ஆல்பம்..
ஆனந்த விகடனில் முதன் முறையாக எனது பெயர் தாங்கிய செய்தி வந்து இருக்கின்றது..டுவிட்டரில் ஸ்பெக்ட்ரம் பற்றி எழுதிய கமென்ட்டை பப்ளிஷ் செய்து இருக்கின்றார்கள்.தகவலை முதன் முதலில் பகிர்ந்துகொண்ட பட்டர்பிளை சூர்யாவுக்கும்,
===============
ஒருவாரகாலமாக நாடளுமன்றம் ஸ்தம்பித்து நிற்க்கின்றது.. அடுத்த பரபரப்பு ஏற்படும் வரை இப்போதைக்கு ஹாட் டாபிக் ஸ்பெக்ட்ரம்தான்.. அதில் எந்த சந்தேகமும் இல்லை.
==============
ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி பரபரப்பு பேச்சு அடிபட்டுக்கொண்டு இருக்கின்றது.இப்போது பிரபல ஆங்கில செய்தி சேனல்களில் வேலைபார்க்கும் நபர்களின் பேச்சுகள் லீக் ஆகி பரபரப்பு ஏற்படுத்திக்கொண்டு இருக்கின்றது.இதில் ஜெயா டிவி, கனிமொழி மத்தியில் உள்ள ஒரு பெண்மணியிடம் பேசிய பேச்சை தமிழ் படுத்தி நேற்று முதல் ஒளிபரப்பி பரபரப்பை ஏற்படுத்தியது.
தயாநிதி மாறனை கார்னர் செய்தார்கள்..
=============
இந்தவாரநிழற்படம்.
இந்த போட்டோ நம்ம கைவண்ணம்தான்... நம்ம மயிலை பறக்கும் ரயில் நிலையம்.
==================
மிக்சர்..
வானிலை அறிக்கை பற்றி தமிழ் செய்தி மீடியாக்களில் பில்டப் செய்யாத நாட்களில் சென்னையில் நல்ல மழை பெய்து வருகின்றது. சும்மாவா சொன்னாங்க மழை பெய்யறதையும் குழந்தை பொறக்கறதையும் மகாதேவனாலே மெஷர் பண்ண முடியாதுன்னு...??
=================
கடந்த வாரம்முழுவதும் சென்னைவசிகளிடம் கண்ணாமூச்சி விளையாடுகின்றது பருவமழை.. சரி மழை பெய்கின்றது,பயங்கரமாக வெளுத்து வாங்குகின்றது என்று ஜெர்க்கினை மாட்டி ஒரு கிலோமீட்டர் பயணித்தால் வெயில் கொளுத்துகின்றது சொட்டு மழை இல்லை.. உதாரணத்துக்கு மத்தியகைலாஷ்ல இருந்து டைட்டில் பார்க்துழரும் ஒன்றரை கிலோமீட்டர்தான் வரும்.. இதில் ஒரு கீலோ மீட்டருக்கு மேல் ஒரு பொட்டு தூறல் இல்லை. மழை பார்டர் கட்டி பெய்து வருகின்றது.
================
சென்னை மாநகரத்தின் முக்கிய இடம் மவுன்ட் ரோடு வெலிங்டன் பிளாசா எதிரில் சாக்கடையோ அல்லது குடிநீருக்கு தோண்டிய குழியை சரிபடுத்தி இன்னமும் போக்குவரத்துக்கு திறந்துவிடாமல் வைத்து இருக்கின்றது..இந்த வேலை ஆரம்பித்து 3 மாதத்துக்கு மேல் இருக்கும் தலைநகரிலே இந்த நிலைமை என்றால் மற்றமாவட்டம் மற்றும் குக்கிராமங்களின் நிலைமையை நினைத்துபாருங்கள்.
================
இந்தவார சலனபடம்...
எனக்கு தமிழில் ஹம் செய்யும் பாடலில் இதுவும் ஒன்று.. எனக்கு மம்தாமோகன்தாசையும் ரொம்ப பிடிக்கும்... இந்த பாடலில் பாண்ட்ஸ் பவுடர் டிசைனை, பிளாக்அண்டுஒயிட்டில் செட் போட்டு இருக்கும் அந்த இடம் எனக்கு பிடிக்கும்.. அதே பாண்ட்ஸ் பவுடர் டிசைனை வேறு ஒரு தமிழ்திரைப்பட பாடலில் பயண்படுத்தி இருப்பார்கள்.. எந்த படம் என்று யாராவது சொல்ல முடியுமா? எனக்கு தெரியும்..
=====================
பார்த்ததில் பிடிக்காதது...
லயோலா காலேஜ் மதில் சுவர்.. கோடம்பாக்கம்பிரிட்ஜில் இருந்து லயோலா கல்லூர போகும் வழி இப்போது புதிதாய் ஒரு ஸ்பிட்பிரேக்கர் வளைவில் போட்டு இருக்கின்றார்கள். அதுக்கு பக்கத்தில் ஒரு குப்பை தொட்டி,எதிரில் ஒரு பிரைவேட் ஆட்டோ...போகும் வாகனங்கள் ஸ்லோவாக போய் கொண்டு இருக்க.. அந்த பெண் வீட்டுக்கு வரமாட்டேன் என்று கதறுகின்றது... நாங்கள் எதுவும் செய்யமாட்டேன் என்று உறவுகள் சொல்லுகின்றன... தலைகலைந்து இருக்கின்றது. எப்படியும் அடித்து இருப்பார்கள்...காரணம் தெரியவில்லை.அந்த கப்பை தொட்டியில் ஒண்டிக்கொண்டு வரமாட்டேன் என்று அடம் பிடித்து கொண்டு இருந்தது. நிறையபேர் நின்று கொண்டு என்னகாரணம் என்று அறியும் ஆர்வத்தினால் டிராபிக் வேகத்தை அந்த இடத்தில் மட்டுபடுத்தி இருந்தார்கள். நான் பதிவர் ஜெட்லி கல்யாணத்துக்கு வேகமாக போய் கொண்டு இருந்த காரணத்தால் நான் நிற்க்கவில்லை. நடு ரோட்டில் ஜீன்ஸ் ஷைர்ட் போட்டு உதை வாங்கியபெண்ணை வீட்டுக்கு அழைத்து போய் உச்சிமுகரபோவதில்லை என்று மட்டும் எனக்கு நன்றாக தெரிந்தது... இரவு பண்ணிரண்டுக்கு அந்த பெண்உதடு வீங்கிய நிலையில் தூங்கி இருப்பாளா? அல்லது அடித்துக்கொண்டு இருப்பார்களா? என்று யோசிக்க தூக்கம் ஒரு மணிநேரம் தள்ளி போனது.
==================
ஆச்சர்யபடுத்திய நபர்....
சினிமாவில் உதவி ஒளிபதிவாளராக பணி புரிந்து கொண்டு இருக்கும் பார்த்தீபன் என்ற நண்பர் என்னிடத்தில் தொலைபேசியில் பேசினார்..எனது பிளாக்கை தொடர்ந்து வாசிப்பதாகவும் நான் எழுதும் உலக படங்களுக்கு அவர் ரசிகன் என்றும் தன்னை அறிமுகபடுத்திக்கொண்டார்.மிக முக்கியமாக மைனா பிடம் விமர்சனத்தை படித்ததும் என்னிடம் பேச வேண்டும் என்று தோன்றியதால் பேசினேன் என்று சொன்னார். நேரில் சந்தித்தேன்.. மாம்பலத்தின் நம்பிக்கையை மட்டும் நெஞ்சில் சுமந்து கொண்டு வாழ்க்கை வாழும் மேன்ஷன் வாழ்க்கை..ஷுட்டிங் இல்லாத பலநாட்களில் பசிக்கொடுமை.இந்த கஷ்ட ஜீவனத்தில் வாழும் ஒருவர் ஆயிரத்துக்கு மேல் உலக படங்களை சேகரித்து வைத்து இருப்பதும் அதனை மிக முறையாக பராமரிப்பதும்..
எல்லாபடத்துக்கும் எண் கொடுத்து அதனைவரிசைபடுத்தி பாக்சில் போட்டு வைத்து இருப்பதும்... யாருக்கும் கொடுக்காமல் அதனை பொக்கிஷம் போல பாதுகாப்பதும் சினிமாவின் மீதான அந்த காதலுக்கு நான் தலைவணங்குகின்றேன்..பதிவுலகம் எனக்கு சினிமா பற்றி பேச ஒரு புதிய நட்பு சென்னையில் கிடைக்க வைத்து இருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி. ஹாலிவுட் பாலா எழுதாதும் அவருக்கு மிகப்பெரிய வருத்தம். மற்ற எல்லா சினிமா விமர்சனம் எழுதும் எல்லா வலையும் நண்ப்ர் படிக்கின்றார்.அங்கே வெண்ணிறஇரவுகள் கார்த்திக்கையும் சந்தித்தேன்.இரவு நெடுநேரம்பேசிக்கொண்டு இருந்தேன்.
===================
இந்தவார கடிதம்..
டியர் ஜாக்கி,
சிலரால் மட்டுமே வாழ்கையை கொண்டாட்டமாகவும்,மகிழ்ச்சி நிரம்பியதாகவும் பார்க்க முடியும் அப்படி பார்க்கும் சிலரில் நீங்கள் ஒருவர், இதுவரை நீங்கள் எழுதிய எந்த பதிவிலும் உங்களின் சுயபுலம்பல்கள் இருந்தது இல்லை. சென்னையில் இருக்கும் சிலர் உங்களை கிண்டல் செய்வதாக சொல்லியிருந்தீர்கள் அவர்களுக்கு நிச்சயம் உங்களை பார்த்து பொறாமையாகதான் இருக்கும் என்று
நினைக்கிறேன். இவர்களை எல்லாம் உங்களுக்கு பிடிச்ச ஹீரோவான ஜாக்கி ஜான் மாதிரி உதைத்துவிட்டு உங்கள் பயணத்தை எந்த
தடையும் இல்லாமல் தொடருங்கள். நீங்கள் எத்தனை பேர் மனதில் இடம் பிடித்திருக்கிறீர்கள் என்பதுக்கு உங்களுக்கு வரும் வாசகர் கடிதங்களே போதும் அவர்கள் முகத்தில் கரியை பூச, வீடு குடிபோகும் ஒருவர் உங்களுக்கு கையால் எழுதிய இன்விட்டேசன் பார்த்தாவது
உங்களை கிண்டல் செய்கிறவர்கள் திருந்தவேண்டும். அதுக்காக நீங்கள் உங்களுக்கு வரும் வாசகர், ரசிகர்கள் கடிதங்களை தனிபதிவகவே
போடுங்கள், அவர்கள் பொறாமையில் வெந்து சாகட்டும்
மறந்துவிட்டேன் அலெக்ஸா ரேட்டிங்கில் இடம் பிடித்ததுக்கு வாழ்த்துக்கள், சென்னை வரும் பொழுது உங்களுக்கு கால் செய்கிறேன்
ட்ரீட் கொடுக்கனும்.
இப்படிக்கு
Anitha raj
=====================
நன்றி அனிதாராஜ் மிக்க நன்றி... நேரில் வரும் போது டீரீட் கொடுக்கின்றேன்.மிக்க நன்றி என் மீதான மரியாதைக்கு..
=======
பிலாசபி பாண்டி
மகன் அழவில்லையே என்று அம்மா வாழ்வில் ஒரே ஒரு முறைமட்டும் கவலைபடுவாள்.. அது தனதுகுழந்தையின் பிறப்பின் போது மட்டும்.
================
நான்வெஜ் 18+
ஜோக்..1
உலகத்துல செக்சில் வீக்கான டென்மார்க் பொம்பளையின் பக்கத்து வீட்டுக்கு ஒரு எழு அண்ணன் தம்பிங்க குடித்தனம் வந்தாங்க..அந்த எழு பேருடனும் அந்த பெண்மணி தொடர்பு வைச்சி இருந்தாங்க. நைட்டு பத்து மணிக்கு அந்தம்மா வீட்டுக்கு பின்னாடி இருந்த குதிரைலாயத்தில கரெக்டா பத்து மணிக்கு ஜலபுலசங்ஸ் நடக்கும். எழு நாளைக்கு எழு பேர்..வார இறுதியில் யார் பெஸ்ட்டோ அவுங்களுக்கு ஒரு லட்சம் கேஷ் கொடுப்பாங்க... அதனாலும் எவ்வளவு ஜுரமா இருந்ததாலும் அந்த அண்ணன் தம்பிங்க எழு பேரும் தீயா வேலை செஞ்சாங்க..ஒருநாள் வெள்ளிக்கிழமை முறை வருபவனுக்கு வெளியூர்ல வேலை.. அவன் அன்னைக்கு லீவ்...இந்த பெண்மணி பத்துமணிக்கு குதிரைலாயித்துக்கு போயி வெயிட் பண்ணிச்சி,யாரும் வரலைஅது வச்சி இருந்த வீட்டுசாவி கீழே விழுவும் அதை எடுக்க குனியும் போது கரண்ட் போகவும் சரியா இருந்துச்சி....
அந்த லாயித்துல இருந்த ஒரு வெறிபிடிச்ச குதிரை கேப்ல கெடாவெட்ட...வார இறுதியில் அந்த பெண்மணி வெள்ளிகிழமை
லாயத்துக்கு தொடர்ந்து வருபவனுக்கு 10லட்சம் கேஷ் கொடுத்துச்சி அவனுக்கு ஆச்சர்யம் நான் அன்னைக்கு வரலை என்றான்..விஷயம் அந்த லேடிக்கு புரிஞ்சிடுச்சி... அந்த பெண்மணி சட்டென்று அந்த பத்து லட்சம் செக் வாங்கிக்குனு அந்த எழு பேருக்கும் ஆளுக்கு ஒரு லட்சம் கேஷ் கொடுத்து இனி என் வீட்டுபக்கமும் லாயத்துபக்கமும் தலைவச்சிபடுக்காதிங்கன்னு.................
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....
குறிப்பு.. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்.
வழக்கம்போலவே அசத்தல் அண்ணே,
ReplyDelete//ஆனந்த விகடனில் முதன் முறையாக எனது பெயர் தாங்கிய செய்தி வந்து இருக்கின்றது..டுவிட்டரில் ஸ்பெக்ட்ரம் பற்றி எழுதிய கமென்ட்டை பப்ளிஷ் செய்து இருக்கின்றார்கள்//
வாழ்த்துக்கள்
உங்கள் பொன்னான பணி மென்மேலும் சிறக்க வேண்டும்
நன்றி
நட்புடன்
மாணவன்
மயிலை பறக்கும் ரயில் நிலையம் photo supereb
ReplyDeleteவாழ்த்துக்கள் தல! :)
ReplyDelete//ஆனந்த விகடனில் முதன் முறையாக எனது பெயர் தாங்கிய செய்தி வந்து இருக்கின்றது..டுவிட்டரில் ஸ்பெக்ட்ரம் பற்றி எழுதிய கமென்ட்டை பப்ளிஷ் செய்து இருக்கின்றார்கள்//
ReplyDeleteவாழ்த்துக்கள்..விரைவில் விகடனில் கதை , கட்டுரை, விமர்சனம் என எழுத வாழ்த்துக்கள்!!!
மழை - வரும் எண்டா வராது, வராது எண்டா வரும், அது தான் வானிலை அறிக்கை,
ReplyDeleteபுகைப்படம் அருமை
ReplyDeleteவாழ்த்துக்கள்..விரைவில் விகடனில் கதை , கட்டுரை, விமர்சனம் என எழுத வாழ்த்துக்கள்.
ReplyDeleteபுகைப்படம் அருமை.
ஆனந்தவிகடன், புதிய ஒளிப்பதிவாள நண்பர்.. வாழ்த்துகள் ஜாக்கி அண்ணே. ஊருக்கு வந்துருந்தப்ப எனக்கு ட்ரீட் தரலையே? பரவாயில்லை, அடுத்த தடவை அருணால பட்டறையப் போட்டுரலாம் தல.
ReplyDeleteபாண்ட்ஸ் பவுடர் டிசைன் - பிப்ரவரி 14 ஆ?
ReplyDeletenonveg joke சுஜாதா வின் MEXICO சலவைக்காரி ஜோக் கின் சாயல். BUT எல்லாம் நல்லா இருக்கு
ReplyDelete2ஜி அலைவரிசை ஊழல் செய்தி நாடு முழுவதும் ஜுரம் - உடம்பெல்லாம் கூசுது சென்றல் மினிஸ்டர் ஆவதுக்கு எவ்வளவு பேரமா?எவன் பணத்தை எவன் தின்பது - அட பாவிகளா.
ReplyDeleteவாழ்த்துக்கள் ஆ.வி.யில் உங்கள் பெயர் வந்தமைக்கு- தொடரட்டும் உங்கள் பணி.
நம்ம ஊர் ரயில்வே நிலையமா? நல்லா இருக்கட்டும். படத்தை பார்த்து விட்டு ஏதோ வெளி நாடு என்று நினைத்தேன்.
மழை பெய்தாலும் குற்றம் பெய்யவில்லை என்ராலும் புலம்பல் என்ன செய்ய?
ஸ்பெக்ட்ரம் பற்றி தாங்கள் எழுதிய ட்விட்டர் கமென்ட் ஆனந்த விகடனில் பதிப்பானதற்க்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள். வழக்கம் போல் நன்றாக உள்ளது,
ReplyDeleteyou are copying cablesankars kothu parotta.each everything you write in sandwich replica of cable. i know you dont publish this comment. but you have to accept see u started posting songs. thanks cable for his successful concept of writing.kudos
ReplyDeleteDear Mr. Jackie,
ReplyDeleteMy Hearty Wishes....
Regards,
Vijay
Muscat.
//ஆனந்த விகடனில் முதன் முறையாக எனது பெயர் தாங்கிய செய்தி வந்து இருக்கின்றது.//விகடன் செய்தி வெள்ளி அன்றே பார்த்து விட்டேன். உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நினைத்து பின்னூட்டம் இடவில்லை. இது லேட் ஆனாலும் லேட்டஸ்ட் . வாழ்த்துக்கள்...
ReplyDelete//மகன் அழவில்லையே என்று அம்மா வாழ்வில் ஒரே ஒரு முறைமட்டும் கவலைபடுவாள்.. அது
ReplyDeleteதனதுகுழந்தையின் பிறப்பின் போது மட்டும்.//நிதர்சனம்.. ஒரு வலி நீக்கு மருத்துவராக நான் தினம் பலமுறை காணும் ஒரு நிகழ்வு ....
//மகன் அழவில்லையே என்று அம்மா வாழ்வில் ஒரே ஒரு முறைமட்டும் கவலைபடுவாள்.. அது தனதுகுழந்தையின் பிறப்பின் போது மட்டும்//.நிதர்சனம்.. ஒரு வலி நீக்கு மருத்துவராக(anesthetist) நான் தினம் பலமுறை காணும் ஒரு நிகழ்வு ....
ReplyDeleteஅதே பாண்ட்ஸ் பவுடர் டிசைனை வேறு ஒரு தமிழ்திரைப்பட பாடலில் பயண்படுத்தி இருப்பார்கள்.. எந்த படம் என்று யாராவது சொல்ல முடியுமா? எனக்கு தெரியும்..
ReplyDelete~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~`
விடை : Mr.ரோமியோ .. தண்ணீரை காதலிக்கும் பாடல் ... சரியா தவறா ??
// சென்னை மாநகரத்தின் முக்கிய இடம் மவுன்ட் ரோடு வெலிங்டன் பிளாசா எதிரில் சாக்கடையோ அல்லது குடிநீருக்கு தோண்டிய குழியை சரிபடுத்தி இன்னமும் போக்குவரத்துக்கு திறந்துவிடாமல் வைத்து இருக்கின்றது //
ReplyDeleteநானும் தினமும் அந்த இடத்தை கடந்துதான் செல்கிறேன்... விரைவில் நடவடிக்கை எடுத்தார்கள் என்றால் நல்லது...
இப்போது உங்கள் பதிவுகள் Dashboard ல் வர ஆரம்பித்துவிட்டன...
enakkum dash boards problem...
ReplyDeleteமம்தா மோகன் தாசுக்கு கேன்சராமே உண்மையா ?
ReplyDeleteபின்னுட்டம் இட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.
ReplyDeleteமிகச்சரியா சொன்னிங்க சதிஷ் அந்த படம் மிஸ்டர் ரோமியோ...
ReplyDeleteமம்தாவுக்கு கேன்சர் என்பது உண்மையே.. இருந்தாலும் துணிந்து போராடுகின்றார்கள்.விரைவில் குணம் அடைய இயைவனை வேண்டுகின்றேன்.
ReplyDeleteஅன்பின் அடங்காபிடாரிக்கு..
ReplyDeleteகற்றதும் பெற்றதும் சுஜாதா எழுதிய துணுக்கு தோரணங்களை வலைஉலகில் பலர் பல பெயர்வைத்து எழுதினார்கள்.. அதில் கேபிளும் எழுதினார்.
இது போல ஒரு விஷயத்தை எழுத மணிஜி ஆபிசில் நான் கேபிள் மற்றும் முரளி கண்ணன் பேசும் போது இந்த தலைப்பை செலக்ட் செய்து கொடுத்தது முரளிகண்ணன்.
கேபிளின் ஸ்டைலுக்கும் எனக்கு நிறைய வித்யாசங்கள் இருக்கின்றது. கேபிள் போல் நான் எழுதி இருந்தால் எனது சான்ட்வெஜ் ஜெயமொகன் குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு வளர்ந்து இருக்காது...
valthukkal
ReplyDelete