![](http://2.bp.blogspot.com/_FDULgrSOClk/SSjoNQJKbVI/AAAAAAAAAug/Gx37Hq0b08A/s320/kalaingar.jpg)
கலைஞரின் மனசாட்சியாக இருந்தவர் மறைந்த மத்திய அமைச்சர் முரசொலி மாறன். கடைசி வரை மாறன் தேவர் மகன் கமலஹாசன் போல் கலைஞரை எதிர்த்து பேசியதே இல்லை.
அவ்வப்போது கோபதாபங்கள் மாறனுக்கும் மாமா கலைஞருக்கும் ஏற்ப்பட்டாலும் ஒரு வாரம் கோபித்து கொண்டு மாமா வீட்டுக்கு வராமல் அப்புறம் தானே வந்து சமாதானப் படுத்திக்கொள்வார். எனென்றால் திட்டியது மாமா தானே?. ரோட்டில் போகிறவர் இல்லையே.
18 வருடங்களுக்கு முன்பு பூமாலை வீடியோ பத்திரிக்கை ஆரம்பித்து அதில் சினிமா செய்திகள் இயக்குநர் மற்றும் நடிகர் நடிகை பேட்டிகள் போன்றவையும் சினிமா தொடக்க விழாக்களையும் தொகுத்து வீடியோ கேசட்டாக தமிழகம் எங்கும் உள்ள வீடியோ கடைகளுக்கு வினியோகித்தார் கலா நிதி மாறன். அப்போது கடலூரில் ஒரு வீடியோ கடையில் நான் வேலை செய்துவந்தேன்.
ஆனால் வீடியோ கேசட் கடை காரர்கள் ஒன்று வாங்கி நிறைய காப்பி போட்டு விற்க்க அது தோல்வியில் முடிந்தது.
அதன் பிறகு சன் டிவி ஆரம்பித்து அது தமிழகத்தில் இன்றும் கோலாச்சி கொண்டு இருப்பதை யாவரும் அறிவர். அதற்க்கு கலாநிதி மாறனின் வியற்வையும் உழைப்பும், அவரின் அறிவும் திறமையுமே காரணம் என்றால் அது மிகையாகாது.
எல்லோருக்கும்தான் அறிவும் உழைப்பும் இருக்கிறது.
எல்லோராலும், எல்லோருக்கும் சாத்திய படுகிறதா? சாத்தியப்படாது. எனென்றால், திமுக என்ற அரசியல் செல்வாக்கு மட்டும் இல்லையென்றால் ஆசியாவின் இளம் தொழில் அதிபர் பட்டம் கிடைத்து இருக்குமா?
ஜெயா டிவிக்கு கூட அரசியல் செல்வாக்கு இருந்தது.
ஆனால் வியாபார உத்தி தெரிந்தவர் அங்கு யாரும் இல்லை அதனால் அது பெரிய அளவில் சோபிக்கவில்லை.
திமுக செல்வாக்கு உள்ள டிவி என்பதாலும் பொதிகைக்கு மாற்று வேண்டும் என்பதாலும் சன் கோலாச்ச ஆரம்பித்தது.
திமுக ஆதரவு டிவி என்பதலே கழகத்தினர் அதனை பார்த்து ரசித்து கொண்டாடினர்.
இப்போது இதன் இயக்குனர்கள் சொல்வது போல் நடுநிலை என்ற வார்த்தை மட்டும் 18 வருடங்களுக்கு முன்பு உபயோகப்படுத்தி இருந்தால், அறிவாலயத்தில் மட்டும் இல்லாமல் இருந்து இருந்தால், அது மட்டும் கோடம்பாக்த்தின் எதாவது ஒரு சாலையில் இருந்து இருந்தால்,இன்நேரம் சன் ஆபிஸில் வன்முறை வெறியாட்டம் நடந்து மதுரை தினகரன் பத்திரிக்கை கதி ஏற்பட்டு இருக்கும்.
மாறன் சகோதர்ர்கள் அப்போது அறிவாலய கோட்டைகுள்ளே வளர்ந்தார்கள். திமுக அரசியல் கேடயத்தை வைத்து மேலும் மேலும் முன்னேறினார்கள். அப்போது அவர்கள் நடு நிலை பேசவில்லை. பேசமாட்டார்கள் வியாபார உத்தியில் பேசவும் கூடாது. பேசியிருந்தால் அறிவாலய கோட்டையில் இருந்து அப்புறபடுத்தி இருப்பார்கள்.
தயாநிதி மாறன் யார்?
சைதை கிட்டு ,வெற்றி கொண்டான் போல் ஏதாவது கட்சி பொது கூட்டத்தையோ அல்லது கட்சி செயல்பாடுகளையோ மேடையில் பேசியவரா? இல்லை,
மாறன் இளைய மகன் அவ்வளவே.
கலைஞர் கைதின் போது முரசொலி மாறன், மத்திய அமைச்சராக இருந்த போதிலும்,
அந்த வயதிலும் வேட்டி அவுந்து வெள்ளை நிக்கர் வெளியே தெரிய போலிஸ் அடித்து இழுத்து போன போது, தன் தலைவனை காக்க போராடிய வேகம் மாறன் மகன்களிடம் எங்கு போனது.
வைகோ,
என் அப்பா கைதின் போது பழப்பு காட்டியவர் என்று சொல்லி சன்னில் காட்டாமல் விட்டதால்,
அந்த ஆளும் புழுங்கி புழுங்கி கடைசியில் ஜெ பக்கம் போனார்.
அப்படி அவர் போகாமல் இருந்து இருந்தால் இன்று ஜெயா டிவியில் மைனாரிட்டி திமுக என்ற வார்த்தை வந்து இருக்குமா? இப்போது என்னடாவென்றால் திமுக வெற்றிக்கு நாங்கள் காரணம் என்று நீங்கள் இப்போது சொல்கிறீர்கள்.
நீங்களும் காரணம்தான் அது மறுப்பதற்க்கில்லை அது உங்களின் செஞ்சொற்று கடன். அது உங்களின் கடமையும் கூட.
ஒரு சாதாரண திமுக தொண்டனுக்கு இருக்கும் கடமையை விட உங்களுக்கு அதிகமான கடமை இருக்கிறது .இன்னும் எழெழு ஜென்மத்துக்கு அந்த கடமை இருக்கிறது.
அரம்பத்தில் இருந்தே நடுநிலமை என்றால் அதுதான் உண்மையான ஆட்டம் இப்போது நடுநிலமை என்பது அழுகுனி ஆட்டம். அதைதான் அண்ணன் தம்பி இருவரும் செய்கிறீர்கள்.
நடுநிலை என்ற சொல்லோடு நீங்கள் சினிமா விமர்சனம் செய்து இருந்தால் எத்தனையோ படங்கள் ஓடி இருந்து இருக்கும் உங்களிடம் விற்க்காத படங்களை,
தமிழ் நாட்டில் இப்படி ஒரு படமே வரவில்லை என்று பொதுமக்கள் என்னும் அளவுக்குதானே படங்களை விமர்சனம் செய்வீர்கள் செய்து இருக்குறீர்கள் . உங்களாலும் தமிழ் திரைப்ட உலகம் அழிந்து என்றால் அது மிகை இல்லை
தமிழகத்தின் எல்லா பெட்டிகடைகளிலும் கடன் அன்பை முறிக்கும் என்று எழுதி வைப்பது போல்,
நீ வாழ பிறரை கெடுக்காதே என்ற அற்புதமான வாசகம் ஒன்று உண்டு. அது உங்களுக்கு தெரிய நியாயமில்லை.
ஒரு வேண்டுகோள் உங்கள் நடுநிலமைகளை கலைஞர் எனும் 85 வயது கிழவன் இறந்ததும் வைத்துக்கொள்ளுங்கள்.
இப்போதும் எப்போதும் நினைவு வைத்துக்கொள்ளுங்கள், நீங்கள் உங்கள் அறிவால் சூட்சமத்தால் இந்த பெரிய வெற்றியை பெற்றுள்ளீர்கள். ஆனால், திமுக அரசியல் செல்வாக்கு மற்றும், அறிவாலய கோட்டையை கேடயமாக பயன் படுத்தி வளர்ந்தீர்கள் என்பதை மறவாதீர்கள் சகோதரர்களே.
வளர்த்த கடா மார்பில் பாய்ந்ததடா என்று திமுக பொது கூட்டங்களில் கூம்பு வடிவ ஒலி பெருக்கியில் ஹனிபா கணீர் குரலில் கேட்டு இருக்கிறேன். அது கலைஞர் விஷயத்தில் உண்மையும் கூட.
வளர்த்த கடாக்களுக்கும், வளரும் கடாக்களுக்கும் கலைஞர் மார்பு என்றால் கொள்ளை பிரியம்..............
அன்புடன்/ ஜாக்கிசேகர்