ஈரோட்டு பசங்க பாசக்கார பயபுள்ளைங்கதான்...(ஈரோடு தமிழ் வலைபதிவர் சங்கமம்)

வெளியூர் ஷுட்டிங் போய் பல மாதங்கள் ஆகிவிட்டன. ஈரோடுவலைபதிவர் குழுமத்தில் கலந்து கொள்ள நிறைய அன்பான அழைப்புகள் வந்தன...நான்  போவதா வேண்டாமா? என்ற இரட்டை மன நிலையில் இருந்தேன். இருப்பினும் சனி இரவு 8,30 மணிக்கு போவது  என்று முடிவு செய்து ஈரோடுக்கு வண்டி ஏறினேன்.எல்லா எஸ்ஈடிசி சொகுசு பேருந்துகளும் கர்பினியாய் இருக்க, ஒரு நேரடி ஈரோட்டு பேருந்தில்  ஏறி உட்கார்ந்தேன்... 131ரூபாய் என்றார் நடத்துனர்.. டிக்கெட் வாங்கி பின்பு போய் உட்காருங்கள் என்றார்.. இவ்வளவு குறைந்த கட்டணமா? என்று நினைத்து ஒரு  இருக்கையில் உட்கார்ந்தேன்..பேருந்து கிளம்பியதும் தெரிந்தது..என் வயிறுஜெயமாலினி வயிற்றைபோல் அதிர ஆரம்பித்தது..பேருந்தின் பின்பக்க இடப்பக்க டயர் எகிறிகுதித்துக்கொண்டு இருந்தது. சரி இனி அப்படியே ஏற்றுக்கொள்வதை தவிர வேறு வழியில்லை என்பதால் அப்படியே பயணப்பட்டேன்...

காலையில் இறங்கியதும் சிங்கை பிரபாகருக்கு போன் செய்ய...ஆட்டோ பிடித்து வீஎஸ்பி தியேட்டருக்கு பக்கத்தில் இருக்கும் சண்முகா லாட்ஜிக்கு வரச் சொன்னான் .. நான் பக்கத்தில் நின்ற நண்பரிடம் தியேட்டர் பற்றி விசாரிக்க அரை கிலோமீட்டருக்கு குறைவான தூரம் என்பதால் நடந்தே சென்றேன்...  அங்கு போனதில் இருந்து என்னை விட்டு இம்மியும் நகராமல் என்னோடு இருந்தவர் பதிவர் சங்கவி...

கார்த்திகை பாண்டியன்,ஈரோடுகதிர், மதுரை ஸ்ரீ, சிங்கை பிரபாகர், போன்றவர்களோடு நான் மண்டபத்துக்கு போனேன்... சும்மா சொல்லக்கூடாது.. நல்ல பெரிய மண்டபம்...  மிகச்சிறப்பாக ஏற்பாடுகளை செய்து இருந்தார்கள்.. ஆருரன் மற்றும் தமோதர் சந்ரு, பாலாசி, ஜபார், போண்றவர்கள் வரவேற்றார்கள். டிபன் கொடுத்தார்கள்.. டிபனில் ஸ்பெஷல் ஐயிட்டம் பூரியில் அப்பாயில் போட்டுக்கொடுத்தார்கள்..

வந்தவர்களிடம்  பெயர் வலைபூமுகவரி எழுதி கையெப்பம் வாங்கியதும் ஒரு சிறு நோட்டு புத்தகம், ஒரு எழுதுகோல், பதிவர் பழமைபேசி எழுதிய ஊர்ப்பழமை என்ற புத்தகம் அன்பளிப்பாக வழங்கபட்டது.. 
நானும் சங்கவியும் பாமரன் மற்றும் பெருமாள் முருகன் போன்றவர்களை அழைத்து வரச் சென்றோம்.. மண்டபத்துக்கு  வந்த போது வால்பையன்,அடலேறு,பரிசல்காரன் போன்றவர்களை சந்தித்தேன்... சென்னையில் இருந்து முன்று பேருக்கு மேல்  வந்து இருந்தாலும் நீங்க மட்டும்தான் சென்னையில் இருந்து வந்திங்களா? என்று கேட்டுக்கொண்டு இருந்தார்கள்...
சீனா அவர்கள் அவர் மனைவியுடன் வந்து இருந்தார்.. மற்றும் மேடி,  நண்டு நொரண்டு,குமுக்கி,வெயிலான்,ஸ்பீட் மாஸ்டர்,நந்து,வேலு, கணபதி, வசந்த், தாராபுரத்தான், விஸ்வநாதன் சுகிர்தா ராணி, சிவக்குமார் ,டாக்டர் கந்தசாமி,வெள்ளிநிலா சர்புதின்,போன்றவர்களும் பெண்பதிவர்களில் கணிசமானவர்களும் வந்து இருந்தார்கள்..வால்பையன் தன் மனைவி குழந்தையுடன் வந்து இருந்தார்.. குழந்தை மிக அழகாக இருந்தது...பெயர் விடுபட்டு இருந்தால் மன்னிக்கவும்...


சிறுகதைகள் உருவாக்குவோம் என்ற தலைப்பில் பெருமாள் முருகன் பேசினார்...சிறுகதைகள் சமகால வாழ்வியல் பிரச்சனைகளை சொல்லக்கூடியதாக இருக்க வேண்டும் என்றும் இப்போது வெகு ஜன பத்திரிக்கைகள் சிறுகதைகளை குறைத்து விட்டன என்றும் சொல்லி வருத்தபட்டார்...


அடுத்து பேச வந்த பாமரன்.. வலைஉலகத்துக்கு தான் வந்த கதை பற்றி சுவைபடவும் சிரிப்பாவும் பேசினார்... 1980 களில் பத்திரிக்கையில் கதை வருவது ஏழுகடல் எழு மலைதாண்டிய விஷயம் என்பதை சொன்ன போது இப்போதைய இணையவளர்ச்சிக்கு நாம் நன்றி சொல்லிக்கொள்ள வேண்டும்...

குறும்படம் எடுக்கலாம் என்ற தலைப்பில் தமிழ் ஸ்டுயோ அருனும், உலகபடங்கள் என்ற தலைப்பில் வக்கில் சிதம்பரமும் அவர்களும் பேசினார்கள்..
எனக்கு பேருந்தில்  வந்த களைப்பில் தூக்கம் கண்ணை சொருக மேடையில் இருந்த ஓசைச்செல்லா என்னை தனது கூலர் வழியாக நோட்டம் விட்டபடி இருந்தார்.. நான்  பக்கத்தில் இருந்த பரிசலிடம் என் கேமராவை  கொடுத்து விட்டு சிறிது  கண் அயரலாம் என்று நினைக்கும் போது முன் வரிசையில் தூங்கினால் நன்றாக ,இருக்காது என்பதால் முகம் கழுவி பின்பு தெளிவு பெற்றேன்..
நண்பர்கள் வருவதும்  என்னிடம் கைகூலுக்குவதுமாக இருந்தார்கள். அவர்கள் தளங்களை அறிமுகப்படுத்திக்கொண்டார்கள்.மதிய இடைவேளைக்கு முன்பு பதிவர் அறிமுக நிகழ்ச்சி நடந்தது...  நான் வந்து என்னை அறிமுகபடுத்திக்கொண்ட போது.. கைதட்டி ஈரோட்டு  பாசக்காரபயல்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிபடுத்திக்கொண்டனர்.. ஜாக்கிசேகர், பிருத்தாவனமும் நொந்தகுமாரன் என்ற தலைப்பில் எழுதுகின்றேன்..சொந்த ஊர்  நடுநாடு என்று அழைக்கபடும் கடலூர்... பிழைப்புக்காக சென்னை என்று சொல்லிவிட்டு... எனது எழுத்து லோக்கலாக இருப்பதாக கருத்து உலாவுவதாக சொல்லிவிட்டு வந்தமர்ந்தேன்.. கைதட்டி என்னை கவுரவபடுத்தினார்கள்..அதேபோல கைதட்டல் வாலுக்கு பரிசலுக்கும் கிடைத்தது..மதியம் நான்,வால், வாலின் போலிஸ்கார  நண்பர்,சங்கவி,ஸ்ரீ, நண்டு,மோடி போன்றவர்களோடு பெக்கார்டி அடித்து தாகசந்தியில் முழ்கினோம்.. வால்பையனின் கரகர குரல் எனக்கு ரொம்ப பிடிக்கும் வால்பாலோயர்கள் பற்றி நான் பேச என்னை போல ஆக வேண்டும் என்று வால் ஆசைபட்டார்...நண்டு நிறைய பேசினார்... மதிய சாப்பாட்டுக்கு வந்த போது தினமும் ஐயங்கார் சமையலில் என் நாக்கு செத்து போய் இருக்க..மட்டன் தனியாக, பள்ளிபாளையம் சிக்கன் தனியாக, அப்புறம் போட்டிதனியாக என அசைவ உணவை தலைவாழை இலையில் போட்டு அசத்தினார்கள்..உணவு மிக அற்புதம் சான்சே இல்லை...இரை முழுங்கிய மலைபாம்பு போல் மெல்ல நான் மாயில் இருந்து கீழே வந்தேன்..
 அப்போது நிகழ்சியில் நிழற்படங்கள் எடுப்பது எப்படி? என்று கருவாயன் சுரேஷ் விளக்கி கொண்டு இருந்தார்... மிக நன்றாக கிளிப்பிள்ளைக்கு சொல்வது போல் சொல்லிக்கொடுத்தார்.. பல பதிவர்களுக்கு அந்த நிகழ்ச்சி மிக யூஸ்புல்லாக இருந்து இருக்கும்..
அடுத்து பேச வந்த ஓசை செல்ல இன்றைய இணையம் மற்றும் தமிழ் இணையம் கடந்து வந்த பாதைகளை சுவைபடவிவரித்தார்..அப்பெல்லாம் மெயில் ஓப்பன் செய்து விட்டு, கீழே போய் போண்டா, டீ சாப்பிட்டு வந்த பிறகு இன்பாக்ஸ் ஓப்பன் ஆகி இரண்டு மெயில் வந்து இருப்பதாக காட்டுமாம்.. அவ்வளவு நெட் சுலோவாக இருக்குமாம்.. ஆனால் இப்போது நினைத்துபார்க்கும் போது இணைய வளர்ச்சி சிறப்பாக இருப்பதற்கு  நாம் பெருமை கொள்ள வேண்டும்.அடுத்து பேச வந்த லக்ஷமணராஜா... நிழற்படங்களை எவ்வாறு அதுவும் திருமண புகைபடங்களை எவ்வாறு ஆவணபடுத்த முடியும் என்று  பேசினார்.. அவர் காட்டிய  புகைபடங்களில், ஒருபுது  கணவன் மனைவியின் 5நிமிட நெருக்கத்தை மிக அழகாக கடிகாரத்துடன் ஆவனபடுத்தி இருந்தார்.. அவர் நண்பர் எடுத்த  சில மலைவாழ் மக்கள் பற்றிய புகைபடங்களில் ஒரு பையன் குளோசப்பில் இருக்க..பின்புலத்தில் அவன் கடந்து வந்த பாதையின் தூரத்தை உணர்த்திய அந்த புகைபடம் என்னை மகிவும் கவர்ந்தது...

அடுத்து  இணையம் பற்றிய கலந்துரையாடல் நடந்தது... தலைவர்களாக..பரிசல், கார்த்திகை,சீனா,வெயிலான் போன்றவர்கள் மேடையில் வீற்று இருக்க பதிவர்கள் அரைவட்டவடிவில் அமர்ந்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்கள்... வால்பையன்தனது கருத்துக்களை ஆணித்தரமாக பகிர்ந்து கொண்டார்...நானும் சில கருத்துக்களை முன்வைத்தேன்.. விழா முடியும் போது  நான் பேசினேன்..உலகபடவிழாவில் கலந்து கொண்ட போது என்னை பார்க்க வந்த கார்த்திகை பாண்டியன் வாங்கன்னே என்று அழைப்பு வைத்த போது கூட நான் நம்பவில்லை இப்படி விழா சிறப்பாக அமைப்பார்கள் என்று எண்ணவில்லை... ஆனால் முதல் நாள்  ரூமில் இருந்து மண்டபத்துக்கு வரும் வாகனவசதிவரை
யாரை தொடர்பு கொள்ள வேண்டும் என்று பெயர்களை போட்டு மிக அழகாக நடத்தினார்கள்..தமோதர் சந்ரு வெங்காய மூட்டையை தோளில் தூக்கிக்கொண்டும்..ரத்தம்  சொட்டும் ஆட்டு இறைச்சியை ஈரோடு கதிர் எடுத்துக்கொண்டு  ஒடியதை பார்க்கும் போது விழா சிறப்பாக நடக்க எல்லோரும்   உழைத்துக்கொண்டு இருந்தார்கள்... மிக திட்டமிட்டு காய் நகர்த்தி விழாவை சிறப்பிக்க வைத்த நண்பர்களுக்கு நன்றி கூறினேன்-

வெயிலான் அருகில் வந்து பொதுவாக எழுதுபவர்கள் சரியாக பேசமாட்டார்கள்.. நீங்கள் இரண்டையும்  சிறப்பாக செய்கின்றீர்கள் என்று மனம் திறந்து பாராட்டினார்... நன்றி வெயிலான்...


அதன் பின் குழு குழுவாக பேசிகலைந்தனர்..பெண்பதிவர்கள் பலர் வந்து இருந்தார்கள்..  எனக்கு யாரோடும் பழக்கம்  இல்லை...

இந்த விழாவில் நான் கலந்து கொள்ள ஆர்வமாய் இருந்த சிங்கைபிரபா என் நன்றிக்கு உரியவர்..விழா புகைபடங்களை சிங்கை பிரபாகர்  வளைத்து வளைத்து எடுத்தார்.. நன்றி பிரபா.. என் பிளாக்கில்  இருக்கும் சில புகைபடங்கள் அவர்எடுத்தவையே...


திரும்ப மண்டபத்தின் மாடியில் விழா முடிந்ததும் களைப்பு தீர தாக சாந்தி நடக்க இதில் முக்கியதலைகள் கலந்து கொணடனர்..  ரொம்ப நாட்களாக தாமோதரன் சந்ரு என்பவர் எனக்கு பாலோயர் அவர் யார்  என்று எனக்கு தெரியாது??? ஆனால் இந்த முறை நேரில் பார்த்த போதும் அந்த விழா ஏற்பாட்டுக்கு அவர் உழைத்ததை பார்த்த போது அவரின் தாராளமான மனதையும் பதிவர்கள் மேல் இருக்கும் மரியாதையையும் அறிந்துகொண்டேன். பதிவர்களின் சீனியர் அவர்...

சென்னை வரும் போது  அவசியம் சந்திப்போம் என்று கூறினார்... நன்றி தாமோதர் அவர்களே..

வாலுக்கும் ஓசை செல்லாவுக்கு ஒரு கருத்து மோதல் நிகழ்ந்து அடங்கியது.. பாமரனோடு பேசினேன்...
யார் என்று தெரியாமலேயே முரளிகுமார் பத்மநாபனோடு பேசி அதன் பிறகு  உண்மை தெரிந்து அசடு வழிந்தேன்...

என்னை பற்றி  பேசும் போது நிறைய பேர் வெள்ளந்தி மனிதர் என்று சொன்னார்கள்.. என் மனைவி மட்டும் இந்த வார்த்தையை கேட்டு இருந்தால்.. அவளுக்கு ஹார்ட் அட்டாக்கே  வந்து விடும்.நல்லவேளை அவள் இல்லை..

எல்லோரிடமும் பேசிவிட்டு கதிர் காரில் அவர் ஆபிசுக்கு போனேன்.அங்கு ஏற்க்கனவே எழுதி டிராப்ட்டில் இருந்த  சாண்ட்விச் போஸ்ட்டை போஸ்ட் செய்தேன்.. துபாயில் இருந்து செந்தில் வேலன் பேசினார்...அமெரிக்காவில் இருக்கும் அமரபாராதி.. நான் விழாவுக்கு வந்தமைக்கு நன்றி தெரிவித்தார்...அடுத்தமுறை  விழாவில் சந்திக்க இருப்பதாக சொன்னார்..ஈரோடு சென்னை அளவுக்கு கலர்புல்லாக இல்லைஒரு பிகரையும் காலையில் இருந்து நான் பார்க்கவில்லை..

நான் ஈரோட்டுக்கு விழாவுக்கு வந்தைமைக்கு எல்லோரும் கும்பலாக ஓ போட்டார்கள்... நெகிழ்ச்சியாக நன்றி சொல்லி கைகுலுக்கி உடம்பு அனைத்து என்னை வழி அனுப்பினார்கள்.. குமுக்கி  சொன்னார்... எந்த பிரச்சனைக்கும் கவலைபடவேண்டாம் ஜாக்கி.. நாங்கள் இருக்கின்றோம் என்று சொன்னார்..  செய்வது செய்யாதது.. வேறு விஷயம்... அந்த வார்த்தை போதும்...
என்னை பேருந்து நிலையத்தில் டிராப் செய்தவர் ஜபார்.. ரொம்பவும் பாசக்கார பயபுள்ள....நிறைய பேசியபடி வந்தோம்.. அப்போதுதான்...சரியாக தேவி அபிராமி தியேட்டர் வாசலில் பார்த்தேன்...ஒரு ஆடவனின்  கைபிடித்த படி அந்த மயில் ரோட்டை கிரஸ் செய்தது.. அழகான பெண்ணை மயில் என்று சொல்லாம்..தப்பில்லை..ஜபார் அந்த மயிலின் மேல் இடித்து விடுவது போல வாகனம் ஓட்டிய போது ஜாபர் மேல் கோபம் வந்தது... தேசிய பறவையை பாதுகாக்கும் நாம்  இந்த மயில் ரோட்டில்  பாதுகாப்பு இல்லாமல் கிராஸ் செய்வதை என்னால் எற்றுக்கொள்ளமுடியவில்லை...
 
ஜபாருக்கு நன்றி தெரிவித்து நான் விடை பெற்றேன்... கேபிஎன்னில் நிறைய மயில்கள் ஏறி இடம்  பிடித்து ,தங்களது உடமையை மேலே வைக்க  இருக்கையையும் உயர்த்தி அவர்கள் உடமை வைக்க போராடும் போதும் என் மனதும் நிறைய போராட்டத்தை சந்தித்தது.....


28 ஆம்  எண் என்பதால் கடைசியில் இருக்கும் இருக்கை அது .. என் எதிரில் எந்த இருக்கையும் இல்லை.. நன்றாக தூங்கும் போது சடன் பிரேக் அடித்தால் இரண்டு மூன்று குட்டிக்கரணம் அடித்து டிவி இருக்கும் முன் பக்கம் செல்ல வாய்ப்பு இருக்கும்  காரணத்தால் தூக்கம் தானாக வரும் வரை வெயிட்  செய்தேன்..  பேருந்து வேலூர் தண்டிய போது எனக்கு துக்கம் கலைந்தது.. சிறுநீர் கழிந்து விட்டு என் சீட்டுக்கு போக நினைக்கும் போது டிரைவர் துணையில்லாமல் தனியாக ஓட்டுவது தெரிந்து அவரோடு உட்கார்ந்து கொண்டு பேசியபடி வந்தேன்... அவர் பல விஷயங்கள் பகிர்ந்து கொணடார்..அது பற்றி நேரம் கிடைக்கும் போது பகிர்ந்து கொள்கின்றேன்..

 விடியலில் கிண்டி கத்திப்பாராவில் இறங்கினேன்..
பேருந்து நிறுத்தம் நோக்கி நடை போட்டேன்.. பாசக்கார பயபுள்ளைகளின் கவனிப்பை நினைத்தபடி நடக்க தொடங்கினேன்...

இந்த பெருத்த சென்னைமாநகரின் உதயத்தின் போது நான்சின்ன புள்ளியாக மாறி காணாமல் போனேன்...

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....

குறிப்பு..

இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகடுத்துங்கள்.

பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்.

33 comments:

 1. பகிர்வுக்கு நன்றி தோழர்

  ReplyDelete
 2. // என்னை பற்றி பேசும் போது நிறைய பேர் வெள்ளந்தி மனிதர் என்று சொன்னார்கள்.. என் மனைவி மட்டும் இந்த வார்த்தையை கேட்டு இருந்தால்.. அவளுக்கு ஹார்ட் அட்டாக்கே வந்து விடும்.நல்லவேளை அவள் இல்லை.. //


  எனக்கும் தெரியும் நீ ஒன்னாம் நம்பர் படவா ராஸ்கோலு இன்னு :))))

  ஈரோடு சென்று வந்த உணர்வை கொடுத்துவிட்டாய்
  மச்சி !

  ReplyDelete
 3. 'உங்கள் கவனிப்பிற்குப் பாராட்டுகள்' (அதிலும் தாகசாந்தி அடைந்த பின்பும் இத்தனை விசயங்களை நினைவில் வைத்திருப்பது சிறப்பு ;) }

  எல்லாவற்றையும் நன்றாக தொகுத்து வழங்கியுள்ளீர்கள்.

  ReplyDelete
 4. //ஜபார் அந்த மயிலின் மேல் இடித்து விடுவது போல வாகனம் ஓட்டிய போது ஜாபர் மேல் கோபம் வந்தது... தேசிய பறவையை பாதுகாக்கும் நாம் இந்த மயில் ரோட்டில் பாதுகாப்பு இல்லாமல் கிராஸ் செய்வதை என்னால் எற்றுக்கொள்ளமுடியவில்லை...//

  இந்த மாதிரி யதார்த்தமா எழுதுவதால்தான் உங்களை வெள்ளந்தி மனிதர் என்று சொல்கிறார்களா.?!

  ReplyDelete
 5. //ஜபார் அந்த மயிலின் மேல் இடித்து விடுவது போல வாகனம் ஓட்டிய போது ஜாபர் மேல் கோபம் வந்தது... தேசிய பறவையை பாதுகாக்கும் நாம் இந்த மயில் ரோட்டில் பாதுகாப்பு இல்லாமல் கிராஸ் செய்வதை என்னால் எற்றுக்கொள்ளமுடியவில்லை...//

  ஆஹா என்ன ஒரு கரிசனம்..முடியல

  ReplyDelete
 6. பங்காளி...

  நீங்கள் ஈரோட்டுக்கு வந்த எங்களை எல்லாம் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி...

  ReplyDelete
 7. தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றிகள் பல

  ReplyDelete
 8. சந்திப்பில் நடந்த நிகழ்வுகளை மிக யதார்த்தமாகவும் சுவாரசியமாகவும் சொல்லியிருக்கீங்க அருமை அண்ணே

  பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 9. :-)சீக்கிரமா முன்னாடி ஜீரோ போட வாழ்த்துகள்

  ReplyDelete
 10. சூப்பரா எழுதி இருக்கீங்க தல, ஈரோடு போன மாதிரி இருக்குது

  ReplyDelete
 11. ஜாக்கி,

  அருமை, ஈரோட்டில் கோலமாய் இருந்த நீங்கள் சென்னையில் புள்ளியாய் போனீங்களா, அதான் சென்னை.

  நல்ல பகிர்வு, ஜாக்கி. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 12. உங்கள் எழுத்து நடையில் அருமையாக பகிர்ந்துள்ளீர்கள். ஆமா மயிலைப் பார்த்ததை அண்ணியிடம் சொல்லிவிட்டீர்களா? வலைப்பூ பார்த்து தெரிந்து கொண்டால் பூவும் புயலாகாலாம் பார்த்துக் கொள்ளுங்கள்.

  ReplyDelete
 13. உங்களின் எழுத்து நடை மேம்பட்டிருப்பது மிக அழகாக தெரிகிறது, வாழ்த்துகள்,
  ஏதோ உங்களோடு அமர்ந்து, நிகழ்வுகளை அசை போடும் உணர்வை கொடுத்திருக்கிறீர்கள்,
  தொடருங்கள் உங்கள் ஆக்கங்களை

  நட்புடன்,
  மார்கண்டேயன்

  ReplyDelete
 14. vijay டிவியில் நந்தலாலா நிகழ்ச்சி பாக்கும்போது, இந்த ஆள எங்கையோ பாத்திருக்கனேன்னு நெனச்சேன். இப்பத் தெரிஞ்சது. :)

  ReplyDelete
 15. தங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சியடைந்தேன் .

  ReplyDelete
 16. உங்களுக்கு அவார்ட் தந்திருக்கிறேன் பெற்றுக் கொள்ளுங்கள் நன்றி
  http://mabdulkhader.blogspot.com/2010/12/blog-post_26.html#

  ReplyDelete
 17. பகிர்ந்தமைக்கு நன்றி ஜாக்கி. விரைவில் சந்திப்போம்

  ReplyDelete
 18. நேரில் கலந்துகொண்டதுபோல ஒரு உணர்வு ...

  ReplyDelete
 19. நடந்ததை அப்படியே கண் முன் கொண்டுவந்துள்ளீர்கள்..

  ReplyDelete
 20. வருகைக்கும், அன்பிற்கும் எல்லையில்லா நன்றிகள் ஜாக்கி!

  ReplyDelete
 21. நல்லதொரு பகிர்வு ஜாக்கி.

  ReplyDelete
 22. பதிவர் சங்கமத்தில் பள்ளிப்பாளையம் சிக்கன் சாப்பிட்டதுபோல இருந்தது பதிவு. வெரிகுட்.

  ReplyDelete
 23. என்னையும் நினைவுபடுத்தி எழுதியமைக்கு நன்றிங்க.

  ReplyDelete
 24. அப்பாடி, உங்கள் முகத்தையும் பெயரையும் sync செய்ய இரண்டு நாட்கள் ஆகிவிட்டன ஜாக்கி சேகர். உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. இப்படியே ஈரோட்டிற்கு வந்திருந்த நூத்திசொச்சம் பேரையும் அடுத்த ஈரோடு சந்திப்பிற்கு முன் sync செய்து விடுவேன் என்று நம்புகிறேன். அப்புறம் பாருங்க, அடுத்த சங்கமத்தில் நான்தான் ஹீரோ. (இப்பவும் ஹீரோதானுங்க. ஆனா அது ரொம்ப பேருக்குத் தெரியாது)

  நான் எழுத நினைத்ததை எல்லாம் நீங்களே எழுதி எனக்கு வேலையில்லாமல் செய்து விட்டீர்கள். நன்றி.

  ReplyDelete
 25. /எனது எழுத்து லோக்கலாக இருப்பதாக கருத்து உலாவுவதாக சொல்லிவிட்டு வந்தமர்ந்தேன்..///

  அண்ணே ஈரோட்டில் இருக்கும் பொது நீங்க எப்படி லோக்கல் ஆக முடியும். STD தான?

  ReplyDelete
 26. //இந்த பெருத்த சென்னைமாநகரின் உதயத்தின் போது நான்சின்ன புள்ளியாக மாறி காணாமல் போனேன்...//

  உண்மைதான்

  ReplyDelete
 27. ஈரோடு சென்று இருந்தீர்களா?? நன் மிஸ் பண்ணி விட்டேன் முக்கியமான ஒரு வேலையாக வெளியூர் சென்றுவிட்டேன்.

  அடுத்த முறை கண்டிப்பாக நானும் உங்களுடன் சேர்ந்து கொள்கிறேன்

  ReplyDelete
 28. பின்னுட்டம் இட்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்தமைக்கு எனது நன்றிகள்..


  ரொம்பவும் சந்தோஷப்படுத்திய ஈரோட்டு நண்பர்களுக்கு மிக்க நன்றி..

  ReplyDelete
 29. குழந்தையின் பெயர் வருணா!

  ஈரோட்டு மயில்கள் கொத்தும், பார்த்து ஜாக்கிரதையா ரசிங்க தல!

  ReplyDelete
 30. ///ஈரோடு சென்னை அளவுக்கு கலர்புல்லாக இல்லைஒரு பிகரையும் காலையில் இருந்து நான் பார்க்கவில்லை..

  எல்லா மயில்களும் வெளி ஊருல படிக்கிறாங்க அண்ணோய்..... ;-)

  ReplyDelete
 31. நண்பரே!
  தங்களது இந்தப்பதிவு ஒரு பயணக்கட்டுரையாகவே இருந்தது.
  இந்த மாதிரியான கலப்புக் கூட்டத்தில் -
  1.செய்ய வேண்டியவைகளாக வைத்த யோசனைகள்
  2.அதையொட்டிய விவாதங்கள்
  3.ஒரு முகமாக நிறைவேற்ற ஒத்துக்கொண்டவைகள்
  என்று இருக்க வேண்டும்ல்லவா?

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner