I love cinema | சினிமா மீதான காதலும் சினிமா பார்த்தலும்.….


சினிமா மீதான காதலும் சினிமா பார்த்தலும்.….


என்னை பொருத்தவரை நான் என் கவலைகள் மறக்கும் இடம் எது என்றால் அது திரையரங்குகள் என்பேன். காரணம் இரண்டு மணி நேரம் யாரோ ஒருவருடைய காதலையோ காமத்தையோ நட்பையோ இருட்டில் வாழ்ந்து விட்டு வரலாம்.


Blue shirt | நீல சட்டை


அவன் நீல சட்டை அணிந்து இருந்தான்….. விலை உயர்ந்த பைக்…. வைத்து இருந்தான்… அநேகமாக அவன் சிட்டி சென்டர் ஐநாக்ஸ் பக்கத்த்தில் இருந்து வந்து கொண்டு இருக்க வேண்டும்..

நான் அப்போதுதான் வண்டியை கழுவிக்கொண்டு இருந்தேன்.. யாரும் வருகின்றார்களா என்பதை பார்த்து சளீர் என்று வாகனத்தின் மீது எறிந்ததேன்… நல்ல தண்ணீர்தான்.. இரண்டாவது முறை சரியாக சளீர் என்று அடிந்தேன்….


With Love -part 1 காதலுடன் பாகம் ஒன்று (நான் ரசித்தவை)
காதலுடன்........ part 1 (நான் ரசித்தவை)


காமம் என்பது எப்படி இருக்க வேண்டும் தெரியுமா?


நல்ல பசியில் முதல் நாள் இரவில் தண்ணீர் ஊற்றி வைத்த பழய சாதத்தை எடுத்து குண்டானில் எடுத்து போட்டு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி அதில் கொஞ்சம் தயிரை சாஸ்திராப்புக்கு காட்டி எண்ணெயில் வறுத்த மோர் மொளகாயோ.. அல்லது அவசரத்துக்கு கிடைத்த சின்ன வெங்காயமோ எடுத்து ஒரு கடி வெங்காயமும் சோறுமாக சாப்பிட்டு கடைசியாக குண்டானில் இருக்கும் தண்ணீரை பசியடங்கும் மட்டும் குடித்துவிட்டு சின்ன ஏப்பம் விடும் போது ஒரு நிறைவு வரும் இல்லையா..? அப்படித்தான் காமம் இருக்க வேண்டும்..Thank u All - நன்றிகள்
கடலூரில் எனக்கு தெரிந்து இனிப்புக்கடை என்று பார்த்தால் அது ரெயில்வே கேட் அருகில் இருந்த பனாரஸ் இனிப்புகடைதான்…

அந்த கடையில் இன்டியன் ஏர்லைன்ஸ் மகாராஜா பொம்மையும் காற்றில் அதன் தலை ஆடுவதையும் இனிப்பை விட நான் சிறு வயதில் பார்த்து ரசித்த விஷயங்கள்…

அதிக பட்சம் என் விருப்ப உணவு பதளை பதளையாக கண்ணாடி சட்டங்களுக்கு உள்ளே சிறைபட்டு இருக்கும் சோன்பப்டிதான் எனக்கு மிகவும் பிடித்த இனிப்புணவு

பேக்கரி ஐட்டம் என்றால் என்ன என்று கடலுர் மக்களை அறிய வைத்த இடம் எதுவென்றால் ஜானகிராம் பேப்பர் ஸ்டோர் எதிரில் முதன் முதலாக காலடி எடுத்து வைத்த விஸ்டம் பேக்கரியை குறிப்பிட்டு சொல்லலாம்.. அதன் பின் அகர்வால் அது இது என்று கடலூரில் தடுக்கி விழுந்தால் பேக்கரிகள் பெருகி விட்டன.

விஸ்டம் பேக்கரிதான் முதன் முதலில் காலை மாலையில் டிரை சைக்கிளில் பேக்கரி உணவுகளை வீடு தேடி எடுத்து வந்து விற்பனை செய்தது என்றால் அது மிகையில்லை… அது மட்டுமல்ல அதில் வரும் மீன் கேக் எனக்கு பிடித்தமானது.

எனது மற்றும் எனது தங்கை பிறந்தநாளுக்கு அப்பா ஐந்து கூடை கேக் வாங்கி வருவார் விடியலில் பல் விளக்கி குளித்து முடித்து அந்த இரண்டு ரூபாய் கூடைகேக்கிற்கு ஆவலாய் பறந்ததை நினைத்தால் சிரிப்பாக வருகின்றது.. அது மட்டுமல்ல..

முதலில் அதன் மேல் ஒட்டி இருக்கும் சிவப்பு கலர் பிளம்ஸ்களை சாப்ப்பிட்டு விட்டு அதன் பின் கூடை கேக்கை சாப்பிட்டு அந்த பேப்பரை அப்படியே போட்டு விட மனம் இல்லாமல் அதில் ஒட்டி இருக்கும் சிறு துகள்களை நக்கி புக்கி நக்கி வேலை செய்து அந்த பேப்பரில்தான் கூடை கேக் இருந்ததா என்று சந்தேகம் கொள்ளும் கிளினாக நக்கி அதனை தூக்கி போட்டால்தான் அந்த பிறந்த நாள் இனிய நாளாக அமையும்..அப்பா ஐந்து பேர் என்றால் ஐந்துதான் வாங்கி வருவார்.. கூடுதலாக ஒன்று என்று யோசிக்கவே முடியாது.


இப்போது போல அப்போது எல்லாம் நினைத்தால் பரிசுபொருளோ… அல்லது நினைத்தால் டிரிட் கல்சரோ கிடையாது… பிறந்தநாளைக்கு பரிசு பொருள் கொடுப்பது என்னை பொருத்தவரை தமிழ் திரைப்படங்களில் காட்டப்படும் ஒரு நிகழ்வு என்பதாகவும் அது என் வாழ்க்கையில் சாத்தியம் இல்லை என்று நினைத்து இருந்தேன். என்மனைவியை காதலித்த ஆரம்ப வருடத்தில்… இந்த பொண்ணோடுதான் வாழ வேண்டும் என்று முடிவு எடுத்த அந்த வருடத்தில் எனக்கு பிறந்தநாள் வந்தது… என் காதலிக்கு அன்றே பிறந்தநாள்… இரண்டு பேரும் பேருந்து நிலையத்தில் சந்தித்தோம்.. பர்த்டே பிரசன்ட் என்று ஒரு கேரி பேகை கொடுத்தாள்…


அதில் சிவப்புகலர் டீஷர்ட் இருந்தது.. நான் முதன் முதலாக வாங்கிய பிறந்தநாள் பரிசுபொருள் அதுவே… நானோ கருப்பு… டீசர்ட் சிவப்பு.. அது எனக்கு செட் ஆகாது என்றும் சிவப்பாக இருப்பவர்கள் போட்டால்தான் செட் ஆகும் என்று தெரிந்தும் நான் அந்த டீ ஷர்ட்டினை பல காலம் கறிக்கடை பாய் போல போட்டுக்கொண்டு அலைந்தேன்.


அதன் பின் நிறைய பிறந்தநாள் விழாக்கள் பரிசு பொருட்கள், ஸ்டார் ஓட்டல்களில் டின்னர் என்று வாழ்க்கை மாறினாலும்.. அந்த கூடை கேக் ஏற்படுத்திய பரவசம் சொல்லி மாளாது..


யாழினி பிறந்தநாளுக்கு நெருங்கிய நண்பர்களுக்கு அழைப்பு விடுத்து இருந்தேன்.. 99 பர்சென்ட் பேர் வந்து யாழினியை வாழ்த்தினார்கள்.. என்னை நேசித்தவர்கள் தங்கள் வீடு போல பாவித்து களத்தில் இறங்கி இரவு உணவை வந்த விருந்தினர்களுக்கு பறிமாறினார்கள்..
50க்கு மேற்பட்டவர்கள் யாழினிக்கு பரிசு பொருட்களை கொடுத்தார்கள்.. பரிசு பொருட்களால் ஹால் நிரம்பி இருந்தது…


யாழினிக்கு எல்லா பரிசு பொருளையும் பிரித்து அதனை உடனே வெளியே எடுத்து கடை பரப்பி விட துடித்துக்கொண்டு இருந்தாள்… இரவு 50க்கு மேற்ப்பட்ட பரிசு பொருட்களையும் பிரித்து அடுத்து என்ன அடுத்து என்ன? என்று பிரித்துக்கொண்டே இருந்தாள்… பாரின் சாக்லேட், கதை புத்தகங்கள், கலர் பென்சில்கள், உடைகள், ஸ்கூல் பேக், லினோவா டேப்லெட், இயந்திர பொம்மைகள், டெட்டிபியர், என்று பிரித்து பார்த்து அடுக்கிக்கொண்டு ஆர்வம் மேலிட அடுத்து அடுத்து என ஆர்வமாய் இருந்தாள்…


ஒவ்வோரு பிறந்தநாளுக்கும் அப்பா என்ன வாங்கி வருவார் என்று ஆர்வம் மேலிட விடியலில் பல் விளக்காமல் ஆர்வத்தோடு போய் பையை திறந்து பார்த்தால்

வருடா வருடம் கூடை கேக்குள் என்னை பார்த்து ஏளனமாக சிரித்துள்ளன…


கடைசி வரை அடுத்து என்ன என்று பிரித்து ஆச்சர்யப்பட அப்பா வேற ஆப்ஷன் எங்களுக்கு கொடுத்ததே இல்லை.

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
17/03/2016.


குறிப்பு


நேரம் ஒதுக்கி நேரில் வந்து வாழ்த்திய உறவுகளுக்கும் நண்பர்களுக்கு நன்றி.


நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

Natpadhigaram 79 movie review
கண்ணெதிரே தோன்றினால் திரைப்பட ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெகு நாட்களுக்கு  பிறகு வெளிவந்து இருக்கும் திரைப்பம் நட்பதிகாரம்  79… சரி நட்பதிகாரம் என்றால் என்ன? திருக்குறளில் நட்பை பற்றி புட்டு புட்டு வைக்கும் அதிகாரமே நட்புஅதிகாரம்.. அதன் வரிசை எண் 79 … ஆனாலும் என்னை பொருத்தவரை வித்தியாசமான  டைட்டில்தான்.


kadhalum kadanthu pogum movie review | காதலும் கடந்து போகும் திரைவிமர்சனம்
சூது கவ்வும்  திரைப்படத்துக்கு பிறகு இயக்குனர் நளன் இயக்கி  அவருடைய ஆஸ்தான ஹீரோ   விஜய் சேதுபதி நடித்து வெளி வந்து இருக்கும் திரைப்படம் காதலும் கடந்து போகும்.
கொரியாவில் வெளியான கேங்ஸ்டர் லவ்வர்  என்ற திரைப்படத்தின் அதிகார பூர்வ தழுவல்தான் இந்த திரைப்படம். 

உப்புக்காத்து. 33
அவன் பெயர் துரை/
ஒரே ஊர்/
ஒரே பள்ளி/
இரண்டு பேரும் ஒன்றாக படித்தோம். நான் என்றால் அவனுக்கு ரொம்ப பிடிக்கும் . துரைக்கு என்னை விட இரண்டு வயது அதிகம்.அவனுடைய ஒரே குறிக்கோள் நான் எப்படியாவது மிக பெரிய ஆளாக மாற வேண்டும் என்பதுதான்..

ஏழ்மையான எனது வீடு.. வீட்டுக்கு பெரியபையன்.அதன் பொருட்டு நான் முன்னறே வேண்டும் என்று துரை அதிகம் ஆசை கொண்டான்... அதே போல் எங்கு போனாலும் கூசினி ஆள் போல என்னையும் அழைத்துச்செல்வான்...


சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (06-03-2016)ஆல்பம்..

மாநிலத்தில் எப்படியோ…அதே போலத்தான் மத்தியிலும்..  கச்சா எண்ணெய் விலை அதளபாதாளத்துக்கு குறைந்த பே போதிலும் இன்னும் விலைக்குறைப்பு  செய்யமால்  இரண்டு ரூபாய் ஒரு ரூபாய் குறைத்து கண்ணா மூச்சி ஆட்டம் ஆடிக்கொண்டு இருக்கின்றது…. எல்லாத்தையும் விட கொடுமை என்னவென்றால்…. விஜய் மல்லைய்யா.. ஏழாயிரம் கோடி கடன் வாங்கி இன்னும் கட்டாமல் இருக்கின்றார்… அவரை புடிச்சி ஜெயில்ல போடுங்க எசமான்.. என்று ஸ்டேட் பேங்க் ஓப்பன் ஸ்டேட்மென்ட் விட்டும் கூட,.. அவர் மேல் இதுவரை பாஜாக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை…  அது மட்டுமல்ல…  சாதாரண குடிமகன் மேல்  சட்டம் தன் கடமையை செய்யும்…Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner