#spotlight
investigative journalism ங்கறதுஒரு கலைன்னு வெளி நாட்டுல சொல்லலாம்... ஆனா நம்ம ஊர்ல உயிருக்கு உத்திரவாதம் இல்லாத விஷயம்... investigative journalism ங்கறது சாதாரண விஷயம் இல்லை... உயிரை பணயம் வைக்கிற விஷயம்... உடல் பொருள் ஆவி அத்தனையும் கொடுக்க தயாராக இருக்க வேண்டும்...
முதன் முதலில் தமிழகத்தில் ஒருவன் எழுத்தை பார்த்து பயந்து போனது யாருக்கு தெரியுமா? எனக்கு தெரிந்து முன்டாசுக்கவி பாரதிக்குதான்.. குறித்துக்கொள்ளுங்கள் எனக்கு தெரிந்தவரை....... பாரதியை கைது செய்ய ஸ்கெட்ச் போட்டார்கள்... ஆனாலும் சுந்திர தாகத்தை தனது கட்டுரை மற்றும் கவிதைகள் மூலம் தமிழக மக்களுக்கு சுதந்திர தாகத்தை ஊட்டிக்கொண்டு இருந்தான்...
விடுதலை போராட்ட வீரர் வஉசிக்கு இரட்டை ஆயுள் தண்டனை கொடுத்ததை , இந்தியா என்ற வார ஏட்டிலும், பாலபாரதம் என்ற ஆங்கில இதழிலும் தோலுரித்து தொங்க விட்டுக்கொண்டு இருக்க..... 1918 ஆம் ஆண்டில் பாண்டிச்சேரியில் இருந்து வெளியேறிய போது தமிழ் நாட்டு எல்லையில் பாரதி கைது செய்யப்பட்டார்... 34 நாட்கள் காவலில் வைக்கபட்டு விடுதலை செய்யப்பட்டார்...