(MERANTAU WARRIOR-2009) இந்தோனேசியா. ஜகார்தா தலைநகரின் கருப்பு பக்கம்..

ஒரு தமிழ் படத்துக்கு குறைந்த பட்சம் ஆக்ஷன் முலாம் பூசினால் எப்படி இருக்கும்?? அதுதான் இந்த படம்… நிறைய இடங்களில் தமிழசாயல் வீசுகின்றது…



 எல்லா நாட்டிலும் நகர்புற வாழ்க்கை என்பது பலரின் கனவுதான்… அப்படி கராத்தே கலை பயின்ற ஒரு கலைஞனின் நகர்புறவாழ்க்கை அவனுக்கு என்ன கற்றுக்கொடுத்தது என்பதை தெரிந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் இந்த படத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும்…

MERANTAU WARRIOR  இந்தோனேசியா படத்தின் கதை என்ன???

யுதா மரான்டா எனும் கிராமத்து சிலெட் கலைஞன்… சிலேட் என்பது கைகளால் தாக்கும் ஒரு கலை… கராத்தே போல என்று வைத்துக்கொள்ளுங்கள்.
யுதா காலையில் எழுந்ததும் தன் கலையில் நன்கு தேர்ச்சி பெற ஓயாமல் பிராக்டிஸ் செய்பவன்.. மரான்ட் கிராமத்து கலாச்சாரத்தை பொருத்தவரை எந்த குழந்தையாக இருந்தாலும் ஒரு கட்டத்தில் பிரிந்து தன் சொந்தகாலில் நிற்க தகுதிகள் வளர்த்துகொள்ளவேண்டும்…..ஒரு நாய் யுதா தன்  கரேத்தா  கலையை கற்றுக்கொடுத்து பிழைப்பு நடத்த இந்தோனேசிய தலைநகர் ஜகார்தாவுக்கு வருகின்றான்..  வந்த இடத்தில் அவனுக்கு தெரிந்த நண்பர் அங்கு இல்லை… அதனால் ஒரு கண்ஸ்டிரக்ஷன் நடக்கும் இடத்தில் அடுக்கிவைக்கபட்டு இருக்கும் பைப்பில் படுத்துக்கொள்கின்றான்…

ஒரு நாள் இரவு… ஒரு இளம் பெண்ணை  அடித்துக்கொண்டு இருப்பதை யுதா பார்த்து அதனை தட்டிக்கேட்கின்றான்.. அந்த பெண் ஒரு பார் டான்சர்… அவளுக்கு ஒரு தம்பி இருவரும் அனாதைகளாக இருப்பதால் வயிற்று பிழைப்புக்கு அந்த தொழில் செய்கின்றாள்…  அதன் பிறகு இந்த சுயநலமான நகரவாழ்க்கை அவனுக்கு என்ன என்ன ? கற்றுக்கொடுக்கின்றது என்பதை திரையில் பார்த்து மகிழவும்…

படத்தின் சுவாரஸ்யங்களில் சில..

ஓங்பாங் என்ற படம் பார்த்து இருப்பீர்கள்.. வெகு நாட்களுக்கு பிறகு வந்த  கராத்தே கலையை மிக இயல்பாய் திரையில்  காட்டிய படம்.. அது போலானபடம்தான் இதுவும்…
ஏற்கனவே இது போல பல கதைகள் பார்த்து இருந்தாலும்… இந்த படம் மேக்கிங்கில் நிறைய கட் ஷாட்டுகள் எடுத்து மிரட்டி இருக்கின்றார்கள்…
பல காட்சிகளில் உலகசினிமா சாயல் தெரிகின்றது.. பல கட் ஷாட்டுகள் ரசிக்கும் படி இருக்கின்றன…

ஒரு தமிழ்படம் போல் போதும் போதும்   என்று சொல்லும்  அளவுக்கு சென்டிமென்ட் சீன்கள் அதிகம்… மிக முக்கியமாக அம்மா சென்டிமென்ட் அப்படியே அக்மார்க் தமிழ்படம்தான்…

அந்த கிராமத்து காட்சிகள் நமது கிராமத்து பசுமையை நினைவுபடுத்துகின்றன… அந்த அளவுக்கு பசுமை… சான்சே இல்லை…

முயன்றவரை ஹீரோ கையால்தான் சண்டை போடுகின்றார்.. சில காட்சிகள் அந்த சண்டை டெக்னிக் புருவம் உயர்த்துகின்றன….

கிளைமாக்ஸ இதயம் கனப்பதாக இருந்தாலும்  இது போலான காட்சிகள் தமிழ்படத்தை நினைவுபடுத்துவதை தவிர்க்க முடியவில்லை..

வெகு நாட்களுக்கு பிறகு எதாவது ஒரு ஆக்ஷன் படம் லாஜிக் இல்லாமல் பார்க்கவேண்டும் என்றால் இந்த படத்தை தாராளமாக பார்க்கலாம்…

நிறைய  சண்டை காட்சிகள் ஓரே  ஷாட்டில் எடுத்து இருக்கின்றார்கள்… அதனால் நாமும் லைவ்வாக கதையின் ஊடேயும், கதாபாத்திரத்தின் ஊடேயும் பயணிக்க முடிகின்றது…
மிக முக்கியமாக பைக்கில் துரத்தும் ஒருவனை சமாளிக்க குளிக்க துண்டு எடுத்து போகுபவனின் துண்டை வைத்து தப்பிப்பது நல்ல சண்டை காட்சி அமைப்பு….

இந்த காட்சி வெகு சீக்கிரத்தில் நமது தமிழ்படத்தில் வைக்க நிறைய சாத்திய கூறுகள் இருப்பதாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன…
என்ன ஹீரோதான் அமுல் பேபி போல இருக்கின்றார்…
இந்த படம் இந்தோனேசியாவின் கருப்பு பக்கத்தை வெளிச்சத்துக்குகொண்டு வருகின்றது…
====================
விருதுகள்...
இந்த படம் இரண்டு விருதுகளை வாங்கி இருக்கின்றது...
1. Audience Award, Honorable Mention at Fantastic Fest 2009
2. Best Film at Action Fest 2010
===========
டெக்னிக்...
இந்த படம் முழுக்க முழுக்க மீடியம் பீ2 என்ற கார்டில் பிலிமுக்கு பதில் பயன்படுத்தி எடுக்கபட்டபடம்.
வீடியோ கேமராவில்
ஷுட் செய்யபட்ட திரைபடம் இது..பிலிமுக்கு பதில் மெமரிகார்ட்டில் படபதிவுகள் நடக்கும்....
============



படத்தின் டிரைலர்.



படக்குழுவினர் விபரம்..

Directed by Gareth Evans Produced by Ario Sagantoro Written by Gareth Evans Starring Iko Uwais
Sisca Jessica
Christine Hakim
Donny Alamsyah
Yusuf Aulia
Laurent Buson
Alex Abbad
Mads Koudal
Ratna Galih
Yayan Ruhian Distributed by Merantau Films Release date(s) 6 August 2009 Running time 135 minutes Country Indonesia


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....

குறிப்பு.. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்.

4 comments:

  1. நல்லது நண்பரே

    ReplyDelete
  2. ஜாக்கி அண்ணே
    அருமையான பகிர்வு
    நான் அவசியம் பார்க்கிறேன்

    ReplyDelete
  3. ஜாக்கி சேகர் பரிந்துரைக்கு நன்றி. ரொம்ப அருமையாக இருந்தது படம்.

    படம் முழுவதும் விறுவிறுப்பு இருந்தது.. கடைசியில் கண்கலங்கி விட்டேன். டோனி ஜா வை சண்டையில் இந்த பையன் நினைவு படுத்துகிறான்.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner