மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/31•10•2010)

ஆல்பம்..
காங்கிரஸ், பாஜக  இரண்டுமே திருடர்கள்தான் என்பது மீண்டும் நிரூபனம் ஆகிவிட்டது. பாஜக ஆட்சியில் கார்கில் சவபெட்டி ஊழல் பெரிதாக அடிபட்டது, நம் எல்லோருக்கும் நினைவு இருக்கலாம்.. இப்போது காங்கிரசின் டேர்ன்... எஸ், கார்கில் போர் தியாகிகளுக்கு  வீடுவழங்கும் திட்டத்தின் கீழ் கட்டபட்ட வீடுகளில் கார்கில் போரில் உயிர் நீத்த மற்றும் அதனால் விதவை ஆனாவர்களுக்கு இந்த வீடுகள் வழங்க கட்டபட்டது.. ஆனால் மாராட்டிய முதல்  மந்திரி அசோக் தவான் மாமியார், மைத்துனி என சொந்தங்களுக்கு வீடு வழங்கி அசத்தி இருக்கின்றார்.. பிரச்சனை பெரிதாக இப்போது சோனியாவிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்து இருக்கின்றார்.....அடுத்த அமைச்சர் ராசாகூட ராஜினாமா செய்யலாம் என்று டெல்லி பட்சிகள் சொல்லிக்கொண்டு இருக்கின்றன.


நசுக்கப்படும் நல்ல உள்ளங்கள்...(சிறுகதை)

இரவு மணி ஒன்பதரைக்கு,  அந்த கடைசி லெவன் எச் பேருந்தை நான் சென்னை பூக்கடை பேருந்து நிறுத்தத்தில் நின்று கை கட்டிய போது,ஷேர் ஆட்டோ தொந்தரவு இல்லாத காரணத்தால் சத்தியத்துக்கு கட்டுபட்டது போல மிக சரியாக அந்த வழித்தடத்துக்கு ஒதுக்கபட்ட நிறுத்தத்தில் அந்த பேருந்து நின்றது.


இன்றாவது உன் நினைவுகளை....இன்றாவது
உன் நினைவுகளை
கழற்றிவைத்து
உறங்க நினைத்தேன்.....
முடியாது என்பது போல
உறுத்தியது
நீ தலையில் வைத்துவிட்ட மல்லிகை.
===========

தமிழக சிலை அவமதிப்பு விவகாரம்,சிக்கலில் பொது மக்கள்...(சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ)


ஒரு சிலையை வச்சிட்டு அது கையை காலை  சேதபடுத்தி அதன் மூலம் கலவரத்தை உண்டு பண்ணி குளிர்காயும் பேடித்தனம் வேற எந்த ஊர்லயும் நடக்காது என்பது என் கருத்து..


சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/(27•10•2010)

ஆல்பம்..

ஒபமா இந்தியா வருகின்றார்... அதாவது  பதவிகாலம் முடியும் நேரத்தில் இந்தியா வந்து நல விசாரிப்புகளை செய்து விட்டு, அரசு செலவில் தாஜ்மஹால் போய் பொண்டாட்டியுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்து விட்டு செல்லும் போது, மற்றகாமல் எரிசக்தி விஷயத்தில் இந்தியாவை ஏய்த்து விட்டு செல்லும் அமெரிக்க அதிபர்களில்,


(AFTER. LIFE-2009) 18+ ஆத்மாவோடு பேசுபவன்.


இறப்புக்கு பிறகு என்ன நடக்கும் என்பது எப்போதும், மனித குல வரலாற்றில்  மில்லியன் டாலர் கேள்விதான்.. ஆனால் பொதுவாக இறப்புக்கு பிறகு உடலை விட்டு ஆத்மா மட்டும் சுற்றிக்கொண்டு இருக்கும்...என்பதாக நம்படுகின்றது. இதுதான் பெரும்பான்மைகாரர்களின் கூற்றாக இன்றளவும் இருக்கின்றது..


அப்பல்லோ மருத்துவமனை சென்னை ஒரு பார்வை..

கடந்த மூன்று நாட்களாக நான் சென்னை கிரீம்ஸ் ரோடு அப்பல்லோ பக்கம் சுற்றிக்கொண்டு இருக்கின்றேன்..என் அத்தைக்கு குடல் ஆப்பரேஷன்.நல்லபடியாக முடிந்தது...


மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/24•10•2010)

ஆல்பம்..
மிக முக்கிய அறிவிப்பு....
தமிழ் வலைபதிவர்கள் மற்றும் டுவிட்டர் தோழமைகளுக்கு....
இன்று ஞாயிறு(24/10/2010) மாலை மிகசரியாக 5.30 மணிக்கு, சென்னை காந்தி  சிலைக்கு அருகாமையில்,   தமிழ்பதிவர் மற்றும் டுவிட்டர் நண்பர்களின் சந்திப்பு நடைபெறுகின்றது...   எல்லோரும் கலந்து கொள்ள வேண்டுகின்றோம்..
============

நடுநிசி நாய்களும், சில உண்மைகளும்.....18+


பதிவுலகம் நான் வந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன... இதுவரை பெரிய பிரச்சனைகளை நான் சந்தித்தது இல்லை...பெரிய பிரச்சனைகளில் நான் தலையிட்டதும் இல்லை... காரணம் இது நம்ம பொழப்பு இல்லை என்பதில் மிக தெளிவாக இருக்கின்றேன்...


சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/20•10•2010)

ஆல்பம்..

திருமணநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அத்தனை உள்ளங்களுக்கும் என் நன்றிகள்..

வாழ்த்துக்கு நன்றி நண்பர்களே...


நேற்றுதான் கழுகு வலைப்பூவில் எனது பேட்டியை வெளியிட்டு இருந்தார்கள்....திங்கள் கிழமை கொடுக்க முடியுமா?  என்று கேட்டதால் ஞாயிறு இரவே பதில் டைப்பினேன்..  ஒன்றரை மணி நேரம் எடுத்துக்கெண்டது  அதன் பிறகு தூக்கம் கண்ணை சொக்கியதால் ஏதும் எழுதவில்லை அதனால் திங்கள் கிழமை  எனது  வலைப்பூவில் ஏதும் போஸ்ட்போட வில்லை...


மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/17•10•2010)

ஆல்பம்..
நேற்று அகநாழிகை பதிப்பகத்தின் சென்னையில் பரத்தை கூற்று கவிதை புத்தக வெளியிட்டு விழா, கே கே நகர் டிஸ்கவரி புக் பேலசில் நடந்தது... நல்ல கூட்டம்.நான் ஆயுதங்களை எல்லாம் கழுவி பொட்டு வைத்து, படையல் போட்டு கிளம்பி செல்ல நேரமாகிவிட்டது... எழுத்தாளர் சாரு பேசிக்கொண்டு இருந்தார்...அந்த சிறிய ஹாலில் 1000 வாட்ஸ் லைட் போட்டு ஒரு வீடியோகிராபர் நிகழ்வை டேப்பில் திண்னகொடுத்துக்கொண்டு இருந்தார்... அதனால் அத்தனை பேரின் கபாலங்களிலும் வியர்வை வழிந்து ஓடிக்கொண்டு இருந்தது...சாரு அந்த கவிதை புத்தகத்தில் இருக்கும் ஒரு கவிதையை வாசித்தார்...


(BRINDAAVANAM-2010)TELUGU ஜுனியர் என்டிஆர்,காஜல்,சமந்தா. முக்கோணகாதல்.


நான் முதலில் தியேட்டரில் பார்த்த நேரடி தெலுங்கு படம் சிரஞ்சிவி நடித்த முட்டா மேஸ்திரி... திருப்பதியில் உள்ள பிரகாஷ் திரையரங்கம் என்று நினைக்கின்றேன்.. அதில்தான் அந்த படத்தை பார்த்தேன்..குடும்பமாக வந்து அந்த படத்தில் வரும் கெட்ட ஆட்டங்களை பார்த்து ரசித்தார்கள்...


சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/13•10•2010)

ஆல்பம்..

காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் நிறைவு விழாவுக்கு தலைமை தாங்க போகின்றவர்... நம்ம ராஜபக்சே...நான் பொங்குவது போல வைகோ பேசிவிட்டார்.... தமிழ்களை கொன்று குவித்தவனை கூப்பிட்டு எதுக்கு இப்போது ராஜ உபச்சாரம்.. அட இலங்கை தமிழர்களுக்கு குரல்  கொடுக்காவிட்டாலும்... இந்திய தமிழக  மீனவர்கள் தினமும் தாக்கபடுவது குறித்து எந்த கண்டன அறிக்கையும் இல்லை... தமிழர்களும் இந்தியர்கள்தானே என கேள்வி எழுப்பி இருக்கின்றார்...


100%நான் லோக்கல்தான்.... அதுல யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம்....

ஆரம்பத்தில் இருந்தே நான் சில விஷயங்களை வெளிப்படையாகவே எழுதி வந்து இருக்கின்றேன். எனக்கு அப்படித்தான் எழுத வரும். அதே போல் என்னை அவமானபடுத்தலாம் என்று கங்கனம் கட்டிக்கொண்டு  அலைய ஒரு கூட்டமே இருக்கு....


(MERANTAU WARRIOR-2009) இந்தோனேசியா. ஜகார்தா தலைநகரின் கருப்பு பக்கம்..

ஒரு தமிழ் படத்துக்கு குறைந்த பட்சம் ஆக்ஷன் முலாம் பூசினால் எப்படி இருக்கும்?? அதுதான் இந்த படம்… நிறைய இடங்களில் தமிழசாயல் வீசுகின்றது…


மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/10•10•2010)

ஆல்பம்..
ஆஸ்திரேலியாவில் இனவெறியை தூண்டும் வகையில் ஒரு போலிஸ்காரர் நடந்து கொண்டு விட்டதாக செய்தி வர, இந்திய  உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்பி இருக்கின்றது. நான் தெரியாமல் கேட்கின்றேன் இப்ப கூட இந்திய மீனவர்களை இரும்பு கம்பியால் செக்கையாக மாத்து கொடுத்து அனுப்பி இருக்கின்றது…


(THE KILLING JAR-2010) ஏழு பினைகைதிகள்,ஒரு ஓட்டல் ஹால், ஒரு கொடுரகொலைகாரன்.


இதற்கு முன்  நாம் ஒரே அறையில் மட்டுமே நடக்கும் ஒரு முழுநீள திரைப்படத்தை பார்த்து இருக்கின்றோம். அந்த படம் எக்சாம். மூன்றே பேர் மட்டும் படம் முழுவதும் நடித்த படத்தையும் இதே தளத்தில் அறிமுகபடுத்தி இருந்தேன். அந்த படம் டிஸ்ப்பியரன்ஸ் ஆப் ஆலிஸ் என்ற அந்த படத்தையும் பார்த்து ரசித்து  இருப்பீர்கள். இப்போது இந்த படம் முழுக்க முழுக்க ஒரு  ஓட்டலின் சின்ன ஹாலில் முழுபடமும் எடுத்து முடித்து இருப்பார்கள். அது போலான திரைக்கதை.


(KHALEJA) மகேஷ்பாபுவின் கலேஜா. தெலுங்கு பட விமர்சனம்.


ஆந்திராவின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின்படம். எந்திரன் படத்தை போலவே இரண்டு வருடம் உருவாக்கத்திற்க்கு எடுத்துக்கொண்ட படம்.கடைசியா அதிதி படத்தை பார்த்ததோடு சரி. அந்த படம் சரியாக போகவில்லை என்று இந்த படத்தை வெற்றிபெற வைக்க வேண்டும் என்று உழைத்து வெளிவந்து இருக்கும் படம்.சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/06•10•2010)

ஆல்பம்.
காமன்வெல்த் போட்டியின் தொடக்கவிழாவின் போது, இரண்டு தமிழர்கள் பெயரை அறிவித்த போது, அரங்கம் கரகோஷத்தில் அதிர்ந்தது.  முன்னாள் குடியரசுதலைவர் அப்துல்கலாம் பெயரை பிரதீபா பாட்டில் வாசித்த போதும், கலைநிகழ்ச்சி நடத்த வந்த ஏஆர் ரகுமான்  பெயரை உச்சரித்த போதும்  எழுந்த கரகோஷத்தின் சத்தம் மிகுந்த சந்தோஷத்தை கொடுத்தது.

மாநகர பேருந்தை நிறுத்தி, சென்னையை ஸ்தம்பிக்க வைக்க எளியவழிகள்.(சென்னையில் வாழ பழக….)நேற்று காலையில் என் அத்தை பெண் திண்டிவனத்தில் இருந்து சென்னைக்கு காலையில் வந்த போது முதலில் குறுஞ்செய்தியாக மாநகர பேருந்து ஸ்டிரைக்கா? என்று கேட்ட போது  அப்படி எல்லாம் இல்லை  என்றேன்.


ஜாக்கிக்கு நேர்ந்த வேதனை அதனால் நிகழ்ந்த சாதனை.

நடிகர்  ஜாக்கியால் நான் பட்ட அவமானம் என்ற பதிவுக்கு, பலர் சிரித்து சிரித்து வயிறு புண்ணாகியதாக போன் செய்து சொன்னார்கள். அந்த பதிவை வாசிக்க இங்கே கிளிக்கவும்.   அது போலான சுயசொறிதல் இந்த பதிவு. விருப்பம் இல்லாதவர்கள் இப்போதே வேறு வேலை பார்க்க கேட்டுக்கொள்ளபடுகின்றார்கள்.
===============


மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/03•10•2010)

ஆல்பம்..
இன்று காமன்வெல்த் போட்டிகள் மாலையில் தொடங்குகின்றன.  கப்லேறிய மானத்தை திரும்பகொண்டு வருவதில் இந்த இரண்டு வார காலத்தில் பல அரசு அதிகாரிகள் இரவு பகல்பாராது பணி செய்து இருப்பார்கள். சிரத்தை எடுத்துக்கொண்ட இந்தியாவை நேசிக்கும் அத்தனை அதிகாரிகளுக்கும் என் நன்றிகள். துவக்க விழாவில்  ரகுமான் இசை நிகழ்ச்சி நடத்துகின்றார்
===============

கலக்கும் எந்திரன் தமிழ் சினிமாவின் புதிய பரிமாணம். சினிமா விமர்சனம்.


டிக்கெட் புக் பண்ணாத  எனக்கு சாண்ட்வெஜ் பகுதியில் ஒரு டிக்கெட்  இருந்தால் எனக்கு கொடுக்கவும் என்று  எழுதியதும் அதை படித்து விட்டு இன்று விடியற்காலை 5,30மணிக்கு சென்னை வில்லிவாக்கம் ஏஜிஎஸ் தியேட்டரில் விடியற்காலை முதல் காட்சி பார்க்கவும். 200 மதிப்புள்ள டிக்கெட்டை பணம் பெற்றுக்கொள்ளாமல் கொடுத்த நுங்கம்பாக்கம் ஐசாப்ட்டில் வேலை செய்யும் வாசக நண்பர் குறும்பழகன் மற்றும் அவரது நண்பர் விஜய்க்கும்  இந்த பதிவு சமர்பணம். கொளத்தூர் கங்காவில் ஒரு டிக்கெட் இருக்கின்றது வரமுடியுமா? என்று கேட்ட வாசக நண்பர் பாலமுருகனுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.


Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner