இனிதே நிறைவு பெற்ற சென்னை 8வது உலகதிரைப்படவிழா..



நேற்றோடு  சென்னை உலக திரைப்பட விழா நிறைவு பெற்றது. ஒன்பது நாட்கள் நடந்த இந்த திருவிழாவில் 40 நாடுகளில் இருந்து 130க்கு மேற்ப்பட்ட படங்கள் திரையிடப்பட்டன...



வழக்கத்துக்கு மாறாக இந்த முறை நல்ல கூட்டம்... காரணம் நிறைய விஷுவல் கம்யூனிகேசன் மாணவர்கள் வந்து இருந்தார்கள்.
தினமும் காலை பத்து மணிக்கு 4 தியேட்டர்களில் 5  திரைப்படங்கள் வீதம் படங்கள் திரையிட ப்பட்டன ஒரு நாளைக்கு 20பது படங்கள்.,.. திரையிடப்பட்டன  கையில் இருக்கும் குறிப்பு புத்தகத்தில் கதை படித்து விட்டு விருப்பம் உள்ளபடத்தினை பார்த்துக்கொள்ளலாம்...

பச்சைகலர் வாலன்டியர்ஸ்களில் சில அழகு கிளிகள் நிறைவு விழாவில்  புடவையில்  வந்து அசத்தினார்கள்... அவர்களிடம் பேசும் போதுதான் அவர்களுக்கு தமிழ் தெரியும் என்பதே தெரியும்... நன்றாகவே தமிழ் பேசுகின்றார்கள்.. ஆனால்  அதிகமாய் பீட்டர்  விட்டு கிலி ஏற்படுத்திக்கொண்டு இருந்தார்கள்..

படத்தை பார்த்து விமர்சனம் எழுத சொன்னார்கள் அதிகம் எழுதும்விமர்சனத்துக்கு பரிசு என்றார்கள்... வேறு எதுவும் சொல்லவில்லை.. தமிழில் அடித்து அனுப்பினால் தமிழ் பாண்ட் இல்லை.. அடுத்த முறை போட்டியில் தமிழை சேர்க்கின்றோம் என்று சொன்னார்கள்...

நான் இங்கிலாந்தில் நடக்கும் பிலிம் பெஸ்ட்டிவலோ என்று நினைத்துக்கொண்டேன்... இருப்பினும் 32 படங்கள் விமர்சனம் எழுதி இருந்தேன்...மைக்கில் எனது இயற்பெயரான தனசேகரன்  கொளப்பாக்கம் என்று அறிவித்தார்கள்..நானும் எழுதி இருக்கின்றேன் என்று சொன்னார்கள்...38 படங்கள் எழுதிய வேளச்சேரி நபர் அந்த பரிசை வாங்கி கொண்டார்....

22ம் தேதி மதியம் விமர்சனங்கள் அனுப்ப கடைசி என்று சுகாசினி அறிவித்தார்..... விழாக்குழுவினருக்கு போன் செய்தால் இறுதி நாள் வரை அனுப்பலாம் என்று சொன்னார்கள்.. எப்படியும் சொதப்புவார்கள் என்பதால் நான் போதும் என்று நிறுத்திக்கொண்டேன்...இதுக்கு இரண்டு இரவுகள் உட்கார்ந்து டைப்பியததான் மிச்சம்... மேடையில் பேரையாவது  அறிவித்தார்களே என்று ஒரு சந்தோஷம்.....அப்புட்டுதான்..


அந்த 35 படங்கள் 100 வார்த்தைக்கு மிகாமல் அடிக்கவே இரண்டு முழு இரவுகள்  எடுத்துக்கொண்டது... எப்படியும் சொதப்புவார்கள் என்பதால் அதில் பெரிதாய் நம்பிக்கைவைக்க வில்லை. தமிழ் பாண்ட் இல்லை என்றதும் நான் வெறுத்து போய்விட்டடேன்... அதன்பிறகு அதை அப்படியே காப்பி செய்து ஜிமெயிலில் அனுப்பி  வைத்தேன்...

எந்த நேரத்திலும் போய் எந்த படத்தையும் பார்க்கலாம் என்று இருந்து இத்தனை வருட வழக்கத்தை இந்த முறை மாற்றினார்கள்... அதாவது படம் போட்டு  அரைமணிநேரம் கழித்து வந்தால் உள்ளே அனுமதிஇல்லை என்றார்கள்..

அந்த சட்டத்தை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை.. எல்லோரிடமும் எதிர்ப்புகுரல் வர படம் போட்டு சைடுவழியாக வரலாம் என்று அறிவிக்கபட்டது..விழாகுழுவினர் சொன்ன காரணம்.. படம் பார்ப்பவர்களை டிஸ்டப் செய்வதால் இந்த முறை என்று சொன்னார்கள். சரி நாலு தியேட்டர் படம் புடிக்கவில்லை என்றால் அடுத்த படத்தை போய்  பார்ப்பது பெஸ்ட்டிவல்லில் இயல்பு... அப்படி இருக்கையில் இந்தரூல் எல்லோர் எதிர்ப்பையும் சம்பாதித்து என்று சொல்லாம்,...

மோபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யுங்கள் என்று தொடர்ந்து அறிவிப்பு செய்தார்களே ஒழிய போனை சைலன்ட் மோடில் போடுங்கள் என்று யாரும் சொல்லவில்லை... சினிமாவைவிட வாழ்க்கை முக்கியம்... அது அவர்களுக்கு புரிய வில்லை..எதாவது ஒரு அவசர தகைவலை தெரிவிக்க செல்போன் அவசியம் முக்கிய காலாக இருந்தால் வெளியே போய் பேசட்டும்...செல்போன் சைவன்ட் மோடில் போட வேண்டும் என்று  சொல்லி இருக்கலாம்... ஏனென்றால் எல்லோரும் ஏதோ ஒரு வேலை விசயமாகவே வந்து இருக்கின்றோம் கிடைத்த கேப்பில் படம் பார்க்க பலர் வந்து இருக்கின்றார்கள்.. சட்டென பாஸ் போன் செய்தாலோ அல்லது-மனைவி உலகபடம்னு போய் செல்போன் ஆப் செஞ்சிட்டு யார் கூட ஊர் சுத்துன என்று கேட்கும் மனைவிகளும்  உண்டு...

சனி --ஞாயிறு படம் பார்க்க வந்தவாகள் எல்லாம்எமாந்து போனார்கள்.. நல்ல படமே திரையிடபடவில்லை.. எல்லாம் இந்தியன் பனோராமா படங்கள்...


பார்வையாளர்கள் பலர் தெரித்து ஓடிய படம் டியாகோ என்ற சைனிஸ் படம் மிக கேவலமாக இருந்தது.. நல்ல திரைபடங்களை ரிப்பிட் செய்யாமல் அந்த படத்தை எல்லாம் ரிப்பிட் செய்து பார்வையாளர்கள் அதிருப்தியை சம்பாதித்துக்கொண்டார்கள்...

நேற்று நாள் எந்த படமும் சரியில்லை என்பதால் மன்மதன் அம்பு போய்விட்டு நானும் சிங்கை  பிரபாகரும் தியேட்டர் வர நிறைவு விழாவில் ஜனகனமண பாடிக்கொண்டு இருந்தார்கள்.



தமிழ் திரைபடங்களுக்கு விருது  போட்டியில் முதல் பரிசு அங்காடி தெருவும் இரண்டாம்பரிசு களவானி  திரைப்படமும் பரிசு பெற்றது...

நிறைய வேலைகள் கலந்து கொள்வதே கடினம் என்று நினைத்து இருந்தேன்...பராவாயில்லை அப்படி இப்படி என்று ஒரு முப்பது படம் தேத்திவிட்டேன்.. எழுதுவோம்  நேரம் கிடைக்கும் போது....

என் வீட்டில் இருந்து ராயபேட்டை உட்லண்ட்ஸ் சரியாக 20 கீலோமீட்டர் தினம் வந்து போக 40கீலோமீட்டர்...மூன்று வேளையும் ஹோட்டலில்தான்  உணவு...பர்ஸ் பழுத்துவிட்டது.. ஆனால் போன திரைப்படவிழா போல நெகிழ்ச்சியான படங்கள் இந்த முறை விரல் விட்டு எண்ணிவிடலாம்..
ஒரு நாளைக்கு 5 படம் படம் பார்த்து படம் பாத்தே டயர்டாகி போனேன்... இரவு விமர்சனம் வேறு எழுதி...இன்றுதான் கொஞ்சம பிரியாக உணர்கின்றேன்....

அடுத்த  டிசம்பர் மாதத்துக்கு வெயிட்டிங்... பார்ப்போம் 2011 ல் திரைபடங்களை எப்படி இருக்கின்றது என்பதை....???




விழாவில் தொடர்ந்து  எனக்கு தெரிந்து எல்லா நாளும் கலந்து கொண்ட பதிவர்கள் நானும் உண்மைதமிழன் மட்டுமே... பட்டர்பிளை சூர்யா மற்றும் பத்திரிக்கையாளர் பரகத் அலி போன்றவர்கள் தொடர்ந்து வந்தாலும் நடுவில் வேலை இருந்த காரணத்தால் தொடர்ந்து வர முடியவில்லை.. எனக்கும் வேலை இருந்த காரணத்தால் சில படங்களை மீஸ் செய்தேன்...

எல்லா விழாவிலும் ஒரு குவாட்டர்  அடித்து விட்டு   எதாவது ஒருபடம் பார்ப்பேன்.. இந்த முறை அதுக்கு வாய்ப்பே இல்லை காரணம் சரியான கம்பெனி இல்லை..எப்ப பார்த்தாலும் என் அப்பன் முருகன் கூடவே இருந்தார்..(உண்மைதமிழன்) சூர்யா நீ கூட ஏமாத்திட்டியே...??? இது உனக்கே அடுக்குமா??



இந்த விழாவில் நடந்த மிகச்சிறிந்த காமெடி என்ன தெரியுமா?-

பைரசி , திருட்டு வீசிடி  பற்றிய கலந்துரையாடல் என்று சொல்லிவிட்டு... மேடையில் இருந்த ஒரு 6 பேர் மட்டும் மைக்கை வாங்கி மாற்றி மாற்றி பேசிக்கொண்டு இருந்தார்கள் டிக்கெட் எடுத்து பார்க்கும் பார்வையாளன் கருத்து  அந்த கலந்துரையாடலில் பதியப்படவே இல்லை............ஏனேனில் படம் பார்க்க தியேட்டருக்கு வருபவனும் பைரசி சீடி வாங்குபவனும் அவனே என்பதை  அவர்கள் புரிந்து கொள்ளவில்லை..

============================

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....

குறிப்பு..

இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகடுத்துங்கள்.

பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்

8 comments:

  1. பைரசி , திருட்டு வீசிடி பற்றிய கலந்துரையாடல் என்று சொல்லிவிட்டு... மேடையில் இருந்த ஒரு 6 பேர் மட்டும் மைக்கை வாங்கி மாற்றி மாற்றி பேசிக்கொண்டு இருந்தார்கள் டிக்கெட் எடுத்து பார்க்கும் பார்வையாளன் கருத்து அந்த கலந்துரையாடலில் பதியப்படவே இல்லை............ஏனேனில் படம் பார்க்க தியேட்டருக்கு வருபவனும் பைரசி சீடி வாங்குபவனும் அவனே என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை..
    சரியான வார்த்தை''''''

    ReplyDelete
  2. அடடா பாலமுருகன் முந்தி விட்டாரே

    ReplyDelete
  3. நல்ல பதிவு..அந்த விமர்சனங்களைப் பதிவேற்றுங்கள்..

    --செங்கோவி

    ReplyDelete
  4. விழாவிற்க்கு நானும் வந்தேன். இரண்டு மூன்று பேரிடம் நீங்கள் ஜாக்கியா என்று கேட்டேன். அவர்கள் விழித்தார்கள். அவர்கள் தலை உஙகளைப்போல் இருந்தது. டி ஷர்ட் வேறு போட்டிருந்தார்கள். அடுத்தவருடம் நீங்கள் ஒளிப்பதிவு செய்த படம் இந்த விழாவில் திரையிடப்பட வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. அந்த முப்பத்திரெண்டு விமர்சனத்தையும் ஒவ்வொன்னா போடவும்..

    ReplyDelete
  6. அந்த முப்பத்திரெண்டு விமர்சனத்தையும் ஒவ்வொன்னா போடவும்"

    வழி மொழிகிறேன்

    ReplyDelete
  7. நல்ல பதிவு.
    விமர்சனங்களைப் பதிவேற்றுங்கள்.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner