பிளாட்பாரம் என்பது சடங்கு…. சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ...


பல கோடி  ருபாய் செலவு செய்து சென்னையில் ரோடு ஓரத்தில் பிளாட்பார்ம் கட்டினால் அது ஒரு கண்காட்சிக்காக இருப்பது போலவே இருக்கின்றது…


சென்னை மற்றும் தமிழகத்தில் பிளாட்பாரம் என்பது ஒரு சடங்காகவே இருக்கின்றது…
பிளாட்பாரத்தில் நடந்து போகும் மக்கள் வெகு சிலரே… அதையும் ரொம்ப குறிப்பிட்டு சொல்லிவிடலாம்.
சென்னைவாசிகளை பொறுத்தவரை ரோட்டில் நடந்து செல்வது மட்டும்தான் பேஷன்…
இப்போது இன்னோன்னையும் கத்து வச்சிக்குதுங்க பயபுள்ளைங்க… அது என்ன தெரியுமா?
காதுல செல்போன் வச்சி பேசிகிட்டே நடக்கிறது
எம்மா ஹாரன் அடிச்சாலும்… எருமை மாட்டு …த்துல மழை பெஞ்சா மாதிரி அவன் பாட்டுக்கு பேசிகிட்டே போறான்.

அதைவிட இந்த பொண்ணுங்க.. கேட்கவே வேணாம், காதுல ஹெட் செட் மாட்டிக்கவேண்டியது.. எதை பத்தியும் கவலைபடமா நடப்பது…
யோவ் என்ன பேசற நீ..

சென்னையில அல்லது தமிழ்நாட்டுல எந்த இடத்திலயாவது பிளாட்பாரம் நடக்கறது பயண்படுத்தறாமாதிரி இருக்கா?
உதாரணத்துக்கு திநகர் பாண்டிபசார் எடுத்தக்கோ…எல்லாம் நடைபாதை கடை ஆக்கிரமிச்சு இருக்கு பின்ன எப்படி நடப்பது.....???

நடைபாதை முழுவதும் கடை வைப்பது நம்ம ஸ்டைல்தான்… இல்லைன்னு சொல்லலை.. ஆனா கடையே இல்லாத பிளாட்பார்ம்ல கூட எந்த மக்களும் நடந்து போக பிரியபடலை என்பதே உண்மை..

ஒரு பிளாட்பார்மில் தொடர்ந்து மக்கள் நடந்த வண்ணம் இருந்தால், அந்த இடத்தில் கடை வைக்க யோசிப்பார்கள்..ஆனால் நம்மை பொறுத்தவரை அதில் நடப்பது கவுரவ குறைச்சல் என்பது போல நடந்தால் காலியாக இருக்கும் பிளாட்பாரத்தில் ஏதாவது கடை  வச்சி வவுத்ததை கழுவலாம் என்று நினைப்பது இய்ல்பு அல்லவா??


சென்னையில் எனக்கு தெரிஞ்சி, மெரினா பீச் ரோட்ல இருக்கும் பிளாட்பாரத்தை மக்கள் உபயோகபடுத்தி பார்த்து இருக்கேன்… அந்த இடத்திலும் சில பேர் ரோட்டின் ஓரத்தில் நடந்து போவாங்க…


இன்னையிலருந்து சென்னை மற்றும் தமிழ்நாட்டில் கவனித்து பாருங்கள்.. எல்லா பிளாட்பார்மும் சாங்கியத்துக்கு மட்டுமே இருக்கும். எனக்கு தெரிஞ்சு அதுக்கு செலவு பண்ணும் தொகைக்கு அதை இடிச்சிட்டு ரோட்டை அகல படுத்தனா நாலு வண்டியாவது சீக்கிரமா போகும்..

பொதுமக்கள் மிகவும் பயண்படுத்தும் நடைமேடைகளை விட்டு விட்டு காட்சி பொருளாக பயன் இல்லாமல் இருக்கும் பிளாட்பாரங்களை எடுத்து விடுங்கள்... வருடா வருடம் அதற்கு  நகரை  அழகு படுத்துகின்றேன் பேர்வழி என்று புது டைல்ஸ் மற்றும் கருப்பு வெள்ளை பெயின்ட் வேறு..


அது எப்படிசார்?? எடுத்தோம் கவிழ்த்தோம்னு செய்ய முடியும்.. ரோட்ல  டிராபிக் அதிகமாயிடுச்சு.. அப்ப நடந்து போறவன் வாகன ஓட்டி தலையிலயா நடந்து போகனும்????

குட் கொஸ்ட்டின்..
அப்ப பிளாட்பாரத்தின் அளவை குறைத்துவிடுங்கள்...பெரிதாக கட்டி வைத்து  பயண்படுத்தாமல் இருப்பதற்கு அளவை குறைத்து விடுங்கள்..

பொதுமக்களால் உதாசினபடுத்தும் ஒரு விஷயம் இருந்தால் என்ன??இல்லாவிட்டால் என்ன??

(புகைபடங்கள் இணையம்)

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....

குறிப்பு.. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்.

17 comments:

 1. இன்னாதான் பிளாட்பாரம் இருந்தாலும் சும்மா சுகுரா ரோட்டுல நந்து போற சோகம் இருக்கே.... சும்மா போ தல!!!

  ReplyDelete
 2. Correct - தான்... நாம Correct பண்ணுவோமா... மாட்டோமே...

  ReplyDelete
 3. kanavukal meipadavendum..:)

  Tamil Movie New Gallery..
  Click Here

  ReplyDelete
 4. //பொதுமக்களால் உதாசினபடுத்தும் ஒரு விஷயம் இருந்தால் என்ன??இல்லாவிட்டால் என்ன?//
  :-)

  ReplyDelete
 5. வணக்கம் ஜாக்கி சேகர், நான் உங்க வலைபதிவு தொடர்ந்து படிக்கிறேன்.
  ஆனால் இதுதான் என்னுடைய முதல் கருத்து பகிரல் .
  கண்டிப்பாக நடைபாதை தேவை, மக்களுக்கு அதுல நடக்கிற பழக்கத்த நாம்தான் கொண்டு வரணும் அதுக்கு கொஞ்ச காலம் ஆகலாம்.
  நடை பாதை இல்லேன்னா கண்டிப்பா விபத்துக்கள் அதிகமாகிடும். உங்களோட இந்த கருத்தை நான் ஆமோதிக்க மாட்டேன்.

  ReplyDelete
 6. தோடா சொல்லிடாரு!!! பெங்களுரு வந்து பாரு தலிவா! நாங்க பிளாட்பாரம் மேலேயா வண்டி ஓட்டிகுனு போவோம்.

  ReplyDelete
 7. இவை அனைத்திற்கும் அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்க ஊழியர்களே காரணம். உலக அறிவு இல்லாதவன் அரசியல்வாதி. ஊரை ஏய்த்து பிழைப்பவன் அரசாங்க ஊழியன்.
  அயல்நாடுகளில் அரசாங்கம் மக்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுகிறார்கள், மக்களும் சட்டங்களை பின்பற்றுகிறார்கள். ஒருவருக்கொருவர் உண்மையாக நடந்து கொண்டால் அரசியல் என்ற வார்த்தையே இருந்திருக்காது.

  பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல.

  கேசவன்
  தென்கொரியா.

  ReplyDelete
 8. ரெண்டு சாப்ட்வேர் இஞ்சினியர் சந்திச்சிக்கிட்டலும் ரெண்டு பிச்சைகாரர்கள் சந்திச்சிக்கிட்டாலும் கேக்குற முதல் கேள்வி "எந்த பிளாட்பார்ம்ல இருக்கீங்க" என்பது தான்... அதுக்காவது இந்த பிளாட்பாரம் பயன்படுதே...

  ReplyDelete
 9. ''இன்னையிலருந்து சென்னை மற்றும் தமிழ்நாட்டில் கவனித்து பாருங்கள்.. எல்லா பிளாட்பார்மும் சாங்கியத்துக்கு மட்டுமே இருக்கும். எனக்கு தெரிஞ்சு அதுக்கு செலவு பண்ணும் தொகைக்கு அதை இடிச்சிட்டு ரோட்டை அகல படுத்தனா நாலு வண்டியாவது சீக்கிரமா போகும்..''

  நடப்பதற்கு சரியான வழி தேவை. இருப்பதை உடைத்து விட்டு வேறு எங்கு நடக்க?
  உங்களை மாதிரி யோசிக்கிரனால தான், காந்தி மண்டப சாலை முழுதும் நடைமேடை சிறப்பா இருக்கு.
  மக்களை பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்திவிங்களா! அதை விட்டு இருப்பதை இடிக்கனுமாம்.

  நீங்கள் எல்லாம் தரையிலே நடந்ததே இல்லையா?

  ReplyDelete
 10. உங்களோட இந்த கருத்தை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.
  கண்டிப்பாக நடைபாதை தேவை...தேவை..தேவை.

  ReplyDelete
 11. channaila mattum illa trichylaum appdithan

  ReplyDelete
 12. அன்பு நண்பர் ஜாக்கி, சிங்கப்பூர் மற்றும் மேற்கத்திய நாடுகளில் நடைபாதைகளின் அகலம் ரோடை விட அகலமாக இருக்கும். சரியாக சொல்வதென்றால் லேன் தவிர மற்ற எல்லா இடமும் நடைபாதைக்கும் அதை ஒட்டிய பூங்கா போன்றவைகள் அமைந்திருக்கும். அதைப்போல் சென்னை உருவாக இன்னும 30 ஆவது ஆகும். அதாவது இந்த ஆட்சியாளர்கள் இருக்கும்வரை எதுவும் நடக்காது என்பது என் கருத்து.

  ReplyDelete
 13. பின்னுட்டம் இட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி...
  பிளாட்பாரத்தை எல்லாவற்றையும் எடுத்து விட வேண்டும் என்று எங்கேயும் சொல்லவில்லை..அதை பதிவில் குறிப்பிட்டு இருக்கின்றேன்..

  ReplyDelete
 14. என்னைக்கு காதுல ஹெட் செட்ட மாட்ட ஆரம்பிச்சாங்களோ அன்றிலிருந்து யாருக்கும் காது கேட்காமலே போய் விட்டது.
  பின்னாடி வண்டி வருதா எப்படி போய் கொண்டு இருக்கிறோமுன்னு கூட மறந்து விடுகிறார்கள்.

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner