Saturday, August 19, 2017

உலக புகைப்பட தினம்.


பிலிமில் போட்டோஎடுத்த காலங்கள் வாழ்வில் மறக்க முடீயாத காலங்கள்.. முகூர்த்த நேரம் வரும் முன் புது ரோல் மாற்றி வைத்துக்கொள்வேன்.. ரொம்பவும் பரபரப்பாக இருந்த காலகட்டம் அது....

பென்டக்ஸ் 1000 மற்றும் நிக்கான் எப்எம் டென் காலத்தில் இருந்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு இருக்கின்றேன்... அடுத்ததாக நிக்கான் டி 40 எக்ஸ்... கேமராவோடு நான் அப்கிரேட் ஆகவில்லை...

Monday, July 31, 2017

கடைசியாக எப்போது என் பர்ஸ் தொலைத்தேன்.?கடைசியாக எனது பர்ஸ் எப்போது தொலைத்தேன் என்று  நினைவில் இல்லை…ஒரு சின்ன பாக்கெட் சைஸ்  நோட்டு புத்தகம் அதில்  போன் நம்பர் நடுநடுவே ஐம்பது, நுறு ருபாய் தாள்கள்… சில்லரைகள்  பேன்ட் பாக்கெட்டில் வைத்துக்கொள்வேன்…

பாக்கெட் சைஸ் நோட்டு புத்தகம் நைந்து  போனால்  அதில் ஒரு ரப்பர் பேன்ட் போட்டு அதனை கட்டுக்குள் வைத்துக்கொள்வேன்…

ஒரு முறை பாக்கெட்சைஸ் நோட் புக்கை  இப்படி கட்டுக்குள் வைத்த ஒரு நாளில் என் காதலியான என் மனைவி முறைத்தாள்…

 என்னடி  முறைக்கிறே…


Thursday, July 27, 2017

பேன்கள் புத்திசாலிகள்.
யாழினி டே கேரில் அவள் தலையில் ஏபிடி பார்சல் கணக்காக பேனை  ஏற்றி அனுப்பி வைத்து இருந்தார்கள்…  வாரத்துக்கு  இரண்டு முறை  தலை குளிக்க வைத்து சுத்தம் செய்தாலும்… பசங்களோடு படுத்து உறங்கும் மதிய வேளையில்  பேன்கள் இடம்மாறி யாழினி தலைக்கு சுற்றுலா வந்து விடுகின்றன..Friday, July 21, 2017

விக்ரம் வேதா 2017 திரைவிமர்சனம்


விக்ரம் வேதா…
 விக்ரமாதித்யன் வேதாளத்தை முறுங்கை மரத்தில் இருந்து வெட்டி தோளில் போட்டுக்கொண்டு நடக்க…   வேதாளம் கதை சொல்லும்… கதை முடிவில் வேதாளம் விக்ரமாதித்யனிடம் கேள்வி கேட்கும்.. பதில் தெரியாமல்  விக்ரமாதித்தன் முழிக்க வேதாளம்  மீண்டும்  முறுங்கை மரம் ஏற. தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தன்  என்ற கதை சுழன்று கொண்டே இருக்கும்…


 மேல இருக்கும் கதையை பேஸ் பண்ணி புஷ்கர் காயத்ரி  தம்பதிகள் சிறப்பாக திரைக்கதை அமைத்து இருகின்றார்கள்.

ஆரண்யகாண்டம் திரைப்படத்துக்கு பிறகு அதிகம் பிசிறில்லாமல் வெளி வந்து இருக்கும் கேங்ஸ்டர் திரைப்படம் விக்ரம் வேதா…
படத்தின் கதை.. விக்ரமாதித்யன்…விக்ரம் மேடி என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட், வேதளாம் விஜய்சேதுபதி  பெரிய ரவடி.  கைது பண்ணினால் விஜய் சேதுபதி கதை சொல்ல மேடிக்கு பதில் தெரியாமல் விழிக்க   இந்த இரண்டு பேரின் ஆடுபுலியாட்டம்தான் இந்த திரைப்படத்தின் கதை.
மாதவன் இன்ட்ரோ சீன் மற்றும் விஜய் சேதுபதியின் வடை இன்ட்ரோ சீன் செமை. டோன்ட  மிஸ்  இட்.


Tuesday, July 11, 2017

எனது சொந்த வீட்டை விற்க போகின்றேன்…
எனது சொந்த வீட்டை விற்க போகின்றேன்…
ஆம் நிறைய கனவுகளுடன் ஆசையாக வாங்கிய வீட்டை விற்க போகின்றேன்….
கனத்த மனதுடன்
கனத்த இதயத்துடன்
வலி நிரம்பிய வார்த்தைகளை தேடி தேடி எழுதுகிறேன்.


Thursday, July 6, 2017

நான் ரசித்த முத்தக்காட்சி.
முத்தமிடுதல் ஒரு கலை….
பரோட்டாவில் சால்னாவை கொட்டி அவசரமாக  பிசைந்து உருட்டி உதடு துடைத்து கை கழுவி விட்டு செல்லும் செயல் அல்ல…

மெல்ல மானை  வேட்டையாடி  வாகான அல்லது தோதான   இடத்தில் வைத்து  பரபரப்பில்லாமல் ருசிக்கும் ஒரு புலியை போல மூர்கமில்லாமல் அதே நேரத்தில் ருசியின்  பசியோடு முத்தமிட  வேண்டும்..   மெல்ல ரத்த சுவை  மூர்ந்து பார்த்து மெல்ல  தோல்களை  மெல்ல கவ்வி பிறகு தசைகளை   வெறியோடு சுவைக்க வேண்டும்..


நான்காவது நாளாக மூடிக்கிடக்கும் தமிழக தியேட்டர்கள்.
ஒரு குற்றவாளியால்  கட்டியமைக்கப்பட்ட அரசு இது...  அவருக்கு பிரச்சனை என்றால் மண் சோறு சாப்பிடவும்... அலகுகுத்தவும்,  தேர்தலின் போது டெம்போ டிராவலர் டயர் தொட்டு கும்பிடவும் உருவாக்கப்பட்ட கீ கொடுத்த பொம்மைகள் அவர்கள்...

அவர்களை நம்பி தியேட்டரை  மூடினீர்கள் பாருங்கள்... உங்களை எல்லாம் என்ன என்று சொல்ல???


Friday, June 30, 2017

நேர்மை


யாழினிக்கு ஜூஸ் சொல்லி இருந்தேன் ..

 கடையில் இருக்கும்  பூமர்  பப்பிள்காம் டப்பி அருகில் போய் நின்றுக்கொண்டு என்னை ஒரு மாதிரியாக பார்த்தால்...

 அதற்கு அர்த்தம்.. பிளீஸ் எனக்கு  பப்பிள்காம் வேண்டும் என்பதுதான்...

 வேண்டாம் என்று சொல்ல எனக்கு மனம் வரவில்லை... காரணம்  அந்த குழைவான பார்வை அப்படி..

வாங்கி தந்தேன்...


Thursday, June 29, 2017

தந்தி வாசிப்பதில்லை... காரணம்.?


தினத்தந்தி வாசிப்பதை குறைத்து இருந்தேன்.. காரணம் அதில் வரும் சில செய்திகள் அன்றைய தினத்தை ரொம்பவே டிஸ்டர்ப் செய்துவிடும் தன்மை கொண்டது... சிலது கதைகளை அவிழ்த்து விட்டு சுவாரஸ்யத்தை சேர்த்தாலும் உண்மை என்பது சுடும் தன்மை கொண்டது..,,


Tuesday, June 20, 2017

வியட்நாம் வரலாற்றினை கொஞ்சம் தெரிஞ்சிக்குவோம். | #வியட்நாம்பயணகுறிப்புகள். 7#வியட்நாம்பயணகுறிப்புகள். 7

 ஒரு நாட்டோட மக்கள் அவுங்க பழக்க வழக்கங்களை  பத்தி தெரிஞ்சிக்கனும் அல்லது பேசனும்னா…… அவங்க  நாட்டோட  வரலாற்றை ஓரளவுக்கு தெரிஞ்சாதான்.... கொஞ்சமாவது அந்த மக்களை புரிஞ்சிக்க முடியும்….அதனால் வியட்நாம் வரலாற்றை நாம சிம்பிளா தெரிஞ்சிக்குவோம்.


Thursday, June 15, 2017

Peechangai 2017 | பீச்சாங்கை பார்க்க வேண்டிய படமா ?

 வீட்டில் எல்லோரும் ரவுண்ட் கட்டி சாப்பிட்டுக்கொண்டு இருக்கும்  போது மற்ற பொருட்களை பீச்சாங்கையால்  தொடக்கூடாது என்று சொல்பவர்களும் உண்டு…  சில குழந்தைகள் பீச்சாங்கையால் எழுதுவார்கள்   பேட் பிடிப்பார்கள்… அவர்களையும் இந்த சமுகம் வலது கையால்  செய்ய சொல்லி  டார்ச்சர் செய்யும்…இடது கையை வெறுக்க  முக்கியகாரணம்… அது சூத்து கழுவும் என்பதுதான்…அது கூட இந்த பொறம் போக்கை   நாறவிடாமல்   இருக்க அருவறுப்பு எல்லாம் பார்க்காமல் பீச்சாங்கை அவனுக்கு   நல்லதைதான்  செய்கின்றது…


Sunday, June 11, 2017

தேவிகா அத்தை...

தேவிகா அத்தை.
எதிரியே ஆனாலும் ஆழிந்து போக வேண்டும் என்று மனதளவில் கூட நினைக்காதவர். அதிர்ந்து பேசாதவர்.
காயப்படுத்தி இருந்தாலும் எதிரியிடம் இருக்கும் நல்ல குணத்தை பேசுவார். கோபமாக பேசினால் கூட அது கோபத்திற்கான பேச்சாகவே பாவிக்க முடியாது. அதுதான் தேவிகா அத்தை.


Thursday, June 8, 2017

உலகம் ரொம்ப சின்னதுதான்.


2012 ஆம் ஆண்டு  அதே ஜூன் மாதத்தில் நான் இந்த பதிவை எழுதினேன்.. காரணம்   எனக்கு பிடித்த புகைப்படங்களுள் இந்த புகைப்படமும் ஒன்று…

திருமணம் முடிந்து ஒரு சில மாதங்களில் ஊட்டிக்கு பேமலியுடன் நண்பி திருமணத்துக்கு சென்ற போது, என் மச்சான் எடுத்த படம்..

சைட் சீயிங் போகும் போது ஒரு சென்னை குடும்பம் பழக்கமானது.. நான் அந்தரத்தில் தூக்கி வைத்து இருக்கும் குட்டி பெண் நிறைய என்னிடத்தில்  பேசினாள்…


Wednesday, June 7, 2017

தட்டு முறுக்கேகேகேகே | கால ஓட்டத்தில் காணாமல் போனவை... ( பாகம் 30 )
இன்டர்வெல் எப்போது வரப்போகின்றது என்பது அவர்களுக்கு  நன்கு தெரியும்.. ஏசி இல்லாத தியேட்டரில் மதிய காட்சியில் படம் பார்த்துக்கொண்டு இருக்கும் போது  இன்டர்வெல் என்று பெயர் போடுவதற்கு 45 செகன்டுக்கு முன்னே…

 எக்சிட்  கதவு அருகே இருக்கும்  கிழிந்து போய் அழுக்கு ஏறிய  கருநீல அல்லது சிவப்பு ஸ்கீரினை… சரரரரக் என்று  இழுத்து புயல் போல் உள்ளே  நுழைந்து காத்து இருப்பார்கள்… திரையில் சன் லைட் போய் பாடாய் படுத்தும்.. இருந்தாலும் அவர்களை  பொறுத்தவரை அது அவர்களுக்கான ஹீரோதனம் மட்டுமல்ல….  அவர்களிடம்  மற்றவர்கள்  கவனம்   ஈர்க்கும்  செயலும்   பெருமையும் மிதமிஞ்சி இருக்கும்… ஒரு ஹீரோ என்ட்ரிக்கு நிகராக அவர்கள் நடந்துக்கொள்வார்கள்.. அல்லது தங்களை அந்த திரைப்படத்தின்   ஹீரோவாகவே  கற்பனை  செய்துக்கொள்ளுவார்கள்.


Tuesday, June 6, 2017

சிநேகமுள்ள மனிதர்கள்.என்னை பொறுத்தவரை சிறுவயதில் இருந்து இன்று வரை  உடற்பயிற்சி என்பது… மார்கழி மாதத்தில் பதினைந்து நாட்கள்  ரன்னிங் ஓடி  குளிரை  விரட்டி, மீதி பதினைந்து நாட்கள் போர்வை போர்த்திக்கொண்டு படுத்து உறங்குவதே என்னை பொருத்தவரை உடற்பயிற்சி…

ஜாக்கிசான் படம் பார்த்து விட்டு வீட்டுக்கு வந்தால்.. ஒரு பத்து  நாளைக்கு தண்டால் எடுத்து கண்ணாடி முன் மார்பை விரித்து   முறைத்து பார்க்கும் ரகம்.
20 வருட சென்னை வாழ்க்கையில்  நேரம் கிடைக்கும்  போது ஜாக்கிங்க அல்லது வாங்கிங் போகும் ரகம் எதையும் ரெகுலராக செய்தது  இல்லை…


Monday, June 5, 2017

சத்யம் தியேட்டர் நிர்வாகம் நல்லா இருங்கடே…
#சத்யம் தியேட்டர் நிர்வாகம் நல்லா இருங்கடே…

நல்ல  விஷயத்தை யார் செஞ்சாலும் அதை பாராட்டும் பழக்கம் என்னிடத்தில் உண்டு… அது நமக்கு புடிக்காத பேமானி எவனாவது தப்பி தவறி ஒரு நல்ல விஷயத்தை   செய்யறான்னு வச்சிக்கோங்க… அதுல பெரிசா  ஈகோ பார்க்காம  அதை பாராட்டுறது என் வழமை.Friday, June 2, 2017

ஒரு கிடாயின் கருனை மனு 2017 திரை விமர்சனம்.சுண்டக்கா கா பணம் சுமக்கூலி முக்கா பணம் என்று ஒரு கிராமத்து பழ மொழி ஒன்று உண்டு… இதுதான் இந்த படத்தின் ஒன்லைன்.
ஆட்டுக்கார அலமேலுவுக்கு பிறகு ஆட்டை வைத்து பின்னப்பட்ட  கதை… தேவருக்கு பிறகு இங்கே  யாரும் விலங்குளை மையப்படுத்தி எடுக்கும் கதைகள் மிகமிக குறைவு.


Thursday, June 1, 2017

சென்னை சத்யம் தியேட்டர் பாடாவதி பப்ஸ்


#சத்யம் தியேட்டர் பாடாவதி பப்ஸ் #satyam #chennaisatyam  #satyamtheater


#சத்யம் தியேட்டர் போய் இருப்பிங்க…
அங்க ஒரு பப்ஸ்   விப்பானுங்க…

வெஜ் பப்ஸ் 50 ரூபாய்   சிக்கன் பப்ஸ் 80 ரூபாய்..    எங்க ஊர் ஆளுங்களை தியேட்டருக்கு கூட்டிக்கிட்டு போனா… ஏய் யப்பா… என்னடா இது… ங்கோத்தா..  கோமனத்தையே  உருவி இல்லை மொய் வைக்கனும் போலியே என்று அங்கலாய்ப்பார்கள்…
 விஷயம் ரேட் பற்றியதல்ல..


சென்னை சில்க்ஸ் தீ விபத்து.
20 மணி நேரம் போராடியும் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் என்ன அர்த்தம்.? நேற்று இரவு சாதர்ன் கிரைஸ்ட் ஓட்டலின் மொட்டை மாடியில் இரவு பதினொன்றரைக்கு மேல் வரை இருந்தேன்..அப்போது வரை தீ கொழுந்து விட்டு எரிந்துக்கொண்டுதான் இருந்தது…

Friday, May 26, 2017

Thondan Movie Review By jackiesekar | சமுத்திர கனியின் தொண்டன் திரைவிமர்சனம்பிரச்சார நெடிகொண்ட திரைப்படங்கள்தான் சமுத்திரகனி இப்போதேல்லாம்  எடுக்கின்றார் என்ற குற்றச்சாட்டு அவர் மீது உண்டு… நல்லவன் என்ற டேக் லைனுக்கு சமுத்திரகனி போய் பல  மாதங்கள் ஆகி விட்டன…
இனி அவரே  நினைத்தாலும் கமர்ஷியல் மசாலாக்கள் பக்கம் திரும்பவே முடியாது..  நல்லவன் அப்படின்னு பேர் எடுக்கறது கூட ரொம்ப ஈசிதான்.. ஆனா அதை  தக்க வைக்க ரொம்பவே போராடனும். அவர் போராடிக்கிட்டு இருக்கார் அம்புட்டுதேன்.


Brindhaavanam 2017 பிருந்தாவனம் திரைவிமர்சனம்.சசியின்  சொல்லமாலே திரைப்படத்தையும் அவர் எடுத்த மொழி படத்தையும் மிக்சியில் போட்டு சுவிட்ச் போட்டாலோ அல்லது..  கிரைன்டரில்  அரைத்தா ரிசல்ட் பிருந்தாவனம் திரைப்படமாக இருக்கும்…

இன்னும் எத்தனை நாளைக்குதான் ராதாமோகன் அரைத்த மாவையே அரைக்க போகின்றார்.?

எம் எஸ் பாஸ்கரை அவர் படத்தில் பார்த்து போர்  அடித்து விட்டது…
மொழி படத்தை பார்த்தது போல ஒரு  எபெக்ட்… என்று   இப்படியெல்லாம் பிருந்தாவனம் திரைப்படத்துக்கு என்னாலும்  விமர்சனம் எழுத முடியும்..


Tuesday, May 23, 2017

வேட்டையாடு விளையாடு எனக்கு பிடித்த காதல் காட்சி.#வேட்டையாடுவிளையாடு #கமல் #காதல்காட்சி #எனக்குபிடித்தகாதல்காட்சி
#kamalhaasan  பாகம்  ஒன்று.
காதல் வந்த அடுத்த நிமிடம் சொல்லி விடும் கவுதம் திரைப்பட காதல் காட்சிகள் எனக்கு ரொம்பவே பிடிக்கும். அந்த வகையில்  வேட்டையாடு விளையாடு  எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்.
ரத்தம்,  கத்தி, விரல், எலுமிச்சை என்ற  ரத்தம் தெறிக்கும் கிரைம் திரில்லரில்  மிகவும் ஒரு அற்புதமான காதல் கதையை பதிவு செய்து இருப்பார் கவுதம்.

Monday, May 22, 2017

Kidnap (2017 film) தாய் கண் எதிரில் கடத்தப்பட்ட பிள்ளை கதி என்ன?

ஆறு  வயசு ஆம்பளை புள்ள கடத்தபடுகின்றான்..

அதுவும் புள்ளைய கடத்தும்  போது….

ஸ்கூல்ல இருந்து வெளிய வந்த போது அல்ல..

சரவணாஸ்டோரில் மும்முரமாக துணி எடுத்துக்கொண்டு இருக்கும் போது அல்ல..


விஜயராஜன் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.அவர்  1996 இல்  எனக்கு  பேனா நட்பினால் அறிமுகம். இப்போது வளைகுடா பக்கம் வாழ்க்கையை ஓட்டும்… நண்பர் ஆனந்தராஜ்தான் என்னிடம்   விஜயை அறிமுகப்படுத்தி வைத்தார். நண்பர் ஆனந்தராஜும் எனக்கு பேனா நட்பினால்தான் அறிமுகம்.

 விஜயராஜன் சென்னை என்பதால்  சென்னை வாழ்க்கையின் போது… அவரை கடிதம்  தவிர்த்து நேரில் சந்தித்து இருக்கின்றேன்…


சங்கிலி புங்கிலி கதவ தொற... திரை விமர்சனம்.
பேய் படம் ஜானர் இன்னும் முடியவில்லை என்று சொல்லவே வாரத்துக்கு ஒரு படம் வந்து டரியல் ஏற்படுத்திக்கொண்டு இருக்கின்றது…
 அந்த வகையில்…சங்கிலிபுங்கில கதவ தெற  திரைப்படம் ஒன்று…
வழக்கமாக பேய் குடி கொண்டு இருக்கும் வீட்டை ஜீவா வாங்கி விடுகின்றார்கள்…  பேய் ஜீவா  பேயை ஓட்டினாரா?  அல்லது  பேய் ஜீவா ஓட்டியதா?  என்பதுதான்…  இந்த திரைப்படத்தின் கதை.Friday, May 19, 2017

காலை மயிலை வாங்கிங்காலை  வாங்கிங் போவது என்பது எனக்கு பிடித்த விஷயம் என்றாலும் சில நேரங்களில் தொடர்ந்து நடக்க  எனக்கு  வாய்க்க பெற்றதில்லை.. ஆனாலும் மயிலையில் இருக்கும் நாகேஷ்வரராவ் பார்க் மற்றும் மெரினாவில் வாங்கிங் போவதில் எனக்கு அதிக உடன்பாடு இல்லை…

 சாலைகளில் எதிர்புறத்தில் நடந்தபடி  காதில்  ஹெட்போன்  மாட்டி சன்னமாக  பிடித்த பாடலை  கேட்டபடி …. மயிலை  மக்கள்  சோம்பல் முறித்து மெல்ல அன்றைய பணிகளுக்கு ஆயுத்தம் ஆகும் அழகை பார்த்த படி நடப்பது எனக்கு பிடித்த விஷயம்.


Sunday, April 23, 2017

வியட்நாம் பயணகுறிப்புகள் 6..மறக்க முடியாத வியட்நாமின் பத்து நாட்கள்.

 #வியட்நாம் பயணகுறிப்புகள் 6..

மறக்க முடியாத  வியட்நாமின் பத்து நாட்கள்.

முதல்ல இந்த கிராமத்தான் பத்து நாளும் இருந்தது பைவ்  ஸ்டார் ஓட்டல்தான்.
தினமும்  புதிய பேஸ்ட் பிரஷ்  ஷாம்பு  தும்பை பூவுக்கே  டப் கொடுக்கும் டவல்கள் தான் ஒரு வாரத்துக்கு… அந்த  வெண் டவல்கள் என் கருப்பு உடம்புக்கு ஏற்றவையாக இல்லை  என்றாலும் ஆண்டன்  கொடுத்த இந்த பத்து நாட்களை அனுபவிக்க வேண்டும் என்று உறுதி பூண்டேன்.


Saturday, April 22, 2017

Smurfs: The Lost Village - 2017 review
உங்களுக்கு திருமணம் ஆகி விட்டதா?

குழந்தை  இருக்கின்றதா?

பள்ளிக்கு விடுமுறை விட்டு விட்டார்களா?


Thursday, April 20, 2017

புற்றுநோய் எனும் கொல்லும் பயம்… வேண்டாம் பான்பராக் எனும் குட்கா.

19 வருடத்துக்கு முன்….
கடலூர் கூத்தப்பாக்கம்  கான்வென்ட் பஸ் ஸ்டாப்.

நீங்கதான் தனுசுவா…( ஊர்ல என்னை அப்படித்தான் கூப்பிடுவாங்க.. தனசேகரன் ஷார்ட் பார்ம்.. அப்புறம் ஜாக்கிசேகரா மாறி இப்ப ஜாக்கி….)

ஆமாம்..

நான் பாஸ்கர்…

தெரியும் சுதா சொல்லி இருக்காங்க… அவங்களோட  பெஸ்ட் பிரண்ட் …

சுதா சொன்னாங்க… அவுங்க உங்களை லவ் பண்ணறாங்கன்னு….

நான் சிரித்தேன்….

அவனுக்கு என்னை பார்த்த மாத்திரத்தில்   பிடிக்கவில்லை என்பது எனக்கு  தெரிந்து போனது…

ஆமாம்.. நீங்க   என்ன படிச்சி இருக்கிங்க..?

பத்தாவதுதான்…

சுதா   நல்லா படிப்பாங்க…
தெரியும்…


Wednesday, April 19, 2017

Them (2006 film) ils | அவிங்க பிரெஞ்சு திரைப்படம்.


மச்சான் படம் பார்த்துக்கிட்டு இருக்க சொல்ல…. பயத்துல பீ கயிட்டிக்கிச்சி  மச்சி  என்று ஹாரர் கம் திரில்லர் படத்தை பார்த்து விட்டு யாராவது நண்பர் சொல்லக்கேட்டு இருக்கலாம்….

இந்த படத்தை  உங்கள் நண்பர்கள் பார்த்து இருந்தால்… அல்லது  பக் …ஆஸ் ஹோல் என்று ஆங்கிலத்தில் சொல்லாமல் கலீஜாக தமிழில் பேசும்  நண்பர்கள்  யாராவது   உங்களுக்கு இருந்தால்…. இந்த  படத்தை பார்த்து விட்டு   கட்டுரையின் ஆரம்ப வரிகளை  பேசி இருக்கலாம்…


Monday, April 3, 2017

என்ன வெளிநாடு...? பெரிய வெளிநாடு...!
என்ன வெளிநாடு...? பொல்லாத பெரிய வெளிநாடு??? ஆயிரம் இருந்தாலும் செருப்பை போடும் போது பாஸ் போர்ட் எடுத்து வச்சிக்கிட்டாச்சான்னு பேண்ட் பாக்கெட்டை தொட்டு பார்க்காம... திடிர்ன்னு எல்லாரும் நம்மளையோ பார்க்கறாங்களோன்னு hesitant ஏதும் இல்லாம... கைல காசு இல்லாம போன கூட வடபழனியில பசங்க கிட்ட வாங்கிங்கலாம்ன்னு நம்பிக்கையா போறதும்

Friday, March 31, 2017

வியட்நாம் பயணகுறிப்புகள். 5
அதோ இதோ என்று
அன்னிய தேசமான வியட்நாமில்  பத்து நாட்கள் ஓடி  விட்டது…

நாளை காலை  சனிகிழமை  பத்து மணிக்கு வியட்நாமில்  இருந்து   சென்னைக்கு விமானம்…  ஆனால்  நடுவில்   பாங்காக் ஏர்போர்ட்டில்  எட்டு மணி நேரத்துக்கு அப்புறம்தான் சென்னை பிளைட்
என்ன  செய்ய  போகின்றேன் என்று தெரியவில்ல


Monday, March 27, 2017

வியட்நாம் பயணகுறிப்புகள். 4 | வியட்நாமில் பயணம் மற்றும் ஓட்டல் வரை.

#வியட்நாம் பயணகுறிப்புகள். 4 வடமலை தனசேகரன் என்று போர்ட் வைத்து இருந்த டாக்சி டிரைவரை பார்த்தேன்… அவரை பார்த்து கை அசைத்தேன்… ஒரு படத்தில் குடித்து விட்டு பார்த்தீபன் பாதி அளவுக்கு குனித்து ஓட்டல் வாசலில் நிற்பவரிடம் டிப்ஸ் கேட்பாரே… அதே அளவுக்கு குனிந்து என்னை வரவேற்றார்.. பெட்டிகளை காரில் ஏற்றினார்… அது இன்னோவா கார்.

Friday, March 24, 2017

நீல சட்டை

அவன் நீல சட்டை அணிந்து இருந்தான்….. விலை உயர்ந்த பைக்…. வைத்து இருந்தான்… அநேகமாக அவன் சிட்டி சென்டர் ஐநாக்ஸ் பக்கத்த்தில் இருந்து வந்து கொண்டு இருக்க வேண்டும்..


நான் அப்போதுதான் வண்டியை கழுவிக்கொண்டு இருந்தேன்.. யாரும் வருகின்றார்களா என்பதை பார்த்து சளீர் என்று வாகனத்தின் மீது எறிந்ததேன்… நல்ல தண்ணீர்தான்.. இரண்டாவது முறை சரியாக சளீர் என்று அடிந்தேன்….

Thursday, March 23, 2017

வியட்நாம் பயண குறிப்புகள் 2

வியட்நாம் பயண குறிப்புகள் 2

 பயம்…. தெரியாத தேசம் புரியாத மொழி… முதல் பயணத்திலேயே பேகை பறிகொடுத்த  அபாக்கியவான் நானாகத்தான் இருப்பேன்….

அடியேய் என் பேக் என் கனவு எல்லாம் எவனோ லவுட்டிக்கிட்டு  போயிட்டான் நான் பதட்டமா  சொல்லிக்கிட்டு இருக்கேன்…இவளுங்க என்னடான்னா இளிச்சிக்கிட்டு வணக்கம் வச்சிக்கிட்டு  இருக்காளுங்க…

கோவம் தலைகேறியது,…. ஆனால்  கோபப்படுவதால் எந்த பலனும் இல்லை என்ன  செய்யலாம்-


Wednesday, March 22, 2017

முதல் விமான பயண அனுபவம். சென்னை டூ பாங்காக் ( வியட்நாம் பயணகுறிப்புகள் )


முதல் விமான பயண அனுபவம். சிறு வயதில் இருந்தே அப்பா அம்மா விமானத்தில் அழைத்து சென்று விமான பயணத்தை 12 பி பேருந்தில் பயணிக்கும் கணக்காக இருப்பவர்களுக்கு இந்த பதிவு ஏற்றதல்ல.. அதே போல நன்கு படித்து நல்ல உத்தியோகத்து சென்று நிலை பாஸ் போர்ட்டில் வீசா குத்துகள் வாங்கி கொண்டு இருப்பவர்களும் இந்த இடத்தோடு அப்பிட்டாகி கொள்ள வேண்டுகிறேன்.

என் வாழ்வில் முதல் முறையாக புவியீர்ப்பு திசைக்கு எதிரான என் பயணம்..
என் வாழ்வில் முதல் முறையாக புவியீர்ப்பு திசைக்கு எதிரான என் பயணம்..
சென்னைக்கு வந்து 22 வருடங்கள் ஆகின்றது….
மீனம்பாக்கத்தை தாண்டி நங்கநல்லூர் சிக்னல் வரும் போது....வானத்தில் ஈஷிக்கொண்டு செல்லும் விமானஙகளை பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பார்த்தது போல பார்த்து இருக்கின்றேன்…

Monday, March 13, 2017

சிறு விபத்து.

 ஒரு வருடத்துக்கு  முன் மயிலை குளத்து  பேருந்து நிலையத்தில் நடந்த விபத்துக்கு பிறகு  இன்று  சின்ன  விபத்தில் சிக்கிக்கொண்டேன்…
 ஆறுமாதத்துக்கு  முன் நண்பர் செந்திலை மயிலை குளக்கரை  பேருந்து  நிலையத்தில்   இரவு எட்டு மணிக்கு   விட சென்றேன்….மிஷ்கின் கண்ணாடி

மவுண்ட் ரோட் பக்கம் போனால் பூம்பூகாரில் கைவினை பொருள் ஒன்று வாங்கி வர தோழி பணித்தார். பூம்பூகாருக்கு சென்று பொருள் வாங்கி விட்டேன்... பில் போடும் இடத்தில் வழக்கம் போல லேட் செய்தார்கள்.... அது மட்டுமல்ல... மூன்று பொருளுக்கு பில் போட்டு பணம் கொடுத்து இருந்தேன்..

Friday, March 3, 2017

குற்றம் 23 ( 2017) திரைவிமர்சனம்.
ஈரம் படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் அறிவழகன்… சரக்குள்ள ஆளுன்னு முத படத்துல நிரூபிச்சவர்…  ஆனாலும் வல்லினம் மற்றும் ஆறாது சினம் மூலம் கவனத்தை  ஈர்த்த இயக்குனர் அறிவழகன்  மீண்டும் தான் சரக்குள்ள ஆள் என்று  குற்றம் 23  திரைப்படத்தின் மூலமாக கவனத்தை மீண்டும்   ஈர்த்து இருக்கின்றார்.


Friday, February 24, 2017

எமன் திரைவிமர்சனம். yaman tamil movie complete review by jackiesekar
#எமன் திரைவிமர்சனம்.
#yaman tamil movie complete review by jackiesekar
#YamanFeb24

மிகப்பெரிய நடிகரிடம் இருக்க வேண்டிய கதை தேர்வு பற்றிய தெளிவு விஜய் ஆன்டனியிடம் இருப்பதில் எனக்கு பெரும் ஆச்சர்யம்.. இத்தனைக்கும் அவர் இசையமைப்பாளர்..

Wednesday, February 22, 2017

வெட்கம்

பெண்களின் வெட்கங்களுக்கு நான் காதலன்….
அந்த  வெட்கங்கள் ஒரு ஹைக்கூ என்பேன்.. என்னடா ஹைக்கூ  மூனு வரி ஒரு மயிறும் புரியலை  என்று சலித்துக்கொள்வார்கள்.


உயரத்திலிருந்து குதித்தும்
அடிபடவில்லை
அருவி

கூகிளில் தேடிய போது  கிடைத்த ஹைக்கூ...

டி சர்ட் பெண்.
எல்லாம் இந்த எழுத்தாளர் பிகேபியால் வந்தது… பரத் சுசிலா கதைகளில் சுசிலா டிஷர்ட்டுகளில் வாசகம் எழுதி போட்டுக்கொண்டு வருவார்… கடலூர் கூத்தப்பாக்கம் போன்ற இடங்களில் இருந்து அந்த கதைகளை படிக்கும் போது காட்சிகளை கண் முன் வரியும்… அந்த டீ ஷர்ட் வாசகங்கள் கொஞ்சம் கிறங்க வைக்கும் என்பதே உண்மை.…

Friday, February 3, 2017

எளிமையான தலைவர் கலைஞர்
h1b வீசாவுக்கு கட்டுபாடுகளை விதிக்கின்றார்… அமெரிக்க அதிபர் டிரம்ப்… உடனே மக்கள் போரட்டத்தை ஆரம்பிக்கின்றார்கள்.. ஜல்லிக்கட்டுக்கு நாம் மெரினாவை தேர்ந்து எடுத்தோமே அப்படி எல்லாம் அவர்கள் வேறு இடத்தை தேர்வு செய்யவில்லை… அவர்கள் வெள்ளை மாளிகை முன், அதாவது டிரம்ப் வசிக்கும் வீட்டுக்கு முன் ஆர்பாட்டத்தை தொடர்கின்றார்கள்…


Tuesday, January 24, 2017

உண்மைகள் ஒரு போதும் சாகா வரம் பெற்றவை.. சென்னை ஜல்லிக்கட்டு போராட்ட வன்முறைஎவ்வளவுய்யா கூட்டம் வந்துச்சி... சார் பத்து லட்சத்துக்கு மேல....
ஓ அப்படியா?

ஆமாம் சார்.

மயிலை சித்திரக்குளத்துக்கிட்ட இன்பமே உந்தன் பேர் பெண்மையோன்னு தலைவர் பாட்டுக்கு ஆட்டக்கார பொண்ணோட மாரை குலுக்கி ஆட்டிகூட பத்து பேரை உட்கார வைக்க முடியலை....

ஆனா ரொம்ப சாதாரணமாக 300 பேரோட ஆரம்பிச்ச கூட்டம் ஐஞ்சாவது நாள்ல பத்து லட்சத்துக்கு மேல போயிடுச்சி சார்...

கூட்டத்துல நம்ம பேர் ரொம்ப டேமேஜ் ஆயிடுச்சாய்யா ..?

பின்ன... அம்மா இருக்கும் போது அந்த ஆறு வருஷத்துல பத்திரிக்கையாளர்களையோ... அல்லது மக்களையோ நேர்ல சந்திக்கலைன்னு கேட்க துப்பு இல்லாதவன் எல்லாம்... உங்களை நேர்ல வந்து எங்ககிட்ட பேச சொல்லுன்னு சொல்ற அளவுக்கு கூட்டம் தைரியத்தை கொடுத்துடுச்சிங்க.....
அறவழி அறவழின்னு பசங்க புகழ் ஏறிக்கிட்டே இருக்குங்க...

திமுக மேல பழி போட்டு பாத்திங்க...

நம்ம பீ டீம் அதை சரியா பண்ணிக்கிட்டு இருக்குங்க...

சரி... திமுகாவை திட்றாங்களா?

பெரிசா இல்லைங்க.. காரணம்...ஊறுகாய் போல தொட்டுக்கறாங்க..ஸ்டாலின் முதன் முதலில் அலங்காநல்லுரில் போராட்டம் நடத்தியதையும்.... அவுங்க ஆட்சியில இருந்தவரைக்கு ஜல்லிக்கட்டு நடத்தினதையும் இணைய பேராளிங்களுக்கு வேணா தெரியாம இருக்கலாம்.. நம்ம பி டீம் கம்பு சுத்தி மறக்க வைக்கலாம்.. நாம எப்படிங்க மறுக்க முடியும் சொல்லுங்க.?
சரி என்ன பண்ணலாம்...

நல்ல பசங்கற பேரை... இவனுங்க தட்டிக்கிட்டு போனா... நாம எதுக்குன்னு பொது மக்கள் கேள்வி கேட்க ஆரம்பிச்சிடுவாங்க..
அதனால் அந்த குட் நேமை உடைக்கனும்...

யோவ் அந்த அளவுக்கு குட் நேம் இருக்கா..?

இந்தியாவுக்கே முன்னுதாரணமா மாணவர்கள் அறவழி போராட்டம் இருக்குன்னு நேஷனல் மீடியாவுல இருந்து கேரளா சூப்பர் ஸ்டார் மம்முட்டி வரை சொல்லிட்டாங்க...
அப்ப என்ன செய்யலாம்...?

அவனுங்க பேரை கெடுத்து மாணவர்கள் ஒரு நாளும் அறவழி போராட்டத்துக்கு சரியில்லைன்னு நிரூபிக்கனும்...

சரி இன்னைக்கு வரைக்கும் அவனுங்கதான் வன்முறையில இறங்கலையே?-
இறங்கனாமாதிரி நம்ம ஆட்கள் ஜோடிக்கறதுல கில்லாடிங்க... விசாரனை படம் பார்க்கலை...??

அது மட்டுமல்ல.. அப்படியே சொதப்புனாலும்.. திமுக செஞ்சிடுச்சின்னு சொன்னா இணைய போராளிங்க கேள்வி கேட்காம பொங்கி பார்வேட் செய்வானுங்க... ஏன்னா நம்ம பக்கம் கம்பு சுத்தி அடக்குறது போல திமுக பக்கம் பெரிசா ஆள் இல்லை... செயல் தலைவரே புறக்கணிக்கற ஊடகங்கள் கிட்ட போய் வெட்கமே இல்லாம நிக்கும் போது நமக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல..


கோக் பெப்சிக்கு தடை அசத்தும் கடலுர் கிருஷ்ணாலயா தியேட்டர் ஓனர்.

கடலூர் சினிமா ரசிகர்களின் ரசனையை கிருஷ்ணாலயா தியேட்டர் மேம்படுத்தியது என்றால் அது மிகையில்லை…


Thursday, January 19, 2017

ஜல்லிக்கட்டு போராட்டம்... என்னவாகும்.?
ஜல்லிக்கட்டு போராட்டம்... என்னவாகும்.?

முதல்வர் நல்ல செய்தி சொல்வார் என்ற எதிர்பார்ப்பில் மண்.

இந்த போராட்டம் இளைஞர்கள்  கத்தி கத்தி டயர்டாக்க வேண்டும் என்பதுதான்  தமிழக அரசின் யுக்தி...


ஜல்லிக்கட்டுக்காக 48 மணி நேர தொடர் போராட்டம் ஒரு பார்வை.#jallikkattu
#MarinaProtest 
#JusticeForJallikattu

48 மணி நேரம்தாண்டி  வெற்றிகரமா  ஜல்லிக்கட்டு போராட்டம் சென்னை மெரினாவில  போய்கிட்டு இருக்கு...
சென்னை மெரினா ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இளைஞர்களின் எழுச்சி.

#jallikattuprotest
#justiceforjallikattu
#saveourculturejallikattu
#ஜல்லிக்கட்டு

தமிழக வரலாற்றில் முதல் முறையாக  ஜல்லிக்கட்டுக்காக  இளைஞர் போராட்டம் எந்த அரசியல் சாயமும் இல்லாமல்  மெரினாவில் ஒரு லட்சம்  இளைஞர்கள் ஒன்று  கூட  வைத்திருக்கின்றது…

 அதுவும் அறவழியில்….


Saturday, January 14, 2017

கோடிட்ட இடங்களை நிரப்புக ( 2017) திரைவிமர்சனம்பொண்டாட்டி தேவை , சுகமான சுமைகள், புதிய பாதை ஹவுஸ்புல் திரைப்படங்கள் மூலம் கவனம் ஈர்த்த ஆர் பார்த்திபான்… சாரி ராதா கிருஷ்ணன் பார்த்திபன் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும்   கிரைம் திரில்லர் கோடிட்ட இடங்களை நிரப்புக…


Thursday, January 12, 2017

பைரவா ( 2017) திரை விமர்சனம் | Bairavaa Complete Movie Review
பைரவா திரை விமர்சனம்.
கத்தி, துப்பாக்கி , தெறி போன்ற திரைப்படங்கள் மூலம் காமன் ஆடியன்ஸ் ரசனையை தன் பக்கம் இழுத்துக்கொண்ட விஜய்  பைரவா திரைப்படத்தின் மூலம்  காமன் ஆடியன்ஸ் ரசிகனை தன் பக்கம்  தக்க வைத்துக்கொண்டுள்ளாரா? அதே போல அழகிய தமிழ் மகன் திரைப்படத்தில் முதல் வாய்ப்பை பெற்ற இயக்குனர் பரதன்  விஜய்யை வைத்து இயக்கி இருக்கும் இரண்டாவது திரைப்படம் பைரவா…   அவருக்கு கிடைத்த இந்த அறிய வாய்ப்பை திறம்பட பயண்படுத்தி இருக்கின்றரா இல்லையா என்பதை  இந்த விமர்சனத்தில் பார்த்து  விடலாம்.Wednesday, January 11, 2017

கடலூர் வேல்முருகன் தியேட்டர்....
பதினொன்றரை மணி காலைகாட்சிக்கு வெயிலில் இரண்டு ரூபாய் டிக்கெட்டுக்கு  கேட் முன் தவம் கிடந்து  கழுத்து  வியர்வை கசகசக்க  அந்த நீண்ட சுரங்க பாதை போன்ற கவுண்டரில்  திரும்பி வளைந்து திரும்பி வளைந்து பயணித்து டிக்கெட் எடுத்து  முத டிக்கெட்டுக்கு  பத்து ரூபாய் தாளை நீட்டினா என்ன செய்யறது ? என்று தலையில் அடித்துக்கொண்டு முனறிக்கொண்டே டிக்கெட் கொடுப்பவர் சில்லரை கொடுக்க டிக்கெட் வாங்கி வாயில்  நிற்பவரிடம் டிக்கெட் கிழித்து உள்ளே செல்லும் முன் இயற்கை உபாதைகளை கழித்து விட்டு தியேட்டர் உள்ளே சென்றால்......Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner