Soodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.



சில உலக படங்களை பார்க்கும் போது  
இது மாதிரியான படங்களை நம்ம ஊரில்  எப்போது பார்க்கபோகின்றோம் என்று ஏங்கி இருக்கின்றேன். அப்படி எல்லாம் ஏங்க வேண்டாம் என்று சமீபத்திய தமிழ் படங்கள் நம்பிக்கை தருகின்றன... நம்பிக்கை விதையை சமீபகாலத்தில்  ஆழமாக ஊன்றிய படம் ஆராண்யகாண்டம் என்று சொல்லுவேன்... அதிலிருந்து நிறைய படங்கள்  நம்பிக்கை கொடுத்த படி இருக்கின்றன.. இந்த படமும் அந்தவகையை சேர்ந்ததுதான்


வத்துக்குச்சி போன்ற படங்கள் டார்க் மூட் வகையாற என்றாலும் சமுகத்தில் தற்போது புறையோடிப்போய் இருக்கும் குற்றங்களின் பின்னனி குற்றவாளிகளின் மனநிலையை அருகில் இருந்து  அலசி இருக்கின்றது... அந்த லிஸ்ட்டில் இந்த படத்தையும்  சேர்த்துக்கொள்ளலாம்..


எந்த பின்புலமும் இல்லாமல்  சினிமாவில் முன்னேறியவர் சிவகார்த்திகேயன் என்று முகநூலில் இரண்டு நாட்களுக்கு முன் ஒரு மேட்டர் எழுதி இருந்தேன்... அது உங்களுக்காக....


ஒருவனின் வளர்ச்சி எப்படி இருக்க வேண்டும் என்று கேட்டால் அது சிவகார்த்திகேயன் போல இருக்க வேண்டும் என்று சொல்லலாம்...

அதுவும் சம காலத்தில் வளர்ந்த அசுர வளர்ச்சி இது.....தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் மிமிக்ரி செய்து ,காம்பயர் செய்து, எந்த பின்புலமும் இல்லாமல் சினிமா துறையில் கால் ஊன்றி இன்று சத்தியம் தியேட்டர் பார்க்கிங் சைடு பேனரில் துப்பாக்கி படத்துக்கும் விஜய்க்கு வைத்து இருந்த பெரிய பேனர் இடத்தில், எதிர் நீச்சல் படத்துக்கு சிவகார்த்திகேயனுக்கு வைத்து இருக்கின்றார்கள்...


அந்த பேனரை பார்க்க மிக பெருமையாக இருந்தது.. திறமையும், கடின உழைப்பும் , முக்கியமாக அதிஷ்ட்டமும் ஒழுங்காக கதவை தட்டினால் சத்தியம் தியேட்டர்வளாகத்தில் இருக்கும் பெரிய பேனரில் இடம் பெறலாம்...


நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிவகார்த்திகேயன்

என்று எழுதி இருந்தேன்... 


அப்படித்தான் விஜய் சேதுபதியும்.... எந்த பின்புலமும் இல்லாமல் துபாயில் கணக்கு எழுதி  திருமணம் ஆகி இரண்டு பிள்ளைகள் பெற்று,கூத்து பட்டறையில் சேர்ந்து  சில படங்களில் சின்ன சின்ன ரோல்களில் தலைகாட்டிஓடாத பட்ஜெட் படங்களில் நடித்து ஜெயிப்பேன் என்று கனவுடன் தொடர்ந்து போராடி  வெற்றிறக்கொடி நாட்டியவர்....



நாளைய இயக்குனர் போன்ற நிகழ்ச்சிகள் குறித்து கூட ஒரு சர்ச்சை பற்றி நண்பர் ஒருவர் பேசி இருந்தார்... அது போன்ற பிளாட்பார்ம் நிகழ்ச்சிகள்தான் புதியவர்களை அறிமுகபடுத்திதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு புதிய  வாழ்க்கையை உருவாக்கி கொடுத்து இருக்கின்றது...
விமர்சனம் வைப்பவர்கள் ஒரே ஒருவனுக்கு வாய்ப்பு பெற்றுதர முடியுமா? சின்ன சின்ன ஷாட் பிலிம்களாக இருந்தாலும் விஜய் சேதுபதி நடித்துக்கொடுத்து இருக்கின்றார்... 



பீட்சா வந்த நேரம் ஒரு  பேட்டிக்காக அவரை அனுகி இருந்தேன்.. ஏதோ விஜய் சேதுபதி காமா சோமான்னு சின்ன சின்ன பட்ஜெட் படத்துல நடிச்சிக்கிட்டு இருக்கான்னு என் காது படவே  நிறையபேரு பேசினாங்க... ஆனா   கேட்டகதைகளில் இந்த படங்கள் தப்பு பண்ணாது ஜெயிக்கும்ன்னு நினைச்சி நடிச்சேன் என்றார்....பட் இன்று தன் நடிப்பில் நிரூபித்த்தோடு மட்டும் அல்லாமல் புதிய படத்தையும் தயாரித்துகொண்டு இருக்கின்றார். எந்த சினிமா பின்புலமும் இல்லாமல்.....


 விஜய் சேதுபதி யார் என்று தெரிந்து விட்டது... மற்ற நடிகர்கள் இரண்டு படம் நடித்து இன்ட்ரோவில் இருந்து ஆக்ஷன் பிளாக் வரை தலைடுயிவார்கள் ஆனால்  விஜய்சேதுபதி இதுவரை அப்படி தலையிடவில்லை என்பது இந்தம படத்தின் இன்ட்ரோவில் புரிகின்றது...இன்ரோவில் பதட்டத்துடன் ஒரு பெண்ணை கடத்த தலைமுடி பிடிக்கப்பட்டு உதை வாங்கி  கொண்டே  காரை ஓட்டுவதில் சேதுபதி இன்ரோ சான்சே இல்லை...
ஓகே படத்தை பத்தி கொஞ்சம் பார்க்கலாம்.



===============
Soodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூதுகவ்வும் படத்தோட ஒன்லைன் என்ன?


 சின்ன   சின்ன  ஆள்கடத்தல் செய்யும் கும்பல் பெரியதொகைக்கு ஆசைப்பட்டு ஒரு அமைச்சர் மகனை கடத்தியதால் வரும்  சிக்கலை எப்படி எதிர்கொள்கின்றார்கள் என்பதுதான் படத்தின் ஒன்லைன்...  சாரி திரி லைன் வந்துடுச்சில்ல... சரிங்க இதாங்க படத்தோட திரி லைன்.


===============
Soodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூதுகவ்வும் படத்தோட கதை என்ன?


விஜய்சேதுபதி (தாஸ்) சின்ன சின்ன கிட்நாப் செய்து காலத்தை ஓட்டுகின்றான்.. வேலையில்லாத மூன்று பேர் அவனோடு  ஒரு புள்ளியில் இணைகின்றார்கள்... பெரும் தொகைக்கு ஆசைப்பட்டு அமைச்சர் எம்எஸ்ப்பாஸ்கத்  மகனை வம்பை விலைகொடுத்த்து வாங்குகின்றார்கள்...  எப்படி தம்பித்தார்கள் என்பதை சுவைபடசொல்லி இருக்கின்றார்கள்...

===============
படத்தின் சுவாரஸ்யங்கள்...

அறிமுக இயக்குனர் நலன் குமாரசாமி  அசத்தி இருக்கின்றார்... திரைக்கதையில் ஜொலித்து இருக்கின்றார்... எந்த ஒரு பாரின்  படத்தில் இருந்து அடிக்காமல் இந்த திரைப்படம் ஒரிஜினல் ஸ்கீரின் பிளே என்றால் நலன் காலரைதூக்கி விட்டுக்கொள்ளலாம்..


விஜய் சேதுபதி... அறிமுக காட்சியில் வாங்கிய பல்பு இன்ட்ரோ ஒன்று போதும்... கொலை கிடையாது பெரிய இடத்தில் கை வைப்பது இல்லை... 40 அயிரம் இருந்தால் போதும் அந்த அளவுக்கு ஒர்த்  உள்ள ஆள் கடத்தல்தான் செய்வான்.. கெட்டது செய்வதிலும் ஒரு நேர்மையாளன்...


சார் உங்க   பொண்ணை கடத்திட்டோம்...

பதட்டபடாதிங்க... மூச்சை நல்லா இழுத்து விடுங்க என்று சொல்லும் டயலாக்கும் அப்பாவை பதட்டபடாம இருக்க சொல்லுமா? என்று பீலிங்கோடு  சொல்லும் அந்த காட்சி அற்புதம்... 

இல்லாத காதலியோட பேசும் அந்த காட்சிகளில் மனிதர் பின்னுகின்றார்....  அமைச்சர் மகன் போனில் அம்மாவிடம் பணம் கேட்டு நடிக்கும் இடத்தில் சேதுபதி காட்டும் ரியாக்ஷன் சான்சேஇல்லை....ஹேட்ஸ்ஆப் டுயூ மேன்..

காத்திருத்தல்தான்  சினிமா அதனை நன்றாக புரிந்து கொண்டு நம்பிக்கையுடன் காத்து இருந்த காரணத்தால்தான்  அதிஷ்டதேவதை போல Sanchita Shetty படம் நெடுக காரில் அவர் மடியில் உட்காந்து வர ஆண்டவன் அருள்பாலித்து இருக்கின்றான்.





படத்தோட கேரக்டர்சேஷன்களில் அத்தனை டீடெயில்  முக்கியமா நயன்தாராவுக்கு கோவில் கட்டும்   அந்த குண்டு கேரக்டர் சான்சே இல்லை... வேலைக்கு போவலை..? இப்ப என்ன வயசாயிடுச்சி? என்ற அலட்சியபதில் ஆகட்டும் சின்ன எக்ஸ்பிரஷனில் நிறையவே ஸ்கோர் செய்கின்றார்.. கடைசியில் டாக்டர் இயக்கும் படத்தில் கன்னம் பழுக்க அடிவாங்கி மெக்கப்போடும் இடத்தில் மனிதன் பின்னி பெடலெடுகின்றார்கள்....


 இந்த படத்தில் நான் ரசித்த விஷயம் எல்லோருமே கெட்டவர்கள் ,எல்லோருமே காமெடியின்கள் கிடையாது உயிர் போகும் அளவுக்கு செம சீரியசான மேட்டர் திரையில் செய்துக்கொண்டு இருக்கின்றார்கள்.. ஆனால் படம் பார்க்கும் அத்தனை பேரும்  கொல் என்று சிரித்துக்கொண்டு இருகின்றார்கள்.. அதுதான் படத்தின் வெற்றி
திரைக்கதையில் இயக்குனர் சின்ன சின்ன யுக்திகளை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கின்றார்....

கடத்தியும் போன் பேசும் பெண், தலைமுடி கொடுத்த பெண்ணை திரும்ப கடத்தி குண்டுவை உதைவாங்க வைப்பது என்று நிறைய கியுட் சீன்கள்.


கீலா போல இருக்கும் ஆர்ஜே ரமேஷ் செம பிரைட் அண்டு ஸ்மார்ட்.


நம் மனதில் நிற்க்கும் மற்றோரு கேரக்டர் பிரம்மா போலிஸ் கேரக்டர்... படத்தில்  ஒரு வார்த்தை கூட பேசவில்லை... மிரட்டுகின்றார்... போலிஸ் ஆபிசில் அவர்  நடந்து வரும் ஸ்டைல் சான்சே இல்லை...

அதே போல கேமராமேன் தாஸ் சேதபதி அண்ணன் கேரக்டரில் பின்னி இருக்கின்றார்...   இயக்குனர் படம் பண்ண போகின்றேன் என்று   சொன்னதும் சீன் சொல்லறேன் என்று படுத்து எடுத்து இருக்க வேண்டும் என்று நினைக்கின்றேன் தாஸ் கேரக்டர்கள் மூலம் பழி துர்த்துக்கொண்டாலும் மாபியா உலகமும் பட முதலீட்டுகளில்  இலைமறை காய்மறைவாக சொல்லி இருக்கின்றார்கள்..  எப்படிமா பிரம்மாகிட்ட இருந்து தப்பிச்சிங்க என்று சொல்லி விட்டு கதை கேட்டு விட்டு பின் பக்கம் இருக்கும் துப்பாக்கியை எடுத்து  தனியாக வைப்பது சூப்பர்.


படத்தின் டயலாக்குகள் ஏஒன்.

================.

எதாவது பிளானோடு  சென்னைக்கு வந்து இருக்கியா?

ப்ச் இல்லை...

குட் பிளானோட வந்த ஒரு பயலும் உருப்படலை... பிளான் ஏதும் இல்லாமல் வந்தவங்கதான்  ஜெயித்து இருக்காங்க..
==========

என்னையும் சேர்த்துக்கோங்க....

இதுக்கு ஒரு குருட்டுதனமான முட்டடாள்தனம் வேணும்,ஒரு  முரட்டுதனமான புத்திசாலிதனம் வேணும் போன்ற வசன்ங்கள்  படத்தின் பிரைட்

===========
சப்பிட போறோம் சீக்கரம் வர்றோம் போன்ற வசனங்கள் சிரித்து மாளவில்லை...பெரிய பட்ஜெட் ஆர்ட்டிஸ்ட் இல்லை ஆனால் அசராமல் வேலை வாங்கி இருக்கின்றார்.. இயக்குனர்.

தேடி தேடி இருட்டில் உதை கொடுக்க துப்பாக்கி வச்சி மிரட்டிய சப்பை கேரக்டர் சேகர் ஓரத்தில் நடுங்கி  சுவத்தில் ஒட்டிக்கொண்டு இருக்க பிரம்மா கேரக்டர் துப்பாக்கியால் அடிவாங்கிய  கோபத்தில் அடிக்க குண்டு கேரக்டர்.... டேய் சேகரு இதுதான் இருட்டு அறையில்  முரட்டு குத்தா என்று கேட்க தியேட்டர் மற்றும் அடிவாங்கும் அத்தனை பேரும் கொல்--...


காசு பணம் மணி மணி, பாடலில் நட்ட நடு சென்டரில் ஆடும் அந்த பிகருக்காக இரண்டாவது முறையாக பாக்கும் எண்ணம் இருக்கின்றது என்ன நளினம் ? என்ன பிகர்? வாவ்..





தினேஷ் ஒளிப்பதிவு இயக்குனர் விருப்பத்தை 100க்கு 200 பங்கு நிறைவேற்றி இருக்கின்றது. படத்தோடு எடிட்டர் ஜான்பால் செமஉற்சாகமாக  வேலை செய்து இருப்பது படத்தை பார்க்கும் போதே தெரிகின்றது.. விறுவிறுப்புக்கு துணை நிற்கின்றார்.

படத்தின்  பெரிய பலம்  சந்தோஷ் மியூசிக்க சின்ன சின்ன பாடல் எல்லாம் அசத்தல் ரகம்... முக்கியமாக கடைசி காட்சியில் போலிஸ் பிரம்மா கேரக்டருக்கு பறை இசை அடித்து காலி செய்து இருப்பார்...பேங்க அதிகாரியிடம் 40 ஆயிரம் பணம் வாங்கி கொண்டு விஜய்சேதுபதி ஸ்டைலாக நடக்கும் இடத்தில் செம இசை.



கிளைமாக்ஸ் விஜய் சேதுபதி கடத்துவது ஆயிரமாயிரம் ஆங்கில படங்களில் வந்த கிளிஷே கிளைமாக்ஸ்.. அதுதான் எனக்கு நெருடுச்சி...
===============
 படத்தின் டிரைலர்.


==============
படக்குழுவினர்

Directed by Nalan Kumarasamy
Produced by C. V. Kumar
Screenplay by Nalan Kumarasamy
Story by Nalan Kumarasamy
Srinivasa Kavineyam
Starring Vijay Sethupathi
Sanchita Shetty
Music by Santosh Narayanan
Cinematography Dinesh Krishnan
Editing by Leo John Paul
Studio Thirukumaran Entertainment
Distributed by Studio Green
Release date(s)
1 May 2013
Country India
Language Tamil

==============
பைனல்கிக்..


நாளை ஏதாவது ஆள் கடத்தல் நடத்தால், படத்தை பார்த்து விட்டு கடத்தினோம் என்று தந்தி பேப்பரில் பிடிபடும் குற்றவாளிகள்  பேட்டிகொடுக்க வாய்ப்பு இருக்கின்றது... சினிமாவை சினிமாவாக பார்த்தால்தானே..?

பிளான்  ஹீயூமர்  திரைப்படம்தான்...லாஜிக் ஓட்டைகள் நிறைய இருந்தாலும் அவைகளை படத்தில் இருக்கும் கேரக்டர்கள்  யோசிக்க விடவில்லை... அதுதான் படத்தின் பெரும் பலம்.  

படம் நெடுக உழைப்பு.... சின்ன சின்ன கேரக்டருக்கு கூட கொடுக்கும் முக்கியத்துவம்... டைம் கேட்கும் பம்பை தலை கேரக்டரில் இருந்து எம் எஸ்பாஸ்கர்  பொண்டாட்டி வரை கேரகட்ர் செலக்ஷன் சான்சே இல்லை... வாய் விட்டு சிரிக்கவைத்துக்கொண்டே இருக்கின்றார்...   நிறைய இடங்களில் சின்ன சின்ன  சஸ்பென்ஸ் முடிச்சிகள் படத்தை மேலும் சுவாரஸ்யபடுத்துகின்றன. படத்தோட பெஸ்ட் சீன், சூப்பர் சீன் எதுன்னு  என்னை கேட்டா டாஸ்மார்க் சண்டையும் அது ஏற்ப்படுகின்ற விதமும் நல்ல அவதானிப்புடன் சொல்லி இருகின்றார்கள்..

சூது கவ்வும் குழுவிக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.... இந்த படம் பாத்தே தீரவேண்டிய திரைப்படம்... வன்முறை  அதிகம் இருந்தாலும் ரத்தம் அதிகம் இல்லை... இருப்பினும் வயது வந்தோருக்கானது என்று பரிந்துரைக்கின்றேன்... ஆல் த பெஸ்ட் நலன் டீம். 

ரொம்பநாள் கழிச்சி படத்தை பார்த்து விமர்சனம் எழுதி இருக்கேன்... போறபோக்குல ஏதாவது சொல்லிட்டு போங்கைய்யா..?


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.

நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

22 comments:

  1. அதான் டேக் போட்டுட்டீங்கள்ள பார்த்தே தீர வேண்டிய படங்கள்னு. பார்த்துடுவோம்.

    ReplyDelete
  2. your reviews are always impartial.so we can to the theatre and watch this movie.keep going.

    ReplyDelete
  3. நாளைக்கு போறேன் அண்ணன்

    ReplyDelete
  4. படம் இன்று தான் ரிலீஸ்..... அதற்குள் ஜாக்கி சார் விமர்சனம் ரிலீஸ்,,,,கிரேட் ஜாக்கி சார்....My regards to Yazhini Baby....

    ReplyDelete
  5. அண்ணே விமர்சனம் படம் மாதிரியே சூப்பர் என்னுடைய விமர்சனம் இங்கே

    http://chakkarakatti.blogspot.in/2013/05/blog-post.html

    ReplyDelete
  6. இந்த மாதிரியான பாராட்டுகள் தான் ஒரு படைப்பாளிய நல்ல படம் பண்ண வைக்கிது.

    ReplyDelete
  7. இந்த மாதிரியான பாராட்டுகள் தான் ஒரு படைப்பாளிய நல்ல படம் பண்ண வைக்கிது.

    ReplyDelete
  8. இந்த மாதிரியான பாராட்டுகள் தான் ஒரு படைப்பாளிய நல்ல படம் பண்ண வைக்கிது.

    ReplyDelete
  9. அண்ணே சஞ்சிதா ஸ்டில்ல் சூப்பர்

    ReplyDelete
  10. Padam super,

    Albert theatre A/C thaan paduthiyedutuchiiiiiiii.............

    ReplyDelete
  11. வழக்கம் போல அருமையான விமர்சனம். நீங்கள் உழைப்பு உயர்வு பற்றி கூறியது அத்தனையும் உண்மையே!

    ReplyDelete
  12. Nalan ஓட ஷாட் ஃபிலிம்களுக்கு எல்லாம் நான் ஏக ரசிகன்... கண்டிப்பா இது ஜெயிக்கனும் என்ற நினைத்தவர்களில் நானும் ஒருவன்... வாழ்த்துகள் அவரது குழுவினருக்கு... Hats Off... jackie ku Thanks for a good review

    ReplyDelete
  13. matravargalin parvaiyil irunthu ungaludaiya parvai eppothume vithiyasamaga ullathu..nanri anna

    ReplyDelete
  14. Jackie sir,

    Me to eagerly waiting for this movie to watch. I become fan of Vijay sethupathy after watching his previous films. Surely I watch this movie.

    Thanks for giving guaranty for this film.

    ReplyDelete
  15. இந்த மாதிரியான பாராட்டுகள் தான் ஒரு படைப்பாளிய நல்ல படம் பண்ண வைக்கிது.

    ReplyDelete
  16. //காசு பணம் மணி மணி, பாடலில் நட்ட நடு சென்டரில் ஆடும் அந்த பிகருக்காக இரண்டாவது முறையாக பாக்கும் எண்ணம் இருக்கின்றது என்ன நளினம் ? என்ன பிகர்? வாவ்..// my point is also this.. athavathu naanum inthapataula athaithan kavanichen... :-)

    ReplyDelete
  17. ஜாக்கி சார்,

    கலக்கல் படம் சார்....2 தடவை பார்த்தாச்சு

    சிரிச்சிகிட்டே இருப்பிங்க....

    ReplyDelete
  18. ஜாக்கி சார்,

    கலக்கல் படம் சார்….2 தடவை பார்த்தாச்சு

    சிரிச்சிகிட்டே இருப்பிங்க…

    ReplyDelete
  19. maama dowsar kalanduchu pathi sollave illa...

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner