(பாகம் -4)ஒரு கார் டிரைவரும், ஒரு டிரக் டிரைவரும்... (DUEL) ஆங்கிலபட சினிமா விமர்சனம்



நிறையா பேரு இந்த படத்த பார்த்து இருப்பாங்க, அது மேட்டர் காதன்டி இந்த படம் பார்க்காதவங்களுக்கான நுவீஸ் இது
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

__ நம்ப டைனோசர் படம் எடுத்த ஸ்பீல் பெர்க் துரை எடுத்த பஸ்ட்டு எடுத்த பாயாஸ்கோப் இது , அந்த ஊர்ல மாமியார் மருமக சண்ட இல்லை அதனால மூக்கு சிந்த வைக்கிற சீரியல் எடுக்க சொல்லாம ஒரு படம் எடுக்க சொன்னாங்க , ஸ்பீல்பெர்க் தன் திறமைய நிருபிச்ச படம் .



கதை தக்கனுன்டுதான். ஒருத்தன் ஒரு சிவப்பு கலர் கார்ல ஏறிஒரு வேலை விஷயமா, கலிபோர்னியா பாலைவனம் வழியா ரொம்ப துரரம் கார்ல போறான் அப்போ ஒரு டேங்கர் லாரி அவனை காரை கிராஸ் பன்னுது அப்புறம் , போய் டிவிடி வாங்கி பாருங்கன்னா .



அஞ்சாதே படத்துல மொகம் காட்டாத மொட்ட பாஸ் கூட இந்த படத்தோட இன்ஸ்பிரேஷன்தான் . குறிப்பு செலவே இல்லாம படம் எப்படி சுவாரஸ்யமா எடுக்கறது எப்படின்னு இந்த படம் கத்துதரும் எல்லா ஊடகத் துறை மாணவர்களும் தவறாம பார்க்க வேண்டிய படம்
_

படத்தை பற்றிய சுவாரசிய தகவல்கள்....



படத்தில் ஒரு டிரக்கையும் காரை வைத்து ஒரு திரில்லர் தர முடியும் என்பதை திரையுலக பிதாமகர் ஸ்பீல் பெர்க் நிறுபித்தார் ..

முதலில் தொலைகாட்சி படமாக எடுத்து பின்பு இதை முழுநீள திரைப்படமாக மாற்ற பட்டது..

எல்லோர் மனதிலும் இருக்கும் ஆழ் மனது பயத்தை தன் கதைக்கு அடி நாதமாக எடுத்துக்கொண்டார்

படம் பார்த்து விட்டு எந்த லாரியும் ஹாரன் சத்தத்ததோடு நம்மை கடந்தால் ஈரக்குலை நடுங்கும்
_____________________________________________________________________________________
அன்புடன்- ஜாக்கி சேகர் _______________________________________

(பாகம்/3) பாம் வைக்கும் டீச்சர்...... HEAVEN 2002 திரைப்பட விமர்சனம்

பாம் வைக்கும் பள்ளிகூட டீச்சர்......





பாடம் சொல்லி கொடுக்கும் டீச்சர் பாம் வைத்தால் என்னவாகும்? அதுதான் ஹெவன் படத்தின் கதை ...

ஹெவன் படத்தின் கதை....
பிலிப்பா ஒரு பிரிட்டிஷ் டீச்சர் அவள் கணவன் மோசமான மருந்து உட் கொண்ட காரணத்தால் இறக்க நேர்கிறது.
அந்த ஊரில் இருக்கும் பெரிய டான் மருந்து கம்பெனி போர்வையில் போதை மருந்துகள் தயாரிப்பதால் அந்த மருந்து பிலிப்பா கணவன் நோய்க்காக எடுத்துகொள்ள,மருந்து ஓவர் டோஸ் ஆகி டீச்சர் பிலிப்பா கணவன் இறக்க நேர்கிறது.


இந்த உண்மை கண்டு பிடித்த டீச்சர் பிலிப்பா உண்மைகளை போலீ்ஸில் சொல்லியும் எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் தானே அந்த டானை கொல்லநினைக்கிறாள். கொஞ்சம் கடுகு உளுத்தம் பருப்பு,கொஞ்சம் கடலை எண்ணையில், வறுத்த ரவை கொட்டி உப்புமா செய்வது போல் ஒரு பாம் தயாரிக்கிறாள். அந்த பாம் சிறிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது

(படத்தின் இயக்குநர் Tom Tykwer, கதநாயகனுக்கும் கதநாயகிக்கும் முக்கியமான காட்சி பற்றி விளக்குகிறார்)

அந்த பாம் வெடிக்கும் போது ஒருவர் மட்டுமே இறக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வண்ணம் தாயரிக்கப்பட்டது.

இந்த படத்தின் திரைக்கதை ஆசிரியர் Krzysztof Kieslowski அபார மூளை செயலாற்றலால்,டீச்சர் பிலிப்பா அந்த மருந்து கம்பெனி டானை கொல்வதற்க்காக வைக்கப்ப்ட்ட பாம் வெடித்து இரண்டு சிறுமிகள்அவர்களின் தகப்பன், மற்றும் ஒரு வேலைகார பெண்மணிஎன நால்வர் இறக்கிறார்கள். டீச்சர் கைது செய்யபடுகிறாள்.

அவளை என்கவுன்டர் செய்ய அதிகார வர்கம் ஆவலாய் பறக்கிறது,அவளுக்கு மொழிப்பெயர்பாளனாக வரும்
FILIPPO - Giovanni Ribisi கதாநாயகன்அவளை காப்பாற்றுகிறான். அவளோடு அவன் காதல் கொள்கிறான். அவர்கள் சிறையில் இருந்து தப்பிக்கிறார்கள்,அதன் பிறகு இருவரும் பிடரியில் கால் பட ஓடுகிறார்கள், ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள்.

அவர்கள் போலீஸில் மாட்டி க்கொண்டார்களா?அல்லது தப்பித்தார்களா? என்பதை ரொம்பவும் அற்புதமாக அலுப்பு தட்டாமல் சொல்லி இருக்கிறார்கள்..



படத்தின் சிறப்புகள்...

1. விஷீவலாய் இந்தபடம் ஒரு அற்புதமான பொக்கிஷம்

2.டீச்சர் பாம் வைக்க போகும் ஆரம்ப காட்சிகள் எதிலும் தேவை இல்லாமல் டயலாக் வைக்காமல் விஷீவலாகவே திரைக்கதை அமைத்து இருப்பது...

3.பாம் எடுத்துக்கொண்டு அவள் ரோட்டில் போகும் போது லோவ் ஆங்கிளில் ஒரு பெரிய டவர் பில்டிங் காட்டும் போது, எங்க பாட்டி ஸ்டைலில் சொல்ல வேண்டும என்றால் நம் ஈரக்கொளையே நடுங்குது...

4. தன் வைத்த பாமில் இரண்டு குழந்தைகள் இறந்தது அறிந்து டீச்சர் மயக்கம் ஆவதும் கதாநாயகன் அவள் மேல் காதல் கொள்வதும் மிக இயல்பாய் எடுக்கப்பட்டு இருக்கிறது

5. பால் வண்டியில் தப்பிக்கும் போது அவர்கள் தப்பி விட்டார்கள் என்பதை பால் வேனின் பின்புறக்கதவு திறந்து நடு ரோட்டில் பால் கேன்கள் உருள்வது டைரக்டரின் திறமைக்கு சான்று....

6. படத்தின் ஒளிப்பதிவாளர் Frank Griebe இவர் படத்தின் இரண்டாவது ஹீரோ, முக்கியமாக ஹெவன் என்று பேர் போடும் அந்த ஒரு ஈகிள் ஐ வீயுவ் ஷாட் ஒன்று போதும்...

7. படத்தின் ஈகிள் ஐ வீயுவ் ஷாட் காட்சிகள் இந்த படத்துக்கு மிகப்பெரிய பலம் மற்றும் நல்ல வீஷீவல் டேஸ்ட் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் அவர்கள் தப்பி போகும் ரயிலை டாப் ஆங்கிளில் காட்டுவதும் கொள்ளை அழகு...


8.இயக்குநர் Tom Tykwer காலத்தால் அழியாத ரன் லோ லா ரன் படத்தை எடுத்த பிதாமகர்.

9.இந்த படம் 2002 ஆம் ஆண்டு வெளிவந்தது ,94 நிமிடங்கள் ஓடும் இந்த படத்தின் கிளைமாக்ஸ் சிலருக்கு புரியாமல் போகலாம் அப்படி புரிய வில்லை என்றால் படத்தை மறுமுறை அவர்கள் பார்க்கவேண்டும்


10.இந்த படத்தை 60செகன்ட் பிரிவியு மற்றும் த வால் ஸ்டிரிட் ஜெர்னல் போன்ற பத்திரிக்கைகள் வெகுவாய் புகழ்ந்துள்ளன

இதுவாழ்வில்தவற விடாமல் பார்க்க வேண்டிய படம். எப்போது இந்த பதிவை படித்தாலும் இந்த படத்தை பார்த்தாலும் பின்னுட்டடடம் இட்டு என்னோடு உஙக்ள் சந்தோஷங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்....


உங்கள் கருத்து மற்றும் விமர்சனங்கள் எதிர்பார்த்து காத்து இருக்கும்...


அன்புடன்/ஜாக்கிசேகர்

(பாகம்/2) பார்த்தே தீர வேண்டிய படங்கள்..........


பார்த்தே தீர வேண்டிய படங்கள் ஒரு முன்னுரை..............





ஒரு படத்தை எப்படி பார்ப்பது என்று முதலில் நீங்கள் கற்றுக் கொள்ளவேண்டும்
ஒரு படத்தை எந்த இடையூறு இல்லாமல் பார்க்க வேண்டும். படம் பார்க்க வேண்டும். அதுவும் நல்ல படம் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் மட்டுமே படம் பார்க்க வேண்டும். பல பிரச்சனைகளை வைத்துக்கொண்டு படம் பார்க்க வேண்டாம்.

ஒரு திரைப்படத்தின் ஆரம்ப பத்து நிமிடங்களை ஹீக் என்று அழைப்பார்கள் அதாவது எதோ எதோ பிரச்னைகள் மற்றும் மன நிலைகளில் படம் பார்க்க வரும் ரசிகனை, அந்த படத்தின் தொடக்க காட்சிகள் அந்த படத்தோடு அந்த ரசிகனை
கட்டி போட வேண்டும்.
பொதுவாக பத்து மணிக்கு படம் என்றால் ஒன்பது ஐம்பதுக்கு தியேட்டர் உள்ளே இருக்க வேண்டும். ஆனால் நம்மவர்கள் பத்து இருபதுக்கு உள்ளே வந்து எல்லாருடை காலை மிதித்து விட்டு படம் போட்டு எவ்வளவு நேரம் இருக்கும்?என்று நம்மிடம் எறிச்சலுட்டும் கேள்வியை கேட்டுவைப்பார்கள். “எவ்வளவோ சீக்கிரமாகதான் வந்தேன் கொஞ்சம் டிராபிக்ல மாட்டிகிட்டேன்”என்று நாம் கேட்காமலே விளக்கம் எல்லாம் தருவார்கள்.

நமது படங்கள் எல்லாம் முதலில் ஹீரோ என்ட்ரி உடனே ஒரு சாங் வைத்து விடுவார்கள். நம்மாளு ஒரு தம் போட்டு வெட்டி கதை பேசி எல்லாருடைய காலை மிதிச்சு படம் போட்டு பத்து நிமிஷம் இருக்குமா? என்ற கேனை கேள்வி கேட்கும் போதுதான் நம்ம டைரக்டர்கள் மெயின் சப்ஜெக்டுக்கு வருவாங்க...(உம்) ராமராஜன் படங்கள்

சரிசார் ஹீக் படங்களுக்கு எதாவது உம் கொடுங்கள் சார் .

ஓகே தனுஷ் நடிச்ச பொல்லாதவன் படம் பார்த்து இருப்போம் அதுல, எடுத்ததும் ஹீரோ திரையை பார்த்து சில வசனம் பேசுவார், நான் ரெண்டு பேரை போட்டுட்டன், ரெண்டு பேர் தப்பிச்சு என் வீட்டுக்கு போயிருக்காங்க, அவுங்க போறதுக்குள்ள நான் வீட்டுககு போகனும். எனக்கு கால்ல ஒரு வெட்டு வேற விழுந்து இருக்கு, என்று சொல்லி நடந்து வந்து, ஒரு பல்சர் பைக் அருகே ரத்தகாயங்களுடனும் கையில் கத்தியுடன் வந்து நிற்பார்.

ரத்தகாயங்களுடனும் நிற்க்கும் ஒரு ஹீரோ எல்லாத்துக்கும் இந்த “பல்சர்பைக்”தான் காரணம் என்று சொன்னால் உங்களுக்கே மனதில் கேள்வி வரும் எப்படி இந்த பைக் காரணமாக இருக்கும்என்ற கேள்விகளோடு கவனமாக கதை மேல் ஒன்றி படம் பார்க்க துவங்குவீர்கள்.

பொதுவாக பொல்லாதவன் வெற்றிக்கு அந்த கதையுடன் பார்வையாளனை கட்டி போட்ட விதம்தான் அந்த படத்தின் வெற்றிக்குகாரணம் தறுதலை புள்ள, காதல், அப்பனை எதிர்த்தல் போன்ற பல விஷயங்கள், பார்த்து பார்த்து சலித்து போன கதை என்றாலும், அதை வெற்றிமாறன் கொடுத்த விதம் படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது என்பேன்.

பொல்லாதவன் படத்தின் கூடுதல் வெற்றிக் காரணம் நான் முன்பே சொன்னது போல் தமிழர்கள் 15 நிமிடம் படம் ஓடி பார்ப்பவர்கள் அதனால் பொல்லாதவன் படத்தின் முதல் பத்து நிமிடங்களை பார்க்கவில்லை என்றால் திரும்பவும் அந்த படத்தினை பார்த்தே ஆக வேண்டும் அதனால் கூட அந்த படம் ஓடி இருக்கும்
( சும்மா ஜோக்கு)


சரி ஒரு படம் எப்படி இருக்கவேண்டும்? இந்த பொருளாதார பிரச்சனைகள் மிகுந்த வாழ்வில் எந்த படம் இரண்டு மூன்று நாட்கள் அந்த படத்தின் பாதிப்பு தொடர்ந்து இருக்கிறதோ அதுதான் நல்லபடம். (உம்) காதல் திரைப்படம்.

சார் எங்களுக்கு ஷகிலா நடிச்ச கனவில் கில்மா கூடதான் என் நெஞ்சிலேயே மூணு நாலு, நாளைக்கு இருக்கு அது எப்படின்னு நண்பர் நித்யயயயா போல கேள்வி கேட்க கூடாது. அந்த மாதிரி படங்கள் உங்க நெஞ்சிலயும் இருக்கும்,உங்க கு.........இருக்கும்.
( உங்க குண்டக்க மண்டக்க கேள்வியிலயும் இருக்கும்னு சொல்ல வந்தேன்)

லெட்மீ கம் டு த பாயிண்ட்....
இப்போது நான் எழுத போகும் படங்கள் சத்யஜித்ரே காலத்து பழம்காலத்து படங்கள் அல்ல....

அதே போல் சோகத்தை மட்டும் பிரதானமாக கொண்ட படங்கள் அல்ல.பொதுவாய் பிளாக் அண்டு ஓயிட் படங்களை பற்றி நான் எழுத போவது இல்லை. நான் சொல்ல போகும் படங்கள் உங்களுக்கு அந்த படம் பாதிப்பை ஏற்படுத்த வேண்டும்.

எனென்றால்அவார்டுவாங்கும் எல்லா படங்களும் சூப்பர் படங்கள் அல்ல, போன உலக பட விழாவுக்கு முந்தய உலக படவிழாவின் போது எழுத்தாளர்கள் சுபா வை சந்தித்தேன், அவர்கள் இருவரும் என்னுடைய நண்பர்கள் அதிலும் பாலகிருஷ்னன் எப்போதும் என்னை நினைவில் வைத்து இருப்பவர்...

அவர்கள் ஒரு உக்ரென் நாட்டு படம் பாத்து விட்டு வெறுத்து போய் வெளியே வந்தார்கள் அந்த படத்தின் கதை என்னவென்று கேட்டேன் சார் ஒருத்தன் கேமராவை பத்து நிமிஷம் பார்த்துகிட்டே இருக்கான்சார் அப்புறம் இன்னொருத்தன் காட்டுறாங்க என்ற வெறுத்துபோய் சொன்னார்கள். சில படங்கள் படம் பார்த்தவர்களை வெறுக்க வைக்கும் படங்களும் இதில் அடங்கும்



நாம் அப்படி பட்ட படங்கள் இல்லாமல் ரொம்பவும் எல்லோரையும்,என்னையும் கவர்ந்த படங்களை இனி பார்ப்போம். நீங்கள் பின்னுட்டம் மற்றும் உங்கள் ஓட்டுக்களை வைத்தே என் கலைதாகம் அதிகரிக்கும்

அன்புடன்/ ஜாக்கிசேகர்

தர்மம் ஜெயித்தது, பசுபதி பாவம் சும்மா விடவில்லை



ரஜினி நடித்த குசேலன் என்றுகுசேலன் படத்தைவிளம்பர படுத்தி 60 கோடி ரூபாய்க்கு அந்த படத்தை சாய்மீரா நிறுவனத்திடம் கவிதாலயா விற்றது ஊருக்கே தெரிந்த கதைதான்

அதே போல் குசேலன் கதை உலகத்துக்கே தெரிந்த கதைதான்.
கிருஷ்ணரை பற்றிய கதை என்றால் ரஜினி நடித்த என்று போட்டு இருக்கலாம் அதில் யாருக்கும் எந்த ஆட்சேபனை இல்லை. ஆனால் குசேலன் பற்றிய கதையில் பசுபதி நடித்த என்று தான் வர வேண்டும் அதை விடுத்து ரஜினி என்ற மனிதரின் முகத்திற்க்காக படம் ஓட வேண்டும் என்பதால் பிரதான பாத்திரம் ஏற்று நடித்த பசுபதி இசை வெளியீட்டு விழாவில் புறக்கணிக்கப்பட்டார்


வியாபார உத்திக்காக கடைசி வரை பசுபதி இருட்டடிப்பு செய்யப்பட்டார். குசேலன் நாளை ரிலீஸ் என்ற நிலையில் அவர் போட்டோ சுவரொட்டிகளில்
தோன்ற ஆரம்பித்தார்... இது பற்றிய பதிவு ஏற்க்கனவே எழுதி இருக்கிறேன்


இந்த கூத்துக்ளை எல்லோரும் அறிந்ததுதான் இப்போது நஷ்டத்துக்கு ரஜினி பொறுப்பு ஏற்க்க வேண்டும் இல்லை என்றால் ரஜினி படத்துக்கு ஒத்துழைப்பு கொடுக்க மாட்டோம் என தியேட்டர் உரிமையாளர்கள் போர்க் கொடி உயர்த்தி உள்ளார்கள்

பசுபதி ரொம்பவும் சந்தோஷமாக இருப்பதாக தகவல்.............


அன்புடன்/ ஜாக்கிசேகர்

(பாகம்/1)அனைத்து வலைபதிவர்களுக்கும் ஒரு அறிவிப்பு....






பொதுவாய் நான் வலைபதிவுலகுக்கு வந்து மூன்று மாதங்கள்தான் ஆகின்றது. ஆனால் இதுவரை 9304 பேர் என் பதிவை வாசித்து விட்டார்கள்... என் எழுத்து ரசிக்க தக்கதாகவே இருக்க வேண்டும் என்பது என் எண்ணம். இறைவனுக்கும் நன்றி.எனக்கு தமிழ் புதினங்கள் வாசிக்க கற்று கொடுத்த என் அன்னைக்கும் என் நன்றிகள். சில விஷயங்களை சுவை பட எழுதிகிறேன் என்பது எனக்கே தெரிகின்றது .

என் பதிவுகளை மாற்று வலை பக்கத்தில் தொடர்ந்து இடம் கொடுக்கும் நண்பர்களுக்கும், மற்றும் பல வாசக நண்பர்கள் என் பக்கத்தினை லிங்க் கொடுத்து மற்றவருக்கு படிக்க உதவியாய் இருந்தவர்களுக்கும் என் நன்றிகள்


தொடர்ந்து என் பதிவை வெளியிட்டுவரும் தமிழ் மணத்துக்கு என் நன்றிகள் தேன்கூடு எப்போதாவதுதான் என் பதிவை வெளியிடுகிறது அதே போல்தான் தமிழ் கனிமை மற்றும் தமிழ் வெளி போன்றவைகள் எல்லாம்......




மூன்று மாதங்களுக்கு முன் என் வீட்டுக்கு எதெச்சையாக வந்த நண்பர் நித்யா
http://nithyakumaaran.blogspot.com/ பதிவை துவக்கி கொடுத்தார்.அவருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். எற்கனவே பதிவுகள் பற்றி தெரிந்து இருந்தாலும், என் தயக்கங்களை உடைத்து என்னை உற்சாகபடுத்தியது நித்யாதான்.

பொதுவாய் பிறர் வலைதளம் சென்றாலும் கருத்து மோதலில் சிக்காமல் இருக்கவே நான் ஆசைபடுபவன் இருப்பினும் என் எழுத்துக்ளை தொடர்ந்து வாசித்து பின்னுட்டம் இட்டும் உற்சாக படுததிவரும் பதிவர்கள், மங்களுர் சிவா, வெண்பூ,நித்யா,இவன், கிரி,போன்ற சில முகம் தெரியாத பதிவர்களுக்கு என் நன்றிகள்.

மங்களுர் சிவா ஒரு படி மேலே போய் அவர் பதிவில் எனது பதிவை இனைக்க அவர் பதிவு மூலமாக நிறைய பேர் வாசிக்கிறார்கள் திரு மங்களுர் சிவாவுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்


நான் நிறைய படங்கள் பார்ப்பவன், நான் ஒரு கேமராமேன். நான் இதுவரை முன்று குறும்படக்ள் இயக்கி இருக்கிறேன். நான் இயக்கிய முதல் படம் துளிர் எனும் படம் மாநில அளவிலான குறும்பட போட்டியில் முன்றாம் பரிசு பெற்றது.

நிறைய உலக பட விழாக்களில் கலந்து கொண்டு இருக்கிறேன்.யார் யாரோ படங்களின் விமர்சனங்கள் எழுதும் போது,
நான் ரசித்த நெகிழ்ந்து போய் கண்களில் ஜலம் வைத்து பார்த்த படங்களை

“பார்த்தே தீர வேண்டிய படங்கள்”

எனும் தலைப்பில் எழுத போகிறேன் உங்கள் மேலான கருத்துக்களையும் ஆதரவுகளையும் கொடுக்க வேண்டுகிறேன்.

இதில் எந்த நாட்டு மொழிப்படமாக இருந்தாலும் அது இந்த வரிசையில் இருக்கும். அது வாசகர்கள் முன்பே பார்த்த படமாக கூட இருக்கலாம்.

எல்லா நல்ல படங்களையும் இந்த அடைப்புக்குள் சேர்க்க வேண்டும் என்பதே என் எண்ணம்

அன்புடன்/ ஜாக்கிசேகர்

நல்ல படங்களை புறக்கணி்க்கும் நம்மவர்கள்....


நல்ல படங்களை தமிழர்கள் புறக்கனிப்பது என்பது இன்று நேற்று நடக்கும் விஷயம்ல்ல , சில படங்கள் நல்ல விளம்பர படுத்தபட்டும் சரியாக ஓடாது. சில படங்கள் காதநாயகர்களின் ரசிகர்களின் போட்டியால் படங்கள் படு தோல்வி அடையும்

சில படங்கள் மிக நன்றாக இருந்தும் படம் வாங்கிய வினியோகஸ்தர்கள்,மற்றும் இயக்குநர்கள்,தயாரிப்பாளர்கள் அலட்சியத்தால் மற்றும் தமிழ் சினிமா ரசிகர்களின், சினிமா பற்றிய புரிதல் காரணமாக படம் ஓடாமல் போய்விடும் அந்த வகையில் நேற்று சன் டிவியில் ஒளிபரப்பான கண்னா அந்த வகையை சார்ந்தது அல்லது மேலுள்ள லிஸ்ட்டில் சேர்க்கபட்டவை எனலாம்.

கண்னா படம் பற்றி ஒரு சிறு விமர்சனம்...

கோவையில் ஒரு பணக்காரர் பிரகாஷ்ராஜ் மற்றும் அவர் மனைவி சரண்யா இந்த தம்பதிகளுக்கு ஒரு பத்தாம் வகுப்பு படிக்கும் பெண். மற்றும் ஒரு பையன் இருக்கிறார்கள்.பெண் ஊட்டிக்கு சுற்றலா செல்கையில் அங்கு கண்னா எனும் வாலிப வயதுடைய பையன், அந்த பெண்ணுக்கு பழக்கம் ஆகிறான். சுற்றுலா முடிந்து வந்தாலும் அந்த பையன் ஞாபகமாக இருக்கும் அந்த பெண் பெற்றோருக்கு தெரியாமல் ஊட்டிக்கு சென்று அந்த பையனை சந்திக்க விருப்புகிறாள் அந்த பத்தாம் வகுப்பு படித்த அந்த பெண் அந்த கண்னா என்ற பையனை சந்தித்தாளா? அந்த பத்தாம் வகுப்பு பருவ பெண்ணுக்கு நேர்ந்த கொடுமைகள் என்ன? என்பதுதான் கதை .


தமிழில் இந்த மாதிரி கதை முயற்ச்சிகள் எப்போதாவது அத்தி பூத்தாற் போல் நடக்கும் விஷயங்கள். இந்த படத்தின் தயாரிப்பாளருக்கு பிரகாஷ் ராஜுக்கு கொடுத்த சம்பளமாவது கிடைத்து இருக்குமா என்பது தெரியவில்லை.

பெண்னை கானோம் என்றதும் பிரகாஷ்ராஜ் ஒரு நடுத்தர தகப்பனின் அவஸ்தையை மிக அழகாக வெளிபடுத்தி இருக்கிறார் அதே போல் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஷுலா பெரும்பாலான படங்களில் தன் மார்பையும், இடுப்பையும் நம்மி களம் இறங்கும் இவர் இந்த படத்தில் தன் நடிப்பை நம்மி களம் இறங்கி இருக்கிறார் அது நன்றாகவே கை கொடுத்து இருக்கிறார்.


பெண் கிடைத்த உடன் எந்த ஆர்பாட்டமும் இல்லாமல்அந்த பெண்னை அனைத்து கொண்டு தேற்றுகிறார்கள் பாருங்கள் அது ஒன்று போதும் இது நல்ல படம் என்று உணர்த்த...


படத்தை இயக்கிய திரு ஆனந் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.படத்தில் எந்த லாபமும் கிடைத்து இருக்காது.இருப்பினும் இந்த மாதிரி கதைகளை படமாக்க முன் வந்த தயாரிப்பாளருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்


அன்புடன் /ஜாக்கிசேகர்

விஜய் டிவியிடம் இருந்து மற்ற டிவிக்கள் கற்றுக் கொள்ள வேண்டும்

விஜய் டிவி சதந்திர தின நிகழ்ச்சிகள் நேற்று ஒளிபரப்பியது. அதில் அவர்கள் சாதனை செய்த தமிழர்களின் பெயர், மற்றும்அவர்கள் எந்த துறையில் சாதனை செய்தார்கள் என்ற தகவல்களை ஒளிபரப்பியதோடு அவர்களுக்கு விஜய் டிவி தனது நன்றியை தெரிவித்து “தமிழன் என்று சொல்லடா” என்று வீர முழக்கம் இட்டது. சாதனை செய்த தமிழர்களுக்கு அங்கிகாரம் அளிக்கும் விதமாக பாரட்டு சொன்னது மனதுக்கு மகிழ்ச்சியாகவும் நெகிழ்ச்சியாகவும் இருந்தது.

சாதனை தமிழர்களை நமது சுதந்திர தின நாளில் அவர்களை பெருமை படுத்திய விஜய் டிவிக்கு இந்த ஜாக்கிசேகரின் நெஞ்சார்ந்த நன்றிகள் பல....

தொடரட்டும் விஜய் டிவியின் சமுதாய பணிகள்
வாழ்த்துக்கள்

அன்புடன்/ ஜாக்கிசேகர்

(பாகம் 9) மாத சம்பளம் ஒரு லட்சத்துக்கு136ரூபாய் கம்மியாக வாங்கிய சாப்ட்வேர் இளைஞனின் சோக கதை


கமல் விபத்தில் இறந்து பாடியை கமல் குடும்பத்தினர்பெற்று கல்பாக்கம் வந்து நிருவுக்கு தகவல் சொல்லினர். இனி நடந்தவைகளை சிறுதுளிகளாக பார்க்கலாம்


1. நிருவுக்கு கமல் இறந்த தகவல் சொன்னதும் அவள் எதையாவது கிடைத்ததை உடுத்தி வராமல் ஜீன்ஸ் பேண்டும் டீ ஷர்ட்டுமாக வந்த போது எல்லோரும் வாயடைந்து போனார்கள். அதுவும் இடுப்பில் பெல்ட் அணிந்து செல்போன் பவுச் மாட்டி வந்த போது இறுதி சடங்குக்கு வந்தவர்கள் மற்றும் பெண்கள் இது பற்றி அதிகம் பேசினர்.

2, கமல் இறப்பதற்க்கு முன்று மாதங்களுக்கு முன்பு நிரு சாயலில் உள்ள ஒரு பெண்ணை இ சி ஆர் ரோட்டில் ஒரு இளவயது ஆணுடன் பைக்கில் பார்த்ததாக சொன்ன போது கமல் அதை நம்ப மறுத்தான்

3. செய்தி கேள்வி பட்டதும் 15 டெம்போ டிராவலர் வேன்களில் எல்லாபெங்களுர் நண்பர்களும் பாலினம் பார்க்காமல் வயது வித்தியாசம் பார்க்காமல் வந்து சேர்ந்தனர்

4. இறுதி சடங்கு முழு செலவுகளை கமல் பெங்களுர் நண்பர்கள் ஏற்றனர்.

5. கமலின் பெண் குழந்தைகளை சாவுக்கு வந்தவர்கள் எல்லோரும் பரிதாபமாக பார்த்தனர்

6. நிரு என்னதான் உழுது புரண்டு அழுதாலும் அவள் இன்னும் ஒரு வருடத்தில் வேறு ஒருவனை நிச்சயமாக அவள் திருமணம் செய்து கொள்வாள் என எல்லா பெண்களும் சத்தியம் செய்யாத கறையாக பேசினார்கள்

7.பெங்களுர் நண்பர்கள் ஒரு நல்ல நண்பனுக்கு இப்படி ஒரு முடிவா என அழுது புரண்டனர்


8.கமல் குடும்பம் மற்றும் அவன் தெரு நண்பர்கள் , சுற்றம் எல்லோரும் எல்லா கடவுள்களையும் சபித்தனர்


9.கமல் பெங்களுர் நண்பர்கள் எல்லோரும் ரூபாய் 25 லட்சம் பணம் திரட்டிஇரண்டு மாதத்திற்க்கு பிறகு கமல் பெயரில் ஒருடிரஸ்ட் ஆரம்பித்து எழை குழந்தைகளுக்கு உதவி செய்ய ஆரம்பித்தனர். நிருவின் பெற்றோர் சாவுக்கு வந்து போனதோடு சரிஅதற்க்கு பிறகு அவர்கள் பிரேமில் வரவே இல்லை.


10.விபத்தில் கமலுடன் இருந்த நண்பன் இன்னமும் மனநல மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்று வருகிறான்


(முற்றும்)


அன்புடன்/ஜாக்கிசேகர்

இந்தியாவில் ராஜீவ்காந்தி, இந்திரா உயிர்கள் மட்டும்தான் நெய்யில் பொறித்ததா மற்ற உயிர்கள் எல்லாம் ????





மறைந்த இந்திய பிரதமர்கள் இந்திரா அவர் மகன் ராஜீவ் காந்தி ஆகியோர் இந்தியமண்ணில் கொடுரமாக கொலை செய்யப்பட்டார்கள். உடனே குற்றவாளிகள் கண்டு பிடிக்கப்பட்டார்கள். இரண்டு கொலைகளும்,ஒரு இனத்தை சீண்டி பார்க்க அது கொலைகளில் முடிந்தது.

ஆனால் மூன்று வருடத்தில் இந்தியாவில் இதுவரை 494 போ் குண்டு வெடிப்புகளில் இறந்தும் முற்றிலும் தீவரவாதத்தை வேரருக்கவும் வில்லை, முக்கிய குற்றவாளிகளை கைது செய்யவும் இல்லை.


பொற்கோவிலில் ராணுவத்தை நிறுத்தினார்பிரதமர் இந்திரா என்பது முதல் கொலைக்கான காரணம் .

கால ஓட்டத்தில் சிக்கியர்கள் மன்னிக்கப்பட்டார்கள். அந்த இனத்தை சேர்ந்த மன்மோகன்சிங் இன்று பிரதமர்.

ராஜீவ்காந்தி கொலை,அதே போன்ற ஒரு அரசியல் கொலைதான், இலங்கைக்கு இந்திய அமைதிபடை அனுப்பி ஜெயவர்தனே வஞ்சக சூழ்சசியால் இந்தியர்களை விட்டே தமிழர்களின் வீடுகள் மற்றும் கற்புகள் சூறையாட பட்டன. அதுதான் இரண்டாம் கொலைக்கான காரணம்.

னால் இன்று வரை,விடுதலைபுலி இயக்கம் இந்தியாவில் தடை செய்ய பட்ட இயக்கமாக இருக்கிறது. இந்தய மண்ணில் அவர்கள் செய்த செயலுக்கு அவர்கள் இன்றளவும் வருத்தம் கொள்கிறார்கள். இருப்பினும் அவர்களை நாம் மன்னிக்க தயாரில்லை.


ராஜீவ் மகள் பிரியங்கா காந்தியே அது ஒரு துன்பியலான சம்பவம் என்றாலும் தமிழக காங்கரஸ் காரர்கள் ஒத்துக் கொள்ளமாட்டார்கள். ஏனெனில் தமிழகத்தில் அரசியல் நடத்த அவர்களுக்கு இதை விட்டால் வேறு வழியில்லை


இந்த மூன்று வருடங்களில் 494 பேர் இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு இறந்து போய் உள்ளனர்
ஆனால் இதுவரை எந்த அமைப்பையும் தடை செய்யவில்லை, அப்படி தடை செய்தாலும் கண்கானிப்பு வலையத்துக்கு உட்படுத்த பட வில்லை.
எனென்றல் ஓட்டு போய் விடும் என்ற பயம்.

இதனால் பல இஸ்லாமிய சகோதரர்கள் குஜராத் கலவரம் போல் ஏதாவது ஏற்பட்டு விடுமோ என்று அஞ்சுகின்றனர்.
வேற்றுமையில் ஒற்றுமைகாணும் நமது நாடு இன்னும் கொஞ்சம் விழிப்பாக இருக்க வேண்டும்

இந்த மூன்று வருடத்தில் தீவிரவாதத்தால் இறந்து போன494 பேரும் இந்திரா,ராஜீவ் போல் ரத்தமும் சதையுமுள்ள மனிதர்கள் என்பதை நாம் மறக்ககூடாது.

இரண்டு மூன்று தாக்குதல் செய்த விடுதலைபுலிகள் மீது இன்றளவும் இந்தியாவில் தடை இருக்கிறது . ஆனால் நம்மோடு கலந்து பழகும் மக்களோடு மக்களாக தீவிரவாதிகள் கலந்து போய் உள்ளார்கள்

இந்தியாவில் பிறந்த அனைத்து உயிர்களையும் சமமாக நடத்தப்படவேண்டும் என்பதே என் வேண்டுகோள் அதில் ராஜீவ் உயிருக்கு ஒரு மதிப்பு மற்றவர்களுக்கு ஒரு மதிப்பு என்ற பாகு பாடு வேண்டாம்.
அதே போல் ராஜீவ் கொலையை நியாயப்படுததவில்லை.

அகமதாபாத் குண்டு வெடிப்பின் போது ஒரு முஸ்லீம் பெரியவர், டிவியில் பேட்டி கொடுக்கும் போது,பொது மக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் எல்லோரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்த போது அந்த பெரியவர் கண்களில் பயம் தெரிந்தது. அது போன்ற நிலை இனி ஏற்படக்கூடாது இனி மத்திய அரசு முற்றிலும் விழிப்பாக இருக்கவேண்டும்,


இந்திய உளவுத்துறை துயில்கலைந்து எழ வேண்டும்....இந்தியாவில் எல்லா உயிர்களும் விலை மதிக்க முடியாதது என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்


அன்புடன்/ஜாக்கிசேகர்

கமலின் மர்மயோகி திரைப்படநிழற்படங்கள் ........உங்களுக்காக.....



































எற்கனவே இந்த படங்கள் இனையத்தில் வெளிவந்து இருந்தாலும் இநத படங்
கள் பார்க்காதவர்களுக்கு

அன்புடன்/ ஜாக்கிசேகர்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner