1431 பயுரியா பல்பொடி(பாகம்/7)கால ஓட்டத்தில் காணமல் போனவைகள்.
எங்கள் வீட்டில் காலையில் எழுந்ததும் பல் விளக்க நாங்கள் அந்த நாட்களில் பயண் படுத்திய பேஸ்ட்,செங்கேனி அக்கா வீட்டு பசுமாடு போட்ட சாணியில் தயாரான வரட்டியை அடுப்பில் எரித்து கிடைக்கும் சாம்பல்தான், எங்கள் வீட்டின் அந்நாளைய பேஸ்ட்...
என்னதான் சொல்லுங்கள் சாம்பலில் பல் துலக்கும் சுகமே சுகம்தான்.... என்ன சாம்பலில் பல் துலக்கும் போது புதியவர் என்றால் அந்த சாம்பல் சாறு கைகளில் விழிந்து முழங்கை வரை நீளும்..
அப்போதெல்லாம் அம்மா சின்ன வயதில் பல் விளக்கி விடுவாள் அப்புறம் அதை நானே கற்றுக்கொண்டேன். இப்போது போல் எல்லாம் அப்போது ஊருக்கு கிளம்பும் போது 5 மட்டும் அடுக்காக எடுத்துக்கொண்டு போக மாட்டார்கள் .
உள்ளாடை மற்றும் மாற்று உடைகள் மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்...
ஒரு வெளியூர் கல்யாணத்துக்கு போகின்றீர்கள் என்றால் பிரஷ் பேஸ்ட் எல்லாம் அப்போது எடுத்துப்போக மாட்டோம். சேம்பிள் சோப்பு மட்டும் கடையில் வாங்கி கொள்வோம். காலையில் எழுந்ததும் வேப்பங்குச்சி,சாம்பல் இது இரண்டும் இல்லை என்றால் இருக்கவே இருக்கு செங்கல்...
வீடு கட்டும் செங்கல்லா? என்று வாய் பிளக்க வேண்டாம் அது போல் உடனடி பேஸ்ட் உலகத்தில் இல்லை என்பேன். வேப்பமரம், சாம்பல் கூட இல்லாத இடங்கள் இருக்கும் செங்கல் இல்லாத இடங்கள் மிகக்குறைவு.
செங்கலை எடுத்து ஓங்கி ஒரு கல்லின் மேல் அடித்தால் பல சி்ல்லுகளாக சிதறும் நாம் என்ன செய்ய வேண்டும் சிதறியதை விட்டு விட்டு அடித்த இடத்தில் பார்த்தால் மாவு போல் செங்கல் தூள் இருக்கும் அதுவே போதுமானது.. நாம் நம் எச்சிலை தொட்டு அந்த செங்கல் தூள் மேல் வைத்து பல்துலக்கி கொள்ள வேண்டும்... அவ்வளவுதான்.
இப்போது போல் அப்போதெல்லாம் டிவி விளம்பரங்கள் ஏதும் கிடையாது அப்படியே போட்டாலும் 5 பிள்ளைகளுக்கு அம்மாவான என் அம்மா மனதை எந்த விளம்பரங்களும் ஒன்றும் செய்ய முடியாது...
எந்த வெளியூர் பேனாலும் எங்க அம்மா வாங்கும் முதல் பல் பொடி 1431 பயுரியா பல் பொடிதான்
அந்த 1431பல்பொடியை அந்த வயதில் பார்த்தாலே எனக்கு எரிச்சலாக வரும் அதை வாயில் வைத்தால் எரியும், அதை கோல்கெட் போல் சுவைத்து விழுங்க முடியாது..நான் கோல் கேட் பேஸ்டின் ரசிகன்
( அப்படி விழுங்குவதை என் அம்மா பார்த்து தொலைத்து ராட்சசியாகி
அப்படி செய்வியா?, அப்படி செய்வியா? என்று வாயில் போட்டு உதடு கிழிந்து என் வாய் வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டு , நான் தேம்பி தேம்பி அழுது, மகது கேட்காமல், என் அம்மா என்னை சமாதானப்படுத்த முயல, நான் மண்ணில் விழுந்து அங்க பிரதட்சனம் செய்தது எல்லாம் இந்த 1431 பயுரியா பல்பொடி கட்டுரைக்கு தேவையில்லை என்பதால் அடுத்த பத்திக்குபோகிறேன்.)
(குறிப்பு மண்ணில் அங்கபிரதட்சனம் செய்ததற்க்காக என் அம்மா தனி பூஜை நடத்தியது தனிக்கதை..)
1431 பார்தாலே எனக்கு குமட்டிக்கொண்டு வரும்... எப்படா தண்ணி ஊத்தி வாய் கொப்பளிக்கலாம் என்று இருக்கும்...
அப்போதெல்லாம் சுவர் விளம்பரங்களில் இந்த 1431 பயுரியா பல்பொடி விளம்பரத்தை பார்த்து இருக்கலாம்.
ரேடியோவில் வேறு
1431 புயுரியா பல் பொடி இந்தியா இலங்கை சிங்கப்பூர் போன்ற நாடுகளில் ஏராளமாக விற்பனையாகும் பல்பொடி 1431 பயுரியா பல்பொடி என்று கொளுத்தி போட்டுக்கொண்டே வேறு இருப்பார்கள்...
என் அம்மா1431 பல் பொடி தகர டப்பாவில் பலப்பம் மற்றும் சின்ன பெண்சில் போட்டு கொடுத்து என்னை பள்ளிக்கு அனுப்புவாள் எல்லா பசங்களும் பியாஸ்டிக் டப்பா எடுத்து வரும் போது நான் மட்டும் பயுரியா பல் பொடி தகர டப்பாவில் பலப்பம் பெண்சில் எடுதது செல்வேன்...
இந்த பல்பொடியில் பல் விளக்கினாள் பல் மற்றும் ஈருகள் உறுதியாக இருக்கும் என்று பொய் சொல்லி பல் தேய்க்க வைப்பாள் என் அம்மா. அதன் பிறகு மெல்ல மெல்ல 1431 மேல் உள்ள பயம் போய் அந்த சுவையையும் ரசிக்க ஆரம்பித்து விட்டேன்
அதன் பிறகு டிவி மீடியா தமிழ் நாட்டில் வளர்ச்சி அடைய அடைய மெல்ல மெல்ல 1431 கதை இறுதிக்கட்டத்தை அடைந்து விட்டது என்பேன்.
அதன் பிறகு கோல்கேட்தனது பாடலை டிவியில் விளம்பர படு்த்தியது,
வாழ்க்கை வாழ்வதற்க்கே வெற்றி நிச்சயம் எனக்கே, பெற்றேனே சுவாச புத்துணர்ச்சி நீத்தம் பூரிக்குதே மனக்கிளர்ச்சி
என்று அந்த பாடல் அப்போது கொல்கேட் ஜீங்கில்ஸ் அதுதான்
அதற்க்கு தமிழகம் மெல்ல தலை சாய்தது....
ஆயிரம் சொல்லுங்கள் அந்த 1431 மணம் பல் விளக்கிய பிறகும் கைகளை விட்டு போகாது...இன்று டியுப்களில் பற்பசைகள் வந்த விட்டாலும் எழைகளின் பொருளாதார மற்றும் கவுரவ பல் பொடியாக விளங்கிய1431 பயுரியா பல்பொடி வாழ்க்கை ஓட்டத்தில் காணாமல் போய் விட்டது.
1431 பயுரியான்னா இன்னா அர்த்தம் தலிவா?என்க்கு பிரியவே இல்லை
உங்களுக்கு???????
குறிப்பு.... கால ஓட்த்தில் காணமல் போனவை தொடருக்கு நல்ல வறவேற்ப்பு உங்களிடத்தில் இருந்து அமோகமாய் கிடைப்பதால், காலஓட்த்தில் புதிதாய் வந்தவை பற்றி எனது பார்வையில் எழுத இருக்கிறேன் இது போல் அதற்க்கும் பின்னுட்ம் இட்டு என் எழுத்தை உற்சாகப்படுத்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது..
அன்புடன்/ஜாக்கிசேகர்
(இங்க் பேனாக்கள்)கால ஓட்டத்தில் காணமல் போனவைகள்.(பாகம்/6)
இங்க் பேனா 20 வருடக்ளுக்கு முன் வெகு சிறப்பாக கோலச்சிய விஷயம் இது. நாங்கள் படிக்கும் போது இங்க் பேனாவில்தான் எழுதினோம்.
ஒரு பேனாவின் விலை அப்போது 5 விருந்து பத்து ரூபாய்தான் அதை வாங்கும் போதே கடவுளின் கடை கண் பார்வை பட்டு விட்டால் நல்லது இல்லை என்றால் டெய்லி சனி நமது வெள்ளை சட்டை யுவனிபார்மில் விளையாடும்...
துணிதுவைத்து போடும் போதெல்லாம் எனக்கு திறமை இல்லை உருப்படாதது என்று சொல்லி திட்டிக்கொண்டே இருப்பாள் என் அம்மா ... பொதுவாக என் அம்மா மொத்தமாக ஒரு பாட்டில் பிரில் இங்க் வாங்கி கொடுப்பாள் நான் ரொம்ப எழுதுவேன் என்று..
எப்படியும் நான் எட்டாம் நாள் அல்லது ஒன்பதாம் நாள் வீட்டுதரையில் அமீபா கோலம் போட்டு இருப்பேன் இப்போது என் அம்மாவுக்கு என் எதிர்காலம் பற்றிய பயம் அதிகமாகி துடைப்பத்தால் வெளுத்துவாங்குவாள்..
அப்போது பிளாஸ்டிக்கில் ஒரு மை பேனா ஒன்று அறிமுகம் ஆயிருந்தது பேனா விலை60 பைசா மட்டுமே... அப்போது அது பல வண்ணங்களில் வந்து இருந்தது. அதற்க்கு பிறகு பல வருங்கள் கழித்து மிக சரியாக 12 வருடங்களுக்கு முன் வந்த ரெனால்ட்ஸ் மை பேனா
( உலகம் விரும்பும் உன்னத பேனா... விளம்பர வாசகம்) வந்து அதுவரை மாணவச்செல்வங்களிடம் கோலாச்சி கொண்டு இருந்த இங்க் பேனாக்கள் தங்கள் வசீகரத்தை இழக்க தொடங்கின.
சில நேரத்தில் இங்ன் பேனாக்கள் ஏர் லாக் ஆகி திறக்க முடியாமல் இருக்கும் இங்க் போட்டால்தானே எழுதுவது அதை திறக்க படாத பாடு பட வேண்டும். அதற்க்கு என்று சில எக்ஸ்பர்ட்கள் பள்ளியில் படிப்பார்கள் .
அவர்களிடம் எடுத்து சென்றாள் தன் பலத்தை பிரயோகித்து சட்டென திறந்து விடுவார்கள், சில நேரத்தில் அவர்களால் முடியாது.
அப்போது சட்டை துணியை பேனா மேல் வைத்து பல்லால் கடித்து அதனை திறப்பார்கள் அதனால் எப்போதும் எல்லோர்பேனாவில் பல்லால் கடித்து திறந்த அடையாள முத்திரை நிச்சயம் இருக்கும்
என் நண்பன் நாகராஜ் வெகு நாட்களுக்கு முன் அவசரத்துக்கு ஜான்சி கடித்து திறந்து கொடுதத பல் தடத்தை ஏதோ டைனோசர் பாசில் போல் கணக்கிடைக்காதது போல் பாவித்தான்.
அப்போது இங்க் பேனாவில் காஸ்ட்லியாக கலக்கிய பேனா ஹீரோ பேனா. அந்நாளில் ஹீரோ பேனாஎன்பது பணக்கார பசங்களிடம் மட்டும் இருக்கும். அப்படி வேறு யாராவது வைத்து இருக்கிறார்கள் என்றாள்அவர்கள் மாமா சவுதி அல்லது சிங்கப்பூர் இருந்து சமீபத்தில் வந்து இருக்கின்றார் என்று பொருள்.
நாராயணன் ஒரு வாத்தியார். ஆங்கில பாடம் எடுப்பார்எழுதும் போது மை பேனாவில் எழுதினால்
“ நீ என்ன மளிகை கடையில கணக்கா எழுத போறன்னு ”சொல்லி உதைத்து இங்க் பேனாவில் எழுதச்சொல்லி அடம் பிடிப்பார்...
இங்க் பேனாவில் ஒரே ஒரு பிரச்சனை அது கன்னிப்பெண் போல் பத்திரமாக பாதுகாக்க வேண்டும். அதை யாரிடமும் இரவல் தரக்கூடாது அப்படி தந்தால் உங்கள் ஸ்டைலுக்கு அது எழுதாது அபபடி எழுதினாலும் பேப்பரை கிழிக்கும்....
பேனா எப்போது பாக்கெட்டில் வைத்து ஓடி விட்டு அலலத நடந்து திறந்து பார்த்தால் இங்க் லீக்காகி இருக்கும் அதற்க்கு பசங்க பேனா கழுயுது என்பார்கள்...
பரிட்சை கடைசிநாளில் பேனா முழுவதும் இங்க் நிரப்பி அதில் கொஞ்சம் வாழைச்சாற்றை கலந்து பசங்களின் வெள்ளை சட்டை மேல் மார்டன் ஆர்ட் வரைவோம்...
அதனை மிகச்சிறப்பாக தமிழ் படத்தில் காட்சியாக வைத்தவர் கற்றது தமிழ் படத்தின் இயக்குநர் ராம் அவர்கள்.. பரிட்சை முடிந்ததை காண்பிக்க அந்த இங்க் அடிக்கும் காட்சி வைத்து இருப்பார்....
இன்று உலக பொருளாதார மாற்றத்தால் பல பொருட்கள் மற்றும் பல விதமான பேனாக்கள் கிடைத்தாலும், புது இங்க் பேனா வாங்கி அந்த சின்ன கவரை உடனே தூக்கி போடாம பத்திரமா ஒரு வாரத்துக்கு வைத்து அதன் பிறகு அதனை தூக்கி எறிந்து பத்து பைசாவுக்கு இங்க் வாங்கி அதனை ஊத்தும்போதே கை விரல்கள் நீலக்கலராகி இப்போது பதறவது போல் எந்த கலலையும் இல்லாமல் கைகளால் துடைத்து பேனாவை மூடு்ம் போது பிரஷரில் வெளி வருவதை ஸ்டைலாக தலையில் தடவி துடைத்து எது பற்றியும் கவலைக்கொள்ளாமல் ..... அது ஒரு கனாக் காலம்...
இப்போது இங்க் பேனாக்கள் இல்லாமல் இல்லை அனால் முன்பு போல் கோலாச்சவது இல்லை என்பதே என் கருத்து...
இந்த கட்டுரை உங்கள் பழைய பள்ளி நாட்களை, ஞாபகங்களை நினைவு படுததி இருந்தால் பின்னுட்டம் இட்டு தெரியபடுத்துங்கள்...
அன்புடன்/ ஜாக்கிசேகர்
நீங்கள் வெளிநாட்டுவாழ் இந்தியரா? (பாகம்/17) swades
தமிழ் நாட்டில் ஒரு சமுகம் இருக்கின்றது, அவர்கள் கல்யாணங்களில் காபிக்கு அடுத்த படியாக அவர்கள் உறவினர்களிடம் கேட்கும் விஷயம், எங்க உங்க புள்ள ஸ்டேட்ஸ்ல எங்க இருக்கான் என்பதுதான்... அப்படி இல்லை என்றால் அது கவுரவ குறைச்சலாகி விடும்...
அதனால் அவர்கள் பிள்ளைகள் அண்ணா பல்கலைக்கழகத்திலும் ஐஐடி சென்னையில் படிக்கும் போதே ஜெமினி மேம்பாலம் அருகில் உள்ள அமெரிக்கன் எம்பஸி வாசலில் கொஞ்சம் கூட வெட்கம் பார்க்காமல் விடியற்கலையிலேயே இடம் பிடித்து, கடனை உடனை வாங்கி படிக்க வைத்து அவனை அமேரிக்காவுக்கு அனுப்பினால்...
அதன் பிறகு மேட்ரி மோனியலில் பெண் தேடி பெத்தக்கடனுக்கு கற்புள்ள பெண்ணை கட்டிக்கொடுத்து அவனை திரும்பவும் அமெரிக்காவுக்கு அனுப்பினால்அதன் பிறகு பெற்றோரை திரும்பிக்கூட பார்க்க மாட்டான்...
அதன் பிறகு பிள்ளை பாசத்தில்58 வயதில் கம்யுட்டர் கத்துக்கொண்டு வெப்கேம் வழியாக பிள்ளையையும் அவன் மனைவியையும் அசைவுகளாக பார்த்து, கொஞ்சம் நாள் கழித்து பேரப்பிள்ளையையும் அதே போல் பார்த்து ஆசையாக தூக்கி கொஞ்சக்கூட முடியாத அபாக்கிய சாலிகளாக இருந்து, விக்கி கொண்டால் கூட அல்லது நெஞ்சு வலித்தால் கூட அமிர்த்தாஞ்சன் போட்டு மார்பு நீவி விடாத படி தொலை தூரத்தில் இருக்கும் பிள்ளைகள்...
கொஞ்சம் நாளில் மண்டையை போடும் போது கூட எட்டிப்பார்க்காமல் பிளைட் சார்ஜ் கணக்கு போட்டு மொத்தமாக பெற்றோர் மண்டையை போடும் போது வந்து கண்ணம்மா பேட்டையில் மீசை எடுத்து , மினரல் வாட்டர் குடித்து,
“ எப்படித்தான் இந்த சென்னையில இருக்கறீங்களோ, ரொம்ப ஹாட்டா இருக்கு”
இதுவே ஸ்டேட்டா இருந்தா எப்படி இருக்கும் தெரியுமா?
என்று அலட்டி சாவுக்கு வந்த வளரும் ஒரு தலைமுறையை உசுப்பி அவனுக்கும் யூ எஸ் கனவை ஊட்டி திரும்பவும் ஒரு தகப்பன் கடன் வாங்கி வட்டி கட்டி படிக்க வைத்து ஸ்டேட்ஸ்க்கு பிள்ளையை அனுப்புவதை கவுரவமாக நினைத்து அனுப்பி வைத்து பிறகு புறக்கனிக்கப்பட்டு நெஞ்சு நீவி விட ஆளில்லாமல் அனாதையாக சாவது தொடர்கதையாகவே இருக்கின்றது, திரும்பவும் வீடு வந்து அலட்டி மீசை எடுத்து மினரல் வாட்டர் குடித்து...
நன்றாக யோசித்து பாருங்கள் நம் வரிபணத்தில் கட்டிய அண்ணா பல்கலைக்கழகம்,ஐஐடி, அரசு மருத்தவ கல்லூரி போன்றவற்றில் படித்து அதுவும் மானியத்துடன் படித்து, மேற்படிப்புக்கு காசும் வாங்கி கொண்டு அங்கு சென்று அங்கேயே தங்கி நம் நாட்டையே பழிக்கும் பலரை நான் பார்த்து இருக்கிறேன்.
அண்ணா பல்கலைக்கழகம்,ஐஐடி, அரசு மருத்தவ கல்லூரி போண்றவைகள் என்னை பொறுத்தவரை வெளிநாட்டுக்கு எக்ஸ்போர்ட் செய்யும் நிறுவனங்கள் என்பேன்...
சமீபத்தில் கூட அமேரிக்காவில் பேராசிரியர் ஒருவர் மாணவன் ஒருவனால் சுட்டுக்கொள்ள பட்டார், அதுபற்றி ஆகோ ஓகோ என்று கூட நம் சட்டசபையில் பேசினார்கள் அவர் உசிலம்பட்டி கிராமத்து பள்ளி்யில் வகுப்பு எடுத்த போது இறந்து போய் இருந்தால் ஒரு நாய் கூட சீன்டி இருக்காது.. அவர் அமேரிக்க பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்...
இதில் கொடுமை அவரின் பெற்றோருக்கு தமிழக அரசுதான் பாஸ்போர்ட் எடுத்து பிளைட் டிக்கெட் எடுத்துக்கொடுத்து அனுப்பியது...
ஒரு பேராசிரியர் அப்பா அம்மாவை அமெரிக்கா அழைத்த சென்று கூட காட்டவில்லை....
அப்படி தாய் நாட்டில் படித்து தன் நாட்டு மக்களுக்கு ஏதும் செய்யாமல் சுக வாசியாக இருக்கும் அல்லது அப்படி போய் நம் நாட்டை கேவலமாக நினைக்கும் சில மேல்தட்டுவர்கத்தை பிடரியில் அடித்து யோசிக்க வைத்து இருக்கும் படம்தான் ஸ்வதேஷ்...
ஸ்வதேஷ் என்றால் தேசம் என்று பெயர்.
இந்த படத்தை லகான் எடுத்த டைரக்டர் அஸ்வகோஷ் கவுரிக்கர் இயக்கி இருக்கிறார்.
படத்தின் கதை இதுதான்.....
மோகன் அமேரிக்காவில் நாசாவில் வேலை செய்யும் இந்தியன்... அவனுக்கு பெண் சகவாசம் புட்டி சகவாசம் ஏதும் இல்லாதவன், வாகன விபத்தில் தன் பெற்றோரை இழந்தவன்...நாசவில் ராக்கெட் ஏவுதளத்தில் தலமை பொறியாளன்.
தன் பெற்றோர் நினைவு நாளின் போது தன் வளர்ப்புதாய் காவேரி அம்மாவை நினைத்து பார்த் போது அவரை தொடர்பு கொண்டு பல நாட்கள் ஆகின்றதை உணர்கிறான்...காவேரி அம்மாவை தேடி அவன் இந்தியா வருகிறான்...
வந்த இடத்தில் காவேரி அம்மாவின் தூரத்து சொந்தம் உள்ள ஒரு பெண்ணும் ஒரு பையனும் அவர் பாதுகாப்பில் வாழ்கிறார்கள், காவேரி அம்மாவை அமேரிக்கா அழைத்து போய்விடலாம் என்று கணவு கண்ட மோகனுக்கு அது பெரிய சிக்கலாக இருக்கிறது...
அவன் இந்தியாவில் மிக முக்கியமாக காவேரி அம்மா இருக்கும் சரன்பூர் கிராமத்தில் அந்த மினரல் வாட்டர் குடிக்கும் என்.ஆர்.ஐ என்ன செய்கிறான், அவன் சந்திக்கும் கிராமத்து பிரச்சனைகள் என்ன, அந்த வெள்ளந்தி மனிதர்கள் அவனோடு சினேகம் கொண்டார்களா?
காவேரி அம்மாவின் வளர்ப்பு பெண்ணாக இருக்கும் பெண்ணுக்கு மோகனை பிடிக்கவில்லை அவன் மனதில் அவள் இடம் பெற்றாளா? நாசாவில் இருந்து 28 நாள் லீவில் வரும் மோகன் காவேரி அம்மாவை அழைத்து சென்றான என்பதை வெள்ளித்திரையில் காண்க....
படத்தின் சுவாரஸ்யங்களில் சில.....
இந்தியாவின் எல்லா பிரச்சனைகளையும் ஒரு படத்தில் கொண்டு வர முடியுமா முடியும் என்று தனது திரைக்கதையால் நிருபித்து இருக்கிறார் இயக்குநர்.
இந்தியாவின் அடிப்படை பிரச்சனைகள் எல்லாவற்றையும் சுவாரஸ்யமான தனது திரைக்கதை அமைப்பில் கொண்டு வந்து இருப்பார்இயக்குநர் கொளரிக்கர்...
என்.ஆர்.ஐ என்றால் நான் ரிட்டர்னிங் இந்தியன் என்று போகிற போக்கில் நக்கல் வேறு...
படம் முழுக்க இந்தியாவின் வறுமையையும் கல்வி அறிவு பெறாத நமது கிராமத்து வெள்ளத்தி மனிதர்களை பற்றிய விஷயங்களை அலசிஆராய்ந்து இருப்பார்...
ஷாருக்கானுக்கு இந்த படம் அவர் கெரியரில் ஒரு மயிலறகு என்றால் அது நூத்துக்கு நூறு உண்மை...
பள்ளி சிறுவர்களின் பள்ளி கட்டிட பிரச்சனை அதில் திண்டாமை, படிப்பறிவில்லாத கிராமத்து மனிதர்கள், அவர்களிடம் நம்மிடம் இப்போதும் வாழும் எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்கள் என கதை சொன்ன விதம் அற்புதம்...
காயத்திரி ஜோஷி என்ற புதுமுக பெண்தான் ஷாருக்கின் ஜோடி. அந்த பெண்ணுக்கு பெரிய கவர்ச்சி விஷயங்கள் இல்லை என்றாலும் அவரின் எடுப்பான கண்கள் சிறப்பான நடிப்பை பெற்றுத்தந்தன....
ஷாருக் மற்றும் காயத்ரிக்கு ஏற்படும் காதல்காட்சிகளில் இருக்கும் ரிச்நெஸ் நீங்கள் எந்த படத்திலும் பார்த்து இருக்க முடியாது என்பேன்.
முதன் முதலில் ஷாருக் இந்தியாவுக்கு வருவதை காண்பிக்கும் போது மேலிருந்து பார்க்கும் போது ஒரு செம்மண்நிற இந்தியமண் தெரியும் அதை பார்க்கும் போது நமக்கு உடம்பு மனதும் சிலிர்க்கும்
முதியோர் இல்லத்தில் காவேரி அம்மாவை தேடி வருகையில் ஒரு கிழவி காவேரி அம்மா கொடுத்து வச்சவ அவளை தேடியாராவது வராங்களே என்று சொல்லி விட்டு துடைக்கும் போது முதியோர் தனியே படும துயரங்களை இதைவிட சிறப்பாக சொல்ல முடியாது....
தன் குத்தகை நிலத்தில் வரும் பணத்தை வாங்க ஷாருக்கை காவேரி அம்மா அனுப்பும் போது,ஷாருக் டிராவல் செய்யும் இடங்களையும் அதன் இடர்பாடுகளையும் தனது இசையாலும் ஒளிப்பதிவாலும் அழகாக எடுக்க வைத்து இருப்பார் இயக்குநர்
ஷாருக் முதன் முதலில் அந்த பெண்ணை புத்தக கடையில் பார்த்து கல்குலேட்டர் இல்லாமல் கணக்கு போடும் அவளின் புத்திசாதுர்யத்தில் மயங்குவது...
வீட்டில் அவளை பெண்பார்க்க வரும் போது முதலில் அவளுக்கு கல்யாணம் என்பதை நம்பாமல் பிறகு அவள் சீவி சிங்காரித்து இமைக்கொடாமல் பார்த்து அந்த கல்யாணம் நடக்ககூடாது என்று மனதில் நினைத்து வெளியே போய் தம் போடும் போது நம்ம ரஹ்மான் ஒரு பிட் போடுவார் பாருங்கள் பரம சுகம்...
திரும்பவும் உள்ளே வந்து அந்த கல்யாணம் கை கூட வில்லை என்றதும் ஷாருக் மிகிழ்வார் பாருங்கள் அது 100 சிவாஜிக்க சமம்...
குத்தகை பணம் வாங்க இந்திய ரயிலிலும் பஸ்ஸிலும் அடிபட்டு மிதி பட்டு போகும் போது, அவன் இந்தியாவின் மக்கள் வாழ் முறையை புரிந்து கொள்வதாக காட்சி அமைத்தது ரொம்பவும் அழகு
பணம் வாங்காமல் அந்த ஏழை விவசாயிக்கு பணம் கொடுத்து விட்டு அவர் வீட்டில் இரவு உணவு உண்டு கண்கலங்குவார் பாருங்கள் அதுதான் ஷாருக்...
திரும்ப ரயி்லில் வரும் போது ஒரு கிராமத்து ரயில் ஸ்டேஷனில் ரயில் நிற்க்க ஒரு சிறுவன் கையில் தண்ணி்25 பைசா எனக்கூவி கூவி விற்க்கும் போது எவர் கண்ணும் கலங்கும் இடம் அது... அப்போது ரயில் மேல் காமிரா வைத்து ஜிம்மி ஜிப் கிரேன் மூலம் மிக அழகாக படம் பிடித்து இருப்பார்கள்...
ஷாருக்கும் அவளுக்குமான காதலை மிக மிக அழகாக கவித்துவம்தோடு சொல்லி இருப்பார்கள்...
என்னை பொறுத்தவரை மேக்கிங்கில் இந்த படம் ஒரு அற்புதமான படம் என்பேன்..
இந்த படத்தின் ஒளிப்பதிவு, மகேஷ்அனாய் செய்து இருக்கிறார் .
மிக சிறப்பான நேர்த்தியான ஒளிப்பதிவு....
இந்த படத்தில் வரும் போஸ்ட் மேன் கேரக்டர் ஆகட்டு்ம், அமெரிக்காவில் தபா வைக்க ஷாருக்கொடு சுத்தும் அந்த கேரக்டர் மற்றும் காவேரி பாட்டி போண்றவர்கள் எப்போதும் நம் மனதில் இருப்பார்கள்....
இந்திய ரசிகர்கள் இந்த படத்தை வெற்றி பெற செய்யவில்லை, அதே போல் கதை அமைப்பு படி இது பொறுமையாக நகரும் திரைக்கதை,மற்றும் கடைசி வரை கதாநாயகி தொப்புளை கூட காட்டாததாலும், ஷாருக் ஒரு பொறுப்பான இந்திய குடிமகனாக நடித்ததை அவர் ரசிகர்கள் விரும்பவில்லை...
ரஹ்மான் ஜி இந்த படத்துல பின்னனி இசையில மிரட்டி இருப்பார் பாடல்கள் எல்லாம் சூப்பர்
இயக்குநர்தான் இந்த படத்தின் தயாரிப்பாளர்....
அஷ்வக் கோஷ் கவுரி்க்கர் சிறந்த இயக்குநர் நாட்டு பற்று உள்ள, பொறுப்புள்ள இயக்குநர் என்பதில் ஐயம் இல்லை...
இந்தபடம் நல்ல அறிவு இருந்தும் வெளிநாட்டில் கை நிறைய சம்பளம் கொடுக்க காத்து இருந்தும் இன்னும் கல்பாக்கத்திலும், ஸ்ரீஹரிக்கோட்டாவிலும்,இன்ன பிற ஆராய்சி நிறுவணங்களில் பணியாற்றும் என்னற்ற விஞ்ஞானிகளுக்கு என் நன்றிகள் முக்கியமாக நமது முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமுக்கு...
அன்புடன்/ஜாக்கிசேகர்
எனக்கு பிடித்த பாடல்... அது ஏன்? எனக்கு பிடிக்கும்
எல்லோரும் ஏதாவது ஒரு விதத்தில் இசையையும் பாடல்களையும் ரசிக்கின்றோம்... பாடல்கள் பலருக்கு அரும் மருந்து , கல்லூரி பெண்களுக்கு, ஆண்களுக்கும் அதுதான் சாப்பாடு, பாடலால் எழுந்து பாடலால் குளித்து பாடலால் பல் துலக்கி பாடலால் தலை துவட்டி என பாடல்களின் பயன் பாடுகள் பெண்களுக்கு ஆண்களுக்கும் தவிர்க்க முடியாதாகிறது.
ஒருகாலத்தில் துர்தர்ஷனில் ஒளியும் ஒளியும் போடும் போது தெருவில் வாகன போக்குவரத்து வெள்ளி இரவு 8 லிருந்து 8•30வரை சற்றே மந்த நிலையில் காணப்படும்....
இப்போது சன்மியுசிக், இசைஅருவி, எஸ் எஸ் மியுசிக், போன்ற சேனல்கள் தமிழில் பாடல்கள் ஒளிபரப்பினாலும் மற்ற சேனல்கள் இரவு முழுவதும் பாடல்கள் ஒளிபரப்பிய வண்ணம் உள்ளன...
தமிழ் படங்களில் பாடல்கள் இல்லாத படங்கள் ஒருசிலதான் அல்லது விரல் விட்டு எண்ணி விடலாம் எனெனில் கூத்து பார்த்து வளர்ந்த சமுகம் நம்முடையது... கூத்தில் வசனங்களை விட பாடல்க்ளே அதிகம் முக்கியத்துவம் பெரும் கூத்து எப்படி இருக்கும் என்று தெரியாதவர்கள் மக்கள் தொலைக்காட்சி பார்த்து தெரிந்து கொள்ளவும்....
பாடல்கள் இல்லாத நம் வாழ்க்கை முறை யோசித்து பார்க்க முடியவில்லை செத்தாலும் பாட்டு, வயசுக்கு வந்தாலும் பாட்டு, கல்யாணத்துக்கும் பாட்டு, என்று பாட்டு என்பதும் நம் தமிழர் வாழ்வில் ஒன்றாகி விட்ட ஒன்று...
நான் பாடல்களின் ரசிகன் ஆனால் எப்போதும் இயர் போன் வைத்துக்கொண்டு பாடல் கேட்கும் வெறியன் இல்லை... ஆனால் நல்ல பாடல்களை ரசிப்பேன் அதன் வரிகளை மிகவும் ரசிப்பேன். அந்த ரசிப்புகளை அந்த கவிதைகளை அந்த வைர வரிகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்...
சென்னையில் இருந்த கடலூருக்கு இதுவரை எனது இரு சக்கர வாகனத்தில் எப்படியும் 40 முறைக்க மேல் போய் இருக்கிறேன் கிழக்கு கடற்க்கரை சாலையில் சத்தம் போட்டு பாடியபடி வாகனம் ஓட்ட எனக்கு ரொம்பவும் பிடிக்கும்.
ஒடிய படம் ஓடாத படம் என்பது முக்கியம் அல்ல,
பாடல் முக்கியம் அந்த பாடல் எப்படி என்னை கவர்ந்தது ஏன் கவர்ந்தது என்பதை உங்களோடு பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.
அடஜாக்கி இந்த வரியைதான் குறிப்பிட்டு சொன்னானா? என்று நீங்கள் அந்த வரியை இன்னும் கவனத்துடன் கேட்பீர்கள். அதுவும் நான் காதல் வயப்பட்ட போது என்னை சுற்றி ஒளிவட்டம் தோன்றிய போது, தபால்காரன் தெய்வமாக ஆன போது, பாடல்கள் பரம சுகமாய் இருந்தது,
காதல் வயப்பட்டவன் கள்ளு குடித்தவன் போல் இருப்பான் அவனுக்கு பாடல்கள்தான் சோறு, அதுவும் காதல் பாடல்கள் கேட்டு அவன் வேறுஉலகத்தில் மிதப்பான்,. நான் ரசித்த அந்த போதை பாடல்களையும் உங்களுக்கு தருகிறேன்
என் பார்வையில் நான் மிகவும் ரசித்த பாடல்களை இங்கு எழுத போகிறேன் அப்படி ரசிக்க எந்த தளத்தில் வேண்டும் ஆனாலும் பயணிக்கலாம் அது டப்பாங்குத்து பாடல்களாக கூட இருக்கலாம் ரசிப்பு ஒன்றே நம் குறிக்கோள் அது சில நேரத்தில் இந்த பாடலுக்கு கூட ஒரு பதிவா? என்று வியக்கலாம் அது ரொம்ப அட்டு பாடல்களாகவும் இருக்கலாம்... உங்களுக்கு ஈர்பில்லாத பாடலாக கூட இருக்கலாம் நன்றாக இருந்தால் பின்னுட்டம் இட்டு வாழ்த்துங்கள்
சமுகத்தை பற்றி நாம் எப்போதாவது கவலை பட்டு இருக்கின்றோமா? பக்கத்து வீட்டுகாரன் பெயர் கூட கேட்டு வைத்துக்கொள்ள கூச்சபடுகின்றோம்,ஈழத்தில் நம் உறவுகள் கொத்துக்கொத்தாய் பலியாகும் போது நாம் இங்கு அறிக்கை போர் நடத்திக்கொண்டு இருக்கின்றோம்....
காதலனும் காதலியும் படுக்கை அறையில் இல்லற விஷயங்களை விட சமுக விஷயங்களுக்க முக்கியத்துவம் கொடுத்து இருவரும் பேசிக்கொள்வதான பாடல் அது பாவேந்தர் பாரதிதாசன் வரிகளை எடுத்துக்கொண்ட பாடல் அந்த படம் அழகன் பாடல் ஜாதி மல்லி பூச்சரமே சங்கத்தமிழ் பாச்சரமே...
மனதுக்கு பிடித்த பெண் எதிரில் இருக்கிறாள் அவளை அள்ளி அனைக்காமல் தலைவன் சொல்கிறான்.
காதலில் உண்டாகும் சுகம் இப்போது மறப்போம் , கன்னித்மிழ் தொண்டாற்று அதை முன்னேற்று பின்பு கட்டிலில் தலாட்டு...
காதலி எதிரில் இருக்கும் போது கன்னித்தமிழை முன்னேற்ற சொல்கிறான் பாருங்கள்...
எனது வீடு எனது வாழ்வு என்று வாழ்வது வாழ்க்கையா? இருக்கும் நாளு சுவருக்குள்ளே வாழ் நீ ஒரு கைதியா?இன்று கேட்டு விட்டு
தேசம் வேறல்ல தாயும் வேறல்ல ஒன்றுதான் தாயை காப்பதும் நாட்டை காப்பதும் ஒன்றுதான் கடுகு போல் உன் மனம் இருக்க கூடாது கடலை போல் விரிந்ததாய் இருக்கட்டும்....
சென்னைக்காரர்கள் எதிர்கால மனநிலையை எப்படி புட்டு வைத்து இருக்கிறார் பாருங்கள்
அடுத்தாக உலகம் எல்லாம் உண்னும் போது நாமும் சாப்பிட எண்னுவோம் உலகம் எல்லாம் சிரிக்கும்போது நாமும் புன்னகை சிந்துவோம்
அது நம்ம தமிழனுக்க வரவே வராத விஷயம்....
யாலரும் ஊரென யாரு சொன்னது சொல்லடி..
பாடும் நம் தமிழ் பாட்டன் சொன்னது கண்மணி
படிக்கத்தான் பாடமா? நினைச்சி பார்த்தோமா?
படிச்சத புருஞ்சி நாம் நடக்கத்தான்
கேட்டுக்கோ ராசாத்தி தமிழ் நாடாச்சி இந்த நாட்டுக்கு நாம் ஆச்சு..
பாருங்கள் எந்த இடத்திலும் அவன் நாட்டையும் மக்களையும் விட்டுக்கொடுக்கவேயில்லை அதனதலே இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்
உங்களுக்கும் இந்த பாடல் பிடிக்கும் என்ற் நம்புகிறேன்... இவரை இந்த பாடலை கேட்காதவர்கள் இரவு பதினோறு மணிக்கு விளக்கு அனைத்து கேட்டுபாருங்கள் மரகதமணி இசையில் பாலசுப்ரமணியம் பாடிய இந்த பாடல் 1991ல் அழகன் படத்தில் வந்தது இயக்கம் பாலச்சந்தர்
பொதுவாய் பெண்களுக்காக இந்த பகுதியை எழுதுகிறேன் ஏனென்றால் ஆண்களை வி்ட பெண்கள்தான் அதிகம் பாடல்களை ரசிக்கின்றார்கள் இன்னும் பாடல்கள் அடுத்த பதிவில்....
(பாகம்/4)டிவி ஆண்டெனா.. கால ஓட்டத்தில் காணமல் போனவைகள்
1980களில் எல்லோருடைய வீட்டின் மாடியிலும் காக்கா கக்கா போவதற்க்கு ஏதுவாக இருந்தது இந்த வகை டிவி ஆன்டனாக்கள் தான். அப்போது எங்கள் கடலூரில் என் மாமா வீட்டில் டிவி ஆன்டெனா வாங்கிய போது என் அத்தை பசங்கள் தாமோதரன் முரளிதரன் இருவருமே அந்த ஆன்டெனாக்களை ரெடி செய்து கட்டி இருக்கிறார்கள்..
பெரிய ஆன்டெனா சென்னை தொலைக்காட்சி சின்ன ஆன்டெனா புதுவை தொலைக்காட்சி , புதுவை தொலைக்காட்சியில் டெல்லிஒளிபரப்பை அஞ்சல் செய்வார்கள்...
அதுவும் திராவிட கழக கைங்கர்யத்தால் அந்த டெல்லி ஒளிபரப்பில் என்ன எழவு சொல்லுகிறார்கள் என்றே தெரியாது ? ( இப்போது மட்டும் என்ன வாழுதாம்)
அப்போ எல்லாம் சித்தரகார் பார்ப்பதற்க்கும் மாநில மொழி பட வரிசையில் தமிழ் படம் பார்ப்பதற்க்கும் டெல்லி ஒளிபரப்பை பார்ப்போம் . எப்போது தமிழ் பட வரிசை வரும் என்று காத்து இருப்போம் நம் முறை வரும் போது அப்போதுதான் பிரதமர் அல்லது ஜனாதிபதி என்று யாராவது மண்டையை போட்டு வைக்கும்... இல்லையென்றால் எலெக்ஷ்ன் அறிவித்து உயிரை எடுப்பார்கள்....
வெயில் காலத்தில் சென்னை தொலைக்காட்சி ஏதோ மழையோடு சோளப்பொறியோடு்ம் தெரியும், நன்றாக தெரிந்தால் பால் அச்சுக்கொட்டுவது போல் தெரிவதாக நண்பர்களுக்குள் பேசிக்கொள்வோம். மிக சரியாக படம் தெரியமாடியில் எறி ஆன்டெனாவை திருப்பிக்கொண்டு தெரியுதா? தெரியுதா? என்று சொல்லி வீட்டு மானத்தை வாங்குவோம்....
அதைவிட படம் நன்றாக தெரிய நல்ல மெல்லிய சேலையை டிவி மேல் போர்த்தி விட்டு படம் பார்த்து இருக்கிறோம். நன்றாக காற்று அடிக்கும் போது ஆன்டேனாக்கள் கீழே விழுந்த வீர மரணம் அடைந்து கிடக்கும் அதை பார்த்து காற்றின் மேல் கோபப்பட்டு இருக்கிறோம்....
அப்போது என் வீட்டில் அப்பா செகண்ட் ஹான்டில் 1500க்கு கருப்பு வெள்ளை டிவி வாங்கி வந்தார் ஆன்டெனா வாங்க காசு இல்லை( அப்போது கலைஞர் ஆட்சியிலும் இல்லை இலவச வண்ண தொலைக்காட்சி கொடு்க்க )
நான் என் தொழில் நுட்ப மூளையை பயன் படு்த்தி இட்லி தட்டில் அன்டெனா ஒயர் இனைத்து படம் வரவழைத்து இருக்கிறேன்...
நல்ல வெயில் காலத்தில் இலங்கையின் ரூபவாகினி வரும் வேறு நாட்டு தொலைக்காட்சி நம் இல்லத்தில் தெரிவதும் அதில் தமிழ் செய்திகள் இடம் பெறுவதும் ரொம்ப சந்தோஷமாக இருக்கும்...
சென்னை தொலைக்காட்சி அதன் இரண்டாம் அலைவரிசை மெட்ரோ செனல் அப்புறம் பாண்டியில் டிரான்ஸ்பாண்டர் மூலம் டெல்லி ஒளிபரப்பு மொத்தம் மூன்று சேனல்கள்தான் அப்போது தெரியும்... அப்புறம் உபெந்திரா தகவல் தொழில் நுட்ப மந்திரியாக இருந்த போது மண்டல ஒளிபரப்பு தொடங்கப்பட்டு சென்னை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் டெல்லி நிகழ்ச்சிகளை பிரைம் டைமில் கொஞ்சம் தள்ளி வைத்து விட்டு தமிழ் நிகழ்ச்சிகளுக்கு பிச்சை போட்டார்கள்....
1992களில்அதிஷ்ட காற்று மாறன் மகன்கள் பக்கம் வீசஆரம்பித்த நேரம் இந்த வகை டிவி ஆன்டெனாக்களுக்கு சங்கு ஊத நாள் குறிக்கப்பட்டது... இப்போது ஒரே வயரில் 150 சேனல் தெரிகின்றது .ஒளியும் ஒலியும் பார்க்கும் போது தெருவில் சன நடமாட்டம் குறைந்த நிலை மாறி இப்போது அமைந்தகரை அப்துல்காதர் விருப்பத்துக்கு பாடல் டெடிக்கேட் செய்ய படுகின்றது
என்னதான் கால ஓட்டத்தில் இந்த ஆன்டெனாக்கள் கானாமல் போனாலும் படம் நன்றாக தெரிவதற்க்காக காற்றில் திரும்பிய ஆன்டெனாவை திருப்பிக்கொண்டு படம் தெரியுதா? படம் தெரியுதா ? என்று மாடியில் இருந்து தொண்டை கிழிய கத்தியதை இப்போது நினைத்து பார்க்கும் போது சிரிப்பு சிரிப்பாக வருகின்றது ....
அன்புடன்/ஜாக்கிசேகர்
எனது 150வது பதிவு....பதிவர்களுக்கு உளமாற நன்றி தெரிவிக்கின்றேன்
மிக விளையாட்டாய் எழுத ஆரம்பித்த விஷயம் இப்போது 150 வது பதிவாக வந்து நிற்க்கின்றது..,எனது 100வது பதிவிலேயே நான் என் நன்றிகளை தெரிவித்து விட்டேன் இருப்பினும் தொடர்ந்து நன்றி சொல்வதில் தவறில்லை, ஏனென்றால் பதிவர்களின் ஊக்கமும் ஒத்துழைப்பும் இல்லை என்றால் இந்த 150வது பதிவு இல்லை...
முதலாவது எனது மனைவிக்கு....
பிளாக் என்பது போதையான விஷயம் என்பது எனது முப்பதாவது பதிவின் போது புரிந்து போய்விட்டது. மனைவியோடு பேசாமல் அத்தியாவசியப் பொருள் வாங்காமல் கம்யுட்டர் முன் தவம் கிடந்த பொழுதுகள் நிறைய.... அதை பொருத்துக்கொண்டு அந்த போதையில் இருந்து என்னை அன்பாய் எழுப்பியவள்.. இப்போது முன்பு போல் அவசரம் இல்லாமல் ஒரு மலைபாம்பின் நகர்தலின் பொறுமையோடு பிளாக்கில் நான் உங்களோடு தொடர்பு கொள்கிறேன்.... அதற்க்கு என் மனைவிக்கு நன்றிகள்...
என் எழுத்தின் முதல் ரசிகை அவள்தான் அவள் கொடுத்த ஊக்கம்தான் எல்லாம்...(இப்படி எழுதறதுதான் நல்லது அப்பதான் சோறு கிடைக்கும்)
இரண்டாவது பதிவர் நித்யகுமாரனுக்கு
முதன் முதலில் பிளாக் எனும் விஷயத்தை அறிமுகப்டுத்தியதே நண்பர் (பதிவர்) நித்யகுமாரன்தான். எனக்கு ஆங்கிலமே அரைகுறை தமிழ் தத்துக்குத்தல்ஆனால் விட முயற்ச்சியால் கொஞ்சம் வேகம் அடிக்க கற்றுக்கொண்டேன்.... அதுவுஙம தப்பும் தவறுமாக , அப்படி அடித்து 150 எனும் போதுதான் எனக்கு ஆச்சர்யம் அளிக்கின்றது... நித்யா பிளாக்கை அறிமுகப்படுத்தியது அரை மணிநேரம்தான். ஆனால் அதனை நோண்டி நொங்கு எடுத்ததை இப்போது நினைத்தாலும் வியப்பாக உள்ளது, அதே போல் அவரை பல நேரங்களில் தொடர்பு கொண்டு இம்சை கொடுத்தது இப்போதும் என் நினைவு அடுக்குகளில்..... என் அரசியல் நிலைப்பாடும் நித்யாவின் அரசியல் கண்ணோட்டமும் வெவ்வேறானது....
முன்றாவது,
பதிவர் அதிஷா பிளாக்கில் நான் அப்போதுதான் மெல்ல அனைவருக்கும் அறிமுகமாகி கொண்டு இருக்கும் நேரம்... என் திருமணம் நடைபெற்றது, வலைபதிவர் வட்டத்துக்குஎன் திருமணதகவலை கொண்டு சேர்த்த ஜீவன்...
நான்காவதாக
உண்மைத்தமிழன்.... இப்போதும் தொடர்ந்து கைபேசியில் உறவாடும் பதிவு நண்பர். எல்லாத்துக்கும் மேலாக முரண்பட்ட கருத்துக்கள் இருவருக்கும். ஆனாலும் நல்ல நண்பர்.
கருத்து என்பது வேறு நட்பு என்பது வேறு என்பதை புரிய வைத்தவர்...
ஐந்தாவதாக
அக்னிப்பார்வை மறக்க முடியாத நபர். திடிர் என்று உலகப்படவிழாவில் நீங்க ஜாக்கிதானே? என்று அறிமுகப்படுத்திக்கொண்டவர், இப்போதும் எனது வலைதள சந்தேகங்களை தீர்த்து வைப்பவர்கள் இவரும் உண்மைத்தமிழனும்தான்...
ஆறாவதாக,
பதிவர்கள், மங்களுர் சிவா,அமெரிக்கா ராம்,
நட்டு போல்டு, வண்ணத்தூபூச்சியார்,கேபிள்சங்கர், லக்கிலுக்,முரளிக்கண்ணன்,நர்சிம் போண்றவர்கள் நேரில் பார்த்தாலும் அன்பு பாராட்டுபவர்கள்
ஏழாவதாக எனக்கு தொடர்ந்து பின்னுட்டம் அளிப்பவர்கள்
வெண்பூ, என்பார்வையில், அத்திரி , வால்பையன், குப்பன் யாஹூ, கருவெளி ராச.மகேந்திரன்( பேர் மாத்தலை சந்தோஷமா?) புதுவை சிவா, நையான்டி நைனா, வந்திய தேவன், தன்டோரா, நித்யகுமாரன், மதுவதனன்மௌ,புகளினி,கோவிக்கண்ணன்,சரவணகுமரன்,அக்னி பார்வை உண்மைத்மிழன் போன்றவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல...
எழாவதாக
என் எழுத்தை தொடர்ந்து முகம் சுளிக்காமல் வாசிப்பவர்கள் சங்கரராம், லோயர்,தேனியார், திரட்டி டாட்காம். மதுவதனன்மௌ, திலிப் இன் பதிவு, புகளினி,நித்யகுமாரன், குண்டுமாமா, சென், வெண்பூ, மங்களுர் சிவா, வால்பையன், குடுகுடுப்பை, நட்புடன் ஜமால், தன்டோரா, கோவிக்கண்ணன்,இவின் கோபி, அமு செய்து, உண்மைத்தமிழன், வண்ணத்து பூச்சியார், வழிப்போக்கன் சந்துரு, கருவெளி ராச.மகேந்திரன், சரவணகுமரன்,அப்பாவிதமிழன்,ரமேஷ்,தமிழர் நேசன் , அக்னி பார்வை, போன்ற எனக்கு தொடர்ந்து தோள் கொடுக்கும் தோழர்களுகளுக்கு என் இதயம் கனிந்த நன்றிகள் பல...
எட்டாவதாக
எனக்கு தொடர்ந்து பின்னுட்டம் அளிப்பவர்கள்
வெண்பூ, என்பார்வையில், அத்திரி , வால்பையன், குப்பன் யாஹூ, கருவெளி ராச.மகேந்திரன்( பேர் மாத்தலை சந்தோஷமா?) புதுவை சிவா, நையான்டி நைனா, வந்திய தேவன், தன்டோரா, நித்யகுமாரன், மதுவதனன்மௌபுகளினிகோவிக்கண்ணன்சரவணகுமரன்அக்னி பார்வை உண்மைத்மிழன் போன்றவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல...
100 வது பதிவுக்கு நன்றி தெரிவித்து நான் எழுதிய பதிவுக்கு என்னை பற்றி ஒரு பெரிய பதிவே போட்டு பகிங்கர கடிதம் எழுதிய பதிவர் நித்யாவின் பதிவு அப்படியே உங்கள் பார்வைக்கு,
100 பதிவு கண்ட அபூர்வ சிகாமணி அண்ணன் ஜாக்கி அவர்களுக்கு ஒரு பகிரங்கக் கடிதம்
ஜாக்கி சேகர் ஐயா சமூகத்திற்கு,
வந்தனங்கள். 100 பதிவு என்னும் இமாலய சாதனை புரிந்த களைப்பில் உங்கள் வாழ்க்கையில் வந்துபோன அனைவருக்கும் (பேனாவில் இங்க் ஊற்றித்தந்த பானு அக்காவையும், “காக்கா கடி” கடித்து கடலை மிட்டாய் தந்த சுரேஷையும் தாங்கள் விட்டு விட்டதற்கு என் கண்டணங்கள்) நெடுஞ்சாண்கிடையாக உருண்டு உருண்டு நீங்கள் நன்றி சொன்ன விதம் மிகவும் மெச்சத்தக்கது. இந்த பண்பினை நீங்கள் பாலகுமாரனிடமிருந்து தருவித்துக் கொண்டிருக்கலாம் என்று எண்ணுமளவிற்கு உங்களின் நன்றி கூறலின் விசுவாசம் உங்கள் பதிவெங்கும் மணக்கிறது.
பொதுவாக எண்ணிக்கையில் எனக்கு பெரிய நம்பிக்கையில்லை என்று சொன்னால் அது பொய். எண்ணிக்கைகள் தான் நாம் கடந்து வந்த தூரம் குறித்து நமக்கு அடிக்கடி உணர்த்துபவை. 100 என்ற எண்ணம் மிகவும் முக்கியமானது. அந்த எண்ணிக்கையை விட என்னை மிகவும் கவர்ந்த விடயம் என்னவென்றால் உங்களின் பதிவுகளில் காணப்படும் variety தான். அந்த பல்பொருள்தன்மை என்னை வெகுவாகவே கவர்ந்தது.
நீங்கள் அநியாயமாக சாகடித்த அந்த பெங்களூருவைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளன் அவ்வப்போது என் நினைவில் வந்து போவதுண்டு. சினிமா தியேட்டருக்குள் உணரும் வியர்வை பிசுபிசுக்கை அனுபவ சுருதியோடு சொன்ன உங்கள் வார்த்தைகளும், அப்போதைய அரசியல் சமூக சிக்கல்களை நக்கல் வழிய வழிய வறுத்தெடுத்த உங்கள் பாங்கும் அதீத கவர்ச்சியை அந்த தொடர்கதைக்கு வழங்கின என்றால் அது மிகையாகாது.
அதைப்போன்றதல்லாமல் வேறொரு genre ல் ஒரு புதிய தொடர் எழுதினால் நன்றாக இருக்கும் என்பது என் எண்ணம். கள்ளக்காதல், பஸ் ஸ்டாண்டு லாட்ஜ், சாவி துவாரத்தில் எட்டிப் பார்க்கும் ரூம் பாய், அநியாயமாய் உச்சக் கட்டத்தில் கிழிந்து போகும் காண்டம், வேடிக்கை பார்க்கும் செயலற்ற தமிழக போலீஸ் என்று தொடங்கி நீங்கள் பிளந்து கட்டி எழுதினால் சாரு தலைமையில் ஒரு கூட்டமே வந்து உங்கள் எழுத்தை உலகின் பல்வேறு நாடுகளுக்கு எடுத்துச்செல்லும் பணியை மேற்கொள்வார்கள். பிறகு நீங்கள் தனித்தளம் தொடங்கி இடைவேளை விட்டு இளைப்பாறலாம். இது குறித்து நீங்கள் பரிசீலிக்கவும்.
உங்களின் சினிமா பற்றிய புரிதலும் அது குறித்தான பார்வையும், சினிமாவில் உங்களுக்கு நெருக்கமானவர்களின் அறிவு விசாலமும் எனக்கு ஓரளவு தெரியும். நம் பதிவுலகில் முணுக் முணுக் கென்று வாரம் ஒரு திரைவிமர்சனம் எழுதும் பதிவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் சினிமா என்பது என்ன... அதன் வலிகள் என்ன... இவர்கள் எழுதும் குப்பைகளால் வரும் பாதிப்புகள் என்ன என்பதெல்லாம் தெரியாது. சினிமா பற்றிய புரிதலை நம் சக பதிவர்களுக்கு ஏற்படுத்தும் முயற்சியில் புது கட்டுரைத்தொடர் எழுதலாம் (அதற்கெல்லாம் சத்தியமாக பின்னனூட்டமே வராது என்பது வேறு விஷயம்). சினிமா என்று தலைப்பிட்டு விட்டால் போதும், அதைப் படிக்க இங்கு அனைவரும் தலைப்பட்டு வருவார்கள் அது போதும். உலக சினிமா பற்றிய உங்கள் தொடரில் நல்ல திரைப்படங்களை நீங்கள் அறிமுகப்படுத்தும் பணி மேலும் தொடரட்டும்.

அம்புட்டுதான் சாமி... எனக்கு இப்ப உத்தரவு குடுங்க...
அன்புடன் நித்யகுமாரன்....
நண்பர் நித்யாவின் மேலுள்ள பாராட்டும் வரிகள்தான் எனக்கு உற்சாக டானிக்
தொடர்ந்து என் வளர்ச்சிக்கு உறுதுனையாய் இருக்கும் அத்துனை பேருக்கும் இந்த ஜாக்கிசேகரின் நெஞ்சார்ந்த நன்றிகள்....
அன்புடன்/ஜாக்கிசேகர்
நமக்கு என்ன யோக்கியதை இருக்கிறது மகளிர் தினம் கொண்டாட?????
(வரதட்னை கேட்டு தொல்லை படுத்திய மாமியார் மீது புகார் கொடுக்க செல்லும் இந்திய பெண்)
கள்ளிப்பால் கொடுத்து பெண்குருத்துக்களை அழிக்கிறோம், சுக்கு காபி குடிச்ச நாய்க்கு நெஸ்காப்பி கேக்குதா? என்று கவுண்டமணி சொல்வது போல் பெண் குழந்தைக்கு படிப்பு எதற்க்கு என்று சொல்லி வளர்க்கிறோம்.
என்ன இருந்தாலும் அடுத்தவன் வீட்டுல போய் வாழுற பெண்தானே என்று பெண் பிள்ளைகளை மித மி்ஞ்சிய அலட்சியத்துடன் வளர்க்கிறோம்.
புருஷன் வீட்டுக்கு போய் எதுவுமே தெரியாது என்று சொல்லி என் மானத்தை வாங்குறதுக்கா? என்று சொல்லி வத்த கொழம்பு வைக்க கற்றுக்கொடுத்து அவளை ஒரு வேலைக்காரி மனோபாவத்துடன் வளர்க்கும் மிக பலவீனமான சமுக அமைப்பு நம்முடையது.
வீட்டில் ஆண்பிள்ளை கேட்க்கும் பொருளுக்கும் பெண்பிள்ளை கேட்கும் பொருளுக்கும் வாங்கி கொடுப்பதில் வித்தியாசம் காட்டுகிறோம்.
ஆண்பிள்ளை இரவில் இரண்டு மணிக்கு தண்ணி அடித்து விட்டு வந்து படு்த்தாலும் நாம் ஏதும்
சொல்வதில்லலை ஆஞ்சிநேயர் கோவில் போய் அரை மணி லேட் ஆனால் 3வது கடை டைலர் சொல்வதை கேட்டு தீர விசாரிக்காமல் வானத்துக்கும் பூமிக்கும் குதிப்போம்
( தீர விசாரித்ததில் கிளாஸ்மெட் புஷ்பாவுடன் பேசி விட்டு வந்து இருப்பது தெரியும்.)
படித்த மருமகள் மாமியார் சொல்வதில் சில விஷயங்கள் அபத்தமாக இருந்தால் அதை எதிர்க்கும் போது , அவளை வீழ்த்த மாடி வீட்டில் வாடகைக்கு குடி இருக்கும் கல்யானராமனையோ அல்லது குழந்தை பர்த் டேவுக்கு வந்து போன சிகப்பான யாராவது ஒருவருடன் கதை கட்டி அவளை மனதளவில் வீழ்த்துவது....
காசுக்காகவும் புகழுக்காவும் டூப்பீசில் நடித்த போட்டோவை லட்ஜை இல்லாமல் ரசிப்பது( என்னைத்தான் சொல்லறேன்)
அழகு இருந்தாலும் அழகு இல்லாவிட்டாலும் ஒரு பெண் இருக்கும் குடும்பமாக பெண் தேடுவது.... அப்போதுதானே மொத்த சொத்தையும் ஆட்டையை போடலாம்.
27ஹெச் பஸ்ஸில் கடுமையான கூட்ட நெருக்கத்தை பயண்படுத்திஅந்த பெண்ணின் பின்புறம் நின்று பேண்ட் ஜீப்பை அவுத்து இரண்டு முன்று பிரேக்குகளில் அந்த பெண்ணின் சுடிதார் பின்புறத்தை அசிங்க படுத்த அந்த 20 வயது வேலைக்கு போகும் பெண் அது என்ன என்று தொட்டு பார்த்து கதறிஅழுததை எப்படி மறக்க முடியும்.
( அதன் பிறகு பயணிகளால்அவன் உதடுகிழிந்ததும் ஒரு பல் ஆடிக்கொண்டு இருப்பதை பார்த்து நான் அடைந்த மகிழ்வுக்கு அளவே இல்லை)
நீங்கள் ,இப்போது கூட பாருங்கள் ஷேர் ஆட்டோக்களில் நம் பெண்கள் படும் சித்தரவதையை....
இரண்டாம் நாளு, “வயுத்துல உயிர் போற வலி”, ஃபுலோவேற அதிகமா இருக்கு செத்த நீங்களே காப்பி கலந்துக்குங்க என்று சொல்லி,காபியை தனக்கும் கலந்து, மனைவிக்கும் கலந்து வரும் ஆண்கள் எண்ணிக்கை மிக மிக குறைவு என்பேன்.
மாப்பிள்ளை வந்துட்டார், மாப்பிள்ளை எழுந்து விட்டார் ,மாப்பிள்ளை வாய் கொப்பளித்தார் , மாப்பிள்ளை காக்கா போயிருக்கிறார் என்று ஆடும் மாமியார்கள் மாற வேண்டும். இங்கு இந்த அளவுக்கு ஏத்தி விடுவதால்தான், தன் வீட்டிலும் மனைவி அப்படி ஆட வேண்டும் என்று எதிர்பார்க்கிறான்.
( மாமியார் ஆடியது தன் பெண்ணை கண்கலங்காமல் வைத்து கொள்ள வேண்டும் என்ற பாசம் என்பதை எத்தனை மாப்பிள்ளைகள் புரிந்து கொண்டு இருக்கிறார்கள்)
வரதட்சனை சீர்வரிசை கொடுக்க வக்கு இல்லாதகாரணத்தால் ஜன்னல் வெறிக்கும் , இந்திய பெண்கள் பல கோடி பேர்....
கையில கேஷா ஒரு லட்சம், 25 பவுன் நகை, சீட்டி 100 பைக் வாங்கி கொடுத்தால் அந்த மாப்பிள்ளை சூத்.... அதுல உட்காராது அது பல்சர் பைக்லதான் உட்காரும், டிவி, பிரிட்ஜ்,வாஷிங் மெஷின், என்று ஆட்டையை போடுவதும், குழந்தை பிறந்ததும், தாய் வீட்டு சீர் என்று தலையை மொட்டை அடிக்கும் மனசாட்சி அற்ற மனிதர்களை மாற சொல்லுங்கள்...
பெண்ணை படிக்க வைக்கவே யோசிப்பது , நன்றாக படிக்கும் பெண்ணை பாதியில் நிறுத்தி அப்புறம் படிப்புக்கு ஏத்த மாப்பிள்ளைக்கு எங்க போறது என்று ஒரு வளரும் சமுகத்தையே நாசம் செய்வது.....
கல்சர் என்ற போற்வையில் பெண்ணை மட்டும் மட்டம்தட்டுவது, கல்சர் ஆணுக்கும் என்பதை மறந்துவிடுவது...
பிறந்ததில் இருந்து பெண்களுக்கான செலவு
எல்கேஜி டூ பத்தாம்வகுப்பவரை படிப்பு செலவு............... ஒரு லட்சம்
15வயசு லிருந்து 45 வயசுவரை நாப்கின் செலவு.............பதினெட்டாயிரம்
மேல்நிலை படிப்பு செலவு...........................................................ஒருலட்சம்
கல்லூரி செலவு (கலைக்கல்லூரி இல்லாத)........................ஆறு லட்சம்
காஸ்மெட்டிக் செலவு.....................................................................50 ஆயிரம்
நிச்சயதார்த்த செலவு.......................................................................... 2 லட்சம்
கல்யான செலவு வரதட்சனை உட்பட.........................................10 லட்சம்
ஆடி சீர் ........................................................................................................20ஆயிரம்
வலைகாப்பு செலவு..............................................................................75 ஆயிரம்
குழந்தை பிறப்பு செலவு டாக்சி செலவு உட்பட.......................1 லட்சம்
குழந்தைக்கு தாய் வீட்டு சீர்................................................................75 ஆயிரம்
மொத்தம்29 லட்சத்து 48 ஆயிரம் இவ்வளவு செலவு அப்பர் மிடிள் கிளாஸ் நிலமை. அப்புறம் நடுத்தர குடும்பம், வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள மக்கள் நிலமையை நினைச்சு பாருங்க...
ஒரு பொம்பள புள்ளைய பெத்து வளத்து கல்யாணம்ம் பண்ணி கொடுக்க இவ்வளவு செலவு புடிச்சா,
ங்கோத்தா அன்னாடங்காட்சிங்க கள்ளிப்பால் கொடுக்கறதுல என்ன தப்புங்கறேன் ,
செங்கேனி, ராசாத்தி,லட்சுமி போன்ற பட்டிக்காட்டு ஜனங்களை நாம வேற குத்தம் சொல்லிக்கிட்டு ......
இன்பத்தை கருவாக்கினாள் பெண்
உலகத்தில் மனிதரை உருவாக்கினாள் பெண்
விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும் விலையற்ற செல்வம் பெண், விலையற்ற செல்வம் பெண் என்று பாடத்தான் லாயிக்கு.....
நம் சமுக அமைப்பு முற்றிலும் மாற வேண்டும். கவிஞர் வாலி காதல்தேசம் படத்தில் எழுதிய மேலுள்ள பாடல் வரிகள் நமக்கு புரியும் போது நாம் மகளீர் தினம் கொண்டாடலாம்...

சன் டிடிஎச்சின் போங்காட்டம்....
வீ்ட்டுக்கு வீடு சன் டைரக்ட் வீட்டுக்கு வீடு சன் டைரக்ட் என்று கண்ணி்ல் கண்டுடிக்கமுடியாத அளவுக்கு பிரச்சனையுள்ள தமன்னா சன் விளம்பரத்தில் பாடியது நாம் அறிந்ததே...
நானும் கேபிளுக்கு சரியான மாற்று என்று எண்ணி சன் டிடிஎச் சேவை வாங்கினேன் முதலில் காமெடித்திரை எங்களிடம் மட்டும்தான் இருக்கிறது வேறு யாரிடமும் இல்லை என்றார்கள்.
கொஞ்சநாளில் காமெடித்திரை தெரியவில்லை இப்போது காமெடித்திரைக்கு பணம் கட்டினால்தான் காமெடித்திரைக்கிடைக்கும் என்று காமெடி பண்ணுகிறார்கள்...
நாம் அவர்கள் டிவிக்களை அதிகம் பார்பதால் வரும் டி ஆர் பி ரேட்டிங் வைத்து விளம்பரதாரர்களிடம் காசு பார்த்து விட்டு நம்மிடமே அவர்கள் டிவியை பார்பதற்க்கு காசும் வாங்கி ச்சே அவர்களுக்கு என்ன அற்புதமான திறமை பாருங்கள்....
அவர்கள் தாத்தா நடத்தும் இசையருவி பார்க்க வேண்டும் என்றாலும் மொய் வைத்தால்தான் அதையும் பார்க்க முடியும்....
அதே போல் 500 ரீச்சார்ஜ் கார்டு வாங்கினேன் மூன்று மாதத்துக்கு 150 ரூபாய் வீதம் ரூபாய் 450க்கு ஆங்கில திரைப்படசேனல்களுக்காக அர்பனித்தேன் மிச்சம் 50 ரூபாய் எங்க சார்? என்றால் அது சேவை கட்டணமாம்.
என்னை பொருத்தவரை கேபிள் பெஸ்ட்
அவர்களிடம் என்ன பிரச்சனை என்றால்
ஹலோ நான் 3 வது தெருவுல இருந்து ஜாக்கி பேசறேன் கேபிள் வரலை...
சார் கேபிள் செக் பண்ணிக்கினு இருக்கம் சார் என்று இரண்டு நாளுக்க இழுத்து விடுவார்கள்...
முதலில் காமெடித்திரை இலவசம் என்றார்கள் இப்போது காசு என்கிறார்கள் ஆனால் அதற்க்கு பதில் அதித்யா வருகின்றது...கொஞ்ச நாளில் அதையும் பே சேனலாக மாற்றி விட்டு சேனல் கலா வரும் என்று எண்ணுகிறேன்.
கண்கள் பனித்தன இதயம் இனித்தது......

(பாகம்/16) THE ABYSS கடலின் ஆழமும் பெண்ணின்மனசு ஆழமும் ஒன்றா?
உலகின் மிக அழகிய கடற்கரை எங்கள் கடலூரின் சில்வர்பிச் கடற்கரைதான் என்பேன். 4கிலோமீட்டர் தூரத்துக்கு வெள்ளை மணலாய் மிக அழகாக இருக்கும். இப்போது அந்த அழகு போய்விட்டது,அகோர பசியுடன் சுனாமி வந்து அந்த அழகை எல்லாம் சின்னாபின்னமாக்கிவிட்டது.
சின்ன வயதில் விடியலில் அப்பா, கைலி ஈரம் சொட்ட சொட்ட நடந்து வந்தால் அவர் கடலில் நீந்தி விட்டு வந்து இருக்கிறார் என்று அர்த்தம்.
ஒரு முறை மாசி மகத்துக்கு அப்பாவுடன் கடலில் குளிக்க சென்றேன். அப்போது எனக்கு வயது எட்டு.
மற்ற அப்பாக்கள் போல் என் அப்பா கரையில் குளிக்கும் ரகம் அல்ல. என்னை முதுகில் வைத்துக்கொண்டு கடலில் வெகு தூரம் நீந்துவார் கடலில் இருந்து பார்க்கும் போது கரை தெரியாது சுற்றிலும் ஒரே தண்ணிராக காட்சி அளிக்கும் . அவர் எப்படி திசை கண்டுபிடித்து நீநதுகிறார் எப்படி கரையை கண்டு பிடிக்கிறார், என்பது அந்த வயதில் எனது மில்லியன் டாலர் கேள்வி.
கடலில் எல்லா சாமிக்கு தீர்த்தவாரி நடந்து கொண்டு இருந்த போது, நானும் அப்பாவும் கடலில் அழம் சென்று நீந்தி வருவதாக இருந்தோம். மூன்று முறை கடலின் உள்ளே போய்வந்து விட்டோம். நான்காவது முறை அப்பா கேட்டார் ? என்னடா வீட்டுக்கு போலாமா? அல்லது இன்னோருமுறை கடல்ல உள்ளே போய் விட்டு வரலாமா? நான் வீட்டுக்கு போலாம் என்று சொல்லி இருக்க வேண்டும். சின்ன பையன் கடலின் பொங்கி வரும் அலையின் சீற்றத்தை பார்த்து ஒரே குஜலாக இருந்தேன்.
நான் அப்பாவிடம் இன்னோரு முறை என்று சொன்ன அந்த நேரத்தில் சனிஸ்வர பகவான் மெல்ல ஸ்மைல் செய்தார். அப்போது கடலை பார்த்து அலையை பார்த்து குதித்ததை என் அப்பா நன்றாக ரசித்தார், நான்காவது முறைஅப்பாமுதுகில் வைத்துக்கொண்டு கடலில் நீ்ந்தினார் நீந்திக்கொண்டு இருந்தவர் ஜயோ என்றார் . அப்பா அப்படி பதறி நான் பார்த்தது இல்லைஅவர் துடித்தார் நான் சுற்றி பார்த்தேன் சுற்றிலும் தண்ணீர் முன்பு மூன்று முறை வந்த போது தென் பட்ட மீனவ படகுகள் கூட இந்த முறை தென்படவில்லை.அப்பா தரையில் இருப்பதாக நினைத்து கொண்டு பதட்டத்தில் என்னை கடலில் இறக்கி விட்டார்.
நான் கலங்கலான கடல் தண்ணீரின் உள்ளே மெல்ல கீழே சென்று கொண்டு இருந்தேன், அப்பா எங்கு போனார்? அவருக்கு என்ன ஆயிற்று? தெரியாது அவர் வருவாரா? தெரியாது. நான் கீழே ரொம்பவும் கீழே போய் கொண்டு இருந்தேன். அந்த ஆழ்கடலின் இறைச்சல் இல்லாத அமைதி என்னை என்னவோ செய்தது....
அந்த வயதில் எனக்கு அந்த அனுபவம் புதிதாக இருந்தது. நான் மூச்சை மட்டும தம் கட்டி இருந்தேன் தண்ணீர் ஒரு மிடறு விழுங்க வில்லை.
வெகு தூரத்தில் என் அப்பா வேகமாக நீந்தி வருவது என்க்கு தெரிந்தது அப்பா என் அருகில் வந்தார் என் தலைமுடி பிடித்தார் கடலில் மேல் மட்டத்துக்கு வந்தோம் என்ன அப்பாவிடம் என்ன ஆச்சு என்று கேட்டேன்? அவர் ரொம்பவும் பதட்டமாக இருந்தார். பதில் ஏதும் சொல்லவில்லை முன்னைகாட்டிலும்வெகு வேகமாக நீந்தினார்.
அவர் நீந்தும் போது பின்னால் நீர் பிரிந்து செல்லும் இடத்தை பார்த்தேன் ரத்தமாக இருந்தது. நான் மெல்ல பயப்பட ஆரம்பித்தேன், கடலின் கரைக்கு வந்த போது அப்பா காலில் ரத்தம் குற்றால அருவி போல் கொட்டிக்கொண்டு இருந்தது,எங்கள் ஊர் ஆட்கள் கடலில் குளித்து கொண்டு இருந்தவர்கள் எல்லோரும் ஓடி வந்து ரத்த ஓட்டத்தை நிறுத்த டான்டக்ஸ் ஜட்டி,கோமனம், பட்டாபட்டி டிராயர்,பத்து அடியில்பாதி உடம்பை காட்டி கொண்டு குளித்து கொண்டு இருந்தபேபி அக்காவின் புது உள்பாவாடைஎன்று எல்லாம் போட்டு கட்டியாகி விட்டது. ரத்தம் நின்ற பாடி்ல்லை.
காயத்தின் தன்மை பார்த்து அந்தகாயம் நடுக்கடலில் திருக்கை மீனின் வால் காலில் அடித்ததால்அந்த காயம் ஏற்ப்பட்டதாக சொன்னார்கள்,மிகச்சரியாக அந்த கணத்தில் இருந்துதான் வெயில் படத்து பசுபதியின் அப்பாபோல் என் அப்பாவும் என்னை வெறுக்க ஆரம்பித்தார்.....
அதன் பிறகு கடலிலும் கரையிலும் நிறைய சம்பவங்கள் நடந்தாலும் இன்று கடலை பார்த்தாலும் அந்த குதுக்கலம் ஏற்படுத்துவதையும் மனசு லேசாக மாறுவதையும் மறக்க முடியாது. பூமியில் மூன்று பாகம் கடல் நீரால் சூழப்பட்டு உள்ளது, அந்த கடலின் உள்ளே மறைந்து கிடக்கும் விஷயங்கள் ஏராளம். இமயமலையின் உயரத்தைவிட மிக ஆழமான பகுதிகள் கடலின் உள்ளே இருக்கின்றன.
கடல் மேற்புரத்தி்லிருந்து பார்க்கும் போது கரையை தவிர உள்பக்கம் அமைதியாக இருக்கும் கடல், பெண்ணை போல் அதனுள்ளே எண்ணற்ற மர்மங்களை தன்னகத்தே வைத்து இருக்கிறது.
பொதுவாக கடலின் கரையில் இருந்து 3 கிலோமீட்டர் தூரம் பெரிய ஆழம் இல்லாத பகுதிகள்தான் இருக்கும் இதற்க்கு காண்டினென்டல் பிளேஸ் என்று சொல்வார்கள். இதற்க்கு அப்புறம்தான் கடலில் உண்மையான அழம் ஆரம்பிக்கும்அதற்க்கு பெயர் அபய்ஸ் (ABYSS)என்று சொ்லுவார்கள் அந்த ஆழப்பகுதி்யையும் விட்டு வைக்காத மனித குலம் அங்கு நடக்கும் சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படமே அபய்ஸ். இந்த படத்தை டைட்டானிக் இயக்குனர் ஜேம்ஸ் கேமரோன் இயக்கினார் இந்த படம் வெளியான ஆண்டு 1989.
வாழ்வில் நாம் எவ்வளவோ படங்களை பார்த்து இருக்கிறோம் ஒரு சில படங்கள்தான் நமக்குநிறைய கற்றுக்கொடுக்கின்றன அந்த வகையில் கடல் ஆழத்தில் இப்படித்தான் இருக்கும் என்று உலகை அரிய வைத்த படம் அபய்ஸ் . இந்த படத்தை நான் பாண்டிச்சேரி ரத்னாவில் பார்த்தேன்.
கதைப்படி படத்தின் பத்துநிமிடங்கள் மட்டுமே வெளியில் காட்டுவார்கள் மற்ற காட்சிகள்எல்லாம் கடலில் உள்ளே எடுதது இருப்பார்கள். படத்தின் எல்லா பிரேம்களிலும் கடல் தண்ணீர் வியாபித்து இருக்கும். படத்தின் இரண்டரை மணி நேரமும் நாம் ஏதோ கடலின் அடி ஆழத்தில் இருப்பது போல் நாம் ஃபில் செய்யுவோம், அந்த ஃபிலிங்தான் இயக்குநர் ஜேம்ஸ்கேமரோனுக்கு கிடைத்த வெற்றி......
படத்தின் கதை.....
அமேரிக்க கடற்படைக்கு சொந்தமான நீர் முழ்கி கப்பல் ஒன்று அனு ஆயுதங்களுடன் கடலின் ஆழத்தில் பயனம் செய்து கொண்டு இருக்கிறது, ஏதோ ஒரு இது ஒரு அது சரி ஏதோ விவரிக்க முடியாத ஒன்று அந்த நீர்முழ்கி கப்பல் அருகில் வந்ததும் அந்த நீர் முழ்கியின் அனைத்து செயல்பாடுகளும் சில நிமிடங்கள் முடக்க படுகின்றன. திரும்பவும் மின்சாரம் வந்தத போது எதிரில் இருக்கும் பாறையில் மோதி150 பேருடன் ஜலசமாதி ஆகின்றது
அமேரிக்க ராணுவம் விஷயத்தை வெளியே தெரியாமல் அந்த அணுகுண்டை எடுக்க அங்கு கடலுக்கு கீழே பெட்ரோலியம் கண்டுபிடிக்கும் குழுவிடம் உதவி கேட்கிறது. முதலில் மறுத்தாலும் பிறகு ஒத்துக்கொண்டு அந்த குழு உதவி செய்ய சம்மதிக்கின்றது.அந்த குழுவின் தலைவராக ஹீரோ ஈட்ஹரிஸ் நடித்து இருக்கிறார்.அவர்களுக்குள் ஏற்படும் கருத்து மோதல்கள்,கடலில் மேல் இருக்கும் கப்பல் புயலில் அகப்பட்டு கடலுக்கு கிழே இருக்கும் இவர்களுக்கும் மேலே இருக்கும் தாய் கப்பலுக்கான தொடர்பு துண்டித்து விட அந்த அணு குண்டை எப்படி கைப்பற்றினார்கள் இவர்கள் குழுவிலேயே இருக்கும் ஒருவன் வில்லனாக மாறி அந்த அணுகுண்டை வேடிக்க வைக்க டைம் செட்பண்ணி விடுகிறான் அவன்அதை வெடிக்கவைக்க முயற்ச்சிக்க அந்த அணுகுண்டு20000அடி ஆழமான கடலுக்கள் உள்ள பள்ளதாக்கில் விழுந்து விட அந்த அணுகுண்டு வெடிக்காமல் செயலிழக்க பட்டதா? அவ்வப்போது தலை காட்டும் அந்த அது,அந்த இது, அந்த அது என்ன? என்பதை வெள்ளிதிரையில் கான்க....
படத்தை பற்றிய சுவாரஸ்யங்களில் சில.....
இந்த படத்தின் இயக்குனர் ஜேம்ஸ்கேமரோன் என் வாழ்வில் மறக்கமுடியாத டைரக்டர் ஏன் என்றால்....
1994ல் நான் MOUNT ROADல் இருக்கும் LIC எதிரில் சென்டிக்கோ ஸ்கூட்டர் கம்பேனியில் கயவர்களால் ஏமாற்றப்பட்டு செக்யுரிட்டி வேலை பார்த்துக்கொண்டு இருந்த நேரம். அப்போது ஜேம்ஸ் கெமரோனின் ஜட்ஜ்மென்ட் டே 2 அலங்கார் தியேட்டரில் ஓடிக்கொண்டு இருந்தது. தேவி தியேட்டரில் கிளிப் ஹங்கர் ஓடிக்கொண்டு இருந்தது...
அப்போது சைடு வருமானமாக பிளாக்கில் டிக்கெட் வித்துக்கொண்டு இருந்தேன் அலங்காரில் அன்று கூடிய கூட்டத்ததால் என் சாப்பாட்டு பிரச்சனையை சில நாட்களுக்கு தீர்த்தவர் இந்த படத்தின் டைரக்டர் ஜேம்ஸ்கேமரோன்.
சரி அபய்ஸ் படத்துக்கு வருவோம் இந்த படத்தின் வெளிப்புற படபிடிப்பு என்பது வெறும் 15 நிமிடங்கள்தான்.
படத்தில் ஏற்படும் ஆமானுஷ்ய அமைதியையும் அந்த மூச்சி விடும் சத்தத்தையும் நீங்கள் கடலுக்கு அடியில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும்.
இப்படி கூட கடலுக்கு அடியில் ஒரு சப்ஜெக்ட்டை எடுத்து அதனை மிக சுவாரஸ்யமாக எடுக்கமுடியும் என்பதற்க்கு இந்த படம் ஒரு மிகச்சிறந்த உதாரணம்.
நீர்முழ்கி கப்பலுக்கு அடியில் இருக்கும் பினத்தை பார்த்து பதட்டத்தில் மூச்சு தினறும் போது அந்த மூச்சிதினறல் நமக்கு ஏற்படுவது போல் ஏற்படுததும் பதட்டம் செம டைரக்டர் டச்...
கிளைமாக்ஸ் யாரும் எதிர் பாராதது....
சில நம்ப முடியாத பல விஷயங்கள் படத்தில் பல இருந்தாலும் இந்த பூமியில் சிலது நடக்கவே நடக்காது என்று யாராலும் சொல்ல முடியாது...
எல்லா இயற்க்கை சீற்றத்துக்கும் மூல காரணம் நாம்தான் என்தை பொட்டில் அடித்து சொல்லி இருக்கிறார்கள்...
1993ல் சில மாறுபாடுகளுடன் திரும்பவும் இந்த படம் வெளியிடப்பட்டது....
இந்த படத்தை பார்த்தால் டைட்டானிக் படம் எப்படி இவ்வளவு அற்புதமாக எடுத்தார்கள் என்பது இந்ந படத்தை பார்த்தால் புரியும் ஏனென்றால் டைட்டானிக் படத்தை எடுத்தது இதே டைரக்டர்தான்
இந்த படம் விஷீவல் எபெக்ட்டுக்காக ஆஸ்க்கார் விருது இந்த படம் பெற்றது.
இந்த படத்தி்ன் இயக்குநர் டைட்டானிக்,ட்ரூலைஸ்,டெர்மினேட்டர் போன்ற படங்களை எடுத்தவர்.
கடலுக்கு அடியல் அதுவும் ஆழ் கடலுக்கு அடியில் என்ன இருக்கிறது எப்படி இருக்கும் என்பதை இந்த படத்தை பார்த்து அறிந்து கொள்ளலாம்.
முச்சு பேச்சு இல்லாமல் கிடக்கும் மனைவியை ஆழுது பு ரண்டு நடிக்கும் காட்சியை கணக்கில்லாமல் எண்ணற்ற தமிழ்பட டைரக்டர்கள் சுட்டு தள்ளினார்கள்
அன்புடன்/ஜாக்கிசேகர்
Subscribe to:
Posts (Atom)