கலக்கும் எந்திரன் தமிழ் சினிமாவின் புதிய பரிமாணம். சினிமா விமர்சனம்.


டிக்கெட் புக் பண்ணாத  எனக்கு சாண்ட்வெஜ் பகுதியில் ஒரு டிக்கெட்  இருந்தால் எனக்கு கொடுக்கவும் என்று  எழுதியதும் அதை படித்து விட்டு இன்று விடியற்காலை 5,30மணிக்கு சென்னை வில்லிவாக்கம் ஏஜிஎஸ் தியேட்டரில் விடியற்காலை முதல் காட்சி பார்க்கவும். 200 மதிப்புள்ள டிக்கெட்டை பணம் பெற்றுக்கொள்ளாமல் கொடுத்த நுங்கம்பாக்கம் ஐசாப்ட்டில் வேலை செய்யும் வாசக நண்பர் குறும்பழகன் மற்றும் அவரது நண்பர் விஜய்க்கும்  இந்த பதிவு சமர்பணம். கொளத்தூர் கங்காவில் ஒரு டிக்கெட் இருக்கின்றது வரமுடியுமா? என்று கேட்ட வாசக நண்பர் பாலமுருகனுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.எந்திரன் திரைப்படம் இரண்டு வருட உழைப்புக்கு பின் திரையை முத்தமிட்டு இருக்கும் படம். எப்போதுமே வசூலில் சாதனைபடைக்கும் சூப்பர்ஸ்டார் ரஜினி  நடித்து வெளிவந்து இருக்கும் படம். பிரமாண்டத்தை காட்சிகளில் காட்டும் இயக்குனர் சங்கரின் படம்.

படையப்பாவில் இருந்தே ஜஸ்வர்யாராயோடு நடிக்க டிரை செய்து டெட் கிடைக்காமல் அனைத்தும் படங்களும் தள்ளி போக இந்த படத்தில் நிறைவேறி இருக்கின்றது.

தமிழில்இந்த அளவு பிரமாண்டத்தை திரையில் சாத்திய படுத்த இப்போதைக்கு சன் பிக்சர்ஸ் மட்டுமே தமிழில் இருக்கின்றது. லாஸ் ஆனாலும் அதை பாதிக்காது என்பதற்க்காக சொன்னேன்.
முதலில் இந்த படத்தை மிக அழகாக சன்பிக்சர்ஸ் பிரமோட் பண்ணிய விதத்தில் அவர்கள் ஜெயித்தார்கள். சாதாரண ஒரு ரசிகனை முடிந்த அளவுக்கு உசுபேத்தினார்கள்.

களவானி படத்தில் ஒரு டயலாக் வரும். சும்மாவே ஆடுவேன் காலில் சலங்கை வேற கட்டி இருந்தா கேட்கவா வேனும்? அது போலதான் சாதாரனபடங்களையே மிக அழகாக பிரமோட் செய்பவர்கள். அவர்கள்  தயாரிப்பில் இது முதல் படம். கேட்கவா வேணும் தமிழில் வைத்து இருக்கும் பாதி சேனல்களில் டிரைலர் போட்டு  டெம்டை ஏற்றிவிட்டு விட்டார்கள்.

நான் ரசிகர் ஷோ பார்த்த முதல்படம் விஜயகாந்த் நடித்த சின்னகவுண்டர்தான்..  பொங்கள் திருநாளின் போது ஏதெச்சையாக அந்த பக்கம் போக கடலூர் பாடலி தியேட்டரில் ஒரு டிக்கெட் 15ரூபாய்க்கு வாங்கி கொண்டு போனேன்.ஆனால் நான் தனியா திரையரங்கில் போய் பார்த்த முதல் படம் ரஜினி நடித்த விடுதலைபடம்தான். எட்டாம்வகுப்பு முழு ஆண்டு தேர்வு எழுதிவிட்டு போனது. முதல்நாளின் போது படம் பார்க்க போவது என்பது பிடிக்காமல் இருந்தது.

பிறகு தனியாக படம் பார்க்க போக ஆரம்பித்தவுடன் முதல் படம் பார்க்க வாய்ப்பு பிடைத்தால் அந்த சத்தத்திலும் போய் பார்த்துவிட்டு வந்துவிடுவேன். கமல் முதல்நாள் முதல் ஷோ என பல  படங்கள்  பார்த்து இருக்கின்றேன். ரஜினிபடம் இதுவரை இல்லை.  அதுவும் இந்த பிரமாண்ட படத்தை பார்த்தேதீர வேண்டும் என்று நினைத்தேன்.

பதிவுலகம் வந்த பிறகு முதல் நாள் படம் பார்ப்பதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், பார்த்த விஷயத்தை உங்களோடு சூட சூட பகிர்ந்து கொள்ள முடிகின்றது. அதனை விரும்பி படிக்கவும் ஒரு நண்பர்கள் கூட்டம் இருக்கின்றது… இறைவனுக்கு நன்றி.

எந்திரன் படத்தின் கதை என்ன?

விஞ்ஞானி ரஜினி ஒரு ரோபோட்டை உருவாக்குகின்றார்… அந்த எந்திரன் ரஜினிக்கு சிட்டி என்று பேர் வைக்கின்றார்..
ரஜினியின் எண்ணம்  போரின் போது மனிதர்களுக்கு பதில் ரோபோக்களை யூஸ் செய்ய வேண்டும் என்பதுதான். ஆனால் மரக்கட்டையான ரோபோவுக்கு சில விஷயங்கள் புரியவைக்க, சோகம், பீலிங், உறவுகள் பற்றி விளக்க, ரோபோவுக்கு விஞ்ஞானி ரஜினியின் காதலி ஜஸ்வர்யாவை ரோபோவும் காதலில் சிக்க முடிவு என்ன என்பது மீதி வெள்ளிதிரையில் பாருங்கள்.


படத்தின் சுவாரஸ்யங்களில் சில….

இந்த படத்தின் கதை இப்படித்தான் இருக்கும் என்று நான் எற்க்கனவே சாண்ட்வெஜ் பகுதியில் குறிப்பிட்டு இருந்தேன்.

ஜ ரோபோர்ட் ஆங்கில படத்தின் ஒன்லைன் அதில் தமிழ் மசாலாவை அரைத்தால் எப்படி இருக்கும்? அதுதான் இந்த படத்திலும்.
படம்  பார்க்கும் முன் யாரிடமும் கதை கேட்டு செல்ல வேண்டாம்.

படத்தின் கிளைமாக்ஸ் அரைமணி நேரம் ஆங்கில படத்தக்கு இணையான உழைப்பை கொட்டி  இருக்கின்றார்கள்.
ரஜினியின் நடைக்கும் உடைக்கும் இன்னும் தொண்டைகிழிய கத்தி பார்க்கும் ரசிகர்கள் நிறைய பேர் இருக்கின்றார்கள்.

படத்தின் டாப் எந்திரன் ரஜினிதான். எந்திரன் ரஜினியை அழகாய் காட்ட விஞ்ஞானி ரஜினியின் தாடி மெக்கப்பில் செயற்கை தனம்.
ஐஸ்வர்யாராய் ரஜினி இருவரும் கலாபவன் மணியிடம் இருந்து தப்பி ஓடி  வந்து  குனிந்து மூச்சி வாங்கும் இடத்தில் மனது கெட்டதனமாய் யோசிக்கின்றது.
ஐஸ்வர்யா சிக்கென் இருக்கின்றார். சில இடங்களில் முதிர்ச்சி தெரிந்தாலும் நன்றாக ஸ்கோர் செய்கின்றார்.

மிக முக்கியமாக கிளிமஞ்சாரோ  சாங்கில் என்ன வளைவு, என்ன நெளிவு.
சந்தானம் கருணாஸ் கொஞ்சமாக சிரிக்க வைக்கின்றனர்.

ஐஸ்வர்யா புடவை தவிர பல காஸ்ட்டியூம்களில் சோபிக்கவில்லை.சில மேக்கப்புகளில் கூட.

இது முழுக்க முழுக்க சங்கர்படம்தான். படத்தின் இறுதி நிமிடங்கள் சான்சே இல்லை. ரஜினி நிறையவே உழைத்து இருக்கின்றார்.

எனக்கு படத்தில் நிறைய இடத்தில் பிடித்தது வசனங்கள்தான்.
அவகிட்ட உடை இல்லை சிட்டி. ஆனா உயிர் இருக்கு.
ஹு இஸ் செல்லாத்தா.
பல வசனங்கள் நினைவில் இல்லை. நினைவில் உள்ளதை பகிர்ந்து கொள்ளுங்கள்.

அமரர் சுஜாதாவுக்கு ஸ்பெஷல் நன்றி போட்டு இருக்க வேண்டும்.படத்தில் நிறைய இடங்களில் லாஜிக் இருக்க சுஜாதா காரணமாக இருந்து இருப்பார் என்று நினைக்கின்றேன்.
முக்கியமாக  வில்லன் இடத்தில் பிளட்,தலைசுற்றுவது என நிறைய லாஜிக் யோசிப்புகள்.

முதல் பாதியில் கொசு சீனும், இரண்டாம் பாதியில் ஜஸ்வர்யாவோடு காரில் கடத்தும் சீனும் கொஞ்சம் தொய்வை வர வைப்பதால் பக்கத்து சீட்டு பாப்பா பாப்கார்ன் சாப்பிடும் அழகை ரசிக்க வேண்டிஇருக்கின்றது.
ரயில் பைட்டில் பீட்டர்ஹைன் அசத்தி இருக்கின்றார். முகம் தெரியாத அடுத்த ஹீரோ சாபுசிரில். ஒரு காட்சியில் நடித்து இருக்கின்றார்.. எல்லா செட்டும் உலக தரத்தில் இருக்கின்றன.

எனக்கு இந்த படத்தில் பிடித்த காட்சி ரயில் சண்டையின் போது ரோபோ ரஜினி ரயிலின் பக்கவாட்டில் ஓடும் போது, ஒருவர் ஒடும் ரயிலில் எச்சில் துப்ப தலையை நீட்டும் போது அவர் முகத்தில் ஒரு உதை விட வாய் வெற்றிலைபாக்கு போட்டுக்கொள்ளும் அந்த இடமும். ரோபோ ரஜினி குழந்தையை தூக்கிபோட்டு விளையாடும் இடமும்,

குப்பத்தில் நடக்கும் சண்டையின் போது எல்லா இரும்பு பொருளும் ஒட்டிக்கொள்ளும் இடமும், ஆயுத பூஜைக்கு ரோபோவுக்கு பொட்டு சந்தனம் தெளித்து இருக்கும் இடங்களில் தமிழ் மசாலாவாக இருந்தாலும் ரசிக்க கூடியதாக இருக்கின்றது

அதே போல் என்ட் டைட்டில் கிரிடிட் 15 நமிடம் ஓடும் முதல் தமிழ்படம் இதுதான்… அவ்வளவு உழைப்பு. எல்லோருக்கும் பாரபட்சம் இல்லாமல் டைட்டிலில் நன்றி தெரிவித்த முதல் தமிழ்படமும் இதுதான்.

ரகுமான் பட்டையை கிளப்பி இருக்கின்றார்... படம் பார்க்கும் போது நம்மையும் அந்த உற்சாகம் தொத்திக்கொள்கின்றது.

கேமராமேன் ரத்னவேல் மற்றும்  அவரின் குழுவின் உழைப்பு அபாரமானது.காதல் அணுக்கள் சாங்ஸ் லோகேஷன் படபதிவும் அற்புதம்.

தமிழ்நாட்டில் மட்டும் 1500 தியேட்டரில் இன்று எந்திரன் ரிலிஸ் என்று ஒரு தகவல் தெரிவிக்கின்றது.

செய்தி சேனல்களில்கூட எந்திரன் பீவர் விட்டு வைக்கவில்லை. என் டி டிசி இந்துவில் மதன் கார்க்கி, மற்றும் பலரிடம் பேட்டி எடுத்து ஒளிபரப்பிக்கொண்டு இருந்தார்கள்.

இந்த படம் ஒட வேண்டும் என்பது என்ஆசை. காரணம் நல்ல விளம்பரத்தோடு ஒரு ஸ்டார்வேல்யூவில் நடித்தால் அதற்கு 150 கோடி வரை செலவு செய்ய ஒரு நம்பிக்கையை இந்த படம் தொடங்கி வைக்கின்றது.

எனக்கு தெரிந்து சென்னையில் இத்தனை தியேட்டரில் படம் திரையிடுவது  திரையுலக வரலாற்றில் இதுவே முதல் முறை. இதற்கு முன் தசவதாரம் திரைபடம் திரையிட்டு இருந்தாலும்.. எந்திரன் படம் எல்லா சாதைனைகளையும் முறியடித்து விட்டது.

மாயாஜலில் ஒரு நாளைக்கு பத்து ஸ்கிரீனில் 60 ஷோ.
இந்த அளவுக்கு செலவு செய்தாலும் ரஜினிக்கு இருக்கும் தமிழ், தெலுங்கு,இந்தி மார்கெட் வேறு எந்த நடிகருக்கும் இல்லை.. வேறு நடிகராக இருந்தால் இவ்வளவு பணத்தை  போட்டு போட்ட பணத்தை திரும்ப  எடுப்பது குதிரை கொம்புதான்.

முதலில் இந்த படம் கமல்,அஜித்,சிரஞ்சீவி,மகேஷ்பாபு,ஷாருக், என்று ஒரு பெரிய ரவுண்ட் அடித்து விட்டு,கடைசியாக ரஜினியிடம் வந்த கதை.
ஹீரோயின் தேர்வுக்கு கூட பல முன்னனி நடிகைகளை அலசிவிட்டு கடைசியாக ஜஸ்வர்யா அறிவிக்கபட்டார்.
முதலில் அயங்கரன் தயாரிக்க முடிவெடுத்து அதன்பிறகு  அவர்களால் இந்த படத்தை தயாரிக்க முடியாமல் போக அதன் பிறகு சன்பிக்சர்ஸ் கையிலெடுத்தது.

செய்த செலவினை சங்கள் பிரேமில் கொண்டு வந்து இருக்கின்றார். பாடல்கள் அனைத்தும் விழிவிரிய வைக்கின்றது. அதே போல் நிறைய செட் சாங் என்பதால் கொஞ்சம் அன்னியபடவும் வைக்கின்றது.

படத்தின் டிரைலர்.படக்குழுவினர் விபரம்.

Directed by S. Shankar Produced by Kalanidhi Maran
Hansraj Saxena Written by S. Shankar
Sujatha Rangarajan
Karky Vairamuthu Starring Rajinikanth
Aishwarya Rai
Danny Denzongpa Music by A. R. Rahman Cinematography R. Rathnavelu Editing by Anthony Gonsalves Studio Sun Pictures Distributed by Sun Pictures
Ayngaran International Release date(s) 1 October 2010 Country India Language Tamil Budget  162 crores.

படத்தின் டிஸ்கி...


எந்திரன் பார்க்கவேண்டியபடம். தமிழில் ஒரு பெரிய முயற்ச்சி. மற்றதமிழ்படங்களை போல சிஜி எல்லாம் கைகொட்டி சிரிக்காமல் மிக சிறப்பாக செய்து இருக்கின்றார்கள்.கடைசி 45 நிமிடம் ரஜினிமயம்தான்.அதனால் ரஜினிரசிகர்களுக்கு வேட்டை காத்துக்கொண்டு இருக்கின்றது. படத்தில் நிறைய லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும் ரஜினி எனும் பிம்பத்தின் முன் எல்லாம் தவிடு பொடி.
பஞ்ச் டயலாக் பேசவில்லை. பெரிய என்டிரி இல்லை.ரஜினி இயல்பாய் நடித்து இருக்கின்றார். குழந்தைகளோடு அவசியம் பார்க்க வேண்டியபடம். அவர்கள் இன்னும் ரசிப்பார்கள்.தமிழ் சினிமாவின் பிரமாண்டம் இந்த படம்.சென்னை வில்லிவாக்கம் ஏஜிஎஸ் ஸ்கிரின் 5ன் தியேட்டர் டிஸ்கி.

ராயல் தியேட்டராக இருந்த போது ஒரு சில பிட்டுபடங்கள் பார்த்து இருக்கின்றேன்.

அந்த இடத்தில் இவ்வளவு அழகான ஒரு தியேட்டர் கனவிலும் நினைத்து பார்க்கவில்லை.

இந்த தியேட்டருக்கு நான் போவது இதுதான் முதல் முறை.
விடியற்காலையில் 5,45க்கு என் வாழ்க்கையில் இப்பபோதுதான் முதல் முறையாக படம் பார்க்கின்றேன்.

இந்த நேரத்தில்தான் எல்லோரும் பல்விளக்கி ஆய் போகும் நேரம் தியேட்டரே ஒரே  கப்பா இருக்காம இருந்தா சரிதான் என்று மொக்கை ஜோக் அடித்தேன்.

நள்ளிரவு 12,45க்கு மாயாஜலில் தமிழ் படம் பார்த்து விட்டு விடியலில் 4 மணிக்கு வீடு வந்து இருக்கின்றேன். இந்த விடியற்காலை அனுபவம் எனக்கு  முதல் அனுபவம்.


காசி தியேட்டரில் காலை 5க்கு படம் போட்டு விட்டார்கள் போல.. அந்த பக்கம் கிராஸ் செய்த போது பட்டாசு வெடித்த பேப்பரும் கந்தக வாசமும் காற்றில் மிச்சம் இருந்தன.

விடியற்காலையில் ரேடியோ மிர்ச்சி குருப் ரஜினி ரசிகர்களோடு அரட்டை அடித்து கொண்டு இருந்தது. ஒரு ரசிகர் ரஜினி படத்துக்கு பால் அபிஷேகம் செய்ய போவதை  உற்சாகபடுத்திக்கொண்டு  இருந்தது.
நான் இந்த தியேட்டருக்கு செல்வது இதுதான் முதல் முறை. நன்றாகவே இருந்தது.


டிக்கெட் 120 பாப்கார்ன் 40 ஒரு கோக் பாட்டில் 40யும் சேர்த்து ஒரு டிக்கெட் 200ரூபாக்கு விற்று இருந்தார்கள்.
அரங்கினுள் போகும் முன்னே ஒரு பாட்டில் கோக் மற்றும் ஒரு டப்பா பார்ப்கான் கொடுத்து விட்டார்கள்.
விடியற்காலை யாரும் பாப்கான் தின்ன யோசிப்பார்கள். அதனால் ரஜினி வந்த போது விசிறி அடித்த துண்டு பேப்பர்களுடன் எல்லோர் மீதும் பாப்கான் மழை பொழிந்தது.
சேவல் பண்ணையாக இருந்த அரங்கை 20  பெண்கள் விடியலில் படத்துக்கு வந்து அந்த அவப்பெயரை துடைத்தனர்.


டிக்கெட் கிழித்து உள்ளே வந்த எல்லோருடைய முகத்திலும் ஒரு அற்புதத்தை கானும் ஆவல் எல்லோருடைய முகத்திலம் தெரிந்தது.
உள்ளே வந்ததும் தலைவா என்று கத்தி பலர் ஆர்பார்ட்டம் செய்தார்கள்.
புடவை கட்டி வந்த பெண்களை பார்த்த போது ஒரு பேன்ட் சட்டை போட்டு குளித்து கிளம்பவே 4 மணிக்கு எழுந்தேன். அவர்கள் எப்படியும் 3 மணிக்கு எழுந்து இருக்க வேண்டும்.

கிளிமாஞ்சாரோ சாங் முடிந்ததும் ஒருவர் மட்டும் எழுந்து ஒன்ஸ்மோர் என்று கத்த, எல்லோரும் அமைதிகாக்க அவரும் அமைதியாகிவிட்டார்.
படத்துக்கு இந்த படத்தின் கேமராமேன் ரத்னவேல் வந்து இருந்தார். எந்த ஸ்கிரினில் பார்த்தார் என்று தெரியவில்லை.
தியேட்டரில் ஒலி ஒன்றும் சிறப்பாக இல்லை.

கலாநிதிமாறன் பேர் போடும் போது சன்டிவியில் கத்துவது போல் இங்கு யாரும் கத்தவில்லை… அங்கே விழாவில் கத்தினால் சன்னில் முகம் காட்டுவார்கள் என்ற நம்பிக்கை இந்த அரங்க இருட்டில் இல்லாத காரணத்தால் மாறன் பேர் போடும் போது சத்தமே இல்லை.

==================
திரும்பவும் டிக்கெட் கொடுத்த குறும்பழகனுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....

குறிப்பு.. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்..

57 comments:

  1. சுடச் சுட விமர்சனம் எழுத வேண்டும் என்ற உங்கள் கடமையுணர்ச்சி புல்லரிக்க வைக்கிறது.

    விமர்சனத்திற்கு நன்றி.

    ReplyDelete
  2. அழகான விமர்ச்சனம்...

    இன்னைக்கு இரவு குடும்பத்தோட படத்துக்கு டிக்கெட் வாங்கியாச்சு....

    ReplyDelete
  3. ஜாக்கி,

    கலாநிதிமாறன் பேர் போடும் போது சன்டிவியில் கத்துவது போல் இங்கு யாரும் கத்தவில்லை… அங்கே விழாவில் கத்தினால் சன்னில் முகம் காட்டுவார்கள் என்ற நம்பிக்கை இந்த அரங்க இருட்டில் இல்லாத காரணத்தால் மாறன் பேர் போடும் போது சத்தமே இல்லை.

    கலக்கல் விமர்சனம்..

    ReplyDelete
  4. அதிகாலை படம் பார்த்து உடனே செய்த விமர்சனம் அருமை.

    கடைசி அரைமணி நேரம் இன்னும் ஒரு கெட்டப் இருக்குன்னு சொன்னாங்க. அது என்னன்னு நீங்க சொல்லவே இல்லையே. சஸ்பென்ஸ்னு விட்டுட்டீங்க போல.

    இப்பவே ட்ரெயிலர் பார்த்தே என் மகன், படம் பார்க்க வேண்டும்னு சொல்றான். கண்டிப்பாக பார்க்க வேண்டும்.

    ReplyDelete
  5. அருமையான விமர்சனம் ஜாக்கி...

    உங்கள் உழைப்பு எங்களை உற்சாகம் கொள்ள செய்கிறது..

    ReplyDelete
  6. படத்தில் நிறைய லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும் ரஜினி எனும் பிம்பத்தின் முன் எல்லாம் தவிடு பொடி.
    பஞ்ச் டயலாக் பேசவில்லை. பெரிய என்டிரி இல்லை.ரஜினி இயல்பாய் நடித்து இருக்கின்றார். குழந்தைகளோடு அவசியம் பார்க்க வேண்டியபடம். அவர்கள் இன்னும் ரசிப்பார்கள்.தமிழ் சினிமாவின் பிரமாண்டம் இந்த படம். உண்மை தான் தலைவா

    ReplyDelete
  7. jakie sir,
    BP egiriduchu review pathathilerunthu

    ReplyDelete
  8. ஜாக்கி...

    இதுதான் சுடச்சுட விமர்சனம்.

    சிறப்பு.

    ரெண்டாவது தடவ பாத்துட்டு வர்றேன்.

    Bye

    அன்பு நித்யன்.

    ReplyDelete
  9. தல கலக்கிட்டீங்க... ஒரு பய இல்ல இது மாறி எழுதுறதுக்கு...

    ஜாக்கி சேகர்:

    Speed: one terra Hz
    Memory: one zeta byte

    இவருக்கு உலகத்தில் உள்ள அனைத்து மொழிகளும் தெரியும். அனைத்து கலைகளும் தெரியும்... ஆனா கொஞசம் கொஞசம் தான் தெரியும்....

    ReplyDelete
  10. ஜாக்கி... பல காட்சிகள் ஐ-ரோபோவை நினைவுபடுத்தினாலும், இந்த படத்தின் மூலம் "Bicentennial Man" என்பது தான்...

    ReplyDelete
  11. //ஐஸ்வர்யாராய் ரஜினி இருவரும் கலாபவன் மணியிடம் இருந்து தப்பி ஓடி வந்து குனிந்து மூச்சி வாங்கும் இடத்தில் மனது கெட்டதனமாய் யோசிக்கின்றது.//

    அண்ணே உங்க தலை ல இருக்குற முடி range க்கு
    இதெல்லாம் தேவையா??

    ReplyDelete
  12. உங்க விமர்சனத்துக்குத்தான் வெயிட்டிங்க் .இதொ கெலம்பியாச்சு பார்த்துட்டு சொல்ரென் 

    ReplyDelete
  13. பின்னுட்டம் இட்ட அனைவருக்கும் என் நன்றிகள். படத்தை நல்ல தியேட்டரில் பார்க்கவும்.

    ReplyDelete
  14. தம்பி பிரபு அப்படி பார்த்த ரஜினி இந்த படத்துல நடிச்சி இருக்கவே முடியாது.

    ReplyDelete
  15. சரி .. பாத்துடுவோம்.

    ReplyDelete
  16. Arumai patathain climax patri inum eluthirukalam

    ReplyDelete
  17. நல்ல விமர்சனம்.

    இருந்தாலும் உங்களின் ரெகுலர் ஃப்ளோ இல்லை. காரணம் ரஜினியா இல்லை நேரமின்மையா தெரியவில்லை.

    எனிவே, குட் ஒன்.

    ReplyDelete
  18. Dear Mr. Jackie,
    Nice Sharing, we all went to Enthiran Noon Show here. Yesterday itself movie released but we cant able to get ticket. Total 18 persons went to this movie, all our colleagues. Nice movie we all liked & enjoyed it well.

    Thanks,
    Vijay
    Muscat

    ReplyDelete
  19. ஜாக்கி சார் இத்திரைப்படத்தையும் விமர்சிக்கவும் Bicentennial Man (1999)

    ReplyDelete
  20. ஜாக்கி சார் இத்திரைப்படத்தையும் விமர்சிக்கவும்

    Bicentennial Man (1999)

    ReplyDelete
  21. ஷங்கரின் படத்திலிருக்கும் பிரமாண்டம் இதில் அதிகமாவே இருக்கு.இருந்தும் ஏதோ ஒன்று இல்லை.தாத்தா ரஜினிய கூட ஓரளவு இளமையாகக்காட்டிட்டு... அழகி ஐஸ்வர்யாவை ஆண்டி ஐஸ்வர்யாவாக காட்டியதைத்ததான் தாங்கவே முடியல்ல.மற்றபடி தொழில்நுட்பரீதியில்(மட்டும்)நல்ல படம்.கட்டாயம் தியேட்டரில் பார்க்க வேண்டிய படமும் கூட.இந்த படத்த பற்றி ஒரே வரியில் சொன்னால்..பப்பறப்ப என்று பார்க்கிற படம்.அவ்வளவுதான்.நல்ல முயற்சிகளையும் கடுமையான உழைப்பையும் ஊக்கிவிப்பது ஒவ்வோருவரினதும் கடமை.

    ReplyDelete
  22. ஜாக்கி, படம் பார்த்தாச்சு ஆனா,ஒரு அரதப் பழசான" வாலி" டைப் கதைக்கு ரோபோ முலாம் பூசி இருக்கிறார் ஷங்கர். திரைக்கதையிலும் ஏதும் புதுமையில்லை. அதே பழைய படங்களின் காட்சிகள். உழைப்பு எல்லாமே வீண். கதைப் பஞ்சம் உள்ள டைரக்டர்.

    ReplyDelete
  23. Thanks 4 sharing Your Review - உங்கள் விமர்சனத்திற்கு நன்றி

    டாப் 60 ரோபோட் எந்திரன் ஸ்டில் படங்கள்

    ReplyDelete
  24. காலையிலேயே சுட சுட போய் படம் பாத்துட்டு கட கட-னு விமர்சனம் எழுதியதுக்கு நன்றி பா! எந்திர வேகம் தான்!

    ReplyDelete
  25. காலையிலேயே சுட சுட போய் பாத்துட்டு கட கட-னு விமர்சனமும் எழுதினதுக்கு நன்றி பா! எந்திர வேகம் தான்!

    ReplyDelete
  26. காலையிலேயே சுட சுட போய் படம் பாத்துட்டு கட கட-னு விமர்சனமும் எழுதினதுக்கு நன்றி பா! எந்திர வேகம் தான்!

    ReplyDelete
  27. First day, first show is first time for me. nice experience. ticket price rs.600 here in bangalore :( movie is good. nice post

    ReplyDelete
  28. this film kinda reminding me the I robot bit and the robin willam's bicentennial man. but good try

    ReplyDelete
  29. எனக்கு படம் அந்த அளவுக்கு புடிக்கல, கிளைமாக்ஸ் இன்னும் massive வ காட்டி இருகனுமோனு தோணுது, எல்லாரும் இப்படி புகழர அளவுக்கு ENTHIRAN நல்ல படம் கிடையாது

    ReplyDelete
  30. sir நாங்களும் முதல் நாளே படம் பாத்துட்டோம்..எங்க ஊர் தியேட்டர் ஆனா ராக்கியில காலையில 4 மணிக்கெல்லாம் படம் போட்டுட்டான்..உங்களுக்கு முன்னாடியே நாங்களும் படம் பாத்துட்டோம்

    ReplyDelete
  31. pommai endra tamil padaththil driver lightboy samaiyalkaarar endry anaiththu peyarkalum idam petru irukkum.


    kethirapalu@gmail.com

    ReplyDelete
  32. அண்ணே விமர்சனம் எல்லாம் அருமை. எப்போ படம் பாக்கப் போறீங்க?? :-)

    (நிஜத்தில் அருமையான விரிவான விளக்கமான விமர்சனம். நன்றி :-))

    ReplyDelete
  33. Dear Reviewer,
    Your review is very good. I am waiting for the normal rate of tickets. All is well except the ticket rate. Sun network stimulated the Rajini fans about this film and earning money. I read that one ticket at ariyalur was sold for Rs.3000. See for a common man this is a half month salary. But as you told if this movie would go successfully to encourage the industry to think in this direction in future too. Solute for Sankar and Rajini and all the behind screen heros (including light boys etc) for their hard work.

    ReplyDelete
  34. Hi Jaki,
    Please see this clip and give your comment. Keep doing the good job.
    http://www.youtube.com/watch?v=z5YMEwX2-88&feature=player_embedded
    Thanks.
    Thuva.K

    ReplyDelete
  35. Anna
    Padaam super!!!!!!!!!! Annal Pala edngalil pala cinimavin sayal tarigirathu
    Eg-
    Charlie And Chocklate Factory
    Transformers
    Bicnetimental Man
    Matrix
    Universal Solder
    Robo Cop
    Tele Serial Automan, Street Hawk, Vicky The Robo, Captain Vyom

    ReplyDelete
  36. sir,
    "nethu dan padam parthen veetla night show ticket thirumbi ketten veetla vangi tara mattentanga:::::::
    anda alavuku padam super
    chiti ya kaiyoda veetuku kootitu vandudanum"
    thalaivar a thavira vera yarum all indian super star kidaiyadu

    ReplyDelete
  37. anbudan Jacki Sir,
    vimarsanam padiththen.Nanraaga irunthadhu.Paarkka thoondiyadhatkku Nanri.
    anbudan
    Major(Dr) N Sekar
    sekar_vasanth26@gmail.com

    ReplyDelete
  38. என்ன ஜாக்கி தூக்கக்கலக்கத்தில் எழுதினீங்களா ? உங்க FLOW இல்லையே ?

    ReplyDelete
  39. அன்புள்ள திரு ஜாக்கி அவர்களுக்கு

    வணக்கம். உங்கள் எந்திரன் பட விமர்சனம் படித்தேன். ரொம்ப நாள் ஆகிவிட்டது உங்களுடன் பேசி, உங்கள் எழுத்தை படித்து.

    நலமா?

    இந்த எந்திரன் படம் பல வருடங்களுக்கு முன் வந்த ஆங்கில படம் SHORT CIRCUIT - தழுவல். இந்த ஆங்கில படம் சில பாகங்களாக வந்தது. உங்களுக்கு தெரிந்து இருக்கும். முடிந்தால் இதை உறுதி செய்யுங்கள்.

    எப்படியோ தமிழில் இது மிகவும் சூப்பர். இதுபோல இன்னொன்று வர மிக சமீபத்தில் வாய்ப்புகள் இல்லை என்றே சொல்லலாம்.

    வாழ்த்துக்கள்.

    திருச்சியில் இருந்து வாசு.

    ReplyDelete
  40. சேலத்தில் நேற்று இரவு 6.45 காட்சியின் போது (Big Cinema - Kailash/Prakash) 70 சதவீத இருக்கைகள் தான் நிறைந்திருந்தது. நிச்சயமாக அதிக விலை கொடுத்து பார்க்க மக்கள் தயாரில்லை என்பது தெரிகிறது. 7 நாட்களுக்கு அனைத்து திரையரங்குகளிலும் முன்பதிவு என்பதெல்லாம் பச்சைப் பொய். நான் வழக்கம் போல் முன்பதிவு இல்லாமல் கவுண்டரில் டிக்கட் வாங்கி படம் பார்த்தேன். வழக்கமான ஷங்கரின் ஊழல் பற்றிய விழிப்புணர்வு இந்த படத்தில் இல்லை. மக்களுக்கு எந்த செய்தியும் சொல்லப்படவில்லை. ஷங்கரின் பிரம்மாண்டம் மட்டும் உண்டு. ஷங்கரின் தொழில்நுட்ப பிரம்மாண்டத்தில் பார்க்க வேண்டிய ஒரு ரஜினி படம்.

    ReplyDelete
  41. மிக அருமையான பதிவு

    http://denimmohan.blogspot.com/

    ReplyDelete
  42. //தம்பி பிரபு அப்படி பார்த்த ரஜினி இந்த படத்துல நடிச்சி இருக்கவே முடியாது. //

    முடி கொட்டுனவங்க எல்லாம் ரஜினியாண்ணே?

    ReplyDelete
  43. oru chinna thirutham. Entha padam bicentinal man padathen pathippu. irobot padathen pathippu kediyaathu

    ReplyDelete
  44. பின்னுட்டம் இட்ட அனைவருக்கும் என் நன்றிகள்.

    ReplyDelete
  45. Jackie:

    I did see this movie by paying $25( which is very very high)on sunday. Well, though technically in tamil movie world it is a mile stone... but in the second half few places the movie is over cooked!!

    ReplyDelete
  46. "அமரர் சுஜாதாவுக்கு ஸ்பெஷல் நன்றி போட்டு இருக்க வேண்டும்.படத்தில் நிறைய இடங்களில் லாஜிக் இருக்க சுஜாதா காரணமாக இருந்து இருப்பார் என்று நினைக்கின்றேன்."
    அனால் சுஜாதாவுக்கு உரிய மரியாதை செய்யப்படவில்லை என்பது என் கருத்து. மலேசியா நிகழ்ச்சியில் கூட ஷங்கர் எல்லா டெக்னீஷியன் யும் விரிவாக பாராட்டினார். அனால் சுஜாதாவை பெயரை போகிற போக்கில் அவர் உச்சரித்தார்.

    ReplyDelete
  47. Rich Man's RamaNarayanan Movie- Enthiran

    ReplyDelete
  48. Very good post.

    Check out mine if you get a chance.
    http://mageshrajasekaran.blogspot.com/

    Thanks,
    Magesh.R

    ReplyDelete
  49. i would like to see nice telugu movies.. as ARR is the music director ,i thought of watching this movie with my hubby who is not at all interested in telugu movies..Due to work we were not able to go,,Thank God I didnt take my husband ,otherwise my hubby would have gone tensed watcing this same kind stuff movies

    ReplyDelete
  50. அமரர் சுஜாதாவுக்கு ஸ்பெஷல் நன்றி போட்டு இருக்க வேண்டும்.படத்தில் நிறைய இடங்களில் லாஜிக் இருக்க சுஜாதா காரணமாக இருந்து இருப்பார் என்று நினைக்கின்றேன். முக்கியமாக வில்லன் இடத்தில் பிளட்,தலைசுற்றுவது என நிறைய லாஜிக் யோசிப்புகள்.
    Really great...!

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner