மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/24•10•2010)

ஆல்பம்..
மிக முக்கிய அறிவிப்பு....
தமிழ் வலைபதிவர்கள் மற்றும் டுவிட்டர் தோழமைகளுக்கு....
இன்று ஞாயிறு(24/10/2010) மாலை மிகசரியாக 5.30 மணிக்கு, சென்னை காந்தி  சிலைக்கு அருகாமையில்,   தமிழ்பதிவர் மற்றும் டுவிட்டர் நண்பர்களின் சந்திப்பு நடைபெறுகின்றது...   எல்லோரும் கலந்து கொள்ள வேண்டுகின்றோம்..
============

ஒரு சந்தோஷ பகிர்வு....
எனது வலைதளத்தில்  எந்த மாற்றமும் இல்லை....http://www.jackiesekar.com. என்ற பெயரிலும் இனி இந்த தளம் தொடர்ந்து எந்த மாற்றமும்  இன்றி  இயங்கும்    என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்,......அப்ப பழைய பிளாக் ஐடியில் வராதா கண்டிப்பாக வரும்...http://jackiesekar.blogspot.com என்று அடித்தாலும் ,காம் என்று அடித்தாலும்... தளம் தெரியும்... என்ன ஒரு பிளஸ் என்றால் அலுவலகத்தில் பிளாக் தடை செய்து இருந்தாலும் ,காம் என்பதால் படிக்கலாம்.....
======
தமிகத்தில் தேர்தல் சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது..இன்னும் நெருங்க நெருங்க இன்னும் காட்சிகளும், கோலங்களும் மாற்றம் அடையலாம்... ஆனால் இந்த முறை பணம் மிக அதிக அளவில் விளையாடும் என்பது எனது கணிப்பு...
=========
சென்னை பல்கலைகழகத்தில் தொலைதூரகல்வி பாடதிட்டத்தில் ஒரு சர்ட்டிபிகேட் வாங்க எம்பிஏ படிப்பு இயங்கும் இரண்டாம் தளத்தில்...நாம் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதிலை அளிக்க மறுக்கின்றார்கள்..யார் என்ன கேட்டாலும் ஒரு வாரத்துக்கு பிறகு வந்து பார் என்ற பதிலை எல்லோருக்கும் சொல்லிவைக்கின்றார்கள்....சம்பளம் வரவில்லை என்றால் கொடிபிடிக்கும் இவர்கள்...வேலை செய்யாதவர்களை என்ன செய்ய  போகின்றார்கள்...
===============
போனவாரம் பலர் இந்த மெயிலை எனக்கு அனுப்பி இருந்தார்கள் நேசம் கிருஷ்ணன் என்பரை பற்றி... படித்த போது மெய்சிலிர்த்தேன்... இது போன்ற மனிதர்கள் இருப்பதால்தான் மழை பெய்கின்றது... உதவி செய்ய மனம் வேண்டும்... அதை விட அருவருப்பு பார்க்காமல் உதவி செய்ய மனம் வேண்டும்...லோக்கல், அசிங்கம் என்று ஏளனம் செய்யாமல்,ஒரு மனநலம் குன்றிய ஒருவர் அவர் மலத்தை அவரே சாப்பிட,  அதை பார்த்துவிட்டு நேசம் கிருஷ்ணன் இப்படி சொல்கின்றார்...

"அப்பாவும், அம்மாவும் வேலைக்கு போனப்புறம் சும்மாதானே இருக்கோம்... ஊரை ஒரு ரவுண்ட் அடிப்போம்னு சைக்கிளை எடுத்துக்கிட்டு மதுரை ரயில்வே ஸ்டேஷன் பக்கமா போனேன். மேம்பாலத்தை ஒட்டி ரோட்டோரமா அழுக்குத் துணிபோல கிடந்தார் ஒரு பெரியவர். நெருங்கிப் பார்த்தேன்... மனநிலை சரியில்லாத நபரான அந்தப் பெரியவர், தன்னோட நரகலை தன் கையில எடுத்து சாப்பிட்டுக்கிட்டிருந்தார். எனக்குள்ளே ஷாக் அடிச்ச மாதிரியிருந்தது. உடனே அவரோட கையப் புடிச்சு உதறி விட்டேன். அவரைச் சுத்தப்படுத்தி உட்கார வெச்சுட்டு, ஓட்டல்ல இருந்து இட்லிய வாங்கிவந்து குடுத்தேன். அவரோட கண்கள்ல நீர்கட்டி நின்னுச்சு.

அதே நினைப்போட வீட்டுக்குத் திரும்பி வந்த நான், இந்த மனித வாழ்க்கையில இப்படியெல்லாம் கஷ்டங்கள் இருக்கறத நினைச்சு நினைச்சு 'ஓ'னு அழுதேன். அதுக்கப்புறம் எனக்கு சுவிட்சர்லாந்து பெருசா தெரியல. 'ஸ்டார் ஓட்டல்ல ஐந்நூறு ரூபாய்க்கு ஃப்ரைடு ரைஸ் வாங்கி, அதுல முக்கால் பிளேட்ட சாப்பிடாம மிச்சம் வெச்சுட்டுப் போறவங்களுக்கு சர்வீஸ் பண்றத விட, தெருவோரத்துல தூக்கி வீசப்பட்டவங்களுக்கு சேவை பண்றதே சரி'னு என் மனசுக்கு பட்டுது. ஊர்லயே தங்கிட்டேன்" என்று படு இயல்பாகச் சொல்லி நம்மை நெகிழவைக்கிறார் கிருஷ்ணன்.

நேசம் கிருஷ்ணனனுக்கு ஒரு ராயல் சல்யூட்....ஒரு நண்பர் அனுப்பிய அந்த கடிதத்தையும் விகடன் லிக்கையும் அப்படியே தருகின்றேன்... படித்து பாருங்கள்...

Dear Jackie


 Greetings
 I am a big fan of your blog. you write sensibly on various articles which are realistic and useful.
 Herewith I am attaching one link, please read and if acceptable to you, please publish in your blog to reach many people.


Thanks

Sabapathi
================

மிக்சர்..
சென்னையில் இன்று வானம் மேக மூட்டத்துடன் காணபடுகின்றது...கடந்த இரண்டு வாரகாலமாக வெயில்  எல்லோருடைய மண்டையையும் கொளுத்திக்கொண்டு இருக்கின்றது... இப்போதுதான் குளிர்காற்று லேசாக வீசுகின்றது...அக்டோபர் 20 வதில் பருவமழை தொடங்கி இருக்கி வேண்டும்.. தள்ளி போய் கொண்டு இருக்கின்றது..

==========
இரண்டு நாட்களாக நான் சென்னை அப்பல்லோ மருத்துவமணையில் சுற்றிக்கொண்டு இருக்கின்றேன்...என் அத்தைக்கு நேற்றுதான் குடல் ஆப்பரேஷன்... நடந்தது.. இரண்டு நாட்களாக அங்கேதான் வாசம் அதனால் பதிவு எழுதவில்லை.....
=============
அப்பல்லோவில் இருந்த காரணத்தினால் அப்படியே பக்கத்தில்,சென்னை லலித்கலா அக்காடமியில் போட்டோகிராபி எக்ஸிபிஷன்... நடைபெற்றுவருகின்றது இன்று கடைசி என்று நினைக்கின்றேன்.. இன்று சிறப்பு விருந்தினர்.. இயக்குனர் மணிரத்னம்... போட்டிக்கு வந்த படங்கள் அனைத்தும் அருமையாக இருந்தன...மிக முக்கியமாக குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால்...கிருஷ்ணர் கடவுள் வேஷத்தில் பிச்சை கேட்பவரை விரட்டும் பெண்ணின் முகபாவனை.. மிக அருமையாக இருந்தது...  மெம்பர்ஸ் ஏரியாவில் ஒரு பெண் பக்தி மணத்துடன் கோவில் பிரகாரத்தில் உள்ள கல்துணுக்கு கீழே உட்கார்ந்து தியானம் செய்யும் அழகே அழகு....
==============
எல்லோரும் எந்திரனை பார்த்துவிட்டார்கள்.... அதனால்  காசி தியேட்டரை கடக்கும் போது பார்த்தேன்...வாகன நிறுத்தத்தில் மிக குறைவாக வாகனங்கள் இருந்தன...
===================
வாழ்த்துக்கள்..
பதிவர் ராஜன் திருமணத்துக்கு போய் இருந்தேன்... இதுவரை நேரில் பார்த்தது இல்லை... திருமணத்துக்கு போன போதுதான் பார்த்தேன்... மிக சந்தோஷமாக இருந்தது... ரிசிப்ஷனில் என்னை ராஜன் கட்டி அணைத்துக்கொண்டார்... அவரது துணையிடம்  என்னை அறிமுகபடுத்திய போது... இவர்தான் ஜாக்கிசேகர் என்று சொல்ல... தெரியுமே..., நயன்தாரா கூட  நிப்பாரே அப்புறம் சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் படித்திருக்கின்றேன்... என்று மணமகள் சொன்ன போது மிக மகிழ்வாய் இருந்தது... மணமக்கள் பரஸ்பரம் விட்டு கொடுத்து  எப்போதும் மகிழ்வாய் வாழ வாழ்த்துகின்றேன்...
===============
நன்றிகள்...

மிக சரியான நேரத்தில் வழிகாட்டிய, பட்டர்பிளை சூரியா,லக்கிலுக்,டாக்டர் புருனோ, தம்பி கேஆர்பி செந்தில் போன்ற  நண்பர்களுக்கு என் நெஞ்சார்ந்த  நன்றிகள்...
====================

இந்தவார நிழற்படம்..
thanks nGc

இந்தவார சலனபடம்...

வாயில் விரல் வச்சா கடிக்கதெரியாத பச்ச புள்ளைங்க... இந்த இடத்தை கடந்து விடுங்க...
இது ஒரு பீர் விளம்பரம்.. ஆனா இந்த விளம்பரத்தோட கிளைமாக்ஸ் ரொம்ப அற்புதமா இருக்கும்.... அதே போல கான்செப்ட்... வெகு அற்புதம்..



பார்த்ததில் பிடித்தது...

சென்னை ஓட்டேரியில் அது ஒரு குப்பம்...ஒரு ஏழை அப்பா தன் மகளை பள்ளிக்கு அழைத்துக்கொண்டு போகின்றார்.. அந்த பெண் வயதுக்கு வந்த  பத்தாம் வகுப்பு படிக்கும்பெண்தான்   என்று நினைக்கின்றேன்....அனாலும் அவரோடு இழைய இழைய கதை பேசிபடி கை பிடித்து  நடந்து போனதைபார்க்கும் போது மிக  அழகாக இருந்தது.....

அதே இடத்தில் பிடிக்காதது...ஒரு சம்பவம்...

இரண்டு பேருமே தெருவோரம் வாசம்  செய்பவர்கள்.... இரண்டு பேருமே தண்ணியில் உழுந்துபுரளுவார்கள் போல கண்கள் எல்லாம் அதைதான் காட்டிக்கொடுத்தது...போதையில் நிலை குலைந்து தரையில் முகம் தேய்த்து விழுந்த வடுக்கள் இருவர் முகத்திலும் ஏராளமாக  இருந்தது...  ஏதோ அவர்களுக்குள் ஒரு வாக்குவாதம்... பலம் கொண்ட மட்டும் அந்த பெண்ணின் கண்ணத்தில் அறைய அந்த பெண் ஒரு ஓலம் எழுப்பினாள் பாருங்கள்... மரன ஓலத்தின் நிஜத்தை பார்த்தேன்... அந்த பெண்ணால் அந்த அடியை தாங்க முடியவில்லை.... தள்ளாடி அவனிடம் இருந்து தப்பிக்க நினைத்து எழுந்து தள்ளாடி  சில அடி தூரம் நடந்து அவளால் முடியாமல்
கீழே விழுந்தாள்... அவ்ன பக்கத்தில் இருக்கும்  ஒரு பெரிய சவுக்கு கட்டையை  அவன் எடுக்க பொதுமக்கள் சிலர் அவனை மறித்தனர்...


இந்தவார கடிதம்..

Hi jackey anna, its maran from Amsterdam[Holland].
Unakalathu pathivukalai naan kadantha 6 mathankalaka padithu varukiren. Mikavum arumayana visayankal and ullathai ullapadiye eluthukirirkal. Unka nermai,ulaipu ellam enaku pidichiruku.
Ooril ulla veddi pasanka unkal pathivukalai kalaipathu intha pathivulakam arintha unmai.  Athai kandu manam sornthu pokamal eluthunkal.
Thanks
Maran from NL
theva
=========
நன்றி தேவா மிக்க நன்றி... உங்கள் அன்புக்கும் பாசத்துக்கு.. மிக்க நன்றி
==========

Dear Mr.Jackie,
How are you ? I am Shahul sending you the email from Riyadh (Saudi Arabia),I am regularly visiting your site & reading the Blog.
Basically i am from Thanjavur & for the Past 4 Years i am working with an ISP as Sales Co-Ordinator in Riyadh.
Your Blog is Not so serious but i feel very happy by reading your blog & i would like to ask to write some valuable information in your blog, so many people will visit your blog & get the benefits.
Meanwhile i am trying to write the email in Tamil but the Keyboard keys is not familar in writing tamil,So in future i will try my best.
Take care about your health & keep posting valuable info.
Thanks & Best Regard's,

Shahul Hameed,
Email:
universalshahul@gmail.com

 நன்றி மிக்க   நன்றி.....சாகுல்... தொடர்ந்து என் தளத்தை வாசிப்பதற்க்கு... தொடர்ந்து  என் எச்எம் ரைட்டர்  டிரை செய்யவும் தமிழ் எழுத...
==============

பிலாசபி பாண்டி...
உலகத்துக்காக ஒரு போதும்  உன்னை மாற்றிக்கொள்ளாதே... அப்படி மாற்றிக்கொள்ள நீ ஆரம்பித்தால், நீ போடும் ஜட்டிகலரை கூட உலகம் முடிவு செய்யும்...
===========
நம்மை ஜெயிக்க யாரும் இங்கு பிறக்கவில்லை...என்பது பொய்....மற்றவரை ஜெயிக்க நாம் பிறந்து இருக்கின்றோம் என்பதே உண்மை...
============

நான்வெஜ் 18+

small boy brings his cat to school

Teacher asked: Y?!!!

Boy Tearfully replied: I heard my gardener telling mom.....

I am going to tear ur pussy after the kids go to school!!!!!!!!!!
==============================
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....

குறிப்பு.. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்

22 comments:

  1. Jackiesekar.com பிரமாதம்.

    காலையிலேயே புல் மீல்ஸ்.

    அன்பு நித்யன்.

    ReplyDelete
  2. இவ்வளவு தாமதமா பதிவர் சந்திப்பு அறிவிக்கறீங்க. நல்ல படியா நடக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. I am the first today....Kalakkunga sekar....

    ReplyDelete
  4. //சென்னை பல்கலைகழகத்தில் தொலைதூரகல்வி பாடதிட்டத்தில் ஒரு சர்ட்டிபிகேட் வாங்க எம்பிஏ படிப்பு இயங்கும் இரண்டாம் தளத்தில்...நாம் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதிலை அளிக்க மறுக்கின்றார்கள்..யார் என்ன கேட்டாலும் ஒரு வாரத்துக்கு பிறகு வந்து பார் என்ற பதிலை எல்லோருக்கும் சொல்லிவைக்கின்றார்கள்///2008 ஆம் ஆண்டில் கல்லூரியில் முடித்த எனது நண்பர்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை. அரியர் வைத்து எழுதியவர்களோ அல்லது மறுதிருத்ததிற்கு விண்ணப்பித்தாலோ சாதாரணமாகக் கிடைத்துவிடாது. முழு நேரமாகப் படித்தவர்க்கே இநநிலை. தொலைதூரக்கல்வியெனில் இன்னும் ஒரு வாரம் எனற பதில் இன்னும் சில வாரங்களுக்கு வரும்.

    ReplyDelete
  5. வழக்கம்போலவே அசத்தல் அண்ணே,
    அப்புறம் இந்த firstன்னு சொல்றவங்க கொஞ்சம் யோசிச்சு சொல்லுங்க ஏன்னா நம்ம கருத்துரை அண்ணனின் பார்வைக்கு சென்றபிறகுதான் வெளிவரும். நீங்க கருத்துரைய போஸ்ட் செய்தவுடன் ஒரு செய்தி ஆங்கிலத்தில் வரும் அது நம்ம கருத்துரை அண்ணனின் பார்வைக்கு சென்றபிறகுதான் வெளிவரும் என்ற செய்தி அதனால firstன்னு சொல்றதவிட பதிவைப்பற்றி கருத்துரை இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் இது எனது கருத்து யாரும் தப்பாக எடுத்துகொள்ளவேண்டாம்
    நன்றி
    நட்புடன்
    மாணவன்

    ReplyDelete
  6. \\உலகத்துக்காக ஒரு போதும் உன்னை மாற்றிக்கொள்ளாதே... அப்படி மாற்றிக்கொள்ள நீ ஆரம்பித்தால், நீ போடும் ஜட்டிகலரை கூட உலகம் முடிவு செய்யும்... //

    100% உண்மை ஜாக்கி!

    ReplyDelete
  7. மெய் சிலிர்க்க வைத்தது நேசம் கிருஷ்ணனை பற்றிய பகிர்வு! என்ன குளோபல் வார்மிங் நடந்தாலும் இந்த மாதிரி நல்ல உள்ளங்கள்தான் இந்த உலகம் இன்னும் இயங்க காரணம்!

    ReplyDelete
  8. //கருத்துரைய போஸ்ட் செய்தவுடன் ஒரு செய்தி ஆங்கிலத்தில் வரும். //மாணவரே, தமிழாக்கத்திற்கு நன்றி....வழக்கம்போலவே அசத்தல்

    ReplyDelete
  9. ஜாக்கி, நேசம் கிருஷ்ணனுக்கு ஓட்டு போட்டாச்சு. நண்பர்களுக்கும் லிங்க் அனுப்பி உள்ளேன். அவரது சேவை தொடர இறைவனை பிரார்த்திப்போம்.

    --
    என்றும் அன்புடன்,
    V.S.Prasanna Varathan - Bahrain

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள் .காம் ஆனதற்கு.

    தேர்தல் - உண்மை முழுக்க உண்மை இன்னும் என்னன்னா கோமாளிதனமெல்லாம் நடக்க போகுதோ..பணம் விளையாடும் பொருத்து இருந்து வேடிக்கை பார்ப்போம்.

    தங்களின் அத்தை நலமா? பிராத்திக்கிறேன்.

    கொடுத்து வைத்த ஓட்டேரிஅப்பா பிள்ளை.

    எந்திரன் சன் டிவி தான் சும்மா ஓவரா பிலிம் காட்டுதுப்பா.

    ReplyDelete
  11. வழக்கம் போலவே அருமை ஜாக்கி. அதிலும் பீர் விளம்பரம் excellent.

    ReplyDelete
  12. வழக்கம்போலவே அசத்தல் அண்ணே.

    ReplyDelete
  13. வணக்கம் ! ! ! அடுத்த சாண்ட்வெஜ் & நான்வெஜ்-க்காக காத்த்ஹிருக்கிறோம் . . . .

    ReplyDelete
  14. நேத்து பஸ்ல வரும் போது எந்த நாயோ வாய் பக்கத்துல தும்மிட்டான். நல்ல பீவர், இப்ப தான் எந்திரிச்சு ப்ளாக் ஓபன் பண்றேன். சூப்பர் அண்ணா!

    ReplyDelete
  15. மதுரையில் இருக்கும் போது அட்சயா டிரஸ்ட் அப்படின்னு ஒரு மாருதி ஆம்னி வண்டி வரும். அதுக்குள்ள சாப்பாடு பொட்டலம் இருக்கும். ரோடு ஓரமா இருக்க எல்லாருக்கும் கொடுப்பாங்க. எந்த எந்த ஏரியால இருப்பாங்கனு அவங்களுக்கு தெரியும். பலநாள் அவங்க சேவைய பார்த்து வியந்திருக்கிறேன். இப்ப தான் தெரியுது அவர் நேசம் கிருஷ்ணன். ரொம்ப சந்தோசம்.

    ReplyDelete
  16. அன்புள்ள ஜாக்கி அண்ணனுக்கு,

    உங்களுக்கு போட்டோகிராபி & உலகத்திரைப்படங்களிலும் நல்ல கேள்வியறிவு உண்டு என்பதை நான் அறிவேன். எனது தம்பி (பெரியம்மாவின் மகன்) ஒருவன் மேற்கூறிய இரண்டு விஷயங்களிலும் அதிக ஆர்வம் கொண்டவன். அதுமட்டுமில்லாமல் ஒரு திறமையான போட்டோகிராபர். அவனுக்கு வருகிற 28ஆம் தேதி பிறந்தநாள் வருகிறது. ஆகையால் அவனுக்கு பரிசாக தர புகைப்படக்கலை பற்றி நல்லதொரு புத்தகத்தின் பெயரை குறிப்பிடுங்கள். முக்கியமான ஒரு விஷயம். புத்தகத்தின் விலை 200 ரூபாய்க்கு உள்ளாக இருக்க வேண்டும். புத்தகம் சென்னை ஹிக்கின்போதம்ஸில் கிடைத்தால் சிறப்பு.

    புத்தகம் இல்லையெனில் உலகப்படங்களின் டி.வி.டி வாங்கிக்கொடுக்கலாம் என்றொரு எண்ணம். எனவே நல்லதாக பர்மா பஜாரில் கிடைக்ககூடியதாக ஒரு 10 உலகப்படங்களின் பெயர்களைக் குறிப்பிடுங்கள்.

    நன்றி.
    என்றும் உங்களுக்கு ஆதரவாக,
    N.R.Prabhakaran

    ReplyDelete
  17. இத படிக்கிறதுக்கு எவ்ளோ நல்லாருக்கு.அத உட்டுபுட்டு.

    ReplyDelete
  18. பிலாசபி பாண்டி...
    உலகத்துக்காக ஒரு போதும் உன்னை மாற்றிக்கொள்ளாதே... அப்படி மாற்றிக்கொள்ள நீ ஆரம்பித்தால், நீ போடும் ஜட்டிகலரை கூட உலகம் முடிவு செய்யும்...
    ///////

    nice

    rompa nalaikku munna en nanpanidam ithepol sonnen

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner