மன்மதன் அம்பு...திரிஷா உதடு தப்பிய படம்.



கமல் படத்தில் முதல் காட்சியிலேயே நடிகர்  சூர்யாவும் திரிஷாவும் ஆட்டம் போடும் போது இது தமிழ்படம்தானா? என்ற ஆச்சர்யங்கள் நம்மை சூழ்ந்து கொள்கின்றன..ஒரு பெரிய நடிகர் படத்தில் வளர்ந்து வரும் ஒரு நடிகர் ஈகோ பார்க்காமல் நடித்து இருப்பது பாராட்டுக்குறியது.



பெரிய எதிர்பார்ப்புகள்பெரிய விளம்பரம், பெரிய பரபரப்பு இல்லாத கமல் படம்.பொதுவாக தமிழ் திரைபடங்கள் வெள்ளிக்கிழமை ரிலிஸ் செய்வார்கள். இந்த படம் வியாழக்கிழமை அன்றே ரிலிஸ் செய்து இருக்கின்றார்கள்...

ஒரு நடிகையை சமுகம் எப்படி பார்க்கின்றது என்பதை காமெடியோடு சொல்லி  இருக்கின்றார்கள்..


மன்மதன் அம்பு படத்தின்  கதை என்ன??

திரிஷா பிரபல நடிகை,  அவரை பணக்கார மாதவன் காதலிக்கின்றார்..மாதவனுக்கு சந்தேக புத்தி.. மனஅழுத்தத்தில் இருந்து விடுபட பாரிஸ் கிளம்பி செல்கின்றார் நடிகை திரிஷா.. மாதவனுக்கு திரிஷாவுக்கு யாராவது பாய்பிரண்ட் இருப்பார்களோ என்று சந்தேகபட்டு திரிஷாவை வேவு பார்க்க மேஜர் கமலை அனுப்புகின்றார்...நிறைய நெகிழ்ச்சி மற்றும் குழப்பங்களுக்கு விடை கண்டு படம் இனிதே நிறைவடைகின்றது.

படத்தின் சுவாரஸ்யங்களில் சில...

கமலின் என்ட்ரி இருக்கின்றது பாருங்கள்.. வேட்டையாடு விளையாடுக்கு அப்புறம் எனக்கு இந்த படத்தின் கமல் என்ட்ரி பிடித்து இருக்கின்றது.. காரணம் ஹுஸ் த ஹீரோ சாங்கோடு கமல் என்ட்ரியால்எனக்கு அது பிடித்து இருக்கலாம்...

நீ நீல வானம் பாட்டில் எல்லா நிகழ்வுகளும் ரிவர்சில் போவது போலான புதிய முயற்ச்சியை செய்து இருக்கின்றார்...

கமல் தகிடுதத்தம் பாடலுக்கு சோலோவாக போடும் ஒரு டான்ஸ் ...1980 மற்றும் 1970 கமலை நினைவு படுத்துகின்றன...

படத்தில் ஒரு கப்பலை காட்டி இருக்கின்றார்கள்.. அது படம் பார்க்கும் தமிழ் ரசிகனுக்கு புதிய விஷயம்.. ஏற்க்கனவே பல ஆங்கிலபடங்களில் பார்த்து இருந்தாலும் இந்த படம் தமிழில் பிரமாண்டம்தான்..

இந்த படம் ஹாலிவுட் படமான தேர் ஈஸ் சம்திங்க அபவுட் மேரி என்று ஒரு சிலரும் ஒரு சிலர்  வேறு சில படங்களின் தழுவல் என்று சொல்கின்றார்கள்..
திரிஷா சூர்யாவோடு ஆடும் பாடலோடு வேறு எந்த ஆட்டமும் இல்லை...
திரிஷா இந்த படத்தில் தமிழ் பேசி நடிக்கவும் செய்கின்றார்...கமல் திரிஷாவுக்கு பெரிய நெருக்கமான காட்சிகள் இல்லை...

வீரத்துக்கு உச்சகட்டம் அஹிம்சை போன்ற இன்டலெக்சுவல் டயலாக்குகள் படம் முழுவதும் விரவி கிடக்கின்றன...

கமலுக்கு திரிஷாவுக்குமான காதலின்  அழுத்தத்தை சொல்லும் அந்த கவிதை சொல்லும் காட்சி தூக்கபட்டு விட்டது.. அதனால் அந்த காதல் அழுத்தம் இன்னும் தேவையாக இருக்கின்றது...

ஒளிப்பதிவு...மனுஷ்நந்தன்.. எழுத்தாளர் ஞானி அவர்களின் பையன்.. இவர் ரவிகே சந்திரனிடம் தொழில் பயின்றவர்.,.ரிவர்சாங்கில் நல்ல ஒர்க்...  பாரினில் திரையில் முழு சுவரும் தெரியும் படி சின்ன கேப்பில் மட்டும் தெரு தெரிவது போல ஒரு ஷாட் அதில் ஒரு வெள்ளைகாரர் நடந்து போவது போல இருக்கும் அந்த ஷாட் அருமை ..

இந்த படம் ரொமான்டிக் காமெடிபடம்...

திரிஷாவின் கண்களில் மென்சோகம் எனக்கு பிடிக்கும். அது இந்த படம் முழுக்க தெரிகின்றது.. சங்கீதா திருமணத்துக்கு பின் நல்ல வெயிட் போட்டு இருப்பது  வயிற்று தொப்பை  தெரியவைக்கின்றது..

கமலோடு ஜோடி போடும் அந்த வெள்ளைக்கார பெண் மிக அழகாக இருக்கின்றார்.. பட் டயலாக் இல்லாமல் நடித்து இருக்கின்றார்..


மாதவன் நெகட்டிவ் ரோல் ரொம்ப அற்புதமாக செய்து இருக்கின்றார்.. மிக முக்கியமாக தண்ணி அடித்து விட்டு பேசுவது போவான காட்சிகளில் மேடி கனக்கச்சிதம்... உஷா உதுப், ஓவியா, எனதலைகாட்டும் நபர்கள் குறைவு..

இந்த கேஎஸ்ரவிக்குமார் முதல் காட்சியிலேயே தொழில் நிமித்தமாக தலை காட்டிவிடுவதால்  படம் முடியும் போது கடைசி காட்சியில் மிஸ்சிங்..
தேவிஸ்ரீபிரசாத்.. ஒரு பாடலில் கித்தார் மீட்டிய படி வருகின்றார்...

கமல் அனைத்து பாடலையும் எழுதிஇருக்கின்றார்.. நீ  நீலவானம்... சாங் இப்போது என் பேவரிட்...

ரமேஷ் அர்விந் ஊர்வசி இருக்கின்றார்கள். ரமேஷ் அரவிந்தா என்று  ஆச்சர்யபடுவது போல நடித்து இருக்கின்றார்..

படத்தில்  பல காட்சிகள் கிச்சு கிச்சு மூட்டுகின்றன... மலையாளியாக வரும் கேரக்டர் வரும்  போது எல்லாம் எரிச்சல் வருகின்றது..

இந்த படம் நாடகம் போல  ரிகர்சல்  செய்து விட்டு எடுத்த படம்..படத்தின் பிரேம்களில்  ரிச்நெஸ் தெரிகின்றது..

ஒரே ஒரு சண்டைக்காட்சிதான் என்றாலும் அதை ரசிக்கும் வகையில் எடிட் செய்யது இருக்கின்றார்கள்..

வழக்கமான கேஸ்ரவிக்குமாரின் டிரேட் மார்க் சிரிப்பு படம்.

பைனல் கிக்..
மனசு விட்டு சிரித்து வர பார்த்து விட்டு வரலாம்..

 ===================
படத்தின் டிரைலர்...




========================
படக்குழுவினர் விபரம்..


Directed by     K. S. Ravikumar
Produced by     Udhayanidhi Stalin
Written by     Kamal Haasan
Starring     Kamal Haasan
R. Madhavan
Trisha Krishnan
Sangeetha
Ramesh Arvind
Music by     Devi Sri Prasad
Cinematography     Manush Nandan
Editing by     Shaan Mohammed
Studio     Red Giant Movies
Distributed by     Red Giant Movies
Release date(s)     December 23, 2010 (2010-12-23)
Running time     152 minutes
Country     India
Language     Tamil

============

சென்னை ஜோதி தியேட்டர் டிஸ்கி... 

இந்த படத்தை நான் பரங்கிமலை ஜோதியில் பார்த்து தொலைத்தேன்... ஏன்டா போனோம் என்று  ஆகிவிட்டது..

சவுண்ட் சரியில்லை.. சொறிபுடிச்ச கையை வச்சிகிட்டு எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் போல எதையாவது நோண்டி வைத்து இருக்க வேண்டும்.. சென்டர் ஸ்பீக்கரில் வரும் எந்த டயலாக்கும் புரியவில்லை...

சிங்கையில் இருந்து வந்து இருக்கும் தம்பி பிரபாகர்ரோடு பார்த்தேன்... சாரி பிரபா படம்  தியேட்டர் செம சொதப்பல்...

படம் போடும் போதே எல்லோரும்  சவுண்ட் பிரச்சனை பற்றி கத்தினார்கள்.. நான் மேனேஜர் இடம் போய் சொன்னேன் ஒரு பப்பும் வேகவில்லை...


படத்தை மறுமுறை பார்க்க வேண்டும்.. நல்ல தியேட்டரில்

====================================================

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....

குறிப்பு..

இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகடுத்துங்கள்.

பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்.

26 comments:

  1. எனக்குத் தான் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...

    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.
    மறக்கப்பட்ட பிரபல பாடகர்கள் Boney M (கிறிஸ்மஸ் சிறப்பு பதிவு)

    ReplyDelete
  2. தங்கள் பார்வையும் நல்லாயிருக்கிறது.. வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  3. All Directors (includ KS RAvi in a recent interview) kept on saying Kamal used to tell 5 stories in 5 hrs. But F*** he copies movies from Hwood. When is he going to take original movie ?

    As you said, it has shades of There is something about Mary

    ReplyDelete
  4. தண்ணி அடித்து விட்டு பேசுவது போவான - its போலான. Pls change

    ReplyDelete
  5. அட போங்க பாஸ்....பொதுவா இங்க கத்தாரில குறிப்பிட்ட தமிழ் படம் தான் வரும்.வழக்கம்போல ஆர்வத்துல தான் போனோம்.........முடியல.கமல் நல்ல நடிகர் ஆனா சிறந்த கதை ஆசிரியர் அல்லது வசன கர்த்தா அல்ல.
    இடைவேளை வரை படம் பார்க்கலாம்.பிற்பகுதி காமெடி என்கிற பெயரில் சரியான கொத்து.இப்படம் படு தோல்வி என்பதை கதையின் முடிவே சொல்லிவிடும்.யாராலும் ஜீரணிக்க முடியாது.

    ReplyDelete
  6. பிட்டு படம் போடுற தியேட்டருக்கு எல்லாம் போனா அப்படித்தான் ஆகும் ஜாக்கி... சின்கையில இருந்து வந்த அவருக்கு வேணும்னா விவரம் தெரிஞ்சிருக்காது... சென்னையைப் பற்றி எல்லாம் தெரிஞ்ச நீங்க ஏன் ஜாக்கி அந்த தியேட்டருக்கு போனீங்க...

    ReplyDelete
  7. சுடச்சுட விமர்சன பகிர்வுக்கு நன்றி அண்ணே

    இந்த வாரம் பார்த்துட வேண்டியதுதான்.........

    ReplyDelete
  8. சவுண்ட் பிரச்சினை தியேட்டராலா..லைவ் ரிகார்டிங்காலா..வேற தியேட்டர்ல பார்த்தவங்ககிட்ட கொஞ்சம் கேட்டுட்டு போங்க சார்...
    -----செங்கோவி
    மன்மதன் அம்பு-விமர்சனம்

    ReplyDelete
  9. கடைசி வரியை மட்டும் படித்துவிட்டேன். படம் பாத்துவிட்டு மீதியை படிக்கிறேன். இல்லன்ன த்ரில் போயிடும். ஐநாக்ஸ் போலாம்னு இருக்கேன்.

    ReplyDelete
  10. Hi Jackie..

    என்னை பொருத்தவரை படம் பாடு மொக்கை... கண்டிப்பாக இது மிக பெரிய தோல்விப் படமாக அமையும்... காரணம் இரண்டு..

    1. கமலின் அளவிற்கு சிந்திக்கும் நபர்கள் தமிழகத்தில் வெகு சிலரே...
    2. இது ஏ க்லாஸ் ரசிகனுக்கான படம். பாமரனால் இதை ஊட்கொள்ளவோ ரசிக்கவோ முடியாது.

    கேரளாவிலும், ஆந்திரவிலும் படம் படு தோல்வி என்று செய்திகள் கூறுகின்றன. சென்னையில் சுமாராக ஓடுவதாக நண்பர்கள் கூறி உள்ளனர். இங்கு மலேசியாவில் படம் படு தோல்வி. தேன் தமிழகத்தில் படம் கண்டிப்பாக ஓடாது.

    கமல் மீண்டும் மீண்டும் உலகப் படங்களை தழுவி திரைப்படம் எடுப்பது சிறிது வருத்தமே. அவருக்கு இருக்கும் அறிவிற்கு அவர் சொந்தமாக யோசித்து எடுக்க வேண்டும்...

    பாவம் கமல்... மேலும் ஒரு தோல்விப்படம்... இந்த நிலையில் அவரது 'ஓர்க்குட்' இணைய ரசிகர்கள் இந்த படம் எந்திரத்தை பிளக்கும் என்று சொல்லுகின்றார்கள்... என்ன கொடுமையோ...

    அஜித், விஜய் இவர்களுக்கு கூட, கமல் விட நல்ல ஒப்பனீங் இருக்கும் போல...

    ReplyDelete
  11. ஸ்பார்ட் ரெக்கார்டிங் செய்திருக்கிறார்கள், அதனால் எல்லா தியட்டர்களிலும் இந்த பிரச்சினைதான்( எங்கள் நாட்டு ( இலங்கை) தியட்டர்களிலும் கூட)

    ReplyDelete
  12. ஆனால் இங்கே இலங்கையில் அந்த கவிதை சொல்லும் காட்சி இருந்ததாக நன்பர்கள் சொன்னார்கள்.........:)

    ReplyDelete
  13. Twitts are saying it is a inspiration of 'Romance on the high seas' and 'There is something about Mary'. But if you ask Kamal he will 2000 year before Kambar said or Mahabharatham have story line like this.

    ReplyDelete
  14. சுடச்சுட விமர்சனம் ...

    ReplyDelete
  15. மன்மதன் அம்பு...திரிஷா உதடு தப்பிய படம்.இது மட்டும் உண்மை

    ReplyDelete
  16. பின்னுட்டம் இட்ட அனைவருக்கும் என் நன்றிகள்.. தமிழகம் தழுவல் கதைகளைதான் நிறைய எடுத்து வருகின்றது.. அதில் கமலைமட்டும சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை... சமீபத்திய உதாரணம் நந்தலாலா...

    ReplyDelete
  17. Dear Mr. Jackie,
    We Went to this movie today, but kavithai song was not censored here, its nice, film ok.
    Rgrds,
    Vijay,
    Muscat.

    ReplyDelete
  18. ஜாக்கி....

    படம் நல்லா இல்லேன்னு சொல்லல... ஆனா, நல்லா இருந்திருந்தா நல்லா இருக்கும்னு சொல்ல வந்தேன்...

    படத்த உதயநிதி கிட்ட இருந்து வாங்குன ஜெமினிக்கு பெரிய துண்டு ரெடின்னு சொன்னாய்ங்களே??

    ReplyDelete
  19. நீங்கள் எழுதியதில் மிக மோசமான விமர்சனம் இது.... உண்மை நிலையை பிரதிபலிக்கவில்லை..

    ReplyDelete
  20. //கமலுக்கு திரிஷாவுக்குமான காதலின் அழுத்தத்தை சொல்லும் அந்த கவிதை சொல்லும் காட்சி தூக்கபட்டு விட்டது.. //

    சிங்கப்பூரில் காட்சி ஓடியது

    ReplyDelete
  21. //தமிழகம் தழுவல் கதைகளைதான் நிறைய எடுத்து வருகின்றது.. அதில் கமலைமட்டும சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை... சமீபத்திய உதாரணம் நந்தலாலா//

    Sir nan once more parpan
    Nice Camera, Nice location,little drama effect but classic. crazy, KS Dsp every body comes into picture only in second half.

    ReplyDelete
  22. கமல் படம்….ரவிக்குமார் டைரக்ஷன்…காதல் களம்… வாவ்! என்ற ரொமாண்டிக் எதிர்பார்ப்புகளோடு பார்க்க வராதீர்கள்…‘காதலின் நடுவே சந்தேகம் வந்தால்’ – வேவு பார்த்தால்.. விளைகின்ற விளைவுதான் ‘மன்மதன் அம்பு’

    http://alonealike.blogspot.com/2010/12/good-to-see.html

    ReplyDelete
  23. டியர் ஜாக்கி. படம் பாத்துட்டேன். முதல் பாதி அருமை. இரண்டாம் பாதி வழக்கமான கிரேசி மோகன் ஸ்டைல் திரைக்கதை. இதில் கமல் அடக்கமாக நடித்துள்ளார். Actually இப்படத்தில் trisha தான் Hero. அவரை சுற்றியே கதை வருது. மற்றவர்கள் போல் மொக்கை, படுமொக்கை என்ற ரீதியில் எழுதாமல் thechnicalஆக எழுதியிருந்தீர்கள். Hats of you sir. இரண்டாம் பாதியில் திரைக்கதயினை serious ஆக கொண்டு போயிருந்தால் இது ஒரு Perfect film ஆக இருந்திருக்கும் என்பது என் கருத்து.

    ReplyDelete
  24. படத்துல மெசேஜ் இல்லன்னு சொல்லுரவுங்களுக்கு Seat Belt போட்டுட்டு வண்டி ஒட்டுங்கனு மெசேஜ் இருக்கு... ஹிஹ்ஹி

    tamilnovelsonline.blogspot.com

    ReplyDelete
  25. வெங்குடு , “கடும் விமர்சகர் வெங்குடு” பேசுறேன். விடியட்டும் ஓய் என் பிளாக்ல இந்த படத்த விசை பலகையால சுட்டு எரிக்கிறேன்...

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner