சென்னை மாறி விட்டதா?
நேற்று பெசன்ட் நகர் மாதா கோவில் கோடியேற்றத்தால் சென்னை நகரம் போக்குவரத்தில் ஸ்தம்பித்து போனது… இரவு பத்து மணிக்கு மேலும் அதன்தாக்கம் சென்னை சந்து பொந்து தெருக்களில் காண முடிந்தது. மாலை வேளையில் கல்லூரி பேருந்துகளும் சென்னை மாநகர பேருந்துகளும் சூசு வந்து இடம் இல்லாமல் தவித்து விக்கித்து நிற்கும் பெண் போல தவித்து போயின…
நாடாடா இது --??
மாரத்தான்ல இரண்டு கிலோ மீட்டருக்-கு ஒருக்கா தண்ணி கொடுக்காம
சாகடிச்சி இருப்பானுங்க…
இப்ப செத்தது போன உடலுக்கு ஆம்புலன்ஸ் வண்டி கொடுக்காம சாகடிச்சி
இருக்கானுங்க…
12 கிலோ மீட்டர் தூரத்துக்கு
பொண்டாட்டி உடலை தூக்கி கிட்டு நடந்து இருக்கான்
ஒடிசாவை சேர்ந்த புருசன்காரன்..
பொணம் கனம் என்னன்னு தூக்கி பார்த்தவனுங்களுக்கு தெரியும்… உடலை குளிப்பாட்டி
நாரு பேர் சேர்ந்து பாடைக்கு எடுத்துக்கிட்டு
வந்து வைக்கறதுக்குள்ள தாவு தீர்ந்துடும்..
காசு இருந்தாதான் இந்தியாவுல எல்லாம்… நடக்கும்…
ஆண்டிப்பட்டி கணவாய் காத்து
இப்போது என் ரிப்பிட் மோடில் தினமும் நான் கேட்டுக்கொண்டு இருக்கும் பாடல்
தர்மதுரை படத்தில் வரும் ஆண்டிப்பட்டி கணவா காத்து பாட்டுதான் என்ன அற்புதமான வரிகள்….
வைரமுத்து யுவன் கூட்டனியில் அசத்தலோ அசத்தல் பாடல்இது.
பாடலில் வரிகள் மனதுக்கு இணக்கமாய் இருக்கின்றன…
மாமன் விஜய் சேதுபதி டாக்டராகி விட்டான்… அத்தை பெண் ஐஸ்வர்யா கிராமத்தில் விவசாய வேலைகளை பார்த்துக்கொண்டு கிளை நுலகத்தில் புத்தகங்கள் படித்த படி ராணி வாரஇதழுக்கு கடிதம் எழுதிக்கொண்டு இருக்கின்றாள்…
மாமன் டாக்டராகி வந்து விட்டான்… ஆனால் அவன் உயரத்துக்கு அதாவது படிப்பு மற்றும் வேலையில் இல்லை என்பதால் கொஞ்சம் சிறிய தாழ்வு மனப்பான்மை.
அதில் ஒரு வரி வரும்..
இந்த பாட்டுல 3:54 இல் இருந்து பாருங்க…
உன் பவுஷுக்கும் உன் பதவிக்கும் வெள்ளக்காரி புடிப்ப..
இந்த கிரிக்கியை ஏழை சிறுக்கியை எதுக்காக பிடிச்ச.?
ஒரு வெள்ளக்காரி காசு தீர்ந்தா வெளுத்து ஓடிப்போவா?
இவ வெள்ளரிக்கா வித்து கூட வீடு காத்து வாழ்வா…
இரண்டு பேரின் மன உணர்வுகளும் வார்த்தைகளாய்…
ஐஸ்வர்யாவின் கண்ணும்… படித்த மாமன் அதுவும் டாக்டர் மாமன் தன்னை கட்டிக்கொள்வானா என்ற ஏக்கம் இருக்கும் பாருங்க…
ஐ லவ்யூ ஐஸ்
சான்சே இல்லை…
பாடல் காட்சியை படமாக்கிய விதமும் அருமை.
ரொம்ப நாள் கழிச்சி உள்ளுக்குள்ள இருந்த கிராமத்தானை தட்டி எழுப்பிய திரைப்பட பாடல் இது…..
ஜாக்கிசேகர்
18/08/2016
#dharmadurai #vijaysethupathi #ishwarya #தர்மதுரை #வைரமுத்து #யுவன் #சினுராமசாமி #yuvan #jackiecinemas
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
கவிஞர் முத்துகுமாருக்கு அஞ்சலிகள்.
வானம் மெல்ல கீழிறங்கி மண்ணில் வந்து ஆடுதே,
தூறல் தந்த வாசம் இங்கு வீசுதிங்கே,
வாசம் சொன்ன பாஷை என்ன உள்ளம் திண்டாடுதே,
பேசி பேசி மௌனம் வந்து பேசுதிங்கே,
பூக்கள் பூக்கும் முன்னமே, வாசம் வந்தது எப்படி,
காதல் ஆனா உள்ளம் ரெண்டும் உயிரிலே இணையும்
தருணம் தருணம்..!
தூறல் தந்த வாசம் இங்கு வீசுதிங்கே,
வாசம் சொன்ன பாஷை என்ன உள்ளம் திண்டாடுதே,
பேசி பேசி மௌனம் வந்து பேசுதிங்கே,
பூக்கள் பூக்கும் முன்னமே, வாசம் வந்தது எப்படி,
காதல் ஆனா உள்ளம் ரெண்டும் உயிரிலே இணையும்
தருணம் தருணம்..!
என்ன வரிகள்... -?? ஆனால் இந்த வரிகள் எழுதிய கைகள் ஓய்வு பெற்றன...
நாமுத்துக்குமார்.
கவிஞர் 41 வயதில் காலாமானார்.
இதய அஞ்சலிகள்
கண்ணாடி
காலையில் எழரை மணி வரைக்கும் தூக்கம்… அம்மா தண்ணி முஞ்சில ஊத்திதான் எழுப்புவா… அந்த அளவுக்கு தூக்கி தொலைப்பேன்.
எழுந்து வெப்பங்குச்சி உடைச்சி வாயில முனையை மைய வச்சி பிரஷ் போல ஆக்கி…. பச்சக் பச்சக்ன்னு எச்சி துப்பிக்கினே கொள்ளிக்கு போய் காலைக்கடன் முடிந்து, வீட்டுக்கு வந்து குளித்து, முதுகில் உள்ள தண்ணீரை துடைக்காமல் சட்டை டவுசர் போட்டு, ஏன் முதுகு தண்ணியை துடைக்காம சட்டை போட்ட என்று திட்டி அம்மாவிடம் சவுக்கு மெளாறால் அடிவாங்கி தலையில் எண்ணெய் வைத்து படிய சீவி முன் பக்கம் கொஞ்சம் மோது வைத்து கண்ணாடி முன் சிங்கார் சாந்து பொட்டு எடுத்து நெற்றிக்கு நடுவில் சின்னதாய் ஒரு டாட் வைத்து அதற்கு மேல விபூதி சின்ன கீற்றாக பூசி ….
அசத்தல் தெலுங்கு சினிமா.
ஹீரோயிச சண்டைகள், முக்கியமாக நாயகனின் என்ட்ரி சீன் உக்கிர வசனங்கள்.. ஐட்டம்
சாங்கில் காமிரா கோணங்கள் நடன மூவ் மென்டுகள்….
ரிச் கேர்ள்ஸ் ரிச் பாய்ஸ் பசங்கள் பத்து ரூபாய்க்கு ஆட சொன்னால் ஆயிரம் ரூபாய்க்கு
ஆடும் ஆட்டங்கள்…, நாயகிகளின் செக்சி உடைகள், இடுப்பு வளைவுகள், பாடல் காட்சிகளில் அதீத தொப்புள் தரிசனங்கள், தமிழில் இழுத்து போர்த்து
நடித்த நடிகையா என்று மிரண்டு வியர்க்க வைக்கும்
கவர்ச்சி காட்சிகளில் அசால்ட்டாக நடிக்கும் நடிகைகள்…. தன்னை கடவுளாக பாவித்து காட்சிகளை
வைத்துக்கொள்ளும் நாயகன்… வெளிநாட்டு காட்சிகள், மேக்கிங் ஸ்டைல், பேமிலி சென்டிமென்ட், அற்புதமான பாடல்கள் என்று நான்
தெலுங்கு சினிமாவை ரசிக்க, கொண்டாட அனேக காரணங்கள் இருக்கின்றன….
காலில் கவனம்.
காலில் முட்டியில் செம வலி.....
ஜவ்வு கிழிச்சிடுச்சாம்...
ஒரு வாராம திடிர் திடிர்ன்னு வலிக்கும் காலை ஊனி வச்சி நடக்க முடியாது...
ஒரு ஆறு வாரத்துக்கு போட்டுக்குன நடன்னு சொல்றான்...
வாழ்க்கையில இப்படி ஒரு சமாச்சாரத்தோட இதுதான் பர்ஸ்ட் டைம்..
இது மேல பேன்ட்டை போட்டுக்கிட்டு போனா.... வேற மாதிரி இருக்கு...
பல்பு என்பது யாதெனில்.?
நேற்று யூடியூபில் ஒரு மீட்டிங்….
முதல் முறையாக சென்னையில் நடைபெற்றது.
நான்கு நாட்கள் பெங்களூரில் இருந்து வந்த காரணத்தால் சட்டென சென்னை இயல்பு வாழ்க்கையில் ஒட்ட முடியவில்லை..
செம மொக்கை வாங்கினேன் என்று கூட பாலிஷாக சொல்லிக்கலாம்…
மதியம் இரண்டரைக்கு யாழினியை பள்ளியில் இருந்து நான்தான் அழைத்து சென்று டே கேரில் விட வேண்டும்..
ஓட்டலில் இரண்டரை மணிக்கு ரிஜிஸ்ட்ரேஷன் ஆரம்பம் என்பதாலும் காலையில் இறுமுகன் ஆடியோ லான்ச் போய் விட்டு நிற்க நேரம் இல்லாமல் எடிட் செய்து வலையேற்றி உடை மாற்றி மீட்டிங் நடந்த ஓட்டலுக்கு கிளம்பி விட்டேன்….
Subscribe to:
Posts (Atom)