”வ“ குவாட்டர் கட்டிங்...தமிழ் சினிமாவில் ஒரு புது முயற்சி...


படத்தின் விளம்பரங்கள், அந்த படத்தின் டிரைலர்கள் எல்லாமே அந்த படத்தை  ஒரு காமெடி படம் என்று சொல்லிக்கொண்டு இருக்கின்றன... ஆனால் படத்தை பற்றிய ரிசல்ட் என்று பார்க்கும் போது  சிலருக்கு இந்த படம் பிடித்து இருக்கின்றது.. பலருக்கு இந்த படம் பிடிக்கவில்லை. நான் சிலர் லிஸ்ட்டில் இருக்கின்றேன்...

எனக்கு இந்த இயக்குனர்கள் இயக்கிய ஓரம்போ படம் எனக்கு ரொம்ப பிடித்த படம்... படத்தில் லோக்கல் டயலாக் அதிகமாக வைப்பவர்கள்..மெல்லிய நகைச்சுவை இழையோடும்...



வழக்கமான அண்ணன் தங்கை சென்டிமென்ட் கதையை அளு அளுக்கு அதே கதையை மாற்றி மாற்றி எடுத்தாலும் ஏற்றுக்கொள்வார்கள்.. ஆனால் இது போலான புது முயற்சிகளை வரவேற்க்க மாட்டார்கள்.. ஒரு குவாட்டருக்கு எப்படி ஒருவன் அலைவான்??? என்பதே பெரும்பாலான நண்பர்களின் கேள்வி??? ஜிப்சி ஜீப்பை எப்படி கயிறால் காலில் கட்டி ஜீப்பை நிறுத்தமுடியும்??? எழுகடல் ஏழு மலை தாண்டி கூண்டுக்குள் இருக்கும் கிளி உயிர்முக்கியம் என்றதும் நாம் எப்படி எற்றுக்கொள்கின்றோம்... அது போலதான் இதுவும்.

ஒரே உதாரணம் சொல்வேன்.....

ஹீரோ துபாய்க்கு வேலைக்கு போகின்றான்... அங்கு பெண்களை பார்க்க கூடாது.. பார்த்தால் தலையை வெட்டிவிடுவர்கள்...ஒரு காட்சியில் ஹீரோ கையை வெட்ட போகின்றார்கள்... வில்லன் கத்தியை எடுத்து ஹீரோ கையை வெட்ட போகும் போது... ஹீரோ வில்லனிடம் சொல்லிகின்றான் என் கையை வெட்டாதே.... துபாய்ல பொண்ணுங்களை பார்க்க கூடாதாம் அதனால எனக்கு என் கைதான் எனக்கு உதவி அதனால வெட்டாதே என்று சொல்லும் போது தியட்டரில் புரிந்து சிரித்தவர்கள் சிலர்தான்....

வகுவாட்டர் கட்டிங் படத்தின்  கதை என்ன????


துபாய்க்கு வேலைக்கு போக போகும் சிவாவுக்கு விடியலில் 4 மணிக்கு பிளைட்.. அபபோதுதான்... அவனுக்கு தெரிகின்றது துபாயில் தண்ணி அடிக்க தடை இருப்பது அதனால் நமம ஊரில் ஒரு குவாட்டர் விட்டு விட்டு பிளைட் ஏறலாம் என்று நினைக்கின்றான்... அதற்கு சிவாவின் அக்காவை கட்டிக்க போகும் வருங்கால மாமா எஸ்பிபிசரண்  சிவாவுக்கு உதவி  செய்கின்றார்... இதில் கொடுமை எலக்ஷன் என்பதால் மூன்று நாட்களுக்கு மதுக்கடை லீவ்... எப்படி சிவாவுக்கு குவாட்டர் கிடைக்கின்றது என்பதே மீதி கதை...
=
படத்தின் சுவாரஸ்யங்களில் சில..

இந்த படம் இன்னும் சிறந்த படமாக  இருந்து இருக்க கூடும்... ஆனால் திரைக்கதையில் நிறைய இடங்களில் தொய்வு ஆகுவதையும், பல காட்சிகள் சுவாரஸ்யம் இல்லாமல் இருப்பதையும் ஒத்துக்கொள்ளவேண்டும்...

இந்த படம் படு மொக்கை என்று என்னால் சொல்ல முடியாது.. பல ஜோக்குகள் விழுந்து விழுந்து சிரிப்பார்கள் என்று நினைத்து  எடுத்த பல நகைச்சுவைகாட்சிகளுக்கு மக்கள் தேமே என்று உட்கார்ந்து இருக்கின்றார்கள்..உண்மையிலேயே பல மொக்கை ஜோக்குகளும் இருக்கின்றது...

படத்தை ஷாட் அன்டு சுவிட்டாக தந்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும்..

இந்த படம் பார்க்கும் போது பல காட்சிகளில் கண்களில் நீர்வர நான் சிரித்துக்கொண்டு இருந்தேன். என்னோடு சிலரும் சிரித்தார்கள்... ஆனால் பலர் சிரிக்கவில்லை... காரணம் புரியவில்லை...

கலர் புல்லாக படம் பார்த்து பழகிய தமிழ் ரசிக கண்மணிகளுக்கு இந்த வார்ம் டோன், டிபரன்ட் டோன்களை ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்கின்றார்கள்.... என்பது என் எண்ணம்... உதாரணமாக அந்த டோனில் வெளியான 23ம் புலிகேசி மட்டும்தான் வெற்றி பெற்று இருக்கின்றது...காரணம் நகைச்சுவை  படத்தில் அதிகம்...

அதே டோனில் படம் செய்த பல படங்கள் தோல்வியை தழுவி இருக்கின்றது...

 சரி மேல இருப்பதை எல்லாம் தவிர்த்து இருந்தால் வெற்றியை ருசித்து இருக்கலாம்...

இந்த படம் சின் சிட்டின்னு ஒரு  ஆங்கிலபடம்... அந்த படம் ஒரு சீரியஸ் படம் அது போலான டோனை மயின்டில் செட் செய்து கொண்டு காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுத்து இருக்கின்றார்கள்...காமேடி அதிகமாக இருந்து இருந்தால், திரைக்கதை தொய்வில்லாமல் இருந்து இருந்தால் இந்த படம் மிகபெரிய  வெற்றி ஆகி இருக்கும்........

சிவாவின் முதல் என்ட்ரியும். அந்த பஸ் ஜோக்கும்  இடைவேளைவரை நன்றாகவே இருக்கும்.. சிவாவின் அந்த டைமிங் இந்த படத்தில் அதிகமான மிஸ்சிங்...
சென்னையில் பைக் திடிர் என்று பற்றி எறியும் காரணத்தை இப்படிகூட இருக்கலாம் என்று காட்சி படுத்தி இருக்கின்றார்கள்... அது சீரியசாகவும் இருக்கலாம்.. நமக்கு சாதாரணமாக ,இருக்கும் பல விஷயங்கள் சிலருக்கு சிரியசாக இருக்கும். அது போலதான் தீக்குச்சி மேட்டர்... சிறையில் இருந்து அவன் செஞ்சா  தப்பில்லை என்று சொல்லுவது குபிர் சிரிப்பு....

சீவா அவ்வப்போது கால்மீ சுறா என்று சொல்லும் போது உதடு புன்னகைக்கின்றது...
சரண் பம்ளிமாஸ் போல இருக்கின்றார்... சில இடங்களில் நன்றாகவே நடிக்கின்றார்....
ரோட்டு ஓர சென்னை சாலை ஓவியங்கள் கலர்டோனுக்கு ஒரு பேக்ரவுண்டாக பயண்படுத்தி இருப்பது செமை....

லேகா வாஷிங்டன் சட்டை போட்டு செம ஷார்ப்பாக நடித்து இருக்கின்றார்..அந்த கேரக்டர் மேம்போக்காக வடிவமைக்க பட்டு இருக்கின்றது...

அபிநயா ஸ்ரீ அனுராதா  பொண்ணு போலிஸ் வேஷம் போட்டு இருக்கின்றார்... சில இடங்களில் மி அழகாகவும் தெரிகின்றார்... எப்படியோ உடம்பைப குறைத்துவிட்டார்...

ஷேக் ஷேக்னு ஒரு சாங் நாலு புள்ளைங்க ஆடுதுங்க பாருங்க...நமக்கு எல் இடமும் ஷேக் ஆகுது.. முக்கியமா ஷகீரா எல்லாம் அந்த பெண்களிடம் பிச்சை எடுக்கனும்...  மச்சம் அதிகமாகவே இருக்கு மிஸ்டர் சிவா. ஜீவிபிரகாஷ்  பின்னனி இசை நன்றாகவே இருக்கின்றது...

ஜான் விஜய் டபுள் வேடம் ஏற்று இருக்கின்றார்.... இருந்தாலும் கலக்கி இருக்கின்றார்..

படம் ஒரு இரவில் நடக்கும் காட்சிகளை மையபடுத்திய.. ஆனால் விடியலில் 4மணிக்கு பிளைட் என்று சொல்லி இருக்கவேண்டாம்... நீங்கள் படம் பார்த்தால் புரியும்....

ஒரு இரவில் இவ்வளவு சம்பவம் எப்படி நடக்கும் என்று கேள்விதான் படத்தில் அயற்ச்சியை ஏற்படுத்துகின்றது....

எல்லா காட்சியும் இரவில் ஷுட் செய்து இருக்கின்றார்கள்... சென்னை இரவில் எப்படி இரவில் இருக்கும் என்பதை காட்ட  நன்றாக மெனெக்கெட்டு இருக்கின்றார்கள்..

உழைத்த டெக்னிஷியன்கள் எல்லாருக்கும் சிவராத்திரிதான்.. இது தமிழில் புது முயற்ச்சிதான்....

லேகா தற்கொலையின் போது நேப்பியர் பாலத்தில் நடக்கும் காட்சியும் தூரத்தில் மெட்ராஸ் யுனிவர்சிட்டி  பேக்ரவுண்ட்  கோபுரத்துக்கு லைட்டிங் பண்ணி எடுத்து இருப்பது அந்த காட்சியின் ரசனை...நீரவ் சூப்பர்..

பல காட்சிகள் சைதாபேட்டையை சுற்றியே  எடுத்து இருக்கின்றார்கள்... மெட்ராஸ் யூனிவர்சிட்டி என்று  நிறைய இடங்களை உணர முடிகின்றது...

நிறைய மொக்கை இருந்தாலும் புது தளத்தில் யோசித்த புஷ்கர் காயத்திரிக்கு நன்றி...

டிஸ்கி..
படம் பல காட்டிசிகளில் தொய்வாக இருந்தாலும் ஒருமுறை பார்க்கலாம்.. அரைத்த மாவையே அரைக்காமல் அரைத்தகாரணத்துக்காக...


படத்தின் டிரைலர்,..

 

படக்குழுவினர் விபரம்..

 Directed by     Pushkar-Gayathri
Produced by     Sashikanth Sivaji
Written by     Pushkar-Gayathri
Starring     Shiva
Lekha Washington
S. P. B. Charan
Music by     G. V. Prakash Kumar
Cinematography     Nirav Shah
Studio     Y NOT Studios
Distributed by     Cloud Nine Movies
Release date(s)     November 5, 2010 (2010-11-05)
Country     India
Language     Tamil

தியேட்டர் டிஸ்கி...

படத்தை சைதாப்பேட்டை ராஜ்ல் பார்த்தேன்... நல்ல ஒளி,ஒலியை செய்து இருக்கின்றார்கள்.. என்ன பால்கனி டிக்கெட்வாங்கினால் முன்னால் இருப்பவனின் பாதி தலை நன்றாக திரையை மறைத்துக்கொள்கின்றது,...

டாய்லட் சுத்தம் இன்னும் மேம்பட வேண்டும்....

நான்கு பேர் தியேட்டரில் உள்ளே நுழையும் போதே பாக்கெட் முழுதும் செக் செய்தே விடுகின்றார்கள்...

தியேட்டர் சீட்டுகளை எல்லாம் நம் பொது ஜனம் கிழித்து வைத்து இருக்கின்றார்கள்..

23 comments:

  1. எனக்கு படம் புடிச்சிருந்தது சார், நல்லா எழுதி இருக்கீங்க

    ReplyDelete
  2. //படம் பல காட்டிசிகளில் தொய்வாக இருந்தாலும் ஒருமுறை பார்க்கலாம்.. அரைத்த மாவையே அரைக்காமல் அரைத்தகாரணத்துக்காக.//

    ரைட்டு தல! பாத்திட வேண்டியதுதான், :)

    ReplyDelete
  3. நல்ல தானே இருந்திங்க , அப்பறம் ஏன் இப்படி ?
    முடியல தலைவா """"""""""""

    ReplyDelete
  4. Nalla vimarsanam.... ellaridam irunthum negative vimarsanam padiththean... ungalidam mattum positive vimarsanam..?

    ReplyDelete
  5. நல்ல விமர்ச்சனம்... ரொம்ப ரசித்தேன்...

    ReplyDelete
  6. ம்ம் பார்த்தேன்..பரவாயில்லை..ஒரு தடவை பார்க்கலாம்!!

    ReplyDelete
  7. நல்ல விமர்சனம்

    தமிழ் உதயன்

    ReplyDelete
  8. Nallarukku. Yehn Saar Yahrume utthama Puththiran vimarsanam Eluthuringelle. ethachchum Wenduthala??

    ReplyDelete
  9. நல்ல அலசல் ஜாக்கி.... I like it

    ReplyDelete
  10. கண்டிப்பா பாக்கணும்... ஓரம்போ நான் மிகவும் ரசித்த படம்.... அதில 50% இருந்தா ஓகே தான்!

    ReplyDelete
  11. படம் செம மொக்கைன்னு நிறைய பேரு சொல்லிட்டாங்க ஜாக்கி...

    உனக்கு பிடிச்சிருக்கா..? தெளிவா இருக்கியா..?

    ReplyDelete
  12. // ஹீரோ துபாய்க்கு வேலைக்கு போகின்றான்... அங்கு பெண்களை பார்க்க கூடாது.. பார்த்தால் தலையை வெட்டிவிடுவர்கள்...//
    Boss, not Dubai, its Saudi.
    In dubai alcohol allowed,you need licence to buy and consume in private.in bars & hotels you can drink.
    have you seen 'Herald and Kumar'- 2 friends search for unlimited 'Burger' in the whole night and get in to trobuls.
    gaja
    dubai

    ReplyDelete
  13. தப்பா நினைக்கலைன்ன ஒன்னு சொல்றேன்.

    சிலருக்கு புரியுது ரசிக்கிறாங்க. சிலருக்கு புரியல ரசிக்கல.
    ஆங்கில படங்கள் பார்க்கும்போது எல்லாரும் கை தட்டும் போது தட்டி, எல்லோரும் சிரிக்கும்போது சிரிப்பனே அந்த மாதிரி படமோ.

    நன்றி உங்களின் விமர்சனத்துக்கு.

    ReplyDelete
  14. its s an attempt..

    But it din work out.. I agree they have put lot of effort but that is not the only reason to bare their blade..

    Neenga ivlo paartra alavuku ena irukunu theriyala..

    I used to read all ur reviews.. but this s the first time my taste n yours differs :-)

    Cheers,

    ReplyDelete
  15. நானும் படம் பார்த்தேன் படத்துல மொக்கை இருக்கலாம் ஆனா படமே மொக்கையா இருந்த என்ன செய்ய.ஆனால் படத்தை உங்கள் காண்ணோட்டத்தில் பார்க்கும் போது புதிய முயற்ச்சி வ்ரவேற்க வேண்டிய விசயம் தான். இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

    ReplyDelete
  16. கோட்டருக்காக அலைந்த அனுபவம் எனது நண்பனின் சிஸ்டர் மேரஜூல என்னக்கும் இருக்கு

    ஒரு புல்லு ரெண்டு பேரு இது கணக்கு அனா அது எனக்கும் என்னோட ரெண்டு நண்பர்களுக்கு பத்தல அதனால நைட் 1 மணிக்கு ரோட் ரோடா அலைஞ்சோம் ஆளுக்கு ஒரு கோட்டருக்காக.
    பல பார் மூடியாச்சு ஒரு தெரு பைக் மெக்கானிக் கடமட்டும் இருந்துது அங்க போய் கேட்டோம்
    இருக்கு சார் ஆனா ஜானக்சியா, மேக்டோல் எல்லாம் இல்ல பிலிப்ஸ், டோஷிபா தான் இருக்கு
    வேனுமானு கேட்டாங்க அதையும் என் கூட வந்த ஒரு நண்பன் வாங்கித்தான் அடிப்பமுடா சரக்கும் இல்ல
    புதுசா இருந்தா என்ன பரவா இல்லடா அவன் அலும்ப ஆரமிச்சான் அவன அடக்கி அங்க இருந்து நாங்க
    எஸ்கேப் அஹரதுக்குள்ள போதும் போதும்னு ஆச்சு

    ReplyDelete
  17. Dear Jackie அண்ணா,

    உங்கள் விமர்சனம் அருமை. புதுமையான கோணம். மைனா விமர்சனத்திற்கு காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  18. அது சரி - படத்தின் தலைப்பு 'வ' எதைக் குறிக்கிறது?

    ReplyDelete
  19. தற்கொலைக்கு முயலும் லேகாவை சிவா நிறுத்தும் நோக்குடன், சாப்டியா நீ என்று கேட்க அதற்க்கு லேகா இல்லை என்று சொல்ல, சாப்ட எல்லா பிரச்சினையும் சரி ஆகிடும் என்று சொல்லும் இடத்தில் விழுந்து விழுந்து சிரித்தேன்.

    உண்மையிலையே நிறைய பேருக்கு ஜோக் புரியவில்லை. பம்மல் கே சம்பந்தம் மாதிரி கொஞ்சம் லேட் ஆக ரீச் ஆகும் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner