திகில் படங்கள் எனக்கு பொதுவாய் பிடிப்பதில்லை... ஒரு காலத்தில் அது தான் ஆங்கில படம் என்று நினைத்துக்கொண்ட இருந்த காலங்கள் அது... மென்மையான கதைகள் பார்க்காத அல்லது புரியாத காரணத்தால் இது போலான திகில் படங்களை பார்த்து தொலைத்தது வேற விஷயம்... ஆனால் இதற்க்கான ரசிகர் வட்டம் எப்போதும் உண்டு....இன்னும் இது போல் படங்களை புல் போதையில் ரசித்து மகி்ழும் software நண்பர்கள் வட்டத்தையும் நான் அறிந்து இருக்கின்றேன்...சில நேரங்களில் சில நண்பர்களிடம் இருந்து சில அழைப்புகளை கேட்டு இருக்கின்றேன்... jackie tell me any good horror movie... அது போலான நேரங்களில் நிறைய படங்கள் சொல்லி இருக்கின்றேன்.. இருப்பினும் அந்த படங்களை எழுதியது இல்லை.... சரி இனி அது போலான படங்களையும் எழுதுவோம்...Jeepers Creepers படத்தின் கதை இதுதான்...
Trish (Gina Philips) மற்றும் அவள் தம்பி...Darry Jenner ( Justin Long) இருவரும் கல்லூரியில் இருந்து நார்த் பிளோரிடாவில் இருக்கும் வீட்டுக்கு பழைய இம்பாலா காரில் பயணிக்கின்றார்கள்...ஒரு இடத்தை கடக்கும் போது ஒரு பழைய சர்ச் அருகில் ஒரு ஓல்டு டிரக்கில் இருந்து ஒருவன் ஒரு பெரிய பைப்பில் நிறைய பிணங்களை போட்டுக்கொண்டு இருப்பதை இருவரும் பார்க்கின்றனர்.. அது என்ன வென்று பார்க்கும் ஆவலில்அந்த சர்ச்சிக்கு அடியில் இருக்கும் பாதாள அறையில் சென்று பார்க்கும் போது பல பினங்களை பார்க்கின்றான்...600க்கு மேற்பட்ட கொலைகள்... அவர்கள் உடம்பில் இருக்கும் உறுப்புகளை எடுத்து தையல் போட்டு வைக்கபட்டுள்ளது.... அதற்க்க காரணம்... அந்த டிரக் ஓட்டும் மனிதன் ஒரு பறக்கும் உயிரினம்....அந்த உயிரிணம் 23 வருடங்களுக்கு ஒரு முறை வந்து பயந்தவர்களை சாகடித்து அவர்கள் உடம்பில் உள்ள உறுப்புகளை எடுத்து தன்னை உயிர்பித்து கொள்ளுமாம்... அந்த மனிதனை போன்று இருக்கும் விகாரமான அந்த பறக்கும் உயிரினம் ....டேரியின் மீது கண் வைக்கின்றது அவன் பிழைத்தானா...? அவள் அக்கா டிரிஷ் என்ன செய்து கொண்டு இருந்தாள்... அதற்க்கு தீர்வு என்ன? வழக்கம் போல் வெண்திரையில் பார்க்கவும்.. படத்தின் சுவாரஸ்யங்களில் சில...... ஸ்பீல்பெர்க் இயக்கிய டுயல் படத்தை போலவே கார் மற்றும் டிரக் சேசிங் இந்த படத்தில் உண்டு அது பயத்தையும் உண்டாக்கும்....
அந்த country side road shots photography super வேறு என்ன சொல்ல படத்தை பார்த்து ரசியுங்கள்..
எல்லா திகில் படங்களிலும் சுமையை தாங்கும் திடுக்கிடும் சவுண்டு இந்த படத்திலும் பெரும் உதவி செய்து இருக்கின்றது...
இதன் பிறகு இந்த படத்தின் இன்னும் இரண்டு பாகங்கள் வந்து விட்டன.. இது முதல் பாகம்... படத்தின் டிரைலர்....
படக்குழுவினர் விபரம்... Directed by Victor Salva Produced by Francis Ford Coppola Tom Luse Barry Opper Written by Victor Salva Starring Gina Philips Justin Long Jonathan Breck Patricia Belcher Brandon Smith and Eileen Brennan Music by Bennett Salvay Cinematography Don E. FauntLeRoy Editing by Ed Marx Studio American Zoetrope Distributed by United Artists Release date(s) August 31, 2001 Running time 91 mins Country United States of America Language English Budget $2,109,568 Gross revenue $59,217,789 அன்புடன் ஜாக்கிசேகர்
(உங்களுக்கு மேலே நான் எழுதிய விஷயங்கள் நிறைவானதாக இருந்தால் ஒரு நிமிடம் எனக்காக செலவு செய்து வாக்களித்து விட்டு செல்லுங்கள்....வாக்குகள் மற்றும் பின்னுட்டமே கண் விழித்து டைப்பும் என்னை உற்சாகபடுத்தும்)
குறிப்பு...
நடுவில் ஆங்கில சொல்லாடல்கள் என் ஆங்கில புலமையை வளர்த்துக்கொள்ள என்பதை பணிவுடன் தெரிவித்து கொள்கின்றேன்... ஒரே கல்லுல ரெண்டு மாங்கா....
எழுத்தாளர் பாலகுமாரன் சொல்லி இருப்பார்... காதல் என்பது பரஸ்பரம் விட்டு கொடுப்பது... சில சமயம் காதலையும்னு... சொல்லி இருப்பார்... என் மனைவியை காதலிக்கும் காலங்களில் நான் இப்படித்தான் சொன்னேன்...
நான் பத்தாவதுதான் படிச்சி இருக்கேன்...நான்வெஜ் நல்லா சாப்பிடுவேன்... சோ உனக்கு டை கட்டின மாப்பிள்ளை வீட்ல பார்த்தா.. நீ தாரளமா கல்யாணம் பண்ணிக்கோ.... எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று சொல்லி... அதன் பிறகு ஒரு வாரத்துக்கு என் மனைவி பேசாமல் இருந்துவிட்டு சமாதானபடுத்தி பேசும் போது, பேட் வேர்ட்சில் என் மனைவியிடம் நான் அதிகம் வாங்கி கட்டிக்கொண்டது வேறு விஷயம்....
வருஷம் 16 படம் பார்த்து விட்டு பொங்கலு பொங்கலு சாங்கில் நடிகை குஷ்பு வெள்ளை மேல்சட்டையும், வெள்ளை பாவடையும் போட்டுக்கு கொண்டு பூ பூக்கும் மாசம் தைமாசம் பாட்டுக்கு ஆடிய போது மனதை பறி கொடுத்து, சில வாரங்களுக்கு என் கற்பனையில் என் மனைவியாக வாழ்ந்தவர்.. என் பங்களா, இரண்டு குழந்தைகள், நான் குஷ்பு..... என்று சந்தோஷ கற்பனை வாழ்க்கை... இரவில் சில நேரங்களில் நான் யோசிக்கும் கற்பனை வாழ்க்கை செம சுவாரஸ்யம்....
குஷ்புவுக்கு பிறகு என் மனைவி கற்பனை கதாபாத்திரத்துக்கு பவித்திரன் இயக்கிய வசந்தகால பறவை படத்தின் நாயகி ஷாலி வெகுகாலம் இருந்தார்...அந்த படத்தை 5 தடவை பார்த்தேன்... இன்று செம காமெடியாக இருக்கின்றது...குஷ்புவிற்க்கு பிறகு வெகு காலம் அந்த இடத்தை ஆக்கிரமித்தவர் நடிகை ஷாலிதான்.... எனக்கு இருந்த தாழ்வு மணப்பான்மை காரணமாக எனக்கு காதல் என்பது இல்லை என்று நினைத்து வாழ்ந்த காலங்களில் எனக்கு ரொம்பவே உற்சாகத்தை கொடுத்து பல தமிழ் நடிகைகள்தான்... அதன் பிறகு பல பெண்கள் உடன் காதல் ஏற்பட்டது...சிலவற்றை நானே தவிர்த்தேன்... காரணம் நான் செட்டில் ஆகாமல் இருந்ததும்..தங்கைகள் திருமணமும்.. குடும்ப பொறுப்புகளும்....
தமிழ் நாட்டை பொறுத்தவரை... ஒரு பெண்ணை உருகி உருகி காதலித்து அந்த பெண் வீ்ட்டில் ஒத்துக்கொள்ளாமல் பிரச்சனை என்று வரும் போது, அந்த பெண்ணும், வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையை கல்யாணம் செய்து கொள்ளும் போது... திருமணத்துக்கு போய் வாழ்த்து சொல்லி விட்டு வரும் பக்குவம் நம் தமிழ்நாட்டில் எத்தனை பேருக்கு இருக்கின்றது...???? ஒன்று அவளை வெட்டி போடுவோம்... அல்லது அவளை உருகி உருகி சொன்ன நண்பர்களிடமே அவனை தேவிடியா என்று உருவகபடுத்துவோம்....
இப்போது கூட தந்தி பேப்பரில் பார்த்து இருக்கலாம்... ஒருதலைகாதலுக்காக நாகர்கோவில் பக்கத்தில் தன்னை காதலிக்கவில்லை என்ற காரணத்துக்காக அந்த அழகு பெண்ணை கண்டந்துண்டமாக வெட்டி பொட்டு இருக்கின்றான் ஒரு வெறியன்...
காதல்என்பது ரொம்பவும் உயர்வான விஷயம்தான் பட் அது மட்டுமே வாழ்க்கை இல்லை....
பட் முதல் காதல் ... முதல் முத்தம்... இரண்டுமே சான்சே இல்லாத விஷயம்...உன்னை எனக்கு பிடிச்சி இருக்கு என்று ஒரு பெண் சொல்லும் போது கிடைக்கும் சந்தோஷம் இருக்குதே... அது போல சந்தோஷம் உலகத்தில் எதுவுமே இல்லைன்னு சொல்லுவேன்... அந்த ஒரு வார்த்தைக்காக நாயா பேயா கூட அலையலாம்.... எதையும் துணிந்து எதிர்க்கலாம்.. உலகத்துல அந்தனை ஆப்பிளைங்க இருக்கும் போது நம்மகிட்ட வந்து சொல்லும் போது ரத்தம் ஜிவ்னு ஏறும் பாருங்க... சன்சே இல்லை அதே பொண்ணுகிட்ட முத்தம் ரத்த குழாயே வெடிச்சிடும்.... காதலன் படத்துல ஒரு டயலாக் வரும்.. ஒரு பொண்ணு ஒன்னை லவ் பண்ணறான்னா? உன்கிட்ட ஏதோ ஒரு நல்ல விஷயம் இருக்குன்னு அர்த்தம்.... அது 90 பர்சென்ட் உண்மைதான்...
இப்படி காதலை பத்தி சொல்லிகிட்டே போகலாம்... கவுதம் இந்த படத்துல ஒரு சாதாரண காதலை ரொம்ப அழகா கவிதையா சொல்லி இருக்கின்றார்.... விண்ணைதாண்டி விருவாயா படத்தின் கதை இதுதான்...
கார்த்திக் (சிம்பு) இன்ஜினியரிங் முடித்து விட்டு சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று வாய்பு தேடி அலைபவர்... அவர் இருக்கும் வீட்டின் ஹவுஸ் ஒனர் மாடியில் குடி இருக்கின்றார்... ஹவுஸ் ஒனர் மகள் ஜெசி( திரிஷா...) கிருஸ்டியன்... அவளை பார்த்தவுடனே காதல் வந்து விடுகின்றது...
1. வேலை வெட்டி இல்லாமல் இருக்கும் கார்திக் 2. அசிஸ்டென்ட் டைரக்டராக வாய்பபு தேடி அலையும் கார்த்திக்... 3.கார்த்திக்கை விட ஜெசிக்கு1 வயசு அதிகம்... 4.ஜெசியோட அப்பா வெட்டி பொட்டாலும் பொண்ணை இந்துவுக்கு அதாவது கார்த்திக்கு கட்டி கொடுக்கமாட்டார்... 5.ஜெசி குடும்பத்தை விட்டு கொடுக்க யோசிக்கும் பெண்... அப்படி விட்டு கொடுத்தாலும் சூழ்நிலை புரிஞ்சிக்காத பெண்.. 6.சினிமாவை ரசிப்பவனுக்கு...சினிமாவை வெறுக்கும் பெண்காதலி 7.உலகத்துல எவ்வளோவோ பொண்ணுங்க இருக்கறப்ப ஜெசியை மட்டும் ஏன் பிடிக்கனும்????? இவ்வளவு பிரச்சனைகள் இருக்கும் போது இவுங்க ரெண்டு பேர் காதல் நிறைவேறியாதா? என்பதை சென்னையில் அராத்தல் கல்லூரி மாணவர்கள் படம் பார்க்க வராத சமயமாக பார்த்து படத்தை பார்த்து ரசியுங்கள்... படத்தின் சுவாரஸ்யங்களில் சில....
படத்தின் விளம்பரஙக்ளிலேயே சொல்லி விட்டார்கள்.... இது ஒரு காதல்கதை... இதுவரை பார்த்த பார்த்து சலித்த காதலை மிக இளைமையாக கவுதம் தனது ஸ்டைலில் சொல்லி இருக்கின்றார்... இந்த படத்தை காதலித்தவர்களும் காதலிக்கபடுபவர்களும் பார்த்தால் உடம்பில் ஒரு இளமை துள்ளலை உணரலாம்....
தொட்டி ஜெயா படத்துக்கு பிறகு நடிகர் சிம்புவை நான் மிகவும் ரசித்த படம் இந்த படம்தான்... சான்சே இல்லை என்ன மேனாரிசம்... கண்களில் ஒரு காதல் குறு குறுப்பை படம் முழுவதும் தெளிப்பதில் ஆகட்டும்.... சான்சே இல்லை... இதே போல் ஒரு ஆறு படம் நடித்தால் சிம்புதான் தமிழ் நாட்டின் அடுத்த காதல் இளவரசன் என்பதை எழுதிதருகின்றேன்......
சிம்பு ரொம்ப ஸ்டைலாக இருக்கின்றார்... உங்க அப்பன் கிட்ட போய் சொல்ல போறேன்னு சொல்லற இல்லை போய் சொல்லு... என்று சொல்வதாக இருக்கட்டும்....
தங்கை ரூமில் இருக்கும் திரிஷாவை பார்த்து விட்டு அசடு வழிய எதாவது கடலை போட வேண்டுமே என்று கேரளா கொழ புட்டு கடலை... நாம் இயல்பாக அநேக இடங்களில் அனு தினமும் பாத்த கடலைதான்...
திரிஷா எனக்கு ரொம்ப பிடித்த நடிகை.... புகழ் உச்சிக்கு போகும் முன்..யுகிசேது நடத்திய நையாண்டிதர்பார் நிகழ்ச்சிக்கு தனது தாயாருடன் வந்த போதே எனக்கு ரொம்ப பிடித்து போனது.. அந்த புரோகிராமின் மல்டி கேமரா செட்டப்பில் கேமரா அசிஸ்டென்டாக இருந்தேன்.... திரிஷா காட்டன் சாரி கட்டி சான்சே இல்லை...(இந்த வரி டைப் அடிக்கும் போதே நைட் பூவா கட் ஆனாலும் அகும் இருந்தாலும் சோறு கிடைக்காட்டியும் மனசுல பட்ட உண்மையை உறக்க சொல்லுவான் இந்த ஜாக்கி...) ஒரு பாடல் காட்சியில் நைட்டியில் ஒரு கட் ஷாட்டில் பார்க்கும் போது பக்கத்து பிளாட்டில் இருந்து வந்து....
“அங்கிள் அப்பா ஹின்டு பேப்பர் வாங்கி வர சொன்னார்” என்று கேட்கும் பக்கத்து விட்டு சிறுமி போலவே இருக்கின்றார்..... ஆனால் படத்தில் ரொம்ப ஒல்லியாக தெரிகின்றார்..காதல் காட்சிகளில் இளமையாக இருக்கின்றார்... சதை போடவேண்டும்.... முக்கியமான இடங்களில் எல்லாம்..... வேண்டாம்....சென்சார்...
நேத்து ரயில்ல கிஸ் அடிச்சப்ப எந்த மறுப்பும் சொல்லலையே ஏன்? என்று சிம்பு கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லமல் திரிஷா தடுமாறும் இடம் சிறப்பு..
தமிழ் திரைஉலகில் ஒரு பிரபல கதாநாயகி படம் நெடுக்க... முத்தம் கொடுக்கும் உதட்டை பற்றி கவலை படாமல் நடித்து இருப்பது தமிழ் சினிமாவுக்கு புதுசு.....
படத்தின் இளமை துள்ளலுக்கு பெரிய காரணம் மனோஜ்பரமஹம்சா ஒளிப்பதிவு.... மிக முக்கியமாக கேரளா நியூயார்க் அவுட்டோர் ஷாட்ஸ்...ஹோசான சாங் அந்த பேக்ரவுண்டு கட்டிடங்களும் சான்சே இல்லை... ஸ்டெடி கேம் அதிகம் யூஸ் செய்து இருக்கின்றார்கள்... அதே போல் நிறைய குட்டி குட்டி ஷாட்டுகள்.. காஸ்ட்யூம் செஞ்சு என நிறைய மெனெக்கெட்டு இருக்கின்றார்கள்...
திரிஷா கழுத்தில் இருக்கும் சிலுவை செயினை கூட மிக அழகாக கட்டி இருக்கின்றது.. மனோஜ் ஒளிப்பதிவு....ஆனால் திரிஷா உடன் தனிமையில் இருக்கும் சிம்பு கட்டி பிடித்தபடி இரண்டு நிமிடம் இருக்கும் போது சிம்புவின் கை திரிஷா உடலில் விளையாடும் காட்சிகளில் சில் அவுட்டில் தெரிகின்றது...கொஞ்சம் பிரைட் ஏத்தி இருக்கலாம்.....
படத்தை கவுதம் எப்போதும் போல நரேட்டிவ் ஸ்டைலில் கதை சொல்லி இருக்கின்றார்... அந்த உத்தியல் இருக்கும் ஒரே பிளஸ் நீங்கள் கதாபாத்திரத்துடன் ரொம்ப ஈசியாக ஒட்டிக்கொள்வீர்கள்... ரயிலில் திரிஷாவிடம் முதல் முத்தம் கொடுக்கும் பெறும்... இடங்களில் இருவரின் உடல் மொழியை மிக அழகாக படம் ஆக்கி இருக்கின்றார்...இயக்குனர் கவுதம்... காதலித்த திரிஷா சிம்புவை வெறுக்க சொல்லும் அற்பகாரணங்கள் ஏற்புடையதுஅல்ல என்றாலும்... இப்போது உள்ள பல பெண்கள் அப்படித்தான் இருக்கின்றார்கள்... என் கல்லூரியில் அப்படி பல பெண்களை நான் பார்த்து இருக்கின்றேன்... டிபிகல் சென்னை பெண்ணின் மனநிலையை மிக அழகாக சொல்லி இருக்கின்றார் இயக்குனர்.....
படத்தின் கிளைமாக்ஸ் யாரும் எதிர்பாராத ஒரு டுவி்ஸ்ட்தான் என்றாலும் இந்த படத்தின் கிளைமாக்ஸ்... dot the i என்ற படத்தின் கிளைமாக்ஸ் உத்தி போலவே எனக்கு தோன்று கின்றது....படத்தில் சிம்பு கதை சொல்ல போகும் இடத்தில் இந்த கதையில தலையை நடிக்கவச்ச நல்லா இருக்கும்... என்று சொல்வதும்... ஒரு ஆடிட்டோரியம் சண்டை காட்சியின் போது ஒருவன் ஷட்டரை பூட்ட போகும் போது... அந்த சீன் எல்லாம் இங்கவேனாம்டி என்று நக்கல் விட்டு இருக்கின்றார்கள்...
ரொம்ப நாட்களுக்கு பிறகு கிட்டியையும் பாபு அண்டனியையும் பார்க்க முடிகின்றது...பூவிழி வாசலிலே தாடி வில்லன்.. அப்படியும் தெரியலையா? சூரியன் படத்துல அபிலஷா கடற்கரையில ஜட்டி, பிராவோட கடற்கரையில ஓடவிட்டு கொலை பண்ண ஓடுவாரே அவர்தான் இந்த படத்துல திரிஷா வோட அப்பா....
படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு ரகுமானின் பாடல்கள் படத்துக்கு ஒரு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது நிஜம்.... தாமரையின் வரிகள் அற்புதம்.... முக்கியமாக அமெரிக்க வீதியில் உதட்டு முத்தம் திரிஷாவுக்கு கொடுத்த பிறகு அன்பில் அவன் சேர்த்த இதை மனிதரே வெறுக்காதீர்கள்... என்ற வரியும் உன்னைதான்டி எதையும் என்னால் யோசனை செய்ய முடியாதே என்ற வரிகள் ஒரு சோத்துக்கு பதம்........
டைட்டிலில் ரகுமான் பேர் போடும் போதும்.... மன்னிப்பாய பாடலில் ரகுமான் குரல் வரும் போதும் தியேட்டரி் விசில் சத்தம் காதை கிழிக்கின்றது... சான்சே இல்லை ரகுமான் சார்....
படத்தின் காதல் காட்சிகளின் போது தொடர்ந்து வரும் பின்னனி இசை கிளாசிக்....ஒரு வேளை இந்த இசைதான் இளமை துள்ளலோ... உடைகள் நளினி ஸ்ரீராம்.. திரிஷாவின் உடை தேர்ந்து எடுப்புகளில் அதிக கவனம்... முக்கியமாக திரிஷா பாடல் காட்சியில் குளித்து விட்டு கரையேறும் போது மலையாள முன்டு போலான துணியை போர்த்தி வருவது அழகு...அதே போல் அந்த வெள்ளை கருப்பு சாரியும்... சிம்புவை ஹோட்டலில் மீட் பண்ண வரும் போது திரிஷாவின் டபுள் கலர் ஆரஞ் சாரி சூப்பர்....
எடிட்டர்....ஆண்டனி கத்தரி இந்த முறையும் ஷார்ப்...
போகிற போக்கில் சிம்பு நான் அசிஸ்டென்ட் டைரக்டரா, கவுதம் மேனன்கிட்ட சேர போறேன் என்று சொல்ல...எது, தமிழ் படத்துல அதிக இங்கிலிஷ் டயலாக் வைப்பாரே....? அவரு ரெண்டு வருஷத்துக்கு படமெடுப்பாரே என்று சொல்லி இயக்குனரே வாரிக்கொள்வது ரசிக்கும் டயலாக்...
படத்தில் காக்க காக்க கேமராமேன் கேரக்டரி்ல் நடித்து இருக்கும் நண்பர் பெயர் தெரியவில்ல்லை ஆனால் அவரின் வாய்ஸ் அந்த கேரக்டருக்கு பலம் என்பேன்.... அதே போல் திரிஷா நடக்கும் நடை சரியில்லை அது லாங் ஷாட்டில் பச்சை சுடிதார் அணிந்து நடக்கும் போது நன்றாக தெரிகின்றது... படத்தில் சிம்பு ஒரு டயலாக் சொல்லுவார்... அதில் திரிஷா நடையை ugly walk என்று சொல்லுவார்... நான் நினைச்சதை டயலாக்காகவும் வைத்து இருந்தார் இயக்குனர்...
கேஎஸ்ரவிக்குமார்.. டைரக்கடராகவே நடித்து இருக்கின்றார்.... அவர் எப்படி செட்டில் இருப்பாரோ... அதே போல் காட்சி படுத்திய விதம் அருமை.... படத்தின் என்ட் டைட்டில் சான்சே இல்லை... அது கொஞ்சம் உலகதரம்தான்....
அதே போல கவுதம் மேனன் அமெரிக்கா போய் படம் எடுக்கற சமாச்சாரம் எனக்கு தெரிஞ்சு போச்சி... இவரை லவ் பண்ண பொண்ணு அமெரிக்காவுல செட்டில் ஆயி இருக்கனும் .. பாரு நான் எந்தளவுக்கு வளர்ந்து இருக்கறேன் காட்டறதுக்கு கூட இருக்கலாம்... டோன்ட்பி சிரியஸ் சும்மா தமாசு....
படத்தின் சப்ஜெக்டே இருவர் காதல் என்பதால் அது அவர்களை சுற்றியே வருகின்றது... சிலருக்கு அதுவே போராக தெரிகின்றது.... கொரியன் பிலிம் மை சாசி கேர்ள் படத்தை நாம் கொண்டாடுவோம்.... காரணம் அது உலக சினிமா... ஆனால் அது போல் ஒரு படம் எடுத்தால் இரண்டாம்பாதி ரொம்ப போர் என்று சொல்லிவிடுவோம்.... ஆனால் இந்த படம் ஒரு இளமை துள்ளலானபடம் என்பதில் ஐயம் இல்லை.....அதனால்தான் இந்த படத்தை பார்த்தே தீர வேண்டிய படங்களின் லி்ஸ்ட்டில் சேர்த்து இருக்கின்றேன்...
ஒருவேளை எனக்கு பிடித்து உங்களுக்கு பிடிக்காமலும் போகலாம்... படம் பாத்து விட்டு பிடிக்கவில்லை என்றால் என்னை திட்ட வேண்டாம்....
படத்துக்கு ஏ சர்டிபிகேட் கொடுத்த பிறகு குழந்தைகளை அழைத்து போய் விட்டு நெளிய வைக்கின்றது என்று சொல்ல வேண்டாம்....
தியேட்டர் டிஸ்க்கி....
இந்த படத்தை ஓஎம்ஆர் ரோட்டுல இருக்கற அரவிந் எனும் படாவதி, தியேட்டர்ல இந்த படத்தை பார்த்து தொலைச்சேன்... படம் பார்க்க வந்த எல்லாரும் அந்த ரோட்ல இருக்கற காலேஜ்ல இருந்து கிளாசை கட்டு அடிச்சிட்டு வந்த பசங்க.... எல்லாத்துக்கும் கத்தி உயிரை எடுத்துட்டானுங்க...
சவுண்டும் அதிகம் இல்லை... இத்தனைக்கும் அந்த தியேட்டர் டிடிஎஸ்....சரி அதையாவது சகிச்சிக்கலாம்னு பார்த்தா? கியூப்ல ஓடற அந்த படத்தை புரஜெக்டரிலேயே ஓட்டலாம் அவ்வளவு டல்....ரியல் இமேஜ்காரர்கள் கவனிப்பார்களாக.... அதிக கத்தி உயிரை எடுத்த காரணத்தால.. பால்கனி டிக்கெட் எடுத்து விட்டு தலை தெறிக்க தரை டிக்கெட்டுக்கு வந்து ஸ்கிரினுக்கு பக்கத்துல வந்து உட்கார்ந்து பார்த்து தொலைச்சேன்.. ஏதோ ஜாலியா என்ஜாய் பண்ண கத்தலாம் விசில் அடிக்கலாம் அதுக்காக திரிஷா நடந்து வரும் போது கூடவா?...கத்தி ஆர்பாட்டம் பண்ணனும்.....
அதே போல அன்பில் அவள் சாங் போடும் போதே படம் முடிந்து விட்டதாக சில அவசர குடுக்கைகள் எழுந்து போய் கதவை பறக்க திறந்து வைத்து விட்டு சென்று விட்டார்கள்....
இது ஏ கிளாஸ் படமாக மட்டுமே இருக்கும்....பி சி சான்ஸ் கொஞ்சம் கம்மிதான்..
படத்தின் டிரைலர் மற்றும் படக்குழவினர் விபரம்...
பைனல் டிஸ்க்கி.....
படத்தின் முதல் ஷோ பார்த்து விட்டு ஒரு அசிஸ்டென்ட் டைரக்டர் சார் ரிசல்ட் நல்லா இருக்காம்... நான் அடுத்து சங்கம் தியேட்டர் போய் பார்க்கிறேன்... என்று சொல்லும் போது சிம்பு....இவுங்க இப்படித்தான் சொல்லுவாங்க... திங்ககிழமைதான் ரிசல்ட் தெரியும் என்று சொல்வது சினிமாவின் நிதர்சன உண்மையை சொல்வது சிறப்பு....
தனது முதல் படத்தை இயக்கி திரிஷாவிடம் சிம்பு போட்டு காட்டி எதாவது தப்பா எடுத்து இருக்கேனா? என்று கேட்கும் போது... “அப்படி எல்லாம் இல்லை பில்குட் மூவியா இருக்கு” என்று திரிஷா சொல்லும் போது எனக்கு அது சரியாகவே பட்டது...உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை...
அன்புடன் ஜாக்கிசேகர் 098402 29629
(ஏன்டா மக்கா.. இவ்வளவு தூரம் சுவாரஸ்யமா படிச்சிங்களே.... ஒரு ஒட்டு போட்டா என்ன? கொறைஞ்சா போயிடுவிங்க....?)
தேவி தியேட்டர் எனக்கு ஒரு விதத்தில் ஆத்தாதான்... பல வருடங்களுக்கு முன் சில்வர் ஸ்டோலன் நடித்த கிளிப் ஆங்கர் படத்துக்கு பிளாக்கில் டிக்கெட் விற்று என் வயிற்று பசியை போக்கிய தியேட்டர்...சென்னையில் எந்த தியேட்டர் வந்தாலும், இருந்தாலும்... எனக்கு தேவி தியேட்டரை ரொம்பவும் பிடிக்கும்..
அப்போதெல்லாம்...காலை எழு மணிக்கு தேவி தியேட்டர் வளாகம் போய் கொஞ்ச நேரம் சுற்றிவிட்டு, எல்லீஸ் ரோட்டில் டீ சாப்பிட்டு விட்டு வருவேன்... தேவி தியேட்டரில் படம் பார்ப்பது என்பது ரொம்ப சந்தோஷமான விஷயம்....அதற்க்கு காரணம் ரொம்ப சிம்பிள்.... அந்த தியேட்டரின் பெரிய திரைதான் அந்த காதலுக்கு காரணம்... ஒரு குதிரை ஒடுவது என்பது என் எதிரில் ஓடுவது போல் மிக பிரமாண்டமாய் தெரியும்.. எனக்கு தெரிந்து தமிழ்நாட்டில் அது போன்ற பிரமாண்ட திரையை வேறு எங்கேயும் நான் பார்க்கவில்லை... அதன் பிறகு தியேட்டர் பராமரிப்பு காரணமாக அந்த தியேட்டர் பக்கமே போகவில்லை.... இப்போது தியேட்டர் பராமரித்து திறந்த காரணத்தால்....மைநேம் இஸ்கான் படத்துக்கு குடும்பத்தினருடன் போனேன்.... டிக்கெட் விலை 10,85,95தான்.... மேலே லாபியில மக்கள் இருக்கற போட்டோ நான் என் செல்போன்ல எடுத்தது.....கீழே தியேட்டர்காரங்க எடுத்தது
என்ன சத்தியம் தியேட்டரில் ஒன்னுக்கு போகும் இடங்களில் கூட டிவி வைத்து இருக்கின்றார்கள்... இங்கே இல்லை சத்தியம் தியேட்டரின் கூட்டத்துக்கு காரணம் பெரிய கார்பார்க் ஆனால் அது தேவி தியேட்டரில் இல்லை..... தேவி தியேட்டடரில் கார் பார்க்கிங்குக்கு ரிசர்வ் செய்ய வேண்டும் என்று சொல்லுகின்றார்கள்.. இது எனக்கே புது செய்தியாக இருக்கின்றது....இன்னும் கொஞ்ச நாளில் வாகன பெருக்கத்தால் பைக்குக்கும் பார்க்கிங் ரிசர்வ் பண்ண வேண்டும் என்று சொல்லி விடுவார்களோ-? என்று பயம் வயிற்ரற கலக்கியது... மிக முக்கியமாக சத்யம் தியேட்டரில் டிக்கெட் கிழித்து உள்ளே போகும் போதே குட்மார்னிங் வெல்கம் எல்லாம் சொல்லி அனுப்புவார்கள்... இங்கு அப்படி இல்லை... அப்படி சொல்லிதான் சர்விஸ் சூப்பர் என்ற நம்ப வைத்து கேண்டினில் செம ரேட் வைக்கின்றார்கள்... நடுத்தர வர்கம் சத்தியம் தியேட்டருக்கு பிள்ளைகுட்டிகளை அழைத்து போய்விட்டாள்... அவ்வளவுதான் உங்க பர்ஸ் பழுத்துடும் ஒரு பார்ப்கான் 80 ரூபாய்.... அதே போல்தான் தலை சுத்தி விழ வைக்கும் அளவுக்கு எல்லா திண்பண்டங்களுக்கான ரேட்டுகள்... இடைவேளைக்கு ஒரு புது 500 ரூபாய் நோட்டை சத்தியத்துல இறக்கி வச்சாதான் நீங்க நல்ல அப்பாவா, அம்மாவா பசங்க கண்ணுக்கு தெரிவிங்க... தேவி தியேட்டரில் இடைவேளையில் உணவு பொருட்கள் எல்லாம் நியாயமான ரேட்டுக்கு கிடைக்கின்றது... ஒரு வெஜ் பப்ஸ் 20 ரூபாய்தான்... அதே போல் இரண்டு தியேட்டர்லயும் கண்டிக்கதக்க விஷயம் இடைவேளைக்கு பிறகு படம் போட்டதை தெரிய படுத்த ஒரு சின்ன ரிங் கொடுப்பாங்க... இப்ப அது இல்லை காரணம் வேற ஒன்னும் இல்லை... படம் போட்டது தெரிஞ்சுதுன்னா...கேண்டின்ல வரிசைல நிக்கறவன் படம் பார்க்க ஓடி போயிடுவான் இல்லை-.... தேவி தியேட்டர் விலை பட்டியல்.....
நான் எல்லாம் வசதியும் செஞ்சு தருவேன்.... அதுல குறையே வைக்க மாட்டேன் ஆனா ஒரு ரூபாய் வடையை கேன்டின்ல 38 ரூபாய்க்கு கூட விப்பேன் அதை யாரும் கேட்க கூடாது....(எனக்கு தெரிஞ்சு அப்படி யாரும் கேட்டதா தெரியலை..) என்று சொல்வது சத்தியம் தியேட்டர்..... சின்ன குறைபாடுகள் இருந்தாலும் நியாயமான ரேட்டுக்கு கொடுப்பது.... தேவி தியேட்டர்.. இப்போது மட்டும் அல்ல டிக்கெட் ரேட்டை எல்லா தியேட்டரும் கண்ணா பின்னாவென உயர்த்திய போதும்... 50 ரூபாக்கு படம் காட்டிய தியேட்டர் அல்லவா????
பட் தேவி தியேட்டர் இப்போது உள்கட்டமைப்பில் அசத்தி கொண்டு இருக்கின்றது...... என்ன லேடிஸ் டாய்லட் 5தான் இருக்கின்றதாம்... தேவிபாரடைசில்....ஆயிரம் மக்களுக்கு மேல் வந்த போகும் இடத்தில் 5 லேடிஸ் டாய்லட் என்பது கொஞ்சம் குறைபாடுதான்...
என்ன டிக்கெட் ரேட் மற்றும் சகாய கேண்டின் விலைக்கு தேவிதியேட்டருக்கு கண்டிப்பாக போகலாம்... இந்த மெயின்டெனென்ஸ் அப்படியே பாலோ செய்தால் எந்த பிரச்சனையும் இருக்காது...தியேட்டரில் நைட் ஷோ படம் முடியயும் வரை ஏசியை நிறுத்த வில்லை தேவி தியேட்டர் நிர்வாகிகள் வாழ்க......
என் ரேஞ்சிக்கு தேவிதான் பெஸ்ட்... என் மனைவி ரேஞ்சிக்கு சத்தியம்தான்... என்ன செய்ய?
அஜித் அவருடைய கருத்தை சொன்னார்... அதை ரஜினி எழுந்து நின்று கைதட்டி ஆமோதித்தார்.....அஜித் சில வார்த்தைகளை சபையில் பேசிவிட்டார்.. அப்படி பேசி இருக்க கூடாதுதான்...அந்த சமாச்சாரம் இன்னமும் நீரு பூத்த நெருப்பாக புகைந்து கொண்டு இருக்கின்றது.... இது இலங்கையா? அல்லது கம்யுனிஸ்ட் சீனாவா...???சரி அதை எல்லாம் விட்டு தள்ளுங்கள்.. நமது நாடு ஜனநாயக நாட இல்லையா? அதை சொல்லுங்கள்... இதில் சாதி சாயம் வேறு பூசிக்கொண்டு இருப்பது சற்று கவலை அளிக்கின்றது.... ================== ஈழ போராட்டத்துக்கு முத்துக்குமாரை போல, தெலுங்கானவுக்காக ஒரு மாணவர் தீக்கிரையாகி உள்ளார்... அந்த மாணவனின் குடும்பத்தை யோசிக்கும் போது நெஞ்சு கணக்கின்றது... எவ்வளவு கடன் வாங்கி படிக்க வைத்தார்களோ? இறந்த மாணவனின் குடும்ப பொறுப்புகள் என்ன? என்ன? என்று தெரியவில்லை... சட்டென எடுத்த அந்த உணர்ச்சி மேலிட்ட முடிவால் எத்தனை பேர் கண்ணுக்கு தெரியாமல் பாதிக்கபட போகின்றார்கள் என்று தெரியவில்லை...
===============================
9/11ன் போது விமானம் மோதி நடந்த தீ விபத்தில் இருந்து தப்பிக்க,டுவின் டவரில் இருந்து குதித்து உயிர் விடடவர்களை நாம் டிவியில் பார்த்தோம்... அதே போல் பெங்களுரில் நேற்று நடந்தகார்ல்டன் டவர்ஸ் தீ விபத்தில் 5 வது மாடியில் இருந்து குதித்து உடல் சிதறி இறந்து போய் இருக்கி்ன்றார்கள்.... இறந்து போனவர்களுக்கு அஞ்சலி தெரிவித்துக்கொள்வோம்...
=================== தகவல் தொழில் நுட்ப பூங்கா அருகில் உள்ள எல்லா ஆந்திரா மேஸ்களில்லும் சொல்லி வைத்தது போல் 30 ரூபாய்க்கு கொடுத்த சாப்பாட்டை 40 ரூபாய்க்கு ஏற்றிவிட்டார்கள்... இன்னும் பெட்ரோல் விலை ஏறவேயில்லை அதற்குள் ஏற்றி விட்டார்கள்... சென்னை வேளச்செரி டிசிஎஸ் பக்க்த்து சந்தில் மொட்டை மாடியில் ஒரு ஆந்திரா மெஸ் இருக்கின்றது....மதிய நேரத்தில் கூட்டம் அல்லுகின்றது... பொதுவாக ஆந்திரா மெஸ் சேவல் பண்ணையாகதான் பார்த்து இருக்கின்றேன்... ஆனால் இந்த மெஸ்சில் பல அழகு பதுமைகள் சாப்பிடுவதை பார்த்து அசந்து போய்விட்டேன்.... டிசீஎஸ் சைடு ரோட்டில் உள்ளது... கடை பெயர் மறந்து விட்டேன் யாருக்காவது தெரிந்தால் பின்னுட்டத்தில் தெரியபடுத்தவும்...
(நம்ம ரேஞ்சிக்கு போட்டி எல்லாம் வைக்க முடியுமா என்ன?....)
================================== மிக்சர்.... நான் 5 வருடம் பணியாற்றிய இந்துஸ்தான் காலேஜ் ஆப் ஆர்ட்ஸ் அண்டு சயின்ஸ் கேளம்பாக்கம் சென்னை, காலேஜில் விஸ்காம் துறையினர் நெஷனல் லெவல் குறும்பட போட்டியை நாளையும் (25/02/2010) (26/02/2010)நாளை மறுநாளும் நடத்த உள்ளனர்... குறும்பட ஆர்வலர்கள் தவறாமல் கலந்து கொள்ளுங்கள்... காலை வேளையில் திரைப்பட துறையினர் கலந்து கொள்ளும் கலந்தாய்வும்...மதியத்துக்கு மேல் குறும்பட திரையிடலும் நடைபெற இருக்கின்றது... அவர்கள் தளத்தின் போட்டோ கேலரியில் நான் வேலை செய்த போது எடுத்த இரண்டு படங்களையும் போட்டு பழைய ஞாபகத்தை கிளறிவிட்டு விட்டார்கள்... அதே போல் கல்லூரியின் டைரக்டர் சுசன் மார்த்தாண்டம் என் அன்புக்கு உரியவர்.... அதே போல் என்னோடு பணி புரிந்த மீடியா டிப்பார்ட்மென்ட் நண்பர்கள் பலர் இன்றும் என்னோடு நட்பு பாராட்டுகின்றார்கள்... வேலை ஏதும் இல்லாவிட்டால் நான் இரண்டு நாளும் அங்கு போய்விட்டு வரலாம் என்று நினைக்கின்றேன்.....
பதிவர் தண்டோராவின் மகள் எங்கள் கல்லூரியின் மீடியா டிப்பார்ட்மென்டில்தான் படித்து வருகின்றார்.... தண்டோராதான் கேமராமேன் ராம்ஜி நம்பர் கொடுத்து பேச சொல்லி இருக்கின்றார்...மேலும் விபரங்களுக்குஇங்கே கிளிக்கவும் நான் கல்லூரியில் படிக்காவிட்டாலும் அந்த கல்லூரியில் வேலை செய்த போது அந்த வாழ்க்கை என் வாழ்வில் ஒரு வசந்த காலம் என்பேன்...
பொதுவாக கம்யூட்டர் இயக்க நல்ல ஆங்கில புலமை வேண்டும்.... அதற்க்கு மெத்த படித்து இருக்க வேண்டும் என்ற என் எண்ணவோட்டத்தை தவிடு பொடியாக்கிய இடம் அந்த கல்லூரி என்பேன்...சொன்னால் நம்ப மாட்டிர்கள்... முதன் முதலாக“ டி” டிரைவ் பைலை “இ” டிரைவுக்கு காப்பி பேஸ்ட் செய்த போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை என்பேன்...
============== இந்த வார சலனபடம்.... 18+ ஒரு சிறிய கதை விளம்பரமாக.....
========== நான் எடுத்ததில் பிடித்தது விஷுவல் டேஸ்ட்..... திருவண்ணாமலை கோவிலின் கோபுரங்கள் சில கோணங்களில்... ==================
படித்ததில் பிடித்தது....
இப்படி பொது விஷயத்தில் எத்தகைய ஈடுபாடும் காட்டாமல் அஜித் போன்ற நடிகர்கள்... கோடிகணக்கில் சம்பளம் வாங்குகின்றார்கள்.. அதற்கான சிறு நன்றி கடனாக மக்களக்கான போராட்டங்களில் கை கோர்க்கலாமே... அதை விடுத்து தமிழ் அது இதுவென கண்ட கண்ட போராட்டங்களுக்கு வற்புறுத்தி அழைக்கின்றார்கள் என்று ஒரு வார்த்தையை சொல்லி இருப்பது கண்டிக்கதக்கது...
(இந்த வார ஜுனியர் விகடனில் தமிழர் பேரவை தலைவர் சனார்தனம்....)
நல்ல சிந்தனை நலம் பயக்கும்......... ============================= ஒருசின்ன தத்துவம்....
காதல் என்து என்ன-? யாரோ ஒருத்தன் கட்டிக்க போற பொண்ணுக்கு, ஐஸ்கிரீம்,ஸ்வீட், போ்அன்டுலவ்லி போல பல பொருட்கள் வாங்கி கொடு்த்து, ஒடம்பை தேர்த்திவிட்டு, சுடிதார், வாட்ச் , காஸ்மெட்டிக்ஸ் எல்லாம் கிப்டா வாங்கி கொடுத்து, அட்டுபிகரை அழகான பிகரா மாத்தி.... யாரோ ஒரத்தனுக்கு கட்டி கொடுக்கற வெட்டி வேலைதான் காதல்......
அன்புடன் ஜாக்கிசேகர்
(உங்களுக்கு மேலே நான் எழுதிய விஷயங்கள் நிறைவானதாக இருந்தால் ஒரு நிமிடம் எனக்காக செலவு செய்து வாக்களித்து விட்டு செல்லுங்கள்....வாக்குகள் மற்றும் பின்னுட்டமே என்னை உற்சாகபடுத்தும்) இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள் நன்றி.....
கல்பாக்கம் டவுன் ஷிப்பில் உள்ளே போனிர்கள் என்றால் கடற்கரையோர சர்ச்சுக்கு அருகில் ஒரு பூங்காவோடு, ஒரு கல்வெட்டு இருக்கும்...அந்த சிறிய அழகிய பூங்கா என்று சொன்னாலும்.... அதன் பின் புலத்தில் இருக்கும் சோகம் என்பது ரொம்ப கொடுமையானது...
சர்ச்சில் ஞாயிறு அன்று இறைவனை வழி பட வந்தவர்களை நொடியில் சுனாமி மூலம் பர லோகத்துக்கு பலரை அழைத்து கொண்ட இடம் அது... அந்த இடத்தை கடந்து போகுபவர்களுக்கு வேண்டுமானால் அது சிறிய பூங்கா.. ஆனால் அந்த இடத்தின் வரலாறு பல குடும்ப உறுப்பினர்களின் சோகத்தின் மிச்சம்... இது இயற்க்கையாக நடந்த விஷயங்கள்..
ஆனால் இலங்கையில் 4ம் கட்ட ஈழ போரி்ல் எம் இன மக்களை ஈவு இரக்கம் இல்லாமல் கொன்று குவித்த இடம்... முள்வேலி... பல லட்சகணக்கான தமிழ் மக்கள் அதுவும் பொது மக்கள்.... போரினை காரணம் காட்டி கொன்று குவித்தார்கள்...பல தமிழ் பெண்கள் கற்ப்பு சூறையாட பட்டது... பலரை இறக்கம் இல்லாமல் கொன்று குவித்தார்கள்.. பல தமிழ் இளைஞர்கள் நிர்வாணமாக்கபட்டு சுட்டு கொன்றார்கள்... அதில்யாரோ ஒரு சிங்கள சிப்பாய் எடுத்த விடியோ லீக்காகி... உலக நாடுகளின் கண்டனத்தை சம்பாதித்தது இலங்கை... அது போல பல லட்சக்கணக்கான தமிழ் மக்களை போரை பயண்படுத்தி கொன்று குவிக்க வேண்டும் என்று அரசானை பிறப்பித்து இருந்தால்?????? அது போல ஒரு அரசு ஆவனம் 50 வருடங்கள் கழித்து தமிழ் மக்கள் முள்வேலியில் தம் உறவுகளுக்காக அஞ்சலி செலுத்தும் போது கிடைத்தால்... அந்த விஷயம் இலங்கை அரசுக்கு தெரிய நேர்ந்தால்... அதனை எப்பாடு பட்டாலும் அழிக்க வேண்டும் என்று நினைக்கும் அல்லவா....? 2ம் உலக போரின் போது போரில் இடு பட்ட நாடுகள் தனது அதிகாரத்தை பயன்படுத்தி் பல படுகொலைகள் நிகழ்த்தின... 2ம் எலக போர் முடிந்து50 வருடம் கழித்து அப்படி ஒரு ஆவனம்.... ஒரு திருடன் கையில் கிடைக்க அவனை சுற்றி உள்ளவர்களையும் அவனையும் அது எப்படி அலைகழித்து உயிரை எடுக்கின்றது என்பதே கதை......
(LANDSCAPE NO.2) உலகசினிமா/ ஸ்லோவோனியா படத்தின் கதை இதுதான்...
செர்கெஜ் (Sergej),போல்டே (Polde) இருவரும் சிறு சிறு திருட்டுக்களை நிகழ்த்துபவர்கள்... இவர்கள் பக்கத்து வீட்டில் இருக்கும் வேலைகாரி....ஒரு ஓய்வு பெற்ற ஜெனரலின் வீட்டில் வீட்டு வேலைகள் செய்கின்றாள்... அந்த வீட்டில் இருக்கும் ஒரு சேப்டி லாக்கரை பற்றி இரண்டு திருடர்களும் அவளின் மூலம் தெரிந்து கொண்டு அந்த ஜெனரல் வீட்டில் கொள்ளை அடிக்கின்றார்கள்.. அப்போது ஒரு லேன்ட்ஸ் கேப் பெயிண்டிங்கை எடுக்க, அதன் பின் புறத்தில் இருக்கும் ஒரு லாக்கரில் சில ஆவனங்களும் போகிற போக்கில் அது என்ன வென்று தெரியாமல் எடுத்து வந்து விடுகின்றான்... செர்கேஜ்.... செர்கேஜ் எப்போதும் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என்று சொல்லி விட்டு தனது வருங்கால மனைவி ஜாஸ்னா(Jasna)வை எமாற்றி விட்டு கள்ளக்காதலியுடன் எந்த நேரமும் செக்ஸ் அனுபவித்து கொண்டு இருப்பவன்... இந்த நிலையில் ஜெனரலுக்கு திருடு போன விஷயம் தெரிந்து அதிர்ச்சிக்கு உள்ளாகின்றார்... 2ம் உலக போருக்கு பிறகு சுதந்திரம் பெற்ற ஸ்லோவோக்கியாவில் , 2ம் உலக போரில் தோல்விக்கு காரணமான அதிகாரிகள்,அரசு உழியர்கள் என பல நூறு பேரை விசாரனை இன்றி ஜஸ்ட் லைக்தட்டாக கொன்று குவித்த காரணமாய் இருந்த அரசானையைதான் செர்கேஜ் விஷயம் தெரியாமல் திருடி சென்று விட...
அந்த கொலையில் சம்பந்த பட்ட ஒருவனை ஜெனரல் அழைத்து எத்தனை கொலை நடந்தாலும் அந்த ஆவனம் பொதுமக்கள் கவனத்துக்கு வர கூடாது என்று சொல்ல, அந்த கண்டுபிடிக்கும் வேலையை எடுத்துக்கொண்டவன் ஒரு சைகோ.... அதன் பிறகு அந்த அவனத்தை தேடி அவன் நடத்தும் கொலைகள் எல்லாம் அதகளம்.... ஆவனம் கிடைத்ததா? செர்கெஜ் (Sergej),போல்டே (Polde) இருவரும் என்னவானார்கள்... என்பதை திரையில் பார்க்கவும்.. படத்தின் சுவாரஸ்யங்களில் சில...
படத்தின் அரம்பித்து சில காட்சிகள் கடந்து போகும் போதே... நாம் எதாவது டிரிபில் எக்ஸ் படத்துக்கு வந்து விட்டடோமோ? என்று நினைக்க வைக்கும் காம களியாட்டங்கள்... உதாரனத்துக்கு ஒரு டிப்பார்மென்டல் ஸ்டோரில் கருப்பு ஜெர்க்கினோடு ஓடும் கள்ள காதலி யாரும் இல்லாத இடத்தில் ஜெர்கினை கழட்ட உடம்பில் ஒட்டு துணியில்லாமல் இருக்க... அவன் அவள் அருகில் வந்து முட்டி போட்டு சென்சார்.... அந்த நேரத்தில் ஒருவள் அதை பார்த்து விட்டு என்ன செய்கின்றாய் என்று கேட்க? உனக்காகதான் என்று சொல்லும் அந்த காட்சி சான்சே இல்லை...
ஸ்லொவேனிய இயக்குனர் Vinko Moderndorfer காம காட்சிகளோடு, ஒரு வரலாற்று பதிவையும் சரிவகிதத்தில் கலந்து கொடுத்து இருக்கின்றார்... ஒரு வேலை இந்த ஸ்லோவாக்கிய படு கொலை நடந்து இருந்தாலும் இருக்கலாம்... அல்லது ஆவனம் இல்லாத காரணத்தால் இப்படி ஒரு கதை மூலம் அந்த உண்மைகளை நாட்டு மக்களுக்கு சொல்லி இருக்கலாம்... இந்த படத்தின் ஒளிப்பதிவும் ஆங்கிள்சும் சான்சே இல்லை எனலாம்... முக்கியமாக செர்க்கேஜ் மனைவியாக போகின்றவள் கொலை செய்யபடும் விதமும்... அந்த கொலைக்கு பிறகு அந்த வீட்டில் நடந்த கொலை நிகழ்வையும் போராட்டத்தையும் காட்ட ஒரு டாப் ஆங்கிள் வைத்து இருப்பார்கள் பாருங்கள் சான்சே இல்லை.....இந்த படம் அற்புதமான சஸ்பென்ஸ் திரில்லர் வகையை சார்ந்தது...
இந்த படம் சென்னை எழாவது உலக படவிழாவில் திரையிட்டு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த படம் இது....
எனக்கு முன்புறம் உட்கார்ந்து அரட்டை அடித்து கொண்டு இருந்த கல்லூரி மாணவிகள் அந்த டிப்பார்ட்மென்ட் ஸ்டோர் சீன் பார்த்து பிறகு மெல்ல நழுவினார்கள்...
இன்று வரை ஜாலியன்வாலாபாக் என்ற இடத்தை சொன்னதும் என்ன நினைவுக்கு வரும்?... ஜெனரல் டயர், துப்பாக்கிசூடு... அது போல் நடந்த ஆவனம் இல்லாத உலகலாவிய படுகொலை பற்றி இந்த படம் கேள்விகளை எழுப்புகின்றது...
இந்த படத்தை பார்க்கும் போது இந்த உலகில் நமக்கு தெரியாத, அறியாத பலவிஷயங்கள்... இந்த உலகித்தில் அனுதினமும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.... என்பதை இந்த படம் உணர்த்துகின்றது....
அதிகாரவர்கம் நினைத்தால் எதையும் செய்யலாம் என்பதை போகிற போக்கில் இந்த படம் காறி துப்பிவிட்டு செல்கின்றது...
இந்த படம் பல்வேறு உலக படவிழாக்களில் கலந்து கொண்டு பல விருதுகளை பெற்றது...
vinko Moderndorfer (director) / Vinko Moderndorfer (screenplay) CAST: Marko Mandic … Sergej Janez Hocevar … Polde Barbara Cerar … Magda Maja Martina Merljak … Jasna Jaka Lah .. Damjan Janez Skof … General Slobodan Custic … Instructor
நன்றி
இந்த படத்தின் லிங் தேடி வைத்து இருந்த நண்பர் பிரதீப் பாண்டியனுக்கு நன்றிகள்... அவரும் இந்த படத்தை பற்றி எழுதி இருக்கின்றார்.. வாசிக்கவும்
அன்புடன் ஜாக்கிசேகர்
(உங்களுக்கு மேலே நான் எழுதிய விஷயங்கள் நிறைவானதாக இருந்தால் ஒரு நிமிடம் எனக்காக செலவு செய்து வாக்களித்து விட்டு செல்லுங்கள்....வாக்குகள் மற்றும் பின்னுட்டமே என்னை உற்சாகபடுத்தும்) இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள் நன்றி.....