அப்பல்லோ மருத்துவமனை சென்னை ஒரு பார்வை..

கடந்த மூன்று நாட்களாக நான் சென்னை கிரீம்ஸ் ரோடு அப்பல்லோ பக்கம் சுற்றிக்கொண்டு இருக்கின்றேன்..என் அத்தைக்கு குடல் ஆப்பரேஷன்.நல்லபடியாக முடிந்தது...



எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் முதல் முறையாக மேல்தட்டு மக்கள் பயண்பாட்டில் இருக்கும் ஒரு மருத்துவமனைக்கு செல்ல நேர்ந்தது.... இதற்கு முன் அப்பல்லோ டாக்டர்  இண்டர்வியூவிற்க்கு ஒரு கேமராமேனாக போய் இருந்தேன்... அப்போதுதான்  அங்கு  கமலின் பம்மல்கே சம்பந்தம் படம் ஷுட்டிங் நடந்து கொண்டு இருந்தது. முதன் முதலாக தானைதலைவி சிம்ரனை பார்த்து வைத்தேன்...


அரசுபொதுமருத்துவமனைக்கு என் அம்மாவோடு அதிகம் போய் இருக்கின்றேன்.. ஆனால் உலகதரமான சிகிச்சை என்று மக்களால் புகழபடும் அப்பல்லோவில் நான் இதுவரை போனது இல்லை..

ஒரு வருடத்துக்கு முன் எனது பைலட் நண்பியின் மெடிக்கல் டெஸ்ட் எடுக்க அப்பல்லோ போனது ஞாபகம்...



மற்றபடி உறவினர்கள் நண்பர்கள் பார்க்க பெரிய பைவ்ஸ்டார் மருத்துவமனைகளுக்கு சென்று இருக்கின்றேன்...


அப்பல்லோவை எப்போதும் நான் ஒரு மருத்துவமனையாக நான் உணர்ந்ததே இல்லை.. காரணம் அது பைவ் ஸ்டார் ஹோட்டலை போன்ற சுத்தம் எல்லா இடத்திலும் பிரதிபலிக்கும்..எல்லா இடத்திலும் சுத்தம் வியாபித்து இருக்கும்.....


வேலை விஷயமாக போய்விட்டு வந்த ஆஸ்பிட்டலில்,  கடந்த மூன்று  நாட்களுக்கு மேல் அதனுடே பயணிக்கும் போது நடந்த சுவாரஸ்யங்களை பகிர்ந்து கொள்கின்றேன்..


அப்பல்லோவுக்கு போகும் சாலை முழுவதும் ஏதோ திருப்பதி தரிசனத்துக்கு போவது போல் மக்கள் நடந்து போய்கொண்டு இருக்கின்றார்கள்...

ஆனால் அதே சாலை ஞாயிறு அன்று பார்க்கும் போது வெறிச்சோடிகாணபடுகின்றது. எல்லா இடத்திலும் வட இந்திய முகங்கள் வியாபித்து இருக்கின்றன.. நிறைய  பெங்காளிகள் பார்க்க முடிகின்றது...


அங்கு ஆட்டோ ஸ்டாண்டில் இருக்கும் ஆட்டோகாரர்கள் பன்மொழிதிறமை இருக்கின்றது...எல்லா  மொழியிலும் பேசுகின்றார்கள்....ஆனால் வெளியில் இருந்து வரும் ஆட்டோ டிரைவர்கள்... அப்பல்லோ வாசலில் பயணியை இறக்கிவிட்டு வந்த வழியிலேயே வரும் போது அது ஒன்வே ஆக இருப்பதால்... அங்கு நிற்க்கும் பிரைவேட் செக்யூரிட்டிகளிடம் ஆட்டோகாரர்கள் சண்டை போட்டுக்கொண்டு இருக்கின்றார்கள்...


ஸ்டார் ஹோட்டலில் நுழையும் போது ஒருவர் கதவிடம் நின்றுகொண்டு வணக்கம் வைப்பாரே அது போல் மெயின் பிளாக் என்டரன்சிலும் பில்லிங் செக்ஷன் என்டரன்சிலும் இரண்டு ஆண்கள் நின்று கொண்டு வணக்கம் வைத்துக்கொண்டு இருக்கின்றார்கள்.....

உள்ளே நுழைந்ததும். வரவேற்ப்புக்கு  காலம் காலமாக கடைபிடித்து வரும்
மிக அழகான பெண்  ஒருவர் வரவேற்று என்ன வேண்டும் என்று கேட்டுவைத்தார். லெப்ட் சைடில் ஒரு  மெடிக்கலில் ரேஷனுக்கு பொருள் வாங்கவது போல ஒரு பெரிய கூட்டம் பல வரிசைகளில்  நின்றுகொண்டு இருக்கின்றார்கள்...

எனக்கு தெரிந்து அங்கு பர்ஸ்ட் புலோரில்  பல நோய்களுக்கான டாகடர் நிபுனர்கள் சிறு சிறு அறைகளில் உட்கார்ந்து கொண்டு தங்கள் அனுபவ திறமையை காசு ஆக்கிகொண்டு இருந்தார்கள். பெரிய ஹாலில் பல்வேறு பிரச்சனைகளுடன், சொந்த ஊரில்  சந்தேகத்துக்கு சாம்பர் அபிட் எடுத்தது போல, எடுத்த எக்ஸ்ரே சீட்டி
ஸகேனுடன், ஒரு வித முக இறுக்கத்துடன் உட்கார்ந்து கொண்டு இருந்தார்கள்...

காலையில்  நான் நுழைந்த நேரம்... உள்ளே ஒரு வினாயகர் சிலையும் ஒரு சின்ன மணியும் இருந்தது... ஒரு பெண்டாக்டர் பிள்ளையாரை நன்றாக சேவித்து விட்டு, மேலே உள்ள மணியை தமிழ்பட கதாநாயகி போல அடித்து விட்டு போக எனது கண்கள் அவரது அந்த வெள்ளைகைக்கு மட்டும் ஒரு ஸ்பெஷல் குளோசப் போட்டு  பார்க்க.... மிக அழகாக இருந்தது...ஒரு ஸ்டாப் நர்ஸ்  அதே பிள்ளையாரிடம் வேறு ஒரு கோரிக்கை வைத்தாள்.. வீல் சேரில் கடந்து போன ஒரு நோயாளி மார்பில் எக்ஸ்ரே ரிப்போர்ட் அணைத்தபடி இரண்டு கைகளிளனால் சேவித்து கொண்டு சென்றார்...

 ஸ்டாப் நர்ஸ்கள்  எல்லோரும் மலாபார் இறக்குமதி.. செழுமை செழுமை.. எனக்கு தெரிந்து அப்பல்லோ இன்னம் அழகாய் தெரிய இவர்களும் ஒரு காரணம் என்பேன்...

எல்லா இடத்திலும் ஒரு மாப் வைத்துக்கொண்டு ஒரு ஹவுஸ் கீப்பிங் டீம் ரெடியாக இருந்தது... உள்ளே போகும் போது  சோதனை கூண்டு வழியாகதான் அனைவரும் உள்ளே செல்கின்றனர். நான் எப்போது அந்த வழியாக உள்ளே போய் தொலைந்தாலும் பீப் என்று கத்தி என் மானத்தை அது வாங்கி கொண்டு இருந்தது.

மற்ற வேலைகள் செய்யும் பெண்கள் மயில் கலரில் சேலை உடுத்தி இருக்கின்றார்கள்.. மிக நேர்த்தியாக தலை வாரி கொண்டை அணிந்து பிளைட் பணிபெண்கள் போல் இருக்கின்றார்கள்... வேலைக்கு தேர்வு செய்தவனுக்கு ஒரு தேர்ந்த ரசனை இருக்க வேண்டும் என்பதை பல பெண்களை பார்க்கும் போது நன்றாக உணரமுடிகின்றது.. எல்லோரும் சேலையை சுற்றி வயிறு தெரியாமல் இருக்க, ஒரு சேப்டி பின் ஜாக்கெட்டுடன் அணிந்து இருக்கின்றார்கள்...

இரவு அந்த இடத்தை எத்தனை பேர் கடந்தார்கள் என்று பார்த்த போது 7687பேர் என்று கணக்கு காட்டிக்கொண்டு இருந்தது. எப்டியும் ஒரு 3000பேருக்கு மேல் வேலை செய்வார்கள் என்று நினைக்கின்றேன்...

எனக்கு தெரிந்து பெரிதான சோகம் எவரிடத்திலும் இல்லை. இதுவே அரசு மருத்துவமனையாக இருந்து இருந்தால் ஒப்பாரி எங்கேயாவது கேட்டுக்கொண்டு இருக்கும்... தீடிர் என்று வீல் என்று சத்தம் கேட்கும், மார்பில் அடித்துக்கொண்டு, மண்ணில் புரண்டு கொண்டு இருப்பார்கள் அந்த வெள்ளந்தி மனிதர்கள்... இங்கு பணம் அவர்கள் மனித இயல்பை மாற்றி அதை நாகரிகமாக மாற்றிவிட்டது...

ஒரு சில நடுத்தர குடும்பங்களை பார்க்க முடிந்தது... எங்கே போனால் பித்தம் தெளியும் என்று தெரியாமல், திக்கு முக்காடி, செய்வினை செயபாட்டுவினை எல்லாம் பார்த்து விட்டு கடைசியாக தோப்பு துறவை பக்கத்து  வரப்புகாரனிடம், காட்டிய இடத்தில் கையெழுத்து போட்டு விட்டு வந்த சோகம் சிலரிடத்தில் பார்க்க முடிந்தது... எவ்வளவு செலவானாலும் வியாதியில் இருந்து விடுதலை பெற்றால் போதும் என்ற கவலை. கண்களில் வெறுமையுடன் ஸ்டெச்சரில் கடக்கும் அத்தனை பேரிடமும் பார்க்கமுடிந்தது.

பார்க்க நன்றாக இருக்கின்றார்கள்... பல ஆண்கள் ரொம்பவும் திடகாத்திரமாக இருக்கின்றார்கள்.. பல பெண்கள் பேஷன் ஷோவில் இருந்து நேராக வந்தது போல இருக்கின்றார்கள்.. ஆனால் அவர்களுக்கு வியாதி... அவர்களுக்கு என்ன வியாதியாக இருக்கும் என்று அல்பமாக யோசித்து வைத்தது...

பலரின் மேல் சட்டைகளில் ஒரு சிலிப் ஒட்டி வைத்து இருக்கின்றார்கள்.. அது என்ன பர்பஸ்க்கு என்று தெரியவில்லை.அவர்கள் அட்டென்டரா? அல்லது நோயாளியா  என்று தெரியவில்லை.???

என் அத்தை வயிற்று வலியால் துடித்தால் அதனால் கடலூரில் இருந்து வலி வேதனையை குறைக்க சென்னை அடித்து பிடித்து வந்தனர்.. வந்ததும். எமர்ஜென்சிக்கு அழைத்து போன போது.. முதலில் 30,000 டெப்பாசிட் பணம் கட்ட சொன்னார்கள். பெரிய அறை எல்லாம் இல்லை வந்த பெஷன்ட் ஒரு ஹாலில் வைத்து வைத்தியம் பார்த்தார்கள்..  அதற்கு ஒரு நாள் வாடகை 2,500ரூபாய் இரண்டு நாளைக்கு5,000 அதுக்கே அம்போவானது...அதன் பிறகு அல்ட்ரா சோனிக், எக்ஸ்ரே, சீட்டி ஸ்கேன் என அவர்களிடம் இருக்கும் அத்தனை மெஷினுக்கும் வேலை கொடுத்தார்கள்....
இதையெல்லாம் எடுக்கும் முன்.. நீங்கள் ரூம் புக் பண்ண வேண்டும் என்று சொன்னார்கள்... ரூம் புக் செய்தால்தான் அடுத்த அடியே எடுத்து வைக்க முடியும்என்று சொல்லிவிட்டாகள்.

சரி ரூம் டாரிப் என்னவென்றுபார்த்தால் எனக்கு கண்ணை கட்டிக்கொண்டு வந்து விட்டது.
ஜெனர்ல் வார்டு  ஒரு ஹாலில் பத்து பேர் மட்டும் வித்தவுட் ஏசி..ஒரு நாளைக்கு 2000..ம்.. அதன் பிறகு 3பேர் இருக்கும் பெட்.. நான் ஏசி...2250ரூபாய், ஒரு அறையில் இரண்டு பேர் மட்டும் ஏசி, டிவி, போன்,3300ரூபாய் ஒரு நாளைக்கு என்று சொன்ன போது எனக்கு மயக்கம் வந்தது...ஒரு சூட் ரூம் இருக்கு அதுக்கு ஒரு நாளைக்கு 25,000ரூபாய்..

எங்க மாமா திருடனுக்கு தேள் கொட்டியது போல எதுவும் பேசவில்லை... அவரிடம் இருக்கும் ஸ்டார் இன்ஷுரன்ஸ் இந்த மருத்துவமைனைக்கு எலிஜிபல் இல்லையாம்...

அக்கத்தில் இருந்தும் பக்கத்தில் இருந்தும் பணம் புரட்டி பில்லிங் செக்ஷனில் பணத்தை கட்டி வைத்தோம்... அப்போது எவ்வளவு பணம் கட்டினாலும் அந்த பணத்தை நேர் செய்யும் விதமாக பில்லில் எல்லாம் ஏற்றி இருக்கின்றார்கள்..

பணி செய்யும் யாரும் யாரிடமும், மருந்துக்கு கூட எறிந்து விழவில்லை.. அதுதான் அவர்களுக்கு கொடுத்த பாலபாடம் போல் தெரிகின்றது...சிலரிடம் அலட்சியம்இருந்தாலும்.. பலர் வாங்கும் சம்பளத்துக்கு உண்மையாக வேலை செய்கின்றார்கள்..

ஆனால் ஆபரேஷன் செய்யும் இடத்தில் போடபட்ட சேரில் நகம் கடித்து உட்கார்ந்து இருக்கும் பலர் பிராத்தித்தபடி இருந்தனர்.. ஒருகுழந்தையின் அம்மாவுக்கு மேஜர் ஆப்பரேஷன் போல எல்லோரும் சத்தம் வராமல் அழுது கொண்டு இருந்தார்கள்..எல்லோரும் அந்த சின்ன குழந்தை எதிர்காலத்தை பத்தி கவலைபட்டுகொண்டு இருந்தார்கள்.. சில சொந்தங்கள் அந்த குழந்தையை பார்க்கும் போது எல்லாம் அழுகை பீரீட்டு கண்ணீராக வந்து கொண்டு இருந்தது..ஆனால் சத்தம் காட்டாமல் அழுதார்கள்..நல்லகலர் என்பதால் அவர்கள் அழுகை அவர்கள் முகத்தை சிவக்க வைத்தது. அவர்கள் தமிழர்கள்தான் ஆனால் மருந்துக்கும் தமிழ் பேசவில்லை.......அந்த இடம் மட்டும்தான் மருத்துவமைனை போல் இருந்தது.

நாங்களும் நகம் கடித்து நின்றோம்...என் மாமாவிடம் ஆபரேஷன் செய்த இடத்தையும் அதன் பிரச்சனையையும் ஒரு டாக்டர் மொபைல் போனில் போட்டோ எடுத்து காட்டி விளக்கினார்...

அத்தைக்கு ஆபரேஷன் முடிந்தது.. சீசீயூவில் இருந்தார்... அவரை பார்க்கும் போது அவர்கள் கொடுக்கும் காலனிகள் அணிந்து போய் பார்க்கவேண்டும்.. அதே போல் ஒரு திரவத்தை கையில் பூசிக்கொண்டு உள்ளே போய் பார்க்க வேண்டும் என்றார்கள்...



ஊரில் இருந்து வந்த காரில் ஏசி போட்டு உட்கார்நது கொண்டு இருந்தோம்.. அப்போது ஷிப்ட் முடிந்து போகும் அந்த நர்ஸ்களை பார்க்கும் போது ஏதோ கேரளாவில் இருப்பது போல எண்ணம்... எல்லோருமே மலையாள பெண்கள்..

நல்ல ஒட்டல் பக்கத்தில் ஏதும் இல்லை... வைத்து இருக்கும் ஹோட்டலும் யானை விலை குதிரை விலை. கார் பார்க்கிங்கில் இப்போது வந்த எல்லா மாடல் விலைஉயர்ந்த கார்களும் பார்க்க முடிந்தது..

மருத்துவமனை போர்டிக்கோவில் ஒரு தமிழ்நாடு அரசு சிம்பளுடன், தலையில் சிவப்பு கொண்டை விளக்குகள் இல்லாமல் ஒரு நாளும் அங்கு இல்லாத வண்டியே இல்லை....

நடுத்தர குடும்பத்தினருக்கு  பாசத்திலும் பதட்டத்திலும், நேரா மவுன்ட் ரோடு அப்பல்லோ என்று வண்டியை விடும் முன் நிறைய பணத்தை ரெடி செய்து கொள்ளவும்...  மற்றபடி சுத்தம், மரியாதை, சான்சே இல்லை...

இன்னும் என் மாமா.... டாக்டர் ஆபரேஷன் பீஸ், மற்றும்  மொத்த அறைவாடகை என எல்லாம் சேர்த்து, வரப்போகும் பில்லுக்காக கிலிபிடித்து ஆஸ்பத்ரி லாபியில் உட்கார்ந்து கொண்டு இருக்கின்றார்...ஆபரேஷன் செய்த வலியோடு, அசதியில் என் அத்தை தூங்கிகொண்டு இருக்கின்றாள்...

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....

குறிப்பு.. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்.

தமிழ்மணத்தில் எனது இடுக்கைகள் இணைக்க முடியவில்லை... அது என்ன பஞ்சாயத்து, அதன் கருத்து எதனால்??  என்று விபரம் தெரிந்தோர் சொல்லவும்..

நன்றி..

27 comments:

  1. ரமணா படத்தில் வருமே... அந்த சின்னப்பையனுக்கு அடி பட்டதுக்கு, எல்லா சோதனைகளையும் செய்துட்டு ஒரு களிம்பு தடவி விட்டு ரூ.8000/- வாங்குவது... அது உண்மை தான்... ஒவ்வொரு மருத்துவருக்கும் மருத்துவமனையில் உள்ள எந்திரங்களின் மூலம் இவ்வளவு வருவாய் ஈட்ட வேண்டும் என்று ஒரு இலக்கு (விற்பனை பிரதிநிதிகளுக்கு - Marketing Executives இவ்வளவு விற்பனை செய்ய வேண்டும் என்று இலக்கு இருப்பது போல...) நிர்ணயித்திருப்பார்கள்... (உதாரணத்திற்கு X-Ray இயந்திரத்தை ரூ.2 கோடி கொடுத்து வாங்கி இருந்தால், மாதத்திற்கு ஒரு லட்சமாவது அதன் மூலம் வருவாய் ஈட்ட வேண்டும்.) அவர்கள் அந்த வருவாய் ஈட்ட முடியாவிட்டால், மாதக்கடைசியில் கூட்டம் கூட்டி கல்யாணி, பைரவி மற்றும் எல்லா ராகத்திலும் பாட்டு பாடி விடுவார்கள்... எனக்கு தெரிந்த கோவையை சேர்ந்த K.G. ஆஸ்பத்திரியின் ஒரு மருத்துவர் இந்த பாட்டு பற்றி நிறைய பிரஸ்தாபித்திருக்கிறார்... இது அப்போலோ மருத்துவமனையில் மட்டுமல்ல... வாழ்க்கைக்கோடு (Lifeline), மலர் மருத்துவமனை, மற்றும் பலர் இப்படித்தான் கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறார்கள்... பெங்காலிகள், குஜராத்திகள், ராஜஸ்தானியர்கள் பெரும்பாலும் இதய நோய் சிகிச்சைக்கு சென்னை அப்போல்லோ மருத்துவமனைக்கு தான் வருகிறார்கள்...

    ReplyDelete
  2. Revenue per Machine is the target like that revenue per patient is also another target on which hospitals functions.

    Regards
    Aravindan

    ReplyDelete
  3. ஜாக்கி,

    இந்த மருத்துவமனைகளின் வரவினால் நடுத்தட்டு மக்கள் பலர் , வறுமைக்கோட்டுக்கு சென்றுள்ளனர்.
    முற்றிலும் அமெரிக்கன் ஸ்டைல் மருத்துவமுறையினால் இந்தியாவிற்கு வந்த கேடு.
    திடீரென ஏற்ப்பட்ட மருத்துவ செலவினால் பலகுடும்பங்கள் சின்னாபின்னமாய் போகிறது.

    ReplyDelete
  4. அப்பல்லோ போன்ற மருத்துவமனைகள் இந்தியாவின் மருத்துவ பண புற்றுநோய் சுரப்பிகள். இந்த சுரப்பிகளுக்கு பணக்கார நோயாளிகளை நன்கு அடையாளம் கண்டு கொண்டு கபளீகரம் செய்ய தெரியும்.

    எனக்கு தெரிந்து ஏழைகள் அந்த கட்டிடத்தை அண்ணாந்து பார்த்துவிட்டு தர்மாஸ்பத்திரியில் போய் படுப்பதுதான் சரி......

    ReplyDelete
  5. வசூல் ராஜாவில் ஏது சிம்ரன்???

    இதையும் படிங்க http://www.vinavu.com/2010/08/12/apollo/

    ReplyDelete
  6. ஆஸ்பத்திரிக்கு போனாலும் அதையும் கவர் ஸ்டோரியாகவே வார்க்கும் அளவுக்கு சிந்தனை மாறி விட்டிருக்கிறதே ஜாக்கி...

    இது நல்லதா கெட்டதா?

    அன்பு நித்யன்

    ReplyDelete
  7. காலையில் நான் நுழைந்த நேரம்... உள்ளே ஒரு வினாயகர் சிலையும் ஒரு சின்ன மணியும் இருந்தது... ஒரு பெண்டாக்டர் பிள்ளையாரை நன்றாக சேவித்து விட்டு, மேலே உள்ள மணியை தமிழ்பட கதாநாயகி போல அடித்து விட்டு போக எனது கண்கள் அவரது அந்த வெள்ளைகைக்கு மட்டும் ஒரு ஸ்பெஷல் குளோசப் போட்டு பார்க்க.... மிக அழகாக இருந்தது...ஒரு ஸ்டாப் நர்ஸ் அதே பிள்ளையாரிடம் வேறு ஒரு கோரிக்கை வைத்தாள்.. ஸ்டாப் நர்ஸ்கள் எல்லோரும் மலாபார் இறக்குமதி.. செழுமை செழுமை.. எனக்கு தெரிந்து அப்பல்லோ இன்னம் அழகாய் தெரிய இவர்களும் ஒரு காரணம் என்பேன். ..மற்ற வேலைகள் செய்யும் பெண்கள் மயில் கலரில் சேலை உடுத்தி இருக்கின்றார்கள்.. மிக நேர்த்தியாக தலை வாரி கொண்டை அணிந்து பிளைட் பணிபெண்கள் போல் இருக்கின்றார்கள்... வேலைக்கு தேர்வு செய்தவனுக்கு ஒரு தேர்ந்த ரசனை இருக்க வேண்டும் என்பதை பல பெண்களை பார்க்கும் போது நன்றாக உணரமுடிகின்றது.. எல்லோரும் சேலையை சுற்றி வயிறு தெரியாமல் இருக்க, ஒரு சேப்டி பின் ஜாக்கெட்டுடன் அணிந்து இருக்கின்றார்கள்...

    இரவு அந்த இடத்தை எத்தனை பேர் கடந்தார்கள் என்று பார்த்த போது 7687பேர் என்று கணக்கு காட்டிக்கொண்டு இருந்தது. எப்டியும் ஒரு 3000பேருக்கு மேல் வேலை செய்வார்கள் என்று நினைக்கின்றேன்...

    "சும்மா உக்காந்தாலும் சுகமாத்தான் உக்காந்து இருபிங்க போல ."

    ReplyDelete
  8. அண்ணே, எங்க அப்பாவையும் அங்க ஒருவாரம் வைத்து இருந்தோம். அத்தை குணம் அடைந்ததில் மகிழ்ச்சி. அதைவிட நீங்க நார்மல் ஆனதில் மிகவும் மகிழ்ச்சி.

    ReplyDelete
  9. Good Observation and nicely narrated in your style....Great Jackie....

    ReplyDelete
  10. நீங்க நார்மல் ஆனதில் மிகவும் மகிழ்ச்சி

    ReplyDelete
  11. Jackie, Very good narration. I felt like taking a round inside Appollo. Please keep up this good style.

    ReplyDelete
  12. அண்னே
    எந்த அப்போல்லோ?
    க்ரீம்ஸ் ரோடா?இல்ல?தேனாம்பேட்டா?
    ரெண்டுமே ஃபைவஸ்டார் ஹோட்டல்தான்.அப்படி சார்ஜ் பண்ணுவாங்க

    ReplyDelete
  13. அண்ணே நான் இதுவரை க்ரீம்ஸ் ரோடு அபோல்லோவிற்கு போனதில்லை,நல்லா விவரிப்பிலேயே சுத்தி காட்டுனீங்க.

    ReplyDelete
  14. யப்பா, ஜாக்கி... எனக்கு மயக்கம் வருதே... சரி, சரி நான் அப்படியே G H போய்ட்டு வந்துடறேன்...

    ReplyDelete
  15. Good Post Jackie!!! Please try to put some good thriller hollywood movie reviews which is missing from you for a long time!!!

    ReplyDelete
  16. ஒரு பெண்டாக்டர் பிள்ளையாரை நன்றாக சேவித்து விட்டு, மேலே உள்ள மணியை தமிழ்பட கதாநாயகி போல அடித்து விட்டு போக எனது கண்கள் அவரது அந்த வெள்ளைகைக்கு மட்டும் ஒரு ஸ்பெஷல் குளோசப் போட்டு பார்க்க.... மிக அழகாக இருந்தது...ஒரு ஸ்டாப் நர்ஸ் அதே பிள்ளையாரிடம் வேறு ஒரு கோரிக்கை
    nalla katchi amaipu

    ReplyDelete
  17. தல.. கிரீம்ஸ் ரோடு'ல சங்கீதா ஹோட்டல் இருக்கு.. நான்-வெஜ் வேணுமின்னா ஹைதராபாத் பிரியாணி சென்டரும் இருக்கு..

    ReplyDelete
  18. பின்னுட்டம் இட்ட அனைவருக்கும் என் நன்றிகள்..

    ReplyDelete
  19. ஜாக்கி, என்னுடைய பதிவையும் தமிழ்மணத்தில் இணைக்க முடியவில்லை. மெயில் தட்டியும் ஒரு பிரயோசனமும் இல்லை.

    என்னத்த பஞ்சாயத்து பண்ணறது.

    உங்களுக்கு ஏதாவது தெரிஞ்சா சொல்லுங்க

    ReplyDelete
  20. சமீபத்தில் என் அம்மாவை போரூர் ராமச்சந்திரா மருத்தவமன்யில் ஒரு வாரம் வைத்திருந்தோம். நீங்கள் அப்பல்லோவைப் பற்றி சொல்லியிருப்பது அளவுக்கு காஸ்ட்லி இல்லை. ஆரம்ப ரூம் வாடகை வெறும் ரூ. 700 மட்டுமே. கவனிப்பும் நன்றாகவே இருந்தது. சரியான காரணம் இல்லாமல் எந்த ஒரு டெஸ்டும் எடுக்க சொல்ல வில்லை. மொத்தத்தில் நல்ல அனுபவம்.

    ReplyDelete
  21. ஜாக்கி, உங்கள் அத்தை சீக்கிரம் குணமடைய ப்ரார்த்திக்கிறேன்.

    அப்போலோ போன்ற மருத்துவமனைகள் இந்தியாவில் சமூக மேடு பள்ளங்களை மேலும் அழுக்காகி காட்டுக்கின்றன். இதற்கு காரணம் அரசாங்கம் அரசியல் வாதிகள் அதிகாரிகள் தாம்

    நான் வாழும் கனடாவில் அனைவருக்கும் மருத்துவம் இலவசம் :) அதுவும் அப்போலோ தரத்தில் !!!. இங்கே ஹெல்த் கேரில் சில/பல குறைகள் இறந்தாலும் நோய் என்று வந்தால் சிகிச்சைக்கு ஏழைப் பணக்காரன் வித்தியாசம் கிடையாது. ஆஸ்பத்திரியில் மில்லியனரும் பிச்சைக்காரனும் அருகருகில் படுத்திருப்பதை காணலாம். மேலிருக்கும் உடையெல்லாம் களைந்துவிட்டு அணிவித்த ஆஸ்பத்திரி கவுனில் இருப்பவர்களில் யார் மில்லியனர் யார் பிச்சைக்காரன் என தெரியவா போகிறது. டாக்டருக்கு அரசாங்கம் சம்பளம் தருகிறது. ஆகையால் அவர் ஒரு மனித உடம்பிற்கு சிகிச்சை அளித்துவிட்டு சம்பளம் வாங்கிவிட்டு போய்விடுகிறார்.

    இந்தியாவிலும் ஹெல்த்கேர் உண்டு என்ன சரியாக நடைபடுத்தவில்லை 98% உழல் :(

    ReplyDelete
  22. பகிர்வுக்கு நன்றி பாஸ். இன்றைக்கு மருத்துவமனைகள் பெரும்பாலானவை காசு பார்க்கும் மனைகளாகத்தான் இருக்கின்றன. அப்பல்லோ அவர்கள் தரத்திற்கு கறக்கிறார்கள்; அவ்வளவே!!

    தமிழ்மணத்தில் என்னாலும் பதிவுகளை இணைக்க முடிவதில்லை. அது என்ன பஞ்சாயத்தோ தெரியவில்லை.

    ReplyDelete
  23. அடிப்ப‌டை தேவைக‌ளான, உண‌வு, க‌ல்வி, சுகாதார‌ம் எல்லாம் த‌னியாரிட‌ம்,
    தீங்கிழைக்கும், சாராய‌ விற்ப‌னை அர‌சிட‌ம். இவ‌ர்க‌ளை அங்கு அனுப்பி விட்டு
    ந்ன்றாய் அனுப‌விக்கிறோம்..

    ReplyDelete
  24. "இன்னும் என் மாமா.... டாக்டர் ஆபரேஷன் பீஸ், மற்றும் மொத்த அறைவாடகை என எல்லாம் சேர்த்து, வரப்போகும் பில்லுக்காக கிலிபிடித்து ஆஸ்பத்ரி லாபியில் உட்கார்ந்து கொண்டு இருக்கின்றார்"

    ஜாக்கி நீங்க சொல்வதை பார்த்தால் உங்கள் மாமாவின் நிலை பாவமாக இருக்கு.

    "அவரிடம் இருக்கும் ஸ்டார் இன்ஷுரன்ஸ் இந்த மருத்துவமைனைக்கு எலிஜிபல் இல்லையாம்..."

    கலைஞர் உயிர் காப்பீட்டு திட்டத்தில் ஏதாவது பணம் திரும்ப பெறும் வசதி அவருக்கு அப்பல்லோவில் உள்ளதா?

    ReplyDelete
  25. ஒரு குட்டி கேரளாவையே கொண்டு வந்து நர்சிங் டிபாட்மேன்டையே நிறைத்திருக்கும் அப்பல்லோ மருத்துவமனை மட்டுமல்லாமல் மற்ற அனைத்து மருத்துவமனைகளிலும் (முடிந்தவரை) அவர்களுக்கு தரப்படும் சம்பளம், வசதிகள் மற்றும் நிபந்தனைகளை ஒருமுறையேனும் கேட்டுப்பார்க்கவும்....

    ReplyDelete
  26. ஒரு குட்டி கேரளாவையே கொண்டு வந்து நர்சிங் டிபாட்மேன்டையே நிறைத்திருக்கும் அப்பல்லோ மருத்துவமனை மட்டுமல்லாமல் மற்ற அனைத்து மருத்துவமனைகளிலும் (முடிந்தவரை) அவர்களுக்கு தரப்படும் சம்பளம், வசதிகள் மற்றும் நிபந்தனைகளை ஒருமுறையேனும் கேட்டுப்பார்க்கவும்....

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner