கள் என்பதே உண்மை.
======
பந்தம் என்ன சொந்தம் என்ன போன என்ன வந்த என்ன
உறவுக்கெல்லாம் கவலைப்பட்ட ஜென்மம் நானில்ல
பாசம் வைக்க நேசம் வைக்க தோழன் உண்டு வாழவைக்க
அவனை தவிர உறவுக்காரன் யாரும் இங்கில்லே
உள்ளமட்டும் நானே உசுரகூட தானே
என் நண்பன் கேட்டா வாங்கிக்கன்னு சொல்லுவேன்
என் நண்பன் போட்ட சோறு நிதமும் தின்னேன் பாரு
நட்பை கூட கற்பை போல எண்ணுவேன்
சோகம் விட்டு சொர்க்கம் தொட்டு ராகமிட்டு தாளமிட்டு பாட்டு பாடும் வானம்பாடி நாம் தான்
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
14/10/2014
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...