2010ன் முதல் ஹிட் தமி்ழ்படம்தான்..(திரைவிமர்சனம்)


நண்பர்கள் இடத்தில் இருந்து குறுஞ்செய்தி மூலம் படம் நன்றாக இருப்பதாகவும்.. விழுந்து விழுந்து சி்ரித்து வயிறு புண்ணாகி விட்டதாகவும் செய்திகள் வர நான் இந்த படத்தை எப்படியும் பார்த்து விடுவது என்ற முடிவுக்கு வந்து விட்டேன்...கோவா படத்தையே மனைவியை விட்டு விட்டு பார்த்து விட்டதால் இந்த படத்தையும் தனியே பார்த்தால் வேறு சில பிரச்சனைகளை சமாளிக்க வேண்டி இருப்பதால் நேற்று இரவு இந்த படத்தை மனைவியோடு போய் பார்த்து விட்டேன்....

ஹாலிவுட்டில் ஒரு முழு படத்தையும் நக்கல் விட்டு படம் எடுப்பது ஒரு வகை.. சமீபத்தில் ஹாரிசன் போர்டு நடித்த த பியூஜீட்டிவ் படத்தை நக்கல் செய்து சமீபத்தில் ஒரு படம் வெளி வந்தது.. அந்த படத்தின் பெயர் தெரியவில்லை மறந்து விட்டேன்...

அதே போல் ஸ்கேரி மூவி... படங்கள் சமீபத்தில் திரைக்கு வந்த படங்களை பாரபட்சம் இல்லாமல் நக்கல் விடும் பழக்கம் ஹாலிவுட்டில் அதிகம்... நான் முதன் முதலில் அது போல் முழுதான நக்கல்படம் பார்த்து... ஹாட்ஷாட் என்ற ஆங்கில படம்தான்...ஆனால் இங்கு வெங்கட் பிரபு கோஷ்ட்டி வந்த பிறகுதான் தமிழ் சினிமாவை படம் நெடுக நக்கல் விட்டார்கள்..... இப்போது முழ நீள படத்தை நக்கல் செய்து ஒரு படம் வெளிவருவது இதுவே முதல் முறை என்று நினைக்கின்றேன்....

தமிழ்படத்தின் கதை இதுதான்.....

படத்தின் கதை என்று எழுதினால் சத்தியமாக நீங்கள் உதைக்க வருவீர்கள்...தமிழில் இதுவரை நீங்கள் பார்த்த எதாவது ஒரு படத்தின் சாயல் இதில் இருக்கும்... இருப்பினும் கதை என்று பார்த்தால் பஞ்சாயத்து கட்டளை படி ஆண் பிள்ளைகளை கள்ளி பால் ஊற்றி கொல்லும் ஊரில் இருந்து தப்பிக்கும் ஒரு குழந்தை எப்படி தமிழகத்தின் விடிவெள்ளியாக மாறுகின்றது.. என்பது கதை... இதற்க்கு மேல் சொன்னால் அது சுவாரஸ்யத்தை குறைத்து விடும்... மீதி வெண்திரையில் காண்க...

படத்தின் சுவாரஸ்யங்களில் சில...

படம் ஆரம்பித்து முடியும் வரை எல்லோரும் சிரித்துக்கொண்டு இருந்தோம்...

விஜய் டிவியில் வந்த லொள்ளுசபா நிகழ்ச்சி மட்டும் வரவில்லை என்றால் இந்த படத்தின் வெற்றி என்பதை நினைத்து கூட பார்க்கமுடியாத வெற்றியாக இருந்து இருக்கும்...

ஒரு படத்தின் பாடல் காட்சியில் ரசிகர்கள் அனைவரும் அர்த்தம் புரிந்து விழுந்து விழுந்து சிரிக்கின்றார்கள்... அந்த பாடல் ஓமகசீயா....

படத்தின் பெரிய பலமே சிவாதான் அவரின் பாடி லாங்வேஜ்தான் இந்த படத்தை அதிகம் தூக்கி நிறுத்துகின்றன....

வெண்ணிறஆடை மூர்த்தி சிவாவின் மச்சான் கேரக்டரில் போட்டு இருப்பதும்....எம் எஸ் பாஸ்கர் ஜட்டி தெரியவது போல் ஜீன்ஸ் பேண்ட் போட்டு இருப்பதும்... அந்த ஜட்டியில் சுடர்மணி என்று எழுதி இருப்பதும் மிக நுணுக்கமான நக்கல்கள்...

வெண்ணிறஆடை மூர்த்தி கேரம் போர்டில் இருக்கும் காய்களில் இந்த இரண்டு காயில் எந்த காயை ஆடிப்பது என்ற கேட்கும் போதே அவர் தலையில் ஒரு காக்கா வந்து கொத்தி விட்டு போக, அதன் பிறகு அவர் எப்போது டபுள் மீனிங் பேச... அதே போல் நடு இரவில் டபுள் மீனிங் பேச அப்போது அந்த காக்கா வருவது பகீர் சிரிப்பு....

இனி ஹீரோக்கல் ஒப்பனிங் சாங் வைக்க யோசிப்பார்கள் அதே போல் சண்டைகாட்சிகளிலும் கவனம் செலுத்தியாக வேண்டும்..


சரக்கு அடித்து விட்டு காக்க காக்க சூர்யா போல் ஆற்றின் ஓரம் வெள்ளை பனியனுடன் படுத்து கிடக்க... அப்போது கேமரா சுழன்று குளோசாக வர... அதிக தண்ணி அடிச்சதால என் தலை சுத்துகிட்டு இருக்குது.. மேலே கேமரா வச்சிக்கினு இவனுங்க வேற சுத்தறானுங்க என்று ஒட்டு மொத்த படக்குழுவையே நக்கல் விடுவது என படம் முழுவதும் காமெடி நெடி...

கதாநாயகி தேடலில் இன்னும் கொஞச்ம் கவனம் செலுத்தி இருக்கலாம்....ஜீப்கில் பாண்டிச்சேரி செல்லும் போது அழகாக இருக்கின்றார்....

இந்த படம் 50 பைசா இன்வெஸ்ட் பண்ணி 100ரூபாய் எடுக்கும் படமாக ஓப்பனிங்கிலேயே மாறி விட்டது தயாரிப்பு தரப்புக்கு வெற்றி.......


இந்த படம் பழைய படம் புது படம் என்ற இரு பிரிவுகளில் கலாய்கின்றது... புது படம் மட்டும் என்ற எடுத்து கொண்டு இருந்தால் இன்னும் சுவை கூட இருக்கலாம்...

படத்தின் டைட்டிலிலேயே நாம் என்ன மாதிரி படம் பார்க்கபோகின்றோம் என்பதை உணர்த்திய இயக்குனருக்கு பாராட்டுகள்....

என் மனைவி அயர்லாந்தில் இருக்கும் போது அவளது அயர்லாந்து நண்பி கேரன் என்பவள்...
ஏன் உங்கள் இந்திய சினிமாவில் சுடப்பட்ட அம்மாவை கதாநாயகன் கையில் பிடித்து கொண்டு அழுது கொண்டும், பேசிக்கொண்டும் இருக்கின்றானே தவிர, ஏன் உடனே...911க்கு போன் செய்து அவசர உதவி கேட்கவில்லை?? என்றும் பேசும், அழும் நேரத்துக்கு அம்புலன்ஸ் வந்த இருந்தால்... அவனின் அம்மா பிழைத்து இருப்பாள் என்று சொல்லும் அயர்லாந்து பெண்மணி... இந்திய சினிமாவை பற்றி நன்றாகவே புரிந்து வைத்து இருக்கின்றாள்... அந்த நிலை மாற வேண்டும்.... இந்த படத்தில் அது போலான காட்சிகளை சகட்டுக்கு நக்கல் விட்டு இருக்கின்றார்கள்...

படத்தின் ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா பாராட்டுக்குறியவர்... ஒரு லோபட்ஜட் படம் போல் இல்லாமல் பிரேமிங்கில் மற்றும் காட்சிகளில் காம்பரமைஸ் செய்து கொள்ளவில்லை....

அமைதிபடையில் சத்தியராஜ் கொடுக்கும் அல்வா வாங்கி சாப்பிட்டு காணாமல் போன கஸ்த்தூரி இந்த படத்தில் போதை தெளிந்து ஒரு குத்தாட்டம் போட்டு இருக்கின்றார்....

இந்த படம் ரெட்ஒன் கேமராவில் ஷுட் செய்து இருக்கின்றார்கள்...
இதனால் படத்தின் தயாரிப்பு செலவு பெரும் அளவில் குறைந்து இருக்கும்...

ஏற்கனவே உன்னை போல் ஒருவன் இந்த வகை கேமராவில் ஷுட் செய்து இருப்பதால் அதன் கதையின் காட்சி அமைப்புக்கு ஒரு வெறுமைதன்மை இருக்கும் ஆனால் இந்த படத்தில் பல கலர் புல் காட்சிகள் இருப்பதால் வேறு தளத்துக்கு தமிழ் சினிமா போய் இருக்கின்றது...

இந்த படத்தின் வெற்றி ரெட்ஒன்கேமரா பக்கம் தமிழ்சினிமாவை திரும்பி பார்க்க வைக்கும்... இது இப்போது இருக்கும் தமிழ்சினிமாவுக்கு நல்ல செய்தி....

ரெட் ஒன் கேமராவின் பெரும் பிரச்சனை டேலைட் அவுட்டோர் லைட் மேட்சிங் பிரச்சனை... அதனை கண்ரோல் செய்து எடுத்து இருக்கும் ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா பாராட்டுக்கு உரியவர்....


இயக்குனர் அமுதன் அடுத்த படத்துக்கு எந்த ஹீரோவிடம் போய் கதை சொல்லுவார் என்று தெரியவில்லை... இருப்பினும் முதல் முயற்ச்சி வெற்றிக்கு வாழ்த்துக்கள்...

தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி என்பதால் பல செட்டுகளை துணிந்த போட்டு இருக்கின்றார்கள்... இது முதல் நேரடி படம் என்று நினைக்கின்றேன்...

இரண்டு மணிநேர லொள்ளுசபா பார்த்த திருப்தி...

தியேட்டர் டிஸ்க்கி....
சனிக்கிழமை இரவு பத்து மணிகாட்சி படம் பார்பது என்று முடிவாகிவிட்டது... தினத்தந்தி மேய்ந்து தியேட்டர் குறித்துக்கொண்டேன்...டிக்கெட் புக் பண்ணவில்லை... மனைவி அழைத்துகொண்டு செல்வது என்று முடிவாகி விட்டது....

வளசரவாக்கத்தில் இருந்து முதலில் கமலா புதுப்பித்த தியேட்டருக்கு போனோம்..கேன்சல் டிக்கெட் ஏதாவது வருகின்றதா என்று பார்த்து கொண்டு இருந்தேன்...

எல்லோருமே யாஹுவின் டிக்கெட் புக் பண்ணிய பிரின்ட் அவுட் செய்த பேப்பரை கையில் வைத்துக்கொண்டு அலப்பரை செய்து கொண்டு இருந்தார்கள்...

சரி இனி கமலாவை நம்பி பிரயோஜனம் இல்லை என்பதால் சத்தியத்துக்கு இருவரும் போனோம்... அங்கு பத்து நிமிடம் நின்று சைட் அடித்து விட்டு சகஜநிலைக்கு வந்தால் இரண்டு ஷோதான் தமிழ்படம் என்று எனக்குபல்பு கிடைக்க...மாயஜலில் இரவு 11,30க்கு ஒரு காட்சி என்ற ஞாபகம் வர மாயாஜல் செல்ல முடிவெடுத்தேன்... சத்தியத்தில் இருந்து 27 கீலோ மீட்டர் மனைவியோடு பைக்கில் சாத்தியமா? என்றாலும் இரவு நேர பைக் சவாரி எனக்கு பிடித்தமானது...

இருப்பினும் அவ்வளவுதூரம் போய் டிக்கெட் இல்லை என்றால் அங்கு பெரிய பல்பு கிடைக்கும் என்பதால் முதன் முறையாக மாயாஜல் செல்வதால்... கானத்தூரில் இருக்கும் எனது கல்லூரி நண்பர் பிரபு அவர்களுக்கு போன் செய்ய...அவர் டிக்கெட் சொல்டு அவுட் ஆகிவிட்டது.... என்றும் இருப்பினும் மேனேஜரிடம் இரண்டு டிக்கெட் சொல்லி இருக்கின்றேன் போய் வாங்கி கொள்ளவும் என்ற சொல்ல தியேட்டர் போனால்...

அங்கே பதிவர் நிலாரசிகள் தன் நண்பர்களுடன் வந்து இருந்தார்....இரவு நேர வாழ்க்கை சென்னையில் எனக்கு புதுசு இல்லை என்றாலும் படம்... இன்று நடு இரவு 12 மணிக்கு படம் போடும் போது நிறைய குடும்பங்கள் வந்து இருந்தன...

இன்று அதி காலை 2,30க்கு படம் விட்டார்கள் நிலாவிடம் விடை பெற்றுக்கொண்டு சோழிங்கநல்லூரில் கட் செய்து ஆளில்லாத ஐடி ரோட்டில் மனைவியோடு குளிரில் பயணிக்கும் போது கார் வாங்க வேண்டும் என்ற எண்ணம் என்னுள் இயல்பாக எழுந்தது...

விடியலில் பசி எடுக்க மத்திய கைலாஷ் ஹாட்சிப்ஸ் அருகே இருக்கும் ஒரு மலையாளத்து கடையில் பிரட் அம்லேட் சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு வரும் போது 4 மணி... தூக்கம் வரவில்லை... கடற்கரை விடியல் பார்ப்பது இருவருக்கும் பிடித்தமான ஒன்று...என் மனைவி மெரினாவுக்கு போலாமா? என்று கேட்க..நான் என் மனைவியை முறைத்தேன்....

படத்தின் டிரைலர்...



படக்குழுவினர் விபரம்....

Directed by C. S. Amudhan
Produced by Dhayanidhi Alagiri
Written by C. S. Amudhan
Chandru
Starring Shiva
Disha Pandey
Music by Kannan
Cinematography Nirav Shah
Editing by T. S. Suresh
Studio Cloud Nine Movies
Release date(s) 29 January 2010
Country India
Language Tamil

(உங்களுக்கு மேலே நான் எழுதிய விஷயங்கள் நிறைவானதாக இருந்தால் ஒரு நிமிடம் எனக்காக செலவு செய்து வாக்களித்து விட்டு செல்லுங்கள்....வாக்குகள் மற்றும் பின்னுட்டமே என்னை உற்சாகபடுத்தும்)
இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

கோவா ஒரு பின்நவினத்துவ படம்(சினிமாவிமர்சனம்)


ஹாலிவுட்டில் ரோட்டிரிப் என்ற பெயரில் ஜாலி காமெடி வகை படங்கள் வெளிவந்து இருக்கின்றன... இந்த படங்களின் கதை அடிநாதம் எதாவது ஒரு ஊருக்கு எதன் பொருட்டாவது, நண்பர்கள் நண்பிகளுடன் சேர்ந்த பயணிப்பார்கள்... அப்படி பயணிக்கும் போது நடக்கும் சம்பவங்கள்தான் கதை.....அதே சாயலில் தமிழில் வந்த படம் கோவா...ஊரை விட்டு ஓடிய அனுபவம் உங்களில் யாருக்கு இருக்கின்றதோ இல்லையோ எனக்கு இருக்கின்றது... அது தனிக் கதை ...

ஒரு குருட்டு தைரியத்தை வைத்துக்கொண்டு ஒரு சிலரால் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் டிராவல் செய்ய முடியும்... என் வாழ்க்கையில் நான் அது போல பல சம்பவங்களை பார்த்து இருக்கின்றேன்...

1993களில் அதாவது சிக்கு புக்கு ரயிலே ஜென்டில் மேன் படம் வந்த போது, இதே போல் மூன்று நண்பர்களுடன் ஒன்றரை லட்சம் பணமும் ஒன்றரை கிலோ பழைய நகையுடன் ஒரு நகை கடை நண்பன் காதலுக்கு உதவ, ஊரை விட்டு ஓடிப்போனோம்...நாங்கள் முதலில் சென்னை வந்து அதன் பிறகு ஊட்டி போய், அங்கிருந்து,, கோவை வந்து அதன் பிறகு மேங்களுர் போய் அதன் பிறகு கோவாவிற்க்கு போய் நன்றாக சுற்றிவி்ட்டு விடு திருப்பியது... என் நினைவுகளை இந்த படம் அசை போட வைத்து விட்டது..

கோவாவில் நாங்கள் போடாத ஆட்டம் இல்லை...நிறைய சுற்றி பார்த்தாகி விட்டது... அதுதான் எனது முதன் முதலில் வாழ்வில் வெகு தூரம் பயணப்பட்ட இடம்... அப்போதுதான் மதராசி என்றால் ஒரு துவேஷ பார்வையை வட இந்தியர்கள் பார்ப்பதை உணர்ந்தேன்...


சரி கோவா படத்தின் கதை என்ன?...

கோவா படம் ...ஒரு மூன்று கிராமத்து இளைஞர்கள் ஊர் கட்டுபாட்டை மீறிய காரணத்தாலும், கிராமத்தின் பஞ்சாயத்து, தெய்வகுத்தம், அடக்குமுறை,மூடபழக்கவழக்கம் போன்றவைகளை தாங்கிகொள்ளாமலும்.. அவர்கள் ஊரை விட்டு ஜாலியாக ஒரு வாரத்தினை கழிக்க மதுரைக்கு வருகின்றார்கள்... வந்த இடத்தில் அவர்களது நண்பனுக்கும் ஒரு வெள்ளைகார பெண்ணுக்கும் திருமணம் நடக்க... அது எப்படி சாத்தியம் என்று நண்பனிடம் கேட்க?, தான் கோவாவில் கைடாக இருக்கும் போது அந்த வெள்ளைக்கார பெண்ணுக்கும், தனக்கும் காதல் மலர்ந்து கல்யாணம் செய்து கொண்டு விட்டோம்... இதன் பிறகு முதல் இரவு ஸ்டார் ஓட்டலில் நடக்க போகின்றது என்றும்... தன் மனைவியுடன் வெளிநாடு செல்லபோவதாகவும் சொல்ல... நண்பர்கள் மூவரும் அதிர்ச்சியில் அட்டுபிகர் அவனுக்கே ஒரு பாரின் பொண்ணு கிடைக்கும் போது... நமக்கு கிடைக்காத? என்ற நம்பிக்கையில்

அந்த மூன்று பேரும் கோவா போய் ஒரு வெளிநாட்டு பெண்ணை காதலித்து கல்யாணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டிலாகும் உயர்ந்த நோக்கத்துடன் கோவாவிற்க்கு செல்ல ....அங்கு இருக்கும் தமிழ்நாட்டு நபர்களுடன் இனைய படம் கல கல கல கல கல கல கல கொல கொல கொலவென ரொம்ப ஜாலியாக பயணிக்கின்றது... மீதி வெண்திரையில் காண்க..

படத்தின் சவாரஸ்யங்களில் பல....

படத்தின் கதை பற்றி இயக்குனர் வெங்கட்பிரபு பெரிதாய் அலட்டி கொள்ளவில்லை என்பது படம் முழுக்க தெரிகின்றது...

படம் முழுவதும் ஜாலியாக இருக்க வேண்டும் என்பதால் அவர்கள் சிரியஸ் விஷயங்களை அதிகம் போட்டு குழப்பிக்கொள்ளவில்லை...

படத்தில் வேலை செய்த அனைவரும் ரொம்பவும் ஜாலியாக அரட்டை அடித்து படம் எடுத்த விளைவை... அந்த அரட்டையை படம் பார்க்கும் போது பார்வையாளன் அந்த ஜாலியை பல இடங்களில் உள்வாங்க முடிந்தது...

ஹோமே செக்ஸ் பற்றி மிகவும் தைரியமாக எடுத்து இருக்கின்றார்கள்.... அவர்களது காதலை ரொம்ப காமெடியாக சொல்லி இருக்கின்றார் இயக்குனர்... (அப்பாடி விமர்சன தலைப்புக்கான விஷயத்தை சொல்லியாகிவிட்டது...)

ஹோமோ கதாபாத்திரத்தில் இவ்வளவு தைரியமாக நடிக்க ஆட்கள் வேண்டும்....எல்லை மீறாத காட்சிகளுடன் புலம்பலின் மூலமே... அவர்கள் காதல் மற்றும் ஏக்கங்கள் சொல்ல படுகின்றது...

வசனத்தில் ஒரு வரி...
“ ஓம் சாந்தி ஓம் படத்துல அந்த சிக்ஸ் பேக் ஷாருக் ஒடம்பை பார்த்துட்டு ஷாருக்கை பார்த்து அவன் உருகி போனதாலதான்... அன்னைக்கு நான் இந்த உடம்பை சிக்ஸ் பேக் ஏத்த ஆரப்பிச்சேன்” என்று அரவிந் அழுது புலம்பும் அந்த ஒரு வரி வசனம்....நச்

இந்த படத்திலும் அரவிந்தை தண்ணி அடித்து விட்டு புலம்ப வைத்து இருக்கின்றார்கள்...6க்ஸ்பேக் உடம்பில் நன்றாகவே புலம்புகின்றார்....

சம்பத்குமார்... மற்றும் அரவிந்... பின்னி பெடலெடுத்து இருக்கின்றார்கள்..
மிக முக்கியமாக கோடான கோடி ஆட்டம் ஆடிய, சென்னை28 வில்லன் சம்பத்தை முற்றிலுமாக மாற்றி இருக்கின்றார்கள்... படத்தின் பல காட்சிகள் கடந்து போனதும்தான் அவரை அடையாளம் கண்டு கொள்ள முடிகின்றது..
வெள்ளைக்கார பெண்ணாக நடித்த மாலினிமேரிக்கு நலினம் நன்றாகவே வருகின்றது, வெட்கம் நன்றாகவே வருகின்றது... யாராவது அந்த பெண்ணுக்கு அடுத்த படத்துல சான்ஸ் கொடுங்கப்பு...

பிரேம்ஜிக்கு காதலியாக வரும் அந்த வெள்ளைக்கார பெண்...ஒரு வெள்ளைக்காரி ஆப் சாரி உடுத்தின இவ்வளவு அழகாக இருக்க முடியுமா? சான்சே இல்லை... வெங்கட் பிரபு ரசனைக்கு ஒரு ராயல் சல்யூட்..

அந்த வெள்ளைகார பெண்ணின் சிரிப்பும் அழகும்.. சான்சே இல்லை...மனைவியை ஆபிசில் விட்டு விட்டு படம் பார்த்த காரணத்தால் கிள்ளுகள் இன்றி ரொம்பவே ரசித்தேன்...

சினேகாவை பற்றி சொல்லவே வேண்டும்.....
சினேகா இந்த படத்தில் பனியனோடு வருகின்றார்.. கொஞ்சம் கவர்ச்சியாக தெரிகின்றார்... ஷவரில் குளிக்கின்றார்....

ஊரில் குளக்கரையில் பெண்கள் உள்பாவாடைய சற்று மேலேற்றி மார்பில் கட்டி குளிப்பார்களே... அது போலான மார்டன் உடையில் சினேக,நிறைய இடங்களில் வருகின்றார்...

யாரோ காஸ்ட்டியூமர் வாசுகி பாஸ்கரிடம்... ஜெய் இங்கிலிஷில்...இட்ஸ் பியூட்டிபுல் டிரஸ் என்று சொல்லி இருக்க வேண்டும்... அது போலான உடைகளில் சினேகா வந்து இருக்க வேண்டாம்....அவர் உடம்புக்கு நன்றாக இல்லை...

வைபவ் கொடுத்து வைத்தவர்.. எனக்கு தெரிந்து சினேகவுடன் கொஞ்சம் கலக்கல் காஸ்டியூமில் நெருக்கமாக நடித்தது இவர்தான் என்று நினைக்கின்றேன்...

மாடிபடியில் இருந்து இறங்கும் சினேகாவின் துள்ளல் சான்சே இல்லை...

சினேகாவை இவ்வளவு வெள்ளையாகவும், அழகான ஒரு வெள்ளைகாரி லுக் கொடுத்த மேக்கப் மேனுக்கும், ஒளிப்பதிவாளர் சக்திக்கும் பாராட்டுகள்...
இவ்வளவு வெள்ளையா எந்த படத்திலும் சினேகாவை நான் பார்த்தே இல்லை...


அடுத்து பிரேம்ஜி அமரன்...
வாயில் நாக்கை சுழற்றி 32 பல்லும் தெரிவது போல சிரிப்பதுதான் பிரேம்ஜி ஸ்பெஷல்... படத்தின் மொத்த எடையையும் தாங்குவது இவர்தான்..
பிரேமுக்கு அந்த வெள்ளைகாரிக்குமான காதல் காட்சிகளில் ஜீவன் இருக்கின்றது..

அதே போல் அந்த வெள்ளைக்கார பெண்ணிடம் தன்தான் கிராமத்து பிரேம் என்று சொல்ல அவர் எடுக்கும் அந்த பிரசன்ஸ் ஆப் மைன்டு ரசிக்க வைக்கின்றது...
பிரேம்ஜி பைட் போடும் காட்சிகளில் தியேட்டரில் விசில் பறக்கின்றது...

வெள்ளைக்கார பெண் காதலை சொல்லி ஏர் போர்ட்டில் நிற்க்க பிரேம்ஜி என்ன ரியாக்ஷன் கொடுப்பது என தெரியாமல் பக்கா பக்கா என முழிப்பதை தவிர்த்து இருக்கலாம்....

எல்லா இடத்திலும் காமெடியை பிரதானபடுத்தி எடுக்கும் இது போலான படங்களின் காட்சிகளில், சிரியஸ்காட்சிகளில் இப்படி கோட்டை விடுவது சகஐம் என்றாலும்... அந்த காதலின் ஜீவன் அந்த இடத்தில் சுத்தமாக இல்லை...



பிரேம்ஜிக்கும் அந்த வெள்ளைகார பெண்ணுக்கான கனவு பாடலில்...ராணி வேஷத்தில் வரும் அந்த பெண்ணுக்கு அந்த வெள்ளை தோலுக்கும் அந்த சிவப்புகலருக்கும்...ஆசிர்வாத் ஆட்டாவுக்கு(மைதா) டிரஸ் போட்டது போல் இருக்கின்றது...

ஜெய் காதலியாக வரும் பியா நன்றாக இருக்கின்றார்.. சிக்கென தொடை தெரிய உடை உடுத்தி வருகின்றார்... சில இடங்களில் நன்றாக நடிக்கவும் செய்கின்றார்... காதலுக்காக உருகி பாடும் அந்த பாடலில்...

ஜெய் இங்கிலிஷ் மற்றும் அவரது காமெடிகள் சில இடங்களில் நன்றாக எடுபடுகின்றது... மிக முக்கியதாக வைபவ் பாத்ரூமில் இருந்து கொண்டு ஜெய்யிடம், டவல் ஆங்கிலத்தில் கேட்கும் அந்த காட்சி மிகவும் ரசிக்க முடிகின்றது...
அதே போல் ஒரு வெள்ளைகார பெண்ணிடம் ஜெய் ஆக்டிவலி என்று ஆரம்பித்து அடுத்த வார்த்தை வராமல், சோ என்று அடுத்த வார்தையையும் போட்டு விட்டு பேய் முழி முழிக்கும் போது நல்ல சிரிப்பை வர வைக்கின்றார்...

நகுர்டதனா, திறனானனா... என்பது போன்ற மிட்நைட் மசலா மியூசிக் வரும்.. அந்த மியூசிக் டிராக் சின்னவிடா? அல்லது டிக் டிக் டிக்கா? என்று தெரியவில்லை...அந்த இசைக்கு ஒரு புது அர்த்தத்தை இந்த படம் கொடுத்து இருக்கின்றது...படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்....

படத்தின் எடிட்டிங்...கோவா பாடலில் வரும் எபெக்டுகள் பத்து வருடம் முன்பு கல்யாண ஸ்பாட் மிக்சிங் கவரெஜில் யூஸ் செய்தது போல் அடிக்கடி போடுவது அலுப்பை தட்டுகின்றது...

ஒளிப்பதிவாளர்... சக்திசரவணனி்ன் உழைப்பு இந்த படத்தில் அதிகம்... முக்கியமாக சொல்ல வேண்டும் என்றால்.... காதலின் துக்கத்தில், ஜெய் கடலில் உள்ள மர பாலத்தில் ஓடி வரும் அந்த காட்சி பில்டர் போட்டு எடுத்து இருந்தாலும் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய காட்சி அது... அதே போல் கோவா பாடலுக்கு வெள்ளைகாரிகள் மேல் ஊர்ந்து செல்லும் கேமராவும் ஆங்கிளும் அற்புதம்....

சின்ன மருவை கண்ணத்தில் ஓட்டியே டபுள் ஆக்ட் காட்டிய தமிழ் சினிமாவை நக்கல் விட...ஒரு கேரக்டருக்கு பெரிய மேக்கப் எல்லாம் போடாமல் முக்கிய காட்சிகளில் எல்லாம் அந்த கேரக்டரை உலவ விட்டு நக்கல் அடித்து இருப்பது...வெங்கட் பஞ்ச்..

இந்த கோவா படமும் தமி்ழ் படத்தை போல பல இடங்களில் தமிழ் சினிமாவை நக்கல் விட்டு இருக்கின்றார்கள்.. இன்னும் அதிகம் செய்தால் படத்துக்கு வேறு கலர் வந்து விடும் என்பதால் அடக்கி வாசித்து இருப்பது படம் முழுக்க தெரிகின்றது....

படத்தில் ஏழேழு தலைமுறைக்கு பாடல் தளம் போட வைக்கின்றன... மத்தது எல்லாம் இனிமேல் கேட்க கேட்க பி்டிக்குமோ என்னவோ?

படத்தில் பிரபலங்கள், சிம்பு, நயன்தாரா,பிரசன்னா என்று திடிர் அதிர்ச்சி கொடுத்தாலும் அவர்களை சேர்த்த காட்சிகள் ரசிக்கதக்க இடங்கள்... வெங்கட் பிரபுவின் நட்புக்கான மரியாதையை இந்த காட்சிகள் உணர்த்துகின்றன...

பல இடங்களில் தொய்வு இருந்தாலும்.. அடிக்கடி தென்படும் வெடிச்சிரிப்பால் படம் நகர்கின்றது...

சென்னை28ல் பார்த்த பல முகங்கள் சற்றே சதை பிடித்த கன்னத்துடன் இந்த படத்திலும் பார்க்க முடிகின்றது....

ரஜினிமகள் எடுத்து இருக்கும் ஜாலிபடம் இது....

ரோட்டிரிப் டைப் தமிழ் படத்தை பார்த்தது போல் இருந்தது....


தியேட்டர் டிஸ்க்கி....

எல்லா தியேட்டரிலும் டிக்கெட் இல்லை என்பதால் போரூர் கோபாலகிருஷ்ணன் தியேட்டரில் இந்த படத்தை பார்த்தேன்...

தியேட்டரில் கியூப் சிஸ்டமும் டிடிஎஸ் சவுண்டும் செய்து சற்றே புதுப்பித்து இருக்கின்றார்கள்...

காலைகாட்சிக்கு இந்த தியேட்டரில் கோவா படமா என்பதை நம்பாத ரசிகர் காலை காட்சிக்கு தியேட்டரில்100 பேருக்கு மேல் இல்லை.... அதனால் லேட்டக படத்தை போட்டு மதிய காட்சியை 3 மணிக்கு போட்டு.. அதுவரை டிக்கெட் கொடுக்காமல் மணி ஆட்டிக்கொண்டு இருந்து விட்டு படம் விட்டு 5 நிமிடம் கழித்து டிக்கெட் கொடுத்துக்கொண்டு இருக்கும் போதே படத்தை போட்டுவிட்டார்கள்... குறைபிரசவ தியேட்டர் நிர்வாகிகள்...

அதே போல் படம் முடியும் போது டைட்டில் ஓடிக்கொண்டு இருக்கும் போதே... அதாவது ஜாக்கிசான் படம் போல் படத்தின் கமெடி காட்சிகள் போடும் போதே ஆப் செய்து விட்டார்கள்...

ஒரு படத்தை எப்படி ஆரப்பிக்க வேண்டும் எப்படி முடிக்க வேண்டும் என்று சத்யம்,தேவி தியேட்டரில் டிக்கெட் வாங்கி... பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்....

இப்படி எல்லாம் அழிச்சாட்டியம் செய்து கொண்டு இருந்தால்... நிச்சயம் இது போலானா தியேட்டரில் படம் பார்க்க ரசிகர்கள் யோசிப்பார்கள்...

அதே போல் டிடிஎஸ் சவுண்டில் சென்டர் ஸ்பீக்கரில் இரந்து வரும் ஒலி அளவு குறைந்தும் சைடு ஸ்பிக்கர் லெப்ட் ரைட்டில் காது கிழியும் சத்தம் வருவது படத்தின் பல வசனங்களை புரிய விடவில்லை

இந்த எழவுக்குதான் காசு போனாலும் மயிறா போச்சின்னு சத்தியத்துக்கு போலாமுன்னு நினைச்சா டிக்கெட் இல்லை...டிக்கெட் புக் பண்ணாம முத நாளே பார்ககனும்னு நினைச்சா? இந்த கொடுமையெல்லாம் தாங்கிதான் ஆகனும்....

ஒரே ஆறுதல் டிக்கெட் 40ரூபாய்.... ஆனால் ஒரு பெண்னை கூட அந்த காட்சியில் காணவில்லை...

படத்தின் முடிவின் போது கரண்ட கட்டாகி போக,விசில் அடித்து தியேட்டரின் ஆப்பரேட்டரின் அம்மாவின் கற்பை பலர் சந்தேகபட்டு கத்தினர்...

படத்தின் டிரைலர்...




படக்குழுவினர் விபரம்....

Directed by Venkat Prabhu
Produced by Soundarya Rajinikanth
Written by Venkat Prabhu
Starring Jai
Vaibhav Reddy
Premji Amaran
Aravind Akash
Sneha
Piaa Bajpai
Melanie Marie
Sampath Raj
Music by Yuvan Shankar Raja
Cinematography Sakthi Saravanan
Editing by K. L. Praveen,
N. B. Srikanth
Studio Ocher Studios
Distributed by Warner Bros. Pictures
DreamWorld Spotlight Motion Pictures
Release date(s) 29 January 2010
Country India
Language Tamil
Budget Rs. 10 crores


அன்புடன்
ஜாக்கிசேகர்

(உங்களுக்கு மேலே நான் எழுதிய விஷயங்கள் நிறைவானதாக இருந்தால் ஒரு நிமிடம் எனக்காக செலவு செய்து வாக்களித்து விட்டு செல்லுங்கள்....வாக்குகள் மற்றும் பின்னுட்டமே கண் விழித்து டைப்பும் என்னை உற்சாகபடுத்தும்)
இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

(THE OTHER BANK)உலகசினிமா/ஜீயோர்ஜியா... ஒரு சிறுவனின் தேடல்...

எல்லோருக்கும் நல்ல வாழ்க்கை அமைந்து விடுவதில்லை... ஒரு சிலருக்கு வாழ்க்கை சட்டென புரட்டி போட்டு நினைத்து கூட பார்க்க முடியாத வாழ்க்கையை அது வாழ வைக்கும்... அது நல்லா வாழ்க்கையாகவும் இருக்கலாலம்.. அல்லது கெட்ட வாழ்க்கையாகவும் இருக்கலாம்...

உதாரணத்துக்கு தாவாணி கனவுகள் பாக்கியராஜ் போல் வளர்ந்தவனும் இருக்கான்... மகாநதி கமல் போல் அழிஞ்சவனும் இங்க இருக்கான்... ஆனால் இளம் வயதில் வறுமையும்...ஏற்றுக்கொள்ள கூடாத குடும்ப சூழலும் ஒரு சிறுவனை எப்படி எல்லாம் அலைகழிக்கும்...

வறுமையாக கூட இருக்கலாம் ஆனால் நல்ல பெற்றோர் வாய்ப்து என்பது பெரிய விஷயம்... தன் அம்மா இன்னோருவனுடன் படுத்து புரள்வதை எந்த பையன் ஒத்துக்கொள்வான்...

அதே போல் சொந்த மண்ணை விட்டு விட்டு வேற்று மண்ணில் வாழ்வது என்பது... ரொம்ப கொடுமையானது... என்னதான் சேப்டி வாழ்க்கை என்றாலும்... அது பிரச்சனைக்குறிய வாழ்க்கை...சட்டென குரல் உயர்த்தி எந்த கேள்வியும் கேட்டு விட் முடியாது... இன்னும் அதிகார பலம் பொருந்திய இராணுவ கட்டுபாட்டில் இருக்கும் நாடுகளில் இன்னும் எதுவும் பேந முடியாது... காலம் காலமாக எம்மக்கள் இலைங்கையில் வாழ்ந்து குடியுறுமை பெற்ற போதும் அந்த நாடும் அந்த நாட்டு மக்களும் எம்மக்களை வேற்று கிரகவாசிகள் போலவே வழி நடத்தினார்கள்....

இது போலான வாழ்க்கை பிரச்சனையும்,இடப்பெயர்வு பிரச்சனை கொண்ட ஒரு சிறுவன் தனது அப்பாவைதேடி போவதுதான் இந்த படத்தின் கதை...

The Other Bank (Gagma Napiri) படத்தின் கதை இதுதான்....


12வயது டிடோவின் அப்பா... Republic of Abkhazia நாட்டு விடுதலைக்காக போருக்கு போய் இருக்க.. அதனை ஜார்ஜியா நாடு இராணுவம் எளிதில் வீ்ழ்த்தினாலும் இன்னும் போர் முடியவில்லை... டிடோ அம்மா இன்னோருவனுடம் படுக்கையில் பார்க்க அம்மாவை வெறுத்து அப்பாவிடம் செல்ல முடிவெடுக்கின்றான்...டிடோ சின்ன சின்ன திருட்டு வேளைகளில் ஈடுபடுகின்றான்... அவன் அப்பாவை தேடி Republic of Abkhazia செல்ல முடிவெடுக்கின்றான்... அப்படி போவது ஒன்றும் சதாரான விஷயம் இல்லை இரு நாட்டு எல்லைகளை கடந்து அவன் செல்ல வேண்டும்... அப்படி சொல்ல அவன் நண்பன் ஒரு ஐடியா கொடுக்கின்றான்... நீ பேசினால் உன் பாஷையை வைத்து கண்டு பிடித்து விடுவார்கள்... நீ ஊமை போல் நடித்து விடு என்ற சொல்ல.. அவனும் அவ்வறே செய்து பல தமைகளை தாண்டி சொந்த மண்ணுக்கு போய் சேருகின்றான்... அங்கே அவன் அப்பாவை பார்த்தானா? இல்லையா? என்பதை வெண்திரையில் காண்க...


படத்தின் சுவாரஸ்யங்களில் சில...


இந்த படம் சென்னை எழாவது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட பட்டு ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டை பெற்றது என்பேன்...

இந்த படத்தின் இயக்குனருக்கு இதுவே முதல் படம்...

இந்த படம் 17 விருதுகளை வென்ற படம்...

முதல் படத்தில் இது போலான வெயிட்டான சப்ஜெக்ட்டை எடுத்துக்கொள்ள நிரம்ப தைரியம் வேண்டும்..George Ovashvili இயக்குனருக்கு பாராட்டுகள்

அந்த பையன் அவன் மண் மிதித்து அங்கு இருக்கும் சில இளைஞர்கள் அந்த மண்ணின் கலாச்சார இசையை அதாவது நமது பறை போன்ற லோக்கல் இசையை இசைக்க அந்த பையக் போடும் ஆட்டம் பார்வையாளர்கள் கண்களில் இருந்து கண்ணீரையும் உற்சாகத்தையும் அந்த காட்சி கொடுத்து என்றால் மிகை இல்லை...


ஒரு காரில் போகும் போது ஒரு இளம் பெண்ணுக்கு லிப்ட் கொடுக்க அந்த பெண் தயங்க ... இந்த சின்ன பையனை பார்த்து நம்பிக்கையில் ஏற... அவளை பாலியல் வன்புனர்வு செய்யும் போது இந்த பையன் கத்தி கூச்சல் போடும் காட்சி அற்புதம்...

அந்த நாடு நம் நாட்டை விட ரொம்பவும் வறுமையி்ல் பின் தங்கி இருப்பதை அந்த நாட்டின் பேருந்து பறைசாறிவிடுகின்றது... சாலைகள் எல்லாம் நமது சென்னையின் நகரின் சாலைகன் போல் இருக்கின்றன... இருப்பினும் அது கிராமம் இது நகரம் அவ்வளவுதான்...

சொந்த மண்ணை மிதித்தால் அது எப்படி பட்ட சோகத்தையும் தூங்கி தூர போட்டுவிடும் என்பதையும் மென்சோகமுமாக படத்தை முடித்து இருப்பார் இயக்குனர்...

பார்டர் கிராஸ் செய்யும் காட்சியில் இந்த சிறுவனுக்காக பேசி உயிர் விடும் அந்த இளைஞனும் இரக்கமற்ற ராணுவம் எல்லாவற்ரறயும் பார்க்கும் போது இலங்கை பரச்சனை நினைவுக்கு வராமல் இல்லை...



படத்தின் டிரைலர்....

படக்குழவினர் விபரம்...
டைரக்டர்..George Ovashvili
Title: Gagma Napiri
Running Time: 90 Minutes
Status: Production/Awaiting Release
Country: Georgia, Kazakhstan
Genre: Drama, Foreign

அன்புடன்
ஜாக்கிசேகர்

(உங்களுக்கு மேலே நான் எழுதிய விஷயங்கள் நிறைவானதாக இருந்தால் ஒரு நிமிடம் எனக்காக செலவு செய்து வாக்களித்து விட்டு செல்லுங்கள்....வாக்குகள் மற்றும் பின்னுட்டமே கண் விழித்து டைப்பும் என்னை உற்சாகபடுத்தும்)
இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி..

நீளமான ஷாட் (பாகம்/6) சினிமா சுவாரஸ்யங்கள்...

நேற்று கலைஞர் டிவியில் பசங்க படத்தை பார்த்து இருப்பீர்கள்.. அதில் அந்த வில்லன பையனாக நடித்த ஜீவாவும் அவனுடைய அடிப்பொடிகளும்... ஒரு சைக்கிளில் அந்த பக்கோடா பையன் சைக்கிள் மிதித்து கொண்டு மூவரும் போவது போல் ஒரு ஷாட் எடுத்து இருப்பார்கள்... அது ஒரு நல்ல ஷாட்... அது ஒரு பெரிய ஷாட் இரண்டு நிமிடம் வருவது போல் இருக்கும்...அதுவும் சின்ன பசங்களை வைத்து நல்ல ரிகர்சல் பண்ணி அந்த காட்சியை எடுத்து இருப்பார்கள்...

காரணம் ஆயிரம் என்ற பதிவர் ஒரு கேள்வி கேட்டு இருந்தார்... ஒரே ஷாட்டாக எடுத்தால் அதில் சுவாரஸ்யம் எதும் இருக்காது என்பது அவர் கருத்தாக வைத்து இருந்தார்...

உண்மைதான்... ஆனால் அது எந்த இடத்தில்? எப்படிபட்ட காட்சிக்கு,அந்த லென்தி ஷாட் எடுக்கின்றார்கள் என்பதை பொறுத்துதான் அதன் சுவாரஸ்யம் இருக்கும்....

பொதுவாக எல்லா கேமராமேன்களுக்கு ஒரு ஆவல் இருக்கும்.. ஒரு நல்ல லென்தி ஷாட் எடுகக வேண்டும் என்று... அதற்க்கு காரணம் அதுதான் சவால்... அது ஒரு கூட்டு முயற்ச்சி.... சினிமாவில் வேலை செய்யும் பல டிப்பார்ட்மென்ட்கள் பருப்பு இறைந்து வேலை செய்யும் இடம்... இது போன்ற லென்தி ஷாட் எடுக்கும் இடங்கள் எனலாம்....

ஆனால் அது போலான காட்சிகள் எடுப்பதில் உள்ள பெரிய பிரச்சனை என்னவென்றால் அது போல காட்சிகள் எடுக்க காலவிரயம் ஆகும்.. நிறைய பொருட்செலவுகள் அகும் உதாரணத்துக்கு... அந்த காட்சி ஒன்மோர் போய் விட்டது என்றால்.... எடுத்த பிலிம் உழைப்பு எல்லாம் வீண்....மிக முக்கிய காரணம் அதிக நேரம் எடுத்துக்கொள்ளும்... என்பதே..

சினிமாவின் காதலன் இயக்குனர் ஸ்டேன்லி க்யூப்ரிக் எடுக்கும் பல காட்சினள் எல்லாம் லென்தி ஷாட் வகையை சார்ந்தவை.. அவரின் ஷைனிங் படத்தில் பல காட்சிகள் அப்படி எடுக்கபட்டவைதான்....

உதாரணத்துக்கு ஒரு லென்தி ஷாட்




கியூப்ரிக் அது போல லென்தி ஷாட் எடுக்க மிக முக்கியமான காரணம்.. பார்வையாளனின் கவனத்தை சிறிதும் சிதறாமல்...அவன் முழுகவனமும் கதாபாத்திரத்தின் மேலும் கதையின் உள்ளே செல்ல அது போலான லென்தி ஷாட்கள் உதவுகின்றன....

சமீபத்தில் சுப்ரமணியபுரம் படம் பார்த்து இருப்பீர்கள்....கிளைமாக்ஸ்
காட்சியில் கஞ்சா கருப்பு சசிகுமாரை காட்டி கொடுத்து விட, அந்த இடத்தில் இருந்து கஞ்சா கருப்பு ஆற்றங்கரை ஓரம் நடந்து வந்து ஒரு கிலோ மீட்டர் கல்லில் உட்கார்ந்து பீடி பிடிப்பது வரை ஒரே காட்சி...

இந்த காட்சியில் கஞ்சா கருப்பின் பதற்றமும்... பின்புலத்தில் சசிகுமாரை கண்டந்துண்டமாக வெட்டியபடியே இருப்பார்கள்... அந்த காட்சியும் இந்த காட்சியும் கேமரா டிராவல் ஆகும் போது மிக அழகாக கம்போசிஷன் செய்து இருப்பார்கள்... அது ஒரு அற்புதமான லென்தி ஷாட்டுக்கு உதாரணம்...


சரி இது போலான காட்சிகள் எல்லா இயக்குனருக்கும் ஒரு சவால் பிரேக்கிங் நியுஸ்ன்னு ஒரு படம் அதுல ஒரு ஓப்பனிங் சீன் அதை அப்படியே ஒரு ஷாட்டா எடுத்து இருப்பாங்க..

கஞ்சா கருப்பு நடந்து வந்து உட்காரும் லென்தி ஷாட் நம் தமிழ் சினிமாவுக்கு ஓகே பட் ஒரு காட்சியை ரொம்ப லென்தியா எடுக்க எவ்வளவு கஷ்டபடனும் தெரியுமா??? பிரேக்கிங் நியுஸ் படத்துல ஓப்பனிங் சீன்... மொத்தம் 6 நிமிஷம் 58 செகன்டு ஓரே ஷாட்... இதுல கவனிக்க படவேண்டிய ஒரு விஷயம் என்ன வென்றால் இதுல ஆக்ஷன் காட்சிகள் வேறு... ஒரு 40பிட் கிரேன்லதான் கேமரா வச்சி படம் பிடித்து இருக்க வேண்டும்... இதுல ரொம்ப கஷ்டம் எல்லாருக்கும்தான்.... கிரேன் தள்ளறதுல இருந்து ,போகஸ் பண்ணற கேமரா அசிஸ்டென்ட்ல இருந்து, கேமராமேன்ல இருந்து, கன் பார்ட்டியில இருந்து, லைட் மேன்ல இருந்து நிச்சயம் பயிறு இறைஞ்சி போயிருக்கும்.....

ஷாட்டை பார்த்துட்டு ஆச்சர்ய படாம பின்னுட்டம் மற்றும் ஓட்டு போடுங்க.. அதே போல ஒரு படத்தை இதே போல பத்து லென்தி ஷாட்ல எடுத்த டைரக்கடரும் படமும் அடுத்த ஷாட் பகுதியில்....



ஷாட்டை பத்தியே அதிகம் எழுதிக்கினு இருக்கேன் இது இப்படியே ஒரு ஓரமா போய்கிட்டு இருக்கட்டும்... பட் நடுவுல நடுவுல வெற சில சினிமா சுவாரஸ்யங்களையும் சொல்லறதா இருக்கேன்... அது அடுத்த பாகத்தில்...

குறிப்பு..
நான் பார்த்த, கேட்ட, படித்த, விஷயங்களை மட்டும் உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன்... இப்படி எழுதுவதை எல்லாம் வைத்து எதோ விஷயம் அதிகம் தெரிந்தவன் என்று நீங்கள் என்னை நினைத்தால் அது உங்களின் தவறாக மட்டுமே இருக்க முடியும்...


புகைபடங்க்ள் நன்றி சவுத் டிரீம்ஸ்


அன்புடன்
ஜாக்கிசேகர்

(உங்களுக்கு மேலே நான் எழுதிய விஷயங்கள் நிறைவானதாக இருந்தால் ஒரு நிமிடம் எனக்காக செலவு செய்து வாக்களித்து விட்டு செல்லுங்கள்....வாக்குகள் மற்றும் பின்னுட்டமே கண் விழித்து டைப்பும் என்னை உற்சாகபடுத்தும்)
இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

(SERBIS)18++ உலக சினிமா/பிலிப்பைன்ஸ்.. ஒரு கலீஜ் தியேட்டர்...


நாம் கலீஜ் என்று முகம் சுளிக்கும் இடத்தில்தான் பல பேர் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள்... அவர்களும் மனிதர்கள்தான்... அவர்களும் நம்மை போலவே இந்த பூமியில் வாழ வந்தவர்கள்...பிறப்பின் பின் புலத்தால் அந்த இடத்தில் வாழ்கின்றார்கள்...இந்த உலகில் எதுவுமே கலீஜ் இல்லை... முகம் சுளித்தால் எங்கும் வாழ முடியாது....உயிர் வாழ தகுதியுடையவனாக தன்னை மாற்றிக்கொள்ள எந்த இடத்திலும் எது செய்தாவது வாழ வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் விளிம்பு நிலை மனிதர்கள் பற்றிய கதை இது....
எங்கள் ஊர் கடலூரில் முத்தையா என்று ஒரு தியேட்டர்... அந்த தியேட்டர் டிவி வருகைக்கு முன் சக்கை போடு போட்டது... அந்த தியேட்டரில் பல படங்கள் குடும்பத்துடன் பார்த்து இருக்கின்றோம்...ஒரு கட்டத்தில் அந்த தியேட்டர் தன்னை புதுப்பித்துக்கொள்ள தவறிய காரணத்தால், அது பொலிவிழந்து போனது... அப்புறம் அந்த தியேட்டரில் பலான படங்கள் ஓடத்துவங்கியது....அதே போல் சென்னையில் பாடி பக்கத்தில் சாந்தி என்று ஒரு தியேட்டர் இருந்தது... இப்போது இருக்கின்றதா? என்று தெரியவில்லை... இருப்பினும் வடபழனியில் இருந்து பாடி பிரிட்டானியா பஸ் ஸ்டாப்பில் இறங்கி இரண்டு கிலோ மீட்டர் நடந்தால் அந்த தியேட்டர் வரும்....
எழே காலுக்கு படம் போட்டு இன்டர்வெல்லையும் சேர்த்து எட்டேகாலுக்கு படம் விடும் ஒரே தியேட்டர் அந்த தியேட்டர்தான்... படம் ஆரம்பித்த பத்தாவது நிமிடம் தமிழ், மற்றும் மலையாள படங்களின் பிட் ஓடும்... இன்டர்வெல் பத்து நிமிடம்... அதன் பிறகு ஆங்கில படங்களின் பிட் காட்சிகள் ஓடும்....மொழிக்கு ஓர வஞ்சனை செய்யாத ஒரே தியேட்டர் அதுதான்....

அதே போல் பரங்கிமலை ஜோதி.... ஆனால் தற்போது இந்த தியேட்டர் தன்னை புதுப்பித்துக்கொண்டு இப்போது ஆயிரத்தில் ஒருவன் படத்தை வெற்றி நடை போட வைக்க போராடி வருகின்றது...
இது போன்ற தியேட்டர்களில் வரும் பார்வையாளர்களில் ஒரு 20 சதவீதம் பேர் கஞ்சா புகைத்துக்கொண்டு இருப்பார்கள்...ஹோமோசெக்சும் இந்த இடங்களில் சங்கதே குறிகளாக பறிமாற்றம் செய்து கொள்ளபடும்... பட்டைசரக்கு அடித்து விட்டு அதாவது சராயம் அடித்து விட்டு வரும் குடிமகன்கள் ஏராளம்... இது போல் பலான படம் ஓடும் தியேட்டர்களின் பின்புலத்தை ஆராய்ந்தால் அதில் ஒரு விஷயம் நிச்சயம் புலப்படும்.. பார்ட்னர்கள் இருப்பதால் யார் மெயின்டெயின் செய்வது என்ற போட்டியிலேயே... பாதி தியேட்டர் கல்யாண மண்டபங்களாகி போய் விட்டது... அப்படி ஒரு பலான படம் ஓடும் பிலிப்பைன்சில் உள்ள ஒரு தியேட்டரின் கதையைதான் இதில் பார்க்க போகின்றீர்கள்....


(SERBIS)18++ உலக சினிமா/பிலிப்பைன்ஸ் படத்தின் கதை இதுதான்...

அந்த பலான படம் ஓடும் தியேட்டர் பெயர் பேமிலி.......Nanay Flor தான் அந்த தியேட்டரின் ஓனர் பெண்மணி...அவருக்கும் அவர் கணவருக்கும் சொத்து பிரச்சனையில் அந்த தியேட்டர் இருக்கின்றது.... இதனால் அந்த தியேட்டர் புதுப்பிக்காமல் இருப்பதை வைத்து அந்த தியேட்டரை ஓட்டுகின்றனர்... பலான படங்கள்தான் அந்த தியேட்டரின் வருமானத்துக்கு ஒரே வழி...Nanay Flor ன் பெண்Nayda மற்றும் அவள் குழந்தை அவள் கணவன் எல்லோரும் அந்த தியேட்டரிலேயே ஒரு பகுதியில் தங்கி இருக்கின்றனர்....டிக்கெட் கொடுக்க வேண்டும் என்றாள் அவள் மகள் கொடுப்பாள்... கேன்டின அவளது மருமகன் பார்த்து கொள்ள... இப்படி அந்த தியேட்டரையும் ரன் செய்து கொண்டு, குடும்பத்தோடு அந்த தியேட்டரில் தங்கி.... அந்த தியேட்டரை தன் கணவனிடம் இருந்து பெற கோர்ட் படிகட்டுகளில் Nanay Florபோராடுகின்றாள்....அந்த தியேட்டரில் அனைத்து சட்ட விரோதமான காரியங்களும் நடக்கின்றன...இரண்டு டிக்கெட் வாங்கி கொண்டு விலைமாதர்களுடன் தியேட்டரின் உள்ளே புணர்தலில் இருந்து,ஹோமோசெக்ஸ்வரை கொடிகட்டி பறக்கின்றது... இது எல்லாம் தியேட்டர் பெண்மணிக்கு தெரிந்தாலும் வருமாணம் வேண்டும் என்பதால் எல்லா வற்றையும் செய்கின்றார்கள்...
Alan அதே தியேட்டரில் வரும் பலான படங்களுக்கு தினசரி 4 காட்சிகள், இப்படம் இன்றே கடைசி போன்ற, சின்ன சின்ன வரை பணியில் இருந்து பெரிய பெரிய கவர்ச்சி படம் வரைவது எல்லாம் இவன் வேலைதான்.... ஆலன் அவன் கேர்ள்பிரண்டை தியேட்டர்வளாகத்தில் ஒரு அறையில் வைத்து காரியம் முடிக்க அவள் கற்பமாகின்றாள்.....Nanay Flor தன் கணவனுக்கு எதிராக சொத்துக்காக போராடினாலும் பெற்ற மகனே அப்பா பக்கம் சாட்சி சொல்ல கேசில் தோற்று போகின்றாள்... முடிவு என்ன என்பதையும் அந்த தியேட்டரை நம்பி உள்ள குடும்பமும் அதன் உறுப்பினர்களும் என்ன ஆனார்கள்? வழக்கம் போல் வெண்திரையில்...

படத்தின் சுவாரஸ்யங்களில் சில....


இது கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கான படம்.....

இந்த படம் பிலிப்பைன்ஸ் நாட்டின் சினிமா பாரடைசோ என்றால் மிகையாகாது...

இந்த படத்தை அப்பட்டமாக ரியாலிட்டியாக எடுத்து இருக்கும் இயக்குனர்Brillante Mendoza பாராட்டுக்குறியவர்...தியேட்டர் பாத்ரூமில் அடைப்பு ஏற்பட்டு சிறுநீர் மஞ்சள் கலரில் கனுக்கால் அளவு நிற்க்க அதனை கதாநாயகன் சுத்தபடுத்தும் அந்த காட்சி மேட்டுகுடி மக்கள் பார்த்தால் கண்டிப்பாக முகம் சுளிப்பார்கள்... அல்லது வாந்தி எடுத்து வைக்கும் காட்சி அது...
அந்த தியேட்டரில் ஆடு ஓடும்... திருடன் ஓடுவான், அவனை பிடிப்பார்கள்... விலைமாதர்கள் வரிசையாக நின்று ஆள் பிடிப்பார்கள்... இந்த சூழலில் ஒரு சிறுவன் பள்ளிக்கு போய் விட்டு வருவான்...

ஆலனும் அவன் காதலியும் புணரும் அந்த காட்சியும்... ஆலனின் பட்டைக்சில் இருக்கும் பழுத்த கட்டியை ஒரு பாட்டிலை எடுத்து அதன் வாய் புறத்தை அந்த கட்டியின் மேல் வைத்து அந்த பாட்டிலை ஒரு அடி் அடிக்க அந்த கட்டி பிய்த்துக்கொண்டு... ரத்தமும் சீழுமாக பாட்டிலில் பீய்ச்சி அடிக்கும் அந்த காட்சி உங்கள் மனதில் விட்டு அகல நெடுநாள் பிடிக்கும்...

இந்த படம் பார்க்கும் போது இப்படி எல்லாம் தியேட்டர் இருக்குமா? என்று நீங்கள் கேள்வி கேட்டால் அது உங்கள் அறியாமை என்றே சொல்ல வேண்டும்....

படம் முடிந்து பல மணிநேரம் அந்த தியேட்டர் பற்றிய நினைவு நம்முடனே இருக்கும்...

அந்த தியேட்டரின் ஒரு பகுதியில் ஹேமோசெக்ஸ் கொடி கட்டி பறக்கின்றது... ஹோமேசெக்சின் சக்கேத குறியீடு ஆங்கிலத்தில் சர்விஸ் என்ற பெயர் அதையே இந்த படத்துக்கு தலைப்பாகவும் வைத்து விட்டார்கள்...

இந்த படம் சென்னை 6வது உலக திரைப்படவிழாவில் உட்லண்ட்ஸ் தியேட்டரில் திரையிடபட்டது...

இந்த படம் கேன்ஸ் திரைபடவிழாவில் நாமினேட்டேட் செய்யபட்டது...
பாங்காக் உலக திரைபடவிழாவில் விருத பெற்றது...மற்றும் சிறந்த இயக்குனருக்கான விருதையும் பெற்றுதந்தது....

ஆலன் காதலியுடன் படுத்துக்கொண்டு உடைந்த கட்டியை பார்க்கும் காட்சிக்கு இங்கு கிளிக்கவும் 18++


படத்தின் டிரைலர்....






படக்குழுவினர் விபரம்...

Directed by Brillante "Dante" Mendoza
Produced by Ferdie Lapuz
Written by Armando Lao
Starring Gina Pareño
Coco Martin
Jaclyn Jose

Music by Gian Gianan
Cinematography Odyssey Flores
Editing by Claire Villa-real
Release date(s) 2008
Running time 1 hour, 33 minutes, 29 seconds minutes
Country Flag of the PhilippinesPhilippines
Language English
Tagalog
Filipino


அன்புடன்
ஜாக்கிசேகர்

(உங்களுக்கு மேலே நான் எழுதிய விஷயங்கள் நிறைவானதாக இருந்தால் ஒரு நிமிடம் எனக்காக செலவு செய்து வாக்களித்து விட்டு செல்லுங்கள்....வாக்குகள் மற்றும் பின்னுட்டமே கண் விழித்து டைப்பும் என்னை உற்சாகபடுத்தும்)
இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner