Irudhi Suttru movie review | இறுதி சுற்று திரை விமர்சனம்.



மணிரத்னம் பள்ளியில் இருந்து  வெளி வந்து இருக்கும்  அவருடையமாணவி சுதா கோங்கரா பிரசாத் இயக்கத்தில் நம்ம மேடி நடித்து வெளிவந்து  இருக்கும் திரைப்படம் இறுதி சுற்று.

தமிழ் பெண் இயக்குனர்கள் வரிசையில்  மேலும் ஒரு  எண்ணிக்கை சுதா வருகையினால் கூடி இருக்கின்றது.
மாதவன் ரொம்ப நாளைக்கு அப்புறம் காத்திருந்து  செய்து இருக்கும் திரைப்படம் இந்தியின் பிரபல இயக்குனர் ராஜ்குமார் ஹீராணியின்  தூக்கத்தை கெடுத்து  மாதவன் அவரிடம் சொன்ன கதை..
கதையின் மேல் உள்ள ஈர்ப்பின் காரணமாக   இந்தி திரை வடிவத்தை வட இந்தியாவில் தன் பேனர் மூலம் ரிலிஸ் செய்கின்றார்...
====
இறுதி சுற்று திரைப்படத்தின் கதை என்ன,?
மாதவன் இந்திய பாக்சிங் விளையாட்டில்  சிறந்த கோச்... ஆனால் பாக்சிங்  ஆணையத்தில் உள்ள உள்  அரசியலில்  அவர் சிக்கி  சின்னபின்னமாகின்றார்.. அவரை டிகிரேட் செய்கின்றார்கள்... சென்னைக்கு அனுப்புகின்றார்கள்.. அங்கே இருக்கும்   யாரையாவது  உருவாக்கி தங்கம் வாங்கி காட்டு என்று சவால் விடுகின்றார்கள்... சவாலில் மாதவன் ஜெயித்தாரா -? இல்லையா? என்பதே இறுதிசுற்று திரைப்படத்தின் கதை..
===
 படத்தின் சுவாரஸ்யங்கள்..
மாதவன்  பின்னி இருக்கின்றார்..  சான்சே இல்லை...  அவர் ஹேர் ஸ்டைலே தேசாந்திரி லுக்கையும் அறிவு ஜீவித்தனத்தையும் கொடுக்கின்றது...  படத்துக்கு பெரிய பலம்...
மாதவனா இது என்று நடிப்பில் பின்னி இருக்கின்றார்.. மிக முக்கியமாக  இப்ப அவ வெளையாட நான் என்ன செய்யனும் என்று கேட்டு... வெற்று பேப்பரில்  கையெழுத்து போட்டு விட்டு டேய் நீ  இன்னும் திருந்தலை என்பதாக சொல்லும் அந்த கட்டம் சிம்ப்ளி சூப்பர் ...
ரித்திகா சிங்... இந்தியாவின்  ஏசியன் கேம்சில்   கலந்துக்கொண்ட உண்மையான பாக்சரையே... கதையின் நாயகியாக்கி இருக்கின்றார்கள்.. யார்  கிட்ட என்ன திறமை இருக்குன்னு யாருக்கு தெரியும்... யப்பா..  பாக்சர்  பொண்ணாங்க அது.. நடிப்புல பின்னி இருக்கா...  அந்த  குழந்தை தனம் எல்லோருக்கும் பிடிக்கும் அதை விட  இன்னும் பல   பேருடைய  தூக்கத்தை  கெடுக்கும்.
அப்பா மாதிரி இருக்கறவன் ஆயிரம் பேரு  தெரியும் எல்லார்க்கிட்டயுமா நான் ஐ லவ்யு சொல்லிக்கிட்டு திரியிறேன் என்று சொல்லும் அந்த காட்சி அருமை...
 உன் அக்கா வாழ்க்கையும் சேர்த்து கெடுக்க போற என்று சொன்னதும்... வெளியே போகாமல் பனிஷ்மென்ட் ஏற்றுக்கொண்டு கிரவுண்டை சுற்றி வருவதும்.. போலிஸ் ஸ்டேஷனில் மாஸ்டர் நீங்க என்ன சொன்னலும்  கேப்பேன் என்று சொல்லி கதறுவதும்..  செமை...
ஒரு லட்சம் கொடுத்துட்ட... கொஞ்சம் வெயிட் பண்ணி இருந்தா 25 ஆயிரத்துல முடிச்சி இருக்கலாம் என்று சொன்னதும்.. இரண்டு லட்சம் கூட கொடுப்பேன் என்று  மாதவன்  சொல்லும் அந்த காட்சியும்... அதற்கு நாசர்.. யோவ் நீ ரொம்ப நல்லவன்யா என்று சொல்ல மாதவன்... அதற்கு மாதவன் நான் பேசிக்கலி நான் நல்லவன்தான் உன் பார்வையில் நான் கேட்டவன் என்பதாக மேடி அழுத்தம் திருத்தமாக பார்த்து விட்டு செல்லும் அந்த காட்சி செமை.
 நாசர், ராதாரவி  இரண்டு பேருமே செமையாக பின்னி இருக்காங்க.
 அப்பா கேரக்டரில் வரும் காளி  வெங்கட்  பின்னி இருக்கின்றார்.. திருட்டு கேபிள் எடுக்கும் காட்சி நெகிழ்ச்சி

படத்துக்கு பெரிய பலம் சந்தோஷ்  நாரயணன் இசை...   சான்சே இல்லை.. மனுஷன்   பின்னி இருக்கார்... நிறைய காட்சிகள் நெகிழ்ச்சி அடைய அவருடை   பேக்கிரவுண்ட் ஸ்கோர்  ரொம்ப ஹெல்ப் செய்யுது.
 படத்தின் ஒளிப்பதிவாளர் சிவக்குமார் உதயன் கோணங்கள் அருமை.. மாதவன் சென்னைக்கு வரும் போது  சென்னையை பற்றி எடுத்து இருக்கும் மாண்டேஜ் ஷாட்டுகள் அருமை...
சதிஷ் சூர்யாவின் எடிட்டிங் பாக்சிங் காட்சிகளில் பின்னி  இருக்கின்றார்..
 படத்துல மைனஸ் சௌக்கார்  பேட் குடும்பம் நொச்சி குப்பத்தில் என்பதில் தான் நெருடல்

======
படத்தின் டிரைலர்




======
படக்குழுவினர் விபரம்..

Directed by    Sudha Kongara
Produced by    S. Sashikanth
C. V. Kumar (Tamil)
R. Madhavan (Hindi)
Rajkumar Hirani (Hindi)
Written by    Sudha Kongara
Sunanda Raghunathan
Arun Matheshwaran (Tamil dialogues)
Screenplay by    Sudha Kongara
Story by    Sudha Kongara
Starring    R. Madhavan
Ritika Singh
Music by    Santhosh Narayanan
Cinematography    Sivakumar Vijayan
Edited by    Sathish Suriya
Production
company
Y NOT Studios
UTV Motion Pictures
Thirukumaran Entertainment (Tamil)
Distributed by    Dream Factory (Tamil)
Rajkumar Hirani Films
Tricolour Films (Hindi)
Release dates
29 January 2016
Country    India
Language    Tamil
Hindi

========
பைனல் கிக்.
 எப்படி  பெண் இயக்குனர்களில் பிரியா கண்ட நாள் முதல் படத்தில் காதல் மூலம் நெகிழ வைத்தாரே..? அதே போல இயக்குனர் சுதா... ஆக்ஷன்  படத்தில் அசத்தி இருக்கின்றார்.. ஸ்போர்ட்ஸ் ஜானரில் தமிழில் இப்படி ஒரு  சிறப்பான படத்தை கொடுப்பார் என்று யாரும் எதிர்பார்த்து இருக்கமாட்டார்கள்...

பின்னி இருக்கின்றார்... சினிமா என்பது கூட்டுமுயற்சி என்பதை புரிந்து திறமையாளர்களை கண்டு பிடித்து   அவர்களது திறமையின் உச்சத்தை வெளிக்கொண்டு வந்துள்ளார்.. அதனாலே இந்த வெற்றி சாத்தியமாகியுள்ளது... அதை விட  கதை விவாதத்துக்கு  இயக்குனர் பாலாவிடம் கூட  கருத்துக்களை கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன...


அதை விட மாதவன் அடிஷ்னல் ஸ்கிரின் பிளே ஒர்க் செய்து இருக்கின்றார்.... எல்லாவற்றையும் விட   நெகிழ்ச்சியான காட்சிகள் இந்த படத்துக்கு பெரிய  பலம் என்பேன்...  ஒரு திரைக்கதையை செல்லுலாய்டில் மாற்றும் வித்தை சுதாகோங்ரா பிரசாத்துக்கு கை வந்துள்ளது என்பேன்..

 எல்லவற்றையும் விட கிளைமாக்ஸ்  நெகிழ்ச்சியின் உச்சம்... ஆனால் அதை கையாண்ட விதத்தில்இந்த படம் ஜெயிக்கின்றது.. கிளைமாக் ரெபரன்சுக்கு சுதா வேறு எங்கும் அலையவில்லை.. மணிரத்னத்தின் திருடா திருடா கிளைமாக்சே போதுமானது..
வாழ்த்துகள் இறுதி சுற்று டீம்.


===
 படத்தின் ரேட்டிங்..
 பத்துக்கு எட்டு
======
வீடியோ விமர்சனம்.






#iruthisutrumoviereview

#iruthisutru
#SaalaKhadoos
#madhavan



நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

Greetings thambi vimal | வாழ்த்துகள் டிசைனர் தம்பி விமல்



நம்ம கூட இருக்கும் பசங்க முன்னேறும் போது.. நம்ம ஜெயிச்சதா ஒரு சந்தோஷமும் மன நிறைவும் வரும் இல்லையா... ?

கெத்து எனப்படுவது யாதெனில் அது – ஜெயமோகன்.








நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான  புத்மஸ்ரீ   விருதினை எழுத்தாளர் ஜெயமொகன்  தனக்கு வேண்டாம் என்று மறுத்து இருக்கின்றார்…


 அவர் விருதினை பெற்று இருக்க வேண்டுமா? வேண்டாமா? என்றுஇணையம் எங்கும் பல்வேறு விதமான   விவாதங்கள் நடைபெற்று வருகின்றன…



salute air india | ஏர் இந்தியாவுக்கு வணக்கம்





வளைகுடா போர் 1990 ஆம் ஆண்டு … ஆகஸ்ட் ஒன்னாம் தேதி தொடங்குகின்றது..

ஒரு லட்சத்ததி எழுபதாயிரம் மக்கள் அகதிகளாக தவித்து போய் கிடக்க…அவர்களை அழைத்து வர இந்திய கவர்மென்ட் எடுத்து முயற்சிகள் உள் அரசியல்…
அலட்சியம் போன்றவற்றை மிக விரிவாய் விவரிக்கின்றது ஏர்லிப்ட் இந்தி திரைப்படம்.

Dear director bala | அன்புள்ள இயக்குனர் பாலாவுக்கு



தாரை தப்பட்டை

பார்க்க வேண்டிய திரைப்படம்தான்....

ஆனால்... கொஞ்சம் விரிவாய் பேசுவோம்

Tharai Thappattai (2016 ) tamil movie review | தாரை தப்பட்டை திரை விமர்சனம்

 


இசைஞானியின் ஆயிரமாவது திரைப்படம். அதனாலே படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு…  இளையராஜா அறிவிருக்கா சர்ச்சையில் சிக்கி  அவரை படுத்தி எடுத்துக்கொண்டு இருக்கும்  போது  தாரா தப்பட்டை திரைப்படத்தின் பாடல்கள்  வெளி வந்தவுடனே சமுக வலைதளங்களில்   அவரை  மீண்டும் கொண்டாட வைத்தன  அது மட்டுமல்லாமல் சசிக்குமார் புரொடெக்ஷன்  மற்றும் அவரே நடிக்கின்றார் என்பதும்… வரலட்சுமி போன்ற சிட்டி மார்டன் கேரக்டர் எப்படி  ஆட்டக்காரியாக ஆட முடியும் என்ற  கேள்விகள் எல்லாம் ஒரு சேர  எழ…படத்தின்  மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்தது என்றே சொல்ல முடியும்…
===

Rajini murugan ( 2016 ) Movie Review | ரஜினி முருகன் திரை விமர்சனம்.



வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் இரண்டாம் பாகம்தான் ரஜினி முருகன் என்ற பெயரில் வெளிவந்துள்ளது.. இயக்குனர்  லிங்குசாமியின் எதிர்காலத்தை   தீர்மாணிக்கும் திரைப்படம் ரிலிஸ் தேதி சிக்கலில்  சந்தித்துத்து  இதோ அதோ என்று போக்கு காட்டி வெளி வந்து இருக்கும் திரைப்படம் ரஜினிமுருகன்.. நம்பி வாங்க சந்தோஷமா போங்க என்பதுதான் ரஜினி முருகன் திரைப்படத்தின் கேப்ஷன்… நம்பி வந்தவங்களை மோசம் செய்ததா இல்லையா? என்பதை இப்போது பார்ப்போம்.

Happy Birthday Pavithra ... தோழி பவித்ரா




  கடந்த வருடம் 2015  டிசம்பர் மூன்றாம் தேதி செம மழை...  சென்னையில் வெள்ள பாதிப்பு உக்ரமாக இருந்த தினம்.

நான் வேளச்சேரியில் வெள்ள நிவாரண பணிகள் செஞ்சிக்கிட்டே , வீடியோ எடுத்துக்கிட்டு இருக்கேன்.. அங்கதான் என் பிரண்ட் பவித்ரா வீடும்...

செம மழை வெளுத்து வாங்குது..

2015 ஆம் ஆண்டின் புதுமுக இயக்குனர் ரவிக்குமாருக்கு ... வாழ்த்துகள்





பொதுவா நம்ம கூட இருக்கறவங்க… முக்கியமா நம்மளை பொறாமையா பார்க்காம  அவங்க பாதையில போய் தில்லா  ஜெயிக்கறவங்களை  நமக்கு ரொம்பவே பிடிக்கும் அந்த  வரிசையில்  நேற்று இன்று நாளை திரைப்படத்தின் இயக்குனர்  தம்பி  ரவிக்குமாரும்  ஒருவர்…


சத்தமில்லாத சேவைகள் நண்பர் ரபிக்.




நண்பர் Rafeek பற்றி... சில வார்த்தைகள்..

கடந்த டிசம்பர்  மாதம் சென்னையை  அடித்து புரட்டி போட்ட பெருமழையில் ரபிக் குழுவினரின் பணி மெச்சதக்கது...

chennai international film festival 2016| சென்னை 13 வது உலக திரைப்பட விழா இனிதே துவங்கியது…




 13 வருடத்துக்கு முன்   பாண்டியை சேர்ந்த அன்பு என்ற உதவி இயக்குனர் உலக படவிழாவுக்கு  செல்வதாக இருந்தார்  வேலை பளுகாரணமாக அவர் செல்லவில்லை…அந்த டிக்கெட்டை என்னிடம் கொடுத்து  படங்களை பார்க்க சொன்னார்.. அதுதான் ஆயிரக்கணக்கான உலக திரைப்படங்கள் பார்க்கவும் அதை பற்றியும் எழுதுவும் விழுந்த முதல் விதை அதுதான்.

சென்னை புத்தாண்டு கொண்டாட்டம் மற்றும் நகர்வலம்... 2016




 
புத்தாண்டு தினத்தின் இரவில் பழைய நியாபகங்கள் கிளிறிய படி சென்னையை வலம் வருவது வழக்கம்..
அப்படி  வேளச்சேரிக்கு சென்று கொண்டு இருந்த போது..

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner