#நாச்சியார் திரைவிமர்சனம்,
#Naachiyaar Movie Review By Jackiesekar #நாச்சியார் திரைவிமர்சனம் #tamilcinemareview
பாலா படம் என்றாலே ஒரு ஒவ்வாமை இருக்கும் இந்த படத்தில் அப்படி இல்லை.. தாரளமாக இந்த திரைப்படத்தை பார்க்கலாம்.. காரணம் முடிவு செம ஜாலியாக சந்தோஷமாக முடித்து இருக்கின்றார்… அதுக்காகவே இந்த திரைப்படத்தை பார்க்கலாம்.
நாச்சியாராக ஜோதிகா பின்னி இருக்கின்றார்..
அந்த வேகம்..ரசிக்கும் படி இருக்கின்றது.. ஒரு சில காட்சிகள் சினிமாதனமாக இருப்பதை மறுக்க முடியாது என்றாலும் நெற்றியில் பூசை போட்டுக்கொண்டு குழந்தையை குளிப்பாட்டும் காட்சியிலும் சரி கிளைமாக்சிலும் சரி.. சான்சே இல்ல.. நீ ரொம்ப பெரிய மனுஷன்டா என்று கண்களில் லைட்டாக கலங்கியபடி சொல்லும்காட்சியில் மிளிர்கின்றார்…