பொதுவாக இந்தியாவில் எல்லாவற்றிர்க்கும்
புனித பிம்பம்கள் கொடுத்த விட்டு பின்னால்
எல்லா களவானி தனங்களும் அனுதினமும்
நடக்கும் தேசம்.
இங்கு எல்லாம புனிதம்தான்...
ரோஜா படத்தில் தேசிய கொடியை எறித்தால் உணர்ச்சி வசப்பட்டு
அதனை நாயகன் அணைப்பான் படம் பார்க்கும் நமக்கு
ஜிவ் என்று இருக்கும்...
ஆனால் அமெரிக்காவில் கொடியை எரிப்பார்கள்.... அவர்கள் நாட்டு கொடியில்
ஜட்டி செய்துக்கூட போட்டுக்கொள்ளுவார்கள்... ஆனால் நகரம் தூய்மையாக இருக்கும்...
எதற்கு புனித பிம்பம்
கொடுக்க வேண்டுமோ...? அதற்கு கொடுப்பார்கள்... எல்லாத்தையும் புனிதமான பார்க்கமாட்டார்கள்...
எர்போர்ஸ் ஒன் திரைப்படத்தில் அமெரிக்க
அதிபரை அசிங்கமாக திட்டுவார்கள்... எச்சி துப்புவார்கள்... அடிப்பார்கள் துவைப்பார்கள்...
வில்லன் சரிக்கு சரியாக பேசுவான்... எல்லாம் இருக்கும் ஆனாலும் அவர்கள் சொல்ல வந்த விஷயத்தை வாழை பழத்தில்
ஊசி ஏற்றுவது போல ஏற்றி விட்டு சென்று விடுவார்கள்..