சென்னை வாழ்க்கையில் நண்பர்கள் எனக்கு மிகவும் குறைவு..ஆனால் இந்த இணையம் மூலம் எனக்கு கிடைந்த நண்பர்கள் மிகவும் அதிகம்..அப்படி சென்னையில் இணையத்தில் எழுத வந்த இரண்டரை வருடத்தில் ஒரு சிலரால் நல்ல விதமாகவோ, அல்லது நக்கலாகவோ, கவனிக்கபட்டால் அது என்னை பொறுத்தவரை மகிழ்ச்சியான விஷயம்தான்..
இன்று காலையில் வந்த மெயிலில் என்னுடைய நண்பர்...பதிவர்வெண்பூ ஒரு மெயில் அனுப்பி இருந்தார்...
உங்களை பற்றி ஜெயமோகன் என தலைப்பிட்டு மெயில் அனுப்பி இருந்தார்
அந்த மெயில் உங்கள் பார்வைக்கு...
===============
உங்களை அவர் கிண்டலாக சுட்டி இருந்தாலும், தமிழின் ஒரு பெரிய எழுத்தாளர் இன்னொரு பெரிய எழுத்தாளருடன் உங்களை ஒப்பிட்டு இருக்கிறார். பெரிய ஆட்களாலும் கவனிக்கப்படுகிறீர்கள். பாராட்டுகள்...
வெண்பூ
*************
//
இவ்விணையதளத்தின் வெற்றியைப்பற்றி எனக்கு பெருமிதமும் வியப்புமே உள்ளது. இதன் இயல்புக்கு மாறான வாசகர்கள் இதற்குள் வரவேண்டாமென்றே விரும்புகிறேன். சாரு நிவேதிதாவின் இணையதளம் பற்றிச் சொன்னீர்கள். ஆனால் அவரது இணையதளத்தைவிட ஜாக்கி சேகர் என்பவரது இணையதளம் அலெக்ஸா மதிப்பீட்டில் உயர் இடத்தில் இருப்பதை நீங்கள் காணலாம். தமிழ் வாசகர்களில் பெரும்பாலானவர்களுக்கு சினிமா மற்றும் வம்புகளிலேயே ஆர்வம் இருக்கிறது. அவற்றை மட்டுமே அவர்கள் விரும்பி வாசிக்கிறார்கள்.
=================
இதுதான் அந்த மெயில் நான் நண்பர் வெண்பூவுக்கு... பதில் மெயில் கொடுத்தேன்... கீழே..
மிக்க நன்றி வெண்பூ... என்னை பற்றிய கவனிப்பில், உங்கள் பங்கு மிக அதிகம் வெண்பூ, என் பதிவின் முதல் பின்னுட்டகாரர் நீங்கள்தான்... எனது முதல் பாலோவரும் நீங்கள்தான்...
மிக்க நன்றி வெண்பூ எத்தனை உயரங்கள் கடந்தாலும் நான் இதனை மறக்கமாட்டேன்...
மிக்க நன்றி வெண்பூ எத்தனை உயரங்கள் கடந்தாலும் நான் இதனை மறக்கமாட்டேன்...
மீண்டும நன்றி வெண்பூ தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு.....
============
Dear Mr.Jackie,
==============
If possible, go thru' this link...http://www.jeyamohan. in/?p=9223
good or bad, i'm not able to decide.
Thamil
தகவலை பகிர்ந்து கொண்ட தமிழ் அவர்களுக்கு என் நன்றிகள்..
எழுத்தாளர் ஜெயமோகன் இன்று எழுதிய கட்டுரையில் சாருவோடு எனது இணையதள அலேக்சா ரேங் பற்றி குறிப்பிட்டு இருக்கின்றார்...அதில் நக்கல் இருந்தாலும் ஒரு எழுத்தாளர் கவனிக்கபட்டதில் மகிழ்ச்சி.. அந்த கட்டுரையை வாசிக்க இங்கே கிளிக்கவும்..
=======================
நான் இதுவரை ஜெயமோகன் மற்றும் சாருவின் எந்த எழுத்துக்களையும் இதுவரை நான் வாசித்தது இல்லை..சாருவை சென்னையில் நடக்கும் புத்தகவெளியீட்டு விழாவில் நேரில் பார்த்து இருக்கின்றேன்...அவர் பேச்சை கேட்டு இருக்கின்றேன்...ஆனால் ஜெயமோகன் அவர்களை விஜய்டிவியின் ஒரு நீயா நானா விவாதத்தில் பார்த்ததோடு சரி..
============
ஆனால் ஒன்று மட்டும் தெரிகின்றது.. சினிமா மற்றும் ஊர் வம்பு கொஞ்சம் சுவாரஸ்யமாக எழுதுகின்றேன் என்பது மட்டும் எனக்கு நன்றாக புரிகின்றது..
மீண்டும் நன்றி எழுத்தாளர் ஜெயமோகன்.....
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....
குறிப்பு.. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்.
ஜாக்கிசேகர்....
குறிப்பு.. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்.
சந்தோசமா இருக்கு... எப்படி எழுதினாலும் மோதிரக் கை என்றால் சந்தோஷம்தானே... ஜெயமோகன் அவர்களால் நீங்கள் கவனிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பது மகிழ்வான ஒன்றுதானே...
ReplyDeleteஉங்க பதிவிலாவது ஊர்வம்பு தான் இருக்கு அவரின் எல்லா படைப்புகளிலுமே குரூர நகைச்சுவையுடன் கலந்த ஜாதிவெறியே கொப்பளிக்கிறது.அதற்கு முன் உங்கள் ஊர் வம்பு ரசிக்க முடிக்கிறது.
ReplyDeleteயாருக்கு தூக்கம் வராவிட்டாலும் இவர் தளத்தை திறந்து ஐந்து நிமிடம் படித்தாலே பொங்கலும் வடைகறீயும் தின்றால் எப்படி மப்புடன் தூக்கம் வருமோ அப்ப்டி தூக்கம்வரும், உடனே தூங்கிவிடலாம்,நான் இன்று வரையில் அப்படிதான் தூங்குவேன்.
Boss
ReplyDeletei thnik, Jay might read luckylook's blog and came to know about you...
வாழ்த்துக்கள் ஜாக்கி!
ReplyDeleteBest of Luck..
ReplyDeleteஉங்களைப் போல் என்னால் சந்தோசப்பட முடியவில்லை ஜாக்கி.
ReplyDeleteமோதிரக் கையால் குட்டு? ;)
ReplyDeleteவாழ்த்துக்கள் அண்ணாச்சி
பெருமை என்றும் சொல்லலாம்.. மற்றப் பக்கப் பொருமல் என்றும் சொல்லலாம்
LOSHAN
www.arvloshan.com
வாழ்த்துக்கள் தல... கலக்குங்க...
ReplyDeleteஉங்கள் எழுத்தில் அவர் குறை காணவில்லை..தேர்ந்தெடுத்த சப்ஜெக்டில்தான்.....நமது குறிக்கோள் சினிமா மற்றும் அனுபவங்களை எழுதுவது..அதை மிகச் சரியாகவே செய்துள்ளீர்கள்...சாருவுக்கு நிகரான எழுத்து நடையும் வாசகர் வட்டமும் பெருமை தானே...பாசிடிவாகவே எடுத்துக்கொள்ளலாம்...மோதிரக்குட்டுக்கு வாழ்த்துக்கள்..
ReplyDeleteஅன்புடன்
செங்கோவி
கண்டிப்பாக இது மட்டமானப் பொருமல். அவருக்கு வரலாறும் சமயமும்(மட்டமான) கைவந்த கலையென்றால், ஜாக்கிக்கு டீக்கடை பெஞ்சு. இதில் ஜெமோ வுக்கு ஏன் வயிறெறியனும். பரவாயில்லை, இதுவும் ஒரு வெளம்பரந்தான். கீப் கோயிங்.
ReplyDeletesir neenga kalakkuringa sir . jeyamohan kitta irunthe ungalukku OSCAR award kidaitha mathiri sir .
ReplyDeleteஉங்கள் கருத்துப்படி சாருநிவேதிதாவுடன் ஒப்பிட்டதில் உங்களுக்கு மகிழ்ச்சி,ஆனால் சாருவை விட நீங்கள் ஜனரஞ்சகமாக்வும்,சமூக அக்கறை கொண்டும் எழுதுகிறிர்கள் என்பது என் கணீப்பு.எது எப்படியோ நீங்கள் வளர்ந்து வருகிறீர்கள்.வாழ்த்துக்கள்
ReplyDeleteசேகர்..
ReplyDeleteஇனியவன் உலகநாதனுடன் ஒத்துப் போகிறேன். இதில் சந்தோஷப் பட ஏதுமில்லை. எப்படியேனும் விளம்பரம் கெடச்சா போதும்னு நீ சொன்னால்- நான் சொல்வதற்கு ஏதுமில்லை.
ஜெயமோகனின் எழுத்தில் உள்ள பகடி புரிந்திருக்கும்.
ஒருவர் அவரைப் பார்த்துக் கேட்கிறார் - நீங்களும் சாருவும் இணையத்தில் எழுதறீங்க, ஆனா சாருவின் அலெக்ஸா ரேட்டிங் பெட்டரே இருக்கேன்னு. அதுக்கு அவர் பதில் - ரேட்டிங் எல்லாம் பொருட்டே அல்ல, சாருவை விட சுமாரா எழுதும் ஜாக்கி சேகர் என்பவரின் அலெக்ஸா ரேட்டிங் அவரை விட பெட்டர் - எனவே அந்த ரேட்டிங்க்கும் குவாலிட்டிக்கும் சம்பந்தமில்லைன்னு சொல்றார். சொல்லாமல் சொன்னது, தன்னை விட சாருவின் அலெக்ஸா ரேட்டிங் பெட்டரா இருந்தாலும் தன்னுடைய எழுத்து சாருவை விட சிறந்தது. போகிற போக்கில் படிப்பவர்களையும் சினிமா செய்திகள் மற்றும் வம்புகளை மட்டுமே விரும்புகிறார்கள் என்ற பகடி வேற.
இப்படியெல்லாம் கவனிக்கப் படுவதில் சந்தோஷப் பட ஏதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
Now comes a constructive criticism.
ReplyDeleteIt is now evident that your blog is being read not just by ordinary people like me. Incidents like Jayamohan quoting you, Vijay Amstrong gave you an opportunity work with him are the proof. I wish you don't take these to your head but start writing with more responsibility. It is time you start expanding your horizon (in writing), reduce the adult content as much as possible, stop whining about people, read a lot etc.
Long story short - It is time to move ahead and not being stagnant.
இதுக்கும் நான் “லோக்கல்” இப்படித்தான் இருப்பேன்னு பதில் சொன்னால் - May God bless you..
என்றென்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
பின்னுட்டம் இட்ட அனைவருக்கும் என் நன்றிகள்..
ReplyDeleteஜெயமோகன் என்னை நக்கல் விட்டது தெரியாமல் இல்லை...
அதை பகிர்ந்து கொள்ளவும்.. மொக்கையாக சினிமாவும் ஊர்வம்பு எழுதினாலும் நன்றாகவே எழுதுகின்றேன் என்று சொல்லேவே இந்த பதிவு...
மற்றபடி என் மீது மதிப்பு வைத்து இருக்கும் நண்பர்களுக்கு என் நன்றி..
நன்றாகவே என்பதில் கூட சின்ன திருத்தம் மற்றவர்களி ரசிக்கும் விதத்தில் எழுதுகின்றேன் என்பது கூட மகிழ்ச்சியே..
ReplyDeleteஉண்மைதான்..ஸ்ரீ முன்பை விட நான் எழுத்தில் தேவைபடாமல் வார்த்தைகள் விடுவதில்லை...உனது கருத்துக்கு எனது நன்றிகள்..
ReplyDeleteலூசில் விடுங்க ஜாக்கி, இதெல்லாம் பழைய கதை. சீச்சீ இந்த பழம் புளிக்கும் கதை தான்
ReplyDelete//மிக்க நன்றி வெண்பூ... என்னை பற்றிய கவனிப்பில், உங்கள் பங்கு மிக அதிகம் வெண்பூ, என் பதிவின் முதல் பின்னுட்டகாரர் நீங்கள்தான்//
ReplyDelete:)
வாழ்த்துக்கள் தல!
என் பதிவின் முதல் பின்னுட்டகாரர் நீங்கள்தான்..தெரியுமா :))
இந்த பதிவை தீபாவளிக்கு முன்னாடி போட்டிருந்தா.. அப்பீட்டாயிருப்ப.. தப்பிச்ச...
ReplyDeleteஸ்ரீராமின் கருத்துகளை வழிமொழிகிறேன்!
ReplyDeleteஜாக்கி சேகர் நண்பருக்கு வாழ்த்துகள் தல. தனி டொமைன் போட்டு இருக்கீங்க. அதற்கும் வாழ்த்துகள் - கலக்குங்க.
ReplyDeleteஸ்ரீராம் கருத்துக்கள்தான் என்னுடையதும்....
ReplyDeleteஅலெக்ஸா ரேட்டிங்கில் மேலும் உயர வாழ்த்துகள் ! ! !!
சுயமோகன்.. ச்சீ.. ஜெயமோகன், அடுத்தவர்களைப் பார்த்து வயிறெரிவதில் அவருக்கு இணை அவரே.. மேலே பாஸ்டன் ஸ்ரீராம் சொல்லியுள்ள கருத்தோடு முழுவதுமாக ஒத்துப் போகிறேன்.. சாரு மேல் ஜெயமோகனுக்கு உள்ள காண்டை, இப்படி வெளிப்படுத்தியிருக்கிறார்...
ReplyDeleteஇதற்கு நீங்கள் அவருக்கு நன்றி கின்றியெல்லாம் சொல்லப்போக, தன்னைப் பகடி செய்திருக்கும் ஒருவருக்கே நீங்கள் நன்றி சொல்லிவிட்டீர்கள் என்று உங்கள் பெயர் சரித்திரத்தில் இடம் பெற்றுவிடப் போகிறது... :-)
jokes apart, இந்த சுயமோகனின் மொக்கைத்தனமான கட்டுரைகளைப் படித்தால், மேலே கார்த்தி சொல்லியுள்ளபடி, இன்ஸ்டண்ட் தூக்கம் நிச்சயம்..
அவரது பதிவைப் பற்றி எனது கட்டுரை - லூசுமோகனின் பிதற்றல்கள் இங்கே படித்துப் பார்க்கவும். அவரது சுயரூபம் தெரியும்..
ஒரு விஷயத்தை ஜெயமோகன் சார் மறந்திட்டாருன்னு நினைக்கிறேன். என்னை மாதிரி சராசரி ஆளுகிட்டேயும் அவரை கொண்டுவந்து சேர்த்தது இந்த சினிமா உலகம்தான்.. அது என்ன சினிமாக்காரன்.. சினிமா பற்றிய பதிவுன்னா கேவலமா? சினிமாவுல வர்ற பேரு, புகழ், பணம் எல்லாம் வேணும்.. ஆனா சினிமான்னா கேவலமா?
ReplyDeleteயோவ்,
ReplyDeleteவாழ்த்துக்கள் யா...
ஜாக்கி, நிதானமாக யோசித்துப்பார். இதில் பெருமை பட்டுக்கொள்ள ஒன்றுமே இல்லை.
ReplyDeleteசாருவை விட நீ அதிகம் பாபுலர் என்பது யோசிக்க வேண்டிய விஷயம். சாருவிற்கு இங்கு இணய தளத்தில்
என்ன மரியாதை என்று உனக்கு தெரியாது. நீ வேறு எவரின் தளமும் சென்று வாசிக்கும் பழக்கம் இல்லை. அதுவே உனக்கு ஒரு சரிவாகிறது. சாருவை பற்றி நிலவும் கருத்துக்களை நீ அறிந்திருந்தால் இந்த மெயிலை நீ வெளி இட்டு இருக்க மாட்டாய் என்று நட்புடன் சொல்லிகொள்கிறேன்.
நீங்கள் தாய்லாந்து சென்றுள்ளீர்களா? முடிந்தால் ஒரு முறை சென்று பாருங்கள்.
ReplyDeleteடைகர் ஷோ மறக்காமல் பாருங்கள்.......
இப்பொழுதான் திரு.ஜெயமோகன் கட்டுரையை படித்தேன். கலக்கிட்டீங்க ஜாக்கி சேகர்.
ReplyDeleteதமிழ் வலைப்பதிவுலகில் நீங்கதான் கிங் என மீண்டும் நிருபித்துவிட்டீர்கள்.
இந்த வெற்றியை தக்கவைத்து கொள்ளுங்கள். கூடிய விரைவில் ஜாக்பாட் அடிக்கும்.