திருவாரூர்

திருவாருர் பக்கம் காரில் பயணித்து இருக்கிறேன்.. ஆனால் இந்த முறை நேற்றும் இன்றும் திருவாரூரில் வாசம்...

சாண்ட் வெஜ் அண்டு நான் வெஜ் (25/09/2016)ஆல்பம்.

கர்நாடாகவில் எந்த தமிழ்நாடு ரிஜிஸ்ட்ரேஷன்  வண்டிகளும்  இன்னும்  சென்றபாடில்லை…மாண்டியாவில்  20 நாட்களுக்கு பிறகு இப்போதுதான் அமைதி திரும்புகின்றதாம். 

மிஸ்யூம்மாஆகி விட்டது 20 வருடங்கள்…. அம்மா எங்களைவிட்டு சென்று…. நேற்று நடந்தது போல இருக்கின்றது..இதே தேதியில் 20 வருடங்களுக்கு முன் அந்த காலையை என்னால் மறக்கவே முடியாது....அழுதே பார்க்காத என் அப்பா உடைந்து அழுததை பார்த்தேன்...அம்மாவை அந்த அளவுக்கு நேசித்து இருப்பார் என்பதை அந்த அழுகையும் கண்ணீரும் உணர்த்தியது… கைலியில் கண்துடைத்து அப்பா வேலைக்கு சென்றார்… அந்த அளவுக்கு நேர்மை.. அப்படி இருந்தும் அந்த நிறுவனம் அப்பாவை ஏமாற்றியது என்பேன்.


ஆண் பெண் பாகுபாடு


கார் பந்தய வீரர் விகாஷ்…. ரேஸ் டிராக்கல காரை ஓட்றதுக்கு பதில் சென்னை ராதாகிருஷ்ணன் ரோட்டுல குடிச்சிட்டு இரண்டே கால் கோடி மதிப்பிலான போஷ் காரை ரேஸ் வேகத்தில் நள்ளிரவில் சென்னை சாலையில் ஓட்ட…


தறி கெட்டு போன கார் ஆட்டோ ஸ்டேன்டில் நின்று இருந்த ஆட்டோக்களில் ஒன்றல்ல இரண்டு அல்ல… பத்துக்கு மேற்பட்ட ஆட்டோக்களில் மேல் மோதி பத்துக்கு மேற்பட்டவரை பலத்த காயத்துக்கு உள்ளாக்கி ஒருவரை சாகடித்து தற்போது விகாஷ் கைது செய்யப்பட்டுள்ளார்…

தமிழக பந்த்


கர்நாடகாவுக்கு எதிரான பந்த் அமைதியாக தமிழகத்தில் நடந்து முடிந்தது...

அசம்பாவிதங்களே இல்லை. இத்தனைக்கும் ஆளுங்கட்சியான அதிமுக ஆதரவு தெரிவிக்கவில்லை...

சென்னையில் கடைகளை வியாபாரிகள் திறக்கவில்லை.. ஆப் ஷட்டர் திறந்து வியாபாரம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை .... தெரு முக்குல சின்ன சின்ன பொட்டிக்கடை திறந்து சிகரேட் பஞ்சத்தை போக்கின...

ஜாக்கிரதைடா ஜாக்கி
சென்னை போன்ற மாநகரத்தில் இருசக்கர வாகனத்தில் பயணிக்கையில் டிராபிக்கில் போர் அடித்து விடும்… ஒவ்வோரு முறையும் எதையாவது ரசித்து பார்த்து அந்த பயணத்தை அர்தமுள்ளதாக்கி கொள்ள வேண்டும் என்பது எனது அவா.


அதனாலே சாலைகளில் பயணிக்கு போது நிறைய விஷயங்களை உற்று நோக்கி பயணிப்பது எனக்கு பிடித்த விஷயம்… பேசிக்காக நான் கேமராமேன் மற்றும் புகைப்படகலைஞன் என்பதால் அதனை அதன் அழகியலோடு பார்பது எனக்கு பிடித்த விஷயம்.


Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner