(AFTER. LIFE-2009) 18+ ஆத்மாவோடு பேசுபவன்.


இறப்புக்கு பிறகு என்ன நடக்கும் என்பது எப்போதும், மனித குல வரலாற்றில்  மில்லியன் டாலர் கேள்விதான்.. ஆனால் பொதுவாக இறப்புக்கு பிறகு உடலை விட்டு ஆத்மா மட்டும் சுற்றிக்கொண்டு இருக்கும்...என்பதாக நம்படுகின்றது. இதுதான் பெரும்பான்மைகாரர்களின் கூற்றாக இன்றளவும் இருக்கின்றது..



மனிதன் உலகத்தில் ஒரே விஷயத்துக்கு மட்டுமே பயந்து சாகின்றான்.. அது மரணத்துக்கு மட்டுமே. காரணம் அதன் பின் என்ன நடக்கும் என்பது தெரியாத காரணம்தான் அதுக்கு முக்கியகாரணம் என்பது என் எண்ணம்...

நீங்கள் இறந்து போனதும் சொர்கத்துக்கு போய் இதே போல் இருக்கலாம்.. அருமையான வாழ்க்கை நடத்தாலாம்... சொர்கத்தில் இரவு திருமதி செல்வம் பார்க்கலாம்... இதே வாழ்க்கையை அங்கேயும்  நடத்தலாம்.. என்ன நீங்கள் உங்கள் உடல் இல்லாத ஆத்மா என்ற வஸ்துவுடன் இருக்க வேண்டும்...  என்று தெளிவாக சொன்னால் எப்படி இருக்கும்?? இறப்பின் மீது பயம் வருமா?...

 ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோம்...இது கற்பனைதான். மாதத்துக்கு ஒரு முறை அம்மாவாசையின் போது உங்கள் மகளோ அல்லது மகனோ உங்களை நினைத்து படையல் போட்டால்??? அல்லது உலகத்தில் இறந்தவருக்கு எந்த எந்த முறையில் நினைவுகளில்,இறந்து போனவரின் வாழ்ந்த கணத்தை நினைவு கூர்கின்றார்களோ? அதுக்கு ஏத்தது போல் கடவுள் மாதத்துக்கு ஒருமுறை சுற்றுலா போல பூமிக்கு போய் உன் சொந்தங்களை பார்த்து விட்டு வரலாம் என்று சொன்னால் அல்பாயுசில் இறந்து போனவர்களுக்கு எப்படி இருக்கும்???

நீ வாழ்ந்த இடத்தில் நீ இல்லாமல் அந்த குடும்பம் படும் துயரை பார்த்து கண்ணீர் வடிக்கலாம்... உன் இறப்புக்கு சந்தோஷபடும் உறவுகளை பார்த்து ஆச்சர்யபடலாம்...  பக்கத்து வீட்டில்  வேலைக்கு போகும் பெண் பா கழுத்து ஜாக்கெட் போட்டு வேலைக்கு போய்விட்டாள் என்பதற்க்காக அந்த பெண்ணுக்கு தேவிடியா பட்டம் கட்டிய எதிர்வீட்டு ஆண்ட்டி,புருசன் வேலைக்கு போனதும் பலரிடம் சோரம் போகும் அதிர்ச்சி சம்பவத்தை பார்த்து வியக்கலாம்...ஒரு தேர்தலின் போது  இந்தியா எனும் ஏழை நாட்டில் எவ்வளவு லஞ்சம் விளையாடுகின்றது என்று எட்டி பார்க்கலாம், லஞ்சம் வாங்கி மாட்டிக்கொண்ட அரசு ஊழியரின் வீட்டில் நடக்கும் நியாய வாதங்களை கேட்டுவைக்கலாம். தமிழ்நாட்டு சிலைகளை அவமானபடுத்துவது யார் என்று கண்டுபிடிக்கலாம்...
வால்டர்வடிவேல் படத்தில் வாயில் விரல் வைத்தாலும் கடிக்க தெரியாதது போல் வேஷம் போட்டு,சைட் அடிக்கும் பசங்களையே நக்கல் விட்டு யோக்கிய புருசனாக திரியும், கீழ் பிளாட் ஆறுமுகத்தின் கடைசிபையன் புக்மார்க்கில் எல்லாம் பாலான வீடியோதளங்கள் சேவ் ஆகி இருப்பதை  பார்த்து அதிர்ச்சி   அடையலாம்.

ஒரு கலவரத்தின் ஆணி வேரை தேடி போகலாம்... பல யோக்கியர்கள் வேஷம் கிழிந்து தொங்குதை ஆத்மாவாக  பறந்து போய் ரசித்து பார்க்கலாம். ஈழத்தில் முள்ளிவாய்காலில்  கடைசியில் என்ன நடந்தது என்று தேடி போகலாம்..இப்படி எல்லாத்தையும் பார்த்து ஏதுவும் செய்யாமல்  உண்மை மட்டும் தெரிந்து வந்து விடலாம்... எனக்கு எதுவும் தெரியவேண்டாம்.. வாழ்ந்த கணங்களை நினைத்தபடி நான் இப்படியே இருந்துவிடுகின்றேன்... என்று சொன்னாலும் எந்த பிரச்சனை இல்லை.. ஆனால் உனக்கு உலகத்தில் ஏதாவது ஒரு   உயிர் உருவாகும் போது அதில் உன்னை கடவுள் புகுத்தி நீ உலகத்தில் எந்த நிலபரப்பிலும் புகுந்த அந்த வாழ்க்கை சூழ்நிலைக்கு ஏற்றது போல பிரச்சனைகளை சந்திக்கலாம்... என்று சொன்னால்... அப்படி அது நிருபிக்கபட்டு விட்டால்... மனிதன் மரணத்தின் மீது பயம்கொள்ளமாட்டான்...

கடவுளிடம் இருக்கும் மாஸ்டர் கம்ப்யூட்டர் மூலம்  தான் இதுவரை பிறப்பு எடுத்த வாழ்க்கைகளை இறந்து போனதும், அடுத்த பிறப்புக்கு நேரம் வரும் வரை வெயிட் செய்து நமது வாழ்க்கையையே திரைப்படம் போல ஒட்டிபார்க்கலாம்...

இறப்பு எல்லோருக்கு சர்வ நிச்சயம் என்று தெரிந்தாலும் அடுத்து என்ன? என்று தெரியாமல் இருப்பதால்தான் இந்த பிரச்சனையே... ஆனால் நான் மேலே சொன்னது போல மட்டும் நடக்கும் என்று தெரிந்து விட்டால்?? அது நிரூபிக்கபட்டுவிட்டால்???சீட்டில் ரம்மி பாயின்ட் ஆட்டம் விளையாடும் போது கார்டு சரியாக வரவில்லை என்றால், கார்டை கவிழ்த்து விடுவோமே அது போல வாழ்க்கை சுவாரஸ்யம் இல்லை என்று தெரிந்து விட்டால் கண நேரம் கூட யோச்சிக்காமல் கார்டை கவிழ்ப்பது போல தற்கொலை செய்து கொண்டு அடுத்த பிறப்புக்கு ஹாயாக  வெயிட் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள்...ஊரெல்லாம் தற்கொலை உலகில்  பெருகிவிடும்...

சோ இது போல எதுவும் நடக்காமல் கொடுத்த வாழ்க்கையை,.தம் அடிக்கும் போது பஞ்சின் கடைசி வரை ஓட்ட ஒட்ட இழுத்து வாழும் வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்ற காரணத்தால்தான் இறப்புக்கு அடுத்து என்ன??? என்ற கேள்விகுறியை வாழ்க்கை நம்மிடத்தில் முன் வைக்கின்றது...

இந்த படம் இறப்புக்கு பிறகு அத்மாவிடம் பேசுபவன் பற்றிய கதை.. இறப்புக்கு பிறகு எந்த ஆத்மாவும் உடலைவிட்டு போக விரும்புவதில்லை.. ஆனால் அந்த ஆத்மாவுக்கு உண்மையை மெல்ல மெல்ல பேசி புரியவைத்து அவர்களை நிம்மதியாக மேல் உலகுக்கு அனுப்புகின்றவனின் கதை..

AFTER LIFE-2009 படத்தின் கதை என்ன???

அன்னா ...Anna Taylor (Christina Ricci) ஒரு டீச்சர். அவளுடைய காதலனுக்கும் அவளுக்கும் ஒரு கருத்து வேறுபாடு  ஒரு ஹோட்டலில் நடக்கும் டின்னரின் போது ஏற்பட, அன்னா கோவித்துக்கொண்டு வேகமாக காரில் போகும் போது, ஒரு விபத்தில் சிக்கி உயிர்விடுகின்றாள்... அவளுடைய இறுதி ஊர்வலம் வெள்ளிக்கிழமை என்று சொல்கின்றார்கள். உடலை ரெடி செய்து இறுதி ஊர்வலத்துக்கு கொடுக்கும் நாள்வரை, இறந்த உடலை ரெடி செய்து கொடுக்கும் எலியாட்Liam Neeson ( Eliot Deacon) என்பவருக்கும் இறந்த அன்னாவுக்கும் நடக்கும் அத்மார்த்தமான  உரையாடலே இந்த படத்தின் கதை...

படத்தின் சுவாரஸ்யங்களில் சில....

முதல் காட்சியிலேயே இறந்த உடல்களை அழகு படுத்தி அதனுடன் ஆத்மார்த்தமாக பேசி போட்டோ எடுக்கும், அந்த ஒரு ஷாட்டில் எலியாட்டின்  பாத்திரபடைப்பை பார்வையாளனுக்கு பொட்டில் அடித்தது போல சொன்னது இயக்குனரின் திறமைக்கு சான்று...

இரண்டாம் காட்சியில் நடக்கும் அன்னாவுக்கு அவளது காதலனுக்கும் இடையே நடக்கும் உடலுறவை காட்சி முழுக்க ஒயிட் பேக் ரவுண்டில் மைல்டாக காட்சி படுத்தாமல் பிரைட்டாக காட்சிபடுத்தியதும்... அந்த ஒயிட் பேக்ரவுண்டுக்கு, சிவப்பு சிம்மி அணியவைத்து இரப்பதும் கலர்புல் டேஸ்ட்டுக்கும்.. அதன் பின்  அவள்குளிக்கும்  போது அன்னாவின் பாயின்ட் ஆப்வீயூவில் கேமரா வைத்து அந்த மொசைக் கிளாசில் காதலனின் உருவம் மார்டன் ஆர்ட் போல தெரிவதும் அந்த ஷவரை காட்சிபடுத்திய விதமும் தேர்ந்த ரசனைக்கு  சான்று.

எலியாட் தனி ஒரு மனிதராக பினங்களை அழகுபடுத்த வேண்டிய காரணம் என்ன என்பது  பாதி படத்தக்கு பிறகு பார்வையாளன் உணர்ந்து கொள்வான்... ஆத்மாக்கள் உறங்கும் இடம் என்பதால் அந்த இடம் பின்டிராப் சைலன்டாக இருக்கின்றது...

இஅந்த பினவறைக்கு நல்ல லைட்டிங்.. அதே போல் அன்னாவின் பெட்டிகோட் திக் ரெட் கலர்  அதுவும் ஒயிட் லைட்டிலும் அந்த பெண்ணின் வெள்ளை உடலிலும் அந்த ரெட் வேறு ஒரு கலரையும் செய்தியையும் சொல்கின்றது...

அன்னா வாக கிரஸ்ட்டினா ரிக்கி.... செம கியூட் மிக முக்கியமாக அந்த கண்கள் செமை... சின்ன பெண் போலான  தோற்றம் அவரின் பலம்.. 30 வயதுகாரர் என்று காளியாத்தா கோவிலில் யார்  சத்தியம் செய்தாலும் நம்பமாட்டார்கள்..

நீ எட்டு மணி நேரத்துக்கு முன் இறந்துவிட்டாய்..
நான் சாகவில்லை
உன் முளை செல்கள் இறக்க ஆரம்பித்து விட்டன...
நான்  சாகவில்லை...
உன் உடல் கெட ஆரம்பித்து விட்டது... என்று  எலியாட்சொல்லும் போது இறப்பை ஏற்றுக்கொள்ளாமல் நடக்கத்துடன் ஐயம்நாட்டெட் என்று குரல் நடுங்க சொல்வது மரணத்தின் மீதான மனிதபயத்தின் வெளிபாட்டுக்கு ஒரு காட்சிக்கான சாட்சி என்பேன்.

ஒரு இறந்த உடலை அழகு படுத்துவது என்பது சாதாரணகாரியம் இல்லை அதை மிகுந்த ஈடுபாட்டுடன் காட்டி இருப்பதும் இதை டிடெய்லாக காட்டி இருப்பதும் நல்ல ரிசர்ச்...

பிணத்தையும் விட்டு வைக்காத மனிதர்கள் இந்த பூமியில் இரக்கின்றார்கள் என்பதற்கு அந்த போலிஸ்காரன் செய்கை ஒரு சாட்சி...

என்னதான் பிணமாக நடித்தாலும் உடலை ரெடி செய்யும் போது அந்த பெண்ணின் மார்பு காம்புகளில் இருக்கும் விரைப்புதன்மையை மறைக்க கூடுதல் மேக்கப் போட்டு இருப்பதும், குளிர்பதனத்தை அதிகபடுத்துவது போலானஷாட்டுகளின் மூலம் ஈடு கட்ட முனைந்து இருக்கின்றார்கள்...என்பது காட்சிகளில் தெரிகின்றது...

வாய் கோணி இருக்கும் பிணத்தை மிக நேர்த்தியாக தைத்து வாயை நேராக  வைப்பது போன்ற காட்சிகள் நல்ல பிரிபரேஷன்..

எல்லா பிணங்களின் ஆத்மாவும் தொல்லை செய்வது இல்லை என்பது போலவும் உறவினர்களின் வித்யாசமான வேண்டுகோள்களையும் மிக உன்னிப்பாக பதிவு செய்து இருக்கின்றார் இந்த பெண் இயக்குனர் Agnieszka Wojtowicz-Vosloo...

இவர் முதலில் இருந்தே நிறைய ஷாட்பிலிம் எடுத்த அதில் அவர்ர்டு வாங்கி அதன் பின் திரைத்துரைக்கு வந்து கால் பதித்தவர்...

இந்த படம் அமெரிக்கன் பிலிம் இண்சிடியூட் பிலிம் பெஸ்ட்டிவலில் 2009 நவம்பரில் திரையிடபட்டது...

இந்த படம் பார்த்தே தீரவேண்டியபடம்....இந்த படத்தை இயக்கிய பெண் இயக்குனர் மிக  அழகாக காட்சிகளை ஒளிப்பதிவாளர்Anastas N. Michos நல்ல லைட்டிங்கில்  நல்ல கோணங்களில்  ஜமாய்த்து இருக்கின்றார்...

ஒளிப்பதிவில் ஒயிட்டும் சிகப்பும் கலரும் முக்கியத்துவம் பெற்று இருக்கின்றது...

படத்தின் டிரைலர்....
========================


=================
படக்குழுவினர் விபரம்..

Directed by     Agnieszka Wojtowicz-Vosloo
Produced by     Bill Perkins
Brad Michael Gilbert
Celine Rattray
Written by     Agnieszka Wojtowicz-Vosloo
Paul Vosloo
Jakub Korolczuk
Starring     Christina Ricci
Liam Neeson
Justin Long
Music by     Paul Haslinger
Cinematography     Anastas N. Michos
Editing by     Niven Howie
Studio     Lleju Productions
Harbor Light Entertainment
Plum Pictures

Distributed by     Anchor Bay Entertainment
Release date(s)     November 7, 2009 (2009-11-07)
Running time     104 minutes
Country     United States
Language     English
Budget     $4.5 million
Gross revenue     $108,595.

சிலர்  எனது பழைய படங்களை தேடிபிடித்து  பலருக்கு லிங்கொடுத்து எனக்கு பெரும் உதவி செய்து வருகின்றார்கள்.. இந்த படத்தையும் சுட சுட கொடுக்கவேண்டுமாய் கேட்க்கொள்கின்றேன்.

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....

குறிப்பு.. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்.

13 comments:

  1. நல்ல விமர்சனம்,
    நானும் இந்த படத்தை பார்த்திருக்கிறேன்.எனக்கு பிடித்த படங்களுள் இதுவும் ஒன்று..

    Download Links:
    http://hotfile.com/dl/59727514/9e3172e/backup.ALife72.part1.rar.html
    http://hotfile.com/dl/59727622/9259101/backup.ALife72.part2.rar.html
    http://hotfile.com/dl/59727754/71287e7/backup.ALife72.part3.rar.html
    http://hotfile.com/dl/59727905/ed2e281/backup.ALife72.part4.rar.html
    http://hotfile.com/dl/59728055/76e6c9d/backup.ALife72.part5.rar.html

    RAR password : ultrascorp

    Download Page : http://united300.blogspot.com/2010/08/after-life-2009-720p-1280536-500mb.html

    ReplyDelete
  2. அருமையான‌ விம‌ர்ச‌ன‌ம் ஜாக்கி... ரொம்ப‌ நாள் க‌ழிச்சி நிஜ‌மாவே உங்க‌கிட்ட‌ இருந்து ஒரு ந‌ல்ல‌ விம‌ர்ச‌ன‌ம். க‌டைசியா நீங்க‌ சொல்லி நான் தேடிப் புடிச்சி பாத்த‌ ப‌ட‌ம் எக்ஸாம். அடுத்த‌து இதையும்..

    ரெவின்யூன்னு காட்டுற‌ நெம்ப‌ர் த‌ப்பா இருக்கும்னு நினைக்குறேன். ஏன்னா 4.5 மில்லிய‌ன் செல‌வு ப‌ண்ணி 108,000தான் ரிட‌ர்ன் கிடைச்ச‌துன்னு இருக்கு..

    ReplyDelete
  3. திகில் காட்சிகள் எதுவும் இல்லை என்பதால் இந்தப் படத்தைக் கண்டிப்பாக பார்க்கவேண்டும்.

    ReplyDelete
  4. அண்ணே,அருமையான படம்,நல்ல விவரணையான விமர்சனம்.

    ReplyDelete
  5. விமர்சனம் மிகவும் அருமை. இந்த வாரமே இந்தப்படத்தை பார்க்க வேண்டும் போல் தோன்றுகிறது!

    ReplyDelete
  6. அருமையான விமர்சனம்.

    ReplyDelete
  7. I did not like this movie at all! it was a drag and till last hoped something dramatic was going to happen!

    ReplyDelete
  8. விமர்சனம் மிகவும் அருமை.

    லேட்டஸ்ட் தமிழ் சினிமா படங்களுக்கு
    Tamil Movie Gallery

    ReplyDelete
  9. படத்தை பற்றிய உங்கள் விமர்சனத்தை விட முன்னுரை அருமை . நல்ல சிந்தனை திறன் உங்களுக்கு , வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. ஜாக்கி அண்ணே ,
    நீங்க இப்ப ஒரு வழியா திரைவிமர்சனம் போட்டாச்சு.
    நானும் ஒட்டு போட்டாச்சு.

    மற்றும் உங்க naration நல்லா இறுக்கு

    ReplyDelete
  11. சூப்பர்

    - - -

    ஓட்டுப்பட்டைய மேல தேடிகிட்டிருந்தா கீழ இருக்கு
    :))

    ReplyDelete
  12. வழக்கமா விமர்சனத்துல கலக்கர நீங்க இந்த தடவை நையாண்டிலயும் ,நக்கல் அடிக்கரதுலயும் கல்க்கி இருக்கீங்க.>>. சிலர் எனது பழைய படங்களை தேடிபிடித்து பலருக்கு லிங்கொடுத்து எனக்கு பெரும் உதவி செய்து வருகின்றார்கள்.. இந்த படத்தையும் சுட சுட கொடுக்கவேண்டுமாய் கேட்க்கொள்கின்றேன்.>>>

    செம தூள்.

    பட விமர்சனம் பட ஹீரோயின் போல்,,..

    ReplyDelete
  13. super vemarsanam , padikum pothey padam pakkanum pola eruku

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner