மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/07•11•2010)

ஆல்பம்..
சென்னையில் பத்தாம் எண்  எச்சரிக்கை கூண்டு ஏற்றபட்டு இருக்கின்றது… ஆனாலும் புயல் வலுவிழந்து விட்டது. இது பெரிய புயல் எச்சரிக்கை எண் ஆகும்… பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கபட்டு இருக்கின்றது…


இது சென்னையை தாக்கும் என்று எதிர்பார்க்கபடுகின்றது.  இருப்பினும் இன்று இரவு கடக்கும் என்று சொல்கின்றார்கள். மணிக்கு 60லிருந்து 70வது கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்று எதிர்பார்க்கபடுகின்றது... நம் வீட்டு பக்கத்தில் என்ன நடக்கின்றது என்பதை சென்னை மக்கள் சாத்திய கதைவை திறந்து பார்க்கவேண்டும்.. அப்போதுதான் மின்கம்பிகள் அறுந்து கிடந்தால் அதனை பொது ஜனத்துக்கு தெரிவிக்க ஏதுவாக  இருக்கும்….


(இப்படித்தான் நேற்றுகாலையில் எழுதி இருந்தேன் ஆனால் கனமழைகாரணமாக கரண்ட் விட்டு விட்டு வந்தது... அதுமட்டும் அல்ல நெட்டும் ஹோகயா.... அதனால் இன்று காலை போஸ்ட் செய்கின்றேன்...கடைசி செய்தி புயல் கரையை கடந்து விட்டது..எங்கள் வீட்டருகில் வெயில் காய்கின்றது.. புயலின் போது பயந்து பள்ளிக்கு விடுமுறை விட்டால், வெயில் காயவேண்டும் என்பது தழிகத்தின் எழுதபடாத சட்டம்..... நேற்று எழுதிய பதிவு இது.. இப்போதுதான் என் வீட்டுக்கு கரணட் வந்த காரணத்தால் நேற்றைய பேப்பரை படிப்பது போல இருக்கும்... )
===============================
ஜல்புயல் சென்னையை கலக்கி கொண்டு இருக்கின்றது.. சென்னை ரொடுகள் வெறிச்சோடின.. இன்று புயலும் மழையும் நள்ளிரவுக்கு முன்னே தொடங்கி விட்டதால் சென்னை போர்வையைவிட்டு இன்றும்  எழாமல் இருக்கும் காரணத்தால் சாலைகள்வெறிச்சோடிகாணப்படுகின்றன.
=====================
நல்ல நாளிலேயே பாலும் தந்தியும் எட்டு மணிக்கு முகம் காட்டும்… இன்று மணி பத்து வரை பால், தந்தி எதையும் இன்னும் தரிசிக்கவில்லை… நேற்றே எமர்ஜன்சி லேம்ப்பில் புல் சார்ஜ் ஏற்றிவிட்டேன்… செல்போனில் புல் சார்ஜ், டேங்கில் தண்ணீர் ரொப்பியாகி ஜல்புயலை வரவேற்றுக்கொண்டு இருக்கின்றோம்….
==========
 இன்று சென்னையில் மதியம் ஒருமணிக்கு வெளியே பார்க்கும் போது இரவு ஆறுமணிக்கு எப்படி இருக்குமோ? அப்படி கும் இருட்டாக இருக்கின்றது… நேற்று இரவு பத்து மணியில் தூரலுடன் ஆரம்பித்த மழை  நள்ளிரவு பண்ணிரண்டுக்குமேல் வெளுக்க ஆரம்பித்தது…. காலையில் எட்டு மணியில் இருந்து பலத்த காற்று வீசி மழை பெய்து கொண்டு இருக்கின்றது… கூடவே குளிர்காற்று வீசிக்கொண்டு இருக்கின்றது… ஊட்டி எபெக்ட்.
================

ஊருக்கு வந்த ஒபாமா மகராசன் தீபாவளிக்கு பிறகு 5 நாள் கழிச்சி வந்து இருக்கலாம்… இவரு வரும் காரணத்தால் வடநாட்டு காக்கிகளில் பலர் குடும்பத்துடன் தீபாவளியை இந்த வருடம் கொண்டாடி இருக்க முடியாது. பாவம்…
===============
வடநாட்டு சேனல்கள் எல்லாம் ஒபாமாவுக்கு சொம்பு தூக்கி கொண்டு இருக்கும் வேலையில் இந்த பக்கம் ஜல் புயலை பற்றி எந்தசெய்தியையும்  பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை… போகும் போக்கில் இரண்டு வரிகளோடு நிப்பாட்டிக்கொண்டன..
===========
ஒளிபதிவாளர் பிசிஸ்ரீராம் மகள் சவிதா கீழ்பாக்கத்தில் நடந்த ஒரு பார்ட்டியில் கலந்து கொண்ட போது நான்காவது மாடியில் இருந்து தவறி  விழுந்து விட்டார்.. மருத்துவமைனை கொண்டு செல்லும் வழியில் உயிர் பிரிந்தது…பிசி குடும்பத்துக்கு எனது ஆறுதலை தெரிவித்துக்கொள்கின்றேன்..
============
ஓமலுரில் ஒரு பள்ளியில் நான்கு வருடத்துக்கு முன் பதினோரம் வகுப்பு  படிக்கும் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக சொல்லபட்ட கதை இப்போது கற்பழிப்பு என சிபிசிஜடி போலிசார் கண்டுபிடித்து இருக்கின்றார்கள்…நாலு வருடம் கழித்தாலும் உண்மை வெளிவந்தது குறித்து எனக்கு மகிழ்ச்சி… பள்ளியில் வைத்து அந்த பெண் கெடுத்து கொல்லபட்டு இருக்கின்றாள். அதுக்கு பள்ளி நிர்வாகம் உடந்தை….வெளங்கிடும்... அந்த பெண்ணின் கற்பபையில் 50 வயது மதிக்க தக்க ஆணின் விந்து இருப்பதாக இப்போது போலிஸ் கண்டுபிடித்து இருக்கின்றது.
===============
மிக்சர்..
சென்னை சாலைகளில் மண்ணின் மைந்தர்கள் மட்டும் இருக்கும் காரணத்தால், மற்றவர்கள் சொந்த ஊருக்கு போய் இருப்பதால் இரண்டு நாளைக்கு சாலைகள் வெறிச்சோடி கிடக்கின்றன…
==============
நடிகர் கமலுக்கு இன்று பிறந்தநாள்..இப்போதுதான் கமலின் 50 வருட திரைபட சிறப்பு நிகழ்ச்சியை விஜய்டிவி மறுபடி ஒளிபரப்பியது…ரஜினி பேசும் போது நெகிழ்ச்சியாக இருந்தது.. அதன் பின் கமல் மக்களை பார்த்து மண்டியிட்ட போது அதன் பின்னனியில் ஒலித்த இசை..   எனக்கு கண்ணீர் வர வைத்து விட்டது.. ஜாக்கி ரொம்ப சென்டியாயிட்டான்…
==============
பாஸ் என்கிற பாஸ்கரன் படம் இரண்டு வாரத்துக்கு முன்  சத்தியத்தில் குடும்பத்துடன்  பார்க்க போன போது எனக்கு பக்கத்தில் ஒரு பெண்மணி படி ஏறிக்கொண்டு இருந்தார்…  ரொம்ப தெரிந்த முகம் போல இருக்கின்றதே என்று பார்த்தால் அது நடிகை கௌதமி.. குருசிஷ்யன் வந்த போது அந்த பெண் மீது மையல் கொண்டேன்.. அதே பெண் பல வருடங்களுக்கு பிறகு பக்கத்தில் அப்படியே பாடியை மெயின்டேன் செய்கின்றார் எப்படி  என்று தெரியவில்லை….
============
கடத்தலுக்கு சினிமாவேகாரணம் என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று சொன்னேன்… அப்போது ராவணன்  எந்த சினிமாவை பார்த்து விட்டு சீதையை கடத்தினான் என்று எழுதினேன்…அதற்கு பல பின்னுட்டங்கள் எழுதி இருந்தார்கள்.. ராவணன் கடத்தியதோடு விட்டுவிட்டான்… என்று பதில் சொன்னார்கள்… இன்னும் விவாதம் செய்யலாம்…. ராவணன் நல்லவன் கடத்தியேதோடு விட்டு விட்டான்… இதுவே வேறு ஒருவன் அந்த கால கட்டத்தில் வேறு ஒருவன் கடத்தி இருந்தால் வேறு எதாவது செய்து இருப்பான்..எனெனில் ராவணன் நல்லவன்… அந்த இடத்தில் வேறு ஒரு நாதாரி இருந்து இருந்தால் வேறாக போய் இருக்கும்.. கடத்தலுக்கு சினிமாவே காரணம் ஆகாது… சினிமாவும் ஒரு காரணம்….. இது பற்றி இன்னும் விரிவாய் ஒரு பதிவு எழுதலாம்.. ஆனால் சமுகத்தில் கடத்தலுக்காண காரணத்தையும், மிக சிறந்த உதாரணத்தையும் அதற்கான காரணத்தையும் ஒரு சினிமா அலசி இருக்கின்றது.. அந்த படத்தின் பேர் கற்றது தமிழ்…..
=============
பார்த்ததில் பிடித்தது...

மாம்பலத்தில் பட்டாசுக்கு நெருப்பு வைத்து விட்டு காருக்கு பின்னே போய் மறைந்து பயந்து கொண்டு வெடி வெடித்த அந்த குட்டிவாண்டு ரியாக்ஷன் இன்னும் என் கண்களில்..

===========
இந்தவார கடிதம்..
Hi jackiesekar ,
                      Zia with u from Kuwait i hope everything fine there when i read your blog am really enjoy on that moment
         past 1 year am reading your blog its very entertaiment and very useful information for me we don't know what's going
         on our home town when we read your messages i learn something from that so pls goahead .
                 Happy Diwali for you and your family  lets enjoy
                    
--
Thanks & Regards
A.Md Zia
Onsite Technician

அன்பின் ஜியா… ஹோம்டவுனில் நான் பார்த்த பல விஷயங்கள் பகிர்ந்து கொள்ள முக்கியகாரணம்…சென்னையில் தமிழகத்தில் நடக்கும் விஷங்கள் வெளி தேசத்தில் இருக்கும் உங்களை போன்றவர்கள்… தெரிந்து கொள்ளவேண்டும் என்பதால்….  மிக்க நன்றி…
================

சிறுவிளக்கம்..
போன தீபாவளி 2010 பதிவில் பின்னுட்டத்தில் ஒரு நண்பர் இப்படி பின்னுட்டம் இட்டு இருந்தார்..



Jackie,
vara unga updates ellam dairy maathiri ungala pathiye iruku... konjam interesting a ethavathu pannalame.. daily paakurom, ungala pathiye iruntha bore adikuthu...

Aana, kaasu illanalum kadan vaangiavathu bill kattanumnu nenaikira unga kadamai unarchi...ayyayyyayooo. theeya vela seyareenga nalla thambi..


  என்று அவர் நல்லவிதமாகத்தான் சொல்லி இருக்கின்றார்... இருந்தாலும் என் விளக்கம் இதுதான்...  ஏன் என்றால் இது போல இன்னும் பலருக்கு இது போல சந்தேகம் வந்து இருக்கும்... அதனால் இந்த பதில்..அன்பின் நண்பர்களுக்கு, இந்த தளம் என்னுடைய தளம்..   நான் சந்தோஷித்த  கவனித்த, சகித்துகொண்ட விஷயத்தை எழுதவே இந்த தளம். எனக்கு என்ன பிடிக்குதோ அதை எழுதறேன்.. வேறு எதாவது இன்டரஸ்டிங்கா எழுதுங்கன்னு சொன்னார்… நண்பரே என்னால எது முடியுமோ அதை எழுதுகின்றேன். டெய்லி பார்க்காதிங்க.... நம்ம முகத்தை  கண்ணாடியில தொடர்ந்து பார்த்தா போர் அடிக்கும் ஒன்ன விட்டு ஒரு நாள் பாருங்க.. சும்மா ஜோக்குக்கு சொன்னேன். அதே போல  போர் அடிச்சாலும்  திரும்ப படிக்கும் உங்க கடமை உணர்ச்சி போலதான்,  கடன் வாங்கியாவது நெட்கனெக்ஷன் வாங்குவதும்..
 ==========
ரொம்பவும் யோக்கியவான்கள்... சந்தியவான் சாவத்திரிகள்தான் என் தளத்தை தொடர்ந்து வாசிக்கின்றார்கள் என்பது சில இடங்களில் பின்னுட்டம் இடும் போது தெரிகின்றது... முக்காடு போட்டு டெய்லி வாசிக்கும் உங்களுக்கு என் நன்றிகள்.

==========

ரெண்டாவது..
நான் எழுதுவது ஒரு ஆத்ம திருப்திக்கு….. அதே போல சில நண்பர்கள் ஏன் முன்பு போல சினிமா அதிகம் எழுதுவதில்லை என்று குறைபட்டுக்கொண்டார்கள்.. நல்லபடங்கள், பார்த்த பாடமாக இருந்தாலும் திரும்ப ஒருமுறை பார்த்து விட்டு எழுதும் ரகம்…. ஒரு படத்தை ஏனோ தானோ என்று எழுதி பதிவிடும் ரகம் நான் அல்ல.. அது போல் எழுதி எனக்கு திருப்தி வராமல் டிராப்டில் இருக்கும் படங்கள் ஏராளம்….. ஒரு படம் எழுத நல்ல மூடு வேண்டும்...
================
ஈசிஆர் சாலை பற்றி நான் எழுதிய பதிவுக்கு வந்த இந்த  பின்னுட்டம் எனக்கு மிகுந்த மகிழ்வை தந்தது... என்னை  பலர் வயிற்று எரிச்சலில் திட்டிக்கொண்டு இருக்கும் போது, இது போலான பின்னுட்டங்கள் எனக்கு மகிழ்வையும் ஆத்ம திருப்தியையும் தருகின்றன....


அன்புள்ள ஜாக்கி, உண்மையான சமூக அக்கறையுடன் எழுதியுள்ளீர்கள். கடந்த இருபது ஆண்டுகளில் சீனாவின் அசுர வளர்ச்சிக்கு அவர்கள் அடிப்படைக் கட்டமைப்புக்கு கொடுத்த முக்கியத்துவமே காரணமாகும். அதுபோல இங்கும் நடக்க வேண்டும். ஈ.சி.ஆர். நான்கு வழி சாலையாக மாற்றுவது சாலச் சிறந்தது. நிற்க! பல நாட்களாக உங்கள் பதிவுகளை படித்து, முக்கியமாக உங்கள் திரை விமர்சனங்களை ரசித்து வந்தாலும் இன்றுதான் தமிழில் பதிலளிப்பது மற்றும் இன்ட்லி மூலம் வோட்டிடுவது எப்படியென்று எனது மகள் மூலம் அறிந்து பதியும் என் முதல் பதிவு!
அன்புடன், கொடுமுடி சண்முகம்
==================

நன்றி கொடுமுடி சண்முகம் அவர்களே... உங்கள் பதில் என்னை சந்தோஷபடுத்தியது...
========================
நன்றிகள்..
தீபாவளி வாழ்த்து தெரிவித்த பம்பாய் தீபக்,கார்த்திகை பாண்டியன்,ரோஸ்விக் போன்றவர்களுக்கு எனது நன்றிகள்..
================
பிலாசபி பாண்டி
ஒரு பொண்ணு லவ்பண்ணா அவுங்கவீட்ல...யாருடி அந்த இடியட்னு கேப்பாங்க....
இதுவே பையன் லவ் பன்றது வீட்ல தெரிஞ்சா எப்படி கேட்பாங்க??? இடியட் யாருடா அந்த பொண்ணுன்னு???

பாருங்க எப்பவுமே பொண்ணுங்க சேப்டிதான்...
============
இந்தவார நிழற்படம்.
நம்ம சேரநாடுதான்..
=========================
நான்வெஜ் 18+
பேங்குக்கு ஒரு நிறைமாத கர்பினி ஒருத்தி பணம் கட்ட போன  அந்த நேரம் பார்த்து பேங்கு கொள்ளை அடிக்க ஒரு கொள்ளை கூட்டம் வர, போலிசும் வந்துடுச்சி... இரண்டு தரப்புக்கு சண்டை.. கர்பினி வயற்றில் மூணு குண்டு பாய்ஞ்சிடுச்சி... ஆஸ்பிட்டலில் டாக்டர் சொன்னார்.. உங்களுக்கு மூணு பசங்க...இரண்டு பொண்ணு, ஒரு ஆண் பிள்ளை... எந்த பிரச்சனையும் இல்லை.. அந்த பசங்க பெரிய ஆளா ஆனதும் அந்த புல்லட்டை வெளியே எடுத்தடலாம்னு டாகட்ர் சொல்லிட்டார். பதினைஞ்சு வருசம் கழிச்சி பெரிய பொண்ணு வந்தா... அம்மா நான் டாயலட் போனேன்... அதுல ஒரு துப்பாக்கி புல்லட் வந்ததுன்னு சொன்னா... அதுக்கு அம்மா, அந்த பேங்க கொள்ளை சம்பவத்தை சொன்னா.... இரண்டாவது பொண்ணு  வந்தும்  இதே போல சொல்ல, அம்மா... அப்படியான்னு அவகிட்டயும் அந்த பேங்கு கொள்ளை சம்பவத்தை சொல்லி அதனாலதான் இதுன்னு சொல்லிட்டா...

ஒரு வாரம் கழிச்சி அம்மாகிட்ட கடைசி பையன் வேர்க்க விறு விறுக்க வந்து நின்னான்... உடனே அம்மா கேட்டா? என்டா நீ டாய்லட் போகும் போது துப்பாக்கி புல்லட் வந்துச்சா?? இல்லை நான் மாஸ்டர்பேட் பண்ணும் போது என்னதில் இருந்து ஒரு துப்பாக்கி குண்டு வேகமா பறந்து நம்மவீட்டு நாய் ஜானியை சாகடிச்சிடுச்சின்னு சொன்னான்.


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....

குறிப்பு.. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்.   

27 comments:

  1. மாம்பலத்தில் பட்டாசுக்கு நெருப்பு வைத்து விட்டு காருக்கு பின்னே போய் மறைந்து பயந்து கொண்டு வெடி வெடித்த அந்த குட்டிவாண்டு ரியாக்ஷன் இன்னும் என் கண்களில்..///////// கேமரா எடுத்துட்டு போறதில்லையா..?

    ReplyDelete
  2. ஜல் புயல் ஏமாற்றி விட்டது. ஆனால் குட்டிஸ்களுக்கு கொண்டாட்டம்..

    ReplyDelete
  3. ஆமாம் ஜாக்கி, சினிமா பதிவு போட கண்டிப்பாக மூடு வேண்டும். The Reader புதிய பதிவு போட்டிருக்கேன். பார்த்து கருத்து சொல்லவும். வாழ்த்துகள். மதியம் பேசுறேன்.

    ReplyDelete
  4. ஜாக்கி, தமிழ் மணத்தில் ஒட்டு போட்டுவிட்டேன்.

    ReplyDelete
  5. //பிசி குடும்பத்துக்கு எனது ஆறுதலை தெரிவித்துக்கொள்கின்றேன்// :((

    //பாருங்க எப்பவுமே பொண்ணுங்க சேப்டிதான்// :)))

    //ஒரு படம் எழுத நல்ல மூடு வேண்டும்.//

    நல்லா சொன்னிங்க தல!

    ReplyDelete
  6. சூர்யா பேக்.. தல போல வருமா?? வருக வருக,...

    ReplyDelete
  7. சூர்யா ஏற்கனவே குழந்தை கடத்தலில் தமிழகமே தகிச்சிகிட்டு இருக்கு... இந்த நேரத்துல நம்ம உருவத்தையும் கேமராவையும் பார்த்தா கும்மிடுவாங்க..

    ReplyDelete
  8. [im]http://farm4.static.flickr.com/3055/2396506794_fc8f9bbeea.jpg[/im]

    ReplyDelete
  9. ////ரொம்பவும் யோக்கியவான்கள்... சந்தியவான் சாவத்திரிகள்தான் என் தளத்தை தொடர்ந்து வாசிக்கின்றார்கள் என்பது சில இடங்களில் பின்னுட்டம் இடும் போது தெரிகின்றது... முக்காடு போட்டு டெய்லி வாசிக்கும் உங்களுக்கு என் நன்றிகள்.////

    super............

    ReplyDelete
  10. ஜல் புயலால் தென்மாவட்டங்களுக்கும் பாதிப்பு. வடதமிழகம் மட்டுமே மழையால் பாதிப்பு. வெள்ளம் எங்கும் இல்லை. ஆனால் போதிய மழை இல்லாமல் குளங்கள் பெருகாமல், அணைகள் நிரம்பாமல் தென் பகுதி விவசாயிகள் நெற்பயிரை பயிரிடாமல் காத்திருக்கின்றனர்.

    ReplyDelete
  11. Nalla Pakirvu. Mambalam kutties photo illai endralum padikkum pothu parththa santhosam.

    ReplyDelete
  12. /

    பாருங்க எப்பவுமே பொண்ணுங்க சேப்டிதான்...
    /
    :)))))))

    ReplyDelete
  13. குட்டிவாண்டு ரியாக்ஷன்
    Super sekar.

    ReplyDelete
  14. முக்கிய அறிவிப்புக்கு நன்றி தோழரே

    ReplyDelete
  15. நல்ல தொகுப்பு சார்.

    ReplyDelete
  16. இந்த வார நிழற்படம் அருமை... அந்த குட்டி வாண்டு போட்டோ இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்

    ReplyDelete
  17. please pull the jal to southtamilandu!

    ReplyDelete
  18. //சூர்யா ஏற்கனவே குழந்தை கடத்தலில் தமிழகமே தகிச்சிகிட்டு இருக்கு... இந்த நேரத்துல நம்ம உருவத்தையும் கேமராவையும் பார்த்தா கும்மிடுவாங்க..//
    ------------------------ஜாக்கி .

    எனக்கு முதல்முதலா உம் முகத்த படத்ல பாக்ரப்ப இதுதான் தோணிச்சி ....
    //பிள்ளை பிடிகிறவன் மாரி இருக்கானே !//
    ரெண்டுவருஷம் கழிச்சி நீயே சொல்லிட்ட .......ரொம்ப குஷியா இருக்கு ஜாக் :))))))

    ReplyDelete
  19. வழக்கம்போலவே அசத்தல் அண்ணே,

    //பிசி குடும்பத்துக்கு எனது ஆறுதலை தெரிவித்துக்கொள்கின்றேன்/

    ReplyDelete
  20. நியூஸ் அப்டேட் போல் சென்னை செய்திகளை சொன்னதும், வாசகர்களின் கடிதங்களை அலசியதும் அருமை ஜாக்கி சார்! ஆனாலும் அந்த புல்லெட் ரொம்ப அநியாயம்!!

    ReplyDelete
  21. Hi,
    Please see the following films and write about them. 1. Charlie.ST.Cloud , 2. Ramona and Beezus

    ReplyDelete
  22. ஜாக்கி அவர்களே மைனா எப்படி இருந்தது?
    இசை அமைப்பாளர் உதயா

    ReplyDelete
  23. நல்ல அருமையான, அனைவருக்கும் உபயோகமான படைப்பு

    ரவிச்சந்திரன் சென்னை

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner