ரத்தசரித்திரம்... பழிவாங்கும் கதையை நாம் கதைகதையாக பார்த்து இருந்தாலும் இந்த கதை ஒரு உண்மைசம்பவத்தினை அடிப்படையாக கொண்டது. இந்த படம் இரண்டாம் பாகம்..
முதல் பாகத்தின்கதை ஒரு 20 நிமிடத்துக்கு ரொம்ப சுருக்கமாக இந்த படத்தின் முதல் பாதியில் சொல்ல பட்டு இருக்கின்றது. பழி தீர்த்தல் மனிதனின் உன்னத உணர்வு என்று மகாபாரத வாக்கியத்தை முன்வைக்கின்றது.இந்த படம் பரிதாலாரவி என்ற ஆந்திரபிரேதேச ரவுடியின் உண்மை கதை இந்த திரைபடம்.
ரத்தசரித்திரம் படத்தின் கதை என்ன?..
அனந்தபுரத்து பிரதாப்ரவி (விவேக்ஓபராய்)யின் அப்பா ஒரு அரசியல் வாதி அவரின் கட்சி தலைவர் கிட்டி தனக்கு எதிராக ஜாதி ஓட்டுக்களை சேர்க்கின்றார் என்ற காரணத்தினால் பிரதாப்ரவியின் அப்பாவை பக்கத்தில் இருக்கும் நண்பர்களை வைத்தே கொலை செய்து விடுகின்றார்கள். தன் அப்பாவை கொலை செய்தவர்களை பழி வாங்கும் விதமாக எதிரிகளை கொல்கின்றான்... அனந்தபுரத்தில் தேர்தலில் நின்று மந்திரி ஆகின்றான்.. ஒரு டீம் அமைத்து தனக்கு எதிரான அத்தனை பேரையும் கொல்ல சொல்கின்றான். இதில் பல அப்பாவிகளும் அடக்கம்.
அவனை எதிர்க்க யாருக்கும் துணிவில்லை எதிர்தவர்களை அரசியல் போர்வையில் அழித்துக்கொண்டு இருந்தான். நியாயமான காரணத்துக்கான தூக்கிய அருவாள் பின்பு அரசியல் பலத்தினால் எல்லோரையும் காவுவாங்கி கொண்டு இருக்க.. அவனை எதிர்க்கயாருமே யோசிக்கும் நிலையில் அவன் மீது ஒரு கொவை முயற்ச்சி நடக்கின்றது.. அவன் பெயர் சூர்யா... அவன் ஏன் பிரதாப்ரவியை கொலை செய்யதுடிக்கின்றான்.. அந்த துடிப்பில் வெற்றிபெற்றான என்பதை வெண்திரையில் காணுங்கள்.
படத்தின் சுவாரஸ்யங்களில் சில..
சாதாரண காதல் படங்களிலேயே ஜமாய்க்கும் ராம்கோபால்வர்மா இந்த படம் அவர் அதிகம் ஜமாய்க்கும் ஆக்ஷன் தளம் கேட்காவா வேண்டும் சும்மா மேக்கிங்கில் பின்னி இருக்கின்றார்.
பாம் வெடித்த உடன் சூர்யா காட்டும் வேகமும் இயலமையும் தப்பிக்கும் நோக்கமும் அந்த உடல் மொழியும் சூர்யா சூர்யாதான்.
விவேக்ஒபராய் பிரதாப்ரவி கேரக்கடராக வாழ்ந்து இருக்கின்றார்.. நன்றாக சோப்பிக்கின்றார்.,. அந்த சாலேட் பாய் ரோல் எல்லாம் இனி வேண்டாம் வாங்க வெளியே... செமையா பண்ணி இருக்கிங்க...
எப்பயுமே பெரிய ஆளுங்க சும்மாதான் இருப்பானுங்க.. சில அள்ளக்கைங்க பண்ணற விஷயத்தாலதான் பிரச்சனையே.. அது என்னன்னு படம் பார்க்கும் போது உங்களுக்கே தெரியும்
முத்தழகு பிரியாமணி நீட்டான டிரஸ்சில் வந்து போகின்றார்.
ராம்கோபால் வர்மா கதாநாயகியை கொஞ்சமும் உரித்துக்காட்டாத படம் இது.
இந்த படத்தில் ஆக்ஷன் சீன்ஸ் அத்தனையும் 96 பிரேமில் செய்து இருக்கின்றார்கள். அந்த வித்யாசமான முயற்ச்சியும் அந்த மேக்கிங்கும் இந்த படத்துக்கு பெரிய பலம்...
அந்த காட்சிகளுக்கு பெரிய அளவில் பிலம் ரோல் சாப்பிட்டு இருக்கும்... அதனால் நன்றாக ரிகர்சல் செய்து விட்டு படம் எடுத்து இருப்பார்கள்.
கேமரா கோணங்கள் பல எக்ஸ்ட்ரிம் குளோசப்பாக பல ஷாட்டுகளும் சோக்கர் குளோசப்பாக சில உணர்ச்சி காட்சிகளுக்கு வைத்து இருக்கின்றார்கள்.
ஒருவர் நடந்து வருவதை கேமரா டாலியில் போட்டு 360டிகிரிக்கு சுற்றுகின்றது. ஒளிபதிவாளர் அமோல்ராத்தோர் பெண்டு நிமிர்ந்து இருக்கின்றது.. பல சஜஷன் ஷாட்டுகளில் கேமராவின் லெப்ட் எட்ஜ் மேலே முகம் வருவது போல் பிரேம் கம்போசிங் செய்து இருக்கின்றார்.
இது ஒரு ஆக்ஷன் கதை... அதுக்கு இன்னும் பலம் சேர்க்கும் விதமாக இந்த படத்து கதைக்கு நரேட்டர் பகுதிக்கு குரல் கொடுத்து இருப்பது பிரபல இயக்குனர் கௌதம்வாசுதேவ்மேனன்.
எனக்கு சூரியா விவேக்குக்கு பிறகு எனக்கு படத்தில் பிடித்த நடிகர் போலிசாக வரும் கன்னட ஆர்ட்டிஸ்ட் செம ஸ்டைல் நல்ல பாடிலாங்குவேஜ்...பேர் மறந்து விட்டேன் சொன்னால் சேர்த்து விடுகின்றேன். ரெடி சீக்கிரம் சொல்லுங்க..
படத்தின் டிரைலர்
படக்குழுவினர் விபரம்.
Cast : Surya, Vivek Oberoi, Priyamani, Radhika Apte,Sudeep and others
Director : Ram Gopal Varma
Producer : Madhu Mantena, Sheetal Vinod Talwar
================
லாஸ்ட்கிக்.
வழக்கமான ஆக்ஷன் கதை.என்னதான் உண்மைகதை என்றாலும் கிளைமாக்ஸ் யூகிக்க முடிந்து விடுகின்றது.. சூர்யா நடிப்புக்கும் ராம்கோபால் வர்மா மிரட்டலான மேக்கிங்கும் இந்த படத்தை பார்க்கலாம்.. இந்த படம் டைம்பாஸ்படம்தான்.=================
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....
குறிப்பு..
இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகடுத்துங்கள்.
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்.
இன்னும் விரிவாக விமர்சனம் எதிர் பாத்தேன் , வர வர நீங்க சரியில்ல . இன்னும் கொஞ்சம் பிரிச்சு மேஞ்சு இருக்கலாம் . தலைவா ...........
ReplyDeletenice comments.... revenge is one of the basic character for the human beings....
ReplyDeleteடைம்பாஸ் படம்னு சொல்லி அதை என்ன பத்து பக்கத்துக்கு எழுதனுமா?? பாலமுருகன்..
ReplyDeleteஜாக்கி ஸார் அந்த கன்னட நடிகர் பேர் சுதீப். சமீபத்திய ராம்கோபால் வர்மாவின் படங்களில் இவர் தவறாமல் இடம் பிடிக்கிறார். படம் நீங்கள் சொன்னது போல் அதகளம் தான்... எனக்குப் பிடித்திருந்தது...
ReplyDeletePadam oduma Boss,,
ReplyDeletehttp://enathupayanangal.blogspot.com
நான் இன்னும் பார்க்க்லை, சோ இன்னும் கொஞ்சம் ப்ரீஃபா வேணுமே என்ன செய்யலாம்? போன் பண்ணட்டா?
ReplyDelete//சூர்யா நடிப்புக்கும் ராம்கோபால் வர்மா மிரட்டலான மேக்கிங்கும் இந்த படத்தை பார்க்கலாம்//
ReplyDeleteஅப்ப ஒக்கே! :-)
சுருக்கமாக , மிகவும் அழகாக கதை சொல்கிறது உங்களின் விமர்சனப் பார்வை . பகிர்வுக்கு நன்றி தல
ReplyDeleteஏங்க ஜாக்கி, அப்போ பார்க்கலாம் போல.. !
ReplyDeleteநம்மள விட்டுடீங்களே, பாஸு...
ReplyDeleteஇருந்தாலும் எனக்கு நிஜமாகவே வழக்கு வந்திட்டிருக்கு...
சாலேட் பாய்
ReplyDeleteபிலம் ரோல் //
இன்னும் இருக்கின்றன. திருத்தி விடுங்கள்
நெறைய ஆள் நெகட்டிவா சொல்றாங்க... ஆனாலும் எனக்கு பாக்கணும்...
ReplyDeleteDear Mr. Jackie,
ReplyDeleteKarupa iruntha Background ippo sky blue ku maridichi??? Intha mattrathuku enna karanamo???
Luks Gud... Keep it up...
Regards,
Vijay
Muscat
thanks
ReplyDeleteஇரத்த சரித்திரம் முதல் பாகம் ஹிந்தியில் பார்த்தேன் - வர்மா உண்மைலே மிரட்டித்தான் விட்டார் தமிழிலும்.
ReplyDeleteஜாக்கி அண்ணா, நேற்று அபிசேக் பச்சன் நடித்த 'கேலே ஹம் ஜீன் ஜான் ஸே' ஹிந்தி படம் பார்த்தேன். 1930 இல் சுதந்திரத்திற்கு பாடுபட்ட... ஆனால் வெளிச்சத்திற்கு வராத இளைஞர்களின் கதை. என்னை மிகவும் கவர்ந்தது. ஒளிப்பதிவு 1930 ஆம் ஆண்டுக்கே அழைத்து சென்று விட்டது. உங்களுக்கு தெரியாமால் இருந்திருக்காது. தயவு செய்து பாருங்கள். குறிப்பாக படம் முடிந்ததும் போடப்படும் பாடல் மற்றும் நிஜ வீரர்களின் புகைப்படங்களை.. உங்கள் கண்கள் கலங்காவிடில் என்னை நேரில் வந்து உதைக்கலாம்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஇத்தனை நாளும் ராம்கோபால்வர்மா, ஒரு மிகபெரும் இயக்குனர் என்று எண்ணியதை இந்த படத்தின் மூலமாக மாற்றி கொண்டேன்.
ReplyDeleteமாற்று கருத்திற்கு மன்னிக்கவும்.
மிக்க நன்றி நண்பர்களே.. மாற்றுகருத்து உங்களுடையது எனக்கு எதுக்கு வருத்தம்..
ReplyDeleteசிவக்குமார் வாய்ப்பு கிடைக்கும் போது பார்க்கின்றேன்.
நன்றி விஜய்..
vannakam brother ur blog is very intresting ..i from trichy .now in argentina working as a chef when u come argentina visit tandoor restaurent in buenos aires capital argentina
ReplyDeleteThat kannada actor name is Sudeep. He is giving sensible hits in Kannada, but rajkumar sons making problem for him in kannada film industry.
ReplyDeleteஇதுபோன்ற படங்கள் இனிமேலும் வெளிவரக்கூடாது என்பதே எனது விருப்பம்... ஆக்ஷன் என்ற போர்வையில் வன்முறையையும் குரூர சிந்தனைகளையும் பிரதிபலிக்கும் படம்... வருத்தம் என்னவென்றால் குடும்பத்தோடு பார்க்ககூடிய படங்களை தந்த சூர்யாவுக்கு என்ன ஆயிற்று? ”ஆறு படத்தில் நடித்ததற்காக வருந்துகிறேன் இது போன்ற படங்களில் இனி நடிக்க மாட்டேன்” என்று எல்லாம் டயலாக் பேசிய சூர்யா ஒரு அரசியல்வாதி போல அதையெல்லாம் மறந்து இப்படி ஒரு பார்க்க சகிக்காத படத்தில் நடித்துள்ளார் என்பதே !!!!
ReplyDelete