எனக்கு ஒரு கடிதம் வந்தது.. அந்த கடிதம் சினிமாவை விரும்பி பார்ப்பவரின் கடிதம்...
அன்புள்ள ஜாக்கி ஸாருக்கு,
சென்னையில் வருடாவருடம் நடக்கும் உலகத் திரைப்பட விழா பற்றி நான் முதன் முதலில் உங்கள் தளத்தைப் பார்த்து தான் தெரிந்து கொண்டேன். போன வருடம் ஒரே படஹ்ட்தைப் பார்த்த் போதும் (Landscape No 2) நாம் சந்திக்க முடியாமல் போனது நினைவிருக்கலாம்.
இந்த வருடம் அதே சர்வதேச சென்னை திரைப்பட விழா டிசம்பர் 15 முதல் ஆரம்பமாகிறது என்று கேள்விப்பட்டேன். தங்களது தளத்திலேயே கூட இது பற்றி வாசித்ததாக நினைவிருக்கிறது. ஆனால் அதன் பிறகு இந்தத் திரைப்பட விழா பற்றி எந்தச் செய்தியும் இல்லை. http://www.chennaifilmfest.org/ இங்கும் போன வருட நிகழ்ச்சிப் பற்றியே உள்ளது. நாளும் நெருங்கிக்கொண்டிருக்கிறது. விழா நடக்கிறாதா, இல்லையா? நடக்கிறதென்றால் எந்தத் தளத்தில் சென்று அதைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்?
இதைப் பற்றிக் கேட்க நீங்கள் தான் சரியான ஆள் என்பதால் உங்களுக்கு எழுதுகிறேன். தெரிந்தால் கொஞ்சம் சொல்லவும். சென்னையில் நடக்கும் இத்தகைய திரைப்பட விழாக்கள் பற்றி உங்களது தளத்தில் விளக்கமாக எழுதினாலும் மகிழ்ச்சியே...
அன்புடன்,
பிரதீப் பாண்டியன் செல்லத்துரை
அன்பின் பிரதிப் உங்களுக்காதான் இந்த பதிவே.. முன்பே பலர் விழா பற்றி எழுதினாலும் அவசர வாழ்வில் மறந்து விட வாய்ப்பு இருந்த காரணத்தால் நான் நெருக்கத்தில் எழுத முடிவெடுத்தேன். பெங்களுரில் இருந்து லீவ் போட்டு விட்டு படங்களை ரசிக்க வாழ்த்துக்கள். நேரம் சாத்தியபடின் நாம் இருவரும் இந்த முறை சந்திப்போம்.
=======================
இனி 8வது சென்னை உலக திரைப்பட விழா.. பற்றிய விவரங்கள்.
அன்பின் நண்பர்களுக்கு சென்னை வாழ் சினிமா ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டு இருந்த உலக திரைபடவிழா தொடங்க இன்னும் நான்கு நாட்களே உள்ளது..
ஆம் சென்னையில் வருடா வருடம் டிசம்பர் மாதத்தில் சென்னையில் உலக திரைபடவிழா நடப்பது வழக்கம்.. இந்த முறையும் அதே டிசம்பர்மாதம்தான்.
வருகின்ற டிசம்பர் பதினைந்தாம் தேதியில் இருந்து டிசம்பர் 23ம் தேதிவரை சென்னையில் நடக்க போகின்றது.
வழக்கமாக இந்த திருவிழா பத்து நாட்கள் நடக்கும் ஆனால் இந்த முறை ஒன்பது நாட்கள் நடக்க போகின்றது...
காரணம் இருக்கின்றது.. வழக்கமாக 3 தியேட்டர்களில் திரையீடு இருக்கும் ஆனால் இந்த முறை 4 தியேட்டர்களில் உலகதிரைப்படங்கள் திரையிடபட இருக்கின்றன..
இந்தமுறை உட்லண்ட்ஸ் மற்றும் உட்லண்ஸ்சிம்பனி,ஐநாக்ஸ் ,பிலிம் சேம்பர் என நான்கு திரையரங்கங்களில் திரையிடபடுகின்றது....
வழக்கம் போல என்னுடைய சாய்ஸ் உட்லன்ட்ஸ்தான்.. காரணம் படம் பிடிக்காவிட்டாலும் நாம் சட்டென உட்சிம்பனிக்கு போய் வேறு படத்தை உடனே ரசிக்கலாம்.
எதுக்குசார் தியேட்டர்ல போய் பார்க்கனும் பர்மாபஜார்ல கிடைக்காத படமா? என்று யாராவது எகத்தாளம் பேசலாம்... நான் இந்த திரைப்பட விழாவில் பார்த்த பல படங்கள் பர்மாபஜார் என்ன ? பல இடங்களில் தேடியும் எனக்கு கிடைக்கவில்லை.
அதனால் வாய்ப்பை நழுவ விடாதீர்கள்.
18வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி...
தியேட்டரில் செல்போனில் பேச அனுமதி இல்லை.
உங்களுக்கு சினிமா மீது அதிக ஆர்வம் இருந்தால் இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள்.
சினிமா யூனியனில் மெம்பர் என்றாலோ அல்லது கல்லூரி மாணவர்கள் என்றாலோ உங்கள் ஐடி கார்டை காட்டி 300ம் ஒரு பாஸ்பேர்ட் சைஸ் போட்டோவும் கொடுத்தால் ஒரு கழுத்தை பட்டையுடன் கூடிய ஐடென்ட்டிகார்டு கொடுத்து விடுவார்கள்.
நீங்கள் மெம்பர் இல்லையென்றால் 500 ரூபாய் பணமும் உங்கள் பாஸ்போர்ட் சைஸ் போட்டோவும் கொடுத்தால் உங்களுக்கு ஒரு அடையாள அட்டை கொடுத்து விடுவார்கள்..
500 கொடுத்தவர்களுக்கு மட்டுமே.. சுவேனர் புத்தகம் கொடுக்கபடும்..
18வயது பூர்த்தியான யார் வேண்டுமானலும் திரைபடவிழாவில் கலந்து கொள்ளலாம்.
15ம் தேதியில் இருந்து சரியான ஒன்பது நாளுக்கு காலையில் ஒன்பது மணிக்கே படம் எல்லா தியேட்டர்களிலும் ஓட தொடங்கும்...
ஒரு தியேட்டரில் ஒரு நாளைக்கு 5 படம் சோ 4 தியேட்டர். ஒரு நாளைக்கு 20 படம் திரையிடபடும்...
செகன்ட் ஷோ மட்டும் எந்த தியேட்டரிலும் நடக்காது..
இந்தமுறை வெற்றிபெற்றபடங்களுக்கு விருதும்,பணமுடிப்பும் அளிக்க இருக்கின்றார்கள்.
மதியம் ஒன்றரைக்கு மேல் விடும் பிரேக்கில் கிடைத்தை தின்று படம் படம் என்று ஒரு நாளைக்கு 5 படத்தை பார்த்து மகிழுங்கள்.
ஐநாக்சில் பார்க்கிங் கட்டணம் பிலிம் பெஸ்ட்டிவல் நுழைவு கட்டணத்தை விட அதிகமாக இருக்கும் சாத்தியக்கூறு இருப்பதால் அங்கு ஏன் படத்தை திரையிடுகின்றார்கள் என்று தெரியவில்லை...?
சரி இருக்கபட்டவங்க வருவதற்க்காக இருக்கும்..
திரையிடபடபோகும் படங்கள் லிஸ்ட் உங்கள் கையில் தேதி மற்றும் நேரவாரியாக கொடுத்து விடுவார்கள்.. நீங்கள் அதனை வைத்துக்கொண்டு படங்களை தேர்வு செய்து பார்க்கவேண்டியது உங்கள் திறமை..
எப்படியும் ஒரு நாளைக்கு 3 படங்களாவது நெஞ்சை நெகிழவைப்பதாக இருக்கும்.......
கடந்த ஏழு வருடத்தில் ஒரு வருடத்தை தவிர மற்ற எல்லா வருடமும் படம் பார்த்து இருக்கின்றேன்...
இந்த உலகபடவிழாவில் எனக்கு வேலை ஆரம்பித்து விட்டால் நான் பங்கு பெற வாய்ப்பில்லை.. இருப்பினும் நேரம் இருந்தால் அவசியம் கலந்து கொள்வேன்.
இன்னும் 3 நாட்களே உள்ளன அதனால் உங்கள் இருக்கைக்கு முந்துங்கள்.
ஒன்பது நாளுக்கு லீவ் கிடைக்காதுதான் இருந்தாலும்.. சனி ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களிலாவது கலந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.
எனக்கும் சென்னை உலகபடவிழாவுக்கும் ஒரு ராசி இருக்கின்றது. காரணம் மற்றநாட்கள் எல்லாம் சும்மா இருப்பேன்..பெஸ்ட்டிவல் நடக்கும் போதுதான் எல்லா வேலையும் சேர்ந்து வரும்.
(ஏழாம் சென்னை உலகபடவிழாவில் எனது மாணவ செல்வங்களுடன்....)
மேலும் விபரங்கள் அறிய எய்த் இன்டர்நேஷனல் சென்னை பிலிம் பெஸ்ட்டிவல் தளத்தை பார்க்க இங்கு கிளிக்கவும்.
போன வருடம் இதே போல் ஏழாவது சென்னை உலகதிரைப்படவிழா பற்றி அறிவித்து எழுதிய போஸ்ட் ஒரு சின்ன நினைவுக்காக படித்து பார்க்க இங்கு கிளிக்கவும்
6வது சென்னை உலகபடவிழா பற்றிய பதிவை வாசிக்க இங்கு கிளிக்கவும் ஒரு மலரும் நினைவுக்காக..
6வது சென்னை உலகபடவிழாவில் நான் உண்மை தமிழன் நண்பர் நித்யா....போன்றவர்கள் கலந்து கொண்ட போது...............
படங்களை கிளிக்கி பார்க்கவும்.
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....
குறிப்பு..
இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகடுத்துங்கள்.
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்
hiyya naan thaan 1st tu
ReplyDelete//8வது சென்னை உலகதிரைப்படவிழா//
ReplyDeleteஇந்த விழாவில் டாக்டர் கேப்டன் விஜயகாந்த நடித்த “விருத்தகிரி” திரையிடப்பட்டால், நான் ஆஃபீஸுக்கு கட் அடித்து விட்டு வந்து பார்ப்பேன்....
//
ReplyDeleteநலம். நாடலும் அதுவே. தமிழ்மண நட்சத்திர பதிவராக தேர்ந்தெடுக்கபட்டமைக்கு வாழ்த்துக்கள்.//
வாழ்த்துக்கள் அண்ணே உங்கள் பொன்னான பணி மென்மேலும் சிறக்க வேண்டும்....
அண்ணே..தகவலுக்கு நன்றி...
ReplyDeleteஇன்று முதல் என் வலைப்பூ “செங்கோவி” ஆரம்பம் ...முகவரி:
http://sengovi.blogspot.com/
வாருங்கள்..வாழ்த்துங்கள்..
--செங்கோவி
official website : http://www.chennaifilmfest.com/
ReplyDeleteJust enjoy this fest...
///இந்த விழாவில் டாக்டர் கேப்டன் விஜயகாந்த நடித்த “விருத்தகிரி” திரையிடப்பட்டால், நான் ஆஃபீஸுக்கு கட் அடித்து விட்டு வந்து பார்ப்பேன்..
ReplyDeleteஇதை நான் அமெதிக்கிறேன் (அவமதிக்கவில்லை)`
speedsays.blogspot.com
http://www.chennaifilmfest.com/
ReplyDeleteஅண்ணே! போஸ் சூப்பரு! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ReplyDeleteஇந்த வாரம் தமிழ்மணம் சிறந்த இருபது வலைப்பூக்கள் பட்டியலில் 9-வது இடம் பிடித்தமைக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள் அண்ணே.
ReplyDeleteமிக்க நன்றி ஜாக்கி ஸார்... இந்த முறை நான் வந்தால் நிச்சயம் உங்களைத் தொடர்பு கொள்கிறேன்...
ReplyDelete