(SERBIS)18++ உலக சினிமா/பிலிப்பைன்ஸ்.. ஒரு கலீஜ் தியேட்டர்...


நாம் கலீஜ்  என்று முகம் சுளிக்கும் இடத்தில்தான் பல பேர் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள்... அவர்களும் மனிதர்கள்தான்... அவர்களும் நம்மை போலவே இந்த பூமியில் வாழ வந்தவர்கள்...பிறப்பின் பின் புலத்தால் அந்த இடத்தில் வாழ்கின்றார்கள்...இந்த உலகில் எதுவுமே கலீஜ் இல்லை... முகம் சுளித்தால் எங்கும் வாழ முடியாது....உயிர் வாழ தகுதியுடையவனாக தன்னை மாற்றிக்கொள்ள எந்த இடத்திலும் எது செய்தாவது வாழ வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் விளிம்பு நிலை மனிதர்கள் பற்றிய கதை இது....எங்கள் ஊர் கடலூரில் முத்தையா என்று ஒரு தியேட்டர்... அந்த தியேட்டர் டிவி வருகைக்கு முன் சக்கை போடு போட்டது... அந்த தியேட்டரில் பல படங்கள் குடும்பத்துடன் பார்த்து இருக்கின்றோம்...ஒரு கட்டத்தில் அந்த தியேட்டர்  தன்னை புதுப்பித்துக்கொள்ள தவறிய காரணத்தால்,  அது பொலிவிழந்து போனது...  அப்புறம் அந்த தியேட்டரில் பலான படங்கள் ஓடத்துவங்கியது....அதே போல் சென்னையில் பாடி பக்கத்தில் சாந்தி என்று ஒரு தியேட்டர் இருந்தது... இப்போது இருக்கின்றதா? என்று தெரியவில்லை... இருப்பினும் வடபழனியில் இருந்து பாடி பிரிட்டானியா பஸ் ஸ்டாப்பில் இறங்கி இரண்டு கிலோ மீட்டர் நடந்தால் அந்த தியேட்டர் வரும்....
எழே காலுக்கு படம் போட்டு இன்டர்வெல்லையும் சேர்த்து எட்டேகாலுக்கு படம் விடும் ஒரே தியேட்டர் அந்த தியேட்டர்தான்... படம் ஆரம்பித்த பத்தாவது நிமிடம் தமிழ், மற்றும் மலையாள படங்களின் பிட் ஓடும்... இன்டர்வெல் பத்து நிமிடம்... அதன் பிறகு ஆங்கில படங்களின் பிட் காட்சிகள் ஓடும்....மொழிக்கு ஓர வஞ்சனை செய்யாத ஒரே தியேட்டர் அதுதான்....

அதே போல் பரங்கிமலை ஜோதி.... ஆனால் தற்போது இந்த தியேட்டர் தன்னை புதுப்பித்துக்கொண்டு இப்போது  ஆயிரத்தில் ஒருவன் படத்தை வெற்றி நடை போட வைக்க போராடி வருகின்றது...
இது போன்ற தியேட்டர்களில் வரும் பார்வையாளர்களில் ஒரு 20 சதவீதம் பேர் கஞ்சா புகைத்துக்கொண்டு இருப்பார்கள்...ஹோமோசெக்சும் இந்த இடங்களில் சங்கதே குறிகளாக பறிமாற்றம் செய்து கொள்ளபடும்...  பட்டைசரக்கு அடித்து விட்டு அதாவது சராயம் அடித்து விட்டு வரும் குடிமகன்கள் ஏராளம்... இது போல் பலான படம் ஓடும் தியேட்டர்களின் பின்புலத்தை ஆராய்ந்தால் அதில் ஒரு விஷயம் நிச்சயம் புலப்படும்.. பார்ட்னர்கள் இருப்பதால் யார் மெயின்டெயின் செய்வது என்ற போட்டியிலேயே... பாதி தியேட்டர் கல்யாண மண்டபங்களாகி போய் விட்டது... அப்படி ஒரு பலான படம் ஓடும் பிலிப்பைன்சில் உள்ள ஒரு தியேட்டரின் கதையைதான்  இதில் பார்க்க போகின்றீர்கள்....


(SERBIS)18++ உலக சினிமா/பிலிப்பைன்ஸ் படத்தின் கதை இதுதான்...

அந்த பலான படம் ஓடும் தியேட்டர் பெயர் பேமிலி.......Nanay Flor தான் அந்த தியேட்டரின் ஓனர் பெண்மணி...அவருக்கும் அவர் கணவருக்கும் சொத்து பிரச்சனையில் அந்த தியேட்டர் இருக்கின்றது.... இதனால் அந்த தியேட்டர் புதுப்பிக்காமல் இருப்பதை வைத்து அந்த தியேட்டரை ஓட்டுகின்றனர்...  பலான படங்கள்தான்  அந்த தியேட்டரின் வருமானத்துக்கு ஒரே வழி...Nanay Flor ன் பெண்Nayda  மற்றும் அவள் குழந்தை அவள் கணவன் எல்லோரும் அந்த தியேட்டரிலேயே ஒரு பகுதியில் தங்கி இருக்கின்றனர்....டிக்கெட் கொடுக்க வேண்டும் என்றாள் அவள் மகள் கொடுப்பாள்... கேன்டின அவளது மருமகன் பார்த்து கொள்ள... இப்படி அந்த தியேட்டரையும் ரன் செய்து கொண்டு, குடும்பத்தோடு அந்த தியேட்டரில் தங்கி.... அந்த தியேட்டரை தன் கணவனிடம் இருந்து பெற கோர்ட் படிகட்டுகளில் Nanay Florபோராடுகின்றாள்....அந்த தியேட்டரில் அனைத்து சட்ட விரோதமான காரியங்களும் நடக்கின்றன...இரண்டு டிக்கெட் வாங்கி கொண்டு விலைமாதர்களுடன் தியேட்டரின் உள்ளே புணர்தலில் இருந்து,ஹோமோசெக்ஸ்வரை கொடிகட்டி பறக்கின்றது... இது எல்லாம் தியேட்டர் பெண்மணிக்கு தெரிந்தாலும் வருமாணம் வேண்டும் என்பதால்  எல்லா வற்றையும் செய்கின்றார்கள்...
Alan அதே தியேட்டரில் வரும் பலான படங்களுக்கு தினசரி 4 காட்சிகள், இப்படம் இன்றே கடைசி போன்ற, சின்ன சின்ன வரை பணியில் இருந்து பெரிய பெரிய  கவர்ச்சி படம் வரைவது எல்லாம் இவன் வேலைதான்.... ஆலன் அவன் கேர்ள்பிரண்டை தியேட்டர்வளாகத்தில் ஒரு அறையில் வைத்து காரியம் முடிக்க அவள் கற்பமாகின்றாள்.....Nanay Flor தன்  கணவனுக்கு எதிராக சொத்துக்காக போராடினாலும்  பெற்ற மகனே அப்பா பக்கம் சாட்சி சொல்ல கேசில் தோற்று போகின்றாள்... முடிவு என்ன என்பதையும் அந்த தியேட்டரை நம்பி உள்ள குடும்பமும் அதன் உறுப்பினர்களும் என்ன ஆனார்கள்? வழக்கம் போல் வெண்திரையில்...

படத்தின் சுவாரஸ்யங்களில் சில....


இது கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கான படம்.....

இந்த படம் பிலிப்பைன்ஸ் நாட்டின் சினிமா பாரடைசோ என்றால் மிகையாகாது...

இந்த படத்தை அப்பட்டமாக ரியாலிட்டியாக எடுத்து இருக்கும் இயக்குனர்Brillante Mendoza பாராட்டுக்குறியவர்...தியேட்டர் பாத்ரூமில் அடைப்பு ஏற்பட்டு சிறுநீர் மஞ்சள் கலரில் கனுக்கால் அளவு நிற்க்க அதனை கதாநாயகன் சுத்தபடுத்தும் அந்த காட்சி மேட்டுகுடி மக்கள் பார்த்தால் கண்டிப்பாக முகம் சுளிப்பார்கள்... அல்லது வாந்தி எடுத்து வைக்கும் காட்சி அது...
அந்த தியேட்டரில் ஆடு ஓடும்... திருடன் ஓடுவான், அவனை பிடிப்பார்கள்... விலைமாதர்கள் வரிசையாக நின்று ஆள் பிடிப்பார்கள்... இந்த சூழலில் ஒரு சிறுவன் பள்ளிக்கு போய் விட்டு வருவான்...

ஆலனும் அவன் காதலியும் புணரும் அந்த காட்சியும்... ஆலனின் பட்டைக்சில் இருக்கும் பழுத்த கட்டியை ஒரு பாட்டிலை எடுத்து அதன் வாய் புறத்தை அந்த கட்டியின் மேல் வைத்து அந்த பாட்டிலை ஒரு அடி் அடிக்க அந்த கட்டி பிய்த்துக்கொண்டு... ரத்தமும் சீழுமாக பாட்டிலில் பீய்ச்சி அடிக்கும் அந்த காட்சி உங்கள் மனதில் விட்டு அகல நெடுநாள் பிடிக்கும்...

இந்த படம் பார்க்கும் போது இப்படி எல்லாம் தியேட்டர் இருக்குமா? என்று நீங்கள் கேள்வி கேட்டால் அது உங்கள் அறியாமை என்றே சொல்ல வேண்டும்....

படம் முடிந்து பல மணிநேரம் அந்த தியேட்டர் பற்றிய நினைவு நம்முடனே இருக்கும்...

அந்த தியேட்டரின் ஒரு பகுதியில் ஹேமோசெக்ஸ் கொடி கட்டி பறக்கின்றது... ஹோமேசெக்சின் சக்கேத குறியீடு ஆங்கிலத்தில் சர்விஸ் என்ற பெயர் அதையே இந்த படத்துக்கு தலைப்பாகவும் வைத்து விட்டார்கள்...

இந்த படம் சென்னை 6வது உலக திரைப்படவிழாவில் உட்லண்ட்ஸ் தியேட்டரில் திரையிடபட்டது...

இந்த படம் கேன்ஸ் திரைபடவிழாவில் நாமினேட்டேட் செய்யபட்டது...
பாங்காக் உலக திரைபடவிழாவில் விருத பெற்றது...மற்றும் சிறந்த இயக்குனருக்கான விருதையும் பெற்றுதந்தது....

ஆலன் காதலியுடன் படுத்துக்கொண்டு உடைந்த கட்டியை பார்க்கும் காட்சிக்கு இங்கு கிளிக்கவும் 18++

படத்தின் டிரைலர்....


படக்குழுவினர் விபரம்...

Directed by      Brillante "Dante" Mendoza
Produced by     Ferdie Lapuz
Written by     Armando Lao
Starring     Gina Pareño
Coco Martin
Jaclyn Jose

Music by     Gian Gianan
Cinematography     Odyssey Flores
Editing by     Claire Villa-real
Release date(s)     2008
Running time     1 hour, 33 minutes, 29 seconds minutes
Country     Flag of the PhilippinesPhilippines
Language     English
Tagalog
Filipino


இது போன வருடடத்துக்கு முந்தைய உலக திரைப்பட விழாவில் திரையிட பட்டது.. இது ஒரு மீள் பதிவு...  நேரம் இல்லாத காரணத்தால் மீள் பதிவு.....

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....

குறிப்பு..

இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகடுத்துங்கள்.

பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்.

9 comments:

 1. //இந்த படம் பிலிப்பைன்ஸ் நாட்டின் சினிமா பாரடைசோ என்றால் மிகையாகாது...//
  ஆகா! அப்பிடின்னா பாக்கணுமே! :-)

  //சினிமா பாரடைசோ//
  அந்த ஒரே ஒரு சொல்லுக்காக!!

  ReplyDelete
 2. வெண் திரையிலா??? எப்படிங்க அதுவும் நம்ம ஊர்ல....

  பார்க்கவேண்டிய படம்னு சொல்லிட்டீங்க. நிச்சயம் பாத்துடலாம்

  ReplyDelete
 3. //ஆலன் காதலியுடன் படுத்துக்கொண்டு உடைந்த கட்டியை பார்க்கும் காட்சிக்கு இங்கு கிளிக்கவும்//..ஏண்ணே, படிக்கவே என்னவோ போல் இருக்கு..இதுல லின்க் வேற குடுத்து பயமுறுத்துறீங்களே...நல்ல விமர்சனம்.

  ----செங்கோவி
  ஈசன் - விமர்சனம்

  ReplyDelete
 4. JACKIE ANNA I AM YOUR READER FOR THE PAST TWO YEARS. I LIKE STYLE OF NARRATION EVENTS.IT IS QUIET SIMPLE AND ENJOYABLE.WHERE CAN I GET ABOVE FILM C D OR TOBE DOWNLOADED? NOTE.I AM RESIDING NEAR SHANTHI THEATRE .PADI.

  ReplyDelete
 5. படம் பார்க்கும் ஆர்வத்தை அதிகரிக்கிறது தல எழுத்து நடை . விரைவில் படம் பார்த்து விடுகிறேன்

  ReplyDelete
 6. I watched this movie. Not that good one.
  Thanks for recommending anyways.

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner