Showing posts with label சென்னை மெரினா. Show all posts
Showing posts with label சென்னை மெரினா. Show all posts

சிநேகமுள்ள மனிதர்கள்.



என்னை பொறுத்தவரை சிறுவயதில் இருந்து இன்று வரை  உடற்பயிற்சி என்பது… மார்கழி மாதத்தில் பதினைந்து நாட்கள்  ரன்னிங் ஓடி  குளிரை  விரட்டி, மீதி பதினைந்து நாட்கள் போர்வை போர்த்திக்கொண்டு படுத்து உறங்குவதே என்னை பொருத்தவரை உடற்பயிற்சி…

ஜாக்கிசான் படம் பார்த்து விட்டு வீட்டுக்கு வந்தால்.. ஒரு பத்து  நாளைக்கு தண்டால் எடுத்து கண்ணாடி முன் மார்பை விரித்து   முறைத்து பார்க்கும் ரகம்.
20 வருட சென்னை வாழ்க்கையில்  நேரம் கிடைக்கும்  போது ஜாக்கிங்க அல்லது வாங்கிங் போகும் ரகம் எதையும் ரெகுலராக செய்தது  இல்லை…


உண்மைகள் ஒரு போதும் சாகா வரம் பெற்றவை.. சென்னை ஜல்லிக்கட்டு போராட்ட வன்முறை



எவ்வளவுய்யா கூட்டம் வந்துச்சி... சார் பத்து லட்சத்துக்கு மேல....
ஓ அப்படியா?

ஆமாம் சார்.

மயிலை சித்திரக்குளத்துக்கிட்ட இன்பமே உந்தன் பேர் பெண்மையோன்னு தலைவர் பாட்டுக்கு ஆட்டக்கார பொண்ணோட மாரை குலுக்கி ஆட்டிகூட பத்து பேரை உட்கார வைக்க முடியலை....

ஆனா ரொம்ப சாதாரணமாக 300 பேரோட ஆரம்பிச்ச கூட்டம் ஐஞ்சாவது நாள்ல பத்து லட்சத்துக்கு மேல போயிடுச்சி சார்...

கூட்டத்துல நம்ம பேர் ரொம்ப டேமேஜ் ஆயிடுச்சாய்யா ..?

பின்ன... அம்மா இருக்கும் போது அந்த ஆறு வருஷத்துல பத்திரிக்கையாளர்களையோ... அல்லது மக்களையோ நேர்ல சந்திக்கலைன்னு கேட்க துப்பு இல்லாதவன் எல்லாம்... உங்களை நேர்ல வந்து எங்ககிட்ட பேச சொல்லுன்னு சொல்ற அளவுக்கு கூட்டம் தைரியத்தை கொடுத்துடுச்சிங்க.....
அறவழி அறவழின்னு பசங்க புகழ் ஏறிக்கிட்டே இருக்குங்க...

திமுக மேல பழி போட்டு பாத்திங்க...

நம்ம பீ டீம் அதை சரியா பண்ணிக்கிட்டு இருக்குங்க...

சரி... திமுகாவை திட்றாங்களா?

பெரிசா இல்லைங்க.. காரணம்...ஊறுகாய் போல தொட்டுக்கறாங்க..ஸ்டாலின் முதன் முதலில் அலங்காநல்லுரில் போராட்டம் நடத்தியதையும்.... அவுங்க ஆட்சியில இருந்தவரைக்கு ஜல்லிக்கட்டு நடத்தினதையும் இணைய பேராளிங்களுக்கு வேணா தெரியாம இருக்கலாம்.. நம்ம பி டீம் கம்பு சுத்தி மறக்க வைக்கலாம்.. நாம எப்படிங்க மறுக்க முடியும் சொல்லுங்க.?
சரி என்ன பண்ணலாம்...

நல்ல பசங்கற பேரை... இவனுங்க தட்டிக்கிட்டு போனா... நாம எதுக்குன்னு பொது மக்கள் கேள்வி கேட்க ஆரம்பிச்சிடுவாங்க..
அதனால் அந்த குட் நேமை உடைக்கனும்...

யோவ் அந்த அளவுக்கு குட் நேம் இருக்கா..?

இந்தியாவுக்கே முன்னுதாரணமா மாணவர்கள் அறவழி போராட்டம் இருக்குன்னு நேஷனல் மீடியாவுல இருந்து கேரளா சூப்பர் ஸ்டார் மம்முட்டி வரை சொல்லிட்டாங்க...
அப்ப என்ன செய்யலாம்...?

அவனுங்க பேரை கெடுத்து மாணவர்கள் ஒரு நாளும் அறவழி போராட்டத்துக்கு சரியில்லைன்னு நிரூபிக்கனும்...

சரி இன்னைக்கு வரைக்கும் அவனுங்கதான் வன்முறையில இறங்கலையே?-
இறங்கனாமாதிரி நம்ம ஆட்கள் ஜோடிக்கறதுல கில்லாடிங்க... விசாரனை படம் பார்க்கலை...??

அது மட்டுமல்ல.. அப்படியே சொதப்புனாலும்.. திமுக செஞ்சிடுச்சின்னு சொன்னா இணைய போராளிங்க கேள்வி கேட்காம பொங்கி பார்வேட் செய்வானுங்க... ஏன்னா நம்ம பக்கம் கம்பு சுத்தி அடக்குறது போல திமுக பக்கம் பெரிசா ஆள் இல்லை... செயல் தலைவரே புறக்கணிக்கற ஊடகங்கள் கிட்ட போய் வெட்கமே இல்லாம நிக்கும் போது நமக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல..


ஜல்லிக்கட்டு போராட்டம்... என்னவாகும்.?




ஜல்லிக்கட்டு போராட்டம்... என்னவாகும்.?

முதல்வர் நல்ல செய்தி சொல்வார் என்ற எதிர்பார்ப்பில் மண்.

இந்த போராட்டம் இளைஞர்கள்  கத்தி கத்தி டயர்டாக்க வேண்டும் என்பதுதான்  தமிழக அரசின் யுக்தி...


ஜல்லிக்கட்டுக்காக 48 மணி நேர தொடர் போராட்டம் ஒரு பார்வை.



#jallikkattu
#MarinaProtest 
#JusticeForJallikattu

48 மணி நேரம்தாண்டி  வெற்றிகரமா  ஜல்லிக்கட்டு போராட்டம் சென்னை மெரினாவில  போய்கிட்டு இருக்கு...




கடந்த ஆறு நாட்களில் மழை பாதித்த நனைந்து போன முகநூல் பதிவுகள்.. #‎chennai‬ ‪#‎chennairains‬ ‪#‎chennaiflood‬ ‪#‎chennaifloodhelp‬




நகரின் மத்தியில் இருக்கும் சைதாபேட்டை பாலமே வெள்ளத்தில் மூழ்கி உள்ளது... ஆற்றங்கரையோரம் இருக்கும் மக்களின் நிலைமையை புரிந்துகொள்ளுங்கள்....
எல்லோரும் மொட்டை மாடியில் தவம் கிடக்கின்றனர்.... மின்சாரம் இல்லாத காரணத்தால் தகவல் தெரிவிக்க முடியாமல் விழி பிதுங்கி உள்ளனர்..

எல்லை மீறுகின்றதா? புத்தாண்டு கொண்டாட்டம்...


புத்தாண்டு கொண்டாட்டம்  எல்லை மீறி போகின்றதா ??? என்று சன்டிவி நியூஸ் சேனலில் இளைஞர்கள் சிலர்  எல்லை மீறிய காட்சிகளை காட்டினார்கள்…


Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner