மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/26•12•2010)

ஆல்பம்..

இன்னும் 100 நாட்களில்  சென்னை சாலைகள் சரிசெய்யபடும்... அதுவும் மழைபெய்யவில்லை என்றால் சொன்ன நேரத்துக்கு சரி செய்து விடுவோம் என்று துணைமுதல்வர் சொல்லி இருக்கின்றார்.. பார்ப்போம்.. நல்ல சாலை வசதி சென்னைக்கு எப்போது வாய்க்குமோ? பகவானுக்கே  வெளிச்சம்..
===========

இன்று ஈரோட்டில் இருப்பேன் ஈரோடு வலைபதிவர் குழும சந்திப்புக்கு போகின்றேன்....அதனால் இதனை நேற்று மாலையே எழுதி விட்டேன்...என்ன ஒரு டெடிக்கேஷன் என்று முனுகுவது  எனக்கு  கேட்கின்றது.. அதனால் மினி சாண்ட்வெஜ் மினி போலவே இருக்கும்... நேரம் இல்லை..
==============


======================
மிக்சர்..





சென்னைக்கு  நகரில்  மேலும் 5 திரையரங்குடன் கூடிய வணிக வளாகம் வரப்போகின்றது.. திரையரங்கின் பெயர் பேம் சினிமா..எந்த இடம் தெரியுமா ??விருகம்பாக்கத்தில்  முன்பு நேஷனல் தியேட்டர் இருந்த இடத்தில்தான்.. இந்த வணிகவளாகம் மற்றும் சினிமா அரங்கம் வர இருக்கின்றது... இப்போதுதான் நான் நேஷனல் தியேட்டரில் முத்தழகுவை பார்த்து போல் இருக்கின்றது... கடைசி படம் பருத்தி வீரன் என்று நினைக்கின்றேன்.







5 திரையரங்கம்.. 1319 இருக்கை வசதி... என்று அசத்த இருந்தாலும் எற்க்கனவே  குறுகிய சாலையில் இருக்கும் இந்த இடத்தில் பொதுமக்கள் நிறைய பேர் வந்து போனால் நிச்சயம் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும். சாலையை அகலபடுத்தினால் மட்டுமே இதுக்கு தீர்வாகும்- அநேகமாக பொங்கலுக்கு திறந்து விடுவார்கள் என்று நினைக்கின்றேன்..
=============


 இந்தவார  பதிவர்கள் சந்திப்பு...


சிங்கை பிரபாகர்.. பார்த்து சில நிமிடங்களில் மனதில் பச்சக் என்று ஒட்டிக்கொண்ட தம்பி... ரொம்ப குறைவு பார்த்துவுடன் நிறைய பேசுகின்றவர்கள்... நான் இப்போதுதான் முதல் முறையாக பார்க்கின்றேன்.. அவரது தளத்துக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறையோ  போய் வாசித்து இருக்கின்றேன்...இரண்டு படங்கள் அவனோடு பார்த்தும் நிறைய  நேரங்கள் அவனோடு செலவிட்டதும்.. எனக்கு நிறைவாய் இருந்தது...


==========
வெட்டிக்காடு ரவிச்சந்திரன்.....




எனக்கு ஒரு டாக்டர் ரொம்ப பழக்கம் அவர் வீட்டு நிகழ்ச்சி  ஒன்றுக்கு போக அங்கு இருக்கும் போது சிங்கை ரவி எனக்கு போன் செய்தார்.. நான் அவரிடம் பேசியதை வைத்து என்னை முன்னே பின்னே தெரியாத ராஜன் என்பவர் தன்னை அறிமுகபடுத்திக்கொண்டு என்னை நான் சிங்கை ரவியின் நண்பர் என்று தன்னை அறிமுகபடுத்திக்கொண்டார்... நான் ஈரோடுவலைபதிவர் குழுமம் நிகழ்ச்சிக்கு போகின்றேன் என்று போனில்  சொன்னதை வைத்து என்னை கவனித்து நட்பு பாராட்டினார்.... பிறகு அவரோடு பேசிவிட்டு நண்பர் ரவியை  சந்தித்தேன்... என்னை விட மிக இளமையாக   இருந்தார்.. செம ஸ்மார்ட்.. அவரிடம் நான்  பேசி போது என்  உடன் பிறந்தவரிடம் பேசியது போல் உணர்ந்தேன். என் வாழ்க்கை அடுத்த கட்ட நகர்வு குறித்து நிறைய விசாரித்து தெரிந்து நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக பேசினார்... நன்றி ரவி.. மிக நெகிழ்ச்சியான சந்திப்பு...
==================
பார்த்ததில் பிடித்தது...
சென்னையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இரவு நேரத்தில் கிருஸ்மஸ் ஸ்டார்ஸ் மினுக்குவது நன்றாக இருக்கின்றது...
=========

இந்தவார கடிதம்..


hi Jackiesekar,

உங்களது பதிவுகளை தொடர்ந்தும் படித்து வருகிறேன்.... இருந்தும் இதுவே என் முதல் பின்னுாட்டம்..
அடிக்கடி பின்னூட்டம் இட முடியாமைக்கு வருந்துகிறேன்...

எழுதும் திரைப்பட விமர்சனங்கள் மிக விமர்சனங்கள் சிறப்பாய் உள்ளது...

சில சமயங்களில் படத்தை விட நன்றாக  இருப்பது போல் உணர்கிறேன்..... ;)

தொடர்ந்து எழுதுங்கள்....

:)


Thinks Why Not - Wonders How 


=================
பிலாசபி பாண்டி












நாளை என்பது தினமும் வரும்.. ஆனால் இன்றைய தினம் இன்றைக்கு மட்டுமே... வாழ்ந்துவிடுங்கள்...
=============
நான்வெஜ் 18+

ஜோக்..1

ரெண்டு பொண்ணுங்க 110வது மாடியில் இருக்கும் அலுவலகத்துக்கு  லிப்ட்ல போனாங்க... ஒருத்தி சொன்னா இந்த ஆம்பளைங்க சுத்த மோசம்... எங்க செக்ஸ் வச்சிக்கினும்னே தெரியாது.. பாரு இந்த லிப்ட்ல கூட வச்சிகிட்டு இருந்து இருக்காங்க... ஒரே செமன் ஸ்மேல் அடிக்குது..எதுக்கு பாவம் ஆம்பளைங்களை திட்டுற.. நான்தான் இப்ப ஏப்பம் விட்டேன் என்று சொன்னாள்..


=================
ஜாக்கிசேகர்....

குறிப்பு..

இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகடுத்துங்கள்.

பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்.


.

10 comments:

  1. சாலைகளை சரிபண்ணிடுவாங்கண்ணே...தேர்தல் வருதுல்லே.

    ----செங்கோவி
    வைகோவும் மதிமுகவும் (தேர்தல் ஸ்பெஷல்)

    ReplyDelete
  2. Sorry Anna.Nadu raathiriyil phone seidhu ungalai distrub pannitenn..konchan latta vandhen, adhuvum ennaikku than time kidathadhu...eppo than unga padhivai padidhenn..superr...thanks by Senthil from U.A.E.

    ReplyDelete
  3. சங்கமம் வருகைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் ஜாக்கி.

    ReplyDelete
  4. பேம் சினிமா குறித்த செய்தி மகிழ்ச்சியை தருகிறது...

    ReplyDelete
  5. vazakkam pola arumai, kuRaivaaka iruwthaalum wiRaivu!!

    ReplyDelete
  6. மூன்றாவது பின்னூட்டம் இட்டிருக்கும் உண்மைத்தமிழன் நான் இல்லை..!

    ஆரம்பிச்சாட்டாங்கப்பா ஆட்டத்தை..!

    ReplyDelete
  7. அண்ணே திஸ் ஈஸ் டூமச். அவர் வெறும் உண்மை தமிழன்.

    ReplyDelete
  8. Cable Sankar:இந்த வார தத்துவம்
    நாளை என்பது தினமும் வரும், ஆனால் இன்றைய நாள் இன்று மட்டுமே, அதனால் இன்றைய நாலை உபயோகி..

    Jackie Sekar:பிலாசபி பாண்டி
    நாளை என்பது தினமும் வரும்.. ஆனால் இன்றைய தினம் இன்றைக்கு மட்டுமே... வாழ்ந்துவிடுங்கள்...

    Doss:
    இதன் மூலம் உங்கள் இருவரின் ஒற்றுமை உணர்வு தெரிகிறது...
    ஹா ஹா எப்பூடி?

    ReplyDelete
  9. பின்னுட்டம் இட்டு தங்கள் கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner