தாதாயிசம் போல என் மனதில் தோன்றுவதை அப்படியே இந்த இடத்தில் எழுதுகின்றேன்....நான் ரசிப்பதை, அது அபத்தமாகவே இருந்தாலும், என் மனதில் தோன்றியதை எழுதவே எனக்கு விருப்பம்.. மனதைக்கொள்ளை கொண்ட திரைப்படங்கள் அதிகம் எழுதிட ஆசை..பிரியங்களுடன்/ஜாக்கிசேகர்.......
"So much of what we do is ephemeral and quickly forgotten, even by ourselves, so it's gratifying to have something you have done linger in people's memories." இசையமைப்பாளர்... ஜான் வில்லியம்ஸ்...


இந்த தளத்தில் விளம்பரம் செய்ய அனுகவும்..ஜாக்கிசேகர்/09840229629
மெயில் .. dtsphotography@gmail.com

Wednesday, March 25, 2015

Geethanjali Telugu movie review – 2014- கீதாஞ்சலி தெலுங்கு திரைப்படவிமர்சனம்.நிறைய பார்த்த பேய் படங்களின் கலவைதான் இந்த கீதாஞ்சலி தெலுங்கு திரைப்படம் என்றாலும் கதை சொன்ன விதத்தில் சுவாரஸ்யம் கேடாமல் வின்னர் கோட்டை தொட்டு இருக்கின்றார்கள்.

 சினுவாச ரெட்டி கடந்த 15 வருடங்களாக தெலுங்கு சினிமாவில்  கோலோச்சிக்கொண்டு இருப்பவர்... நாயகனின் நண்பன், தம்பி,அண்ணன், கிளைமாக்சில் குண்டு வாங்கி உயிர் விடும் உற்ற நண்பன் என்று நிறைய படங்கள் செய்து இருந்தாலும் சீனுவாச ரெட்டியை ஹீரோவாக  போட்டு படம் எடுக்க தில் வேண்டும்...


Monday, March 23, 2015

உப்புக்காத்து 32 (கனகா எனும் இளம்விதவை)மரக் என்று  வெங்காயத்தை  கடித்து குண்டானில் துழவி கைக்கு தட்டு பட்ட  நாலைந்து  சோற்று  பருக்கைகளை  வாயில் போட்டு விட்டு ,கடைசியாக குண்டான் நீராகராத்தில் இருக்கும்  முக்கால் வாசி தண்ணீரை குடித்து விட்டு வாயை துடைத்து, வேலைக்கு கிளம்ப எத்தனித்தாள்....கனகா...
கனகாவுக்கு 34 வயது... பார்க்கும் போது 22 வயதைதான் சொல்லுவார்கள்.... சரியான உடம்புக்கு   எடுத்துக்காட்டாக கனகா உடம்பை தைரியமாக சொல்லலாம்...

Saturday, March 21, 2015

kallappadam/2015 கள்ளப்படம் திரைவிமர்சனம்.இயக்குனர் மிஷ்கின் உதவியாளர்  வடிவேல் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் திரைப்படம்  கள்ளப்படம்.  கள்ளப்படம் என்று  ஒரு படம் எடுத்துக்கொண்டு இருக்கின்றார்கள் என்று  கேள்வி பட்டு இருந்தாலும்   மூன்று வாரத்துக்கு முன் நண்பர் செந்தில்... கள்ளப்படம் எனது நண்பரின்  அண்ணன் இயக்கும் திரைப்படம் என்றார்...


Wednesday, March 18, 2015

சாண்ட்வெஜ்& நான் வெஜ் ((18/03/2015))

ஆல்பம்.

இந்தியா டாட்டர் ஆவணபடம்  வந்து ஒரு பெரிய பிராளயத்தை உண்டு பண்ணியது.... என்னை பொருத்தவரை  இந்த ஆவணப்படம் நம்மோடு  சுற்றிக்கொண்டுஇருக்கும் செவ்வாழைகளை இனம் காட்டியது எனலாம்..இன்றே செய்.
தை தை தித்திதை தை தை தித்தித்தை...  

யாழினிக்கு பரதநாட்டிய வகுப்பில்  முதல் பாடம்... 

Sunday, March 15, 2015

இன்று யாழினிக்கு பிறந்தநாள். 15/03/2015அப்பா ....

என்னம்மா?
(என் மார்ப்பு மற்றும் கை கால்களை சுட்டிக்காட்டி)

குரங்குக்கு முடி இருக்கறது போல.... உன்  உடம்பு புல்லா   ஏன்பா முடி வளர்ந்திருக்குது?

ஙே...


Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner