உங்களுக்கு காமம் இச்சை பற்றிய புரிதல் எப்போது ஏற்பட்டது என்ற கேள்வியை, தமிழ்நாட்டில் கேட்டால் ஆபாசத்தை பேசிகின்றோம் என்று சொல்லிவிடுவார்கள்..ஆனால் வதவதவென பெற்றுக்கொள்வோம். தெளிவின்மைதான்.நிற்க.
அறிஞர் சிக்மன்ட்பிராய்ட் நீங்கள் தாயிடம் பால் குடிக்கும் போதில் இருந்து உங்களுக்கு காம இச்சை தோன்றுவதாக சொல்லி இருக்கின்றார்... இந்த கருத்துக்கும், கனவுகள் என்பது அடிமன விகாரத்தின் வெளிப்பாடு என்ற இவரின் வெளிப்படையான கருத்துக்கு மிகுந்த எதிர்ப்பை சம்பாதித்தார் என்றாலும் கடைசி வரை தான் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்தார்.
தமிழ்நாட்டில் பதின்மவயதில் ஏற்படும் பாலியில் உணர்வுகளை தைரியமாக செல்லுலாய்டில் செதுக்கிய படைப்பாளி கேமராகவிஞர் பாலுமகேந்திரா அவர்கள். அவரின் அழியாத கோலங்கள் திரைபடம் நிதர்சனத்தை முன் வைத்த ஒரு தமிழ் திரைபடம் என்றால் அது மிகையில்லை என்று சொல்லலாம்.
சராசரி தமிழ் இளைஞன் அம்மாவின் பரிச்சயத்தில் இருந்து வெளிப்பட்டு காமத்தோடு முதலில் பார்ப்பது தடிமனான பெண்களைதான்... அதன் பிறகே அந்த ரசனை,மெலிதான பெண்கள் பக்கம் திரும்புகின்றது.. சிலருக்கு கடைசிவரை ஒரே டேஸ்ட்தான்....மேலே சொன்ன விஷயத்தை ஒரு சிலர்தான் மறுக்கின்றார்கள்.. பலர் ஒத்துக்கொள்கின்றார்கள்.
பெரும்பாலான தமிழ் இளைஞனுக்கு காமம் பற்றிய அறிமுகம் நண்பர்கள் மூலமும், புத்தகங்கள் மூலமும்தான். ஆனால் வெகு சிலருக்கு வீட்டுக்கு அருகாமையில் உள்ள ஒரு சில உறவுக்கார பெண்களால் அறிமுகபடுத்த படுகின்றது.. அல்லது சிகப்பு ரோஜாக்களில் காண்பிப்பது போல அக்கா வேஷம் போட்டு விட்டு, அவர்கள் இச்சைக்கு யூஸ் செய்து கொண்டு, மாட்டிக்கொள்ளும் போது, நான் இவனை தம்பி மாதிரிதான் நினைச்சேன் என்று அந்தர் பல்டி அடிக்கும் பெண்களும், சைகோ பெண்களும் அதிகம்.
ஒரு 11வயது அரேபிய சிறுவனுக்கு காமத்தின் அறிமுகம் எப்படி ஏற்படுகின்றது என்பதை மிக கவித்துவமாக இந்த படம் அலசுகின்றது.
Halfaouine: Boy of the Terraces 18+ (உலக சினிமா/அரேபியா) படத்தின் கதை என்ன???
நவுரா பதின்ம வயதில் காலடி எடுத்து வைத்து இருக்கும் அரேபிய முஸ்லீம் பையன். அவனுக்கு இன்னமும் குளிபாட்டி விடுவது அவனது அன்னைதான்... அவவர்கள் வீட்டுக்கு பக்கத்தில் டர்கிஷ் பாத் என்ற குளிக்கும் இடம் இருக்கின்றது.. அந்த இடத்தில் பெண்கள் மட்டுமே குளிக்க அனுமதி.
தன் மகன் குழந்தை என்று பதின்ம வயதிலும் நவுராவின் அம்மா நம்புவதால் அவனை அங்கே குளிக்க அழைத்து சென்று குளித்து விட்டு வருவார்கள். அங்கே குழந்தை பார்வையில் விகல்பமில்லாமல் பாத்தவனின் பார்வை எவ்விதமாக மாறுகின்றது என்பதையும் அதனால் அவன் சந்திக்கும் பிரச்சனைகளை இந்த படம் மிக உன்னிப்பாய் அலசுகின்றது... அது என்ன என்பதை திரையில் தேடிபிடித்து பார்த்துகொள்ளவும்
படத்தின் சுவாரஸ்யங்களில் சில....
பொதுவாக அரபு தேசத்தினை இதுவரை வந்த படங்கள் ஸ்லம்டாக் மில்லியனரில் இந்தியாவை காட்டியது போலாதான் காட்டிக்கொண்டு இருந்ததை நான் பார்த்து இருக்கின்றேன்.. முதன் முறையாக வேறு தளத்தில் இப்போதுதான் இந்த படத்தை பார்க்கின்றேன்.
இந்த படம் 1990ல் வெளிவந்தது.
Director: Ferid Boughedirன் சிறுவயது சம்பவங்களே இந்த படம்.
அரேபிய தேசத்து வீடுகளின் மொட்டை மாடியில் நவுரா நடக்கும் இடங்களிலும் , மாக்கெட்களிலும் அவர்கள் செட் போடாமல் எடுத்து அவர்களின் கல்ச்சரை உண்மையாய் உரைக்கின்றார்கள்.
நவுராவின் தம்பியின் சுன்னத் விழாவின் போது நடக்கும் நிகழ்வுகள்.. அந்த கலச்சாரம் நம் கண் முன்..
அம்மாவோடு டர்கிஷ் பாத்தில் குளிக்க போகும் காட்சிகள் அனைத்து சென்சார் ரகம்... அரபு தேசத்தில் எப்படி அனுமதித்தார்கள் என்று தெரியவில்லை...
அவன் சின்ன பையன் என்று சொல்லி சொல்லி அவனை சீண்டி விடும் இரண்டு தடியர்கள்... அவன் குளிக்கும் இடத்தில் பார்க்கும் பெண்களின் சைஸ் பற்றி ஆர்வமாய் விசாரித்து நவுராவிடம் கேட்டுக்கொள்வதும், நிர்வாணபடங்களை புத்தகத்தில் பார்க்கும் நவுரா பெண்களின் அரை நிர்வாணத்தை மட்டும் பார்த்து விட்டு முழு நிர்வாணத்தை பார்க்கும் ஆவலில் குளிக்க அம்மா வென்னீர் மொண்டு வர சொல்லும் போது ஒவ்வொரு கதவாக திறந்தபடி குளிக்கும் பெண்களை பார்க்கும் ஆவலில் அந்த பையனின் எக்ஸ்பிரஷன் நன்று.
சிகப்பு ரோஜாக்களிலில் வருவது போல இதிலும் ஒரு அக்கா கேரக்டர் இருவருக்கு ஒரு காம காதல். அந்த சின்ன பையனுக்கு சிக்னல் கொடுப்பதே அந்த அக்கா கேரக்டர்தான். அந்த சின்ன காதலும் ரசிப்பது போலதான் இருக்கின்றது.
குளிக்கும் இடத்தில் சின்ன பையனின் பார்வையில் நவுரா பார்க்கவில்லை என்பதை கண்டறியும் ஒரு ஊமைபெண் அவன்மீது அபாண்டமாக பழி சுமத்துவது கொஞ்சம் ஓவர்.
இந்த படம் கேன்ஸ் பிலிம் பெஸ்ட்டிவலில் அபிசியல் செலக்ஷனில் தேர்வு செய்யபட்ட படம்.
இந்த படம் அரேபியா ஸ்டைல் அழியாத கோலங்கள்.
படக்குழுவினர் விபரம்..
* Director: Ferid Boughedir
* AMG Rating: starstar
* Genre: Comedy Drama
* Movie Type: Coming-of-Age
* Themes: Sexual Awakening
* Main Cast: Mustafa Adouani, Rabia Ben Abdallah
* Release Year: 1990
* Country: TN/FR
* Run Time: 98 minutes
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....
குறிப்பு.. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்.
//ஆனால் வெகு சிலருக்கு வீட்டுக்கு அருகாமையில் உள்ள ஒரு சில உறவுக்கார பெண்களால் அறிமுகபடுத்த படுகின்றது//
ReplyDeleteஅப்பிடியா? கேள்விப்படவே இல்லை!
//இந்த படம் கேன்ஸ் பிலிம் பெஸ்ட்டிவலில் அபிசியல் செலக்ஷனில் தேர்வு செய்யபட்ட படம்.//
நல்லா இருக்கே! பார்க்க வேண்டும்! :)
ஆபாசமில்லாத விமர்சனம்... மற்ற படங்களுக்குப் போல் விரிவாக எழுதாமல் நச்சென்று எழுதியிருக்கிறீர்கள்... உங்கள் பார்வை நன்று.
ReplyDeleteபின்னுட்டம் இட்ட நண்பர்களுக்கு என் நன்றிகள்.
ReplyDeleteசேகுமார்.. கொஞ்சம் ஆணி புடுங்கும் வேலை அதிகம் அதான் பதிவு சிறித்துடுச்சி..
ReplyDeleteஅண்ணே உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை.உங்கள் வேலையெல்லாம் மறந்து மெனக்கெட்டு எனக்கு போன் செய்து உற்சாக படுத்திய தங்களுக்கு நான் என்றென்றும் நன்றி உடையவன். தங்களுடைய வார்த்தைகள் என்னை மிகவும் தெளிவு படுத்தியது. மிக்க நன்றி அண்ணா
ReplyDeleteநண்பர் ஜாக்கிசேகருக்கு வணக்கம், The Human Centipede என்ற நெதர்லாந்த் நாட்டு திரைப் படத்தை பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.
ReplyDeleteஅன்பான வேண்டுகோளுடன்
A.M.Amsa,
திருப்பூர்.
To see full film log on to this google link
ReplyDeletehttp://video.google.fr/videoplay?docid=-3466889877235693818#
Boss,, Dowload link kodunga.
ReplyDeletehttp://enathupayanangal.blogspot.com
உலக சினிமா ரசிகர் இதைப்பற்றி இரண்டு வாரங்களுக்கு முன்னர் எழுதிய பதிவு இங்கே பையன் வயசுக்கு வந்துட்டான்
ReplyDeletesir ennaga sir intha padam ellam download pannringa
ReplyDeletekonjam link kum kotungaa sir
ஜாக்கி..!
ReplyDeleteபால்யத்தில் காமம் எப்படியிருக்கும். அதனை உணராமல் மற்றவர்கள் தரும் இம்சைகளும், வலிகளும் மனதில் எவ்வாறான தாக்கத்தை உண்டு பண்ணுகிறது என்பதற்கு இந்தப்படம் நல்ல சாட்சி.
நான் ஊடகக் கல்வியை கற்றுக்கொண்டிருந்த தருணத்தில் (2006) இந்தத் படத்தினைப் பார்த்திருக்கின்றேன். காட்சிகள் அதிகம் மறந்து விட்டது.
hi jackie ,
ReplyDeletei have seen the film two months back .apt review and critics good job keep it up
i saw the flim very nice.thanku for your review
ReplyDeleteஅடடா,இந்தப்படம் என் கண்ணுக்கு சிக்கலையே, பகிர்வும் பதிவும் சூப்பர்
ReplyDeletedownload link wenum plz enga thdiyum kidaikuthilla
ReplyDeleteTorrent Search Engine (Child.Of.The.Terraces) name ippati kodunga
DeleteTorrent Search Engine (Child.Of.The.Terraces) name ippati kodunga
Deletepadam super in the maatheri padangal iruntha sollavavum pls
ReplyDelete