ஜாக்கியா..?
ஆமாங்கசார்...
நான் இயக்குனர் ..................... பேசறேன்...
சார் நீங்களா? நீங்க என் பிளாக் எல்லாம் படிக்கறிங்களா? என்னால நம்பவே முடியலை சார்...
உலகத்துல எந்த இடத்துலயும் இணையத்துல படிக்கும் போது சென்னையில் இருக்கும் நான் படிக்க முடியாதா???
சார் உண்மைதான்சார்... நான் ஏதோ எனக்கு தெரிஞ்சதை கிறிக்கிட்டு இருக்கேன்.. நீங்க எவ்வளவு பெரிய ஆள்.. அதான்....
மே மாசம் ஒரு பிலிம் ஸ்டார்ட் பண்ண போறேன்...புல்லா கிரைம் சப்ஜெக்ட்...சினேகா,திரிஷா ரெண்டு பேருகிட்டயும் பேசிக்கிட்டு இருக்கேன்.
ஒரு வில்லன் ரோல் இருக்கு.. செய்யறிங்களா? பசுபதிகிட்ட டேட் கேட்டேன் அவரு இப்ப வில்லன் ரோல் எல்லாம் செய்யறது இல்லை..குசேலனுக்கு அப்புறம் கேரக்டர் ரோல்தான் செய்யறேன்னு சொல்லிட்டார்... டக்குன்னு உங்க ஞாபகம் வந்துச்சி.. நீங்க அந்த கேரக்டருக்கு ஆப்டா இருப்பிங்க.... அந்த வில்லன் ரோலை நீங்க செய்யறிங்களா?