Uppu Karuvadu -2015 movie review | உப்பு கருவாடு திரைவிமர்சனம்.









உப்புக்கருவாடு.


2004  ஆம் ஆண்டு அழகிய தீயே திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் கால் பதித்தவர்…  இயக்குனர்  ராதாமோகன்…

2004 ஆம் ஆண்டு நானும் எனது நண்பர் சுபாஷும் பாண்டி ராஜா  தியேட்டரில்  முதல்   நாள் முதல் காட்சிக்கு சென்று  அழகிய தீயே படத்தை பார்த்தோம்… 

காரணம் அந்த படத்தின் போஸ்டர்கள்  படத்தை பார்க்க வேண்டும்  என்ற எண்ணத்தை தோற்றுவித்தது எனலாம்…  இத்தனைக்கும் பெரிய ஸ்டார் காஸ்ட் அந்த படத்தில் இல்லை…

THIS NOVEMBER HEAVY RAIN AT CHENNAI மறக்க முடியாத மாமழை…23/11/2015





23/11/2015 அன்று இரண்டு மணிக்கு  ஆரம்பித்த மழை… இரவு பதினோரு மணிவரை கொட்டிதீர்க்க… 
முப்பது நாளில் பெய்ய வேண்டிய மழை மூன்று நாளில் பேய்ந்து விட்டது என்று அம்மா சொன்னதற்கு ஆமாம் சாமி  போட்ட போது புளியோதரையும் பொங்கலும் மழைக்கு  வீட்டில்  உட்கார்ந்து சுட சுட சாப்பிட்டவர்கள் எல்லாம் திங்கட்கிழமை வேலை  நேரம் எலிப்பொறியில் சிக்கியது போல   சிக்கிக்கொண்டார்கள்…

007 bond new movie Spectre review by jackiesekar | ஸ்பெக்ட்ர் திரைவிமர்சனம்






ஸ்பெக்ட்ர்..

 அங்க சுத்தி இங்க சுத்தி அடி மடியிலேயே கை வச்சானாம் என்று ஒரு பழமொழி சொல்லுவார்கள்… இந்த ஒன்லைன்தான் தற்போது வெளியாகி இருக்கும் பாண்ட் திரைப்படத்தின் ஒன்லைன் கதை.
உலகம் எங்கும் பெரும் எதிர்பார்ப்பை  ஏற்ப்படுத்திய பாண்ட் சீரிஸ்சின் 24 வது திரைப்படம் இந்த  ஸ்பெக்டர்…


Oru Naal Iravil tamil movie Review by jackiesekar | ஒரு நாள் இரவில் திரைவிமர்சனம்



சின்ன சபலம்… பெரிய பிரச்சனைக்கு ஊரு விளைவிக்கும்…. தென்மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மாவட்டம் அது..

 நேற்று வரை ஊரே கொண்டாடிய நல்லாசிரியர் அவர்… அவரை போன்ற ஒரு நேர்மையாளரை பார்க்கவே முடியாது… கணக்கு பாடத்தை அவர்  எடுக்க ஆரம்பித்தால் மர மண்டைக்கும் புரியும்  அளவுக்கு எடுப்பதில் வல்லவர்… அரசு ஒதுக்கும் நிதிகளை தன் வீட்டுக்கு ஒதுக்காத மாமனிதர், வயதுக்கு வந்த இரண்டு பிள்ளைகள்… ஆனாலும் காமம் என்பது பொல்லாதது.. அதை அடக்கி ஆள்வது  சிரமத்திலும் சிரமமான விஷயம்….  கொஞ்சம் யோசிக்கா விட்டாலும் முச்சந்தியில்  நிறுத்திவிடும் வல்லமை அதற்கு உண்டு.


chennai Kasimedu fishing harbor place to visit | must visit place Chennai | சென்னை காசிமேடு மீன் பிடி துறைமுகம்





  சென்னை திரையரங்குகளில் பத்து ரூபாய்  பாப்கானை…. காம்போ என்ற பெயரில் மனசாட்சியே இல்லாமல் 110 ரூபாய்க்கும், அரை லிட்டர் தண்ணீர் பாட்டிலை எம்ஆர்பி விலையை  விட அதிகமாக 40 ரூபாய்க்கு விற்கும் திரையரங்கிற்கு  மாதம் இரண்டு முறை  பொழுது போக்கிற்காக  குடும்பத்தோடு சென்றால் மாத பட்ஜெட்டில் நடுத்தர குடும்பத்து தலைவர்கள் தலையில் துண்டு போட்டுக்கொள்ள  வேண்டும்… திருட்டி விசிடியில் படம் பார்ப்பது மனித தன்மையற்ற செயல் என்று டுவிட்டரில் அலறும் நடிகர்கள் இந்த பகல் கொள்ளையை எதிர்த்து ஒரு வார்த்தை பேசுவதில்லை..


happy birthday nayanthara | இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நயன்தாரா.




நயன் என்று தமிழ் ரசிகர்களால்   செல்லமாக அழைக்கும் நயன்தாராவுக்கு இன்று பிறந்தநாள்…இதே நாளில் 1984 ஆம் ஆண்டு பெண்களூருவில் மன்னிக்கவும் பெங்களூருவில்  பிறந்தார் நயன்…  டயானா மரியம் குரியன் என்பது நயனின் இயற்பெயராகும்.



My Interview in News 7 channel | நியூஸ் தொலைக்காட்சியில் எனது நேர்முகம்.





தொலைகாட்சி விவாத நிகழ்ச்சிகளில் சினிமா விமர்சகர் என்ற டேக் லைனோடு தொடர்ந்து கலந்துக்கொண்டு வருகின்றேன்...

இதுவரை தொலைகாட்சி விவாத நிகழ்ச்சிகளில் பதிவு செய்யப்பட்டவைகளில் மட்டுமே நான் பங்கு பெற்று இருக்கிறேன்...

குறள் 110: அதிகாரம் : செய் நன்றி அறிதல்









நேத்து வரை வாக்கர் பாய்ஸ், போர இடம் வௌங்காது... துரோகி,சகோதரின்னு சரணாகதி அடைந்தவர், கூட இருந்தே குழி பறிப்பவர் ... அது  இதுன்னு வைகோவை  வெகு தீவிரமாக வசை பாடிய அத்தனை  திமுக உடன்பிறப்புகள் அத்தனை பேருமே...

எனக்கு ஒரு டவுட்


ஏஆர் ரகுமானின் ஜெய்ஹோ பேட்டியும்.... பார்த்திபனின்விகடன் பேட்டியும்... பார்த்தேன் படித்தேன்...

ரகுமானின் அம்மா அவர் வந்தார் ஆர்மோனியம் வாசிச்சார்ன்னு பேசறாங்க... அதை விட பார்த்திபன்... ராக்கி படம் பார்த்தார்... அவரோட விமர்சனம் எனக்கு தேவைன்னு பேட்டியில தன்னோட புள்ளைய அவர்ன்னு மரியாதைய விளிச்சி இருக்கார்....

ரகுமான் ராக்கி இரண்டு பேருமே சின்ன வயசுல வளரும் போதே அவர்ன்னுதான் அழைச்சி இருப்பாங்களோ..???


A Brief Talk by S.V.Shekhar | S.Ve சேகர் அவர்களுடன் விரிவாய் ஒரு நேர்முகம்



ஏசிமெக்கானிக்காக  சென்னை சவேரா ஓட்டலில்  ஒன்றரை வருடம்  பகுதி நேர வேலை..

சென்னை ரேடியோவில் முதல்  முறையாக  சினிமா ஒளிச்சித்திரம் வழங்கியவர்.

ஆடியோ என்ஜினியர்,

அதுவே பாலசந்தரிடம் ஒரு சீனில்நடிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தது..

6000 முறை  நாடகம் போட்டதோடு இன்னமும் நாடகங்கள் வார  வாரம் மேடை ஏற்றுபவர்…

HE - அவன்






 மயிலை
30/10/2015
 இரவு பதினோரு மணி..
========
 தம்பியும்… தம்பி மனைவியும் வீட்டுக்கு வருகின்றார்கள் என்பதால் வீட்டிற்கு வெளியே நானும் யாழினியும் காத்திருந்தோம்..

 அந்த பையன்  காரணீஸ்வரர் கோவில் பக்கத்தில் இருந்து வந்துக்கொண்டு இருந்தான்… கருப்பு சட்டையும் வெள்ளை பேண்டுமாய்…
இன்  செய்து இருந்தான்…. நவநாகரிகமாய் இருந்தான்… 
 உதாரணத்துக்கு  சொல்ல  வேண்டும் என்றால்..?
 பார்க் ஓட்டல் பப்பில் இருந்து வெளி வந்த  பையனை போல இருந்தான்…



Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner