விடியற்காலை ஐந்து மணி படத்துக்கு சினிமா ரசிகன் காலை மூன்று மணிக்கே எழுந்து திரைப்படத்துக்கு வர வேண்டும்… காலை ஐந்து மணிக்கு காசி தியேட்டர் வாசவில் ஜெ ஜெ என்று கூட்டம்… எத்தனை நாளைக்குதான் இந்த ஜெ ஜெ … விடியற்காலை ஐந்து மணிக்கு காசி தியேட்டர் வாசலில் கருணாநிதி பேச்சை கேட்க கூடிய கூட்டம் போல அவ்வளவு கூட்டம்… ஜிஎஸ்ட்டி சாலையில் டிராபிக்… எல்லாம் மீறி காசி தியேட்டர் வாசலை மிதித்தால் ஐந்து மணி ஷோ கேன்சல் என்கின்றார்கள்.
சமீபகாலமாக வெளியாகும் திரைப்படங்கள் விடியற்காலை ஷோ கேன்சல் செய்து ரசிகர்களை அலைய வைப்பது என்பது தமிழ் சினிமாவின் எதிர்காலத்துக்கு நல்லது இல்லை என்பேன்…