சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/(01•12•2010)

ஆல்பம்..

இன்று எயிட்ஸ் தினநாள். தமிழகத்தில் கடந்த பத்து வருடத்தில் எலக்ட்ரானிக் மீடியா போல பிரபலமான நோய் எயிட்ஸ் நோய்.. எனது கல்லூரியில் சில வருடத்துக்கு முன் ஒரு டிசம்பர் முதல் நாளின் போது எயிட்ஸ் பற்றிய கருத்தரங்கத்திற்கு ஒரு எயிட்ஸ் பாதிக்கபட்ட நபரை மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தோம்..


அந்த நபர் பேசியது பல மாணவர்களுக்கு உபயோகமாகவும் யோசிக்க வைப்பதாகவும் இருந்தது.. இந்த வயசுல காமம் தலைதூக்கும் முடிந்தவரை கட்டுபடுத்துங்க இல்லையா? தயவு செய்து காண்டம் யூஸ் பண்ணுங்க.. என்று கெஞ்சி கேட்டுக்கொண்டார். எனக்கு காண்டம் பிடிக்காது... அதனால் அதை யூஸ் செய்யவில்லை.. வாரத்துக்கு மூன்று பெண்ணை படுக்கையில் சாய்ப்பேன். விலைமாதர்கள் என்றால் மட்டும்தான் நான் காண்டம் அணிவேன்.. விலைமாதர் அல்லாத பெண்களிடம் நான் காண்டம் அணிந்தது இல்லை. மிக முக்கியமாக அக்கபக்கம் வீட்டு ஆண்டிகளை கரெக்ட் செய்து  போடும் போது நான் காண்டம் தவிர்த்து விடுவேன்.. பேமிலி லேடிஸ்தானே இவர்கள் மிக சுத்தமாக இருப்பார்கள் என்ற நம்பிக்கைதான் முக்கியகாரணம்... என் அருமை மாணவர்களே அப்படி மட்டும் நம்பிவிடாதீர்கள். எந்த புத்தில் எந்த பாம்பு இருக்கின்றது என்று உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை... இன்று நான் நடைபினமாக வாழும் வாழ்க்கை காண்டம் தவிர்த்த காரணத்தினால்தான் என்று சொல்ல பல மாணவர்கள் தெளிவு பெற்றார்கள்... பொதுவாக எந்த பெண்ணிடம் போனாலும் காணடம் அணியுங்கள் அதுவே உங்களை தற்காத்துக்கொள்ள சிறந்தவழி என்றார். பல மாணவர்கள் தங்கள் சந்தேகங்களை  அந்த நபரிடம் வெளிப்படையாக கேட்டார்கள்.ஆனால் பல பெண்களுக்கும் பல ஆசிரியைகளுக்கும் அந்த நபரை பிடிக்கவில்லை....
==============

புதிய காற்றுழத்த தாழ்வு நிலை உருவாகியிருக்கின்றது.. இரண்டு நாட்கள் டெல்ட்டா பக்கம் வெயில் அடித்து விவசாயிகள் மகிழ்ந்மு இருக்கும் போது திரும்பவும் மழை அதிகமாக பெய்ய ஆரம்பித்து இருக்கின்றது. பழைய தென்னார்காடு மற்றும் கரைக்கால் பகுதிகள் வெள்ளத்தில் மூழக ஆரம்பித்து இருக்கின்றன.. பல ஊர்களின் தரைபாலங்கள் அடித்து செல்லபட்டு விட்டன... முதல் கட்ட நடவடிக்கைக்கு 100கோடி சேங்ஷன் செய்து இருக்கின்றார்.. தமிழக முதல்வர்... சரியாக போய் சேர்ந்தால் சரிதான்.. போகுமா?
===================
மழையால் சேதம் அடைந்த சாலைகள் சரி செய்ய 1000ம் கோடிரூபாய் அறிவித்து  இருக்கின்றது. வரும் 15ம் தேதிக்கு அப்புறம் மழை நின்றதும் சரி செய்யபடும் என்று துணை முதல்வர் அறிவித்து இருக்கின்றார்.. பார்ப்போம்... தேதி சொல்லி சிலைசெப்பனிடபடுவது இப்போதுததான் எனக்கு தெரிந்து..
=================
25 பைசாவை பிச்சைகாரர்கள் ஒதுக்கி பல வருடங்கள் ஆகிவிட்டது.. அதனால் மத்திய அரசு இருப்பத்தஞ்சி பைசாவை திரும்பி பெற்றுக்கொள்கின்றோம் என்று அறிவித்து விட்டது. பிச்சைகாரர்கள் ஒரு ரூபாய் கேட்கின்றார்கள். இன்னும் பரிதாபமாய் ஒரு டீ வாங்கி கொடு என்று சொல்கின்றார்கள். ஒரு டீ 5 ரூபாய் அதுக்கு ஒரு ரூபாய் எவ்வளவோ மேல் என்பதால் 5 ஒரு ரூபாய் சில்லைரையுடன் வெளியே கிளம்புகின்றேன்.
=============================
மிக்சர்..

எங்கள் வீட்டுக்கு பக்கத்தில்தான் பொன்வித்யாசரம் பள்ளி இருக்கின்றது..பள்ளி மேல்தளத்தில் கட்டுமானபணியின் போது சுவர் ஒன்று இடிந்து விழுந்து விட.. ஒரே ஸ்கூட்டி மற்றும் ஆக்டீவாக்களின் படையெடுப்பு...எல்கேஜிக்கு 40ஆயிரம் டோனேஷன் கொடுக்கறோம் ஸ்கூல் நடக்கறச்சே இப்படித்தான் அஜாக்கிரதையா இருக்கறதா? என்று ஒரு மாமி 4  இளம் அம்மாக்களுக்கு மத்தியில் முழங்கிகொண்டு இருந்தார். சன் செய்தியில் ஸ்கோரிலிங்கில் செய்தி ஓட கடலூரில் இருந்து என மாமா பையன் என் வீட்டு பக்கத்தில் நடந்த நிகழ்வை பற்றி கேட்ட போதுதான் எனக்கு விஷயமே தெரிந்தது...
=======================

நன்றிகள்...
பிரபலமாக இருந்தும் தன் இமேஜ் பற்றிகவலைபடாமல் எயிட்ஸ் விழிப்புனர்வு நிகழ்ச்சியில் கலந்து கொள்வது மட்டும் இல்லாமல் எயிட்ஸ் விளம்பரபடங்களிலும் நடிக்க முன்வரும் நடிகர் கமல் அவர்களுக்கு எனது நன்றிகள்.
===========
805 பாலோயர்களுக்கு மிக்க நன்றி
===========
அறிவிப்பு
இலங்கைதமிழர்கள் எடனே என்ன செய்ய வேண்டும் என்பதை பெங்களு நண்பர் அரவிந் ஒரு பதிவு எழுதி இருக்கின்றார் வாசித்து விட்டு உடனே செயல்படவும்... பதிவுக்கு லிங் இங்கே அழுத்தவும். 
============================
இந்தவார சலனபடம்... 


ஒரு பீர் சேசிங்....
=====================================
பார்த்ததில் பிடித்தது...

அசோக் நகர் சங்கம் ஓட்டல் அருகில் உள்ள சிக்னல் ஒரு ஸ்கூட்டியில் இரண்டு பிள்ளைகளுடன் போய் கொண்டு இருந்தார்..சிக்னலில் நின்று விட்டார்...ஒரு சின்னபையன் சைக்கிளில் வேகமாக வந்து அந்த அம்மாவின் கையில் இடித்து விட்டு நிற்காமல் சென்று விட்டான்.. அந்த அம்மா திடும் என எற்பட்ட வலியில் துடிக்க பின்னால் இருந்த சின்ன பெண் அம்மாவின் கை பிடித்து தேய்த்துக்கொண்டே இடியட் என்று, எழுந்துரு அஞ்சலி எழுந்துரு போன்ற கீச்சு குரலில் கத்த சிக்னலில் நின்ற அத்தனை  பேருக்கும் அந்த அம்மாவின் மீது அந்த குட்டி பெண்ணுக்கு இருக்கும் பாசத்தை புன்னகை மூலம் சிலாகித்தனர்..
====================

இந்தவார கடிதம்..

Hello sir,
how are you doing?
i beg you sorry for not contacting you so long,
இந்த  office,Projctu, deadline இப்படி  valkkai போறதால
உங்களுக்கு  call பண்ண  முடியல ,
நீங்க  எந்த   timela  freeya இருப்பிங்க  sir,
shooting போறதால  time எல்லனு  சொல்லி  இருக்கீங்க ,
அதனால  distrup  பண்ண  வேணாமுன்னு  கேக்குறேன் ..

அப்புறும்  வழக்கம்  போல  உங்க  விமர்சனம்  மிக  அருமை,
"கைப்புள்ள"  பேருல கமெண்ட் எழுதி இருந்தேன்.
அப்புறம் out break என்னும் பாக்கல, இன்னைக்கு நைட் பக்க போறேன்..
broune ஏற்கனவே பார்த்துட்டேன். ரொம்ப நல்ல இருந்தது...
 அப்புறம் இந்த "Hotel Rwanda(2004) " பாத்தேன்.. ரொம்ப சூப்பரா இருந்தது, என்ன ரொம்ப பாதிச்சது
நாம எல்லாம் Idiot சார், நான் இந்த ஜாதி, நீ இந்த ஜாதி, அந்த ஜாதிநு பேசுறோம்,
 வீட்டுல allow பண்றது இல்ல , பேதம் பார்க்கிறோம் ,
அனா வெள்ளைகாரன் , நம்பல மொத்தமா "Block"நு சொல்லிடு போறான்,
நாம்ப தான் worldla நீர வெறி அதிகம் புடிச்சவங்க  .
நாமக்கு எந்த தகுதியும் இல்ல , வெள்ளைகாரண கொற சொல்ல...
Afican's  நம்பல மாதிரித்தான் வெள்ளைகாரனுக்கு சலம் போட்டு ,
பிரச்சனை வந்தா அம்போன்னு வெள்ளைகாரங்க விட்டுராங்க ,
எல்லாம் power இருந்த தன சார் U.N(united nation- i used to call (Un)usefull Nation  )லும் மதிப்பு
நாம african's நு மொத்தமா அவங்கள பார்க்கிறோம்,
அனா அவங்களுக்குள்ள , இனம் பிரச்னை வந்து, கூட்டம் ,கூட்டமா கொன்னு, கலவரமா காட்டுவாங்க , 
எனக்கு அந்த படம் பார்க்கும் போது ஸ்ரீலங்கா problem தான் மனசுல வந்தது ...
மனுஷனுக்கு பிரச்சனை வராத வரத்தான் சார் வாழ்க்கை...
இந்திய அவங்கள மனுஷனா பாக்கல , vote bank தான் பார்கிறாங்க ..
இப்ப நாமளும், free tv, free gasukku, then moneynu பிச்சைகாரனா மாறி  எல்லாத்தையும் மறந்துடோம்.
அவ்ளோ தான் சார் எல்லாம். May god help them, and support them to become very strong,
We hope someday they will get Equal priority for everything..
i hope someday world and India will believe they(srilangan tamils) are Human..


Thanks & Regards,

Kulandhaivel
==============================
பிலாசபி பாண்டி...

 சைலன்ட்டா நாம ஒரு சில ரிலேஷன்ஸ் ஓட நாம நட்பா இருப்போம்
 ஆனா டூமச்சான சைலன்ட் எந்த  ரிலேஷன்ஷிப்பை ஒடைச்சிடும்.
================


இந்தவார நிழற்படம்..

இதுவும் நம்ம கைங்கர்யம்தான்.. இடம் .அரபிக்கடல் கேரளாவில் கண்ணுர்...
===================================
சைவ ஜோக்...

அஜித்.. எல்லோருக்கும் குட்நைட்லா...
விஜய்... எல்லோருக்கும் குட் நைட்நா....
சிம்பு ..குட்நைட் மச்சி
சூர்யா ...ஹாய் மாலினி குட் நைட்

சுப்ரமணிபுர்ம் சசி எப்படி எல்லோருக்கும் குட் சொல்லுவாரு????

எல்லோரும் மூடிகிட்டு படுங்கடா நொன்னைங்களா....
=================

நான்வெஜ் 18+
 ஜோக்,,1

ஒருத்தன் வாரத்துக்கு எழு நாளும் பொண்ணுங்க கூட டேட்டிங் போனதை பத்தி சிலாகிச்சி சொல்லுவான். அவனோட ரொம்ப நெருங்கிய  நண்பன்கிட்ட அவன் ரொம்பவே சலிச்சிகிட்டான். ச்சே இப்பெல்லாம் உலகம் ரொம்ப மாறிடுச்சி.. கன்னிதன்மையோட எந்த பொண்ணுங்களும் இருக்கமாட்டேங்றாங்க... நம்பதன்மையே இல்லைன்னு ரொம்பவே சலிச்சிகிட்டான்.. சரி நண்பா, நீ கன்னி தன்மையோடு பார்த்த பொண்ணுங்க ரெண்டு பேரை சொல்லு என்றான்.. அவனும் முதலில் என் மனைவி.. அப்புறம்..
உன்மனைவி என்றான்.
==============================

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....

குறிப்பு.. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்.

15 comments:

 1. //பிரபலமாக இருந்தும் தன் இமேஜ் பற்றிகவலைபடாமல் எயிட்ஸ் விழிப்புனர்வு நிகழ்ச்சியில் கலந்து கொள்வது மட்டும் இல்லாமல் எயிட்ஸ் விளம்பரபடங்களிலும் நடிக்க முன்வரும் நடிகர் கமல் அவர்களுக்கு எனது நன்றிகள்//
  :-)

  ReplyDelete
 2. வழக்கம் போல foto நல்லாருக்கு!
  ஓ! இன்னிக்கும் சண்ட்விச் எனக்குத்தானா? :-)

  ReplyDelete
 3. அது எப்படின்னு தெரியலை முத பின்னுட்டம்...ஆன்லைன்லதான்வாசமா? ஜீ??

  ReplyDelete
 4. Dear Mr. Jackie,

  All will give appreciation to Kamal sir. Tell me about Petral than Pillaya Scheme.. Rs.750 donation they are collecting for this scheme. Kindly tell the information so that it can reach to all.

  Regards,
  Vijay
  Muscat

  ReplyDelete
 5. //ஜாக்கி சேகர் said... 3
  அது எப்படின்னு தெரியலை முத பின்னுட்டம்...ஆன்லைன்லதான்வாசமா? ஜீ??//

  இல்ல தல! நான் இருக்கும்போதுதான் நீங்க பதிவு போடுறீங்க! :-)

  ReplyDelete
 6. //அஜித்.. எல்லோருக்கும் குட்நைட்லா...
  விஜய்... எல்லோருக்கும் குட் நைட்நா....
  சிம்பு ..குட்நைட் மச்சி
  சூர்யா ...ஹாய் மாலினி குட் நைட்

  சுப்ரமணிபுர்ம் சசி எப்படி எல்லோருக்கும் குட் சொல்லுவாரு????

  எல்லோரும் மூடிகிட்டு படுங்கடா நொன்னைங்களா....//

  செம கலக்கல் அண்ணே,

  வழக்கம்போலவே அருமை

  தொடரட்டும்.......

  வாழ்க வளமுடன்

  ReplyDelete
 7. நல்லாயிருக்கிறது ரசித்துப் படித்தேன்.. அருமை...

  அன்புச் சகோதரன்...
  மதி.சுதா.
  http://mathisutha.blogspot.com/

  ReplyDelete
 8. இன்றைய சைவ ஜோக் செம சூப்பர் சார்!

  ReplyDelete
 9. kalakkal jackie sir... keep rocking!!!

  ReplyDelete
 10. அண்ணே சொல்ல மறந்துட்டேன்... உங்களைப் பற்றி எனது சமீபத்திய இடுகையில் சில வரிகள் எழுதியிருக்கிறேன்... நேரம் கிடைக்கும்போது வந்து படிக்கவும்...
  http://philosophyprabhakaran.blogspot.com/2010/12/blog-post.html

  ReplyDelete
 11. வணக்கம் ஜாக்கி சார்.. ரொம்ப நல்லைக்கு அப்புறோம் உங்க பத்திவ படிக்குறேன்... நல்ல இருக்கு... ///

  கலைஞர் தன் சொத்து மதிப்ப சொல்லிருக்கரே அதபத்தி கொஞ்சம் உங்க கறுத்த சொல்லலாம்னு நினைக்குறேன்..

  ReplyDelete
 12. நியூஸி க்ளிப் போட்டதுக்கு தேங்க்ஸ் ஜாக்கி.

  கோபாலுக்கு அனுப்பி இருக்கேன் இந்த லிங்கை!

  ஹோம்சிக்கா இருக்காரு மனுஷர்(என்னை விடக் கூடுதலா)

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner