KAAVIYATHALAIVAN- 2014 -காவியத்தலைவன் விமர்சனம்.


உண்மைக்கு மிக நெருக்காமான கதைகளே ஜெயித்து இருக்கின்றன... எழுத்தாளர் ஜெயமோகனோட பேசிக்கொண்டு இருக்கும் போது கிட்டப்பா , கேபி சுந்தராம்பாள் கதை பேச்சுவாக்கில் வர.... காவியத்தலைவன் பிறந்ததாக  முன்னர்  வசந்தபாலன் ஒரு பேட்டியில் சொல்லி இருந்தார். 



ஜூராசிக் பார்க் திரைப்படம் ஒரு பிளாஷ் பேக்.



அந்த திரைப்படம் 1993 ஆண்டு வந்தது... அந்த திரைப்படம் தமிழ் நாட்டில் மட்டுமல்ல... உலக  நாடுகள்  அத்தனையிலும் அதிர்வலைகளை  அது உண்டு பண்ணியது என்றே சொல்ல  வேண்டும்...

 பின்னே?  பல்லாயிரக்கணக்கான  வருடங்களுக்கு முன் நாம் வாழும் பூமி பந்தில்  வாழ்ந்த உயிரினம்  கண் முன்னே நிற்பது என்பது சாத்தியாமா? அது எப்படி இருக்கும் ??? அது என்ன செய்யும்..??? போன்ற வினாக்களுக்கு  அந்த திரைப்படம்  பதில் சொல்லியது…  அது ஏதோ ஏப்பைக்கு சோப்பையாக வந்து சென்றால் கூட பரவாயில்லை… அது மனித இனத்தை பந்தாடியது… அதனாலே அந்த திரைப்படம் பார்த்து  மிரண்டு போனதும் உண்டு.


இரண்டு விபத்துகள்.



 நேற்று இரவு பாரிஸ் வரை ஒரு வேலை…. 


மன்ரோ சிலை வழியாக பாரிஸ் சென்று விட்டு கடற்கரை சாலை , லைட் ஹவுஸ் வழியாக வீடு திரும்ப திட்டம்.

Armour of god-1986/Thirudan Police-2014/naigal jakkirathai-2014/ ஆர்மா ஆப் காட், திருடன் போலிஸ், நாய்கள் ஜாக்கிரதை





ஆர்மர் ஆப் காட்...  இந்த படத்துக்கு ஏற்கனவே விமர்சனம் எழுதி  விட்டாலும் வீடியோ பிளாக் பண்ணும் போது என்னை மிகவும் கவர்ந்த படத்தைதான் முதலில் செய்ய வேண்டும் என்று  நினைத்து இருந்தேன்... அதனால் அதை முதல் திரைப்படமா  செய்து இருக்கின்றேன்..

முத்தப் போராட்டம்…..



மடியில் உட்கார்ந்துக்கொண்டு விளையாட்டின் ஊடே…ஐ லவ் யூப்பா என்று சொல்லியபடி யாழினி எனக்கு உதட்டில் முத்தமிட்டால்…

ஹே..???.-! யார் இப்படி முத்தா கொடுத்தா உனக்கு?? என்றேன்..
 யாருமில்லைப்பா…

குட்.. இப்படி முத்தா  கொடுக்க கூடாதுடா செல்லம்… வாய்ல இருக்கற ஜெம்ஸ் ஸ்பிரட் ஆவும் இல்லை அதனால இது வேணாம்டா….

 சரிப்பா.


எனது முதல் முயற்சி வீடியோ பிளாகிங். நண்பர்களின் ஆதரவு தேவை.



ஏன் ஜாக்கி சார் இந்த வேண்டாத வேலை உங்களுக்கு?


இதை விட எழுதிடுங்க... கொடுமையா இருக்கு...

நீ எழுதறதே படிக்கறதே எங்க விதின்னு நினைச்சிக்கிட்டு இருந்த இதுல இது வேறயா?
ஏன்யா படுத்தி எடுக்கற..??

என்பது போன்ற விம்ர்சனங்கள் வரலாம்.... ஆனால்  எனக்கு  தோன்றியைதை இன்றுவரை செய்து இருக்கின்றேன்...

நான் எடுத்து  வைத்த எந்த முதல் முயற்சிக்கும் முதலில் எதிர்ப்பையும்  அவ நம்பிக்கையான பேச்சுக்களைதான் அதிகம் சந்தித்து இருக்கின்றேன்... ஆனால் அவைகளை தகர்த்து முன்னேறிய  போதுதான் நிறைய சாதிக்க முடிந்து இருக்கின்றது..
பத்தாம் வகுப்பு படிக்கும் போது பள்ளியில் ஒரு கதையை சொன்னால் லஞ்சு பிரேக்கில்  என்னை சுற்றி 20 பேர் இருப்பார்கள்.. 

வலி பொதுவானது




யாழினிக்கு சாப்பாடு ஊட்டிவிட்டு ...  வீட்டை கூட்டி பெருக்கி,சமையல் கட்டில் இருந்து வெளியே வந்து சொன்னாள்...


ஏங்க நடுமுதுகுல பயங்கர வலி...


மயிறு...அப்படி இன்னா  வெட்டி கிழக்கற வேலை  செஞ்சிட்டே  என்று கிராமத்து  மனது  மனதுக்குள்ளேயே சொல்லிக்கொண்டது....


அவள் சொன்ன வார்த்தையை காதில் வாங்கிக்கொள்ளாமல்.... கம்யூட்டரில்  ஒரு வார்த்தைக்கு அர்த்தம் தேடிக்கொண்டு இருந்தேன்..

நேற்று மாலை போன்...

Munnariyippu-2014/மலையாளம்/ஒரு பெண் பத்திரிக்கையாளரும் ஒரு கொலைக்காரனும்.



ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திரா இயக்குனரானார்
வெற்றிபெற்றார்...

ஒளிப்பதிவாளர் பிசிஸ்ரீராம் இயக்குரானார்...(குருதிப்புனல்)
வெற்றிபெற்றார்.

ஒளிப்பதிவாளர் தங்கர்பச்சான் இயக்குனரானார்
வெற்றிபெற்றார்

ஒளிப்பதிவாளர் ஜீவா  இயக்குனரானார்
வெற்றி பெற்றார்...

ஒளிப்பதிவாளர் ராஜீவ்மேனன் இயக்குனரானார்
வெற்றிபெற்றார்.

ஒளிப்பதிவாளர் விஜய்மில்டன் இயக்குனரானார்
வெற்றிபெற்றார்...

ஒளிப்பதிவாளர் கேவி ஆனந் இயக்குனரானார்
வெற்றிபெற்றார்...

ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்குரானார்
வெற்றிபெற்றார்.

THE TARGET-2014/தென் கொரியா/ 36 மணி நேர பரபரப்பு



அடித்து பிழிந்து  சக்கையாக்கி  தூர எறிந்த திரைக்கதைதான்... இருந்தாலும் சுவாரஸ்யமான சென்டிமென்ட் காட்சிகளின் காரணமாக இந்த கொரிய  திரைப்படமான டார்கெட் திரைப்படம்  இரண்டு மணி நேரம் உட்கார வைத்து சுவாரஸ்யம் கூட்டி பார்க்க வைக்கின்றது என்பேன்.


துப்பாக்கி குண்டு அடிப்பட்டு ஒருவன் உயிருக்கு  போராடிக்கொண்டு ஓட்டமாக ஓடுகின்றான்... அவனை இரண்டு பேர் துரத்துகின்றனர். அவன் மருத்துவமனையில் உயிர் பிழைக்க ஒரு நேர்மையான  டாக்டர் முயல... அவன் உயிர் பிழைக்கின்றான்...

உடல்கள்...



சென்னை அரசு பொது மருத்துவமனை மார்ச்சுவரி பக்கத்தில் சற்று நேரம் நின்றுக்கொண்டு இருந்தால் போதும்... வாழ்க்கை மீதான கேள்விகள் ஏகத்துக்கு எகிறி தினறடிக்கின்றன..

விடியற்காலை 5 மணிமுதல் மதியம் மூன்று மணி வரை அரசு மருத்துவமனையை நானும் தம்பி பாலாவும் சுற்றிக்கொண்டு வர சங்கர் மச்சியும் பதினோரு மணியளவில் எங்களோடு சேர்ந்துக்கொண்டான்...

பெரிய புடுங்கி மயிறு போல நான் தான் நான்தான்னு புதுப்பேட்டை தனுஷ் போல கத்திக்கொண்டு இருப்பவனை ஒரு மணி நேரம் அரசு மருத்துவமணை மார்ச்சுவரி பக்கம் சும்மா காத்திருக்க வைத்தால் போதும்... மனம் திடிர் என்று ஜென் நிலைக்கு செல்வது சர்வ நிச்சயம்.

ஆழ்ந்த இரங்கல்




ஆழ்ந்த இரங்கல்.

நேற்று இரவு நண்பர் புருனோவின் மனைவி மரித்த செய்தி அறிந்து துடித்து போய்விட்டேன்...

இளம் வயதில் மரணம் ரொம்பவும் கொடுமை...

புருனோ எல்லோருக்கும் நல்லது மட்டுமே செய்து இருக்கின்றார்.... பெரிய பெரிய பிரச்சனைகளில் பதிவுலகத்தினர் சந்தித்த போது ஒரு நண்பனாக தோழனாக தோள் கொடுத்து இருக்கின்றார்.


சவுஜன்யா…


சவுஜன்யா…

இந்த பெயரை  கடந்த மே  12 ஆம் வகுப்பு  ரிசல்ட்  வெளியான போது  சென்னை மாநகராட்சி பள்ளியில் படித்து 1200க்கு ஆயிரத்து 1168 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடத்தை பெற்ற மாணவி…

அப்போது இந்து இதழில் ஒரு புகைப்படம் வெளியானது… அந்த புகைப்படத்தை பார்த்து விட்டு அந்த போட்டோவை போட்டு கீழ் வருமாறு எழுதினேன்.


Shah Rukh Khan- ஷாருக்கான் /உலகின் 50 ஆளுமை மனிதர்களில் ஒருவர்.




ஷாருக்கான்...

நீங்கள் மதிய சாப்பாடு சாப்பிடுகின்றீர்கள்...  ஒரு அரைமணி நேரத்துக்கு சாப்பிடுகின்றீர்கள் என்று வைத்தக்கொள்ளுங்கள்.. அந்த அரைமணி நேரம் சாப்பாடும் நேரத்தின்  மதிப்பு  5 லட்ச ரூபாய் அளவுக்கு மதிப்பு  வாய்ந்தது என்று சொன்னால்  எப்படி இருக்கும்...? 

சும்மா தலை கிர்ர்ன்னு சுத்தாது???

யாழினி அப்பா (01/11/2014)




மிகுந்த சந்தோஷத்தில் இருக்கின்றேன்...



யாழினிக்கு காலையில் ஒரு பர்ஸ் எடுத்து வந்து என்னிடத்தில் காசு கேட்டாள்... நான் பத்து ரூபாய்  பணம் கொடுத்தேன்... அதை பர்சில்  பத்திரபடுத்திக்கொண்டு இருந்தாள்...

 தேவி தியேட்டர் பின்னே இருக்கும் எல்லிஸ் ரோட்டில் இன்று கொஞ்சம் வேலை இருந்தகாரணத்தால்... நானும் யாழினியும் அங்கு சென்றோம்..

கிளம்பும் போதே பர்சேசுக்கு  செல்லும்  பெரிய மனுஷி போல  பர்ஸ் எடுத்து வைத்துக்கொண்டாள்...


Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner