மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/17•10•2010)

ஆல்பம்..
நேற்று அகநாழிகை பதிப்பகத்தின் சென்னையில் பரத்தை கூற்று கவிதை புத்தக வெளியிட்டு விழா, கே கே நகர் டிஸ்கவரி புக் பேலசில் நடந்தது... நல்ல கூட்டம்.நான் ஆயுதங்களை எல்லாம் கழுவி பொட்டு வைத்து, படையல் போட்டு கிளம்பி செல்ல நேரமாகிவிட்டது... எழுத்தாளர் சாரு பேசிக்கொண்டு இருந்தார்...அந்த சிறிய ஹாலில் 1000 வாட்ஸ் லைட் போட்டு ஒரு வீடியோகிராபர் நிகழ்வை டேப்பில் திண்னகொடுத்துக்கொண்டு இருந்தார்... அதனால் அத்தனை பேரின் கபாலங்களிலும் வியர்வை வழிந்து ஓடிக்கொண்டு இருந்தது...சாரு அந்த கவிதை புத்தகத்தில் இருக்கும் ஒரு கவிதையை வாசித்தார்...



“விரல் தொடுகிறாய்
இதழ் தொடுகிறாய்
இடை தொடுகிறாய்
முலை தொடுகிறாய்
பிருஷ்டம் தொடுகிறாய்
யோனி தொடுகிறாய்
எவனும் மனசு தொட்டதில்லை” ...

அதன் பின் அதே புத்தக தொகுப்பில் ஒரு கவிதையை வாசிக்கும் போது சின்ன பசங்க காதை பொத்திக்கொள்ள சொன்னார்...பிளவு வெடிப்பு என்று போனது சரியாய் நினைவில்லை.. ஆனால் நண்பர் புத்தகம் வாங்கிய போது அதனை வாசித்து பார்த்தேன்...
==========
“களைத்துறங்குமென்னை
எழுப்பிப் புணர விழையும்
நீயென்ன ஆம்பிளை?”

இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்த வரிகள்.....
========
“எந்த ஆண்மகனும் இதுவரை
நேருக்கு நேர் சந்தித்ததில்லை
என் கண்களின் அலட்சியத்தை”
==========
சாரு பல கவிதைகள் விசில் அடிக்கும் ரகம் என்றார்... கவிஞர் சரவணகார்த்திகேயன் நன்றியுரை வழங்கும் போது பிரின்ட் செய்யபட்ட புத்தகத்தை வைத்த நன்றியுரை வாசித்தது  எனக்கு நிறைவை தரவில்லை... விழா முடிந்து.. கவிஞர் சரவண கார்த்திகேயன் என்னிடம் வந்து ஜாக்கி நலமா?என்றார்.. எனக்கு அவரை தெரியாது? என்னை அவருக்கு தெரிந்து இருக்கின்றது... இது போலான நேரத்தில்  எனக்கு எப்படி ரியாக்ஷன் தருவது என்றே தெரியவில்லை...நான்  கை கொடுத்து சிரித்து வைத்தேன்...
எனக்கு தெரியாத பலரை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்த தமிழ் பதிவுலகத்துக்கு என்  நன்றிகள்... விழாவில் மிஸ் ஆனவர்கள்.. அண்ணன் உண்மைதமிழன் மற்றும் பட்டர்பிளை சூர்யா?? சூர்யா என்ன உடம்பு சரியாகிவிட்டதா??? கார்க்கி, அப்துல்லா  சான் வருவதற்குள்  வந்து சென்று விட்டதாக சொன்னார்கள்..
===========
நேற்றைய புத்தக வெளியீட்டு விழா ஒரு மினி பதிவர்  சந்திப்பு போல் இருந்தது. மணிஜி,நர்சிம்,லக்கி அதிஷா,கேபிள்,பெஸ்கி,சாம்ராஜ பிரியன், ராஜகோபால் , உழவன், சங்கர்,விஜயமகேந்திரின் என இன்னும்  பலர் வந்து இருந்தார்கள்... என்னை  லோக்கல் என்று கலாய்த்துக்குகொண்டு இருந்தார்கள்...அகநாழிகை வாசு தனது காரில் வக்கில் சின்னத்தை பொறித்துவிட்டார்...
=====
சிலி நாட்டு சுரங்கத்தில் மாட்டிக்கொண்டவர்கள் மீண்டு வந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி...  சற்றே  கற்பனையில் அவர்கள் பொசிஷனில் நீங்கள் இருந்தால் எப்படி இருக்கும்  என்று? நினைத்து பாருங்கள்... கற்பனைக்கே தாவு தீர்ந்து விடுகின்றது அல்லவா??
=========


மிக்சர்..
என் எழுத்து பிழைக்கான புலம்பல்களை  நான் கவனித்துக்கொண்டுதான் இருக்கின்றேன்... அதில் எனக்கு வருத்தம் இல்லை என் மீது அன்பு கொண்டு அது நக்கலாக சொல்லி கூட என்னை திருத்தலாம் அல்லவா?, நான் அதனை அப்படித்தான் எடுத்துக்கொண்கின்றேன்...நன்றிக எழுதுகின்றோம்.. குறைவாய் வாசிக்கின்றார்கள்...  எழுத்து பிழையோடு எழுதறான்.. நிறைய பேர் வாசிக்கறாங்க.. இன்னும் பிழையில்லாம எழுதினா??? இன்னும் நல்லா இருக்குமே என்பதாக கூட நினைத்து இருக்கலாம்....

எப்போதும் என் மீது அன்பு பாராட்டும் மணிஜி டேய் அர்த்தத்தை அனத்தமாக்கிடாதே அதனால பிழைகளை திருத்தி போடு என்ற கிளிப்பிள்ளைக்கு சொல்வது போல் சொல்லிக்கொண்டு இருப்பார்...முடிந்த வரை இப்போது எல்லாம் படித்து திருத்திவிட்டு போடுகின்றேன்.. என்னை தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு தெரியும் முன்னைக்கு இப்போது எவ்வளவோ பராவாயில்லை என்று... ஒரு நண்பர் தமிழ் ஒழுங்க எழுதும் வரை மைனஸ் ஓட்டு தொடரும் என்று  பின்னுட்டத்தில் வந்து மிரட்டி விட்டு போனார்...இதில் கொடுமை என்னவென்றால் அவர் சாரி தமிழ் டைப்பிங் தெரியாது என்றார்...நைனா தமிழ் டைப்பிங் எனக்கு சுத்தமா தெரியாது?? 2007ல்தான் எனக்கு கம்யூட்டர் பரிச்சயம்... அதுக்கு அப்புறம் தட்டி தடவி , தமிழ்  எழுத்து பிழைகள் செய்து   திட்டு வாங்கி, இப்போது அறியபடும் ஆளாக வளர்ந்து, அண்ணன் உண்மைதமிழன் அவர்களுக்கு ஈடு கொடுக்கும் அளவுக்கு பெரிய பதிவை டைப் அடிக்கின்றேன் என்றால் அது என் கற்றுக்கொள்ளும் ஆர்வம்... என்னை  டிஸ்கிரேஜ் செய்கின்றார்கள் என்று நினைத்து இருந்ததால் இத்தனை பேரிடடம் நான் சென்று சேர்ந்து இருக்க முடியாது.....

ஒரு  சந்தோஷமான விஷயம்... இப்போது கீ போர்ட்டில் அடித்தாலும் மானிட்டர் பார்த்து அடிக்க இப்போதுதான் பிராக்டிஸ் செய்து கொண்டு இருக்கின்றேன்... ஆனால் என்னை வாசிக்கு பல முகம் தெரியாத நண்பர்கள் சில நேரத்தில் அப்படியே நெகிழ வைத்து விடுவார்கள்.. அப்படி நான்  நெகிழ்ந்த வாசக நண்பர் அழகன்  எனும் அண்ணாநகர்வாசியின் பின்னுட்டம்.100% லோக்கல் பதிவுக்கு வந்த  பின்னுட்டம்  உங்கள் பார்வைக்கு... அதுதான் உங்கள் புலம்பல்களுக்கான  பதிலும் கூட...

உங்கள் பதிவுகளுக்கு நான் ரசிகன். உங்கள் சினிமா விமர்சனங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். எழுத்துப் பிழைகள் போகப் போக சரியாகிவிடும், அதெல்லாம் ஒரு விஷயமே இல்லை. நீங்கள் இவர்களைப் போன்றவர்களை கண்டுகொள்ளாமல் உங்கள் பணிகளைத் தொடருங்கள். உங்கள் பக்கத்தில் நாங்கள் எத்தனை பேர் இருக்கிறோம் என்று பாருங்கள்!. (நான் ஒரு அண்ணா நகர் வாசி என்பது எந்த விதத்திலும் உங்கள் எழுத்துக்களை ரசிக்க தடையாக இல்லை, இதுவரை. இருக்கப் போவதுமில்லை, என்றும்.வசிக்கும் இடம் ஒரு அடயாளத்துக்குத்தானே?)

நன்றி அழகன்..
========
100% லோக்கல் பதிவுக்கு பிறகு தங்களது பத்தாவது மதிப்பெண்ணை மிக தைரியமாக வெளியே சொல்வது குறித்து எனக்கு மகிழ்ச்சிதான்... அந்த பின்னுடங்களிலும் இது பிரதிபலிக்கின்றன....
================

இந்தவார நிழற்படம்..
நேற்று புத்தக வெளியீட்டு விழா முடிந்து வெளியே பேசிக்கொண்டு இருக்கும் போது திடும் என மழை பெய்ய தொடங்கிவிட்டது.. எல்லோரும் பக்கத்தில் இருந்த கடை ஷட்டர் அருகில் தலை நனையா வண்ணம் தஞ்சம் அடைந்தோம்....ஒரு  சிகப்பு டீஷர்ட் அணிந்த பெண் நடந்து போய்கொண்டு இருந்தாள்... சட்டென ஏதோ நினைத்து திரும்பி பார்த்தால் பதிவுலக நண்பர்கள் பலர் என்னை பார்த்துகொண்டு இருந்தார்கள்...டேய் என்னை பிரியா விடுங்கப்பா..
==================================
இந்தவார சலனபடம்...

பொதுவாக சினிமா ஷுட்டிங்குகளில் என்னை மிகவும் கவர்ந்த விஷயம் பாடல்கள் அதனை படம் ஆக்கும் விதமும்... அதில் ஆடும் ரிச் கேர்ள்ஸ்  மற்றும் டான்சர்ஸ் புழிய புழிய  அவர்களிடம் இருந்து வேலை வாங்குவார்கள்.. இடுப்பை வெட்டி ஆட்டுதல் என்பதை சிம்ரனுக்கு பிறகு யாரும் அந்தளவுக்கு சிறப்பாக செய்யவில்லை.. நான் கூட தனியாக எனது யாருமில்லாத அறையில் சிம்ரன் போல இடுப்பை வெட்டி ஒரு ஸ்டெப் அட்டம் போட மகா கேவலமாக இருந்து தொலைத்தது...இயக்குனர் வசந்  படங்களில் பாடல்களுக்கு எப்போதுமே தனி முத்திரை உண்டு... அந்த பாடல்களுக்கு அதிக சிரத்தை எடுத்துக்கொள்வார்கள்...மதுரை நாயக்கர் மகாலில் கேமராமேன் கேவிஆனந் எடுத்த இந்த பாடல் என் பேவரிட்.. மிக முக்கியமாக அந்த நடன அசைவுகள்.. மற்றும் கோரியோகிராபி கம்போசிஷன்.... 4நிமிடத்தில் தமிழ் ரசகர்கள் தம் அடிக்க எடுத்துக்கொள்ளும் நேரத்தில் அதற்க்கான உழைப்பு அளவிட முடியாதது.. எத்தனை ரிகர்சல்..முதலில் சிம்ரன் வரும் என்ட்ரியை பாரருங்கள் டான்று ஓடும் போது டராலியில் இருக்கும் கிரேன் நகர டான்சர் பின் கேமரா நகர சிம்ரன் சுத்தி வந்து சென்டர் பொசிஷனில் நிற்க்க வேண்டும் யார் சொதப்பினாலும் ஒன்மோர்தான்... அதே போல் வெள்ளை உடையில் சூர்யா வோடு ஆடும் போது பின்னனியில் யானையில் உட்கார்ந்து இருக்கும் யானை பாகன் வைத்து இருக்கும் குடையில் உள்ளே  லைட்டு இருப்பதும் வெள்ளை உடையில் ஒரே ஷாட்டில் எல்லா டான்சர்சுடனும் ஆடுவது  நல்ல கோரியோகிராபி கம்போசிஷன்..டான்ச்ர்ஸ் வைத்து இருக்கும் குடைகளில் லைட் வைத்து இருப்பதும், டுவைலைட் ஷாட்டுகளும் அற்ப்புதமாக இருக்கும்...

இந்த பாடல் பார்த்து விட்டு அப்போது இரண்டு நாட்கள் தூக்கம் போனதுதான் மிச்சம்...சத்தியமாக லைட்டிங்  எப்படி செய்து இருப்பார்கள் என்று யோசித்து தூக்கம் வராமல் தவித்தேன் என்று சொன்னால் அதை தமிழ் கூறும் நல்லுலகத்தில் இருக்கும் யாரும் நம்ப போவதில்லை....



பார்த்ததில் பிடித்தது...

நேற்று கோயம்பேட்டில் இரவு பாங்கள் வாங்கி கொண்டு இருக்கும் போது இரவு 11மணி இருக்கும் பழக்கூடை எடுத்து சென்ற ஒரு கடை ஆள் கீழே சருக்கி விழுந்த உடன் எல்லோரும் கை தட்டி மகிழ்ந்தனர்... ஊர் விட்டு ஊர் வந்து உழைத்து கொண்டு இருக்கும் உழைப்பாளர்களுக்கு இது போலான திடும் சந்தோஷங்கள்தான் மகிழ்ச்சி அல்லவா??


இந்தவார கடிதம்..
Jackie,
I am RamKumar from Bangalore. I used to glance through your blog even if i get 5 min. I am not sure what made the string of events but felt very bad after reading the recent post.
I sincerely feel you no need to feel for those who write/ talk bad about you. You know you have followers all around the world. its not the degree or the status makes that happen. We just follow your blog just to be interesting and getting some stuff out of it. Hope you might know that very well than me.
Avoid those distractions and continue writing. Even if its wrong and have spelling mistakes, we will read as long as we feel its interesting. so dont worry go ahead.
Though i am tamilian, i cant write tamil easily and hence writing my comment in english. Always worry about constructive criticism but not the ones like you mentioned. it will demotivate you and waste your time.
All the best. Have a nice time in you blog and write interesting things. we are here to support you.
Regards,
RamKumar K R
*********************************************
Never let a problem to be solved become more
important than a person to be loved.

- Author Unknown
********************************************* 
நன்றி நண்பர் ராம்குமாருக்கும் என்ககான மெனெக்கெடலுக்கும் என் நன்றிகள்..கடிதத்தை வரிக்கு வரி ரசித்தேன்.. என் மீதான அன்புக்கு நன்றிகள்..
===========

நான்வெஜ் 18+

ஒரு பெண் டாக்டரிடம் போனாள்.. டாக்டர் என் பாய்பிரண்டை பாஸ்டர்ட்னு திட்டிட்டேன்... ஏன்மா?? அவன் என்னை கிஸ் பண்ணான்... டாக்டரும் அது போல அந்த பெண்ணை கிஸ் பண்ணி விட்டு இது போலவா? என்று கெட்க ஆம்... என்று சொன்னாள்...டாக்டர் இதுக்கு போய் ஏன் கோவிச்சிகிட்டு... இல்லை டாக்டர் அவன் என்னை துணியை அவுத்துட்டு பக் பண்ணான்... டாக்டரும் அதே போல அந்த பெண்ணை பக் செய்து விட்டு இது போலவா? என்று கேட்க ஆம்.... என்று அவள் பதில் சொன்னாள்.. இது ஒரு சிம்பிள் மேட்டர் இதுக்கு போய் அவனை ஏன் திட்டனும் என்று டாக்டர்  அவளிடம் அங்கலாய்த்தார்..பக் பண்ணி முடிச்சிட்டு அந்த பாஸ்டட் சொன்னான் எனக்கு எயிட்ஸ் இருக்குன்னு... இப்போது டாக்டர் சத்தமாக சொன்னார் பாக்கிங் பாஸ்டட்....



பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....

குறிப்பு.. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்.

39 comments:

  1. என்னதான் வூட்ல வேலை இருந்தாலும் சான்ட்விச் போடுற உங்க கடமை உணர்ச்சி புல்லரிக்க வைக்குது.

    சிம்ரனின் மனம் விரும்புதே பாடல் உடல் பொருள் ஆவி அனைத்தையும் அள்ளிச்சென்ற பாடல்..

    மறக்க முடியுமா?

    அன்பு நித்யன்

    ReplyDelete
  2. பகிர்வுக்கு நன்றி ஜாக்கிசேகர்.

    ReplyDelete
  3. ஹா ஹா...ஜாக்கி நான் தமிழ் டைபிங் தெரியாது என்று சொல்லவில்லை. அன்று என்னோட போன் இல் இருந்து கமெண்ட் போட்டதால் தமிழ் பான்ட் இல்லை.

    மற்றபடி, நான் சொன்னதை பாசிடிவ் ஆக எடுத்து கொண்டதுக்கு நன்றி. முடிந்தவரை தமிழ் எழுத்து பிழை இல்லாமல் எழுதுங்கள்.

    நன்றி,
    முத்து குமார்

    ReplyDelete
  4. புத்தக வெளியிட்டு விழாவில் புகைப்படம் எதும் எடுக்க வில்லையா ஜாக்கி.?

    ReplyDelete
  5. மனம் விரும்புதே எனக்கும் பிடித்த பாடல், நான்வெஜ் ஹா...ஹா...

    ReplyDelete
  6. அதற்குள்3 எதிர் ஓட்டுக்கள் யாரப்பா அந்த நல்ல மனுசர்

    ReplyDelete
  7. anna plz write about these films

    1.Perfume: The Story of a Murderer
    2.The Magnificent Seven
    3.The Naked Prey
    4.The Longest Day
    5.Shutter Island
    6.The Good, the Bad and the Ugly
    7.It's a Mad Mad Mad Mad World
    8.Master and the commander
    anna,i know you dont have enough time but when ever get time plz write about these films
    im from srilanka.dont pubblish this post its just for you
    tc

    ReplyDelete
  8. பரத்தை கூற்று வெளியீடைப் பற்றிய பகிர்வுக்கு நன்றிகள்.சிறந்த அறிமுகம்.புத்தகம் வாங்க ஆவலாக உள்ளேன்.

    ReplyDelete
  9. Thala,
    Today any plan...
    Where will you be available in evening.....
    If i get chance i may meet you.......

    ReplyDelete
  10. நல்லாருக்கு பாஸ்...

    ReplyDelete
  11. ஜாக்கி

    சூப்பர்.

    ஒங்க நான் வெஜ் எல்லாத்தையும் சேத்து 'ஜாக்கியின் கூற்று' அப்படின்னு சொல்லி ஒரு புக் போட ஏற்பாடு பண்ணுங்க:)

    அப்புறம், எழுத்துப் பிழை பற்றி நிறையப் பேசி இருக்கிறீர்கள். சொற்குற்றம் பரவாயில்லை. மன்னிக்கப் படலாம். பொருட்குற்றம் முடியாது (திருவிளையாடல் வசனம்). ஆனா ரெண்டுமே செய்யலாம். தப்பா போச்சுன்னா எடுத்து சொல்ல நிறைய பேர் இருக்காங்க.

    அதனால் இந்த மேட்டர லூஸ்ல விடுங்க. வழக்கம் போல அடிச்சு தூள் கிளப்புங்க

    ReplyDelete
  12. அருமையான பதிவு தல !

    ReplyDelete
  13. பரத்தை கூற்று வெளியீட்டு விழா படங்கள்

    http://www.aganazhigai.com/2010/10/blog-post_17.html

    ReplyDelete
  14. வழக்கம்போலவே கலக்கல் ஜாக்கி அண்ணே...

    ReplyDelete
  15. கவிதை வரிகள் நன்றாக இருக்கின்றன.
    மனம் விரும்புதே உன்னை எனக்கு மிகவும் பிடித்த பாடல் தலைவி சிம்ரனின் இடுப்பு அசைவுக்கு நிகர் அவரே எந்த நடிகையாலும் செய்யமுடியாது.
    ஜோக் ஏற்கனவே படித்தது அதனால் சுவாரசியம் தெரியவில்லை.
    எழுத்துப்பிழையை லூஸ்ல விடுங்க தலை.

    ReplyDelete
  16. உங்கள் ஒவ்வொரு எழுத்தையும் தீவிரமாக வாசிக்கும் ஆள் நான். பாருங்கள் ஞாயிற்றுக்கிழமை சமையல் முடிந்த கையோடு உங்கள் சாண்ட்வெஜ் படிக்க உட்கார்ந்திருக்கிறேன்.
    படிக்கும் யாரையும் உடனடியாக ஈர்த்துவிடும் அளவுக்கு வசீகரமான நடைக்குச் சொந்தக்காரர் நீங்கள். எதை எழுதினாலும் சுருக்கமாக, சுருக்கென்று நீங்கள் எழுதிச் செல்லும் விதம் வசீகரமானது. இவ்வளவு திறமை உள்ள நீங்கள் ஏன் பத்திரிகைகளுக்கு எழுதுவதில்லை? ஒருவேளை உங்கள் எழுத்தைப் பிரசுரிக்கும் அளவுக்கு பத்திரிகைகளுக்குத் தகுதி இல்லை என்று நீங்கள் நினைத்தால் அதுவும் சரிதான். கூடிய விரைவில் உங்கள் எழுத்துகளைப் புத்தகமாக வாசிக்க ஆசைப்படுகிறேன்.
    எழுத்துப் பிழை பற்றி குறைப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் எழுத்துப் பிழையோடு என்ன எழுத்தே இல்லாமல் எழுதினாலும் வாசிக்க என்னைப் போன்ற பல்லாயிரம் வாசகர்கள் இருக்கிறோம். கவலையே படாமல் எழுதுங்கள்.
    நன்றி.

    ReplyDelete
  17. //ஆயுதங்களை எல்லாம் கழுவி பொட்டு வைத்து, படையல் போட்டு கிளம்பி செல்ல நேரமாகிவிட்டது.//

    ஆயுதத்தையெல்லாம் அப்பப்போ கழுவி, ஓவராயிலிங்க் செஞ்சு வைக்கிறதில்லயா?? என்னிக்காவது ஒரு நாள் கழுவி படையல் போட்டா இப்படித்தான் நேரமாகும். இப்போதைக்கு ஒன்னோட ஆயுதங்களை கழுவி படையல் போட்டு சும்மாத்தான் வச்சிருக்கணும், இப்போதைக்கு உபயோகப் படுத்த முடியாது.

    நான் சொன்னதின் அர்த்தம் - ஆயுத பூஜை முடிஞ்சு லீவ் எல்லாம் முடிஞ்சு அப்புறம்தான் மறுபடியும் வேலை ஆரம்பிக்கணும் - நீ வேற ஏதாவது லோக்கலா நெனச்சா நான் பொறுப்பல்ல

    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
  18. // 2007ல்தான் எனக்கு கம்யூட்டர் பரிச்சயம்..//

    அண்ணே 15 வருடமாக பரிச்சியம் உள்ளவர்களுக்கே தமிழில் டைப் செய்ய தெரியாது, 3 வருடத்தில் தன்னம்பிக்கை உள்ளவர்களே இதுபோல் செய்ய முடியும்.

    //கவிஞர் சரவண கார்த்திகேயன் என்னிடம் வந்து ஜாக்கி நலமா?என்றார்.. எனக்கு அவரை தெரியாது? //

    அண்ணே உங்களுக்கு தெரியாத மேட்டர், சில மாதங்களுக்கு முன்பு உங்கள் பதிவினை நான் கிண்டல் செய்தபொழுது எத்தனை கண்டன கடிதங்கள் வந்தன தெரியுமா? நிச்சயம் உங்களுடைய ரீச் மிகவும் பெரியது. ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள் யானையின் பலம் யானைக்கு தெரியாதுன்னு...அன்று நான் புரிஞ்சுக்கிட்டேன் உங்களின் ரீச் பற்றி.

    ReplyDelete
  19. குசும்பன் ட்விட் பார்த்துதான் இந்த பதிவுக்கு வந்தேன்...உங்கள் தன்னம்பிக்கைக்கு ராயல் சல்யுட்.
    நன்றி.

    ReplyDelete
  20. //நேற்று புத்தக வெளியீட்டு விழா முடிந்து வெளியே பேசிக்கொண்டு இருக்கும் போது திடும் என மழை பெய்ய தொடங்கிவிட்டது.. எல்லோரும் பக்கத்தில் இருந்த கடை ஷட்டர் அருகில் தலை நனையா வண்ணம் தஞ்சம் அடைந்தோம்....ஒரு சிகப்பு டீஷர்ட் அணிந்த பெண் நடந்து போய்கொண்டு இருந்தாள்... சட்டென ஏதோ நினைத்து திரும்பி பார்த்தால் பதிவுலக நண்பர்கள் பலர் என்னை பார்த்துகொண்டு இருந்தார்கள்...டேய் என்னை பிரியா விடுங்கப்பா..//

    மொத்தப்பதிவிலும் என்னைக் கவர்ந்த பத்தி. திறந்த மனது இருப்பவர்கள்தான் இப்படி எழுதமுடியும் அண்ணே..

    ReplyDelete
  21. வரிகள் அனைத்தும் அருமை. ! இப்போதுதான் முதல் முறையாக உங்கள் வலைப்பக்கம் வருகிறேன். வாழ்த்துக்கள்.!

    http://erodethangadurai.blogspot.com/

    ReplyDelete
  22. //நான் கூட தனியாக எனது யாருமில்லாத அறையில் சிம்ரன் போல இடுப்பை வெட்டி ஒரு ஸ்டெப் அட்டம் போட மகா கேவலமாக இருந்து தொலைத்தது...//

    ஒரு குத்து மதிப்பா சொல்லுங்க எம்மா நேரம் சிரிச்சி இருப்பேன்னு ?

    ReplyDelete
  23. புதிய பதிவர்கள் பற்றிய புலம்பல்கள் இப்போதான் புரியுது.
    //இன்னும் பிழையில்லாம எழுதினா??? இன்னும் நல்லா இருக்குமே என்பதாக கூட நினைத்து இருக்கலாம்// இது முழுக்க உண்மை.அவரை தவறாக கொள்ளவே வேண்டாம். உங்களது மொழி, பிழை இல்லாமல் இருக்கவேண்டியது ஒரு சின்ன, உரிமையுடனான எதிர்பார்ப்பே.

    நீங்க வருத்தப்பட ஒன்றும் இல்லை.

    creativity/imagination is more important than perfection.

    ReplyDelete
  24. Jackie,
    The innovative lighting and the visual choreography of this melodious song is great. I also agree that Simran is a great dancer and there are not many (any?) Tamil actress to top her dance moves.
    But....the dance moves do not match the song in many scenes. I find that many of the moves were there just to show that Simran can do it. in movies of last 10 years. There is a place for western dance moves, place for aerobic routines, and a place for classical dance moves.

    ReplyDelete
  25. யாரைப்பத்தியும் கவலைப்படாதிங்க,தொடர்ந்து எழுதுங்க நாம என்ன பொறக்கும்போது கீ போர்டோடவா பொறந்தோம்.எல்லாம் சரியாகிவிடும்.

    ReplyDelete
  26. ஹாய் ஜாக்கி,
    நான் உங்கள் தீவிர ரசிகன் , ரொம்ப நல்ல இருக்கு உங்க படைப்புகள் . இப்போ நம்ம தமிழ் நாடு ல நடக்குற குடுப்ப அரசியல் பத்தி உங்க கருத்துகளை நான் எதிர்பாகீரன் . அவனுக பண்ணுற அரசாகம் தாங்க முடியல .

    ReplyDelete
  27. அண்ணே மிகவும் ரசித்தேன்

    ReplyDelete
  28. எழுத்துப்பிழை என்ற‌ ஒன்று இல்லாவிட்டால் ப‌த்திரிக்கைத்துறையில் "Proof Reader" என்ற‌ ஒரு ப‌ணியிட‌மே இருந்திருக்காது

    ReplyDelete
  29. Enjoyed the SONG, manam virumbuthe. Director Vasanth is always very KEEN on songs. In one of his movies, SONGS on the FIVE ELEMENTS were very well presented.

    ReplyDelete
  30. தம்பி கலக்குங்க.

    ReplyDelete
  31. திருமணநாள் வாழ்த்துக்கள் பாஸ்!

    ReplyDelete
  32. சிம்ரனின் மனம் விரும்புதே பாடலைப் பற்றி சிறப்பா எழுதினதுக்கு நன்றி தல. அதுக்காகவே அந்தப் படத்த திருப்பி திருப்பியெல்லாம் பாத்தோம், சிம்ரனுக்கு தமிழ் சினிமாவில் பெரிய இடத்தை பெற்றுத்தந்ததில் இந்தப் பாடலுக்கும் முக்கிய பங்கு உண்டு!

    ReplyDelete
  33. Hi Jackie,
    Your Kazhugu interview super and 'Happy wedding anniversary' day.

    ReplyDelete
  34. நான் போய்ட கமெண்ட்ஸ் கு பதில் போய்டல

    ReplyDelete
  35. hello jackie,
    i am a silent reader of ur blogspot, from qatar now i have moved to duabi. neenga cinema field la irrukuradhala ... oru eeirupuuu.about other blogs are ok, u r movies review are good. write as much as possible positive thoughts and views.
    THOUGHT POWER IS THE BIGGEST POWER IN THE WORLD.

    Ramkumar.U , DUBAI

    ReplyDelete
  36. அண்ணே இதற்கெல்லாம் நீங்கள் பதில் சொல்ல வேண்டுமா என்று தோன்றுகிறது.
    கவலையை விடுங்கள். இவர்கள் எல்லாம் எதுவும் எழுத தெரியவில்லை என்றாலும் குறை சொல்ல வந்துவிடுவார்கள்,
    முதுகெலும்பு இல்லாதவர்கள். குறை குடங்கள் இவ்வாறுதான் கூத்தாடும்.
    நீங்கள் உங்கள் சிறப்பான பணியை தொடரவும். திருமண நாள் வாழுத்துக்கள்

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner